Loading

காதல் – 10

 

அஸ்வதி விஹானின் கைகளைப் பிடித்து கொண்டு நன்றாக உறங்கி கொண்டு இருந்தாள், அவனும் அவளின் தலையில் கை வைத்தவாறு அமர்ந்தபடியே உறங்கி விட்டான்…..

 

இதை தூரத்தில் இருந்து பார்த்தவள் அவர்கள் இருவரையும் தன் ஃபோனில் அழகாக  புகைப்படம் எடுத்து கொண்டாள்…..

 

விஹானும் அஸ்வதியும் அவ்வாறு இருப்பதை விஹான்னா பார்த்து விட்டாள் பிறகு  அவனருகில் வந்தாள்…..

 

அண்ணா…

அண்ணா…

என்று மெதுவாக அஸ்வதி தூக்கம் கலையாதவாறு அழைத்தாள் , அதில் விஹான் விழித்து கொண்டான்…..

 

என்ன அண்ணா இங்க பண்ணிட்டு இருக்க?

 

அது…

இவ தூக்கத்துல எதோ புலம்பிட்டும் , அழுதுட்டும் , குளிருல நடுங்கிட்டும் இருந்தா அதான்….

 

சரி அண்ணே நீ இப்படி இவக்கூட உக்காந்துட்டு இருக்கிறதை நா பாத்ததானால போச்சு , வேற யாராவது பாத்துருந்தா அவளோ தான் அதுவும் அஸ்வதி அம்மா , தங்கச்சி பாத்துட்டா சோலி முடிஞ்சி சோ நீ இங்க இருக்க வேண்டாம் வா சீக்கிரம் நம்ம ரூமுக்கு போயிடலாம் என்று அவள் அவனின் கைகளை பிடித்து இழுத்தாள் அப்பொழுது….

 

அவன் தன் கையை பிடித்து கொண்டு இருந்த அஸ்வதியின் கைகளை எடுத்து விட முயற்சி செய்தான் ஆதனால் அவளின் கைகள்  விஹானின் கைகளை விடாமல் கெட்டியமாக பிடித்து கொண்டே மீண்டும்  அழுதாள்….

 

அப்பா என்ன விட்டுட்டு போயிடாதீங்க , அம்மா ரொம்ப அடிக்கிறாங்க என்னால தாங்க முடியல , நா உங்க சொத்தை கேட்டேனா அப்பா ? , இதுக்காகத்தான அம்மா  என்ன வெறுக்குறாங்க?

அப்பா எனக்கு உங்களோட ஒரு சொத்தும் வேண்டாம் , நா என்னோட ஆஷ்ரமத்துக்கே போயிடுறேன் அப்புறம் அப்பா …..

அப்பா …

நா விஹான சொத்துக்காக லவ் பன்றேன்னு சூடு வைக்க வந்தாங்க ஆனா விஹான் , விஹான்னா என்ன காப்பாத்திட்டாங்க ….

 

விஹான் தன்னுடைய மற்றொரு கையை வைத்து அவளின் கைகளை ஆதரவாக பிடித்தான் ….

 

ஒன்னுமில்ல அஸ்வா, நா இங்கதான் இருக்கேன் அழ கூடாது என்ன என்று அவன் அவளின் தலையை மீண்டும் மெதுவாக கோதி விட்டான் அதில் அவளின் புலம்பல் , அழுகை நின்று விட்டது…..

 

விஹான் மெது மெதுவாக அவனின் கைகளை அவள் கைகளில் இருந்து பிரித்து எடுத்து விட்டு விஹான்னாவோடு அவர்கள்  அறைக்கு இருவரும் சென்றனர்…..

 

விஹானுக்கு தூக்கம் தூர போய் விட்டது, அவன் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு இருந்தான்……

 

அதை பார்த்த விஹானா ….

 

அண்ணா….

 

சொல்லு விஹானா….

 

அண்ணா நா உன்கிட்ட ஒன்னு கேப்பேன் தப்பா நினைக்க மாட்டியா?

 

கேளு….

 

அண்ணா நீ அஸ்வதிய விரும்புறியா?

 

தெரியல ,

ஆனா….

 

ஆனா என்ன?

எதுனாலும் எங்கிட்ட சொல்லு அண்ணா…

 

எனக்கு அவ அழுறத பாக்கும்போது மனசு ரொம்ப கஷ்டமா இருக்கும்,  அவள யாரும் அழ  வைக்க கூடாதுன்னு தோனும், அவ முகத்த பாத்துட்டே இருக்கணும் போல தோணும், அவள நா  ரொம்ப நல்லா பாத்துக்கணும் தோணுது விஹானா…..

