Loading

அத்தியாயம் 20

 

மறுநாள், அலுவலகத்திற்கு கிளம்பியபடி ஜீவநந்தினி வெளியே வர, சுதாகரோ அவளை செல்ல வேண்டாம் என்று தடுத்துக் கொண்டிருந்தார். காரணம் கேட்டால், உதயகீதனை சுட்டிக்காட்டினார்.

 

“எந்த ரூட்ல போனாலும் அந்த முசோ கிட்ட தான் முட்டிக்க வேண்டியதா இருக்கு!” என்று அவள் எண்ணும்போதே, இரு பெண்கள் வந்து, “மேம், உதய் சார் உங்களை வந்து பார்க்க சொன்னாரு.” என்று கூறினர்.

 

“எதுக்காம்?” என்று ஜீவநந்தினி முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள, “மேரேஜ் அண்ட் ரிசப்ஷன் டிரெஸ் ஃபிக்ஸ் பண்ண மேம்.” என்று ஒருத்தி கூற, “மேக்கப் டிரையல் பார்க்க மேம்.” என்றாள் மற்றொருத்தி.

 

“வெயிட் வெயிட், யாருக்கு மேரேஜ்? எதுக்கு மேரேஜ்?” என்று குழம்பி போய் ஜீவநந்தினி வினவ, அவளின் இறுதி கேள்வியில் அந்த பெண்கள் சிரித்து விட, அப்போது தான் அவள் சொன்னதையே உணர்ந்தாள் ஜீவநந்தினி.

 

‘அட முசோ, உங்களால நான் லூசு மாதிரி நின்னுட்டு இருக்கேன்.’ என்று மனதிற்குள் புலம்பியவள், அந்த பெண்களிடம் பத்து நிமிடம் அவகாசம் கேட்டு விட்டு, அறைக்கு வந்து உதயகீதனை அலைபேசியில் அழைத்தாள்.

 

மறுமுனையில் உற்சாகத்துடனே அழைப்பை ஏற்ற உதயகீதன், “ஒருவழியா கால் பண்ணிட்ட போல ஜீவி?” என்று அவன் உல்லாசமாக கேட்க, “நான் மொக்கை வாங்கி நிக்கிறது உங்களுக்கு அவ்ளோ குஷியா இருக்கோ?” என்று பொங்கினாள் அவனின் மனையாள்!

 

“ஹே கூல்… நீதான உனக்கே உனக்கா கல்யாணம் நடக்கணும்னு ஆசைப்பட்ட. விஷயத்தை கேட்டு சந்தோஷப்படுவன்னு நினைச்சா, இப்படி எகிறிட்டு வர. சரி, உனக்கு பிடிக்கலன்னா, கல்யாண ஏற்பாடை நிறுத்த சொல்லிடுறேன்.” என்று உதயகீதன் கூற, உடனே அதை மறுத்தாள் ஜீவநந்தினி.

 

அவளுக்கும் அவளவனின் ஏற்பாடு பிடித்து தானே இருந்தது. ஒரே வருத்தம், அதை சொல்லாமல் ஒருநாள் அவளை தவிப்பிலும் சுத்தலிலும் விட்டது தான்.

 

“நான் என்ன அரேஞ்சமெண்ட்ஸை நிறுத்தவா சொன்னேன்? என்கிட்ட ஏன் சொல்லலன்னு கேட்க வந்தேன்? அதுவும் நேத்து ஒரே நாள்ல, புது பி.ஏவை அப்பாயின்ட் பண்ணியிருக்கீங்க. அதோட வீட்டை விட்டும் துரத்திட்டீங்க!” என்று குற்றம்சாட்டினாள்.

 

“சரியான அவசரக்குடுக்கை! யாரு புது பி.ஏ? அவர் சேஃப்டி டீம்ல புதுசா ஜாயின் பண்ணியிருக்க ஹெட். அந்த டீம் நம்ம ஆஃபிஸ்ல புதுசா ஆரம்பிக்குறதால, அதை பத்தி டிஸ்க்ஸ் பண்ணிட்டு இருந்தோம். நீயா எதையோ கற்பனை பண்ணிட்டு வந்தா, அதுக்கு நான் எப்படி காரணமாவேன்?” என்று அவன் கூற, ‘அடிப்பாவி ரேக்ஸ், இரு உன்னை ஆஃபிஸ்ல வந்து வச்சுக்குறேன்.’ என்று அவள் மனதிற்குள் திட்டும் இடைவெளியில், “இனி நீதான் எனக்கு பெர்மனண்ட் பி.ஏன்னு அறிவிச்சுடலாமா?” என்று அவன் வினவ, “நோ நோ.” என்று வேகமாக மறுத்தாள் அவள்.

