Loading

அத்தியாயம் – 7

நித்திலா தன் கையால் செய்த பாயாசத்தை அனைவருக்கும் பரிமாறினாள், அனைவரும் பருகிவிட்டு அவளை ஆஹா ஓஹோ  என்று பாராட்டி தள்ளினர், அன்னம் தன் கெத்தை விட்டுக்கொடுக்க கூடாது என்ற எண்ணத்தில் வாய் திறக்கவே இல்லை, விக்ராந்தும் மௌனமாகவே பருகினான்,…..

“என்னை விட்டுட்டு எல்லாரும் என்ன சாப்பிடுறீங்க, நெய் வாசம் என் ரூம் வரைக்கும் மூக்கை துளைக்கிது” என கேட்டுக்கொண்டே அப்போது தான் வந்து சேர்ந்தாள் இனியா….

“தடிமாடு இப்போ தான் வருது, இந்த நேரத்துக்கு காலேஜ் போய் படிச்சு என்னத்த சாதிக்க போகுதாம், இதால கட்டு கட்டா பணம் தான் வேஸ்டா போகுது” தன் மகளை வழக்கம் போல் வசை பாட ஆரம்பித்தார் சந்தான மூர்த்தி,….

“ஏன்’ப்பா,… நானா படிக்க போறேன்னு சொன்னேன், நான் தான் பிளஸ் டூ வோட படிப்பை முடிச்சிக்கிறேன்னு சொன்னேன்ல, நீங்க தான் சேர்த்து விட்டீங்க” தன் தந்தை திட்டியதற்கு சிறிது கூட வருத்தம் கொள்ளாமல், அதற்கு அழகாக பதில் வேறு சொன்னாள் இனியா,….

“எல்லாம் உன் அண்ணனுங்கல சொல்லணும், சொல்ல சொல்ல கேட்காம இந்த தெண்டத்துக்கு தெண்டமா பணத்தை கட்டி படிக்க வைக்கிறானுங்க” என்றார் சிடுசிடுப்பாய்,….

“சித்தப்பா,…. எப்போ பார்த்தாலும் ஏன் இதையே சொல்லிட்டு இருக்கீங்க, அவளும் படிச்சா தானே நாளைக்கு நம்ம கம்பெனியை கவனிச்சிக்க முடியும்,” என்றான் வித்தார்த்,…

“ஆமா ஆமா,… கம்பெனியை நஷ்டத்துல மூழ்கடிக்காம இருந்தா சரி தான்” சந்தானம் அழுத்துக் கொள்ள, “அப்பா.. இப்போ என்னை பத்தி இளக்காரமா பேசுற உங்க வாய், கூடிய சீக்கிரமே பாராட்டி பேசும், பேச வைப்பேன்” இனியா சொல்ல,…. “அப்படியே நடந்துட்டாலும்” என முணங்கி கொண்டார் சந்தானம்

அதனை கண்டுகொள்ளாத இனியா…. “அம்மா என்ன பார்த்துக்கிட்டே இருக்கீங்க, அந்த பாயாசத்தை ஊத்துங்க” தன் அன்னையிடம் சொல்ல,.. பாசமாக அவரும் மகளுக்கு பாயாசத்தையும், காலை உணவையும் பரிமாறினார்,…

“அண்ணி,… சூப்பர் எக்ஸல்லண்ட், செம எம்மியா இருக்கு” என நித்திலாவை பாராட்டியபடியே பாயாசத்தை ருசித்து பருகினாள் இனியா, அவளை கண்டு மெலிதாய் புன்னகைத்த  நித்திலாவின் பார்வை தற்செயலாக விக்ராந்தின் புறம் திரும்ப, அவனோ தட்டிலிருந்த உணவையும் சேர்த்து, பார்வையால் அவளையும் விழுங்கி கொண்டிருந்தான் விக்ராந்த்,…

அவன் பார்வையில் தடுமாறியவள், சட்டென்று வேறு புறம் திரும்பிக் கொண்டாள்,….

