Loading

வசும்மா வீடு

வசும்மா தொலைகாட்சியில் பார்த்த செய்தியை பார்த்து அதிர்ந்து நின்று விட்டார்…. உடனே தன் மகன் நிதிஷை அழைத்தார்….

“நிதிஷ் நிதிஷ் சீக்கிரம் வெளிய வா டா” என்று சத்தம் போட்டுஅழைத்தார்….

அவரின் சத்தத்தில் தூங்கி கொண்டு இருந்த நிதிஷும் குளித்து விட்டு கல்லூரிக்கு தயாராகிக் கொண்டு இருந்த பிரியாவும் வெளியே ஓடி வந்தனர்….

நேற்று மதியம் அழுது கொண்டு தூங்கியதால் நிவேதாவிற்கு இரவு உடம்பு சரி இல்லாமல் போய் விட்டது…. அதனால் அவளுக்கு மாத்திரை குடுத்து தூங்க வைத்துவிட்டனர்…. ஆதலால் அவள் மாத்திரையின் விளைவால் தூங்கி கொண்டு இருந்தாள்….

வெளியே வந்த நிதிஷ் “ம்மா என்ன ம்மா ஆச்சி ஏன் கத்துனீங்க”என்று வசும்மாவிடம் கேட்டான்….

“டேய் நிதிஷ் அங்க நியூஸ் பாருடா உங்க சித்தப்பாவை அரெஸ்ட் பண்ணிட்டோம்னு சொல்லிட்டு இருக்காங்க உங்க சித்தப்பா போட்டோலாம் போடுறாங்க டா” என்று தொலைகாட்சியை காட்டினார் வசும்மா….

“ம்மா என்ன சொல்றிங்க” என்று அவனும் பார்த்தான்…. அங்கு ஜனகராஜ் மற்றும் மற்றவர்கள் போட்டோ போட்டு அதி மற்றும் அன்பரசின் பேட்டி ஓடிக் கொண்டு இருந்தது….

” ம்மா அப்பயே சொன்னேன்ல இந்த ஆளு பெருசா எதோ தப்பு பண்றாரு சித்தி கிட்ட சொல்லுன்னு சொன்னேன்ல பாரு மூணு கொலை பண்ணி இருக்காரு ம்மா” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே முரளி நிதிஷிற்கு அழைத்தான்…..

“நிதிஷ் நியூஸ் பாத்தியா??? உங்க சித்தப்பாவை அரெஸ்ட் பண்ணிட்டாங்க டா”…..

“மாமா இப்ப தான் பாத்தேன்… சித்திக்கு தெரிஞ்சிடிச்சா…. ????” என்று நிதிஷ் முரளியிடம் கேட்டான்….

“இன்னும் இல்லனு நினைக்குறேன் கதவு பூட்டி இருக்கு…. பக்கத்து வீட்டு அக்கா இப்ப தான் கதவை தட்ட போய் இருக்காங்க…. இனிமே தான் தெரியும் இங்க வரீங்களா???”

“இல்ல ண்ணா அந்த ஆளு பொது சேவை செஞ்சிட்டு அரெஸ்ட் ஆகல…. மூணு கொலை செஞ்சிட்டு அரெஸ்ட் ஆகி இருக்காரு…. ஏன் அங்க வரணும்??? நீங்களும் வேலைக்கு போங்க…. குழந்தைகளையும் அக்காவையும் இங்க வீட்டுக்கு கூட்டிட்டு வாங்க…. அங்க இருக்க வேணாம்”…. என்று கூறி வைத்து விட்டான்….

“ம்மா குட்டிமாக்கு இந்த விசயம் தெரிய வேணாம்…. பாப்பு நீயும் எதையும் நினைக்காம போய் எக்ஸாம் எழுதிட்டு வா… போ ரெடி ஆகு…. ம்மா நீங்க டிவிய ஆப் பண்ணிட்டு கிட்சன் போங்க நான் வரேன் ஹெல்ப்புக்கு…. பாப்பு நீ ரெடி ஆகிட்டு குட்டிமாவ எழுப்பி ரெடி ஆக சொல்லு…. இன்னிக்கு ரெண்டு பேரும் வண்டில போக வேணாம் இன்னொரு கார்ல டிரைவரோட போங்க…. வர சொல்றேன் டிரைவர” என்று கூறி அவனும் குளித்து வர உள்ளே சென்று விட்டான்….

