
அகிலை தன் வண்டியில் அழைத்துக் கொண்டு வசும்மா வீட்டுக்கு சென்றான்… இருவரும் வீட்டை அடைந்தனர்….
வீட்டின் உள் யாரும் இருப்பதாக தெரியவில்லை.. அகில் தான் “சித்தி சித்தி” என அழைத்தான்… கதவு உள் பக்கம் பூட்டி இருந்தது… அதி தான் வீட்டின் அழைப்பு மணி அமுத்தினான்….யாரோ வந்து கதவு திறக்கும் சத்தம் கேட்டது….
நிவேதா தான் கதவு திறந்தாள்… அவள் பார்த்தது அகிலை தூக்கிக் கொண்டு நிற்கும் அதியை தான்… அவன் அவள் வந்ததை பார்த்து அப்டியே நின்று விட்டான்… இவளும் அவனை பார்த்து நின்று விட்டாள்…. அகிலின் “சித்தி” என்னும் சத்தம் தான் இருவரையும் நடப்புக்கு கொண்டு வந்தது…
“உள்ள வாங்க” என அதியை கூப்பிட்டு விட்டு அகிலை தூக்கிக் கொண்டாள்.. “வசும்மா வசும்மா” என அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்….
அவரும் சமையல் அறையில் இருந்து வெளியே வந்தார்… அதியை பார்த்து “வாங்க தம்பி” என கூறி அவனுக்கு தண்ணீர் எடுத்து வர உள்ளே சென்று விட்டார்… நிவேதா அகிலுடன் ஐக்கியம் ஆகினாள்….
அதியும் அவளை தான் பார்த்துக் கொண்டு இருந்தான்… அவனின் பார்வையின் தாக்கத்தின் நிமிர்ந்து பார்த்தாள்…
ஆனால் அவள் நிமிர்ந்து பார்ப்பது தெரிந்து வேறு பக்கம் திரும்பிக் கொண்டான்..
“யாரோ பாத்த மாதிரி இருந்தது ஆனா யாருமே பாக்கலயே” என யோசித்துக் கொண்டு இருந்தாள்… அவளை யோசிக்க விடாமல் அகில் அவளின் கவனத்தை தன் பக்கம் திருப்பிக் கொண்டான் மீண்டும்…
அதற்குள் வசும்மா அவனுக்கு காபி கொண்டு வந்தார்…. “அது வந்து ம்மா அகில் ஒரே அடம் அவங்கள பாக்கணும்னு முரளி அண்ணா வேற வீட்டுல இல்லை… அது தான் நான் வந்தேன் இங்க வர… நாங்க எல்லாரும் சாயந்தரம் ஆறு மணி பக்கம் வரோம் ம்மா… அப்ப நான் கிளம்புறேன் ம்மா….” என்று கூறினான்…
“சரி ப்பா.. கொஞ்ச நேரம் இருந்துட்டு போ ப்பா…” என்று கூறினார்…
“இல்லை ம்மா எனக்கு அங்க வேல இருக்கு… அகில் ரொம்ப அழுதான் அது தான் கூட்டிட்டு வந்தேன்… நான் கிளம்புறேன் ம்மா… அகில் டாட்டா… வரேன்ங்க” என நிவேதாவிடமும் சொல்லி விட்டு கெளம்பி விட்டான்….
மாலை ஆறு மணி
அனைவரும் மாலை அதியின் வீட்டுக்கு வந்து இருந்தனர்….அதியின் வீட்டினருக்கு வசும்மா, நிதிஷ் ,பிரியா, நிவேதா என நால்வரையும் அறிமுகம் செய்து வைத்தனர் .. நிவேதாவை அறிமுகம் செய்து வைக்கும் பொழுது மாறனும் மீனாட்சியும் அதியை ஆராயும் பார்வை பார்த்தனர்… அவர்களின் பார்வை உணர்த்து அந்த பக்கம் இவன் பார்வை திருப்பவே இல்லை…
அவன் நடவடிக்கையே இருவருக்கும் இருக்கும் சந்தேகத்தை அதிகம் செய்தது… ஆனால் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தனர்… அம்மணி பாட்டி வசும்மா, நிதிஷ், பிரியா, நிவேதா நால்வரையும் அழைத்தார்… அவர்களும் கொஞ்ச நேரம் கழித்து வருகிறோம் என்று கூறி அவர்கள் வீட்டிற்கு சென்றனர்…
இரவு செய்ய வேண்டிய வாஸ்து பூஜைக்கு எல்லாம் தயார் செய்தனர்… இரவு பதினோரு மணிக்கு மேல் பூஜை ஆரம்பம் ஆனது…. வாஸ்து பூஜை முடிந்து அனைவரும் வசும்மா வீட்டிலே குளித்து முடித்து தயாராகி பிரம்ம முகூர்த்தம் என்று சொல்ல கூடிய மூன்றரைக்கு வீட்டின் கணபதி ஹோமம் முடித்து பால் காய்ச்சினர்…..