 

அண்ணா இதுக்கு பேரு தான்  காதல்…..

 

எனக்கு இந்த ஃபீலிங்க்குக்கு பேர் என்ன அப்படின்னு யோசிக்க முடியல விஹானா , ஆனா என் மனசு முழுக்க அவ மட்டும்தான்  இருக்கா விஹானா

இப்பக்கூட நா தண்ணி குடிக்கணும்ன்னு வெளியே போறப்போ அவ பயத்துலயும் குளிருலயும் நடுங்கிட்டு தூங்கிட்டு இருந்தா , அதான் நா அவ பக்கத்துலயே  உக்காந்துட்டேன் விஹானா…..

 

அண்ணா அஸ்வதிக்கிட்ட போய் உன்னோட மனசுல உள்ளதை   சொல்லு

அவளுக்கும் உன்ன ரொம்ப பிடிக்கும்…..

 

என்ன அவளுக்கு பிடிக்குமா விஹானா?

 

உன்ன அவளுக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா…..

 

ஆனா அவளுக்கு எனக்கு நடந்த அந்த விஷயம் தெரிஞ்சா?

அப்போ அவ என்னை விட்டுட்டு போயிட்டா?

 

அதெல்லாம் ஒன்னும் விட்டுட்டு போக மாட்டா அவளுக்கும் உன்ன ரொம்ப பிடிக்கும் , உன்ன நல்லா புரிஞ்சுப்பா…

 

சரி விஹானா நேரமாச்சு தூங்கு போ…..

 

உனக்கும் தான் நேரமாச்சு நீயும் போய் தூங்கு போ…..

 

சரி என்று  இருவரும் உறங்கினார்கள்……

 

மறுநாள் காலை…..

 

அனைவரும்  குல்மார்க் செல்ல கிளம்பி கொண்டு இருந்தார்கள்……

 

அஸ்வதி ஹாலில் சோகமாக அமர்ந்து கொண்டிருந்தாள்…..

 

விஹான் மட்டும் விஹானாவை காணவில்லை அதனால் தான் அவள் சோமாக அமர்ந்து கொண்டிருந்தாள்…..

 

தேவராஜ் ,சுலோச்சனா, அனந்தி சித்திக் ,பீவி அனைவரும் காரில் ஏறி அமர்ந்து விட்டனர்……

 

ஆமா பீவி நம்ம கூட விஹானா விஹான் வரலையா ?

 

அவங்க வேற கார்ல வராங்க  சுலோ , அஸ்வதி நீ ஏன் அங்கேயே நிக்கிற வா வந்து கார்ல உக்காரு என்று பீவி கூறவும் சுலோச்சனா மற்றும் அனந்தி அவளைப் பார்த்து முறைத்தனர்…..

 

இல்ல ஆன்ட்டி எனக்கு கால் வலிக்குது அதான் வரல…..

 

உனக்கு இப்ப கால் வலி எல்லாம் ஒன்னும் இல்ல எங்க கூடவா என்று விஹானா அழைத்தாள்…..

 

அஸ்வதி,  விஹான் மற்றும் விஹானாவை பார்த்தவுடன் அவளுக்கு சந்தோஷம் தாளவில்லை அவர்கள் இருவரையும் பார்த்து வாங்க போகலாம் என்று அவர்களின் காருக்குள் ஓடினாள்……

 

விஹான் மற்றும் விஹானா அஸ்வதியை அழைக்கவும் வேகமாக ஓடி சொல்வதை பார்த்த சுலோச்சனாவும்  அனந்தியும் ஓடும்  அவளைப் பார்த்து முறைத்தனர்……

 

அஸ்வதி நீ முன் சீட்டுல உட்காரு நான் பின்னால படுத்துட்டு வரேன் என்று விஹானா கூறவும் அஸ்வதி சரி என்றாள்…..

 

முன்னால் டிரைவர் சீட்டில் விஹான் அமர்ந்து கொண்டிருந்தான் , அவனருகில் அஸ்வதி போய் அமர்ந்தாள்….

 

அவர்களின் கார் குல்மார்க்கை நோக்கி பயணப்பட்டது…..

 

கியர் போடும் போதெல்லாம் விஹானின் கை அஸ்வதியின் கைகளில்  உரசியது , அந்த உரசலில் அவனின் வயிற்றில் ஆயிரமாயிரம் வேதியல் மாற்றங்கள் நிகழ்ந்தது……

 

அவனின் உள்ளம் இப்படி இருக்க அஸ்வதி எதையும் கண்டுகொள்ளாமல் சுற்றியுள்ள பனி மலைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்…..

