Loading

 

 

அன்று

அடுத்தத் தேர்வு நடக்கும் நாள் அதே மரத்தடி நிழலில் சோகமாய்க் கன்னத்தில் கை வைத்தபடி அமர்ந்திருந்தாள் அகரநதி, அவளுடன் மலரும் அமர்ந்திருந்தாள்.

“அதி என்னடி சோக கீதம் பாடிட்டு இருக்க.?” மலர் புத்தகத்தைப் புரட்டியபடி கேட்டாள்.

“இல்லைடி இன்னும் கொஞ்ச நாள்ல காலேஜ் முடிஞ்சிரும், அதுக்கு அப்பறம் நம்ம பிரிஞ்சிருவோமே, அதை நினைச்சு நினைச்சு மனசெல்லாம் கஸ்டமா இருக்குடி” வாட்டமாய் முகத்தை வைத்தபடி சொன்னாள் அதி.

“அதுக்கு எக்ஸாம் அன்னைக்கி உட்கார்ந்து ஃபீல் பண்ணிட்டு இருப்பியாடி, வேலைய பாரு அதான் இன்னும் ஆறு மாசம் இருக்கே” எடுத்துரைத்தாள் மலர்.

“சரி அதெல்லாம் விடு, நீ என்ன ப்ராஜெக்ட் பண்ண போறடி..?” கேள்வியாய் மலரின் முகம் பார்த்தாள் அகரநதி. அதே சமயம்,

“ஹாய் அதி” என முகமலர்ச்சியுடன் வந்து நின்றான் கார்த்திக்.

“அதென்னடி அதி, இங்க நீ மட்டும் தான் இருக்கியா.? இந்தக் கார்த்திக்கு நாங்கலாம் கண்ணுலையே தெரியமாட்டோமோ.? இன்விஸிபிள் ஆகிருவோம் போல” நக்கலாய் கார்த்தியை ஏற இறங்க பார்த்து வைத்தாள் மலர்.

“பார்க்கிற மாதிரி இருந்தா பேசப்போறோம், எதோ சூனியாக்கார பொம்மை மாதிரி மைதா மாவு கலர்ல இருந்தா யாரு பேசுவா, எனக்கென்னமோ சூனியாக்கார பொம்மையே எழுந்து வந்த மாதிரி இருக்கு” அவன் அவளை வம்பிழுத்தான்.

“டேய் கார்த்தி முண்டம் அவளை ஏன்டா கலாய்க்குற, அவ என் ஃப்ரெண்டுடா”

“உன் ஃப்ரெண்டுன்றதுனால தான் அளவா கலாய்க்குறேன், இல்லைனா கதற விட்டுருப்பேன்” பதில் கொடுத்தான் கார்த்தி.

“அதி உன் ஃப்ரெண்டு கார்த்திகிட்ட சொல்லி வையுடி, நிஹா வந்துட்டா நான் போறேன்” என முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு கிளம்பினாள் மலர்.

“ஏய் சாரிடி மலர் அவன் ஒரு லூசு அவனைக் கண்டுக்காத” அதி மலரிடம் பேசிக்கொண்டிருந்த போதே கார்த்தியோ,

“கிளம்பு கிளம்பு காத்து வரட்டும் கிளம்பு, ” என ராகமாய் பாடினான் கார்த்தி.

“ஹம்ம்” என உதட்டை சுழித்தபடி போனாள் மலர்.

“கார்த்தி இப்படிப் பண்ணாதடா” வருந்திய படி சொன்னாள் அதி.

“நான் ஒன்னும் தப்பா சொல்லையே, விளையாட்டுக்கு தான சொன்னேன்” என மறுத்தான் கார்த்தி.

“டேய் லூசு பயலே, ஒருத்தரை ஹர்ட் பண்ணுற மாதிரி எதுவும் செய்யக் கூடாதுடா, உனக்கு விளையாட்டா தெரியுறது மத்தவங்க மனசை பாதிக்கும்டா”

“ஹேய் அதி, இப்போ என்ன மலர்கிட்ட சாரி கேட்டுறேன்,அதுக்காக தத்துவத்தை ஆரம்பிச்சிறாதே காளி ஆத்தா, சாந்தி! சாந்தி! எங்க சொல்லு பார்ப்போம்”

“முதலில் சாரி கேளுடா அவகிட்ட” எனச் சிரித்தபடி சொன்னாள்.

“ஏய் இரு இரு, எதுக்குடி சிரிக்குற.?” புரியாது விழித்தான்.

