
காதல் – 11
“பேசா மொழியே
கேளா கதையே
மாறும் என் நெஞ்சத்தின்
மழலை நீயே
ஆரும் அமுதே
ஆசை அழகே
ஆரீராரோ பாடும்
தாயும் நீயே”……
அஸ்வதி வழி நெடுகிலும் அவள் பாட்டுக்கு எதேதோ பேசிக்கொண்டே வந்தாள் , மியூசிக் பிளேயரில் ஓடும் பாடலின் வரிகளில் விஹான் அஸ்வதியைக் கண்டான்……..
அப்பொழுது விஹானுக்கு அவன் அப்பாவிடம் இருந்து அழைப்பு வர அதை எடுத்து பேசினான்……
விஹான் நீங்க எல்லாரும் எங்க இருக்கீங்க?
உங்கள பின்னாடி பார்த்தா காணல?
டிராபிக்ல மாட்டிக்கிட்டீங்களா?
அதான் எங்களோட கார ஃபாலோ பண்ணிட்டு வர முடியலையா?
இல்ல எதுவும் பிரச்சனையா?
அப்பா, விஹான் உங்க கேள்விக்கு பதில் சொல்ல முதல்ல நீங்க அண்ணன பேச விடனும் நீங்களே எல்லா கேள்வியும் கேட்டுட்டே இருந்தா அவன் எப்ப பதில் சொல்லுவான்?
சரி விஹானா இப்ப நீங்க எங்க எல்லாரும் இருக்கீங்க? என்ன ஆச்சு?
அப்பா எங்களுக்கு ஒன்னும் ஆகல நாங்க எல்லாரும் நல்லா இருக்குறோம் வர வழியில எனக்கு ரொம்ப பசியாயிடுச்சு அதனால எல்லாரும் ஒரு ஹோட்டல்ல உட்கார்ந்து சாப்ட்டுட்டு வந்தோம் அதான் கொஞ்சம் லேட் ஆயிடுச்சு……
சரி சரி நாங்க இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க ரீச் ஆகிடுவோம், உங்களுக்கு வெயிட் பண்ணுமா இல்ல நாங்க கேபிள் கார்ல போயிறட்டுமா?
எங்களுக்கு நீங்க வெயிட் பண்ண வேண்டாம்பா , இங்க ரொம்ப டிராபிக்கா இருக்கு சோ நாங்க வர லேட்டாகும் சோ நீங்க தேவா அங்கிள் பேமிலிய கூட்டிட்டு கேபிள் கார்ல போங்க நாங்க பின்னாடியே வந்து ஜாயின் பண்ணிக்கிறோம்…..
சரி விஹான் எல்லாரும் பார்த்து வாங்க….
சரிப்பா நா போன வச்சிடுறேன்….
என்னாச்சு விஹான் ?
சித்திக் அங்கிள் நம்ம எல்லாரயும் தேடுறாங்களா?
ஆமா அஸ்வதி….
சரி நம்ம சீக்கிரம் அங்க போயிடுவோம் என்று அஸ்வதி மீண்டும் எதையோ பேசி கொண்டே வந்தாள்….
விஹான்னா அவளின் அண்ணனின் முகத்தை கவனித்து கொண்டே வந்தாள் …….
சோகமே உருவாக திரியும் தன் அண்ணன் அஸ்வதி பேச பேச இவன் முகம் சிரித்து கொண்டே இருந்தது…..
விஹானாவுக்கு எல்லாம் புரிந்து விட்டது , அவள் சிரித்துக் கொண்டாள்….
மூன்று மணி நேர பயணத்திற்கு பின் அவர்கள் குல்மார்க்கை சென்றடைந்தனர்……
அஸ்வதி இங்கே ரொம்ப குளிரும் இந்த ஸ்வட்டர போட்டுக்கோ என்று விஹான் ஒரு ஸ்வட்டரை கொடுத்தான் அவளும் மறுக்காமல் வாங்கி அணிந்து கொண்டாள்……
பிறகு கேபிள் காருக்கு சென்றனர், அங்கே அந்த வரிசை நீண்டு கொண்டே இருந்தது….
என்னப்பா இவ்ளோ கூட்டம் இருக்குது நம்ம எப்படி போறது?
நா ஏற்கனவே டிக்கெட் ஆன்லைன்ல புக் பண்ணி எடுத்துட்டேன் அதனால நம்ம இந்த டிக்கெட் கவுண்டர்ல வெயிட் பண்ண தேவையில்லை…….
