
எஸ் பி அலுவலகம்
பத்திரிக்கையாளர்கள் அதிவீரன் மற்றும் அன்பரசுவை கேள்விகளாய் கேட்டுக் கொண்டு இருந்தனர்….
அதி தான் “வெயிட் என்ன ஆச்சினு சொல்றேன், ஒரு ஒருத்தரா கேளுங்க”….
“சார் அங்க நடந்த ஆக்சிடென்ட்க்கான மோட்டிவ் என்ன சார்???”
“பணம் தான் வேற என்ன?? மொத்தம் சேலம்ல இருக்க மூணு ரீடைல் துணி கடை வெச்சி இருக்கவங்க சேர்ந்து கோடி கணக்கா ஒருத்தங்க கிட்ட துணி வாங்குறாங்க… பட் பணம் தரோம் , கோடி கணக்கா இருக்குறதுனால பிரைவேட்டா யாருக்கும் தெரியாம வாங்கிக்கோங்கன்னு சொல்லி ஏற்காடுல யாரும் அதிகம் யூஸ் பண்ணாத ரெசார்ட்டா செலக்ட் பண்ணி அங்க கூப்பிட்டு இருக்காங்க….
அங்க எந்த பேச்சும் பேசாம அவங்க டிமாண்ட் பண்ண அமௌன்ட அப்டியே குடுக்குறாங்க… ரெண்டு பேரு பணம் குடுத்த உடனே கிளம்புறாங்க…. ஒருத்தர் அவங்க கூடவே இருக்காரு…. ஒன் டே அங்கேயே ஸ்டே பண்ண வைக்குறாங்க…. எதுக்குன்னா கீழ ஆக்சிடென்ட் பண்ண ஏற்பாடு பண்றதுக்காக…
பணம் வாங்கிட்டு அடுத்த நாள் நைட் விக்டிம் ஏற்காடுல இருந்து புறப்படறாரு…. அவரு கிளம்புனவாட்டி அந்த மூனாவது நபர் மத்த ரெண்டு பேருக்கு இன்பார்ம் பண்ணுவாரு…. அவங்க வர டைம் பார்த்து விக்டிமோட கார தாக்குறாங்க….. முக்கியமா பெண்ட் கிட்ட வரும்போது….. அப்டி தாக்கும் போது அந்த கார் பள்ளத்துல கீழ விழும்….. நல்ல மலை இறங்க ஏற பயிற்சி எடுத்தவங்கள வெச்சி கார்ல இருக்க பணத்தை எடுத்துக்கிட்டு உயிரோட இருந்தா அவங்கள கொன்னுட்டு இவங்க எஸ்கேப் ஆகிடுவாங்க…. பணத்தை உடனே பிரிக்காம ஒரு எடத்துல மறைவா வெச்சிடுவாங்க…. அடுத்த மாசம் இதையே திரும்ப பண்ணுவாங்க…..”
“சார் நேத்து எப்படி கரெக்ட் டைமுக்கு போனீங்க??? நேத்து என்ன ஆச்சி???”
“ஏற்காடு மலை சுத்தி எல்லாமே எங்க கன்ட்ரோலுக்கு நேத்து காலைல வந்துடிச்சி…. மலைய சுத்தி எப்பவும் ரெண்டு போலீஸ் ரௌண்ட்ஸ் போனாங்க…. அது மட்டும் இல்லாம நாலு அஞ்சி ட்ரோன் வெச்சி மலையை எங்க கன்ட்ரோல வெச்சி இருந்தோம்…. அப்ப தான் ஒரு பெண்ட்ல நாலு அஞ்சி பேரு சந்தேகம் படுற மாதிரி சுத்திட்டு இருந்தாங்க…. அவங்க பக்கம் போகாம தூரமா இருந்தே இன்ஸ்பெக்டர் ரவி அவங்கள வாட்ச் பண்ணாரு…. எங்களுக்கும் இன்பார்ம் பண்ணிட்டாரு…. நாங்களும் அவங்களுக்கு டவுட் வராம அவங்கள ரவுண்டு அப் பண்ணிட்டோம்…..”
(இதுக்கு மேல அதி அவங்களுக்கு சொல்லட்டும் நாம என்ன நடந்ததுனு பாத்துட்டு வரலாம் வாங்க)
நேற்று காலை இன்ஸ்பெக்டர் ரவி சென்றவுடன் அன்பரசுவிடம் பேசிவிட்டு மூவருக்கும் மட்டும் ஒரு வாட்சப்பில் ஒரு குரூப் ஓபன் செய்து இருந்தான் அதி… பேசினால் மற்ற யாருக்கோ தகவல் சென்று விடும் என இந்த ஏற்பாடு…. யாருக்கும் இந்த ஆக்சிடென்ட் பற்றி தெரியாது இன்ஸ்பெக்டர் ரவி, அதிவீரன், அன்பரசு, எஸ்பி மணிகண்டன் தவிர….