சாப்பிட அமர்ந்தவர்கள் அனைவரும் முடித்து விட்டு எழுந்து கொள்ள, விக்ராந்த் மட்டும் இன்னமும் தட்டில் உள்ளதையே கொறித்துக் கொண்டிருந்தான்,… சுமித்ரா தன் கணவனை அலுவலகத்திற்கு வழி அனுப்பி வைப்பதற்காக சென்று விட்டாள்,
லட்சுமணன், சந்தானம் கூட அலுவலகத்திற்க்கு  புறப்பட்டு விட்டனர், பாட்டி முற்றத்திற்கு சென்றுவிட, இனியா கல்லூரிக்கும், ஊர்மிளா சமயலறைக்கும் விரைந்து விட்டனர்…

கடைசியாக அன்னம் மட்டும் தன் இளைய மகனுடன் உணவருந்திக் கொண்டிருக்க, ‘அவன் ஏதோ பிளான் பண்ணுகிறான்’ என யூகித்த நித்திலா, அதனை கணித்து நழுவ போன நேரம்,….”புருஷன் சாப்பிடுற வரைக்கும் பொண்டாட்டி அவன் பக்கத்துலயே நிற்கணும், இது உனக்கு தெரியாம கூட இருக்கலாம், இப்போ தெரிஞ்சிக்கோ இளைய மருமகளே” தன் மாமியாரின் கண்டிப்பான சொல்லில், அதற்கு மேல் அங்கிருந்து நகர முடியாமல் நின்றுவிட்டாள்…..

சற்று நேரத்திற்க்கெல்லாம் அன்னமும் எழுந்து சென்றுவிட, விக்ராந்தும் நித்திலாவும் மட்டுமே அங்கு தனித்து விடபட்டனர்,….

தலை கவிழ்ந்திருந்தவள், மெதுவாக தலை உயர்த்தி அவனை பார்த்தாள், அவன் பார்வை முழுக்க அவள் மீது தான் இருந்தது……

‘எதுக்காக இப்படி முழுங்குற மாதிரி பார்க்கிறான், இப்போ என்ன நினைச்சு இப்படி பண்ணிக்கிட்டு இருக்கான்’ அவள் மனதில் அவனை அர்சித்துக்கொண்டே நிற்க, அவள் திட்டியதற்கு பலனாய் அவனுக்கு புரை ஏறி விட்டது……

‘அச்சோ,… ஒருத்தங்களை திட்டுனாளோ நினைச்சுக்கிட்டாளோ புரை ஏறும்னு சொல்லி கேள்வி பட்டிருக்கேன், இப்போ தான் நிஜத்துல பார்க்கிறேன்’ அவள் தனக்குள் நினைத்துக் கொண்டிருக்க, அவனோ விடாமல் இருமிக் கொண்டிருந்தான்,….

‘தண்ணியை எடுத்துக் குடிக்க வேண்டியது தானே’ அவள் அவனை சிறிதும் நெருங்காமல் தனக்குத்தானே சொல்லிக் கொண்டிருக்க, அவனோ விட்டால் செத்துப்போய் விடும் அளவிற்கு இருமினான்….

ஆபத்திற்க்கு பாவம் இல்லை என நினைத்தவள், மேஜையிலிருந்த தண்ணீர் நிரம்பியிருந்த டம்ளரை எடுத்து அவனிடம் நீட்டினாள்…. டம்ளரை வாங்கும் சாக்கில் டம்ளரோடு சேர்த்து அவளது கரத்தையும் பற்றினான் அவன்….

இதை சிறிதும் எதிர்பார்க்காதவள், தன் கையை உறுவமுயல, பாவம் அவளால் அது முடியாமல் போனது, அதற்கிடையில் அவனின் இருமலும் முற்றிலுமாய் குறைந்து போயிருந்தது,…

“எ… என்ன பண்ணுறீங்க, கையை விடுங்க” அவள் மெல்லிய குரலில் சொல்ல,….”விடுறதுக்காக பிடிக்கல” என்றவன், மறுக்கையால் அவள் கரம் பற்றிருந்த டம்ளரை மேஜை மீது வைத்து விட்டு, அவள் கரத்தை இன்னும் அழுத்தமாக பற்றினான்…

இருவரும் உணவுமேஜைக்கு எதிரெதிர் திசையில் நின்றனர்,… “ஒருத்தன் இங்க சாகுற அளவுக்கு இருமிக்கிட்டு இருக்கான், தண்ணியை எடுத்து தர உனக்கு அவ்வளவு நேரமா” அவளது கரத்தை விடுவிக்காமலேயே அவன் அதட்டுவது போல் கேட்க…”அது… உங்க பக்கத்தில தானே இருந்தது, நீங்களே எடுத்து குடிச்சிகிருவீங்கன்னு நினைச்சு தான்” என இழுத்து நிறுத்தினாள் நித்திலா….

“அப்போ நீ எதுக்கு இங்க நிக்கிற, எனக்கு தேவையானதை தேவையான நேரத்துல எடுத்து தரதுக்கு தானே” அவன் கூர்மையான பார்வையுடன் வினவ,… “அது.. வந்து,… மன்னிச்சிடுங்க, இனி நானே எடுத்து தரேன்” என்று சரணடைந்தாள், அவளுக்கு சரணடைவதை தவிர வேறு வழி இருக்கவில்லை,..