ஓ சூப்பர் சூப்பர் வாங்க அப்ப எல்லாரும் போகலாம் என்று அஸ்வதி விஹான் மற்றும் விஹானாவின் கையை பிடித்துக் கொண்டு கேபிள் காரை நோக்கி ஓடினாள்…..
விஹான் அங்கு நின்று கொண்டிருப்பவரிடம் தங்களுடைய டிக்கெட்டை காண்பித்தான் , அவர் இவர்களை கேபிள் காரில் ஏற்றிவிட்டு கதவை மூடினார்…..
விஹான் நம்ம மூணு பேர் மட்டும் தானா ஒரு கேபிள் கார்ல?
ஆமா அஸ்வதி….
ஹையா ஜாலி ஜாலி என்று அவள் விஹானின் கையைப் பிடித்து குதித்தாள்…..
அவளின் இந்த மழலை முகத்தை பார்த்த விஹானுக்கு அவளை இன்னும் பிடித்து போய்விட்டது……
சின்ன குழந்தை போல அவ்வளவு சந்தோஷமாக இருந்தாள் அஸ்வதி….
அவர்கள் மூவரும் கொண்டோலா ரைடுக்கு சென்றனர் அந்த கேபிள் காரில் உள்ள ஜன்னல் கண்ணாடி வழியே நகரும் பனி மலைகளையும் நகரும் நீல ஸ்ப்ரூஸ் மரங்களையும் பார்த்து ரசித்து கொண்டு வந்தாள்……
அஸ்வதி நீ போட்டோ எதும் எடுக்கலையா?
எதுக்கு போட்டோ எடுக்கணும் விஹானா?
இந்த இன்ஸ்டாகிராம் வாட்ஸ் அப்ல எல்லாம் ஸ்டேட்டஸ், ஸ்டோரி போட?
நா அதெல்லாம் யூஸ் பண்ண மாட்டேன் விஹானா , எனக்கு இந்த நிமிஷத்த ரொம்ப ரசிச்சு என்ஜாய் பண்ணனும் , இதுக்கு நடுவுல நா போன் எடுத்து போட்டோ எடுத்துட்டு அந்த ஃபோட்டோ நல்லா வரல இந்த ஃபோட்டோ நல்லா வரலன்னு சொல்லிட்டு என்னால ஸ்ட்ரஸ் ஆக முடியாதுப்பா , இந்த பனிமலை ரொம்ப அழகா இருக்கு , இதை பாக்கறதுக்குகே எனக்கு நேரம் பத்தாது இதுல நா எங்க போய் போட்டோ எடுக்க அய்யோ உன்கிட்ட பேசிட்டே ரெண்டு மலையை விட்டுட்டேன் போ என்று அவள் மீண்டும் வேகமாக நகரும் பனி மலைகளை பார்த்துக் கொண்டிருந்தாள்……
அஸ்வதியின் செய்கையைப் பார்த்து விஹான் சிரித்துக் கொண்டிருந்தான்…..
விஹானா நம்ம மூணு பேரும் ஒரு போட்டோ எடுத்துக்கலாமா?
இதெல்லாம் ஒரு கேள்வியா கேட்டுட்டு இருப்பியா?
வா எல்லாரும் சேந்து போட்டோ எடுப்போம் என்று விஹானா அழைக்க அஸ்வதி விஹான் அருகில் போய் அமர்ந்தாள்…..
நடுவில் அஸ்வதி அமர்ந்திருக்க இடது பக்கம் விஹான் அமர்ந்திருக்க , வலது பக்கம் விஹானா அமர்ந்து கொண்டு மூவரையும் சேர்த்து செல்பி எடுத்தாள்…….
விஹானா எடுத்த புகைப்படத்தில் மூவரும் அழகாக சிரித்துக் கொண்டிருந்தனர் அவர்களின் சிரிப்பிற்கு ஏற்றார் போல பின்னால் பனி மலைகளும் சிரித்துக் கொண்டிருந்தது……
பிறகு அவர்கள் மூவரும் ஸ்கையிங் செய்யும் இடத்திற்கு சென்றனர்…..
அங்கு நிறைய பேர் ஸ்கையிங் செய்து கொண்டிருந்தனர்……
அப்பொழுது அவர்கள் மூவரயும் பார்த்து சித்திக் கையைசைத்து அழைத்தார்….
