
காதல் – 8
சுலோச்சனா அவ்வாறு கூறவும் தேவராஜ் முதன் முதலாக தன் மனைவியை கன்னத்தில் பளாெரென்று அறைந்தார் அதில் திடுக்கிட்ட சுலோச்சனா தேவராஜை பார்த்தார்……..
இனிமே இப்படி பேசினா கொன்னு போட்டுருவேன்….
அஸ்வதி அவ பாட்டுக்கு ஆசிரமத்தில சந்தோஷமா இருந்தா , எனக்கு குழந்தை வேனும் அப்படி இப்படின்னு நீதான் கேட்ட அதான் ஆசிரமத்துக்கு நம்ம ரெண்டு பேரும் போய் அஸ்வதிய கூட்டிட்டு வந்தோம் ஆனா இப்ப இவ்வளவு நாளா அவ இங்க நம்ம கூட இருந்துட்டு திரும்ப அங்க போய் விட்டா அவ எப்படி மனசு வருத்தப்படுவா அதெல்லாம் உனக்கு புரியுதா?
அதெல்லாம் எனக்கு தெரியாது , அவள எங்க இருந்து கூட்டிட்டு வந்தீங்களோ அங்கேயே போய் விட்டுட்டு வாங்க எனக்கு அவ வேணாம்…..
இப்ப நான் சொல்றத நல்லா கேட்டுக்கோ அஸ்வதி இந்த வீட்லதான் இருப்பா. அவள யாரும் எதுவும் சொல்லக்கூடாது அவ என்னோட பொண்ணு என்னோட சொத்து மேல அவளுக்கு முழு உரிமை இருக்கு , இந்த வீட்டிலயும் அவளுக்கு முழு உரிமை இருக்கு , இனி அவளை எதுவுமே நீ சொல்லக்கூடாது புரியுதா?
சுலோச்சனா எதுவும் பேசாமல் கோபமாக சென்றுவிட்டார்….
தேவராஜ் தலையில் கை வைத்தபடி அமர்ந்து கொண்டிருந்தார் அப்பொழுது ஒரு பிஞ்சு கை அவரின் கைகளை சுரண்டியது அவர் திரும்பி பார்த்தார் அஸ்வதி தான் நின்று கொண்டிருந்தாள்…..
அப்பா நீங்க என்ன என்னோட ஹோம்லயே கொண்டு போய் விட்டுட்டு வந்துருங்க அப்பா ….
அம்மாக்கு என்ன பிடிக்கல , நா அங்கேயே போயிடுறேன்ப்பா எனக்கு அங்க துவாயி இருக்கிறா அவ கூட நான் ஜாலியா இருந்துப்பேன் என்று அவள் கூறவும் தேவராஜ் அஸ்வதியின் கைகளைப் பிடித்துக் கொண்டு அழுதார்…….
அப்பா ஏன் அழுகுறீங்க?
என்று அஸ்வதி அவரின் கண்களை துடைத்து விட்டாள்….
அஸ்வதி இங்க உன்ன அம்மாவவும் பாட்டியும் ரொம்ப அடிச்சாங்களா?
இ….இல்ல
இல்லப்பா
அவங்க எதுக்கு அப்பா என்ன அடிக்க போறாங்க?
அஸ்வதி கண்ணா நீ எப்ப இருந்து பொய் பேச கத்துக்கிட்ட?
அப்பா உனக்கு பொய் சொல்லக்கூடாதுன்னு சொல்லிக் கொடுத்து இருக்கேன்ல?
ஏன் பொய் சொல்ற?
எனக்கு எல்லாம் தெரியும் நீ ஒன்னும் என்கிட்ட பொய் சொல்ல வேண்டாம்….
அப்பா லீலா பாட்டி என்னோட கால்ல சூடு வச்சுட்டாங்க எனக்கு எவ்வளவு எரிஞ்சது தெரியுமா அப்பா , எனக்கு இன்னும் அந்த புன்னு வலிக்குதுப்பா என்று அவள் அழுதாள்…..