இருந்தாலும் ரகசியமாக இந்த ஏற்பாடை செய்து இருந்தனர்…. எஸ்பியிடம் ஏற்கனவே ட்ரோன் பறப்பதற்கு அனுமதி வாங்கி இருந்தான் அதி…. அதனால் குரூப்பில் ஆறு ட்ரோன் மலையை சுற்றி பறக்க உத்தரவு பிறப்பித்தான்…. நம்பிக்கையான நான்கு கான்ஸ்டபிளை மலையை மாறு வேடத்தில் கண்காணிக்குமாறு அனுப்பி வைத்தான்…. சற்று மறைவான இடத்தில் இருந்து ட்ரோனை இயக்க வைத்தான்…. மலையின் அனைத்து பகுதியும் அவனின் கண்காணிப்பின் கீழ் இருந்தது….
மாலை ஆறரை மணி இருக்கும்… அப்போது அன்பரசு ட்ரோன் காட்சிகளை பார்வையிட்டுக் கொண்டு இருந்தான்…. அப்போது தான் சிலர் சந்தேகம் படுமாறு நடமாடி கொண்டு இருந்தனர்…. அந்த பக்கம் செல்ல தடை விதிக்க படுத்திருந்தது…. ஆனால் நான்கு ஐந்து பேர் தடையை மீறி அந்த பக்கம் சென்றனர்… அன்பரசு மதியமே ஏற்காடு வந்து இருந்தான்…
“ரவி இங்க வாங்க இந்த இடம் தடை செய்யபட்ட பகுதி தானு… இவங்க எல்லாம் யாருனு அடையாளம் தெரியுதா உங்களுக்கு???” என்று ரவியிடம் அன்பரசு கேட்டான்….
“சார் இது லோக்கல் ஆளுங்க எதோ ஆக்சிடென்ட் ஆச்சுனா இவங்கள வெச்சி தான் பாடிய எடுப்போம்… நல்லா மலை ஏறி இறங்குவாங்க…. ஆனா இவங்க ஏன் தடை செய்யபட்ட பகுதிக்கு போறாங்க தெரியல…. இவங்க கூட இன்னும் ரெண்டு பேர் இருக்காங்க யாருனு தெரியல…. பாக்க பணக்காரங்க மாதிரி இருக்காங்க சார்…..”
“ஓகே நீங்க அதிவீரன் சாருக்கு கால் பண்ணி வர சொல்லுங்க” என்று கூறிக் கொண்டு இருக்கும் போதே அதிவீரன் அன்பரசுக்கு அழைத்து இருந்தான்…. அதில் அன்பரசு பதிவு செய்து வைத்து இருந்த பெயரையும் அவனுக்கு வைத்த ரிங்டோனையும் பார்த்து ரவி விழி விரித்து பார்த்தான்… அன்பரசு அதை கண்டுகொள்ளாமல் அழைப்பை உயிர்ப்பித்து பேச ஆரம்பித்து இருந்தான்…. “குட் ஈவினிங் சார்” என்று மாலை வணக்கத்தை தெரிவித்தான்….
அவனும் “குட் ஈவினிங் அன்பரசு ட்ரோன் சீன்லாம் பாத்திங்களா???”
“எஸ் சார் அத உங்களுக்கு இன்பார்ம் பண்ண கால் பண்ணும் போது நீங்களே பண்ணிட்டீங்க சார்…”
“ஓகே யாரு அது????” என்று கேட்டான்..
“சார் அது லோக்கல் ஆளுங்க… ஆக்சிடென்ட்ல மலைல இருந்து யாரோ கீழ விழுந்து இறந்து போயிருந்தா இவங்க தான் கீழ இறங்கி எடுத்துட்டு வருவாங்கலாம்….”
“சோ இவங்களும் இப்ப நடக்க கூடிய ஆக்சிடென்ட்க்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு இருக்கு….”
“இருக்கலாம் சார் எனக்கும் அதே டவுட் தான்…. “
“ஓகே அன்பரசு நீங்க அவங்க என்ன பண்றாங்கன்னு கவனிங்க….. நான் கிளம்பிட்டேன் மலை ஏற ஸ்டார்ட் பண்ண போறேன் ஒன் ஹவர்ல வந்துடுவேன்…..”
“ஓகே சார்” என்று கூறி அன்பரசு வைத்து விட்டான்….
