
அத்தியாயம் – 13
எப்போதும் எட்டு மணிக்கு மேல் வரும் விக்ராந்த், அன்று ஆறு மணிக்கே அலுவலகத்திலிருந்து வந்திருந்தான், சுமித்ராவையும் ஊர்மிளாவையும் மட்டும் முற்றத்தில் கண்டவன்,… நித்திலாவை அங்கு காணாதததை கண்டு, நெற்றி சுருங்க, தன் அறைக்கு நடந்தான்,…. அவன் எதிர்பார்த்தது போல் நித்திலா அறையில் தான் இருந்தாள், படுக்கையில் கண்மூடி படுத்திருந்தவள், யாரோ வரும் அரவம் கேட்டு வேகமாக படுக்கையிலிருந்து எழுந்தாள்,…
அவள் யாரை நினைத்து அரண்டு போய் எழுந்தாளோ அவனே தான் அங்கு நின்றிருந்தான், அவனிடம் எதுவும் பேசாமல் அவள் வெளியேற முற்பட, அவள் கரம் பற்றி தடுத்து நிறுத்தியவன்,…. “எங்க போற பேபி,… உனக்காக தான் நான் சீக்கிரமே வந்தேன்” என்றான் கிறக்கத்துடன் கூடிய பார்வையில்,….
அவனது பார்வையின் அர்த்தம் புரிந்து கொண்டவள்,…. “இல்ல,… வந்து, இன்னைக்கு என் பக்கத்துல வராதீங்க” என்றாள் தயங்கிய குரலில்,…
“என்ன…? பக்கத்துல வரக் கூடாதா? அது எப்படி பேபி முடியும்” என சொல்லிக் கொண்டே, அவள் கரத்தை பற்றியிருந்த தன் கரத்தை கொஞ்சம் கொஞ்சமாக மேலே உயர்த்தினான்,…
அவனது கையை சட்டென்று தட்டி விட்டவள்,… “இத்தனை நாளா நான் உங்களை தடுத்தேனா? இன்னைக்கு வேணாம்” என்றாள் திணறிய குரலில்,….
“ஏன் பேபி, எனி ரீசன்” அவன் புரியாத பார்வை பார்க்க, “அது வந்து,…” என தயங்கியவள்,… “என்னால அதை உங்க கிட்டலாம் சொல்ல முடியாது” என்றாள் தடுமாறிய குரலில்,…
“என்கிட்ட சொல்ல முடியாத அளவுக்கு அப்படி என்ன இருக்கு” அவன் விடாமல் கேட்க,…. “பச்,… நான் தான் சொல்றேன்ல, உங்க கிட்ட சொல்ல முடியாது, என் பக்கத்திலேயும் வராதீங்க” என்றாள் எரிச்சலுடன் கூடிய குரலில்,…
“ரீசன் சொல்லாம நான் என் முடிவை மாத்திக்க முடியாது பேபி”
விக்ராந்த் தனது வழக்கமான பிடிவாதத்துடன் நின்றான்.
வலியும் ஆத்திரமும் ஒருசேர வர,..
“ஐயோ,… இன்னைக்கு எனக்கு மென்சுரேஷன் டே போதுமா” என்றாள் கோபமாக….
அந்த ஒரு வார்த்தையில் விக்ராந்தின் பிடிவாதம் சுக்குநூறாக உடைந்தது. அவனும் படித்தவன் தானே, பெண்களுக்கு ஏற்படும் இந்த ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் அந்த நாட்களின் ஏற்படும் உடல் உபாதைகள் பற்றி அவனுக்குத் தெரியும். ஆனால், நித்திலா இப்போது அந்த வலியோடு போராடிக்கொண்டிருப்பாள் என்று அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
”ஸாரி… ஸாரி பேபி… நீ ரெஸ்ட் எடுத்துக்கோ,” என மிக மென்மையாகக் கூறியவன், தனது உடையை மட்டும் மாற்றிக்கொண்டு அறையை விட்டு வெளியேறினான். நித்திலாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. தன்னிடம் இவ்வளவு அதிகாரமாகப் பேசியவன், இப்போது மன்னிப்புக் கேட்கிறானா? அவளுக்கு வியப்பாக இருந்தாலும், உடலின் வலி அவளை மேலும் சிந்திக்க விடவில்லை. மெத்தையில் சுருண்டு படுத்துக்கொண்டாள்.
