Loading

“என்ன மச்சி இன்னைக்கு இவ்ளோ பேசிட்ட நானே எதிர்பார்க்கலைடா..”

“அப்படி என்ன பேசிட்டேன்..?”

“இல்ல அந்த பெண்ணை பத்தி நேரடியா சொல்லாம ஏன் என்னென்னமோ பேசின..? பாவம் அம்மாலாம்  ரொம்ப பயந்துட்டாங்க ஏன்டா ஒரேயடியா இப்படி பயமுறுத்தின..?”

“அப்ப தான் என்னை தொந்தரவு பண்ண மாட்டாங்க..”

“என்னடா சொல்ற..? டேய் உனக்கு கல்யாணம் பண்ணிக்கிற எண்ணமிருக்கா இல்லையா?” என்று கேட்டுக்கொண்டு இருக்கையிலேயே சாரதிக்கு அழைப்பு வந்தது.

“யார்டா?”

“விவேக் மச்சி. திரும்ப ஏதோ பிரச்சனையாம் வர முடியுமான்னு தெரிலனு சொல்றான்..”

“நான் அப்பவே சொன்னேன் எவன் கேட்டான் தேவை இல்லாம நேரத்தை வேஸ்ட் பண்ணி ஏன்டா இந்த காதலை பண்ணி வீணா போறீங்க?”

“விடு மச்சான் எல்லாரும் நம்மளை மாதிரியே தெளிவா இருந்துட்டா நாடு முன்னேறிடாது.. இப்படியும் நாலு பேர் வேணும்..”

“அதுவும் சரிதான்! அதைவிடு கணேஷும், சிவாவும் எங்க இருக்காங்க..” என்று கேட்கவும் சாரதியிடம் மௌனம்.

“உன்னை தான்டா கேட்கிறேன் ஏலகிரி ரீச் பண்ணிட்டாங்களா? சொல்லு நான் வேலு அண்ணனுக்கு சொல்லணும்..”

“இல்ல மச்சி கீழதான் எனக்காக வைட் பண்ணிட்டு இருக்காங்க’

“எதுக்கு..?’

“அது அது.. வந்து’

“என்ன வந்தது சொல்லி தொலைடா’

“அதொண்ணுமில்லை மச்சான் அவனுங்க அடுத்தவாரம் அப்ராட் போறதால இப்பவே மொத்தமா ட்ரீட் வைக்க சொல்றாங்க..”

“தெரியுமேடா.. அதுக்கு தானே போறோம் அப்புறமென்ன?”

“இல்ல அவனுங்க சரக்கு பார்ட்டி கேட்டாங்க நானும் சரின்னு சொல்லிட்டேன்…”

“வாட்?”

“ஸாரி.. ஸாரி மச்சி உன்னை கேட்காம ஒத்துகிட்டது தப்பு தான் ஆனா எனக்கு அடுத்தவாரம் முழுக்க டைட் ஸ்கெட்யூல் அதான் இன்னைக்கே..” என்று தயங்க வசீயிடம் கனத்த மௌனம்.

வசீகரன், சாரதியின் நண்பர் கூட்டம் சற்று பெரியதே அதில் ராகேஷ், விஷால், விவேக், சாரதி மற்றும் வசீகரன் மிகவும் நெருக்கமானவர்கள்.

திருவிற்கு வசீயின் நட்பு வட்டம் குறித்து தெரியுமென்பதாலும் அனைவருமே நன்கு படிக்க கூடியவர்கள் என்பதாலும் படிக்கும் காலத்தில் மாதம் ஓரிரு முறை வசீ நண்பர்களுடன் ஏலகிரிக்கு செல்வதை திரு தடுப்பதில்லை. அங்கே அவர்களின் கெஸ்ட் ஹவுசில் தங்குபவர்களை கவனிக்க சொல்லி தன் ஆட்களிடம் சொல்லி விடுவார்.