பிரியாவும் நிவேதாவை எழுப்ப அவள் அறைக்கு சென்று விட்டாள்…. வசும்மாவும் கிட்சன் சென்று விட்டார்…. அடுத்த ஒரு மணி நேரத்தில் எதுவும் நடக்காத மாதிரி அனைவரும் தங்கள் வேலை மற்றும் கல்லூரிக்கு சென்று விட்டனர்…. முரளியும் அபர்ணா மற்றும் குழந்தைகளை வசும்மா வீட்டில் விட்டுவிட்டு தன் பணிக்கு சென்றுவிட்டான்….

சாந்தா வீடு

பக்கத்து வீடு சித்ரா ஜனகராஜ் காவல்துறையினரால் கைது செய்ததை சொல்ல வீட்டின் கதவை தட்ட செல்கிறாள்….

“க்கா க்கா” என்று கூறி கதவை தட்டுகிறாள்…. இவர்களின் சத்தத்தில் சாந்தா மற்றும் நிஹா இருவரும் சலித்துக் கொண்டே எழுகின்றனர்….

“சே இந்த சித்ராவுக்கு அறிவே இல்ல இப்டி தான் காலங்காத்தால வந்து கதவை தட்டுவாளா???” (என்ன ஏழு மணி உங்களுக்கு காலங்காத்தாலயா!!!!!) என்று திட்டிக் கொண்டே கதவை திறக்க எழுகிறார்….

கதவை திறந்து கொண்டு வெளியே வந்து  “என்ன சித்ரா எழவா விழுந்துடிச்சி இப்டி கதவை தட்டுற” என்று சித்ராவிடம் எரிந்து விழுந்தார்…..

“ஆமா க்கா எழவு தான் விழுதுடிச்சி வேற யாரு வீட்டுலயும் இல்ல…. உன் வீட்டுல தான் போ போய் டிவிய பாரு” என்று கொஞ்சம் கிண்டலாக கூறினார்….

“என்ன ஆச்சின்னு சொல்லு சித்ரா???” என்று எரிச்சலாக கேட்டார் சாந்தா…

“உன் புருஷன் மூணு கொலை பண்ணி ஜெயில இருக்காரு… நீ என்னனா தூங்கிட்டு இருக்க” என்று கேலியாக கேட்டார்…

“ஏய் என்ன சொல்ற என் புருஷன் அப்டிலாம் பண்ணி இருக்க மாட்டாரு நீ வேற யாரையோ பாத்துட்டு சொல்ற”….. என்று கோவமாக கூறினார்….

” ம்மா இல்ல அந்த ஆன்ட்டி சொல்றது உண்மை தான் அப்பாவை அரெஸ்ட் பண்ணிட்டாங்க” என்று வேகமாக ஓடி வந்து கூறினாள் நிஹா….

“பொய் கேஸ் போட்டு என் புருஷன உள்ள வெச்சிட்டாங்க போய் என்னனு கேட்கலாம் வா நிஹா போலாம் போய் நியாத்தை கேட்கலாம்….. சே எல்லாம் அந்த சனியனால வந்தது இங்க இருந்தும் போயும் அதோட ராசி எங்க வீட்டை கஷ்டப்பட வைக்குது” என்று நிவேதாவை திட்டினார்…..

“அக்கா உன் மனசாட்சி தொட்டு சொல்லு உன் புருஷன கொலை செய்ய சொல்லி அந்த புள்ளையா சொல்லிச்சி….. உன் புருஷன் கொன்னதுக்கு அந்த புள்ளய திட்டுற” என்று சொல்லிய சித்ராவை அங்கு இருக்கும் அனைவரும் அதிர்ச்சியாக பார்த்தனர்…..

ஏனென்றால் சித்ரா எப்போதும் நிவேதாவை திட்டிக் கொண்டே தான் இருப்பார்…. இப்போது அவளுக்கு சாதகமாக பேசியதால் தான் இந்த ஆச்சரியம்…..

அங்கு இருக்கும் ஒரு பாட்டி கேட்டே விட்டார் “என்ன சித்ரா நிவேதாக்கு சாதகமா பேசுற”…..

