
அம்மா வந்து என்னை திட்டுவாங்க… இப்போ நீ ஜூஸ் குடிக்க போறியா இல்லையா என்று இளமாறன் அதட்ட … செந்தமிழ் அவனை மிரட்சியாக பார்த்தாள் …
எனக்கு ஒண்ணும் வேணாம் … நீங்க எதுக்கு என்னை பொண்ணு பார்க்க வந்தீங்க … பிடிக்கலைன்னு சொல்லிட்டு ஏன் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க … நான் தப்பு பண்ணிட்டேன் … நீங்க என்கிட்ட என்னை பிடிச்சிருக்கா அப்படின்னு கேட்டீங்க … நான் உங்க கிட்ட என்னை பிடிச்சிருக்கா அப்படின்னு கேட்டிருக்கணும் …
உங்களுக்கு கொஞ்சம் கூட என்னை பிடிக்கல … என்னை மனைவியா வேண்டாம் … ஒரு ஃப்ரெண்ட் டா வேண்டாம் அட்லீஸ்ட் ஒரு மனுஷியா நடத்தலாம்ல … குழந்தை வேணும்னு நான் கேட்டது தப்பு தான் … அதுக்காக என்கிட்ட அத்துமீற பார்க்குறீங்க … அன்னைக்கு வலுக்கட்டாயமா முத்தம் வைக்குறீங்க …
நான் வந்து உங்க கிட்ட என்னை காலேஜ் சேர்த்து விடுங்கன்னு சொன்னேனா … நீங்களா வந்தீங்க … காலேஜ் சேர்த்து விடுறேன்னு சொன்னீங்க … அவங்க என்னை தள்ளி விடனும்னு உங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க … நீங்க ஏன் என்னை கல்யாணம் பண்ணிட்டு வந்து பேசியே சித்திரவதை பண்றீங்க … என்கிட்ட தப்பா நடந்துக்க பார்க்குறீங்க …
என்னை விட்டுடுங்க … உங்க கண்ணுலேயே படமாட்டேன் … இனியும் என்னால அம்மாவை ஏமாத்த முடியாது … எனக்கு விவரம் தெரியுறதுக்கு முன்னாடியே என் அம்மா இறந்து போயிட்டாங்க … புனிதாம்மா என்னை மகளா நினைச்சு என்மேல ரொம்ப அன்பு காட்டுறாங்க … உங்களுக்கு அதும் பிடிக்கலைன்னு எனக்கு தெரியும் …
என்னதான் அன்பு காட்டினாலும் அவங்க என்னோட அம்மா ஆகிட முடியாது … அவங்க உங்க அம்மா தான் … என்னை பிரிஞ்ச பிறகு அவங்க வருத்தப்படுவாங்கன்னு நினைச்சு எனக்கும் கஷ்டமா தான் இருக்கு … நான் போயிடுறேன் என்று செந்தமிழ் அழுது கொண்டே சொல்லி முடிக்க … இளமாறன் அவளை அழுத்தமாக பார்த்தான் …
எங்க போவ ?? என்ன பண்ணுவ ?? என்று அவன் கேட்க … இங்க தான ரேவதி இருக்கா … அவ ஃபேக்டரில வேலைக்கு போய் எங்கேயாச்சும் தங்கிப்பேன் என்றாள் …
நான் இன்னும் கொஞ்ச நாள்ல கம்பெனி ஓபன் பண்ணிடுவேன் … அப்புறம் அம்மா கிட்ட நானே எல்லா உண்மையும் சொல்லிடுறேன் … நீ அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இரு … நான் ரொம்ப கஷ்டப்பட்டு எல்லாம் ரெடி பண்ணியிருக்கேன் … எதையும் கெடுத்து விட்றாத … இப்போ ஜூஸ் குடி என்றான் …
என்னால இப்போலாம் உங்க வீட்ல சாப்பிட முடியல … நீங்க யாரு … உங்க உழைப்புல நான் ஏன் சாப்பிடணும் என்று அவள் கேட்க … அவன் அதிர்ந்து தான் போனான் … நீ எனக்கு பொண்டாட்டியா வேலை பார்க்கிறதுக்கு சம்பளம்னு கூட வச்சுக்கோ என்று அவன் சொல்ல … இது அதை விட கேவலமா இருக்கு என்றாள் …