“சும்மா தான் சிரிச்சேன், ஏன் சிரிக்க கூடாதா..?”

“அதி உண்மையை சொல்லு எதுக்கு சிரிக்குற?”

“க்ளாஸ் நடக்கும் போது ஓரக்கண்ணால நீ யாரை பாக்குறன்னு எனக்குத் தெரியாதுன்னு, நினைச்சிட்டு இருக்கீயா..?” மௌனமாய்ச் சிரித்தாள் அதி.

“யாரை? யாரை? பாக்குறேன் மேமை சைட் அடிச்சேன்”

“ஓ! நீ மேமை சைட் அடிச்ச இதை நான் நம்பணும்”

“நம்ம க்ளாஸ் பொண்ணுங்கள்ல யாருடி பாக்குற மாதிரி இருக்குறது..?”

“நீயா சொல்லுறியா, இல்லை.?” அவள் வார்த்தைகளை உள் இழுக்க,

“தெய்வமே இன்னைக்கி படிச்சிட்டு வந்திருக்கேன், எதையாவது பேசி என்னை மறக்க வச்சிறாத தெய்வமே” அவன் பாவம் போல் கையெடுத்து கும்பிட,

“அந்தப் பயம் இருக்கட்டும் தம்பி” என்றவள் கலகலவெனச் சிரித்தாள், தன் தோழியின் அழகாய் சிரித்த முகத்தைப் பார்த்துவிட்டு தேர்வெழுதும் அறைக்குச் சென்றான் கார்த்தி.

“அதி லூசு” என அழைத்தாள் நிஹா.

“ஏய் நிஹா படிச்சுட்டியாடி.?”

“இப்ப அதான் ரொம்ப முக்கியம், மலரைப் பாருடி அழுதிட்டு இருக்கா, என்ன திமிரு இருந்தா கார்த்தி இவளை சூனியக்கார பொம்மைன்னு சொல்லியிருப்பான், அவன் என்ன பேரழகனா.? தீரேந்திரன் கூடலாம் இவன் நின்னா நனைஞ்ச கோழி மாதிரி இருப்பான், இவனுக்கு வாயைப் பார்த்தியா.?” தீராவின் பெயரை கேட்டவுடன் வானத்தில் மிதந்துக்கொண்டிருந்தாள் அவனுடைய நதி.

“அதி உன்கிட்ட தான் பேசுறேன் வானத்தைப் பார்த்து என்னடி பண்ணிட்டு இருக்க..?”

“ரீல்ஸ் பண்ணிட்டு இருக்கேன்டி” தன்னை மறந்து விழி திறந்து கனவில் மிதந்தபடி சொன்னாள் அதி.

“என்னது ரீல்ஸா.? யாருக்கூட” விழி அகல கேட்டாள் நிஹா.

“தீரா..!” எனச் சொல்லி முகத்தை மூடிக்கொண்டாள் அதி.

“இங்க ஒருத்தி குமுறி குமுறி அழுதுகிட்டு இருக்கா, நீ கனவு கண்டுகிட்டு இருக்கியா..? அதுவும் என்னோட க்ரஷ் கூட இதைத் தைரியமா என்கிட்டையே சொல்லுற” எனக் கோபமாய்ப் பாரத்தாள் நிஹா.

“என்னது உனக்கு மட்டும் தான் க்ரஷா ஊருக்கே க்ரஷ்ன்னு சொன்ன..?” திமிராய் கேட்டாள் அதி.

“ஊருக்கே க்ரஷா இருக்கட்டும், போட்டோ காமிச்சப்ப மூஞ்சை தூக்கி வைச்சிக்கிட்டு அழக பார்த்தெல்லாம் லவ் பண்ண மாட்டேன்னு சொன்னவதான டி நீ, இப்போ என்ன ரீல்ஸ் பண்ணுற அளவுக்கு வந்து நிக்குது..?” புருவம் உயர்த்திக் கேட்டாள் நிஹா.

“அது வந்து..?” என தலைக்கவிழ்ந்து நாணப் புன்னகை சிந்தினாள் தீராவின் நதி.

“மலர் பார்த்தியாடி வெட்கபடுறா இவ..?” என மலரை பார்த்து நிஹா கேட்டாள்.

“ஆமாடி நிஹா வெட்கபடுற அளவுக்கு எதோ நடந்திருக்கு” என மலரும் கார்த்தி விசயத்தை மறந்து போனாள்.

“நீங்க தீராவா போட்டோல தான பாத்திருக்க..? நான் நேர்ல பார்த்திருக்கேன் தெரியுமா.?” இல்லாத காலரை தூக்கிவிட்டாள் அதி.

