
ஒரு வாரம் சென்று இருந்தது …..
“மிஸ்டர் ரவி இந்த கேஸ் பத்தி நீங்க கண்டுபிடிச்ச டீடெயில்ஸ் சொல்லுங்க” என்று ஏற்காடு இன்ஸ்பெக்டர் ரவியிடம் மலை பகுதியில் ஏற்படும் விபத்தை பற்றி கேட்டுக் கொண்டு இருந்தான் அதிவீரன்….
“சார் மாசத்துல ஒரு நாள் ஆக்சிடென்ட் ஆகுது ஒரே இடத்துல இல்ல ஆனா முக்கியமா ஆபத்தான வளைவுல ஆக்சிடென்ட் ஆகுது இத பத்தி யாரும் கம்பளைண்ட் பண்ணல சார் …
ஆக்சிடென்ட்ன்னு கேஸ் வரும் ஆனா சந்தேகம்னு யாரும் தரல…. மூணு மாசமா ஆக்சிடென்ட் நடக்குது இந்த மாதிரி….
ஜனவரி முதல் நாள், பிப்ரவரில ரெண்டாவது நாள், மார்சல மூணாவது நாள், என் கெஸ் கரெக்ட்டா இருந்தா ஏப்ரல் நாளாவது நாள் இன்னிக்கு…. இன்னிக்கு ஆக்சிடென்ட் ஆச்சினா எதோ ஒரு குரூப் எதுக்காவோ ஆக்சிடென்ட் பண்றாங்க சார் ….”
“வெரி குட் மிஸ்டர் ரவி உங்க கெஸ் கரெக்டா இருக்கும்… நானும் கேஸ் படிச்ச வாட்டி இது தான் யோசிச்சேன்… ஓகே நீங்க சொன்ன ஆக்சிடெண்ட்ல யாரு யாரு இறந்து போய் இருக்காங்க…. யாரவது இந்த ஆக்சிடென்ட்ல உயிரோட இருக்காங்களா…. எந்த மாதிரி ஆட்களுக்கு ஆக்சிடென்ட் ஆகி இருக்கு ஐ மீன் பணக்காரங்களா அந்த மாதிரி ….”
“சார் இந்த ஆக்சிடெண்ட்ல யாருமே உயிரோட இல்ல ஜனவரி ஆக்சிடென்ட் மட்டும் சேலம் இருக்குற சன் சாரீஸ் ஓனர்…. அவங்க மொத்தமா சாரீஸ் விக்குறாங்க …. மத்த ரெண்டு மாசத்துல ஆக்சிடென்ட் ஆன ஆளுங்க பத்தி அன்பரசு சார் விசாரிக்கறன்னு போய் இருக்காரு சார்….”
“ஓ ! டிஎஸ்பி அன்பரசு வரலையா இன்னும்… பத்து மணிக்கு எல்லாரும் வந்து இருக்கணும்னு சொன்னேன் இல்லையா???”
“சார் .. அன்பரசு சார் மத்த ரெண்டு ஆக்சிடென்ட் பத்தி விசாரிக்க அந்த ஊருக்கு போய் இருக்காரு சார்…. பத்தரை மணிக்கு வந்துடுவேன்னு சொன்னாரு சார்….”
“அவரு பொறுமையா வரட்டும் ரவி நீங்க கிளம்புங்க நான் நாளைக்கு ஏற்காடு வரேன் பேசிக்கலாம்…. இன்னிக்கு நீங்க மலைல எல்லா இடமும் ரௌண்ட்ஸ் போங்க…. இன்னிக்கு ஆக்சிடென்ட் ஆக கூடாது…. யாரவது சந்தேக படுற மாதிரி இருந்தா அவங்கள பிடிச்சி உள்ள வெச்சிடுங்க” என்று கூறினான் ….
இன்ஸ்பெக்டர் ரவியும் “ஓகே சார்” என கூறி அவனுக்கு சலுயூட் அடித்து விட்டு தன் பணியை காண சென்று விட்டான் ….
டிஎஸ்பி அன்பரசு பத்தரை மணிக்கு அதியின் அலுவலகத்திற்கு வந்தான்…. அதியின் அறையை தட்டிவிட்டு அவன் அழைப்பதற்காக வெளியே நின்று கொண்டு இருந்தான்… அவனை சிறிது நேரம் காத்து இருக்க சொல்லி வெளியே அமர சொல்லி விட்டான் அதி…. அன்பரசுவும் அவனை மனதிற்குள் திட்டிக் கொண்டே சென்று அமர்ந்தான்… கால் மணி நேரம் அவனை காக்க வைத்து விட்டே உள்ளே அழைத்தான்… அன்பரசுவும் வேண்டா வெறுப்பாக உள்ளே சென்று அவனுக்கு வணக்கத்தை வைத்தான்… “வாங்க மிஸ்டர் அன்பரசு உங்க வாட்ச்ல இப்ப தான் பத்து மணி ஆகுதா???”
