Loading

காலை விடியல் அனைவருக்கும் நன்றாக விடித்தது..

வசும்மா வீட்டில்…

வசும்மா தன் வழக்கமான நேரம் ஆறு மணிக்கு எழுந்தார்.. தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வெளியே வந்தார்…

முதலில் நிவேதாவின் அறைக்குச் சென்று பாத்தார்.. அங்கு அவள்  இரவு சாப்பிட்ட மாத்திரை உபயத்தால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.. அவளின் தலை கோதிக்கொடுத்து அவள் அருகில் அமர்ந்துக் கொண்டார்….

அரை மணி நேரம் கழித்து பிரியாவும் கண் திறந்தாள்…..

தன் அருகில் தன்னை அணைத்துக் கொண்டு குழந்தை போல் உறங்கும் கணவனைக் கண் இமைக்காமல் பார்த்தாள்… நிதிஷின் நெற்றியில் முத்தம் குடுத்து அவனிடம் இருந்து பிரிய முயன்றாள்.. அதில் உறக்கம் கலைந்து தன்னிடம் இருந்து பிரிய முயலும் தன் சரிபாதியை இன்னும் இறுக்கி அணைத்தான்..

“அச்சோ மாமா நேரம் ஆச்சி விடு… அத்தம்மா எழுந்து இருப்பாங்க.. போய் வாசல் வேற கூட்டணும்… விடு என்னை “….

“பாப்பு நான் தூக்கத்துல இருக்க அப்ப ஒன்னு குடுத்தல அத குடு நான் விடுறேன்..”

“நீ தூங்கிட்டு தானு இருந்த எப்படி தெரிஞ்சது.. பிராடு மாமா அப்பனா நீ தூங்கலையா..”

“தூங்கிட்டு தான் இருந்தேன் ஆனா பீல் ஆச்சி குடு” என்று தன் கன்னத்தைக் காண்பித்தான்…

“அச்சோ மாமா நோ… விடு என்னை ” என கூறி விலக முயற்சித்தாள்…

“நோ பாப்பு உம்மா குடுத்தா விடுறேன்… இல்ல உன்ன விட மாட்டேன்… இப்டியே இருக்கலாம் நீ குடுக்குற வர ” என்று கூறி திரும்பியும் தூங்க கண்கள் மூடினான்…

“ஐயோ உன்னோட பெரிய இம்சை மாமா.. ஏன் இப்டி பண்ற நீ ” என்று முத்தம் குடுக்க ஒத்துக்கொண்டள்…

பிரியா கன்னத்தில் முத்தம் குடுக்க அவன் அருகில் வரும்போது தன் முகத்தைத் திருப்பி உதட்டைக் காண்பித்தான்… அவள் முத்தம் மாறி  பதிந்தது… அதில் அதிர்ந்து அவள் தன் முட்டை கண்களை இன்னும் அதிகமாக விரித்தாள் ….அதில் சொக்கி மீண்டும் முத்தமிட்டான்…

அவனிடம் இருந்து விலகி அவன் மார்பிலே அடித்து… “பிராடு மாமா…” என்று கூறி அவனை முறைத்துக் கொண்டே கழிவறை சென்றாள்….

தன்னை சுத்தம் படுத்திக்கொண்டு… வேறு உடை மாற்றி.. வெளியே வரும் போது முறைத்து கொண்டே வந்தாள்….

தன்னை தயார் செய்துகொண்டு அவனை முறைத்துக்கொண்டே வெளியே சென்றுவிட்டாள்…

நிதிஷ் சிரித்துக்கொண்டே குளிக்க சென்று விட்டான்….

பிரியா சென்று வாசல் கூட்டி தண்ணீர் தெளித்து கோலமிட்டாள்… அதன் பிறகு தோட்டத்தில் பூத்த மலர்களைப் பறித்து சாமி அறைக்கு சென்று பூஜை செய்து குங்குமம் இட்டுக்கொண்டே சமையலறை சென்றாள்.. அங்கு பாத்திரம் கழுவும் பெண் பிரியா மலர் பறிக்கும் போதே வந்து விட்டார்..அவர் பாத்திரங்களை கழுவிக் கொண்டு இருந்தார்…

 வீட்டை சுத்தம் செய்ய பாத்திரம் கழுவ என வீட்டில் ஒருவரை வேலைக்கு அமர்த்தி இருந்தனர்.. அவர் காலை மாலை என இருவேளை வந்து தன் வேலையை முடித்துக் கொண்டு சென்றுவிடுவார்…

“அக்கா இன்னும்  அத்தம்மா வரலையா..”

“இல்ல கண்ணு இன்னும் அம்மா வரல…”

“சரிக்கா” என்று கூறி அனைவரும் காபி போட்டு பிளாஸ்கில் வைத்து விட்டு தனக்கும் வசும்மாக்கும் மட்டும் எடுத்து கொண்டு வசும்மா அறைக்கு சென்றாள்….. அங்கு அவர் இல்லாது இருக்க நிவி அறைக்கு சென்று பார்த்தாள்..

