
நதி 6
இன்று (present)
“தீரா.! தீரா..!” என்ற தன் அன்னையின் அழைப்பில் தூக்கம் களைந்து எழுந்தமர்ந்தான் தீரேந்திரன்.
“இன்னக்கி உனக்கு லீவ் தானே தீரா?” கேட்டார் வினோதா.
“ஆமா மா, ஏன் கேக்குறீங்க.?”
“கேள்விலாம் கேக்காம, கிளம்பு இன்னக்கி உனக்குப் பொண்ணு பார்க்க போறோம்” எனச் சொல்லி அவன் முகத்தைப் பார்த்தார்.
“பொண்ணு தானே பார்க்க போறோம் அதுக்கு ஏன்மா, புடவைலாம் எடுத்து வச்சிகிட்டு இருக்க.?” அதிர்ந்தபடி கேட்டான் தீரா.
“பொண்ணுக்கு உன்ன பிடிச்சிட்டா, அப்படியே பூவும் வச்சிட்டு வந்திடலாம், இந்தாம மருமகளே, உன் ப்ராபர்ட்டிய நீயே வச்சுக்க இதுக்கு மேல என்னால மேய்க்க முடியாதுன்னு சொல்லி, அவ கையில உன்னை ஒப்படைச்சுருவேன், என் கடமை முடிஞ்சிரும்” அவர் அசால்டாய் சொல்லிவிட,
“என் மேல உனக்குப் பாசமே, இல்லையாமா.? கல்யாணம்ன்ற பேர்ல என்ன பாழும் கிணத்துல தள்ளி விடப் பாக்குறல்ல” என முகத்தைச் சோகமாய் வைத்தபடி நடித்த தீராவை பார்த்து,
“இந்த அக்ட்லாம் வேற யார்கிட்டாயவது வச்சுக்கடா தீரா, எத்தனை நாள் கல்யாணத்தைத் தள்ளி போடுவ? இந்த முறை நீ மாட்டுனடா. நல்ல ராங்கியா பார்த்து தான் தேடி புடிச்சிருக்கேன், அவ தான் உனக்குச் சரி” எனச் சொல்லிவிட்டு எழுந்தவரை பாரத்தவன்.
“சரி சரி ஒரு முடிவோட தான் இருக்க, பார்த்திட்டு வந்திருவோம்” எனத் தானும் தயாராகிச் சென்றான். தன்னுடைய காரில் அழைத்துச் சென்றவன், பெண் வீட்டு வாசலுக்கு வந்தவுடன்,
“ம்மா பொண்ணு நல்லா சமைக்கும் போலயே”
“ஏன்டா அப்படிக் கேக்குற?” புரியாது விழித்தார் வினோதா.
“பஜ்ஜி வாசனை இங்க வரைக்கும் வருதே”
“அவளுக்குச் சமைக்கவே தெரியாதுடா” எனச் சொல்லிவிட்டு அழைத்துச்சென்றார் வினோதா.
“சமைக்கத் தெரியாத பொண்ணா ஏன்மா பார்த்த?”
“நீ எதுக்குடா இருக்கச் சமைச்சு போடு, வர பொண்ணு தான் சமைக்கணுமா, துப்பாக்கி வச்சி ஆள சுட்டால் மட்டும் போதாதது, தோசை சட்டிய அடுப்புல வச்சு வட்டமா தோசை சுடுற ஆம்பளைங்களா தான் இப்போ இருக்குற பொண்ணுங்களுக்குப் பிடிக்குதாம், அதுக்குத் தான் அம்மா உனக்குச் சமையலே சொல்லிக் கொடுத்தேன், பொண்ணுக்கு சமையல் தெரியாதுன்னு சொன்னாங்க பக்குன்னு பிடிச்சுட்டேன் டா உனக்காக” என வினோதா நக்கலாய் சிரிக்க,
“அம்மா பெரிய சாதனை பண்ணி வச்சிருக்கமா,வகையா என்ன மாட்டி விடப் பாக்குறல வீட்டுக்குப் போய்ப் பேசிக்கிறேன்” என முகத்தைத் திருப்பிக்கொண்டான் தீரா.