இரவு உணவிற்காக நித்திலா கீழே வந்தபோது, அவளது முகம் வாடி இருப்பதை சுமித்ரா கவனித்துவிட்டாள். விக்ராந்தும் சுமித்ராவும் கேள்வி கேட்பார்களே என்பதற்காகவே வேண்டாவெறுப்பாகச் கொஞ்சமாக மட்டும் உண்டாள். நித்திலாவின் உடல்நிலையைப் புரிந்துகொண்ட சுமித்ரா, “நீ போய் ஓய்வெடு நித்தி, மத்த வேலையை நான் பார்த்துக்கிறேன்,” என அன்புடன் அனுப்பி வைத்தாள்.
நித்திலா அறைக்குத் திரும்பியபோது விக்ராந்த் அங்கு இல்லை. சோர்வு மிகுதியால் அவள் அப்படியே படுக்கையில் சாய்ந்தாள்.
நித்திலா அறைக்கு சென்ற நேரம், விக்ராந்த் அங்கு இருக்கவில்லை, அவளும் அதை கண்டுகொள்ளாமல் சோர்வாக படுக்கையில் படுத்துக் கொண்டாள்,…..
சற்று நேரம் கழித்து விக்ராந்த் அறைக்குள் வந்தான். கண்கள் மூடிப் படுத்திருந்த நித்திலாவை அவன் தொந்தரவு செய்யவில்லை. ஒரு ஓரமாக அமர்ந்து தனது லேப்டாப்பில் வேலையை செய்தாலும், அவனது கவனம் முழுவதும் அவள் மீதுதான் இருந்தது.
நித்திலா அடிக்கடி புரண்டு படுப்பதையும், சுருண்டு கொள்வதையும் கவனித்த விக்ராந்த், லேப்டாப்பை ஓரமாக வைத்து விட்டு ”பேபி… என்னாச்சு?” என்று கேட்டான், அவன் குரலில் இப்போது அதிகாரம் இல்லை, அக்கறை மட்டுமே இருந்தது.
அவள் பதில் சொல்லாமல் இருக்கவே, அவளருகில் வந்து அவளைத் தன் பக்கம் திருப்பினான். நித்திலாவின் கண்களில் கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. உதட்டைக் கடித்து வலியைப் பொறுத்துக்கொண்டிருந்த அவளைப் பார்த்ததும் விக்ராந்த் பதறிப்போனான். “பேபி… ஏன் அழற?” என்று கேட்டான்,..
“வ.. வலிக்குது,” என வயிற்றை அழுத்திக்கொண்டு அவள் தேம்ப,
அவனுக்கு அப்போது தான் அவளின் நிலை தெளிவாக புரிய வந்தது,…..
“ஏன் பேபி இப்படி பண்ணுற, இதை முன்னாடியே சொன்னா என்ன உனக்கு” வருத்தத்துடன் கேட்டவன்,… “சரி வா ஹாஸ்பிடல்க்கு போலாம்” என்றான்….
“இ.. இல்ல, இதுக்கு ஹாஸ்ப்பிடல்க்கெல்லாம் போக தேவை இல்லை, கொஞ்ச நேரத்துல அதுவே சரியாயிடும்” என்றாள்,….