(இவங்க என்ன பண்றாங்கன்னு கண்டு பிடிக்கட்டும் நம்ம போய் இங்க தடை செய்யபட்ட பகுதிக்கு போனாங்களே அவங்கள பாக்கலாம் வாங்க)
“யோவ் பச்சை எல்லா பிளானும் பக்கவா…. எதுவும் சொதப்ப மாட்டீங்களே…. இவன் யாரு புதுசா இருக்கான் கருப்பன் வரலையா??? எதுவும் சொதப்ப மாட்டானா இவன் “என்று அங்கு இருக்கும் பச்சையிடம் கேட்டுக் கொண்டு இருந்தார் ஜனகராஜ்…. (ஆம் ஜனகராஜ் தான் நிவேதாவின் அப்பா ஜனகராஜ் தான்)
“ஐயா கருப்பையாக்கு உடம்பு சரி இல்லைங்க… ஐயா இது அவனோட தம்பி தானுங்க…. எதுவும் சொதப்ப மாட்டானுங்க ஐயா…. எந்த தப்பும் வராதுங்க ஐயா…. நீங்க எத்தனை மணிக்கு காரு வருமுன்னு சொல்லுங்க நாங்க அந்த கார தூக்கிடுவோமுங்க ஐயா…..”
“சரி போய் மறஞ்சி நில்லுங்க காரு வர அப்ப சொல்றேன்…. யோவ் தன்ராஜ் வாயா போய் மறஞ்சிக்கலாம்” என்று தன் உடன் இருக்கும் மற்றொருவரை அழைத்துக் கொண்டு மறைந்து கொண்டார்…. மற்றவர்களும் அனைத்து பொருட்களையும் தகுந்த இடத்தில் வைத்துவிட்டு மறைந்து கொண்டனர்…..
எட்டு மணி இருக்கும் அதியும் அன்பரசு ரவி இருக்கும் இடம் வந்துவிட்டான்….. அவர்கள் மூவர் மற்றும் நான்கு கான்ஸ்டபிள்களை அழைத்துக் கொண்டு ஜனகராஜ் மற்றும் அவரின் கூட்டாளிகள் இருக்கும் இடத்திற்கு சென்றனர்…
இரவு பத்து மணி ஆகி இருந்தது அப்போது ஜனகராஜிற்கு இன்னொரு கூட்டாளியிடம் இருந்து அழைப்பு வந்தது அதை ஏற்று “சொல்லு மூர்த்தி கிளம்பிட்டானா அவன்…????”
“ஆமா ராஜு அவன் கிளம்பிட்டான் இன்னும் பத்து நிமிஷத்துல நீங்க இருக்குற எடத்துக்கு வந்துடுவான் நானும் அந்த கார் பின்னாடியே தான் வரேன்….”
“சரி மூர்த்தி இங்க ஆளுங்க கிட்ட சொல்லி தயாரா இருக்க சொல்றேன்…. யோவ் பச்சை இன்னும் பத்து நிமிஷத்துல காரு வந்துடும் தயாரா இருங்க வந்ததும் அந்த கார தாக்க ஆரம்பிச்சிடுங்க” என்று கூறிக் கொண்டு இருக்கும் போதே அதி மற்றும் டீமால் சுற்றி வளைத்து பிடித்தனர்…..
அந்த காரும் அந்த நேரம் அந்த இடம் வந்தது… ஜனகராஜின் இன்னொரு கூட்டாளி மூர்த்தியும் அந்த இடம் வந்தான்…. போலீசை பார்த்துவிட்டு தப்பிக்க முயற்சிதான் ஆனால் அவனையும் போலீசார் பிடித்து விட்டனர்….
இன்னொரு காரில் இருந்து அந்த வியாபாரியும் இறங்கி அதியிடம் வந்தார்… “சார் ஏன் இவங்கள பிடிச்சி வெச்சி இருக்கீங்க???”….
“உங்கள கொலை பண்ண முயற்சி செஞ்சதுக்கு” என்று அன்பரசு அந்த வியாபாரியிடம் கூறினான்…..
“சார் என்ன சொல்றிங்க!!!!!” என்று அந்த மனிதர் அதிர்ந்து நின்றுவிட்டார்…..
“ஆமா இதுக்கு முன்னாடி உங்கள மாதிரியே மூணு பேர பணத்தை குடுத்து உசுர எடுத்துட்டாங்க சிம்பிள்” என்று அதி இப்பொது இவரிடம் கூறினான்…
“சார் என்ன சொல்றிங்க!!!!” என்று அந்த மனிதர் மீண்டும் அதிர்ந்து நின்றார்….