 

“அப்பறம் என்ன சொன்ன? உன்னை வீட்டை விட்டு துரத்துனாங்களா? அது உன் வீடு தான? நீ போக மாட்டேன்னு சொன்னா, யாரு தடுப்பா?” என்றவன், “கல்யாணம் வரைக்கும் கம்முன்னு இருக்கணும்னு தான் அனுப்பி வச்சதே.” என்று முனகினான்.

 

அது அவளுக்கும் தெளிவாகவே கேட்க, நொடி நேரத்தில் முகம் குப்பென சிவந்து விட்டது.

 

‘நல்லவேளை ஆடியோ கால் தான்!’ என்று ஒரே நேரத்தில் ஆசுவாசமும் ஏமாற்றமும் ஏற்பட, தன்னை நினைத்தே மானசீகமாக தலையிலடித்துக் கொண்டவள், “லாஸ்ட்டா ஏதோ சொன்ன மாதிரி இருக்கே, அது சரியா கேட்கல.” என்றாள் வேண்டுமென்றே.

 

அவள் விளையாடுகிறாள் என்பதை புரிந்து கொண்ட உதயகீதனும், “ஹ்ம்ம், நீ இங்க இருந்தா, எனக்கு உன்னை பார்க்குற வேலையே சரியா இருக்கும். அப்போ நான் எப்படி கல்யாண வேலையை பார்க்க?” என்று ‘பார்க்குற’ என்பதை அழுத்திக் கூற, “முசோக்கு மூட் மாறுது போல.” என்று கேலி செய்தாள் அவள்.

 

“இன்னும் கொஞ்ச நேரம், இப்படியே பேசிட்டு இருந்தா, மூட் மாறி நானே கல்யாணத்தை கேன்சல் பண்ணிட்டு, உன்னை இங்க தூக்கிட்டு வந்துடுவேன்.” என்று அவன் கூற, “ச்சு, இப்போ யாரு அவசரப்படுறா, மிஸ்டர். அவசரக்குடுக்கை?” என்றாள் அவள்.

 

இப்படியே, அவர்களின் நேரங்கள், திருமண வேலைகளிலும், இடையிடையே கிடைக்கும் சந்தர்பங்களில் ‘ஸ்வீட் நத்திங்ஸ்’ உரையாடுவதிலும் கழிந்தன.

 

ஜீவநந்தினி ஆசைப்பட்டது போல அவளுக்கென்று ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்யப்பட்டிருந்தது அவளது திருமணத்தில். ஏற்பாடுகளை செய்தவன் அவளவனாகிற்றே!

 

அந்த பூரிப்பு முகத்தில் தெரிய, அதனுடன் அவர்கள் தனிமையில் பேசியவைகள் அனைத்தும் அவனை அவ்வபோது நேரில் காணும்போது நினைவுக்கு வந்து வெட்கத்தை கொடுக்க, அதை கேலி செய்யும் தோழிகளின் அலப்பறைகளில் மகிழ்ச்சி அலைகள் அவளுக்குள் ஆர்ப்பரித்தன.

 

அதே கலாட்டாவுடன், இதோ திருமண மேடையில் இருவரும் அருகருகே அமர்ந்திருந்தனர். ஐயர் மந்திரங்களை சொல்லிக் கொண்டிருக்க, அதை கவனிக்க முடியாத வகையில் அவனவளின் எழில் அவனை ஈர்த்தது. அவளும் கூட அவளவனின் வதனத்தை ஓரக்கண்ணில் ரசித்துக் கொண்டு தான் இருந்தாள்.