அங்கு நிவேதாவை தன் மடிக்கு மாற்றி அவளின் தலையை கோதிக்கொண்டு இருந்தார்.. அதை பார்த்து சிரித்துக் கொண்டே அவருக்கு காபி கொடுத்து அவளும் குடித்தாள்..  அதற்குள் நிதிஸும் காபி எடுத்துக் கொண்டு நிவியின் அறைக்கு வந்து விட்டான்…

நிவேதாவும் அந்த நேரம் எழுந்து விட்டாள்… அவள் அனைவருக்கும் காலை வணக்கம் கூறி விட்டு குளிக்க சென்று விட்டாள்…அவள் வருவதற்குள் காபி எடுத்து கொண்டு பிரியா வந்து விட்டாள்… நிவேதாவும் பத்து நிமிடத்தில் குளித்துவிட்டு வந்துவிட்டாள்….

அவளுக்கு காபி கொடுத்து விட்டு வசும்மாவும் பிரியாவும் காலை உணவு தயார் செய்ய சென்று விட்டனர்.. நிதிஷ் அந்த அறையில் தன் இருந்தான்.. நிவேதா எதுவும் பேசாமல் நிதிஷின் தோளில் சாய்ந்து கொண்டாள்… அவனும் அவளின் தலையை கோதிக்கொடுத்தான்…

அந்த அறையில் சிறிது நேரம் அமைதியே நிலவியது… அதை நிவேதாவே கலைத்தாள்…

“ண்ணா நான் கிளாஸ் போறேன்.. இனிமேயாச்சும் பேசுவியா.. நிஜமா அடுத்த சண்டேல இருந்து கிளாஸ் போறேன்… நீ பாரு… ஆனா இனிமே என்கூட பேசு ண்ணா…நீ பேசாம இருக்குறது கஷ்டமா இருக்கு ண்ணா.. ப்ளீஸ் பேசேன்…”

“நீ கிளாஸ் போலன்னு தான் எனக்கு கோவம் டா.. நீ போறல.. அடுத்த வாரமே நான் ஏற்பாடு பண்றேன்…. நீ எதுக்கும் பயப்படாத கூடாது.. இனிமே எதுவும் மறைக்க கூடாது… மனசுகுள்ள எதுவும் போட்டு அழுத்திக்க கூடாது சரியா…”

“ஓகே ண்ணா “என்று கூறி “அண்ணா வா  வெளிய போலாம்” அவனை அழைத்து கொண்டு சமையலறை சென்றாள்…

வேலைசெய்பவர் ஏற்கனவே சென்று இருக்க இவர்கள் மட்டும் தான்….

பேசிக்கொண்டே சமையல் முடித்து சாப்பிட ஆரம்பித்தனர்….

இங்கு ஹோட்டலில்

அதிவீரபாண்டியன் ஆறு முப்பது மணிக்கு எழுந்தான்… உடற்பயிற்சி செய்ய முடியாமல் ஹோட்டலில் இருக்கும் நீச்சல் குளத்திற்கு சென்று அரை மணி நேரம் நீச்சல் அடித்து கொண்டு இருந்தான்…… பிறகு குளித்து கொஞ்ச நேரம் வீட்டிற்கு அழைத்து பேசிக் கொண்டு இருந்தான்…

சிறிது நேரம் இன்றய செய்தித்தாள் படித்து கொண்டு இருந்தான்…

காலை எட்டு மணிக்கு முரளி அழைத்தான் அவனுக்கு…. “அதி வீட்டுக்கு வந்துடு… இங்க காலைல சாப்பிட்டு வீடு பாக்க போகலாம்..”

“ஓகே ண்ணா பத்து நிமிசத்துல வந்துறேன்…. “என்று கூறி முரளியின் வீட்டிற்கு சென்றான்…

முரளி வீட்டில்…

“வா அதி… ரெண்டு வீடு பாத்து வெச்சி இருக்கேன் ப்பா.. எது பிடிச்சி இருக்கோ அத முடிச்சிடலாம்..”

“சரி ண்ணா.. ஆனா மாமா ரெண்டுல ஒன்னு பிடிச்சி இருக்குனு சொன்னாரு…  எந்த வீடு பிடிச்சி இருக்குனு சொன்னாரோ அந்த வீடே முடிச்சிடலாம்….”

“உனக்கு எது ஓகேவோ அத பாக்கலாம்.. இப்ப சாப்பிடலாம்… அபு எல்லாம் ரெடியா….”

“எல்லாம் ரெடிங்க வாங்க ரெண்டு பேரும் சாப்பிடலாம்…. ” என்று கூறி அனைத்தையும் எடுத்து வைத்தாள்….

