
அழகியே 9
செழியன் கூறியது புரியாமல் அரவிந்தன் அவனை பார்க்க, வீட்டில் இருந்து வந்ததில் இருந்து தற்போது வரை நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூற, அவனோ அதிசயித்துதான் போனான்.
“ஒரே வாரத்துல எப்படிடா இவ்ளோ காதல். என்னால நம்ப முடியல. வீட்டுல எல்லாரும் இன்னும் ரெண்டு, மூணு மாசத்துல நீ அவளை விட்டுட்டு வந்துருவன்னு பேசிட்டு இருக்காங்க. சத்தியமா அவங்க சொல்றதை கேக்கும்போது அவளோ கோவம் வருது தெரியுமா. இதுல அத்தை வேற நீ சவிதாவ விட்டுட்டு இன்னொருத்திய கட்டிகிட்டன்னு அவளோ கோவம்.சாபம் விட்டுட்டு இருக்காங்க. இதெல்லாத்துக்கும் பதில் உங்க வாழ்க்கை தான். நீங்க நல்லபடியா வாழ்ந்து அவங்களுக்கு பதில் சொல்லணும். நீ முதல்ல படிச்சு முடி செழியா. நான் பாத்துக்குறேன். அப்புறம் நீ ஒரு வேலைய தேடிக்கோ” என்று அறிவுரை கூறினான்.
மறுப்பாக தலையசைத்தவன், “நீ என்னை மன்னிச்சதே போதும்டா, வீட்டுக்கு பர்னிச்சர் வாங்கி தந்தது நீ தானே” என்று கேட்க,
அவனோ, “ப… பர்னிச்சரா நான் இல்லையே. அது நான் இல்லை. நீ எங்க இருக்கனே எனக்கு தெரியாது. ஆமா இப்போ எங்க தங்கிருக்கீங்க, வீடு எங்க இருக்கு” என்று கேட்க,
அவனோ, “உனக்கு நாங்க எங்க இருக்கோம்னு தெரியாது. சரி உன் விசிட்டிங் கார்டுக்கு எப்படி எங்க ஹவுஸ் ஓனர் வீட்டுக்கு வந்துச்சு” என்று கேட்டான்.
“அது எனக்கு எப்படி தெரியும். தெரியல டா” என்று கூற, “சரி ஓகே.. நீ இந்தப்பக்கம் எங்க வந்த” என்று கேட்க, “அது வீட்டுக்கு போக வந்தேன், வழில உன்னை பார்த்தேன்” என்று கூறியவனை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தவன், “கொஞ்சமாச்சும் லாஜிக் ஆஹ் பேசுடா, இங்க இருந்து வீட்டுக்கு போக 1 ஹவர் ஆகும். உன் ஆபீஸ் இங்க இருந்து 30km லாங்ல இருக்கு. ஏன்டா இப்படி உளறுற” என்று கேட்டான்.
அரவிந்தன் அவன் கண்டுகொண்டான் என்று புரிந்ந்து கொண்டவன், “எப்படிடா” என்று கேட்க, “இப்போ கடைக்கு வரும்போது ஒரு கூரியர் வந்துச்சு அவங்க வீட்டுக்கு. அந்த பாட்டி கிட்சேன்ல இருந்தாங்க போல. அத வாங்கி டிவி பக்கத்துல வச்சிருப்பான்னு சொன்னாங்க. அப்போ அங்க பார்த்தேன். டிவி மேல உன் கார்டு இருந்துச்சு. அப்போவே புரிஞ்சுக்கிட்டேன்” என்று கூறினான்.
அவனின் புத்தி கூர்மையை மெச்சிக் கொண்டவனோ, “அது நான் உன் கல்யாணத்துக்கு கிபிட் பண்ணதா நினைச்சுக்கோ. ஏன் நீ என் தம்பி உனக்கு நான் செய்யக்கூடாதா? எனக்கு அந்த உரிமை இல்லையா?” என்று கேட்டான்.