 

அவளின் பார்வையை கண்டு கொண்டவனோ, “ஓய் வாயாடி, என்ன பார்வை இது? பார்த்தே முடிச்சுடுற ஐடியால இருக்கியா என்ன? அதுசரி, எல்லா சடங்கும் உனக்கே உனக்காகன்னு செஞ்சாச்சு. அப்படியே ஃபர்ஸ்ட் நைட்டுக்கு ஏதாவது எக்ஸ்பெக்டேஷன் இருக்கான்னு சொன்னா, அதையும் உனக்கே உனக்காகன்னு செஞ்சுடுறேன்.” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் வகையில் கிசுகிசுக்க, ‘இந்த முசோக்கு கொழுப்பு தான? எங்க வச்சு எதை கேட்டுட்டு இருக்காரு.’ என்று நினைத்தவள், “ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் நைட்ல ஓடிப் போன மாதிரி, இப்பவும் ஓடிப் போகாம இருந்தா போதும்!” என்றாள் அவளும் கேலியாக.

 

அவளின் பேச்சில் அவனுக்கு சிரிப்பு வந்தாலும், வெளியே அவளை முறைக்க, “இதோ முசோ முறைச்சாச்சு. இந்த ஒரு வாரமா முசுட்டு முசோவை காணோமேன்னு நான் கூட ஃபீல் பண்ணேன், தெரியுமா? இப்போ தான் நிம்மதியா இருக்கு.” என்று பொங்கி வரும் சிரிப்பை அடக்கிக் கொண்டு கூறினாள் அவள்.

 

எத்தனை நேரம் பேசிக் கொண்டே இருந்திருப்பரோ, மந்திரங்களை சொல்லியபடி இவர்களிடம் கவனத்தை வைத்திருந்த ஐயரோ, “பேசி முடிச்சுட்டேள்னா, மந்திரத்தை சொல்லுங்கோ.” என்று முறைத்துக் கொண்டே கூற, “ஐயரை கூட உங்களை மாதிரியே செலக்ட் பண்ணி வச்சுருக்கீங்களே முசோ.” என்று அப்போதும் அடங்காமல் அவள் பேச, அதற்கான முறைப்பை அவன் வாங்கிக் கொண்டான்.

 

ஒருவழியாக தாலி உதயகீதன் கரத்தில் கிடைக்க, முதல் முறை போலில்லாமல், ஜீவநந்தினியின் முகத்தை பார்த்தான், அவள் சம்மதத்திற்காக. அவளும் முதல் முறை போலில்லாமல், தலையசைப்புடன் அவனுக்கு சம்மதத்தை வழங்கி இருந்தாள்.

 

முதலில் மனம் ஒப்பாமல் நடந்திருந்த திருமணத்தை, அவனின் ஜீவியின் விருப்பத்தின் காரணமாக மீண்டும் ஒரு முறை நிகழ்த்தி, அதை தங்களுக்கே தங்களுக்கானதாக மாற்றி இருந்தான் அவளின்  தயா.

 

இருவரையும் அந்த கோலத்தில் பார்த்த கேசவமூர்த்தியும் சுதாகரும் மனம் நிறைந்து போயினர்.

 

மகன்(ள்) விரும்பும் மருமகள்(ன்)… நண்பனே சம்பந்தியாகி இருக்க, வேறு என்ன வேண்டும் இருவருக்கும்?

 

மனம் நிறைந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்று மணமக்கள் இருவரையும் மனதார வாழ்த்தினர் இரு தந்தையர்களும்.

 

*****

 

இரவு நேர சடங்கிற்கான ஏற்பாடுகள் நடந்த வண்ணம் இருந்தன.

 

ஜீவநந்தினியை அலங்கரித்துக் கொண்டிருந்த அனுஷாவோ, “போன முறை மாதிரி ஓட விட்டுடாத நந்து. பாவம் அவரு, உன்னை ஒரு முறை இல்ல, ரெண்டு முறை  கல்யாணம் பண்ணி இருக்காரு!” என்று கேலி செய்ய, “அவ்ளோ தான, விடு அவரை கண்கலங்காம நான் பார்த்துக்குறேன்.” என்று கண்ணடித்தாள்.