“அண்ணா குட்டிஸ் ரெண்டு பேரும் எங்க.. நேத்தும் பாக்கல.. இப்பயும் காணோம்….”

“இல்ல இங்க ரூம்ல இருகாங்க.. நில்லு கூபிட்றேன்…. ஷாலும்மா.. அகில்.. வாங்க யாரு வந்து இருகாங்க பாருங்க.. ஹாய் சொல்லுங்க அங்கிளுக்கு….”

“அண்ணா நோ அங்கிள்லாம் வேணாம்… சித்தப்பா கூப்பிடட்டும்…..” என்று கூறி…. “ஹாய் குட்டிஸ்” என்று கூறி தான் வாங்கி வந்த சாக்லேட்களை அவர்களிடம் நீட்டினான்….

குட்டிஸ் இருவரும் தன் தந்தையை பார்த்தனர்…. முரளி அவர்களிடம் “வாங்கிக்கோங்க ரெண்டு பேரும் சித்தப்பா தான்…. ” என்று கூறினான்…

குட்டிஸ் இருவரும் அதியிடம் இருந்து சாக்லேட்களை வாங்கினார்…. அடுத்து அனைவரும் சாப்பிட அமர்ந்தனர்….

சாப்பிட்டு முடித்து அனைவரும் வீட்டை பாக்க கிளம்பினர்…..

“நாம பாக்க போற வீடு பக்கத்துல தான் தெரிஞ்சவங்க வீடு இருக்கு அதுனால அவங்கள அங்க விட்டுட்டு நாம வீடு பாக்க போகலாம் அதி…..”

“ஓகே ண்ணா…. எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல போகலாம் ண்ணா….அண்ணா நான் வேணும்னா அகில என் வண்டில கூட்டிட்டு வரட்டா…”

“இதுல என இருக்கு கூட்டிட்டு வா.. என் வண்டி பின்னாடியே வா அதி பத்து நிமிசத்துல போய்டலாம்…”

“ஓகே ண்ணா…” என்று கூறி முரளி வண்டியின் பின்னால் அகிலுடன் தன் ராயல் என்பீல்டை விட்டான்….

பத்து நிமிட பயணத்தில்…. அந்த வீடு வந்தது….

“அதி இது தான் வீடு… இந்த வீட்ல இருக்குறவங்க ஆஸ்திரேலியால செட்டில் ஆக போறாங்க.. அதுனால இந்த வீட விக்குறாங்க.. மாறன் இந்த வீட்ட தான் முடிக்க சொன்னான்… இந்த வீட உங்கிட்ட காட்டி நீ ஓகேனு சொன்னா ரெண்டு நாள்ல வீட்ட ரெஜிஸ்டர் பண்ண சொல்லிட்டான்… உனக்கு ஓகேன்னா பாரு… பக்கத்து வீடு தெரிஞ்சவங்க வீடு சாவியும் அங்க தான் இருக்கு.. நீ வரியா…”

“இல்ல ண்ணா நான் வரல இங்க தோட்டம் இருக்குது போல பாத்துட்டு இருக்கேன்.. நீங்க போய்ட்டு வாங்க…”

“அகில் வா போலாம்…. நோ ப்பா நான் சித்தா கூட கார்டன் பாக்குறேன் நீங்க போங்க…”

“டேய் அகில் நிவேதா சித்தியை பாக்கலாம் வா… “என்று அபர்ணா கூறினாள்

“அய்ய் சித்தியா… நான் வரேன்.. ஆனா  சித்தா வரணும்…” என்று அடம்பிடிட்டான்…

இங்கு அதிவீரனும் நிவேதா என்ற பேரைக் கேட்டு அவளாக இருக்குமோ நாம வரலன்னு சொல்லிட்டோமே… என்ன பண்ணலாம் என்று யோசித்து கொண்டு இருந்தான்..

“இவனை கூட்டிட்டு வாங்க பாப்பா அங்க ஓடிட்டா.. நான் அங்க போறேன்.. தம்பியும் அகிலையும் கூட்டிட்டு வாங்க… “என்று கூறி அபர்ணா பக்கத்து வீட்டுக்கு சென்றாள்..

“டேய் சத்தம் போடாத… அடம்பிடிக்காம வா டா..” என்று கூறினான் முரளி..

“இல்ல இல்ல சித்தா வரணும்..”என்று அழுது அடம்பிடித்தான்….

“இவனால… அதி அது தெரிஞ்சவங்க வீடு தான்.. வா  எதுவும் சொல்ல மாட்டாங்க.. இவன் வாய திறந்தா மூடவே மாட்டான்… ரொம்ப நல்லவங்க அவங்க வா….”