“அதையே கேட்காதீங்க… நாளைக்கு காலைல நியூஸ்ல தெரிஞ்சிக்கோங்க…. இன்னிக்கு நீங்க எங்க கண்ட்ரோல தான் இருக்கணும்….. ரவி இவரை எஸ்பி ஆபீஸ் கூட்டிட்டு போங்க…. அன்பரசு இந்த நல்லவங்களை எல்லாம் கூட்டிட்டு போலாம் வாங்க….. கான்ஸ்டபிள்ஸ் நீங்களும் எங்க கூட வாங்க” என்று கூறி ஜனகராஜை இழுத்துக் கொண்டு சென்றான்….
(என்ன அதி நீ உன்னோட வருங்கால மாமனாரை இப்டி இழுத்துட்டு போற என்ன மேன் நீ)
மற்றவர்களும் அவனை பின்பற்றி மற்றவர்களை இழுத்துக் கொண்டு சென்றனர்…..
அதி ஏற்காட்டில் இருந்து கிளம்பும் போதே எஸ்பிக்கு தகவல் சொல்லிவிட்டான்….. அவரும் அவர்கள் வரும் நேரம் அலுவலகத்தில் இருந்தார்…. அவர்களை அங்கு இருக்கும் அறையில் வைத்து விசாரித்தனர்….. யாரும் ஒத்துக்கொள்ளவில்லை…..
(ஆமா செஞ்ச தப்ப யாரு நான் தான் செஞ்சன்னு சொல்ல போறாங்க)
அனைவரையும் இரண்டு அடி வைத்தனர்…. அந்த அடியில் ஜனகராஜின் கூட்டாளி தன்ராஜ் ஒத்துக்கொண்டார்…. அவர்கள் செய்த ஏற்பாட்டை அனைத்தும் சொல்லிவிட்டார் மூர்த்தி மற்றும் ஜனகராஜின் ஐடியா எனவும் கூறிவிட்டார்….. அவர் பேசியதை அன்பரசு விடியோவாக ரெகார்ட் செய்து கொண்டான்…. இவர்களை அரெஸ்ட் செய்ததை யாரோ பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்து விட்டனர்…. அதானல் தான் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு….
தற்போது
இது தான் நடந்தது என்று அவர்களுக்கு தேவையான தகவல்கள் மட்டும் கூறினான்… “சார் இதுல யாரு யாரு சம்பந்தம் பட்டு இருக்காங்க”…..
“தன்ராஜ் சில்க்ஸ் ஓனர் தன்ராஜ், மங்கள் சில்க் ஓனர் மூர்த்தி, இவங்களுக்கு ஹெட் சாந்தா சில்க்ஸ் ஓனர் ஜனகராஜ்….”
“இவங்க மூணு பேரும் தான் மெயின் குற்றவாளிகள் அப்பறம் ஏற்காடு ஊரை சேர்ந்த பச்சை, கருப்பையா, கந்தன், முனியன் இவங்க எடுபிடிகள்…. இதுல கந்தன் கருப்பையா தம்பி…. இப்ப தான் கந்தன் இதுக்குள்ள வந்து இருக்கான்…. கருப்பையாவை அரெஸ்ட் பண்ணி கொண்டு வந்துட்டு இருக்காங்க…. அவளோ தான் இப்ப அவங்கள கோர்ட்ல ப்ரொடியூஸ் பண்ணனும்…. சோ கோ ஆபரேட் பண்ணுங்க” என்று கூறி விடை பெற்று கொண்டனர் இருவரும்….
நிவேதாவின் அம்மா வீடு…
அதி மற்றும் அன்பரசின் பேட்டியை லைவாக தொலைக்காட்சியில் போட்டுக் கொண்டு இருந்தனர்….. சாந்தாவுக்கும் நிஹாரிகாவுக்கும் அதிகாலை எழுந்து பழக்கம் இல்லை…. அதனால் அவர்களுக்கு அந்த விசயம் தெரியவில்லை…. அந்த தெருவின் ஆல் இந்தியா ரேடியோவிற்கு தான் முதலில் தெரிந்தது…. அது வேறு யாரும் இல்லை இவர்களின் பக்கத்து வீடு சித்ராவிற்கு தான்….. செய்தி வந்து பத்து நிமிடத்தில் அந்த தெருவாசிகள் அனைவருக்கும் தெரிந்து விட்டது….. அந்த சித்ரா சாந்தாவிடம் விசயத்தை சொல்ல அவர்கள் வீட்டுக்கு சென்றார்…..
அதே நேரம் வசும்மாவும் அந்த செய்தியை பார்த்து அதிர்ச்சி ஆகி இருந்தார்….
சாந்தாவிற்கும் நிஹாவுக்கும் இந்த விசயம் தெரிந்தால் அவர்கள் நிலை என்ன?????
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
5
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.



அதி மேல இருக்க கோபத்தை நிவி மேல காட்ட போறாங்க … நிவி குடும்பத்துல இருக்க ஒரே நல்ல ஆளு நிவேதா தான் போல …