“எனக்கு அவளை பிடிக்காது தான் என் பொண்ண விட அவ நல்லா படிக்குறா நல்லா மார்க் வாங்குறானு தான் பிடிக்காது….. அது தான் அவளை சாந்தா அக்கா கிட்ட எதோ சொல்லி மாட்டிவிடுவேன்…. ஆனா இவங்க புருஷன் கொலை செஞ்சதுக்கு அந்த பொண்ணு என்ன பண்ணும்” என்று கூறி தன் வீட்டுக்கு சென்று விட்டார்….. (இப்படியும் சில பேரு சித்ரா போல உலகத்துல இருக்காங்க)

சாந்தா மற்றும் நிஹா இருவரும் அவசர அவசரமாக எஸ்பி அலுவலகம் சென்றனர்…. அங்கு ஜனகராஜ் மற்றும் அவர் கூட்டாளிகளை கோர்ட்டில் ஆஜர் படுத்த அழைத்து சென்றுவிட்டனர்….. இதற்கு நடுவில் நிஹா யாருக்கோ அழைத்து பேசிக் கொண்டு இருந்தாள் பேசி விட்டு மர்மமான சிரிப்புடன் சாந்தாவுடன் சேர்ந்து கோர்ட்டிற்கு சென்றாள்….

கோர்ட்டின் முன் உட்கார்ந்து தன் கணவனிற்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை….. இது பொய் வழக்கு என்று கத்திக் கொண்டு இருந்தார்….. கொஞ்ச நேரத்தில் சாந்தாவின் கடையில் இருபத்தைந்து வருடமாக வேலை செய்யும் பாலய்யா ஜாமீன் வாங்குவதற்கு கை எழுத்து வேண்டும் என்று கூறி வாங்கி சென்றார்….. சாந்தாவும் கை எழுத்து போட்டு குடுத்துவிட்டார் அதில் இருக்கும் விபரீதம் தெரியாமல்…..

கோர்ட்டில் அவசர வழக்காக ஜனகராஜ் மற்றும் அவரின் கூட்டாளிகள் வழக்கு ஏற்பாடு செய்யப்பட்டு முதல் வழக்காக விசாரிக்க பட்டது….. குற்றவாளிகளுக்கு சாதகமாக எந்த வழக்கறிஞர்களும் ஆஜர் ஆகவில்லை… இவர்களுக்கு எதிராக சாட்சிகள் சரியாக இருப்பதால் இவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட்டது….

ஜனகராஜ் அவரின் இரு கூட்டாளி தன்ராஜ் மற்றும் மூர்த்திக்கு ஆயுள் தண்டனையும் இவர்களுக்கு உதவியாக இருந்த பச்சை கருப்பையா முனியன் மூணு பேருக்கும் பத்து வருடம் மற்றும் கருப்பையாவின் தம்பி கந்தனுக்கு மூன்று வருடம் சிறை தண்டனையும் வழங்க பட்டது…..

தண்டனை வழங்க பட்ட ஏழு பேரும் சேலம் மத்திய சிறை சாலைக்கு அழைத்து செல்ல பட்டனர்…. சாந்தா மற்றும் நிஹா இருவரும் அழுது கொண்டே வீட்டிற்கு சென்றனர்…. அவர்கள் வீடு செல்லவே மாலை ஆகி விட்டது… யார் முகத்தையும் பாக்காமல் வீட்டிற்குள் சென்று அடைந்து கொண்டனர் அழுது கொண்டே நாளை சாந்தாவிற்கு காத்திருக்கும் அதிர்ச்சி தெரியாமல்….

வசும்மா வீடு

நான்கரை மணி அளவில் நிவேதா பிரியா இருவரும் கல்லூரியை விட்டு வீட்டுக்கு வந்தனர்… இன்னும் நிவேதாவிற்கு ஜனகராஜின் விசயம் தெரியாது… அவர்கள் இருவரையும் முகம் கழுவி விட்டு வருமாறு வசும்மா கூறி அவரவர் அறைக்கு போக சொல்லிவிட்டார்….

