Loading

அவள் விரும்பும் ஆணவன் தொடுகிறான் … அதுவும் காதலாய் இல்லாமல் வன்மையாய் … மிருகத்தனமான அவன் தீண்டலில் … அவள் கைகளும் உடலும் நடுங்க ஆரம்பித்தது …

இளமாறன் மூன்று நாட்களாய் சரியாய் சாப்பிடாமல் பேசாமல் இருக்கிறானே … மன வருத்தத்தோடு இருப்பான் என்று நினைத்த செந்தமிழ் … அவன் மனதை மாற்ற என்றும் இல்லாமல் அவனிடம் இன்று குழந்தைத்தனமாய் சிரித்துக் கொண்டே பேச … அது அவளுக்கே வினையாகி போகும் என அவள் நினைத்திருக்கவில்லை …

செந்தமிழ் அவன் ஆசையாய் காதலித்த காதலனிடம் தான் விளையாட்டாக பேசினாள் … அந்த காதல் அவனை மாற்றும் … அவன் மனதில் உள்ள கோபங்களை … கஷ்டங்களை மாற்றும் என நினைத்தாள் … ஆனால் அவள் எதார்த்தமாக சொன்ன வார்த்தைகளை இளமாறன் தன் குறையோடு ஒப்பிட்டு கொண்டான்…

இதுபோதுமா இல்ல இன்னும் நான் வேற ஏதாவது காட்டி ஆம்பிளைன்னு உனக்கு நிரூபிக்கனுமா என்று சொன்னவன்… அவள் செவ்விதழின் சுவை அவனை ஈர்க்க மென்மையாய் அவள் இதழை கவ்வி … அவள் இதழின் ஒவ்வொரு பாகங்களையும் மோகத்தோடு ரசித்து சுவைக்க ஆரம்பித்தான் … விடாமல் அவன் இன்னொரு கையால் அவள் இன்னொரு மார்பை ஆக்கிரமித்து ரசித்து தழுவிக் கொண்டிருந்தான் …

அவள் உயிரோடு செத்து கொண்டிருந்தாள் … பயத்தில் நடுக்கத்தில் அவளால் அவனை தள்ளி விட முடியவில்லை … நான் என்ன சொன்னேன் … எதற்கு இந்த தண்டனை என்று உள்ளுக்குள் கதறினாள் … கண்கள் கண்ணீரை வெளியேற்றிக் கொண்டே இருந்தது… அவள் மூச்சு விட முடியாமல் கஷ்டப்பட்டு மூச்சுக்கு திணற … அப்போது தான் மோகத்தில் இருந்து மீண்டவன் அவள் மேல் இருந்து எழுந்தான் …

வேகமாய் அவளை தூக்கி அவளுக்கு தண்ணீர் கொடுத்தான் … அவன் நகர அவள் தெம்பின்றி மெத்தையில் விழுந்தாள் … தமிழ் சாரி டி … கோபத்துல தெரியாம தப்பு பண்ணிட்டேன் என்று அவன் சொல்ல அவள் ஒன்றும் பேசாமல் தன் முகத்திலே அறைந்து கொண்டு அழுதாள் …

ஐயோ தமிழ் வேண்டாம் என்று அவள் கைகளை அவன் தடுக்க … அவள் விருட்டென்று அவன் கையை தட்டி விட்டாள் … அம்மா கிட்ட … உங்க அம்மா கிட்ட சொல்லி பணம் வாங்கி சீக்கிரம் பிசினஸ் ஆரம்பிங்க … உங்களை கெஞ்சிக் கேட்கிறேன் … சீக்கிரமா பண்ணுங்க… நான் இந்த வீட்டை விட்டு போயிடுறேன் என்று அழுது கொண்டே சொன்னவள் எழுந்து கீழே பெட்ஷீட் விரித்து படுத்துக் கொண்டாள் …

வாடி போன மலராய் அழுது கொண்டே கிடந்தாள் … இதுவரை மனதை ரணமாக்கியவன் இன்று உடலை ரணமாக்கி விட்டான் … உடல் வலியை விட உள்ளத்தின் வலி தான் அதிகம் …  இதற்கு அந்த ராட்சசர்கள் கையில் சிக்கி சிதைந்து போயிருக்கலாம் என்று நினைத்து அழுது கொண்டே படுத்திருந்தாள்…