சித்திக் அழைத்தவுடன் மூவரும் அவருக்கு அருகில் சென்றனர்……
என்னடா குழந்தைகளா டிராபிக்ல இருந்து வர இவ்வளவு நேரம் ஆயிடுச்சா?
ஆமாப்பா ரொம்ப டிராபிக் வர வழியில….
சரி சரி எல்லாரும் ஸ்கையிங் பண்ணி விளையாடுங்க போங்க என்று அவர் கூறிவிட்டு சென்றுவிட்டார்……
அஸ்வதி தூரத்தில் தன்னுடைய தாயார் மற்றும் தங்கை ஸ்கையிங் செய்து விளையாடி கொண்டு இருப்பதை பார்த்தாள்…..
அப்பொழுது அவள் தோளில் யாரோ கை வைப்பது போன்ற உணர்வு , திரும்பி பார்த்தாள் விஹான் தான் ஸ்கையிங் போர்ட்டோடு நின்று கொண்டு இருந்தான்…..
இது என்ன விஹான் ?
இந்த ஸ்கையிங் போர்ட் இவ்ளோ பெருசா இருக்குது இதுல எப்படி சறுக்கிட்டு போறது ?
வா நா உனக்கு சொல்லி தரேன் என்றிட்டு , அவன் அவளின் காலை எடுத்து அந்த ஸ்கையிங் போர்டில் வைத்தான் , பிறகு அவளுக்கு ஹெல்மெட் போட்டு விட்டு, நீக் கப் (முட்டி அடிபடாமல் இருக்க) அதையும் போட்டு விட்டான் பிறகு அவளின் தலையில் அணிந்திருந்த ஹெல்மெட்டில் உள்ள கேமராவை ஆன் செய்தான்….
அஸ்வதி, இப்போ ஒரு ரைட் நா உன்கூட வரேன் நா எப்படி இந்த ஸ்டிக் வச்சி ஸ்னோவ ஸ்லைடு பண்ணிட்டு போறேன்னு நல்லா பாத்துக்கோ நெக்ஸ்ட் டைம் நீதான் தனியா போகனும் என்ன?
ஓகே விஹான் என்று அவள் கூற , அவன் அந்த நீண்ட ஸ்டிக்கை வைத்து பணியில் லாவகமாக அவளுடன் சறுக்கி கொண்டு சென்றான்…..
விஹான் இது ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு என்று அவள் சத்தமா கூறி கொண்டே வந்தாள்…..
அஸ்வதியின் முதுகோடு ஒட்டி நின்றப்படித்தான் அவனால் பணியில் சறுக்க முடியும்….
அதனால் அவளை ஒட்டி நின்றபடிதான் பணியில் சறுக்கி கொண்டு வந்தான்… அதனால் அந்த காஷ்மீரின் குளிரிலும் அவளால் அவனின் உடல் சூடாக கொதித்தது……
நீண்ட தூரம் அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து பணியில் சறுக்கி கொண்டே சென்றார்கள்…..
பிறகு திரும்பி அவர்கள் ஆரம்பித்த இடத்திற்கே வந்து விட்டனர்….
அய்யோ அதுக்குள்ள முடிஞ்சிருச்சா?
இன்னும் கொஞ்ச நேரம் இருந்துருக்கலாம் ரொம்ப ஜாலியா இருந்துச்சு…..
அவனால் எதுவும் பேச முடியவில்லை அவன் அவளையே பார்த்துக் கொண்டிருக்கிறான்…..
சரி அஸ்வதி அண்ணன் சொல்லிக் கொடுத்தத நல்லா கவனிச்சுக்கிட்டியா?
இப்ப நெக்ஸ்ட் ரைட் நீ மட்டும் தனியா போக போற …..
எல்லாம் நல்லா புரிஞ்சுதுப்பா நா தனியா ரைட் போக போறேன் விஹானா என்று அவள் சந்தோஷத்தில் குதித்தாள்…..
அந்த ஸ்கையிங் போர்டில் இருந்து தன்னுடைய காலில் மாட்டியிருந்த ஷூவை கழட்டி கொண்டு இருந்தான் விஹான்……
இங்க பாரு அஸ்வதி கால ரெண்டயும் ரொம்ப நல்லா ஸ்ட்ரைட்டா வச்சுக்கோ நேரா நிக்கணும் குனியக் கூடாது , குனிஞ்சா கீழே விழுந்திருவ …
அப்புறம் இந்த ஸ்டிக்க வச்சுட்டு பணிய தள்ளிவிட்டுட்டு மெதுவா போகணும் எல்லாம் புரிஞ்சுதா?