“எனக்கு தேவையானதை இனி நீ தான் செய்யணும், சாப்பாடு பரிமாறுறதுல இருந்து, நான் ஆபீஸ்க்கு போட்டுட்டு போற ட்ரஸ் வரைக்கும் நீ தான் எடுத்து தரணும்” என்று ஆர்டராக கூறியவன், ஒரு கணம் நிறுத்தி….”இப்போ நீ பண்ண தப்புக்கு உனக்கு பனிஷ்மெண்ட் தரணும் இல்லையா?” அவன் கேட்டதில் அவள் விழிகள் இரண்டும் விரிந்தது..

“பனிஷ்மெண்ட்டா எதுக்கு, இதெல்லாம் ஒரு தப்பா?” அவள் சோகமாக முகத்துடன் கேட்க,…”தப்பு தான்,” என்றான் அழுத்தமான குரலில்….

அவள் அவனை பாவமாக பார்க்க, அவனோ சிறிதும் இறங்காமல்,..
“ஓகே… வா உனக்கு ரூம்ல வச்சே பனிஷ்மெண்ட் தரேன், இங்கே வச்சு தரது சரியா இருக்காது” என்று சொல்ல, பதறியவளோ,… “இல்ல ப்லீஸ், என்னை விட்டுடுங்க, ஸாரி ரியல்லி வெரி ஸாரி, இனி இப்படி நடக்காது” என்றாள் பதட்டப்பட்ட குரலில்,….

“அப்படியெல்லாம் நான் விட்டுட மாட்டேன்” அவன் தன் முடிவில் உறுதியாக நிற்க, அந்த நேரம் அவன் பாக்கெட்டிலிருந்த போன் அலறியது, அவள் கரத்தை விடுவிக்காமலேயே அழைப்பை ஏற்று பேசியவன்,…

“ம்ம்ம்…. ஆன் தி வேல இருக்கேன்,”

……..

“ஓகே… டென் மினிஸ்ட்ல அங்க இருப்பேன்,”

…….

“வைடா,…. வரேன்” சலிப்புடன் போனை வைத்தவன், அவளை ஆழ்ந்து பார்த்து விட்டு… “ம்ம்… தப்பிச்சிட்ட, பட் இன்னைக்கு நைட் என்கிட்டருந்து தப்ப முடியாது” என கூறிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் விரைந்து விட்டான்,….

அவன் தன் கரத்தை விடுவித்து சென்று விட்டாலும், இன்னும் அவளின் கையை அவன் பற்றி கொண்டிருப்பது போலவே உணர்ந்தாள் நித்திலா, அத்தனை அழுத்தமாக இருந்தது அவனது பிடி, ‘நைட் என்ன செய்ய போறானோ’ என்ற கலக்கத்துடன் தான் அன்றைய நாள் முழுக்க திரிந்தாள்…

கே எம் க்ரூப்ஸ் ஆப் கம்பெனி….

சீறிப்பாய்ந்த சிறுத்தையாக வந்த அந்த கறுப்பு நிற காரில் இருந்து இறங்கிய விக்ராந்த், மின்னல் வேகத்தில், வெள்ளி நிறத்தினாலான, பெரிய எழுத்துக்களால் பொறிக்கப் பட்டிருந்த, “கே எம் க்ரூப் ஆப் கம்பெனி” என்ற பெயர் மிகவும் பிரகாசமாக மின்னிக் கொண்டிருந்த, அந்த பதினைந்து மாடிகளைக் கொண்ட கம்பீரமான கட்டிடத்தினுள் நுழைந்தான்,….

அவன் அழுத்தமான நடையின் சத்தத்தின் மூலமே, விக்ராத்தின் வருகையை அறிந்த ஊழியர்கள், தங்கள் காலை வணக்கத்தை மரியாதையோடு சொல்லினர், அனைவருக்கும் சிறு தலையசைப்பில் பதில் சொல்லியவன், தன் மிடுக்கான நடையுடன் தன் கேபினுக்குள் நுழைய, அங்கு அவனின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தது போல் வித்தார்த் டேபிள் மீது அமர்ந்து காலாட்டிக் கொண்டிருந்தான்,….