“ஏதாவது சொல்லு மச்சி, திட்டனும்னா திட்டு இல்ல ரெண்டு அடிகூட அடிச்சிடு இப்படி அமைதியா இருக்காதடா.. மச்சான் கெஸ்ட் ஹவுஸ்ல தண்ணியடிச்சாதானே உங்கப்பாக்கும் உனக்கும் பிடிக்காது நாங்க வெளில அடிச்சிட்டு வந்துடுறோம்..”

“ஏய் இரு இரு அதென்னா வந்துடுறோம்னு சொல்ற அப்போ நீ இன்னும் குடிக்கறதை விடலையா..?”

“டேய் என்னடா இது என்னை மொடா குடிகாரன் மாதிரி பேசுற? நான் சும்மா சோஷியல் டிரிங்கிங் தான்.. அவனுங்களுக்கு வாங்கி கொடுத்துட்டு நான் அமைதியா உட்காந்தா ஓட்டி எடுத்துடுவாங்கடா..”

“டேய் அன்னைக்கு அஷ்மிதாவை பேசி முடிச்சப்பவே இதை விட்டுடுவேன் சொன்ன இப்போ என்ன மாத்தி பேசுற?”

“இல்லைன்னு சொல்லலை மச்சான்.. நான் என்ன செய்ய வேலை பார்க்கிற இடத்துல அதிக ப்ரெஷர்டா..”

“குடிக்க சாக்கு சொல்லாத..”

“மச்சி நீ ஈஸியா சொல்லிடுவ ஆனா எல்லாரும் கேவலமா ஒரு லுக் விடுவாங்க பாரு அப்படியே செத்துடலாம் போல இருக்கும்..”

“நீ ஏன்டா அவனை பாதர் பண்ற? ஒரு முறைன்னு தான் எல்லா தப்புமே ஆரம்பிக்கும்… ஆனா அதோடு நிற்காது.. கூட்டமா சேர்ந்து சிலர்  ஒரு விஷயம் செய்தா அது சரின்னு ஆகிடாது அதை செய்யாம இருக்கிறதால நாம தப்புன்னு ஆகிடாது நமக்கு விருப்பமில்லாததை, ஏற்பில்லாததை சூழல் மேல பழிபோட்டு செய்யகூடாது..”

“சோஷியல் டிரிங்கிங்னு இப்போ ஆரம்பிச்சு இருக்கவன் அதை கொஞ்சம் கொஞ்சமா பழகி பின்னாளில் முழுநேரம் குடிக்காம இருப்பன்னு என்ன நிச்சயம்?”

“என்னோட லிமிட் எனக்கு தெரியும் மச்சான் கட்டுபாடோடு இருப்பேன்..”

“எப்படி இத்தனை வருஷமா கெடுதல்னு நம்பியிருந்த நீயே மனக்கட்டுப்பாடு இல்லாம ரெண்டு சிப் மூணு சிப்னு சொல்லி சப்பகட்டு கட்டிட்டு இருக்க இதுல இதுக்கு மேல போகமாட்டேன்னு வேற வியாக்கியானம் பேசிட்டு இருக்க போடா குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சுன்னு சும்மாவா சொன்னாங்க உன் பேச்சை எல்லாம் தண்ணில தான் எழுதி வைக்கணும்..”

“ப்ச் என்னை உனக்கு தெரியாதா?”

“அப்புறம் ஏன்?”

“வேற என்னடா செய்ய சொல்ற? மாசத்துக்கு எப்படியாவது ரெண்டு மூணு பார்டி வைக்கறானுங்க எல்லாரும் குடிக்கிறப்போ நாம ஜூஸ் எடுத்துட்டு ஒதுங்கினா பாப்பான்னு கிண்டல் பண்றானுங்க..”