பெண் வீட்டார் இவர்களின் வருகைக்காகக் காத்திருக்க, இருவரும் உள்ளே நுழைந்தனர், மரியாதைக்காக அனைவருக்கும் வணக்கம் சொல்லிவிட்டுச் சோபாவில் அமர, பெண்ணுடைய தாயை பார்த்து,
“பொண்ண வர சொல்லுங்க மா” வினோதா சொல்ல,
“இல்லை அவ தனியா பேசணும் சொல்லுறா, மாடியில காத்திட்டு இருக்கா, உங்க பையனை அனுப்பி வைக்கிறீங்களா?” தயங்கிய படி பெண்ணின் தாய் கேட்க, மறுக்காமல் மகனை அனுப்பி வைத்தார் வினோதா. தாயின் சொல்லை தட்டாத பிள்ளை போல் மாடிக்குச் சென்றான்.
“வெல்கம் மிஸ்டர் தீரேந்திரன்” வரவேற்றாள் சீதா.
“ஐ யெம் சீதா, ஐடில டெஸ்டரா இருக்கேன், மன்த்லி எய்ட்டி தௌஸ்ன்ட் எர்ன் பண்ணுறேன், அன்ட் யூ போலீஸ் ஆபிசர், அழகா இருக்கதாலா, தமிழ்நாட்டுப் பொண்ணுங்களுக்கு க்ரஷ் ஆகிட்டீங்க, சரி தானே” என அவள் படபடவெனப் பேச அமைதி காத்தான் தீரா.
“என்ன தீரேந்திரன் ரொம்பவே சைலண்ட் ஆனா ஆள் போல, தெட்ஸ் கூல், என் பேச்சுக்கு மறுபேச்சு பேசாதவங்கள தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்” எனச் சில்லாகித்தபடி சொன்னாள் அவள். மீண்டும் அவன் அமைதியாகவே நிற்க, மீண்டும் அவளே தொடர்ந்தாள்.
“ஓகே நான் பாயிண்டுக்கு வந்தறேன், பொண்ணு பாக்குறதுன்னு சொன்னதும் ட்ரெடிஷ்னலா இருக்கும்னு நினைச்சு வந்திருப்பீங்க, பட் நான் ரொம்பவே மார்டன், எல்லாமே மார்டனா தான் யோசிப்பேன். எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு ஓகே, போட்டோல விட நேர்ல அழகா தான் இருக்க” அவள் சொல்லி விட, அதே சமயம் அவனுடைய செல்போன் இசைந்தது,
“ம்ம் சொல்லுங்க”
“தம்பி நான் கோபாலன், அகரநதியோட அப்பா பேசுறேன், கொஞ்சம் வீட்டுக்கு வாங்களேன்” என அவர் அழைக்க,
“பத்து நிமிஷத்துல வர்றேன்” எனச் சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான்.
“பை தி வே மிஸ் சீதா, இந்தக் கல்யாணத்துல எனக்கு இஸ்டம் இல்லை, உங்க கேரக்டர் பிடிக்கலைன்னு நினைச்சிறாதீங்க, பிகாஸ் நான் வீட்ல இருந்து கிளம்பும் போதே, நோ சொல்லணும்னு நினைச்சிட்டு தான் வந்தேன், நான் பேசுறதுக்கு முன்னாடி நீங்களே பேச ஆரம்பச்சிட்டீங்க, நீங்க மார்டன்னு சொன்னீங்க, சோ யூ மே அன்டர்ஸ்டண்ட் மை பாயிண்ட்” அவன் தேங்காய் உடைத்தது போல் விசயத்தைச் சொல்லி முடித்தான்.
“ஏன் மிஸ்டர் யாரையாவது லவ் பண்ணுறீங்களா.? விருப்பம் இல்லாமல் பொண்ணு பார்க்க ஏன் வந்தீங்க, அழகா இருக்கீங்கன்னு தீமிரோ, உயரம் சிக்ஸ் பாயிண்ட் டூ, விரைப்பான மீசை, நாலு பொண்ணுங்க நிண்ணு பார்த்துட்டு போதேன்னு அழகான திமிரு, இதெல்லாம் இருந்தால், தேவலோக ரதியே வந்து நின்னாலும், வேண்டாம்னு தான் சொல்ல தோணும்” அவன் முகத்தைப் பார்த்து நேரடியாய் கேட்டாள் சீதா.
“ஓகே கூல் சீதா, திஸ் இஸ் மை ஃபைனல் டெஸிசன் தென் யுவர் விஷ், நான் நோ தான் அம்மாகிட்ட சொல்லப் போறேன், எங்க அம்மாகாகத் தான் பொண்ணு பார்க்க வந்தேன்” எனச் சொல்லிவிட்டுப் படபடவெனப் படிகளில் இறங்கியவன் தன் தாயை பார்த்து.