அவள் அழுவதை பார்க்க இளமாறனுக்கு கஷ்டமாக இருந்தது… நான் ஏன் அப்படி செய்தேன் என்று தன்னையே நொந்து கொண்டவன் … தலையை அழுத்தமாக கோதிக் கொண்டான் … அவளை தீண்டிய அவன் ஒவ்வொரு உடல் பாகத்திலும் அவ்வளவு பரவசம் … ஆனால் அவன் நெஞ்சமோ குற்ற உணர்ச்சியில் தகித்துக் கொண்டிருந்தது …

மறுநாள் காலை செந்தமிழ் அப்படியே படுத்தே கிடந்தாள் … இளமாறன் போய் அவன் அம்மாவிடம் சொல்ல … அங்கு வந்தவர் செந்தமிழ் என்னடா எதுக்கு கீழ படுத்திருக்க … என்ன பண்ணுது என்று அவளை தூக்கி உட்கார வைத்தார் …

அம்மா எனக்கு உடம்பு சரியில்ல … காய்ச்சல் அடிக்குது … அவருக்கும் காய்ச்சல் ஒட்டிக்கும் அதான் கீழ படுத்துகிட்டேன் என்று அவள் சொல்ல … அதுக்கு நீ அவனை கீழ படுக்க சொல்ல வேண்டியது தான … நீ எதுக்கு உடம்பு சரியில்லாம கீழ படுத்திருக்க என்று சொன்னவர் … சரி வா ஹாஸ்பிடல் போகலாம் என்று அவளை அழைத்தார் …

அம்மா எனக்கு மாத்திரை போதும் … ரொம்ப டயர்டா இருக்கு என்று செந்தமிழ் சொல்ல … அவர் அவளை கைத்தாங்கலாக பிடித்து மெத்தையின் மேலே அமர வைத்தார்…

இதை நீ அவகிட்ட கேட்க மாட்டியா… என்னை வந்து கூப்பிட்டு வருவியா என்று புனிதா இளமாறனை கோபமாக பார்த்து கேட்க … நான் கேட்டா உங்க பொண்ணு பதில் சொல்ல மாட்டேங்குறா என்று அவனும் பதிலுக்கு அவரை முறைத்தான் …

மாத்திரை வாங்கி கொடுத்துட்டு போ… வந்து ஹாஸ்பிடல் கூப்பிட்டு போ என்று சொல்லி விட்டு அவர் வெளியே சென்று விட … அவன் அவளை பார்த்துக் கொண்டே ஆபீஸுக்கு கிளம்பினான் …

புனிதா செந்தமிழை தூக்கி அவளுக்கு ஊட்டி விட்டு சாப்பிட வைத்து … மாத்திரைகள் தந்து மடியிலேயே தூங்க வைத்தார் … அவள் தூங்கியதும் அவளை மெத்தையில் படுக்க வைத்து விட்டு… கடைக்கு போன் செய்து அங்கிருப்பவர்களுக்கு வேலைகள் சொல்லி விட்டு … வீட்டு வேலைகளை பார்த்தார் …

மதியமும் அவளுக்கு கஞ்சி மட்டும் வைத்து சாப்பிட கொடுத்து … மாத்திரைகளும் தந்தார்  … அவள் அழுது கொண்டே இருக்க … அழாதடா அம்மா இருக்கேன்ல … தூங்கு … சாயந்தரம் ஹாஸ்பிடலுக்கு போகலாம் என்று சொல்லி அவளை தூங்க வைத்தார்… பாவம் நடந்த பிரச்சனைகள் எதுவும் தெரியாத புனிதா மருமகளுக்கு காய்ச்சல் என்று அன்பாக அவளை கவனித்துக் கொண்டார் …

அவள் காய்ச்சலுக்கு காரணமானவன் ஆபீஸ் முடிந்து மாலை வீட்டிற்கு வந்து அவளை பார்த்தால் … அவள் எப்படி படுத்து கிடந்தாளோ அப்படியே துவண்டு போய் படுத்து கிடந்தாள் … குழந்தை போல உதடுகளை விரித்து படுத்திருந்தாள்… உள் உதட்டில் ஒரு காயம் இருக்க … அது அவன் கடித்தது தான் … அதை பார்த்து திடுக்கிட்டவன் இவ்வளவு வன்மையாக நடந்து கொண்டேனா என்று யோசித்தான் … இதை விட வன்மையாக மிருகமாக அவன் நடந்து கொள்ள போகிறான் … அப்போது இருவரின் நிலை இன்னும் மோசமாக இருக்கும் …