காலை எட்டு மணிக்கு அனைவரும் காலை உணவை உண்டு முடித்து பேசிக் கொண்டு இருந்தனர்…
அப்பொழுது ஷாழுவும் அகிலும் நிவேதாவிடம் வந்து “சித்தி சொக்கி சொக்கி (CHOKI CHOKI CHOCLATE ) தா அப்பயே தர சொன்ன ஆனா நீ தரல நீ பேட் சித்தி போ……”
அவர்கள் பேசியதை பார்த்து பிரியா நிவேதாவிடம்” பிராடு இன்னும் நீ சாப்டுட்டு தான் இருக்கியா உனக்கு யாரு வாங்கிட்டு வந்து குடுத்தா ???”
நிவேதா பிரியா கேட்டவுடன் திரு திரு என முழித்தாள் …. “அது அண்ணிமா பேக்ல இருந்திச்சி காலைல என்கூட தானு இருந்தாங்க ..அப்ப பாத்தாங்க ரெண்டு சொக்கி சொக்கி தான் இருந்திச்சி… அப்பயே கேட்டாங்க நான் தான் காலைல சாப்பிட்ட வாட்டி தரேன்னு சொன்னேன்” என்று தன் முகத்தை பாவமாக வைத்து சொன்னாள்…
அவள் அப்டி சொன்ன போது அவளின் பாவனையில் அனைவரும் சிரித்து விட்டனர்… அதி தான் அவளின் அந்த பாவனையில் உள்ளுக்குள் ரசித்து கொண்டும் வெளியே சிரித்து கொண்டும் இருந்தான் ….வசும்மா மற்றும் நிதிஷ் இருவரும் நிவேதாவின் இந்த சேட்டையை ரசித்துக் கொண்டு இருந்தனர்…
அவளுக்கு அதை நிதிஷ் தான் வாங்கி குடுத்தான்… ஆனால் அதை சொன்னால் இருவருக்கும் திட்டு விழும் என்பதால் நிவேதா மாத்தி சொல்லி விட்டாள்…
அவள் இரண்டு தான் இருக்கிறது என சொன்னதை கேட்டு ஷாலு “அத்தை நோ சித்தி நெறைய வெச்சி இருக்கா ஆனா டூ இருக்குனு பொய் சொல்றா பேட் சித்தி” என கூறினாள் அவளை தொடர்ந்து அகிலும் “ஆமா அத்தை சித்தி பேட் கேர்ள்” என கூறினான்
“அட பக்கீஸ் இப்டி போட்டு தந்துட்டீங்களே அவ இப்ப காதுல ரத்தம் வர வரைக்கும் பேசுவாளே” என தனக்குள் கூறிக் கொண்டாள் ….
பிரியாவும் நிவேதாவிடம் “உன்ன அத சாப்பிட வேணாம்னு சொல்லி இருக்கேன்ல ஏன் சாப்புட்ற… உனக்கு உன் அண்ணன் தானு வாங்கி தந்தது …”
“அவனும் ஐயோ கண்டுபிடிச்சிட்டளே” என்று நினைத்து முழித்தான் …. அவனை திரும்பி முறைத்து விட்டு அவனையும் அட்வைஸ் செய்து காதை ஓட்டை ஆக்கி விட்டாள் …
திட்டி விட்டு இருவரையும் முறைத்துக் கொண்டு இருந்தாள் ….அவள் முறைப்பதை பார்த்து “நிவேதாக்கு சாக்லேட் அதிகமா சாப்பிட்டா சளி பிடிச்சிக்கும் ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் ஸ்வீட் நிறைய சாப்பிட்டு சளி பிடிச்சது நேத்து தான் சரி ஆச்சி இன்னிக்கு இது சாப்பிட்டு திரும்பியும் வந்துடும்னு திட்டுறா” என வசும்மா அனைவரிடமும் கூறினார்…
சிவகாமி அம்மாவும் அவரிடம் “தோ மீனாட்சி இருக்காள அவளுக்கும் இந்த சொக்கி சொக்கி ரொம்ப பிடிக்கும் இவளுக்காகவே வார வாரம் பத்து சொக்கி சொக்கி இவங்க அப்பா வாங்கிட்டு போவாங்க ” என்று மீனாட்சியை குறை கூறினார் மீனாட்சியும் நிவேதாவும் ஒருவரை ஒருவர் சிரித்துக் கொண்டனர் …
மாலை வரை அரட்டை என பொழுதை போக்கினர்… மாலை ஆனதும் அம்மணி பாட்டி, மீனாட்சி , தாரா குட்டி , மற்றும் அஜய் என நால்வரை தவிர்த்து அனைவரும் மதுரைக்கு கிளம்பினர்….