“அம்மா! கேஸ் விசயமா வெளிய போகணும், நீங்க வாங்க உங்களை ட்ராப் பண்ணிறேன்” எனத் தீரா சொல்ல, பதறியபடி எழுந்து நின்ற வினோதா.
“டேய் தீரா, என்னாச்சு.? பொண்ணு ஓகே தானாடா.?”
“ம்மா அவங்க நம்ம வீட்டுக்குச் செட் ஆவாங்க நான் தான் அவங்களுக்குச் செட் ஆக மாட்டேன்” எனச் சொன்னவன் கோபமாய்த் திரும்பி “வர்றீங்களா ஆட்டோல வீட்டுக்கு போறீங்களா?” எனக் கேட்டு விட, அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுவிட்டு காரின் முன்னிருக்கையில் கோபமாய் வந்து அமர்ந்தார் வினோதா.
“என்னடா உன் மனசுல நினைச்சிட்டு இருக்க.? தேடி அலைஞ்சு ஒரு பொண்ண பார்த்தா பிடிக்கலைன்னு சொல்லிட்டு வந்திருக்க” எனக் கோபமாய்ச் சாடினார் வினோதா.
“ம்மா இப்போதைக்குக் கல்யாண பேச்சை எடுக்காத மா, நான் இன்னும் வளரணும் கல்யாணத்துக்கு என்ன அவசியம் இப்போ.?” வாகனத்தை இயக்கியபடி கேட்டான் அவன்.
“அதான் நெடு நெடுன்னு பனைமரம் மாதிரி வளர்ந்திருக்கியே போதாதா.? இதுக்கு மேல வளர்ந்து வானத்தையா தொடப்போற.?” கோப முகத்தைக் காட்டினார் மகனுக்கு.
“சரி சரி அதெல்லாம், அப்பறமா பேசிக்கலாம், நான் இப்போ கேஸ் விசயமா போகணும் தெரு முக்குல இறக்கி விடவா.?”
“இது ஒன்னும் உன் காவல் வாகனம் இல்லை, உடனே இறங்குறதுக்கு நானும் உன் கூடத் தான் வருவேன்” வினோதா சொல்ல,
“ம்மா அந்தப் பொண்ணு கேஸ் விசயமா போறேன் மா, அங்க நீ எதுக்குமா?”
“ஓ அந்தப் போட்டோல காமிச்சியே அந்தப் பொண்ணா? அவளை பிடிச்சதால தான் சீதாவ பிடிக்கலைன்னு சொல்லிட்டியா டா.? அப்போ சரி கண்டிப்பா வருவேன்?” எனப் பிடிவாதமாய் நின்றார் வினோதா.
“ம்மா.? ப்ளீஸ், கொஞ்சம் அமைதியா வர்றீயா” அவன் கெஞ்சலாய் கேட்க,
“நான் பாரத்த பொண்ண வேண்டாம்னு சொன்னல, அதுக்குத் தண்டனை தான் இது, நீ பார்த்த பொண்ணுக்கு சமைக்க தெரியுமாடா..?”
“ஆனாலும் நீ ரொம்ப பண்ணுறமா, போலீஸ்காரனுக்கே தண்டனையா.? சரி நடக்கட்டும்”
“போலீஸ்காரன் அம்மாடா” என இல்லாத காலரை தூக்கி விட, சில மணி நேர பயணத்தில் அகரநதி வீட்டுக்கு இருவரும் வந்திருந்தனர்.
“பொண்ணு வீடு நல்லா இருக்குல தீரா” எனப் பேசியபடி கண்களைச் சுழல விட்டவரின் கண்களுக்கு அவர்கள் முன் வீட்டு தோட்டமே இதமான மனநிலையை தர,
“தீரா இங்க பாரேன், எல்லாப் பூச்செடியும் வச்சிருக்காங்க பாருடா”
“ம்மா வெளியவே நில்லு வந்தறேன்” எனச் சொல்லிவிட்டு அவன் உள்ளே சென்று விட, பூந்தோட்டத்தைப் பார்த்த சந்தோசத்தில் வினோதாவின் மனம் அங்கேயே தேங்கி நின்றது, வண்ண வண்ண பூக்கள், தரை முழுக்கப் படர்ந்து கிடந்த சிறய வகை ரோஜா பூக்கள், பூத்து குலுங்கிய செம்பருத்தி பூக்கள், அதில் தான் எத்தனை வண்ணங்கள் லயித்துக்கொண்டு பார்த்திருந்தவரின் மனதில் இப்படி அழகாய் தோட்டத்தைப் பராமரிக்கும் ஆளை பார்க்க தோன்றியது,பட்டென வீட்டிற்குள் நுழைந்தார் வினோதா.