“தீராவா.?அதி இதெல்லாம் சரியில்லை பார்த்துக்கோ, நான் கூட தீரான்னு சொன்னது இல்லைடி” என முகத்தை தூக்கி வைத்துக்கொண்டாள் நிஹா.

“பார்த்தது மட்டும் இல்லைடி நிஹா” என ஈயென அதி பல்லைக்காட்டி வெறுப்பேற்றினாள் அதி.

“அடியே அதி உன்னை கொண்ணுருவேன், ஒழுங்கா நடந்ததை தெளிவா சொல்லு” என நிஹா நடந்தவற்றை கேட்க, அதி தவறி விழுந்ததையும், அதற்கு தீரா உதவியதையும் சொன்னவள் தன்னிடம் இருந்த டைரியிலிருந்த படத்தையும் காண்பித்தாள் அதி.

“என்னது இவ்ளோ நடந்திருச்சா..? எல்லாம் இருக்கட்டும் லவ்வே பண்ணமாட்டேன்னு சொன்னவ தானடி நீ, மரியாதையா தீராகிட்ட பேசி என்னை லவ் பண்ண சொல்லுற புரிஞ்சுதா?” மிரட்டலாய் சொன்னாள் நிஹா.

“இது உன் லவ் முடிஞ்சா நீயே போய் சொல்லிக்க” என நக்கலாய் சொல்லி நகர்ந்தவள் மலரை பார்த்து திரும்பினாள்.

“மலர் சாரிடி கார்த்தி வந்து சாரி கேட்கிறேன்னு சொல்லிருக்கான்டி” என அதி மலரிடம் மன்னிப்பு வேண்டி அவளைக் கட்டிக்கொண்டாள்.

“உன் மேல எந்தக் கோபமும் இல்லைடி அதி, நீ எதுக்குடி சாரி கேட்கிற?” எனச் சொன்ன மலர் அதியின் தோள் சாய்ந்தாள்.

“உங்க ரொமன்ஸை ஓரம் கட்டி வச்சிட்டு வாங்க எக்ஸாம் ஹால்க்கு போகணும்” நிஹா பொறுப்பாய் சொன்னவுடன், மூவரும் அவர் அவர் தேர்வறைக்குச் சென்றனர்.

அதி தன்னுடைய தேர்வறைக்குச் சென்று, அவள் தேர்வு எண் எழுதப்பட்டிருந்த டெஸ்க்கை தேடிக் கண்டுபிடித்து அமர்ந்து, தன்னுடைய வகுப்பு மாணவர்கள் சரியாக வந்திருக்கிறார்கள் என விழிகளைச் சுழல விட்டபடி பார்த்தாள். எல்லாரும் வந்திருக்க. அகிலன் அமர வேண்டிய இடத்தில் கட்டை மீசையும், ஜிம்மின் அ மெருகேறிய புஜங்களுடன் வேறு ஒருவன் அமர்ந்திருந்தான், குழம்பி போன அதி,அவனருகே சென்றாள்.

“ப்ரோ.!” அவளழைத்தாள்.

“என்ன.?” கடுகடுத்தபடி அகரநதியை ஏறிட்டான் அந்தப் பயில்வான்.

“ஆக்ச்சுவலி நீங்க ஹால் மாறி வந்துட்டிங்கன்னு நினைக்குறேன், இது எங்க க்ளாஸ்மேட் அகிலனோட ப்ளேஸ்”

“அது எங்களுக்குத் தெரியும், சத்தம் காட்டாமல் உன் வேலையை மட்டும் பாருடி” கோபமாய்த் திட்டினான் அவன்.

“என்னதுடியா.? உங்க நல்லதுக்குத் தான் சொன்னேன் எக்ஸாம் மாத்தி எழுதி அரியர் வைக்கப் போறீங்களா.? இன்னும் கொஞ்ச நேரத்துல அகிலன் வந்திருவான், அவன் வந்ததுக்கு அப்பறம் நீங்க புரிஞ்சிப்பீங்க” என அவள் எதோ சொல்ல,

“ஸ்டாஃப் வர்றதுக்குள்ள மூடிகிட்டு போய் உன் இடத்துல உட்காரு, என்ன செய்யணும்னு எனக்குத் தெரியும், யாராவது வாயை தொறந்தீங்க ஒருத்தனும் பாஸ் ஆக மாட்டீங்க” என மற்ற மாணவர்களைப் பார்த்து எச்சரித்தான் அவன். அவனைப் பார்த்து முறைத்துவிட்டு தன் இருக்கையில் வந்தமர்ந்தாள் அதி.