அவனை கண்டுகொள்ளாத விக்ராந்த், தன் சுழல் நாற்காலியில் சென்று அமர்ந்து கொண்டு, தன் லேப்டாப்பை உயிர்பித்தான்,……

“டேய்… இங்க ஒருத்தன் உனக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேனே, அதை கண்டுக்காம நீ பாட்டுக்கு லேப்பை பார்த்துட்டு இருக்க” டேபிளின் மீதிருந்து குதித்து இறங்கிய வித்தார்த், டேபிளின் பக்கம் இருந்த நாற்காலியில் அமர்ந்தபடி கேட்டான்,….

“என்ன… சொல்லு” தன் லேப்டாப்பின் மீதிருந்து பார்வையை எடுக்காமலேயே கேட்டான் விக்ராந்த்,….

“அந்த ஆர் வி கம்பெனி பிராஜக்ட் அது ஆல்மோஸ்ட் கம்ப்ளீட் டா, …………………………………………………………………………………………..” என ஆரம்பித்து இரண்டு நிமிடத்தில் அனைத்தையும் சொல்லி முடித்த வித்தார்த், தன் தம்பியிடமிருந்த எந்த வித பதிலும் வராமல் போனதில் அவனை கூர்மையாக நோக்கினான்,…. அவன் இன்னமும் லேப்டாப்பில் தான் பார்வையை பதித்திருந்தான், தான் சொன்னதை அவன் கேட்ட மாதிரியும் வித்தார்த்திக்கு தோன்றவில்லை, ஆதலால் அவன் அப்படி எதை பார்த்து கொண்டிருக்கிறான் என தெரிந்து கொள்ளும் நோக்கில், இருக்கையிலிருந்து எழுந்து அவன் லேப்டாப்பை பார்வையிட்டவனின் கண்கள் விரிந்து, பின்பு சுருங்கியது,…..

காரணம் அதிலிருந்தது நித்திலாவின் புகைப்படம்,…. ‘அடப்பாவி,… நான் இங்கே வாய் வலிக்க வலிக்க மூச்சு விடாம பேசிக்கிட்டு இருக்கேன், இவன் கூலா பொண்டாட்டி போட்டோவை சைட் அடிச்சிக்கிட்டு இருக்கான்’ என நொந்தவன்,…”ஹெலோ…… ஹெலோ பாஸ்” என அவன் முகத்திற்கு நேராக கை ஆட்ட,…”பச்” என அவனது கரத்தை தட்டி விட்டான் விக்ராந்த்,…

“டேய்,… என்னடா பண்ணிக்கிட்டு இருக்க” இப்போது வித்தார்த் காட்டமான குரலில் கேட்க,….”நான் என்ன பண்ணிக்கிட்டு இருக்கேன்னு தான், கொஞ்சம் கூட மேனஸ் இல்லாம பார்த்துடல்ல, அப்புறம் என்ன திருப்பி என் கிட்டேயே கேட்கிற” என்றான் அவன்….

வித்தார்த் பாவமாக விழிக்க,….”ஏன்டா,…. இப்படி பண்ணுறவன் வீட்லயே இருந்துக்க வேண்டியது தானே, பாட்டி கூட ஏன் மேரேஜ் ஆன அடுத்த நாளே போறேன்னு கேட்டாங்களே” வித்தார்த் கேட்க,….”பச்…. நான் என் பொண்டாட்டி கூட பேசிட்டு இருந்த போது, முக்கியமான பிராஜக்ட் பத்தி பேசணும், சீக்கிரம் கிளம்பி வான்னு கூப்பிட்டது யாரு” அவனை பார்க்காமலேயே வினவினான் விக்ராந்த்…

“ஆமாடா, நான் தான் கூப்பிட்டேன், நீ ஆஃபிஸ்க்கு வரேன்னு சொன்னதால தானே வர சொன்னேன், முன்னாடியே வரலனு சொல்லிருந்தா நான் ஏன்டா உன்னை கூப்பிட்டிருக்க போறேன், அதோட நீ உன் பொண்டாட்டி கிட்ட பேசிட்டு இருந்தனு எனக்கு எப்படிடா தெரியும்” என்றான் பாவமாக,…..

அவன் பதில் பேசாமல் லேப்டாப்பிலேயே கண்ணாக இருக்க,…. ‘கல்யாண முடிஞ்சி ஒரு நாள் தானே டா ஆகிருக்கு அதுக்குள்ள இப்படியா’ என நினைத்த வித்தார்த்….”ஏன்டா தம்பி,… பொண்ணு பார்க்க போன அன்னைக்கு அந்த பொண்ணு உனக்கு மேட்சிங் இல்ல, அந்த பொண்ணு மேல இஷ்டம் இல்லைனு என்னென்னவோ சொன்ன, இப்போ என்ன மொத்தமா விழுந்துட்ட போல” என கேலி சிரிப்புடன் கேட்டான் வித்தார்த்….