“அதோட நிறுத்தினா பரவால்ல பேச்சு எங்கயோ தொடங்கி எங்கயோ முடியும் கடைசில அவனுங்க சரி நான் தப்புங்கிற மாதிரி ஆகிடுச்சு அடுத்த நாலு நாள் ஆபிஸ்ல எல்லாரும் என்னை பார்த்த பார்வை இப்பவரை மறக்க முடியாதுடா… அதான் எதுக்கு வம்புன்னு சும்மா ஒரு க்ளாஸ் எடுத்துட்டு ரெண்டு சிப் அவ்ளோதான்!!”

“என்ன சொன்னாலும் நான் ஏத்துக்க மாட்டேன். நீ டீடோட்டலர்னு சொல்லி தானே ப்ரோஃபைல் ரெடி பண்ணின அப்போ இது தப்பில்லையா?”

“என்னடா நீ கல்யாணத்துக்கு பின்னாடி பொண்டாட்டி பேர் சொல்லி தப்பிச்சுபேன் இதுதான் கடைசி பீர் சரியா?”

“இல்ல உன்னை நம்புறதுக்கு இல்ல ஆஷ்மிகிட்ட சொன்னது ஒன்னு செய்றது ஒண்ணுன்னு இருக்ககூடாது. ட்ரான்ஸ்பரன்ஸி இருக்கணும், நீ என்ன சொன்னாலும் சரி இது நம்மை மட்டும் பாதிக்க போறதில்லை.. என்னை பொறுத்தவரை நமக்கு வரபோற லைஃப் பார்டனருக்கு நாம கொடுக்க போற மிகபெரிய கிஃப்ட் என்ன தெரியுமா..?”

“என்னது..?” என்று புரியாமல் சாரதி கேட்க..

“நம்மோட ஆரோக்கியம் தான்!!”

“என்னடா சொல்ற நான்கூட வீடு, கார், நகை சொல்லுவன்னு நினைச்சேன்..”

“மச்சி இப்போ பணம் இருந்துட்டா போதும் எதையும் வாங்கிடலாம்னு நினைக்கிறோம் ஆனா இழந்த காலங்கள், ஆரோக்கியம்னு சிலது இருக்கு அதெல்லாம் எத்தனை கோடி கொடுத்தாலும் திரும்ப கிடைக்காது. நான் தண்ணி அடிக்கிறது மட்டுமே சொல்லல எல்லா விதத்துலயும் தான் சொல்றேன்…”

“அடுத்தவங்க கட்டாயத்துக்காகன்னு தொடங்கின பழக்கம் உனக்கு மட்டும் கெடுதலில்ல உன்னை நம்பி வரபோற பொண்ணு உன்னோட பிள்ளைகள்னு எல்லாருக்குமே பிரச்சனை புரிஞ்சுக்கோடா…”

“கண்டிப்பா மச்சான் இதான் கடைசி.. அதோ அங்க நிக்கிறாங்க பார்..” என்றதும் பல்லை கடித்து கொண்டு வசீ சாரதி சொன்ன இடத்தில் தன் புல்லட்டை நிறுத்த ஆஷ்மியிடம் இருந்து அவனுக்கு அழைப்பு.

“போ போய்ட்டு சீக்கிரம் வா’

“மச்சான் மச்சான் ஆஷ்மி வீடியோ கால் பண்றாடா இங்க இருக்கிறதை பார்த்தா அவ்ளோதான் கல்யாணத்தையே நிறுத்திடுவா ப்ளீஸ் மச்சி’ என்று பணத்தை அவனிடம் திணித்தவன் ‘நீயே போய் அவனுங்களை கூட்டிட்டு வா.”

“என்னது நானா? அதெல்லாம் முடியாது..”

“டேய் டேய் ப்ளீஸ்டா சத்தியமா இனி தண்ணியடிக்க மாட்டேன் நான் சீக்கிரம் பேசிட்டு வந்துடுறேன் இப்போ காப்பாத்து மச்சான்..” என்றதும் வசீயின் புருவமத்தி முடிச்சிட்டது.