“கண்டிப்பா உனக்கு எல்லா உரிமையும் இருக்கு. ஆனா போதுமே. இதுக்கு மேல நீ எதுவும் செய்ய வேண்டாம்டா ப்ளீஸ். நான் பாத்துக்குறேன்” என்று கூற,
அவனோ, “நீ பாத்துப்ப எனக்கு தெரியும்டா. ஆனா உனக்கு இன்னும் படிப்பு கூட முடியல. அதான் சொல்றேன் புரிஞ்சுக்கோ” என்று கூற, “இன்னும் சிக்ஸ் மந்த்ஸ் தான். நான் காலேஜ்ல இன்போர்ம் பண்ணிட்டேன். எக்ஸாம்ஸ் மட்டும் அட்டென்ட் பண்ணிக்கிறேன் சொல்லிட்டேன். அப்புறம் நாளைல இருந்து நான் ஜாப் போக போறேன்” என்று கூறினான்.
“ஜாப்பா? எங்க? டிகிரி கம்ப்ளீட் பண்ணாம எப்பிடிடா” என்றவனிடம் “டிரைவர் வேலைக்கு டிகிரி எல்லாம் தேவையில்லையாம்” என்று கூற,தம்பி கூறியதில் அதிர்ந்து போனவன்”ஹேய் விளையாடுறியா நீ? அப்படியென்ன அவசியம் நீ டிரைவர் வேலைக்கு போகணும்னு, ஒன்னும் தேவையில்லை, மரியாதையா நாளைல இருந்து காலேஜ் கிளம்பு, புக்ஸ் எல்லாம் நான் கொண்டு வந்து தரேன்” என்று கூறினான்.
செழியன், “இது தேவையில்லாத ஆர்கியூமெண்ட் அரவிந்தா. நான் முடிவெடுத்துட்டேன். சரி விடு. நீ வீட்டுக்கு போ. ரொம்ப லேட் ஆகிடுச்சு. அண்ணி வெயிட் பண்ணுவாங்க. நான் கால் பண்றேன்” என்றான்.
“நான் சொல்றத நீ கேக்க மாட்ட. நீ தான் முடிவெடுத்திட்டியே. நீ சாப்பிடு வாங்கிட்டு வந்தல்ல, டைம் 3:30ஆக போகுது. வா நான் உன்னை ட்ரோப் பண்றேன்” என்றழைத்தவனை மறுத்தவனோ, “பக்கத்துல தான் நான் போயிக்குறேன், நீ போ” என்றனுப்பியவன் வேக நடையிட்டு வீட்டை அடைந்தான்.
அங்கோ, வேதா பசியில் துவண்டு போய் உறக்கத்தில் இருந்தாள். அவளை கண்டதும் அவனின் தவறு உரைக்க, அவளிடம் சென்றவனோ, “வேதா எழுந்திருமா, சாப்பிட்டு தூங்கு, சாரி லேட் பண்ணிட்டேன்” என்று அவளை தூக்கி அமர வைக்க, அவளோ உறக்கத்துடனே எழுந்தமர்ந்தாள்.
செழியன் உணவை எடுத்து வைத்து கொண்டு இருக்க, அவனருகில் அமர்ந்தவளோ ஏதோ நினைவில், “அப்பா எனக்கு ஊட்டுங்க.. பசிக்குது. நீங்க முதல் வாய் ஊட்டினதானே நான் சாப்பிடுவேன்” என்று கூறியவள், பின் நிலை உணர்ந்து கண்களை துடைத்து கொண்டு எழ, அவளின் கைப்பற்றி அமர வைத்தவனோ அவளுக்கு ஊட்டிவிட, அவளின் இதழ்களோ “தேங்க்ஸ் பா” என்று முனுமுனுத்தது.
அவள் அரை உறக்கத்திலேயே இருக்க, அவனே அவளுக்கு உணவை ஊட்டி விட்டு அவளை படுக்க வைத்தவனுக்கு மனம் பாரமேறிய உணர்வு. காதலுக்காக அவளுக்கு கிடைக்க வேண்டிய பாசத்தையும் அன்பையும் தன்னால் இழந்துவிட்டாள் என்று.
ஏதேதோ யோசித்தவனுக்கு உணவை உண்ண கூட முடியவில்லை. பசி மறந்து போக, உணவு வீணாவதை விரும்பாதவன் கஷ்டப்பட்டு அதை உள்ளே தள்ளினான்.