சரிடா அஸ்வதிக்கண்ணா அழக்கூடாது கன்னத் தொடைங்க , ஸ்மைல் பண்ணுங்க அப்பா உனக்கு என்ன வாங்கிட்டு வந்து இருக்கேன்னு பாக்குறியா?
என்னப்பா எனக்கு வாங்கிட்டு வந்தீங்க சாக்லேட்டா?
டாய்சா?
அஸ்வதி இப்போ கண்ண மூடிக்கோ…
அவர் கூறவும் அஸ்வதி தன் இரு கைகளாலும் தன் இரு கண்களையும் பொத்திக் கொண்டாள்….
அஸ்வதி இப்ப கன்ணத் திறந்து பாரு என்று அவர் கூறவும் அஸ்வதி கண்களை திறந்து பார்த்தாள் , தேவராஜின் கைகளில் அழகிய பெரிய சிகப்பு கலர் டெடி பியர் இருந்தது , அதைப் பார்த்தவுடன் அஸ்வதிக்கு சந்தோஷம் தாளவில்லை அந்த டெடி பியரை பிடித்து விளையாடிக்
கொண்டிருந்தாள்…..
இப்படி தேவராஜ் மட்டும் தான் அந்த பெரிய வீட்டில் அவளிடம் பேசும் ஒரே ஜீவன் அவரும் பிசினஸ் விஷயமாக வெளியூர் சென்று விட்டால் அஸ்வதி தனி மரமாக தான் இருப்பாள்…..
லீலாவதிக்கு அஸ்வதி அந்த வீட்டில் இருப்பதே பிடிக்கவில்லை , அவளை எப்படியாவது அந்த வீட்டிலிருந்து துரத்தி விட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தார் அதற்கான சந்தர்ப்பத்தையும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார்…..
ஒரு நாள் அந்த சந்தர்ப்பமும் வந்தது….
அஸ்வதி தேவராஜ் வாங்கி கொடுத்த அந்த பெரிய டெடி பியர் வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள் அதை லீலாவதி பிடுங்கி எறிந்தார்…..
பாட்டி என்னோட டெடி பியர ஏன் தூக்கி போடுறீங்க?
பாருங்க அது எப்படி அழுக்காயிடுச்சு என்று அவள் அந்த டெடி பியரில் பட்ட தூசிகளை துடைத்து விட்டுக் கொண்டிருந்தாள்…..
அஸ்வதி துடைத்துக் கொண்டிருந்த டெடி பியரை மீண்டும் லீலாவதி பிடுங்கினார் ……
பாட்டி என்னோட டெடி பியர என்கிட்ட குடுங்க என்று அழுக ஆரம்பித்தாள்….
அடச்சீ வாய மூடு உன் மூஞ்சிக்கு இந்த அழகான டெடி பியர் கேக்குதோ?
இது எவ்வளவு காஸ்ட்லி தெரியுமா? இந்த காஸ்ட்லி டெடி பியர் வச்சு விளையாடுற தகுதி உனக்கு இருக்கா?
என்று அவளது டெடி பியரை கத்தியால் கிழித்தார் , லீலாவதி தன் டெடி பியரை கிழிக்க விடாமல் இருக்க அஸ்வதி டெடி பியரை அவரிடம் இருந்து பிடுங்கிக் கொண்டிருந்தாள் அப்பொழுது எதிர்பாரா விதமாக லீலாவதி கீழே விழுந்து விட்டார் சரியாக அவர் விழவும் சுலோச்சனா அங்கு வந்து விட்டார்…
அவர் அங்கு கண்ட காட்சியை பார்த்ததும் சுலோச்சனா என்ன நினைத்தார் என்றால் அஸ்வதி தான் தன் தாயாரை தள்ளி விட்டாள் என்று நினைத்துக் கொண்டாள் அதனால் அஸ்வதியை அவர் போட்டு அடிக்க ஆரம்பித்தார்…..