ரொம்ப நல்ல புரிஞ்சது விஹான் ….
சரி நல்லா நேரா நில்லு , கால்ல ஸ்ட்ரைட்டா வை …..
கரெக்ட் அப்படித்தான் , ஸ்டிக்க நேரா புடி….
வெரி குட் அவ்வளவுதான் இரு உனக்கு நான் கேமராவை செட் பண்ணி தரேன் என்று விஹான் திரும்பவும் அஸ்வதி பணியில் சறுக்கி கொண்டே போனாள்….
அஸ்வதி இன்னும் நா கேமரா செட் பண்ணல அதுக்குள்ள ஏன் போற?
நா எங்க போறேன் தானா போகுது என்று அவள் வேகமாக சறுக்கி கொண்டு போனாள்……
அண்ணா அஸ்வதிய போய் புடி கீழ விழுந்துற போறா என்று விஹானா கூறவும் , விஹான் இன்னொரு போர்டை எடுத்துக்கொண்டு அவள் பின்னால் வேகமாக சென்றான்…..
அஸ்வதி நீ பயப்படாத உன் பின்னால தான் நான் வாரேன் கால மட்டும் ஸ்ட்ரெயிட்டா வச்சுக்கோ பெண்ட் பண்ணிடாத பெண்ட் பன்னா கீழே விழுந்துருவ என்று விஹான் அவள் பின்னால் கத்திக் கொண்டே வேகமாக சறுக்கி கொண்டு போனான்…..
விஹான் எல்லாம் சொல்லிக் கொடுத்தீங்க எப்படி இந்த போர்ட நிப்பாட்டனும்ன்னு எனக்கு நீங்க சொல்லி கொடுக்கலையே இது ரொம்ப வேகமாக போகுது என்ன காப்பாத்துங்க என்று அஸ்வதி பயத்தில் கத்தினாள்…..
பயப்படாத அஸ்வதி நா உன் பின்னால தான் வாரேன் என்று அவன் வேகமாக சென்று அவள் முன்னால் போய் நின்றான்…..
விஹான் தள்ளிப் போங்க உங்க மேல நான் இடிச்சிட போறேன் தள்ளுங்க என்று அஸ்வதி கத்திக்கொண்டே வந்தாள்…..
விஹான் தன் இரு கைகளையும் விரித்து கொண்டு அவளை விழ விடாமல் மறைத்து நின்றான் அஸ்வதி வந்த வேகத்திற்கு அவன் மேல் மோதி இருவரும் இணைந்து ஒன்றாக உருண்டு புரண்டு கீழே தள்ளி போய் விழுந்தனர்…..
இந்த பணி மோதல்தான் அவர்களின் காதலின் ஆரம்பமா?
பொறுத்திருந்து பார்ப்போம்….
தொடரும்…..
உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்…….
❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


இன்னைக்கு அத்தியாயம் வேகமா முடிஞ்ச மாதிரி இருக்கு … அவங்க லவ்வை ரசிச்சதால அப்படி இருக்கும் போல … அஸ்வதி வாழ்க்கையில இப்போதான் சந்தோஷம் வருது போல …
ஆமா, தொடர்ந்து கதை படிங்க…
படிச்சிட்டு உங்களோட ஏகோபித்த ஆதரவ குடுங்க….😇
நீண்ட நாளைய மனக் கலகங்கள் அகன்று நிம்மதியான சூழலில், அன்பானவர்கள் இடையில் இருக்கும் இந்த சந்தோஷமான நேரத்தினில் அவள் இத்தனை நாட்களாக மறந்து மறைத்து வைத்திருந்த அவளது குழந்தைத்தனமான செய்கைகள் வெளிவந்துவிட்டன.
அஸ்வதியின் குதூகலமான குழந்தைத்தனமான செய்கையில் தானும் மன இறுக்கம் தளர்ந்து மகிழ்கிறான் விஹான்.
இவர்களது நெகிழவைக்கும் மகிழ்வான தருணங்கள் எத்தகைய மன மாறுதல்களை இருவருக்குள்ளும் ஏற்படுத்தும் என்று பார்ப்போம்.
Paakalam pa…..
Thank you for your valuable comments ☺️