 

அப்போது அங்கு வந்த கேசவமூர்த்தியின் தமக்கை, “அன்னைக்கு சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்குலமா. ஹ்ம்ம், என்னத்த சொல்ல, எதுக்கு இப்படி இன்னொரு முறை எல்லாம் கல்யாணம் பண்ணனுமோ? காசுக்கு வந்த கேடு! சொன்னா யாரு கேட்குறா?” என்று அவர் புலம்ப, “நாங்க ரெண்டென்ன ரெண்டாயிரம் கல்யாணம் கூட பண்ணுவோம். உங்களுக்கு என்ன பிரச்சனை?” என்று ஜீவநந்தினி கேட்க, திகைத்து தான் போனார் அந்த பெண்மணி.

 

முன்னர் போலவே, அவள் அமைதியாக இருப்பாள், அவரின் பொறாமையை வன்மமாக கொட்டி விடலாம் என்று அவர் நினைத்திருந்தார் போலும். பாவம், அவருக்கு தான் தெரியாதே ஜீவநந்தினியின் சுயரூபம்!

 

அத்துடன் விட்டாளா?

 

“ஹான், அப்பறம் அடுத்த மாசம் இன்னொரு முறை கல்யாணம் பண்ண போறோம். உங்களுக்கு தான் முதல் அழைப்பே! மரியாதையா… அதாவது என்ன சொல்ல வந்தேன்னா, கூப்பிட்ட மரியாதைக்காக வந்து மொய் வச்சுட்டு போங்க.” என்றும் அவள் கூறிவிட, அவரின் முகத்தில் ஈயாடவில்லை.

 

அவற்றை எல்லாம், அறைக்கு செல்லும் வழியில் கேட்ட உதயகீதனுக்கோ சிரிப்பை அடக்க முடியவில்லை.

 

அவரைப் பார்க்க பாவமாக இருக்க, “அத்த…” என்று அழைத்து வெளியே வரவைத்து விட்டான்.

 

அனுஷாவோ, “அட பக்கி, எதுக்கு இப்படி பேசி வச்சுருக்க? நாளைக்கு ஏதாவது பிரச்சனையானா என்ன பண்ணுவ?” என்று வினவ, “பின்ன என்ன, இவங்க கிட்ட காசு கேட்ட மாதிரி எதுக்கு இப்படி புலம்பணும்? பிரச்சனை வந்தா, என் முசோவை விட்டு முறைக்க சொல்லிடலாம்.” என்று தோளை குலுக்கினாள் பாவை.

 

பின், நேரமாகி விட்டது என்று சொல்லி ஜீவநந்தினியை உதயகீதனின் அறைக்கு கூட்டிச் சென்றனர்.

 

அத்தனை நேரம் வாயடித்தவளோ, கணவனின் அறைக்கு வெளியே நின்று தயங்கியபடி இருக்க, “உள்ள போவியா மாட்டியா நந்து?” என்று அவளுடன் ஐந்து நிமிடங்களாக காத்திருந்த அனுஷா சலிப்புடன் கேட்க, அதற்கு ஜீவநந்தினி பதில் சொல்வதற்கு முன்னரே, சட்டென்று கதவை திறந்த உதயகீதன், “நீங்க போங்க சிஸ்டர். நாங்க பார்த்துக்குறோம்.” என்று மனைவியின் கரம் பற்றி அறைக்குள் இழுத்தான்.

 

அனுஷா இருவரையும் நமுட்டுச் சிரிப்புடன் பார்த்துவிட்டு நகர, “அச்சோ, என் மானமே போச்சு! நீங்க எதுக்கு வெளிய வந்தீங்க?” என்று ஜீவநந்தினி கத்த, “அடிப்பாவி, உன்னை எம்பரஸ்மெண்ட்ல இருந்து காப்பாத்த நினைச்சா, என்னையே கேள்வி கேட்குற?” என்று அவன் திகைத்தாலும், அதுவும் ஒருவித சுவாரஸ்யமாகவே இருந்தது.

 

“ப்ச், எனக்கு ஒரு மாதிரி இருந்துச்சு… அதான் வெளிய நின்னு ரிலாக்ஸ் பண்ணிட்டு இருந்தேன். நானே கொஞ்ச நேரத்துல தெளிஞ்சு உள்ள வந்துருப்பேன். இப்போ நீங்க வந்து, என்னை உள்ள இழுத்து… ம்ச், இந்த உலகம் என்னை பயந்தாங்கோலின்னு தப்பால நினைக்கும்.” என்று அவள் சிணுங்கியபடி கூற, “கீழ விழுந்தாலும் மீசைல மண்ணு ஒட்டக்கூடாது, அதான?” என்றான் அவன் கேலியாக.