 

அண்ணா எனக்கு பசிக்குது…

 

இப்ப இங்க கார் நிறுத்தினா நம்ம முன்னாடி  போற அப்பா கார் டிராஃபிக்ல நம்மள  விட்டுட்டு போயிடுவாங்களே…..

 

அண்ணா உனக்கு தான் வழி தெரியுமே அப்புறம் என்ன வா சாப்பிட்டு போலாம் அஸ்வதியும் காலையில சாப்பிடல….

 

ஆனா அப்பா….

 

அப்பா கிட்ட நான் பேசிக்கிறேன் வா எல்லாரும் போய் சாப்பிடுவோம் என்று அவள் இருவரையும் அழைத்து கொண்டு போனாள்…..

 

எனக்கு எனக்கு ஒரு பிளேட் மட்டன் பிரியாணி கொண்டு வாங்க ,

அண்ணா உனக்கு என்ன வேணும் ?

அஸ்வதி உனக்கு என்ன வேணும்?

 

இங்க என்ன ஸ்பஷல்?

 

ரோகன் ஜோஷ் , தம் ஆலு , யாக்ணி, இதெல்லாம் புட்ஸ் அண்ட் காஷ்மீரி காவா,ஷீர்மல் பிரெட், ஷுஃப்டா, டோஷா, பிர்ன்னி, சாக்லேட் பஃர்பி இதெல்லாம் ஸ்நாக்ஸ்க்கு உனக்கு என்ன வேணும்?

 

நம்ம எல்லா டிஸ்ஸும் ஒரு பிளேட் வாங்கி எல்லாரும் ஷேர் பண்ணி சாப்பிடுவோமா?

 

ஓகே டன்….

 

விஹான் சர்வரிடம் எல்லா உணவுகளில் இருந்தும் ஒரு பிளேட் எடுத்து வர சொன்னான்…..

 

அவரும் எடுத்து வந்தார்….

 

அனைவரும் உன்ன ஆரம்பித்தனர்….

 

அஸ்வதி எங்க ஊரு சாப்பாடு எப்படி இருக்குது?

 

எல்லாம் ரொம்ப காரமா இருக்குது…..

 

அப்போ அத சாப்பிடாத அஸ்வதி , நான் உனக்கு வேற ஏதாவது ஆர்டர் பண்ணி தரேன்…..

 

இல்ல பரவாயில்ல இருக்கட்டும் விஹான் ரொம்ப நாள் கழிச்சு எந்த பயமும் இல்லாம ரொம்ப நிம்மதியா சாப்பிடுறேன் சோ பரவாயில்ல இருக்கட்டும் என்று அவள் உன்ன ஆரம்பித்தாள்….

 

அந்த சாப்பாட்டின் காரத்தால் அவளின் வாய் முகம் அனைத்தும் சிவந்தது……

 

அதை பார்த்த விஹான் , அஸ்வதி போதும் இத நீ சாப்பிடாத உனக்கு நான் எதாவது ஸ்வீட் தரேன் என்று பக்கத்தில் இருந்த பிளேட்டில் இருந்த சாக்லேட் பர்பியை எடுத்து அவளுக்கு ஊட்டி விட்டான்….

 

இப்ப காரம் பரவாயில்லையா அஸ்வதி?

 

விஹானின் அக்கறையில் அவள்  நெகிழ்ந்து விட்டாள்,  அதனால் அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது….

 

இதான் நா அப்பவே நீ சாப்பிடாதன்னு சொன்னேன் நீ கேட்டியா?

இப்ப பாரு கண்ணுல இருந்து எப்படி கண்ணீர் வருதுன்னு என்று அவன் அவளின் கண்களை துடைத்து விட்டான்….

 

விஹான் இதுவர நா என்ன சாப்பிட்டேன் என்ன சாப்பிடல அப்படின்னு யாரும் கண்டுக்கிட்டது கூட இல்ல,  ஆனா நீங்க என் மேல ரொம்ப அக்கறையா இருக்குறீங்க ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் …

உங்களை நான் என்னைக்குமே மறக்க மாட்டேன்…..

 

தேங்க்ஸ் எல்லாம் வேணாம் இந்த ஹனி டீய குடிங்க என்று அவன் அவளுக்கு அந்த தேன் கலந்த தேநீரை கொடுத்தான்….

 

ஆஹா இந்த ஹனி டீ எவ்வளோ சூப்பரா இருக்குதுன்னு தெரியுமா?

விஹான் நீங்க ட்ரை பண்ணி பாருங்க என்று அவள் குடித்த டீயை அவனுக்கு கொடுத்தாள் , டீ கப்பில் அவள் சுவைத்த  இடத்தில் அவனும் சுவைத்தான்….