“சாரி பார் லேட் சார் …. நாமக்கல இருந்து வர லேட்டா ஆகிடிச்சி சார்… நான் கலெக்ட் பண்ண டீடெயில்ஸ் சார்” என்று கூறி தான் சேகரித்த தகவல்களை அதியிடம் தந்தான் ……
“சொல்லுங்க மிஸ்டர் அன்பரசு என்ன கண்டுபிடிச்சீங்க ???”
“சார் பிப்ரவரில நடந்த ஆக்சிடென்ட்ல இறந்தவங்க கிருஷ்ணகிரிய சேர்ந்தவங்க… அவங்க மொத்த வியாபாரமா டாப் பேன்ட்லாம் விக்குறாங்க…..
நெஸ்ட் மார்ச்ல நடந்த ஆக்சிடென்ட்ல இறந்தவங்க நாமக்கல சேர்ந்தவங்க …. அவங்க கார்மெண்ட்ஸ் வெச்சி இருக்காங்க ஷர்ட்லாம் மொத்தமா தெச்சி விக்குறாங்க….”
“ஓகே ஜனவரி ல அனா ஆக்சிடென்ட் இறந்தவங்க சேலம் அப்டிதானு அவங்க சாரீ விக்குறாங்க மொத்தமா …… இந்த மூணு ஆக்சிடெண்ட்ல ஒன்னு மேட்ச் ஆகுது எது ஒரே மாதிரி சிமிலரா இருக்குனு தெரியுதா மிஸ்டர் அன்பரசு …..”
(எது மேட்ச் ஆகுதுன்னு நீங்க சொல்லுங்க கைஸ் )
நிவேதாவின் வீடு …
“அம்மா அம்மா எங்க இருக்க… சீக்கிரம் வா…. உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும் ….” என்று கத்திக் கொண்டு இருந்தாள் நிஹாரிகா…..
“நில்லு நிஹா வரேன் உங்க அப்பா வேற நான் தான் சமைக்கணும்னு சொல்லிட்டாரு…. இத்தனை வருஷமா அந்த சனியன் சமைச்சதுனால நான் சமையல்கட்டு பக்கமே போல …. இப்ப சமைனு சொன்னா ??? இப்ப தான் யோசிச்சி பண்ணிட்டு இருக்கேன்….. நீ வேற ஏன் கத்துற..”
“அம்மா இது ரொம்ப முக்கியமான விஷயம் அவ விஷயம் தான் அங்க பெரியம்மா வீட்டுல ரொம்ப சந்தோசமா இருக்கா …”
“என்ன சொல்ற நிஹா???”
“ஆமா ம்மா சிஏ கோச்சிங் கிளாஸ் போறா … அந்த பக்கம் ஒரு வேலையா போனேன்… அப்ப தான் பாத்தேன் நிதிஷ் அண்ணா இறக்கி விட்டுட்டு போனாரு….சொகுசா வாழுற ம்மா….”
“கவல படாத நிஹா… அவளை இன்னிக்கு சாயந்திரம் போய் இங்க கூட்டிட்டு வரேன்…. சொகுசா வாழுறாளா இனிமே அந்த வாழ்க்கையை யோசிச்சா கூட மாட்டா…. இப்பயே போய் கூட்டிட்டு வரலாம் ….”
“ம்மா ஆனா அப்பா வேண்டாம்னு சொன்னாரே…”
“வழக்கம் போல உங்க அப்பா வர அப்ப கிட்சன்ல இருக்க வெச்சிடலாம் ……”
“சரி ம்மா வா போலாம் போயிட்டு அப்பா வரதுக்குள்ள வந்துரலாம்” என்று கூறி வசும்மா வீட்டிற்கு செல்ல தயாராக சென்றனர் ….
வசும்மா வீடு
இன்று ஞாயிறு… அதனால் அரை நாள் தான் கிளாஸ் நிவேதாவிற்கு …. காலை சென்று விட்டு மத்தியம் ஒரு மணிக்கு வந்துவிடுவாள்…
வசும்மா பிரியா இருவரும் சேர்ந்து மத்தியம் சமையல் தயார் செய்து கொண்டு இருந்தனர்…. நிதிஷ் ரூமிற்குள் உட்கார்ந்து மடிக்கணினி பார்த்துக் கொண்டு இருந்தான்….