சரி கடனா வச்சுக்கோ … நீ வேலைக்கு போய் சம்பாதிச்சு எனக்கு செட்டில் பண்ணிடு என்று அவன் சொல்ல … அவள் அமைதியாக இருந்தாள் … குடிக்குறியா இல்ல நான் எப்பவும் பண்ற மாதிரி பண்ணனுமா என்று அவன் கேட்க … அவள் வேகமாக ஜூஸ் டம்ளரை வாங்கினாள் … அதை பிடிக்க கூட தெம்பில்லாமல் இருந்தவள் கைகள் நடுங்க … அவன் டம்ளரை வாங்கி அவளுக்கு மெதுவாக ஜூஸ் ஊட்டினான் … அப்போது தான் அங்கு வந்த புனிதா இதை பார்த்து சந்தோஷம் அடைந்தார் …((இந்தம்மா வேற …))
ஒருவேளை செந்தமிழ் சொன்ன மாதிரி அவள் இப்போதே அவர்களை விட்டு சென்றிருந்தால் … அவளுக்கு வரப்போகும் மிகப்பெரிய பிரச்சனைகளையும் வலிகளையும் தவிர்த்திருக்கலாம் …
செந்தமிழ் இரண்டு நாட்கள் ஹாஸ்பிடலில் இருந்து விட்டு வீடு திரும்பினாள் … புனிதா அவளை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டார் … வீட்டிற்கு சென்றதும் மகன் இல்லாத போது புனிதா செந்தமிழிடம் … இளமாறன் உன்னை எதுவும் கஷ்டப்படுத்துறானா என்று அவர் மனதில் அரித்துக் கொண்டிருந்த கேள்வியை கேட்டு விட … அவள் திருதிருவென விழித்தாள் …
ஏன் மா இப்படிலாம் கேட்கிறீங்க என்று அவள் பதிலுக்கு கேட்க … இல்லடா ரெண்டு பேரும் கொஞ்ச நாளைக்கு எல்லாத்தையும் தள்ளி போட்டிருக்கீங்கனு மட்டும் தான் நான் நினைச்சேன் … ஆனா அடிக்கடி உனக்கு உடம்பு சரியில்லாம போயிடுது … அவன் உன்னை நல்லா பார்த்துக்கிறானா … உன்கிட்ட கோபமா நடந்துக்கிறானா என்று அவளுக்கு தாயாய் அவர் கேட்க… அவள் அதிர்ச்சியானாள் …
எல்லா உண்மைகளையும் சொல்லி இந்த தாயன்பை இழக்க அவள் மனம் விரும்பவில்லை … புனிதாம்மா என்று அவரை அணைத்துக் கொண்டவள் … அம்மா அவர் என்னை சந்தோஷமா தான் வச்சிருக்கார் … அவரால தான் நீங்க எனக்கு கிடைச்சிருக்கீங்க … நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் என்று அழுதாள் …
இனியனும் ரேவதியும் செந்தமிழை பார்க்க வீட்டிற்கு வந்தார்கள் … ரேவதியிடம் செந்தமிழ் நடந்ததை சொல்லி அழுதாள் … ஹே … உன் மேல ஆசை இருக்க போய் தான் அவர் உன்கிட்ட நெருங்கணும்னு நினைக்கிறார் என்று ரேவதி சொல்ல … அதெல்லாம் இல்ல … அவருக்கு என்னை பிடிக்கவே இல்ல … நீ உன் ஃபேக்டரில எனக்கு ஒரு வேலை வாங்கி குடு … எனக்கு மன நிம்மதி வேணும் என்றாள் …
ஏன்டி இப்படி பண்ற … உன் மாமியார் உன்னை நல்லா பார்த்துக்கிறாங்க … ஒரு குழந்தை பெத்துட்டு இங்கேயே இருக்கிற வழிய பாரு … அதை விட்டுட்டு வெளில போய் ஏன் கஷ்டப்படனும்னு நினைக்கிற … வெளில போனா உனக்கு பாதுகாப்பு இல்ல என்று ரேவதி சொன்னதில் செந்தமிழ் கொஞ்சம் குழம்பினாள் …
இனியனும் ரேவதியும் கண்ணாலே காதல் பரிமாறிக் கொள்வதை … சைகையாலே பேசிக் கொள்வதை … வெட்கத்துடன் கிண்டலாக பேசிக் கொள்வதை இளமாறனும் செந்தமிழும் கவனித்தார்கள் … நல்ல காதல் வாழ்க்கை கிடைக்க பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று நினைத்துக் கொண்டார்கள் …