அவள் உறங்கி கொண்டிருக்க, அவளை தூக்கி சென்று அறையில் கிடத்தியவன், பக்கத்தில் இருந்த நோட்டில் வெளியே செல்வதாக எழுதி வைத்தவன், வெளியே வர சரியாக தேவ்வும் வந்திருந்தான்.
செழியன், “என்னடா இன்னும் கொஞ்சநேரம் தூங்க வேண்டியது தானே” என்று கேட்க, “இல்லடா கொஞ்ச நேரம் தூங்குனேன். மனசு கேக்கல நீ என்ன பண்ற. சாப்பிட்டீங்களான்னு மனசு அடிச்சுக்குது. அங்க என்னால இருக்க முடியல. இதுல அம்மா வேற செழியன் இவ்ளோ பெரிய வேலை செஞ்சுருக்கான். நீ இதெல்லாம் எடுத்து சொல்லமாட்டியா அது இதுன்னு டார்ச்சர் பண்றாங்க. என்னால அங்க இருக்க முடியல. சரி அத விடு. சாப்டிங்களா ரெண்டு பேரும். தங்கச்சி எங்க?” என்று கேள்வி கேட்க,
அவனோ, “இப்போதான்டா சாப்பிட்டு முடிச்சோம். அவ டேப்லெட் போட்டதுல தூங்குறா. இன்னும் கொஞ்சம் பொருள் வாங்கணும்டா சமைக்கிறதுக்கு. அப்புறம் அவகிட்ட போன் இல்லை. நாளைக்கு நான் வெளியே போனதும் ஏதாச்சும் அவசரம்னா எப்படி காண்டாக்ட் பண்ணுவா அதான் இருக்குற அமௌன்ட்ல வாங்கிரலான்னு கிளம்பினேன்” என்றான்.
தேவ்வோ, “ஹேய் டைம் என்ன தெரியுமா? 4:30 இப்போதான் சாப்டிங்களா? பேசாம நான் புட் வாங்கி குடுத்துட்டே போயிருப்பேனே. உனக்கு பசிக்கலைன்னா அவளுக்காச்சும் வாங்கி தந்துருக்கலாம் தானே?” என்று கோவமாக கேட்டான்.
“இல்லடா நான் சீக்கிரமாவே போனேன். வர்ற வழில அரவிந்த் அண்ணாவை பார்த்தேன்” என்று நடந்த அனைத்தையும் கூறியவன் ட்ராவல்சில் வேலை கிடைத்ததை கூறவில்லை.
அவனோ, “அரவிந்த் அண்ணா கிரேட்ல. நிஜமாவே நீ பண்ணதுக்கு அண்ணா கோவப்பட்ருக்கணும். ஆனால் பாரேன்.. அவருக்கு ரொம்ப நல்ல மனசுடா” என்று கூற, அதை ஆமோதித்தவன், “சரி என்னோட கடைக்கு வரியா? இல்லை கொஞ்சம் நேரம் தூங்கு போய்” என்று கூற, “அட போடா நான் எங்க தூங்க போறேன், வா போகலாம்” என்று கூறி அழைத்து சென்றான்.
முதலில் மொபைல் கடைக்கு சென்றவர்கள் நல்ல தரமான மொபைல் குறைந்த விலையில் ஆஃப்பரில் இருக்க அதை வாங்கி விட்டு ஆதார்கொடுத்து சிம் கார்டும் வாங்கியவன் தேவின் உதவியுடன் மளிகைப்பொருட்களும் காய்கறிகளும் வாங்கிவிட்டு, திரும்ப எதிரில் ஆக்ரோசமாய் நின்றிருந்தார் செழியனின் தாய் மீனாட்சி.