வீட்டின் வரவேற்பரையில் கண்ணீருடன் நின்றிருந்தார் கோபாலன், அவர் அருகே வசந்தியும் அழுதுக்கொண்டிருக்க, தீராவின் கைகளில் டைரி அடைக்கலமாய் இருந்தது, சூழ்நிலையைப் புரிந்துக்கொண்ட வினோதா.
“என்ன பிரச்சனை தீரா?” அமைதியாய் கேட்டார் வினோதா.
“உன்னை யாருமா உள்ள வரச் சொன்னது.?” கடுகடுத்தான் தீரா.
“என்னை இந்த டைரிய ஓப்பன் பண்ணணுமா.? அதான் முழிச்சிட்டு இருக்கியா?” அவர் கிசுகிசுக்க, அதைக் கேட்டு மூவரும் வினோதா பக்கம் திரும்பி பார்த்தார்கள்.
“இதை உங்களால திறக்க முடியுமா.?” கோபாலன் வியப்பில் கேட்டார்.
“ஏன் முடியாது.? இதுக்கூடவே ஒரு செயினோட கீ கொடுத்திருப்பாங்களே, அது எங்க.?” என வினோதா கேட்க, அப்போது தான் கோபாலனுக்கு நினைவு வந்தது, மகள் கழுத்தில் போட்டிருந்த செயின்.
விரைந்து மகள் இருக்கும் அறைக்குச் சென்றவர், சுய நினைவின்றி விழி மூடி கிடக்கும் தன் மகளைப் பார்த்தார், அவரை தொடர்ந்து மூவரும் வந்துவிட, அவள் கழுத்தில் தொங்கி கொண்டிருந்த செயினிலிருந்து சாவி போன்று இருந்த டாலரை பார்த்து அதைக் கழற்றி தீரனிடம் கொடுத்தார் கோபாலன்,
டைரியில் சாவி நுழைக்கும் துளையில் விட்டு டைரியை திறந்தான் தீரா, சடக் என்ற சத்தத்துடன் திறந்தது டைரி,ஒரு வித இசையும் மெலிதாய் அனைவரையும் தீண்டியது.
“தீராநதி..!” என்று வர்ணம் தீட்டிய ஓவியம் அவனை வரவேற்க திகைத்து போய் நின்றான் தீரா, அடுத்தப் பக்கத்தைப் புரட்ட அதில். அவளின் முத்து போன்ற எழுத்துக்கள், அதில் அவள் எழுதியதோடு, தூரிகையாய் தீட்டிய ஓவியம் அவனை மேலும் கவர்திழுத்தது. அவள் தன் எண்ணம் முழுவதையும் அதில் நிரப்பி வைத்திருந்தாள்.
ஓர் இளைஞன் கொட்டும் மழையைப் பொருட்படுத்தாது, கையை நீட்டி மழையை ரசித்துக்கொண்டிருந்தபடி நனைய, மறுதிசையிலிருந்த சாலையில் ஸ்கூட்டியில் நின்ற பெண் அந்த இளைஞனை ரசிக்கும்படி நின்ற காட்சியைத் தத்ரூபமாய் வரைந்திருந்தவள், சில எழுத்துகளையும் அதில் எழுதியிருந்தாள், அதைப் படிக்கலானாள் தீரா.
மழையென்றால் என்னவென்று கேட்கும் கோடைக்காலம்,ஆனால் அன்று வழக்கத்திற்கு மாறாக மழைக்கொட்டிக் கொண்டிருந்தது, அதன் இனிமையை ரசித்தபடி சென்னையின் தார்சாலையில் சென்றுக் கொண்டிருந்தேன், அனைவரும் மழையைக் கண்டு பயந்து ஒதுங்கி நின்ற சமயம், அதே சாலையின் எதிர்புறத்தில் அவனும் மழைக்காதலியை ரசித்துக்கொண்டிருந்தான், என்னை போலேவே ரசனை உள்ளவன் போல,அவன் முகம் எனக்கு மிகவும் பரீட்சையமான முகம் தான், அவனொரு காவலன், காக்கி சட்டை என்றாலே பிடிக்காத எனக்குள்ளும் கள்வனாய் புகுந்துவிட்டான் என்னுடைய காவலன்,அவன் முகத்திலே தெரிந்தது எதையோ சாதித்துவிட்ட சந்தோசமும், உற்சாகமும்.