இனியனும் ரேவதியும் அடிக்கடி சந்தித்து கொண்டார்கள் … ஆனால் இருவரும் காதல் சொல்லிக் கொள்ளவில்லை … சில சமயங்களில் ரேவதி நன்றாக பேசுகிறாள் … சில சமயங்களில் பதட்டமாக இருக்கிறாள்… இனியன் அவளிடம் கேட்டால் வேலை டென்ஷன் என்று சமாளிக்கிறாள் … அவனும் அவளிடம் காதலை சொல்ல நேரம் எதிர்பார்த்து காத்திருந்தான் … அவள் நெருக்கம் காதலாய் அவனுக்கு தெரிந்தாலும் … அவள் விலகல் கொஞ்சம் அவனுக்கு குழப்பத்தையும் தருகிறது …
இப்போதெல்லாம் செந்தமிழிடம் இளமாறன் கோபத்தை குறைத்து கொண்டு பேச ஆரம்பித்தான் … அன்று புனிதா மருமகளை அழைத்தார் … உனக்கு உடம்பு முடியாம இருக்கப்போ அறுபடை வீட்டுக்கும் வரேன் … பால் குடம் எடுக்கிறேன்னு வேண்டிக்கிட்டேன் … அதோட நிறைய கோவிலுக்கு நம்ம கடை பக்கத்துல இருக்கிற டிராவல்ஸ்ல டூர் புக் பண்றாங்க … அம்மா போயிட்டு வரேன் … நான் திரும்பி வர பத்து நாள் ஆகும் என்று அவர் சொல்ல … செந்தமிழ் கலங்கிய கண்களுடன் அவரை பார்த்தாள் …
என் மகன் தான் என் பேச்சை கேட்க மாட்டேங்கிறான் … அந்த கடவுளாவது என் வேண்டுதலை நிறைவேத்துவார்னு நம்புறேன் என்று குழந்தை விஷயத்தை சொல்லாமல் சொல்லி அவர் புலம்பினார் …
புனிதா மகனிடமும் டூர் விஷயத்தை சொல்ல … வர வர மருமக மேல பாசம் பொங்கிட்டே இருக்கு … இதெல்லாம் நல்லதுக்கு இல்ல என்றான் … உனக்கு பொறாமையா இருக்காடா என்று அவர் கேட்க … ஆமா நீங்க என்னோட புனிதாம்மா எனக்கு மட்டும்தான் சொந்தம் என்று அவர் கன்னத்தில் முத்தம் வைத்தான்…
லூசு மாதிரி பேசாத … அவ நம்ம ரெண்டு பேரை நம்பி இந்த வீட்டுக்கு வந்தவ … நான் உங்க ரெண்டு பேருக்கும் தான் சொந்தம் என்றார் …
அன்று ரேவதி அவள் தெருவுக்கு அருகில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது … பஸ் ஸ்டாண்டில் பிரச்சனை செய்த அதே வயது முதிர்ந்த ஆள் அவளிடம் சண்டையிட்டு … அவள் கையை பிடித்து வம்பிழுத்துக் கொண்டிருக்க … அவளை பார்க்க வந்த இனியன் வேகமாக சென்று அவனை தடுத்தான் …
ஏன்டி இவ்ளோ நாளா உங்களுக்கு வேண்டியது எல்லாம் செஞ்சு உங்களுக்கு கஞ்சி ஊத்துனா புதுசா நீயே கஸ்டமர் தேட ஆரம்பிச்சுட்டியா … என்னமோ ஒழுக்கமா வாழ்ந்து காட்டுவேன்னு சவால் விட்ட இவன் கூட சுத்திட்டு இருக்க … நீங்க இருந்த இருப்பு உங்க அம்மா தேவி…. யாவா இருந்தது எல்லாம் மறந்து போச்சா என்று அவன் பேச … இனியன் இன்னும் கோபமாகி அவனை அடித்துக் கொண்டே இருந்தான் …