அப்பொழுது அம்மணி பாட்டி மீனாட்சி அஜய் தாரா பாப்பாவை தூக்கிக் கொண்டு வந்து இருந்தனர் இன்று மாலை நால்வரும் மதுரை செல்கின்றனர் ..
யாரும் வரவேற்பு அறையில் இல்லை என்று வீட்டின் அழைப்பு மணி அமுத்தினர்… அந்த சத்தத்தை கேட்டு பிரியா சமையல் அறையில் இருந்து வெளியே வந்தாள்….
“வாங்க அப்பத்தா (இந்த ஒரு வார காலத்தில் பிரியா அனைவரையும் உறவுமுறை வைத்து அழைக்க பழகி இருந்தாள் ) எத்தனை தடவ சொல்லி இருக்கேன் வாங்க உள்ளனு எப்ப பாத்தாலும் காலிங் பெல் அழுதிட்டு தான் வரீங்க…”
“அப்டி இல்ல ப்ரியா ம்மா நீங்க உள்ள என்ன வேலையா இருப்பிங்க தெரியாதுல அதுனால தான் அழுதிட்டு வந்தோம்…. “
அதற்குள் மேல் இருந்து நிதிஷும் சமையல் அறையில் இருந்து வசும்மாவும் வெளியே வந்து இருந்தார்
அவர்களை வரவேற்று விட்டு அஜயிடம் இருந்த தாரா பாப்பாவை நிதிஷ் வாங்கி கொஞ்ச வெளியே சென்று விட்டான்…… அவனுடன் அஜயும் வெளியே சென்று விட்டான் ….
இவர்கள் நால்வரும் பேசிக் கொண்டு இருந்தனர் …. அம்மணி பாட்டி தான் வசும்மாவிடம் “வசும்மா இன்னிக்கு பொழுது போக நாங்க மருதைக்கு கிளம்புறோம் அதியை பாத்துக்கோங்க”…..
“இதுலாம் நீங்க சொல்லனுமா ம்மா நாங்க பாத்துக்குறோம்….”
“அப்பத்தா இன்னும் ஒரு வாரம் இருந்துட்டு போங்க…” என்று ப்ரியா கூறினாள்
“இல்ல தாயி உனக்கு வேற பரிச்சை இருக்காம்ல…. நீ எழுது உனக்கு முடிஞ்சா வாட்டி அப்பத்தா வந்துறேன்….”
“சரி அப்பத்தா, அக்கா நீங்களும் வரணும் அப்பத்தா வர அப்ப சரியா …. “
“சரி பிரியா ம்மா….” என்று மீனாட்சி பிரியாவிடம் கூறினாள்
“அப்பறம் அம்மா , அப்பா, தாத்தா, அஜய், மாமா எல்லாம் வரணும்…” என்று கூறினாள்…
“எல்லாரும் வரோம் நீயும் மதுரைக்கு வா…அத்தை நீங்களும் நிவேதா அப்பறம் தம்பி எல்லாரையும் கூட்டிட்டு ஒரு நாள் வாங்க….” என்று மீனாட்சி கூறினாள்…
“எதுக்கு என்னிக்கோ ஒரு நாள் அது தான் சித்திரை திருவிழா வருதே பத்து நாள்ல அப்ப வாங்க” என்று அப்பத்தா அனைவரிடமும் கூறினார் …
“அப்பத்தா எக்ஸாம் இருக்கே என்ன பண்றது… இன்னொரு நாள் வரோம் சரியா …. நீங்க ஆனா அடுத்த மாசம் வாங்க ….”என்று பிரியா மீனாட்சி மற்றும் அப்பத்தாவிடம் கூறினாள் ….