 

அவன் கூறியதை கண்டு கொள்ளாமல், அந்த அறையின் அலங்காரங்களை அவள் பார்க்க, அவனோ அவளை கண்களால் அளந்து கொண்டிருந்தான்.

 

“அரேஞ்மெண்ட்ஸ் எல்லாம் ஓகேவா?” என்று மெல்ல அவளருகே அவன் வர, அவன் அரவத்தை உணர்ந்து உடல் சூடானாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “ஹ்ம்ம் ஓகே ஓகே.” என்றாள் அவள்.

 

“அப்போ எதுக்கு வெயிட் பண்ணிட்டு ஸ்டார்ட் பண்ணிடலாமா?” என்று விஷமத்துடன் அவன் வினவ, “எதே?” என்று திடுக்கிட்டு திரும்பினாள் அவள்.

 

“ஒருவழியா முகத்தை பார்த்துட்ட போல!” என்று கேலியாக வினவியவன், “காலைல இருந்து சைட்டடிச்சுட்டு, இப்போ மட்டும் என்ன புதுசா வெட்கம்?” என்று நமுட்டுச் சிரிப்புடன் அவன் வினவ, “ஆமால, எனக்கே அப்படி தான் தோணுச்சு. இருந்தாலும்… ஃபர்ஸ்ட்  டைம் இப்படி… ஃபர்ஸ்ட் நைட்ல… அதான்!” என்றவளுக்கும் அவள் கூறியதில் சிரிப்பு வந்து விட்டது.

 

“நான் மட்டும் என்ன ரெண்டு மூணு அட்டெம்ப்ட் பண்ணிட்டு வந்த மாதிரி…” என்று அவன் முணுமுணுக்க, அவன் வாயிலேயே வலிக்காமல் அடித்தவள், “முசோ, என்னோட சேர்ந்து சேர்ந்து ரொம்ப தான் வாயடிக்குறீங்க.” என்று சிணுங்கினாள்.

 

“இந்த அட்மாஸ்ஃபியர்… நீ இப்படி சிணுங்குறதெல்லாம் பார்த்தா என் மூடு மாறுது. சோ, சோஃபாக்கு வா, சீக்கிரம் பேசி முடிப்போம்.” என்று அவன் அவசரமாக கூற, அவன் கூறுவதை அப்படியே கேட்டு விட்டால் அவள் இல்லையே!

 

“நோ நோ, இவ்ளோ அழகா ரெடி பண்ணிட்டு, அதை அனுபவிக்காம இருக்குறதா?” என்றவள் வேகமாக கட்டிலில் சென்று அமர்ந்து அதிலிருந்த பூக்களை தடவிக் கொண்டிருக்க, ‘இன்னைக்கு ஒரு வழியாக்காம விட மாட்டா போல!’ என்று எண்ணியவன், கட்டிலின் மறுபக்கத்தில் சென்று அமர்ந்தான்.

 

“ஜீவி, நாம லைஃபை ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னாடி…” என்று ஆரம்பித்தவனை இடைவெட்டியவள், “உங்க எக்ஸை பத்தி பேசுறதுன்னா சொல்லிடுங்க, நான் தூங்கப் போறேன்.” என்றாள்.

 

“அட அதில்ல… என் பாஸ்ட்…” என்றவனை மீண்டும் நிறுத்தியவள், “உங்க பாஸ்ட்டை பத்தி பேசுறதுன்னா சொல்லிடுங்க, நான் தூங்கப் போறேன்.” என்று கூற, “அடியேய், என்னை பேச விடேன்.” என்று அலறி தான் விட்டான் அவன்.

 

“உங்க பாஸ்ட் லைஃப், எக்ஸ் லவர் பத்தி எல்லாம் போதும் போதுங்கிற அளவுக்கு அலசியாச்சு. சோ, இனி அதை பத்தி எதுவும் பேச வேண்டாம் தயா.” என்று அவள் கூற, அவள் சொல்வதும் சரியென்று பட்டதால், “சரி, வேற எதை பத்தி பேசலாம்?” என்றான் அவன்.