“நான் எங்கடா விழுந்தேன், அவ தான் என் கிட்ட வந்து விழுந்திருக்கா, வந்ததை எதுக்கு தள்ளி வைக்கணும், அதான் ருசி பார்க்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்” என்றான்,….

“எனக்கு புரியல” வித்தார்த் குழப்பான பார்வையை வீச,….”புரியாத வரைக்கும் நல்லது,…” என்ற தம்பியை நெற்றி சுருங்க பார்த்தான் வித்தார்த்….

இங்கு ஊர்மிளா, சுமித்ரா இருவருடனும் சேர்ந்து நித்திலாவும் சமையல் வேலையில் மூழ்கிருந்தாள், ‘இன்று மட்டுமாவது ஓய்வு எடுமா நாளையில் இருந்து எங்க கூட சேர்ந்து வேலை செய்யலாம்’ என அவர்கள் இருவரும் எவ்வளவு கூறியும், அதனை ஏற்காமல் அவர்களுக்கு உதவியாக சில பல வேலைகளை செய்து கொண்டிருந்தாள் நித்திலா,…. அதே நேரம் அவர்கள் வீட்டின் ஒவ்வொருவரை பற்றியும் ஓரளவு தெரிந்தும் கொண்டாள்,….

சுமித்ரா அவ்வீட்டின் ஒவ்வொரு இடத்தையும் நித்திலாவிற்க்கு சுற்றி காட்டினாள், அந்த வீட்டிலேயே அவளுக்கு மிகவும் பிடித்த இடம் என்றால் வீட்டின் மொட்டை மாடி தான்,… கீழே வீட்டை சுற்றி கார்டன் இருந்தாலும், மொட்டை மாடியில் வைத்திருக்கும் கார்டன் தான் அவளுக்கு மிகவும் பிடித்து போனது, அவ்விடத்தை பார்த்தபடியே சுமித்ராவிடம் பேசிக் கொண்டிருந்தாள் நித்திலா,….

“லன்ச்க்கு யாரும் வீட்டுக்கு சாப்பிட வர மாட்டாங்களாக்கா” மணி ஒன்றுக்கு மேலாகியும், சாப்பிட எவரும் வரவில்லையே என்பதை நினைத்து கேட்டாள் நித்திலா…

“இல்ல நித்திலா, பெரிய மாமாவுக்கும் சின்ன மாமாவுக்கும் ஆஃபிஸ்க்கே ட்ரைவர் அண்ணா சாப்பாடு கட்டி எடுத்துட்டு போயிடுவாங்க, உன் வீட்டுக்காருக்கும் என் வீட்டுக்காரக்கும் கூட அப்படி தான், சண்டே தான் மதிய சாப்பாட்டை வீட்ல எல்லாரும் ஒன்னா கூடி சாப்பிடுவாங்க, இல்லன்னா எப்பயாச்சும் வேலை கம்மியா இருக்க நேரத்துல யாராச்சும் ஒருத்தர் ரெண்டு பேர் வீட்டுக்கு வந்து சாப்பிடுவாங்க” என்றாள் சுமித்ரா,…..

அன்றைய மதிய உணவை தன் பாட்டி, அக்கா, அத்தைகளுடன் சேர்ந்தமர்ந்து சாப்பிட்டாள் நித்திலா,…. விக்ராந்த் அலுவலகம் சென்று விட்ட காரணத்தினால் அவ்வீட்டினருடன் மிகவும் சந்தோசமாகவே நேரத்தை கழித்த நித்திலாவின் சந்தோசத்தை கெடுக்கும் வகையில் பொழுது சாய்ந்து இரவும் வந்தது,….

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
10
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. புருஷன் சாப்பிடற வரைக்கும் பொண்டாட்டி பக்கத்துலயே நிற்கணுமா? இந்த கட்டுப்பாடு எல்லாம் உங்க மருமகள்களுக்கு மட்டும் தானா? உங்க மாமியாரோட மருமகளுக்கு இல்லையா அன்னபூர்ணிமா?

    பொண்டாட்டிக்கான எல்லா உரிமையையும் நீ எடுத்துப்ப சரி, அவளும் கணவனுக்கான எல்லா உரிமையும் எடுத்துக்கலாமா?

    வந்தத எதுக்கு விலக்கி வைக்கணும்னு நினைக்கிறியா? 😳 ரொம்ப ஸ்மார்ட்டா villanism செய்றான்.

  2. வில்லன் வேலையை காட்ட ஆரம்பிச்சுட்டான்