இளமாறன் செந்தமிழை பார்த்து மனம் தாங்காமல் மெல்ல அவள் தலையை வருடி விட … எதேச்சையாக அங்கு வந்த புனிதவதி இதை பார்த்து விட்டார் … அவர் மனதில் அளவில்லா மகிழ்ச்சி… அப்படியே சத்தமில்லாமல் சென்று விட்டார் … கொஞ்சம் கொஞ்சம் அவர்கள் அனைவரின் முகத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் புன்னகை மொத்தமும் தொலைந்து போகிற காலம் வெகு விரைவில் வர போகிறது …

ரேவதி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருக்க … அங்கு பைக்கில் வந்தான் இனியன் … இவ்வளவு நாட்களும் வேறு ஒரு ஷார்ட் கட்டில் தான் ஆபீஸ்க்கு சென்று கொண்டிருந்தான் … இவளை பார்த்த நாள் முதல் அவளை பார்ப்பதற்காக இந்த வழியில் செல்கிறான் … ஒருவழியாக இன்று தான் அவன் கண்ணில் பட்டாள் அந்த முட்டை கண்ணி…

ரேவதி வா நான் உன்னை ட்ராப் பண்றேன் என்று அவன் அழைக்க… இல்ல வேணாம் நான் போய்க்கிறேன் என்றாள் … பஸ் கூட்டமா இருக்கும் வா நான் போற வழி தான என்று அவன் அங்கேயே நின்று கேட்க … இல்ல வேணாம் சொன்னா கேளுங்க போங்க என்றாள் …

வா ரேவதி என்று அவள் கையை அவன் பிடிக்க இனியனை ஓங்கி ஒரு அறை அறைந்தாள் … என்ன மனசுல நினைச்சுட்டு இருக்கீங்க … யார் கூப்பிட்டாலும் நான் வருவேன்னு நினைக்கிறீங்களா … நீங்க யாரு என்னை ட்ராப் பண்ண என்று அவள் கோபமாக சொல்ல … அவனுக்கு அவமானமாகி போனது… அப்படியே பைக்கை ஸ்டார்ட் செய்து சென்று விட்டான்…

அப்போது தான் வயதான ஒருவன் அவளிடம் வம்பிழுத்து … அவள் கையை பிடித்து இழுத்து … அசிங்க வார்த்தைகள் பேசி அவளிடம் அடி வாங்கி சென்றிருக்க… அப்போது அங்கு வந்த இனியனும் ரேவதியின் கோபத்திற்கு ஆளாகி விட்டான் …

அதன் பிறகும் இனியன் அவளை பார்க்க தினமும் அந்த வழியில் தான் ஆபீஸுக்கு சென்றான் … அவள் அங்கு நின்றிருந்தால் பார்த்து கொண்டே சென்று விடுவான் … அவளை தொந்தரவு செய்யவில்லை… தான் தப்பான எண்ணத்தில் அவள் கையை பிடிக்கவில்லை என்று மட்டும் சொல்லி விட அவன் மனம் துடித்து கொண்டிருந்தது …

மாமியார் அன்பாக பார்த்துக் கொண்டதில் செந்தமிழ் கொஞ்சம் தெளிந்திருந்தாள்… இருந்தாலும் இளமாறனை அருகில் பார்த்தால் இப்போதெல்லாம் அவளுக்கு நடுங்குகிறது … மெத்தையில் அவனுக்கு அருகில் தூங்காமல் கீழே படுத்து கொள்கிறாள் …

அன்று இளமாறன் செந்தமிழ் அன்பாக இருப்பதாக நினைத்து கொண்டு … மகிழ்ச்சியில் இருந்த புனிதவதி மகனுக்கு கொஞ்சம் பணம் கொடுத்தார் … அம்மாவை மன்னிச்சுரு டா … அதென்ன உன் பணம் என் பணம் … நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்சது எல்லாம் உனக்கு தான் … அன்னைக்கு பெரிய பெரிய வார்த்தை எல்லாம் பேசுற … நீ தான எனக்கு எல்லாம் என்றவர் … அம்மா நகைகளை விற்கட்டுமா இல்ல லோன் வைக்கட்டுமா இன்னும் உனக்கு எவ்ளோ பணம் தேவைப்படுதுன்னு சொல்லு என்று கண்கள் கலங்கி கேட்க …