கிளம்பும் போது மாறன் அதியிடம் “நீ சொன்ன பொண்ணு நிவேதா தானு தெரியுது…. நல்ல பொண்ணா தான் இருக்கு ஆனா எதுவும் பண்ணாத அந்த பொண்ணோட அண்ணா கிட்ட கேட்டேன் நாளைல இருந்து சிஏ கிளாஸ்க்கு போகுதாம் சோ உன் ரவுச அந்த பொண்ணுகிட்ட காட்டாத வீரா …அடுத்த வாரம் எல்லாரையும் வந்து கூட்டிட்டு போறேன் கிளம்புறேன்” என்று கூறி விடை பெற்றான்…..
அவன் கிளம்பும் முன் “மாம்ஸ்” என கூறினான்…. மாறனும் திரும்பி கையை விரித்தான் அவனை அணைத்துக் கொண்டு “மாம்ஸ நான் குட் பாயா இருக்கேன் நீ கவலை படாத என்னால அவளோட கனவு அழியாது” என்று கூறினான்….. அவனும் “சரி ஜாக்கிரதை அதி” என்று கூறி விடை பெற்றான்….
இந்த விடியல் நிவேதாவிற்கு அவளுடைய கனவை அடைய ஆரம்பம் ஆகும் விடியல் ஆகும்….. ஆம் இன்று முதல் சிஏ பயிற்சி செல்கிறாள் …. இப்போது ஸ்டடி ஹாலிடே அதனால் ஒன்பது மணி முதல் மூன்று மணி வரைக்கும் செல்வாள்…. ஆனால் கல்லூரி இருக்கும் போது மாலை ஐந்து மணி முதல் இரவு எட்டு மணி வரைக்கும் சிஏ பயிற்சி வகுப்புக்குச் செல்வாள் ….
நிவேதா ஐந்தரை மணிக்கு எழுந்து நடை பயிற்சிக்கு செல்ல வெளியே வந்தாள் …. அவள் நடை பயிற்சி செல்ல யாரும் அனுமதி அளிக்கவில்லை… ஆனால் நடை பயிற்சி செல்வது எனக்கு நன்றாக உள்ளது ஒரு அரை மணி நேரம் மட்டும் செல்கிறேன் என்று கூறி இன்று முதல் செல்கிறாள்… அவள் கதவை திறந்து வெளியே வரும் போது பக்கத்து வீட்டில் இருந்து அதியும் நடை பயிற்சி செய்ய வெளியே வந்தான் ….
இருவரும் காலை வணக்கத்தை தெரிவித்து விட்டு நடை பயிற்சி செய்ய கொஞ்சம் அருகில் இருக்கும் பூங்காவிற்கு சென்றனர்….
அதி நிவேதாவிடம் “இன்னிக்கு நீங்க சிஏ கோச்சிங் போறதா உங்க அண்ணா சொன்னாரு …ஆல் தி பெஸ்ட்” என்று கூறினான்
அவளும் “தேங்க்ஸ்” என்று கூறி விட்டு தாரா பாப்பாவைப் பற்றி கேட்கிறாள்
“தாராக்கு ஏழு மணி தான் எழுந்துக்குற டைம் … மிட் டைம்லயும் எழுந்துக்க மாட்ட”…என்று கூறி சிஏ பற்றி கேட்டான்… ” சிஏ பத்தி எனக்கு அவ்வளவா தெரியாது நீங்க சொல்லுங்க கேட்கலாம்” என்று கேட்டான்
(எனக்கு தெரிஞ்சது வெச்சி சிஏ பத்தி சொல்லி இருக்கேன் உங்களுக்கு யூஸ் ஆகலாம் கைஸ் )
சிஏ பன்னிரண்டாவது முடிச்சிட்டு டிரெக்டா பண்ணலாம் இல்லனா டிகிரி முடிச்சிட்டும் பண்ணலாம் …
பன்னிரண்டாவது முடிச்சிட்டு பௌன்டேசன் கோர்ஸ் பண்ணி பண்ணலாம்….. டிகிரி முடிச்சிட்டு பண்ணா பௌன்டேசன் பண்ண தேவ இல்ல…. இண்டர்மீடியேட் டிரெக்டா பண்ணலாம் ….
முதல்ல ரெஜிஸ்டர் பண்ணனும் அதுக்கு அப்பறம் தான் எக்ஸம் எழுத முடியும்…..