ஏய் எவ்வளவு தைரியம் இருந்தா என்னோட அம்மாவயே நீ கீழ தள்ளி விடுவ?
அவ்வளோ கொழுப்பு வந்துருச்சா உனக்கு?
உன்ன வைக்க வேண்டிய இடத்துல வைச்சிருந்தா இவ்வளவு தூரம் நடந்துருக்காது என்று சுலோச்சனா அஸ்வதி நடந்ததை கூறுவதை கேட்காமல் அவளை அடித்தார்…..
அஸ்வதி அடி தாங்க முடியாமல் தன்னுடைய ரூமிற்கு ஓடிப் போய் ஒளிந்து கொண்டாள்….
தேவராஜ் வீட்டில் இல்லாத நாட்களில் அஸ்வதியை சுலோச்சனாவும் லீலாவதியும் நன்றாக அடித்து கொடுமைப்படுத்தினர்……
இவ்வாறு அந்த வீட்டில் அஸ்வதியின் நாட்கள் கழிந்தது ……
அனந்தியும் பிறந்து விட்டாள் அஸ்வதியை அனந்தியை தொடவே விடமாட்டார்கள்….
அஸ்வதிக்கு தன் தங்கையுடன் விளையாட ரொம்ப ஆசை ஆனால் அவர்கள் இருவரும் அவளை அனந்தியை தொடக்கூடக்கூட விட மாட்டார்கள்…..
சுலோச்சனாவும் லீலாவதியும் அனந்தியிடம் அஸ்வதியை அடிக்க சொல்லி தான் கொடுப்பார்கள் , அனந்தியும் பாட்டியுடனும் அம்மாவுடனும் சேர்ந்து அஸ்வதியை வெறுக்க ஆரம்பித்தாள் அஸ்வதியை பார்த்தால் அனந்திக்கும் பிடிக்காமல் போனது…..
அந்த வீட்டில் அஸ்வதி நிஜமாகவே அனாதைப் போல தான் இருந்தாள் ….
அஸ்வதி பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நேரம் அது…
அவள் பொதுத் தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்தாள் அப்பொழுது லீலாவதி வேகமாக அஸ்வதியின் அறைக்குள் வந்தார் அவர் அவளின் அறையில் ஏதோ தேடிக்கொண்டிருந்தார்….
லீலாவதி நீண்ட நேரமாக அவளின் அறையில் ஏதோ தேடிக் கொண்டிருந்தார் அது அவருக்கு கிடைக்கவில்லை போல அதனால் அஸ்வதியை அவர் அழைத்தார்….
ஏய் அனாத நாயே இங்க வா என்று அவர் அவளை அழைத்தார்….
சொல்லுங்க….
என்னோட டைமண்ட் கம்மல் எங்கடி?
உங்களோட டைமண்ட் கம்மல் எனக்கு எப்படி தெரியும்?
நடிக்காதடி நீதான் திருடி வச்சிருப்ப, எனக்கு நல்லா தெரியும் எங்க வச்சிருக்க அந்த கம்மல?
சத்தியமா நா அந்த கம்மல எடுக்கல….
குப்பையில் போடு உன்னோட சத்தியத்தை எனக்கு என்னோட கம்மல் இப்ப வேணும்……
நா எடுக்கவே இல்ல அப்ப எப்படி எனக்கு தெரியும்?
நீ ஒழுங்கா கேட்டா சொல்ல மாட்ட என்ன என்று லீலாவதி அஸ்வதியை அடிக்க ஆரம்பித்தார் அதுவும் வெளியில் தெரியாத தொடை தோள்பட்டை போன்ற இடங்களில் வேகமாக தண்ணீர் பாட்டிலை வைத்து அடித்தார்……
போதும் வாங்க நா உங்களுக்கு தேடி எடுத்து தரேன் என்று அவள் லீலாவதியின் அறைக்குள் சென்றாள்…..
லீலாவதியின் அறையில் அஸ்வதி அவரின் கம்மலை தேடிக் கொண்டிருந்தாள்
அப்பொழுது….