“என்ன கல்யாணம் எல்லாம் முடிஞ்சுருச்சு போல, இப்போ முழு நேர குடும்பத்தலைவனாவே மாறிட்டீங்க. கைல மளிகை சாமான், காய்கறி. இதெல்லாம் நீ வாங்கறதுக்கு அவளுக்கு எதுக்குடா தாலி கட்டி கூட்டிட்டு போய் வீட்டுல வச்சிருக்குற” என்று கோபமாய் தொடங்கியவருக்கு மகனின் சோர்ந்து போன முகம் அவனை காயப்படுத்த மனம் வராதவர்,
“உன்னை எப்படியெல்லாம் வளர்த்தேன். உனக்காக ஆயிரம் கனவு கண்டு வச்சிருந்தேன். எல்லாத்தையும் அந்த பிச்சைக்காரிக்காக உதறிட்டு இப்படி வந்து நிக்கறியே. உன்ன இப்படி பாக்க பாக்க எனக்கு துடிக்குதுடா. வந்துரு செழியா அவ வேண்டாம்டா உனக்கு. அம்மா உனக்கு நல்லா பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி வைக்கிறேண்டா வந்துருடா அம்மா கூட” என்று அழுதார்.
“வேணாம் மா.. ப்ளீஸ் போயிருங்க.. தயவுசெஞ்சு உங்க மேல இருக்க மரியாதையா இப்படியெல்லாம் பேசி நீங்களே குறைச்சுக்காதீங்க. அதான் நான் வந்துட்டேன்ல விட்ருங்க என்னை. உங்களுக்குதான் இன்னும் மூணு பசங்க இருக்காங்களே. ஆனா அவளுக்கு என்னவிட்டா வேற யாருமே இல்ல. விட்ருங்க முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும்” என்று கூறிவிட்டு அவரை தாண்டி செல்ல போக,
“டேய் நில்லு, உன் அம்மா இப்படி நடு ரோட்டுல நின்னு கெஞ்சிட்டு இருக்கேன். ஆனால் உனக்கு என்னவிட அந்த பிச்சைக்காரி பெருசா போய்ட்டா இல்லை. அவ ஆளும் முகரையும் உடம்பெல்லாம் ரத்தகரையோட அருவருப்பா.. அவளை போய் உனக்கு எப்படி புடிச்சது. ச்சி” என்று கூற,
கை நீட்டி எச்சரித்தவனோ, “இதுதான் உங்களுக்கு கடைசி முறை. இன்னொரு தரம் நீங்க அவளை கேவலமா பேசுனீங்க. பெத்த அம்மானு கூட பாக்க மாட்டேன். ஏன் நீங்க இவ்ளோ கேவலமா மாறிட்டீங்க. உங்ககிட்ட பேச கூட எனக்கு பிடிக்கல. போயிருங்க.. இல்ல அம்மானு கூட பாக்கமாட்டேன்” என்று கூறினான்.
அவரோ, “என்னடா பண்ணுவா அடிச்சுருவியா? யாருடா அவ,இன்னிக்கு வந்தவளுக்காக 21 வருசமா பெத்து வளர்த்து ஆளாக்குன என்னையே அடிச்சுருவியா? பெத்தவ வாயிரெரிஞ்சு சொல்றேன். அவ எல்லாம் நல்லாவே இருக்க மாட்டா. இப்படியெல்லாம் பெத்தவங்கள நோகடிச்சுட்டு போறவங்கல்லாம் நல்லா வாழ்ந்ததே இல்ல. நானும் பாக்கத்தானே போறேன்” என்று சாபம் விட,
“போதும் அத்தை, இதுவரைக்கும் நான் சும்மா இருந்தது நீங்க ஏதோ கோபத்துல பேசுறீங்கன்னு தான். இப்போ என்னோவோ நடு ரோட்டுல நின்னு சாபம் விடறீங்க. இந்த காலத்துல எல்லாம் நல்லவங்க விடற சாபமே பலிக்கிரதில்ல. நீங்க தேவையில்லாம பேசாம போங்க” என்று கூறியவனை முறைத்தவர் வெகுண்டெழுந்து விட்டார். அடுத்து அவர் பேசும் வார்த்தையிலும் செயலிலும் மகன் அவர்கள் உறவை முற்றிலும் அறுத்து எறிந்திடுவான் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார். ஆத்திரத்திலும் ஆவேஷத்திலும் செய்யும் காரியம் எப்போதும் ஆபத்து தான்…