ரேவதி இனியனை தடுக்க வம்பு செய்தவன் ஓடி விட்டான் … அவனை அணைத்துக் கொண்டு அவள் அழுதாள் … ஒண்ணும் இல்ல ரேவதி பயப்படாத என்று இனியன் அவள் தலையை கோதி விட்டான் … பொறுக்கி நாய் … அவன் அம்மாவை பத்தி சொன்னதை நினைச்சு நீ ஒண்ணும் ஃபீல் பண்ணாத என்று அவன் சொல்ல … அது உண்மைதான் இனி … என் அம்மா ஒரு வேசி என்றாள் ரேவதி …
சட்டென திடுக்கிட்டவன் அவளிடம் இருந்து விலகி நின்றான் … அவளும் திடுக்கிட்டு அவனை நிமிர்த்து பார்க்க … என்ன நினைத்தானோ ஒன்றும் சொல்லாமல் அங்கிருந்து சென்று விட்டான் … அவள் அழுது கொண்டே வீட்டிற்கு சென்று விட்டாள்…
புனிதவதி ஊருக்கு சென்றதும் செந்தமிழ் தான் சமைத்தாள் … அம்மா ஊரிலிருந்து வந்ததும் கம்பெனி திறப்பு விழாவை நடத்த வேண்டும் என்று இளமாறன் முடிவு செய்து வைத்திருந்தான் …
அன்று செந்தமிழை அழைத்தவன்… இந்தா என்று ஒரு ரிங் பாக்ஸை அவளிடம் தந்தான் … அவள் அதை திறந்து பார்த்தால் ஒரு லேடீஸ் தங்க மோதிரம் I என்ற இனிஷியல் போட்டு இருந்தது … இது யாருக்கு என்று அவள் கேட்க … உனக்கு தான் என்றான் … எனக்கெதுக்கு என்று அவள் கேட்க … நீ எனக்கு தினமும் சமைச்சு போடுற … அதுக்கு சம்பளம்னு கூட வச்சுக்கோ என்றான் … அவள் தயக்கமாக நிற்க … வேணும்னா எடுத்துக்கோ இல்லனா வச்சுட்டு போ என்றான் கோபமாக …
வேண்டாம் என்று சொன்னால் அதற்கும் திட்டுவான் என்று நினைத்தவள் அதை எடுத்துக் கொண்டாள் … இந்த விஷயத்தை போனில் அவள் ரேவதியிடம் சொல்ல … அவருக்கு உன்னை பிடிச்சிருக்குடி … அதை வெளிப்படுத்த தெரியலன்னு நினைக்கிறேன் என்றாள் ரேவதி …
ஒரு குழந்தை பிறந்தா எல்லாம் சரி ஆகிடும் என்று ரேவதி சொல்ல … அம்மாவுக்காக நான் குழந்தை பெத்துக்கலாம்னு நினைக்கிறேன் … ஒருவேளை அவர் என்னை வேணாம்னு சொன்னாலும் குழந்தையை அம்மா நல்லா பார்த்துப்பாங்க என்று சொன்னாள் செந்தமிழ் …
சரி நீ நாளைக்கு சாயந்தரம் கிளம்பு … நாம அந்த நர்ஸை போய் பார்த்திட்டு வரலாம் என்று ரேவதி சொல்ல அவள் சரி என்றாள் …
மறுநாள் மாலை ரேவதியும் செந்தமிழும் அந்த நர்ஸை சென்று பார்த்தார்கள் … இங்க பாரும்மா கல்யாணமாகி ரெண்டு வருஷமா உனக்கு குழந்தை இல்ல … உன் மாமியாரும் புருஷனும் வேற கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்றாங்க … உன் புருஷன் உன்கிட்ட அன்யோன்யமா இருக்கிறதில்ல அப்படின்னு உன் ஃப்ரெண்ட் சொன்னதால தான் நான் உனக்கு இந்த மருந்து தரேன் … நாளைக்கு பிரச்சினைன்னு வந்தா நீ என்னை மாட்டி விடக்கூடாது என்றார் அந்த நர்ஸ் …
காதலாய் வருவாள் 💞
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அடடா வில்லங்கமான ஐடியாவுக்கு ரேவதியுடன் சேர்ந்து இவள் சம்மதித்து விட்டாளா?
அவன் அறிந்தால் விட மாட்டானே…
இனியன், ரேவதி சூப்பர்.
ரேவதியின் அம்மா மோசமானவர் என்று அறிந்ததும் அவன் சென்று விட்டான். இனி நேரடியாக காதலை சொல்லாமல் திருமணத்திற்கு பெண் கேட்டு வருவானோ?