அவன் கண்ணில் தெரிந்த உற்சாகமோ என்னவோ, எனக்குள்ளும் ஒட்டிக்கொண்டது ஆக்ஸிலேட்டரை திருகினேன், சறுக்கிக்கொண்டே அவனைப் பார்த்தபடி விழுந்தேன், என் வண்டி எங்கோ கிடக்க, சந்தோசம் விரவிக் கிடந்த அவன் முகத்தில், பதற்றம் ஒட்டிக்கொண்டது, அவன் விரைந்து ஓடி வந்து, விழுந்த என்னைத் தூக்கி நிறுத்தினான், அவனால் என் கண்களை மட்டுமே பார்த்திருக்க முடியும்.
ஆனால் நான் அவனை அவனருகே நின்றபடி ஒட்டுமொத்தமாய் முழுவதுமாய் அவனையே ரசித்தேன். அதை அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை, அவன் தூக்கி நிறுத்திய வண்டியை எடுத்துப் புறப்பட்ட நொடி சொன்னான்.
“ஏய் பொண்ணே பார்த்து போ” என்று சொன்னான், நீ மட்டும் இனிமையானவன் இல்லை உன் குரலும் இனிமையானது தான் தீரா. உன் மென்மையான குரல் என் செவிகளை தீண்டிய தருணம், நான் காதலில் விழுந்தேனா.? இல்லை உன்னைப் பார்த்தவுடன் உன்னில் நுழைந்தேனா.? தெரியவில்லை, நீ என் மனதில் அச்சாரமிட்ட அழகான தருணம் அதுவே. அதை ஓவியமாகவும் தீட்டி இருக்கிறேன் என் தீரா.
ஆயிரம் பெண்களின் கண்கள் உன்னைச் சுற்றினாலும், உன்னைக் காதலால் நெருங்கும் சக்தி எனக்கு மட்டுமே உள்ளது தீரா! இந்த நதியுடன் இணைவாயா தீரா? தீராநதி ஆவோமா? என் தீரா! என அவன் படித்து முடிக்க,
விழி ழூடி படுத்துக்கொண்டிருந்த அகரநதியின் கண்களில் நிற்காமால் நீர் வழிய, அடுத்தப் பக்கத்தைப் புரட்டாமல் அகரநதியை பார்த்திருந்தான் தீரா. சயநினைவின்றிக் கிடந்தவளின் விழிகளில் தானாய் நீர் வழிந்ததே, அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கண்டவுடன் காதலில் விழுந்தவளின் விழி நீரே சொல்லிவிட்டது, அவள் காதலின் ஆழத்தை.
தேடலின் விளிம்பில்
பேதை பொண்ணவள்.!
விழி வழி நுழைந்த
காதலோ அவள் அருகிலே!
உயிருள்ள உடலாய் இருந்து
என்ன பயன்..?
என்னுயிரானவன் எதிரே,
காதலின் சாட்சியாய்
என் விழி நீர்,
உன் உயிர் சேருமோ தீரா?
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


வினோமா ரொம்ப வினோதமானவங்களா இருக்காங்களே.
சமைக்க தெரியாத பொண்ணா இருந்தா உடனே பிடிச்சு போட்டுடுவாங்களா? Property transfer process வேற 🤣🤣
நான் பார்த்த பொண்ணை பிடிக்கலேனு சொன்னதானே அப்போ உன்னை பிடிச்சு இழுக்குற பொண்ணை பார்க்க நானும் கூட வருவேன்னு அடம்பிடிச்சு கூட போய் காவல்காரனுக்கே தண்டனை தராங்களே.
மருமகளை பார்க்க மகன் கூடவே வந்து டைரி திறவுகோலையும் எடுத்து கொடுத்துட்டாங்க.
தீராநதி ஆகுமா? அவளது எழுத்துக்கள் தனக்கானவை என்று தீராவிற்கு தெரிய வருமா?
கவிதைகள் அருமை 👏🏼👏🏼❤️
என்ன டக்குனு முடிஞ்சு போச்சு அத்தியாயம் … ஒருவழியா தீரா காதலை தெரிஞ்சுகிட்டான் … அடுத்து என்னென்ன நடக்குமோ