“என்னடா யோசிக்கிற நிச்சயம் இனி எந்த காரணமும் சொல்லமாட்டேன் நம்புடா..”

“அப்போ ஆதாரத்தோடு சத்தியம் பண்ணு..”

“எப்படி?”

“இப்படி..” என்று தன் கைபேசியில் கேமராவை வசீ ஓட விட அடுத்தடுத்து ஆஷ்மியின் அழைப்பு வரவும் வேறு வழியின்றி வசீயிடம் வாக்குமூலம் கொடுத்தவன் அடுத்த சிலநொடிகளில் விலகி சென்று ஆஷ்மிதாவிற்கு அழைக்கவும் தன் ராயல் என்ஃபீல்டில் இருந்து இறங்கிய வசீகரன் மதுபான கடைக்குள் நுழைந்திருந்தான்.

*********************************

இரவு பெண்கள் கூட்டம் ரிசார்ட்டின் தோட்டத்தில் கேம்ப் ஃபையரில் ஆட்டம் பாட்டம் என்று களைகட்ட செய்திருக்க பல வருடங்கள் கழித்து அனைவரும் ஒரே இடத்தில் குழுமவும்  தூக்கம் தூர போனதில் வார்த்தைகள் தீருமளவு பேசிக்கொண்டிருந்தனர்.

வசீகரா என் நெஞ்சினிக்க…
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்…
அதே கணம் என் கண்ணுறங்கா…
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்..

என்று இழையாளின் கைபேசி இசைத்திட நள்ளிரவு நேரம் சுற்றிலும் கருமை சூழ்ந்திருக்க ரிசார்ட்டில் மீன் பொரிக்கும் வாசம் எழ பெண்களின் பார்வை இழைமீது படிந்தது.

“ஹே எலை இன்னுமா இந்த பாட்டை விடல நீ..” என்றாள் ரூபா.

“ஏன்டி அவ பேரை கொலை பண்ற?”

“நான் என்னடி பண்ண… ஃபிரெஷர்ஸ் மீட்ல இவ நேம் வாயில நுழையில… அப்படியே பழகிடுச்சி…”

“விடுடி… இதுவும் நல்லாதானே இருக்கு” என்று மற்றவள் கூற, அதற்குள் கைபேசியோடு விலகி சென்ற நம் நாயகியிடம்,

“பிங்கி ரீச் ஆனதும் ஃபோன் பண்ணின… அப்புறம் எதுவும் பேசவே இல்லையேடா… என்ன எல்லாரும் சாப்ட்டு படுத்தாச்சா?” என்றார் பார்கவி.

“ம்மா… இத்தனை வருஷம் கழிச்சு ஒன்னு சேரவும் எல்லாருக்கும் எக்ஸைட்மென்ட்ல ஒண்ணுமே தோணலை. நாங்க தோட்டத்துல இருக்கோம். கெஸ்ட் ஹவுஸ்ல சாந்தி அக்கா மீன் பொறிச்சிட்டு இருக்காங்க இனி தான் சாப்பிடனும்.”

“மீனா? பிங்கி நீ சாப்பிடாத. உனக்கு ஒத்துக்காது…”

“ம்மா நான் சாப்பிட மாட்டேன் மத்தவங்களுக்கு.. சரி நீங்க சாப்ட்டீங்களா?”

“இப்பதான் முடிஞ்சதுடா… மணி இப்பவே ஒன்பதாகிடுச்சு. நேரத்துக்கு சாப்ட்டு தூங்குங்க.”

“அம்மா… இங்க வந்ததுமே அக்கா எல்லாருக்கும் ஹெவியா ஸ்நேக்ஸ்சும் சூடா டீ காபி கொடுத்துட்டாங்க.. எனக்கும் பசிக்கல…”

“சரி பிங்கி… பார்த்து பத்திரம். பொண்ணுங்க மட்டும் தனியா போயிருக்கீங்க.
அங்க ஒன்னும் பயமில்லையே..?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை. இங்க கிளைமேட் செமையா இருக்கு…”

“நீ ஸ்வெட்டர், ஸ்கார்ப் போட்டிருக்க தானே..?”