 

அவன் பார்வை அவளிடம் மையலாக வேறு கதை பேச, “பேசணுமா? அப்போ சரி, பேசிட்டே இருக்கலாம் மிஸ்டர். முசோ.” என்றாள் அவளும் சிரிப்புடன்.

 

அதில் அவளை இழுத்து தன்மீது போட்டுக் கொண்டவன், அவள் இதழை இரு விரல்களால் பிடித்து இழுத்து, “உன்னை பேச விட்டா தான, பேசிட்டே இருப்ப.” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் முணுமுணுத்தவன், ஒருவர் மூச்சு மற்றவரை தீண்டும்  நெருக்கத்தில் இருந்தான்.

 

அப்போது அவளோ முணுமுணுவென்று ஏதோ கூற, அவளின் இதழ்கள் அவன் வசமிருந்ததால், அவள் கூறுவதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

 

ஏதோ முக்கியமானதாக இருக்கும் என்று எண்ணி அவளை விடுவிக்க,  அவளோ, “ஏன் எனக்கு பதிலா நீங்க பேசப் போறீங்களா?” என்ற அதிமுக்கியமான கேள்வியை கேட்க, அவளுக்கு பதிலை பேச்சால் அல்லாமல் செயலால் காட்டினான் அவளின் கணவன்.

 

சிறிது நேரத்தில் அவளை விடுவித்தவன், “பேச்சு மட்டும் தான்! ஒரு முத்தத்துக்கே இந்த பாடு!” என்று சலித்துக் கொள்ள, “ஒரு முத்தம் மட்டும் கொடுத்துட்டு, இப்படி சலிச்சுக்குறீங்க!” என்று அவள் கூறினாள்.

 

அவள் இடையோடு இழுத்தவன், “முத்தம் மட்டும் வேண்டாம் மொத்தமா முடிச்சுடுவா?” என்று அதற்கும் அவனிடம் சம்மதம் வேண்டினான்.

 

அதில் நெஞ்சம் நிறைந்த பூரிப்புடன், “நான் மட்டும் இல்ல நீங்களும் வெறும் வாய்ப்பேச்சு மட்டும் தான்!” என்றவளை முடிக்க விடாமல் அவளை கொள்ளையிட்டுக் கொண்டான், அவளுக்கு மட்டுமேயான கள்வனாக!

 

கட்டாய திருமணம், நிற்க கூட நேரமில்லாமல் வெகு விரைவாக சென்ற ஒரு மாதம், அதில் ஏற்பட்ட அதிர்ச்சியான நிகழ்வுகள், அனைத்தும் சரியான பிறகான திருமண சடங்குகள் என்றே கழிந்த நேரத்தை ஈடுசெய்யும் விதமாக நிறுத்தி நிதானமாக, அவனும்  ரசித்து அவளையும் ரசிக்க வைத்து அவர்களுக்கே அவர்களுக்கான தருணங்களை அனுபவித்தனர் இருவரும்.

 

குளிரூட்டப்பட்ட அறையிலும் கூட வியர்த்து வழிந்திருக்க, விலகி படுக்க போனவளை அவனுக்குள் இழுத்துக் கொண்டவன், “இனி, உன்னை தனியா விடுற எண்ணம் இல்ல.” என்று அவன் இறுக்கிக் கொள்ள, அவன் தேகம் மெலிதாக நடுங்குவதை உணர்ந்தாள் அவள்.

 

அது, அவளை கடத்திய பாதிப்பு என்பதை உணர்ந்தவள், அவள் பங்கிற்கு அவனை அணைத்துக் கொண்டாள்.

 

சில நொடிகள் அப்படியே கழிய, ஆசுவாசத்துடன் இருந்தவன், நெஞ்சில் உணரப்பட்ட ஈரத்தில் திடுக்கிட்டு போனவனாக, அவளை அவனிலிருந்து விலக்கி, “ஹே ஜீவி, நான் எதுவும் ஹார்ஷா பிஹேவ் பண்ணிட்டேனா என்ன?” என்று பதற்றத்துடன் கேட்டான்.

 

அவனைப் பார்த்து சோபையாக சிரித்தவள், இல்லை என்று தலையசைக்க, கண்களில் கண்ணீரும் உதட்டில் சிரிப்பும் கொண்டு, ஆளை மயக்கும் பார்வை பார்க்கும் பாவையை கண்டு ஒருநொடி மயங்கி தடுமாறியவன், மறுநொடியே சுதாரித்து, “எதுக்கு அழுகுற ஜீவி? சொன்னா தான தெரியும்.” என்று வினவி அவளை பேச ஊக்கினான்.