 

எப்படி இருக்கு விஹான்?

 

ரொம்ப நல்லா இருக்கு என்று அவன் அவளை பார்த்து சிரித்தான்…..

 

விஹான்னா நீ ட்ரை பண்ணி பாக்குறியா?

 

இல்லப்பா எனக்கு வேண்டாம் , சாப்பாடே வயிறு ஃபுல்லா இருக்கு , இன்னும் ரெண்டு மணி நேரம் இது தாங்கும்….

 

நம்ம குல்மார்க் போக இன்னும் ரெண்டு மணி நேரம் ஆகுமா?

 

நா கம்மியான டைம்  சொல்றேன், ட்ராஃபிக்கா இருந்தா மூனு மணி நேரம் கூட ஆகும்….

 

எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல நா ஜாலியா உங்க கூட வருவேன் என்று அஸ்வதி அழகாக சிரித்துக் கொண்டே கூறினாள்…..

 

சரி வாங்க எல்லாரும் கார்ல ஏறலாம்….

 

அவர்களின் கார் திரும்பவும் குல்மார்க்கை நோக்கி பயணப்பட்டது….

 

அஸ்வதி நீ ஏன் இன்னும் அந்த வீட்டுலயே இருக்குற உனக்கு தான் வேலை கிடைச்சிருச்சுல்ல நீ வேற ஏதாவது நல்ல இடத்துல போய் தங்கலாம்ல?

 

எனக்கும் அடிக்கடி இப்படி தோணும் விஹானா , நம்ம தான் நல்லா படிச்சிருக்கோமே நம்ம வேற ஏதாவது நல்ல இடத்துக்கு போயிடலாம் அப்படின்னு

ஆனா  தேவராஜ் அப்பாவோட முகம் நியாபகம் வந்துரும்,  அப்பா எப்போதுமே பிசினஸ் டூர் முடிச்சிட்டு என்ன பாக்க தான் முதல்ல வருவாங்க எனக்கு அவங்க பாசம் வேணும் அதனால தான் அவங்க என்ன பண்ணலும் நா அங்கயே இருக்கிறேன்……

 

ஆமா விஹான் நீங்க என்ன  வேலை பாக்குறீங்க?

 

அஸ்வதி இவனும் உன்ன மாதிரி ப்ரொபசர் தான்….

 

ரியலி , வாட்ட கோஇன்சிடென்ஸ் சூப்பர் சூப்பர்….

 

என்ன மேஜர்?

 

நா பிசிக்ஸ் அஸ்வதி

நீ என்ன மேஜர்?

 

நானும் பிசிக்ஸ் தான் திரும்பவும் நம்மளுக்கு கோஇன்சிடென்ஸ் சூப்பர் சூப்பர் , ஆமா விஹான்னா நீ என்ன வேலை பாக்குற?

 

நான் நர்சிங் முடிச்சி இருக்கிறேன் இப்ப நான் நர்சிங் ட்ரைனிங் போயிட்டு இருக்கேன்பா….

 

சூப்பர் சூப்பர்….

 

அஸ்வதி அவள் இஷ்டத்திற்கு அவர்கள் இருவரிடமும் சந்தோஷமாக எதை எதையோ பேசி கொண்டு வந்தாள் , அவளின் மனம் சந்தோஷத்தில் நிறைந்து இருந்தது….

 

இந்த சந்தோஷம் நிலைக்குமா?

அவளின் தாய் மற்றும் தங்கை நிலைக்க விடுவார்களா?

 

தொடரும் …..

 

உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்…….

 

❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
8
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

  1. விஹான் வாழ்க்கையில என்ன நடந்து இருக்கும் ?? எனக்கும் அதே கேள்வி தான் அஸ்வதி அம்மா தங்கை சும்மா விட்டுருவாங்களா ??

    1. Author

      Thodarndhu padinga 😇 thank you for your valuable comments 😇

  2. விஹான் அஷ்வா மீது அன்பாக அக்கறையாக இருக்கின்றான். கைக்குள் வைத்து பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள நிலையான உறவுக்குள் இணைய வேண்டும் இருவரும். அஸ்வதியின் அம்மா தங்கை இருக்கும் வரையில் அது எந்த வகையில் சாத்தியமோ? மிக சிரமப்பட வேண்டி வரும்.

    விஹானா கூறியது போலவே அவளையும் வெளியில் அழைத்து வந்து விட்டார்கள்.

    அஸ்வதியின் நிம்மதியான சந்தோசமான நேரங்கள் நிலைக்குமா பார்ப்போம்.

    1. Author

      Thank you for your valuable comments 😇