ஒரு மணி ஆகி இருந்தது நிதிஷ் சென்று நிவேதாவை அழைக்க சென்று இருந்தான்…. வசும்மா அனைவரயும் இங்கயே உணவு உண்ணுமாறு கூறினார்… ஆனால் ஏற்கனவே செய்து வைத்து தான் வந்துள்ளோம் என அப்பத்தா கூறினார்…. பிரியா தான் எல்லாம் ஓட்டுக்காக உட்காந்து சாப்பிடலாம் என கூறினாள் …சரி என வசும்மா தான் சமைத்த அனைத்தையும் பிரியா மற்றும் மீனாட்சி உதவியுடன் அதியின் வீட்டிற்கு எடுத்து சென்றார்
நிவேதா வந்தவுடன் அவளையும் அழைத்துக் கொண்டு அதியின் வீட்டிற்கு சென்று இருந்தனர் …. மீனாட்சி ஏற்கனவே முரளியின் குடும்பத்தை அழைத்து இருந்தாள்… அதை வசும்மாவிடம் கூறினாள்… வசும்மாவும் அதற்கு என்ன என கூறி இருந்தார்…. அவர்களும் வந்து இருந்தனர் அகில் தாரா பாப்பாவுடனே இருந்தான் …ஷாலுவும் அவர்களுடன் இருந்தாள்… அஜய் மூவரையும் பார்த்துக் கொண்டு இருந்தான்… அனைவரும் அதியின் வருகைக்காக காத்துக் கொண்டு இருந்தனர் அவனும் இரண்டு மணிக்கு வந்து விட்டான்… வந்தவனுக்கு நிவேதா இங்கு இருப்பதை பார்த்து ஆச்சர்யமாய் இருந்தது…. இருந்தும் அதை மறைத்து விட்டு அனைவரையும் வரவேற்று விட்டு அறைக்கு பிரெஷாக சென்றான்…
மாறன் மாலை நான்கு மணிக்கு தான் இவர்களை அழைத்து செல்ல வருவான் அதனால் இவர்கள் அனைவரும் சாப்பிட அமர்ந்தனர் … நிவேதா தான் முதலில் சாப்பிட்டு முடித்தாள் …. அவள் அஜயிடம் இருந்து தாரா பாப்பாவை வாங்கிக் கொண்டு அவனை சாப்பிட அனுப்பினாள்… நிவேதா பாப்பாவிற்கு வேடிக்கை காட்ட வெளியே இருக்கும் தோட்டத்திற்கு அழைத்து சென்றாள்…. அதியும் சாப்பிட்டு முடித்து விட்டான் … அகில் நிவியிடம் செல்ல வேண்டும் என ஆடம் பிடித்தான்…. அதி அவனை மனதில் கொஞ்சி கொண்டே அவனை அழைத்துக் கொண்டு நிவேதா இருக்கும் இடம் சென்றான் ….
அதி அகிலை தூக்கிக் கொண்டு இருந்தான் நிவேதா தாரா பாப்பாவை தூக்கிக் கொண்டு இருந்தாள் இதை பார்த்த அப்பத்தாவிற்கு ஒரு குடும்பம் சந்தோசமாக இருப்பதாய் போல் தோற்றம் அளித்தது… ஆம் அப்படி தான் இருந்தது அகில் பாப்பாவை கொஞ்சுவதற்காக அதியிடம் இருந்தே கொஞ்சிக் கொண்டு இருந்தான் …. அதியின் எண்ணத்தை ஏற்கனவே மீனாட்சி அப்பத்தாவிடம் சொல்லி இருந்தாள் அதனால் அப்பத்தா இந்த காட்சியை ரசித்துக் கொண்டு இருந்தார் ….
அனைவரும் இதை பார்த்தனர் … யாருக்கும் இது தவறாக தோன்றவில்லை…. ஷாலு குட்டியும் பிரியாவுடன் அந்த இடத்திற்கு சென்று விட்டாள் … அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர் …..
அந்த மகிழ்ச்சியை கெடுப்பதற்காகவே நிவேதாவின் அம்மா சாந்தாவும் தங்கை நிஹாரிகாவும் அந்த இடம் வந்தனர் நிவேதாவை தங்களுடன் அனுப்புமாறு கூறி …..
வசும்மா நிவேதாவை அவர்களுடன் அனுப்புவாரா ??? அவ்வாறு சென்றால் அதியின் செயல்பாடு எவ்வாறு இருக்கும்….. நிவேதா செல்வாளா ?????
அது போல் அதி பார்க்கும் ஆக்சிடென்ட் கேஸில் ஏப்ரல் நாலாகிய இன்று அந்த ஆக்சிடென்ட் நடக்குமா அந்த மூன்று ஆக்சிடென்ட்டில் உள்ள ஒற்றும்மை என்ன ?????
இனி வரும் அத்தியாயத்தில் காண்போம்……
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
3
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.



Nive ipa tha konjam happya iruntha.. athu porukalaiya…
Accident la iranthavanga moththa virpanai (clothes) seipavalgal.. correcta sis…