 

“எனக்கு இது பிடிச்சிருக்கு தயா.” என்று தயக்கத்துடன் அவள் கூற, அவளின் வெளிப்படையான பேச்சில் அவனுக்கு தான் வெட்கம் வந்து தொலைத்தது.

 

முகம் சிவக்க அவளை நோக்கி குறும்பு புன்னகையுடன், “பிடிச்சா எதுக்கு அழுகுற? இன்னொரு ரவுண்டு போவோமா?” என்று கேட்க, “ச்சு, நான் அதை சொல்லல…” என்று சிணுங்கியவள், சிறு இடைவெளி விட்டு, “இதுவரை என்னை யாரும் இப்படி ஹக் பண்ணி படுத்தது இல்ல. தூங்கும்போது இவ்ளோ செக்யூர்ட்டா உணர்ந்தது இல்ல தயா.” என்றாள்.

 

அவள் கூறுவதை புரிந்து கொண்டவனுக்கும் மனது பாரமாகிப் போனது.

 

“நான் பொறந்தப்பவே அம்மா இறந்துட்டதால, அப்பா தான் என்னை ஃபுல்லா பார்த்துக்கிட்டாரு. என்னதான் நிறைய பாசம் இருந்தாலும், அதை இப்படி அவருக்கு காட்ட தெரியாது. இதெல்லாம் நான் ரொம்ப மிஸ் பண்ண விஷயங்கள் தயா.” என்று விரக்தியாக அவள் கூற, “இனி நீ எதையும் மிஸ் பண்ண மாட்ட ஜீவி.” என்று அவளை அணைத்து நெற்றியில் மென்மையாக இதழ் பதித்தான்.

 

அதில் அவளின் இதழ்களும் விரிய, “ஹ்ம்ம், இந்த ஃபோர்ஹெட் கிஸ்ஸும் பிடிச்சுருக்கு.” என்க, வரிசையாக அவளின் இமைகள், மூக்கு, கன்னம், தாடை என்று எல்லாவற்றிலும் முத்தம் பதித்து, அவளின் பிடித்தங்களை கூட்டினான் அவளின் பதியானவன்.

 

பின்னர் மெல்ல அவள் காது பக்கம் சென்றவன், அங்கும் இதழ் பதித்து, “எல்லாம் பிடிச்சதுன்னு சொன்ன. ‘அது’ மட்டும் பிடிச்சதா இல்லையான்னு சொல்லவே இல்ல. உனக்கு தெரியலன்னா ஒரு பிராப்ளமும் இல்ல. திரும்ப ஒருமுறை டெஸ்ட் பண்ணி பார்க்கலாம்.” என்று கிசுகிசுக்க, அவனை தள்ளி விட்டவள், “வரவர ரொம்ப நாட்டியாகிட்டே போறீங்க முசோ.” என்று செல்லமாக கண்டித்தாள்.

 

மீண்டும் அவளை தன்னிடம் இழுத்துக் கொண்டவன், “இன்னும் என்ன முசோ?” என்று கோபமாக கேட்க வேண்டியதை கூட கொஞ்சியபடி வினவ, “எப்பவும் எனக்கு முசோ தான்!” என்றபடியே அவளும் அவனின் ஆளுகைக்குள் வந்தாள்.

 

அவள் அவனின் ஜீவனாக, அவன் அவளின் கீதமானான்!

 

வெவ்வேறு பாதையில் சென்று கொண்டிருந்தவர்களை ஒற்றை புள்ளியில் விதி இணைந்திருக்க, சிறிது தாமதம் என்றாலும், ஒருவரையொருவர் சரியாக புரிந்து கொண்டு, அந்த ஒற்றை பாதையில் ஜோடியாக பயணிக்க ஆரம்பித்திருந்தனர் ஜீவகீதமாய்!

 

முற்றும்…

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 45

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
36
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. கதை அருமை. எதிர்பாராத திருமணம் தான் ஜீவி போல் மனைவி கிடைத்தால் வாழ்க்கை சந்தோஷம் தான். நட்பு செம.