“அழற அளவுக்கு வலி இருக்கு, ஹாஸ்ப்பிட்டல் போகாம எப்படி வலி குறையும்” என்றான் அவளது கன்னத்தில் வழிந்திருந்த கண்ணீரை துடைத்துவிட்டபடி,…
“குறைஞ்சிடும்…. எனக்கு எப்போதும் இப்படி தான் இருக்கும், தூங்கி எழுந்தா சரியாயிடும்” என்றாள்,……
“வலிய பொறுத்துகிட்டு எப்படி தூங்குவ நீ, பெட்டர் நாம ஹாஸ்ப்பிட்டல் போறது தான்” அவன் பிடிவாதமாய் நிற்க,.. “நாம ஹாஸ்ப்பிட்டல் போனாலும், டாக்டரும் இதை தான் சொல்லுவாங்க, நீங்க பேசாம படுங்க” என்றாள் நித்திலா,…
“நீ கேட்க மாட்டியே” என்று செல்லமாய் கடிந்தவன்,.. தன் போனை எடுத்து ஏதோ ஆராய்ச்சி செய்வது போல் பார்த்தான், சில நிமிடத்தில் அவனது முகத்தில் ஒரு பிரகாசம் வந்து போக,…. “வெயிட் பண்ணு பேபி, நான் இப்போ வந்தடறேன்” என அறையை விட்டு வெளியேறினான்,…
அவன் எங்கே போகிறான் என்பது புரியாத நித்திலா குழப்பத்தில் இருந்தாள்,….
விக்ராந்த் நேராக வந்தது வீட்டின் சமையலறைக்கு தான்,… அங்கு சுமித்ரா சமையலறையை ஒதுக்கி வைத்து கொண்டிருக்க, அந்த நேரம் அங்கு வந்த விக்ராந்தை குழப்பமாக நோக்கினாள்,….
அவன் அந்த சமையலறையையே சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டு நிற்க,… ‘இவர் ஏன் இப்படி சுத்தி சுத்தி பார்த்துட்டு நிக்கிறாரு’ என யோசித்த சுமித்ரா,….”என்ன விக்ராந்த், ஏதாச்சும் வேணுமா” என அவனிடமே கேட்டாள்….
“ஹாங்,… ஆமா அண்ணி, ஃபெனுக்ரீக்” என்றவன்,…”அது… கொஞ்சம் வெந்தயம் வேணும் அண்ணி” என்றான்,….
“என்னது வெந்தயமா, அது எதுக்கு உங்களுக்கு” சுமித்ரா கேட்க,….”அது…” என எப்படி சொல்வது என தெரியாமல் திணறியவன்,…”நாளைக்கு நிலா கிட்ட கேட்டுக்கோங்க, இப்போ கொடுங்க” என்றான்,….
அதற்கு மேல் கேள்வி கேட்காமல், சுமித்ரா அவன் கேட்டதை கொடுத்து விட, அவனும் அதனை வாங்கி கொண்டு அறை நோக்கி நடந்தான்,…. “பேபி,… எழுந்துடு” என்றவன் “வாயை திற” என்றான்,…
“ஏன்” அவள் புரியாமல் பார்க்க,…. “சொல்றேன் பேபி,… நீ முதல்ல வாயை திற” என்றவன் அவளது வாயில் சிறிதளவு தான் கொண்டு வந்திருந்த வெந்தயத்தை போட்டு, தண்ணீரை குடிக்க வைத்தான்…..
“இது வெந்தயம் தானே, இதை எதுக்கு எனக்கு கொடுத்தீங்க” அவன் கையில் ஒட்டிருந்த வெந்தயத்தை காண்பித்து அவனிடம் கேட்க,…. “இந்த மாதிரி டைம்ல வெந்தயம் மாதிரி குளிர்ச்சியான பொருள் சாப்பிடனுமாம், ஹீட்னால வர்ற வலி தான் இது, இன்னும் கொஞ்ச நேரத்துல பாரு உன் வலி குறஞ்சிடும்” என்றான்…
“இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்” அவள் வியப்பாக கேட்க… “நெட்ல தான் பார்த்தேன், சரி நீ படுத்துக்கோ பேபி” என்றவன்
அவளை மென்மையாகப் படுக்க வைத்துப் போர்வையைப் போர்த்திவிட்டான். பிறகு அவனும் அருகில் படுத்துக்கொண்டான்.
அவனது அக்கறையான அசைவுகளை நித்திலா இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்…
“நான் அழகன்னு எனக்குத் தெரியும் பேபி, என்னை சைட் அடிக்க இது நேரம் இல்ல… தூங்கு!” என்றான்..