அவள் வந்தமர்ந்த சில நொடிகளில் அந்த வகுப்பை கண்காணிக்கும் பேராசிரியர் கையில் வினாத்தாளும், விடையெழுதும் தாள்களையும் எடுத்து வர, உடனே அவனைத் திரும்பி பார்த்து ஏளனமாய்ச் சிரித்தாள் அதி.

“எக்ஸ்க்யூஸ்மீ மேடம்”

“யெஸ் மா, என்ன வேணும் சொல்லு” பேராசிரியர் கேட்டர்.

“மேடம் அகிலன் இன்னைக்கி எக்ஸாம் எழுத வரலை பட், அவனோட இடத்துல வேற பர்ஸன் உட்கார்ந்திருகாங்க” என அவன் திசையை அவள் கைகாட்ட,

“என்னமா பேசுற நீ, இவன் தான் அகிலன் எனக்கு நல்லா தெரியுமே” என்ற பேராசிரியர் அவன் புறம் திரும்பி,

“ஹாய் அகிலன்” எனப் பேராசிரியர் பேச அதிர்ந்தே போனாள் அகரநதி

பாவையவள் மனதிலோ குழப்பம் குத்தகை எடுத்து அமர்ந்துக் கொண்டது, பல விசயங்களை எளிதாய் கையாளும் குணத்தைக் கொண்டவள் அகரநதி, ஆனால் அவளுக்கு அகிலன் செய்திருக்கும் திருட்டுத் தனம் அவளை ரொம்பவே பாதித்தது, தேர்வறையில் அறையும் குறையுமாய்ப் பரீட்ச்சையை முடித்து வந்தவள், கல்லூரியில் வரவேற்பறையில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து தலைக்கவிழ்ந்திருந்தாள் அதி. நதியை போல் நிற்காமல் ஓடிக்கொண்டிருந்தவள் பாதையில் பாறாங்கல்லாய் வந்து விழுந்திருந்தான் அகிலன்.

அவனுக்கு இருக்கும் அரசியல் பலத்திற்கு அவன் நினைத்தால் இந்தக் கல்லூரியையே வாங்கும் அளவிற்க்கு பணத்திலே குளிப்பவன், அவன் பட்டம் பெற எதற்காக இந்த வழியைப் பயன்படுத்துகிறான் என்ற எண்ணமும் அவளுள் எழத்தான் செய்தது.

யாரையோ வைத்து தேர்வெழுதி பட்டம் வாங்கும் அளவிற்கு அவனுக்குத் தைரியம் இருக்கிறதென்றால், கல்லூரியே அவனுக்கு ஒத்துழைப்பாய் இருப்பதாய் தானே அர்த்தம் என உறுதியாய் நம்பினாள் அகரநதி, தனக்குள் ஆயிரம் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தவளுக்கு, இந்த விசயத்தை பற்றி யாரிடம் புகார் செய்வதென்று தெரியவில்லை.

அவள் யாரிடமாவது சென்று புகார் செய்து,ஒருவேளை அவர்களில் யாராவது, அகிலனுடைய ஆட்களாய் இருக்கக் கூடும், சிறு பெண் என்பதால் முடிவெடுக்க முடியாமல் குழம்பிக் கொண்டிருந்த சமயத்தில் கார்த்தி அங்கு வந்து சேர்ந்தது, உழன்று கிடந்த அவள் மனதிற்குச் சற்று நிம்மதி அளித்தது. கார்த்தியிடம் இந்த விசயத்தைச் சொன்னால் அவன் அவள் வழியில் விழுந்த பாறாங்கல்லாகிய அகிலனை ஓரமாய்த் தூக்கி போடுவான் என உறுதியாய்  நினைத்துக் கொண்டிருந்தவளின். அருகே இருந்த இருக்கையில் அமர்ந்தான் கார்த்திக்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. ஹையோ நிறைய பிரச்சனை இருக்கும் போலயே … இந்த நதி சும்மா இருக்க மாட்டேங்குது …

  2. நதி தீரா கூட ரீல்ஸ் செய்யராலா? நிஹாரிகா, மலருக்கு முன்னவே தெரிஞ்சிருக்கே இவ தீரண விரும்புவது.

    மலர் கார்த்தி இடையேயான உறவு இலைமறை காயாக.

    நதி தேவையில்லாம பிரச்சினை எங்கெங்கு இருக்கோ தேடி போய் விழரா!