லீலாவதி காணாமல் போய் அதை தேடியும் கிடைக்காமல் போக அதற்கு அஸ்வதி மேல் திருட்டுப்பட்டம் கட்டி அடித்த கம்மல் அவரின் தலையணையில் சிக்கி கொண்டு இருந்தது…..
இங்க பாருங்க இங்கதான் இருக்கு என்று அவள் அந்த கம்மலை எடுத்து கொடுத்தாள்….
இவ்வளவு நேரம் நான் இங்க ஒரு இடம் விடாம தேடினேன் எனக்கு கிடைக்கல ஆனா உனக்கு மட்டும் எப்படி கிடைச்சது நீயே கொண்டு வந்து வச்ச தானே?
நீங்க என்ன நம்புனா நம்புங்க நம்பாட்டி போங்க எனக்கு கவலை இல்லை உங்க கம்மல் கிடைச்சிடுச்சுல்ல என்ன விட்டுருங்க என்று அஸ்வதி அவளின் அறைக்கு சென்றாள்……
அஸ்வதி அவளின் அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டு அழுது தீர்த்தாள்…..
இப்படித்தான் டெய்லியும் நடக்கும், எனக்கு இது பழகிடுச்சு விஹான் விஹான்னா என்று அஸ்வதி அவளின் கடந்த கால கசப்பான நினைவுகளை அவர்களிடம் கூறி முடித்தாள்…..
உன்ன இவங்க இவ்வளோ கொடுமை படுத்துறாங்கல ஏன் நீ அந்த வீட்டுலயே இருக்க?
வேற எங்கயாவது போய் நிம்மதியா இருக்கலாம்ல?
எனக்கும் அந்த வீட்டுல இருக்க பிடிக்கல விஹான் , தேவராஜ் அப்பாவுக்காக தான் நா அந்த வீட்டுல இருக்குறேன் , தேவராஜ் அப்பா எம்மேல ரொம்ப பாசமா இருப்பாங்க அவங்களுக்காக தான் நான் இவ்வளவும் பொறுத்துக்கிட்டு இருக்கிறேன்…..
நீ எப்படி அந்த வீட்ல இவ்வளவு நாள் சமாளிச்ச?
எனக்கு அவங்க பேசுறது நடந்துக்குறது எதுவுமே பிடிக்காது சோ நா அதெல்லாம் கண்டுக்காம படிப்புல போகஸ் பண்ண ஆரம்பிச்சேன் நல்லா படிச்சேன் இப்ப ப்ரொபசர் ஆகிட்டேன் இப்ப நான் காலேஜ் போறதுனால வீட்ல அவ்வளவா இருக்க வேண்டிய அவசியமில்லை நைட் மட்டும்தான் வீட்டுக்கு வருவேன் அப்புறம் காலைல காலேஜ் போயிடுவேன் சண்டே ஒரு நாள் மட்டும் தான் வீட்ல இருப்பேன் அப்போ அந்த நாலும் சீக்கிரம் போயிரும் என்று அவள் சிரித்தாள்….
அஸ்வதி நீ ரொம்ப பாவம் எப்படி இவ்வளவு நடந்தும் நீ சிரிக்கிற?
எனக்கே தெரியல விஹான்னா, நா சிரிச்சு ரொம்ப நாளாச்சு உங்க ரெண்டு பேர பார்த்தவுடனேதான் எனக்கு கொஞ்சம் நல்லா சந்தோஷமா இருக்கு என்னோட கதையை கேக்க ரெண்டு பேரு இருக்காங்கன்னு நினைக்கிறப்போவே எனக்கு நிம்மதியா இருக்கு , அண்ட் இனி எனக்கு ஒரு கஷ்டம்னா தோள் சாஞ்சுக்க என்னோட ஃப்ரெண்ட் விஹானா அண்ட் விஹான் இருக்கிறாங்க சோ இனி என்ன வந்தாலும் பாத்துக்கலாம்ன்னு ஒரு நம்பிக்கை வந்துருக்கு என்று அவள் அவர்கள் இருவரையும் பார்த்து சிரித்தாள்….