சட்டென்று முகத்தைத் திருப்பிக்கொண்ட நித்திலா, ‘இவன் எப்படிப் பார்க்காமலேயே கண்டுபிடிச்சான்?’ என யோசித்துக்கொண்டிருந்தாள்.
அப்போது, விக்ராந்தின் கரம் மெதுவாக அவளது வயிற்றின் மீது அமர்ந்து, இதமாகத் தடவிக் கொடுக்க ஆரம்பித்தது.
”நீ தூங்கு பேபி, நான் தடவிக் கொடுக்கிறேன்…” அவனது அந்தக் குரலிலும், விரல்களின் ஸ்பரிசத்திலும் இருந்த அன்பில் நித்திலாவின் மனம் மொத்தமாகச் சரிந்தது. அந்த ஆறு மாத ஒப்பந்தம், கோபம், பயம் எல்லாம் மறைந்து, அவனது அரவணைப்பில் அவள் மெல்லத் துயிலில் ஆழ்ந்தாள்…
அடுத்த ஒரு வாரத்திற்கு விக்ராந்த் நித்திலாவை நெருங்கவே இல்லை. அவளது உடல்நிலையை மதித்து, அவளது சம்மதம் இன்றி எதையும் செய்யக் கூடாது என்பதில் அவன் உறுதியாக இருந்தான். அவனது ஒவ்வொரு சொல்லும் செயலும் ஒரு கண்ணியமான கணவனாகவே இருந்தது.
விக்ராந்தின் இந்த மென்மையான பக்கமும், அவன் காட்டிய மரியாதையும் நித்திலாவை அவன்பால் ஈர்த்தது, அவளுக்கே தெரியாமல், அந்த பிடிவாதகாரன் மெல்ல மெல்ல அவள் மனதில் குடியேறத் தொடங்கினான்.
ஆனால், அந்த ஏழு நாட்கள் முடிந்த பிறகு அறைக்கு வந்த நித்திலாவை, விக்ராந்தின் வலிய கரங்கள் சட்டென்று இழுத்துத் தன் வசம் படுத்திக் கொண்டன. அவனது அணைப்பில் ஒருவிதமான தீவிரமும், நீண்ட நாள் காத்திருந்த தாகமும் தெரிந்தது.
”பேபி… ஒன் வீக் டைம் போதும்னு நினைக்கிறேன். இதுக்கு மேல என்னால பொறுமையா இருக்க முடியாது,” அவன் குரலில் ஒரு குழைவான அதிகாரத்துடன் சொன்ன அடுத்த கணம் அவளோடு கட்டிலில் சரிந்தான். நித்திலாவுமே அவனைத் தடுக்க நினைக்கவில்லை. அவன் மீது ஏற்பட்ட அந்தப் புதிய ஈர்ப்பால், அவனது ஒவ்வொரு தீண்டலுக்கும் அவளும் மனப்பூர்வமாக ஒத்துழைத்துப் போனாள்…
”பேபி… இன்னையோட பத்து நாள் முடிஞ்சு போச்சு. ஒரு மாசத்துக்கு முப்பது நாட்கள்னு கணக்கு போட்டா கூட, இன்னும் நீ 170 டேஸ் தான் இங்கே இருக்கப் போற… நாட்கள் எவ்வளவு வேகமா கடக்குதுல்ல?” என்றான் மிகவும் சாதாரணமாக.
நித்திலாவின் மொத்த உணர்ச்சிகளும் ஒரு நொடியில் உறைந்து போயின.
’இவன் என்னத்த மனசுல வச்சுக்கிட்டு எப்போ பார்த்தாலும் இதையே சொல்லிச் சொல்லி வெறுப்பேத்துறான்? இவனை நான் எப்போதெல்லாம் ஒரு படி உயரத்தில் வைத்துப் பார்க்கிறேனோ, அப்போதெல்லாம் அவனே எகிறிக் குதிச்சுக் கீழே இறங்கிடுறான்! ச்சே…’ என அவள் ஆத்திரத்தில் கொதித்துப் போனாள்.