நீங்க ரொம்ப கோபக்காரி புனிதாம்மா … ஆனா உங்க கோபம் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் … ஐ லவ் யூ ம்மா என்றவன் அவரை அணைத்துக் கொண்டான் … இளமாறா அம்மாவுக்கு உன் குழந்தையை பார்க்கணும்னு ஆசையா இருக்கு … அம்மா ஆசையை நிறைவேத்துவியா என்று அவர் கேட்க … ஹ்ம்ம் என்று பொய்யாய் ஒரு சிரிப்பு சிரித்து சமாளித்தான் …

செந்தமிழ் உனக்கு என்ன குழந்தை பிடிக்கும் என்று புனிதா கேட்க … திகைத்தவள் … ஏன் ம்மா திடீர்னு கேட்கிறீங்க என்று கேட்டாள் … எனக்கு பெண் குழந்தன்னா ரொம்ப பிடிக்கும் … நீ எனக்கு பேத்தி பெத்து கொடு … அம்மா வளர்த்துக்கிறேன் என்று அவர் ஆசையை அவளிடம் சொல்ல … அவளும் பொய்யாய் ஒரு சிரிப்பை அவருக்கு தந்தாள் …

புனிதவதிக்கு பேத்தியை பற்றிய கனவு தான் எப்போதும் … பேத்திக்கு பட்டுப் பாவடை சட்டை தைத்து தர வேண்டும் … பேத்தி எப்படி எல்லாம் இருக்க வேண்டும் … அவளுக்கு என்ன பெயர் வைக்க வேண்டும் … அவளுக்கு என்னென்ன அலங்காரம் செய்ய வேண்டும் என்று இருவரிடமும் பேசிக் கொண்டே இருந்தார் … அவர் செய்வது இளமாறனுக்கு எரிச்சலாக இருந்தது … செந்தமிழுக்கு வியப்பாக இருந்தது …

ஒரு குழந்தை உருவாவதற்கு முன்பே அதை வரவேற்க தயாராக இருக்கும் ஒரு தாய் … இப்படி ஒருவருக்கு மகளாக பிறக்க எனக்கு கொடுப்பனை இல்லையே என்று நினைத்தாள் … அவரை ஏமாற்றுகிறோமே என்ற குற்ற உணர்ச்சி நாளுக்கு நாள் அவள் மனதை அரித்து தின்றது … இரவெல்லாம் தூக்கம் வராமல் அழுதாள் …

அவள் அழுகைக்கு காரணமானவனோ எதைப் பற்றிய கவலை இல்லாமல் பிசினஸ் தொடங்க முழு மூச்சாக வேலையை ஆரம்பித்து விட்டான் … அந்த செந்தமிழ் பிசாசை வீட்டை விட்டு தொலைத்தால் தான் நிம்மதி என்று நினைத்தான் … அதே பிசாசுக்கு புதிதாக ஆன்ட்ராய்ட் போன் வாங்கி சென்று கொடுத்தான் …

செய்த தப்புக்கு மனம் திருந்தி வாங்கி தந்தானா …  அம்மாவை மனம் திருப்திப்படுத்த வாங்கி தந்தானா … செந்தமிழ் சந்தோஷமாக இருப்பாள் என்று வாங்கி தந்தானா எதற்கு என்பது இளமாறன் மட்டுமே அறிந்த ரகசியம் …

செந்தமிழ் தினமும் புனிதாவுடன் அவர் டெய்லரிங் கடைக்கு செல்ல ஆரம்பித்தாள் … அங்கும் அவருக்கு நிறைய உதவிகள் செய்தாள் … அவர் செய்யும் வேலைகளை எல்லாம் பார்த்துக் கொண்டே இருந்தாள் … எல்லோரிடமும் சகஜமாக பழகினாள்… மாமியார் மருமகள் சாரி அம்மா மகள் பிணைப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போனது …

காதலாய் வருவாள் 💞 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்