விஹான்னா அஸ்வதியை கட்டி அணைத்துக் கொண்டாள்….
அஸ்வதி இனி நீ எதுக்கும் பயப்படாத உனக்காக நாங்க ரெண்டு பேரு இருப்போம் என்ன என்று விஹான்னா அஸ்வதியை பார்த்து கூறினாள்….
விஹான்னா உனக்கு ஒன்னு தெரியுமா ரொம்ப நாள் கழிச்சு என் மனசு ரொம்ப லேசா இருக்கு அதுக்கு நீங்க ரெண்டு பேரு தான் காரணம் என்று அஸ்வதி சிரித்தாள்…..
அஸ்வதி உங்க பாட்டி அந்த தாய்க்கிழவி இன்னும் உயிரோட தான் இருக்கா?
ஆமா அது நல்லா ஸ்ட்ராங்கா தான் இருக்குது…..
அந்த தாய்க்கிழவி மட்டும் என் கண்ணுல பட்டுசுன்னு வை அது மண்டைய அம்மியில வச்சி அரைச்சுப்புடுவேன் அரச்சு …..
விஹான்னா அவ்வாறு கூறவும் அஸ்வதி மற்றும் விஹான் நன்றாக சிரித்து விட்டார்கள்……
அஸ்வதி நன்றாக சிரித்தாள் அவள் அப்படி சிரித்ததில் விஹான் மேலும் விஹான்னா மேலும் மாறி மாறி சாய்ந்து கொண்டே சிரித்தாள் ஆனால் சரியாக அஸ்வதி விஹான் மேல் சாயவும் அதை அங்கு வந்த சுலோச்சனா பார்த்துவிட்டார்…..
ஏய் அஸ்வதி இங்கே வா என்று அவர் அழைக்கவும் கரண்ட் அடித்தது போல சடாரென்று அவள் எழுந்து நின்றாள்….
வாரேன் அம்மா என்று கூறி விட்டு விஹான் மற்றும் விஹான்னாவை பார்த்து கண்களாலேயே போய் வருகிறேன் என்று கூறி விட்டு ஓடினாள்…..
சுலோச்சனா கிச்சனில் நின்று கொண்டிருந்தார் அவர் அருகில் அனந்தியும் நின்று கொண்டிருந்தாள்…..
அஸ்வதி அங்கு வந்தாள்…..
அடுப்பை ஆன் செய்து அடுப்பில் தோசை கரண்டியை திருப்பி வைத்து சூடு படுத்தி கொண்டு இருந்தார்கள்….
அஸ்வதி அதை பார்த்ததும் அழுக ஆரம்பித்தாள்……
அவர்களின் கொடுமைகளில் இருந்து அவளை மீட்க அவளின் அவன் வருவானா?
தொடரும் …….
உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்……
❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அவள் கூறிய போதே அவளை ஆசிரமத்தில் கொண்டு விட்டு இருக்கலாம். வீட்டில் தான் இல்லாத நேரம் கொடுமைகள் நடக்கும் என்று தெரிந்தும் ஏன் கூடவே வைத்துக்கொண்டு இருக்க வேண்டும்.
படித்து நல்ல வேலையில் இருக்கும் ஒரு பெண் தைரியமாக இருக்க வேண்டாமா? இப்பொழுதும் பயந்து ஒடுங்கி இருக்க என்ன அவசியம்?
Oru sila urava thakka vachikka ippdi irukka vediyathaa iruku…
Enn panna paasam vachitaa
லீலாவதி என்ன பைத்தியமா … பிள்ளையை போட்டு இந்த டார்ச்சர் பண்ணியிருக்கு … சுலோ அவங்க பொண்ணு தான … அதான் இப்படி இருக்கு …
Haha aama..
Thank you for your valuable comments 😇