அன்பு காட்டும் அதே நேரத்தில், அவள் இந்த வீட்டிற்கு ‘தற்காலிக விருந்தாளி’ என்பதை அவன் நினைவுபடுத்திக் கொண்டே இருப்பது அவளது இதயத்தைச் சுக்குநூறாக உடைத்தது.
வழக்கம் போல் அன்றும் அந்தப் பெரிய டைனிங் டேபிளில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடினர். கலகலப்பான உரையாடல்களுக்கு நடுவே, லட்சுமணன் மெல்ல அந்தப் பேச்சை ஆரம்பித்தார்…
”ஏன்ப்பா விக்கி, கல்யாணம் முடிஞ்சு ஒரு வாரத்துக்கு மேலாகுது. நீயும் நித்திலாவும் எங்கே ஊர் சுத்திப் பார்க்கப் போலாம்னு இருக்கீங்க?” லட்சுமணன் கேட்க, வித்தார்த் உடனே குறுக்கிட்டு..
”அப்பா… அதுக்குப் பேரு ‘ஹனிமூன்’! தெரிஞ்சும் தெரியாத மாதிரியே கேக்குறீங்களே?” வித்தார்த்தின் கிண்டலில் அங்கிருந்தவர்கள் அனைவரும் சிரித்தனர்.
லட்சுமணன் சிரித்துக் கொண்டே, “சரிப்பா சரி… அதான் ஹனிமூன்க்கு எங்கே போறதா திட்டம்?” எனத் தன் இளைய மகனிடம் மீண்டும் வினவினார்.
விக்ராந்த் வாயைத் திறப்பதற்குள், நித்திலா முந்திக் கொண்டு.. “அதுக்கு இப்போ என்னப்பா அவசரம்? இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே… இப்போ தானே நான் வீட்ல உள்ளவங்களோட பழக ஆரம்பிச்சிருக்கேன்,” அவளது பதிலில் ஒரு வேகம் இருந்தது.
‘வீட்டிலேயே இவன் இவ்வளவு தூரம் அத்துமீறுகிறான், இதில் தனியாக வெளியே சென்றால் என்னவாகும்?’ என்ற அச்சமே அவளை இப்படிப் பேச வைத்தது.
”நித்திலா இப்படிச் சொல்றா, நீ என்னடா சொல்ற விக்கி?” தந்தை மகனைப் பார்க்க, விக்ராந்தும் “அதான் உங்க மருமகளே சொல்லிட்டால்லப்பா… கொஞ்ச நாள் போகட்டும்,” என்றான். அவன் அவ்வாறு கூறினாலும், அவனது கண்கள் நித்திலாவைச் சுருங்கிப் பார்த்தன. அவளோ எதையோ சாதித்த பெருமிதத்தில் அவனை நிமிர்ந்து பார்த்தாள்…
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
5
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


நித்திலா நீ சும்மா இருந்திருந்தா அவனே வேணாம்னு சொல்லியிருப்பான் … இனி ஹனிமூன் கன்பார்ம் … அய்யோ விக்ராந்த் கரெக்ட்டா சொன்ன மாதிரி துரத்தி விட்டுடுவான் போல …
அடேய் ஆறுமாசத்துக்கு வாழ்வு தந்தவனே கொஞ்சம் சும்மா தான் இரேண்டா! 🤣
எப்ப பாரு ஆறு மாச பல்லவியவே பாடிகிட்டு கிடக்க!
மானே, தேனே, பொன்மானேனு நல்லா தானே perform செய்ற அப்படியே போகலாம்ல.
“நாட்கள் வேகமா ஓடுதாம்” 😂😂யாருடா ராசா நீ?
உனக்கு என்னடா பீலிங் அவளுக்கு தானே பீலிங்.
இப்போ தான் அவ மனசுல உனக்கு இடம் குடுக்க வந்தா, அதுக்குள்ள நீ பேசி பேசியே அவள இந்த இடத்தை விட்டு காலி பண்ண வெச்சிடுவ போல.