“ஆமாம்மா…” என்றவள் பார்கவியிடம் மேலும் சில நொடிகள் பேசிமுடித்து திரும்பிட,

“என்னடி இன்னுமா நீ இந்த ஸாங்கை விடல?” என்றனர் மீண்டும்…

“இதெல்லாம் கல்ட் கிளாசிக்! ஹாரீஸ் மியூசிக் மெஸ்மரைஸ் பண்ணும்.. அதுவும் ஃப்ளூட் சவுண்ட்ஸ் ஒரு மேஜிக் பண்ணும் பாரு…” என்றவள் பாடல் குறித்து பேசிக்கொண்டே செல்ல,

“மச்சி… எவ்ளோ ரொமாண்டிக்டி நீ! ஆனா இதுவரை யாரையும் லவ் பண்ணலைங்கிறதை நம்பவே முடியல” என்றாள் ரூபி.

பெண்களுக்கான உணவை தோட்டத்திற்கே கொண்டு வந்து அடுக்கிய ஜெகன்,

“ஜீவி… நீ கொடுத்த மெனுவோட சேர்த்து எங்க ஹோட்டல் ஸ்பெஷலும் சேர்த்திருக்கேன். எப்படி இருக்குன்னு சாப்ட்டு சொல்லுங்க. ஏதாவது எமெர்ஜென்சின்னா எனக்கு கால் பண்ண தயங்க வேண்டாம். வேற எதுவும் வேணும்னா சாந்தி அக்காவை கேளுங்க. எப்போ எது கேட்டாலும் சமைச்சு கொடுப்பாங்க..” என்று கிளம்பினான்.

ஒவ்வொருவரும் எவ்வாறு கணவனிடம், மாமியாரிடம் அனுமதி கேட்டு இங்கு வந்தனர் என்பது குறித்து பேச்சும் சிரிப்புமாக உண்ண, இழை அமைதியாக அவர்களுக்கு செவிமடுத்தவாறே உணவருந்தினாள்.

மீண்டும் கைபேசி ஒலித்திட, கைலாசத்திடம் பேசி முடித்தவளின் அருகே அமர்ந்திருந்த ரூபா,

“ஏன் எலை… உனக்கு தான் யார் மேலயும் லவ் வரலை, ஆனா இத்தனை வருஷத்துல ஒருத்தன் கூடவா உனக்கு ப்ரொபோஸ் பண்ணாம விட்டான்..?” என்றிட, ‘ப்ரொபோஸல்’ என்ற வார்த்தையை கேட்டதுமே, தன் போக்கில் இழையின் மனக்கண்ணில் அன்றைய நாள் விரிந்தது.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
6
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. கூட்டமாக செய்வதால் மட்டும் சரி என்று ஆகிடாது.

    மற்றவர்களின் ஏளன பார்வைகள் மற்றும் பேச்சுகளில் இருந்து தப்பிக்க நமக்கு ஒவ்வாத விடயத்தை செய்ய தேவையில்லை.

    மனக்கட்டுப்பாடு நிரம்ப தேவை. காரணங்கள் சூழ்நிலைகள் ஆயிரம் அமையும் நாம் தான் வேண்டாம் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

    எப்படியோ நாயகியை திரும்ப கூட்டிவந்துட்டீங்க. இழையாள் அழகான பெயர்.

    நாயகியின் அலைபேசியில் வசீகரா பாடல் 😍😍

  2. ஓஹோ இப்போதான் ட்ராக் ஒன்னாகுது … ஹீரோயின் டூர் போயிருக்காங்க ல … அப்போ ஹீரோ ஹீரோயின் மீட்டிங்கா … இழை உன் வசீகரன் இங்க தான் இருக்கார்