எக்ஸம் வரதுக்கு நாலு மாசம் முன்னாடியே ரெஜிஸ்டர் பண்ணி இருக்கணும்
பௌன்டேசன் கோர்ஸ்
பன்னிரண்டாவது முடிச்சிட்டு ஒரு கோச்சிங் கிளாஸ் போகணும் …. பௌன்டேசன் கோர்ஸ்ல மொத்தம் நாலு சப்ஜெக்ட் இருக்கு ….
1. பன்டமென்டல்ஸ் ஆப் அக்கவுண்டிங் (FUNDAMENTALS OF ACCOUNTING)
2. மெர்க்கன்டைல் லா (MERCANTILE LAWS)
3. ஜெனரல் எகனாமிக்ஸ் (GENERAL ECONOMICS)
4. குவாண்டேட்டிவ் ஆப்டிடியூட் (QUANTITATIVE APTITUDE)
நாலு பேப்பருக்கும் நூறு மார்க் அதுல ஒவ்வொரு பேப்பர்லயும் மினிமம் நாற்பது மார்க் எடுக்கணும்… நாலு பேப்பருக்கு நூத்தி அறுவது மார்க் எடுத்தா பாஸ் இல்லை …. ஓவர் ஆல் இருநூறு மார்க் எடுக்கணும் இதுக்கு மைனஸ் மார்க் 0.5 இருக்கு ….
இதுல ஒரு பேப்பர்ல பெயில் ஆனாலும் அரியர் மாதிரி கிளியர் பண்ண முடியாது … நாலு பேப்பரும் திரும்பியும் எழுதணும் இதுக்கு பீஸ் பே பண்ணனும்
எக்ஸாம் ஜூன் டிசம்பர் ரெண்டு மாசத்துல வரும் நமக்கு எதுல எழுதணும்னு தோணுதோ அதுல எழுதலாம்
பௌன்டேசன் கோர்ஸ் நாலு மாசம் முன்னாடியே ரெஜிஸ்டர் பண்ணி இருக்கணும்
இண்டர்மீடியேட் கோர்ஸ்
இதுக்கு எட்டு மாசம் முன்னாடியே ரெஜிஸ்டர் பண்ணி இருக்கணும்…. காலேஜ் முடிச்சிட்டு டிரெக்டா இண்டர்மீடியேட் கோர்ஸ் பண்ணலாம் இல்லனா பௌன்டேசன் கோர்ஸ் முடிச்சிட்டு பண்ணலாம்….
இதுல ரெண்டு குரூப் இருக்கு ….ரெண்டு குரூப்பையும் ஓட்டுக்கா கிளியர் பண்ணலாம் …. இல்லனா தனி தனியா கூட கிளியர் பண்ணலாம்
இதுல ஒரு குரூப் பண்ணிட்டா ரெஜிஸ்டர் பண்ணி இருக்க ஆடிட்டர் கிட்ட ரெண்டரை வருஷம் ட்ரைனிங் போகணும்…. ரெண்டு குரூப்பும் பண்ணிட்டா ஓரியன்டடேஷன் கிளாஸ் அட்டென்ட் பண்ணனும் ….. ஆடிட்டர் கிட்ட ட்ரைனிங் போகும் போது நமக்கு உதவி தொகை தருவாங்க …
பைனல் எக்ஸாம்
ஆடிட்டர் நம்ம திறமையை பாத்துட்டு செர்டிபிகேட் தருவாங்க… ரெண்டரை வருஷம் ட்ரைனிங் முடிச்சிட்டு ,இண்டர்மீடியேட் கோர்ஸ் முடிச்சிட்டு நாம பைனல் எக்ஸாம் எழுதலாம்….
இதுலயும் ரெண்டு குரூப் இருக்கு ரெண்டும் பாஸ் பண்ணிட்டா நாம ஆடிட்டரா ரெஜிஸ்டர் பண்ணிக்கலாம்
ஐசிஏஐ (ICAI) தான் ரெஜிஸ்டர் பண்ணனும்… அதுல ரெஜிஸ்டர் பண்ணி நமக்கு தேவையான புக்ஸ் வாங்கிக்கலாம்…. இதுக்கு கொஞ்சம் அமௌன்ட் செலவு ஆகும்…. எக்ஸாம் எழுத, ரெஜிஸ்டர் பண்ண , அப்பறம் புக்ஸ் வாங்க செலவு ஆகும் …..
நிவேதாவும் அதியிடம் கூறி முடித்தாள் …. இருவரும் நடை பயிற்சி முடித்து அவரவர் வீட்டிற்கு சென்றனர் ….
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
6
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.



சி ஏ பத்தி நானும் தெரிஞ்சுக்கிட்டேன் … பரவாயில்ல பேச ஆரம்பிச்சுட்டாங்க …