நிதிஷும் ஐந்து மணி அளவில் வீட்டிற்கு வந்து விட்டான் … அவன் வரும் வரை இருவரும் அகில் மற்றும் ஷாலு பாப்பாவுடன் விளையாடிக் கொண்டு இருந்தனர்…. நிதிஷ் வந்தவுடன் நேராக நிவேதா அருகில் அமர்ந்து கொண்டான்…. நிவேதாவும் அவன் முகத்தை பார்த்தாள்

“குட்டிமா உங்கிட்ட ஒரு விசயம் சொல்லுவேன் நீ டென்ஷன் ஆக கூடாது” என்று சொல்ல ஆரம்பித்தான்…

அவன் சொல்வதற்குள் நிவேதா “அண்ணா நீ எதுவும் சொல்ல வேணாம் எனக்கு தெரியும்… அவங்க தப்பு பண்ணி இருக்காங்க அதுக்கு தண்டனை அனுபவிக்க போறாங்க நான் எதுக்கு டென்ஷன் ஆகனும் விடுங்க அண்ணா” என்று கூறி மறுபடியும் விளையாட ஆரம்பித்துவிட்டாள்….

மற்றவர்கள் நிதிஷும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்…. “குட்டிமா உனக்கு எப்படி தெரியும்”….

“அண்ணா எக்ஸாம் ஹால் எனக்கும் பிரியாகும் வேற வேற…. இன்னொரு பொண்ணு கூட போகும் போது இப்டி ஆயிடிச்சினு அந்த பொண்ணு சொல்லிட்டு இருந்தா அப்ப தான் தெரியும் என்று கூறினாள்….

நிவேதா பேசியதை முரளி கேட்டுக் கொண்டு இருந்தான் அவன் மட்டும் இல்லை அவனுடன் வந்த அப்பத்தா மற்றும் அதியும் தான்…

வசும்மா இவர்களை பார்த்து வரவேற்று விட்டு பிரியா மற்றும் நிவேதாவை குழந்தைகளை அழைத்துக் கொண்டு உள்ளே செல்ல சொல்லி விட்டார்….

நிவேதாவிற்கு இன்னும் காய்ச்சல் சரியாகவில்லை அதனால் அவளை தூங்க சொல்லிவிட்டார்…

அதி தான் முதலில் பேச்சை ஆரம்பித்து விட்டான்….. “ஜனகராஜ் நிவேதாவோட அப்பான்னு அரெஸ்ட் பண்ற அப்ப தெரியாது… அவரை அரெஸ்ட் பண்ண வாட்டி அவரை பத்தி விசாரிக்கும் போது தான் இன்னொரு விசயம் தெரிஞ்சது…. அத சொல்ல தான் இங்க வந்தேன் என்னால அதுல ஒன்னும் பண்ண முடியல….. டாக்குமெண்ட்ஸ் எல்லாம் பக்கவா இருக்கு” என்று ஒரு விஷயத்தை கூறினான் அதை கேட்ட அனைவரும் அதிர்ந்து நின்று விட்டனர்…. (என்ன விசயமா இருக்கும் !!!!)

அடுத்த நாள் காலை

சாந்தா எழுந்து வீட்டை சுத்தம் செய்ய வெளியே வந்தார்… அவர் வரும் போது நிஹாரிகா வீட்டில் இல்லை…. இவ்வளவு சீக்கிரம் எங்க போயிட்டா என்று யோசித்துக் கொண்டே ரெடியாகி அவர்களின் கடைக்கு சென்றார்…

ஆனால் அங்கு முதலாளி சீட்டில் அவர்களின் மேனேஜர் பாலய்யா அமர்ந்து இருந்தார்… நேரே அங்கு சென்று எந்திரிக்க சொன்னார்… ஆனால்  பாலய்யா  முடியாது  கடை  பேரு “என் பொண்ணு நிஹாரிகா மேல இருக்கு” என்று கூறினார் ….

“சரி நிஹாரிகா மேல தானு இருக்கு எந்திரிங்க….”

“உங்களுக்கு நான் சொன்னது புரியல்னு நினைக்குறேன் ….என் பொண்ணு நிஹாரிகா மேல இருக்கு” என்று அழுத்திக் கூறினார்…..

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. அதி என்ன சொல்லி இருப்பான் … வேற எதும் சிக்கலா