“அது ண்ணா எனக்கு ஒரு மாதிரி இருக்கு.. தெரியாதவங்க வீட்டுக்கு எப்படி வரது…..”

(அய்யோ டா நடிப்பு… வீட்டுக்குள்ள வர மாட்டோம்னு சொல்லிட்டோமே எப்படி போறதுன்னு யோசிச்சிட்டு.. இப்ப உலக மகா நடிப்பா இருக்கே)

அவன் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே பக்கத்து வீட்டு ஆள் வெளிய வந்தார்….

“முரளி மாம்ஸ் என்ன வெளியவே நிக்குறிங்க உள்ள வாங்க.. டேய் அகிலு வா டா உள்ள போலாம்… பாஸ் நீங்களும் வாங்க..  உங்க நேம் என்ன பாஸ்.. என் நேம் நிதிஷ் குமார்… உள்ள வாங்க தயங்காம…”  என்று கூறி மூவரையும் உள்ளே அழைத்தான்….

“ஹாய் பாஸ் என் நேம் அதிவீரபாண்டியன்…” என்று கூறி நிதிஷ் உடன் கை குளிக்கினான்… பிறகு அவனுடன் நிதிஷ் வீட்டுக்கு சென்றான்..

உள்ளே

 “ம்மா நிவி எங்க… ” என்று வசும்மாவிடம் கேட்டாள் அபர்ணா…

“ரெண்டு பேரும் பேசிட்டு தான் இருகாங்க நில்லு டா அவங்கள வர சொல்றேன்…” என்று கூறி எழுந்தார் வசும்மா…

“ம்மா இருங்க நானே போய் பாக்குறேன்…” என்று கூறி அவர்கள் இருக்கும் அறைக்கு சென்றாள் தன் மகள் விஷாலினியுடன்….

“உள்ள வாங்க மாம்ஸ்… உள்ள வாங்க பாஸ்… டேய் பெரிய மனுஷா வா டா…..”

“வா முரளி..  வா ப்பா” என்று அதிவீரனையும் வரவேற்றார் வசும்மா….

“வசும்மா இது அதிவீரபாண்டியன்.. என்  பிரண்டோட மச்சான்… இங்க ஏஎஸ்பியா  ப்ரோமஷன் அண்ட் ட்ரான்ஸபெரோட மதுரைல இருந்து வந்து இருக்கான்…..

தம்பி இது வசுந்தத்ரா ம்மா… ராமலிங்கம் ஐயா தான் அறிமுகம் பண்ணி வெச்சாங்க…. எப்போ நாங்க சேலம் வந்தோமோ அப்ப இருந்து அம்மா தான் ஹெல்ப் பண்ணிட்டு இருகாங்க.. ரொம்ப நல்லா பாத்துக்குறாங்க இப்ப வரைக்கும்…”

“என்ன முரளி இது… வாங்க வந்து முதல உட்காருங்க…  நான் போய் குடிக்க எடுத்துட்டு வரேன்…”

அதற்குள் “சித்தி” என்று கத்திக் கொண்டே நிவேதாவை போய் அணைத்துக் கொண்டான் குட்டி அகில்…

இப்போது அனைவரின் பார்வையும் நிவேதா மேல் தான்.. ஆனால் அவள் யாரையும் காணாது அகிலை கொஞ்ச தொடங்கினாள்…

“அகில் ஏன் நீ ஷாலு கூட சித்திய பாக்க வரல…சித்தி வேணாமா குட்டிக்கு..”

“நோ சித்தி… சித்தி வேணும் அகிலுக்கு…. ஆனா சித்தா  டூர் டூர் கூட்டிட்டு வந்தார்” என்று இவனே வாயில் டூர் என ஓட்டிக் காட்டினான்.. அனைவரும் சிரித்தனர்… அப்போது தான் அனைவரையும் பார்த்தாள்…

“வாங்க மாமா..” என முரளியை வரவேற்று விட்டு… பக்கத்தில் இருக்கும் அதியை பாத்து அப்டியே நின்று விட்டாள்….

அப்போது தான் கீழே இறங்கி வந்த பிரியா இவள் அப்டியே நிற்பதை பாத்து யார பாத்து இந்த ஏஞ்சல் இப்டி நிக்குறா என்று தனக்குள்ளே பேசிக் கொண்டு பார்த்தாள்… அவள் அதியை பார்க்காமல் முரளியை மட்டும் தான் பார்த்தாள்…

 அவளும் முரளியை பார்த்து “வாங்க அண்ணா” என வரவேற்று விட்டு பிறகு தான் அதியை பார்த்தாள்…  பார்த்தவுடன் “ஹாய் ப்ரோ” என்று கூறி”நீங்க எங்க இங்க ப்ரோ ..” என்று அதியிடம் கேட்டாள்

“ஹாய் மா இது உன் வீடா எதிர்பார்க்கவே  இல்ல ம்மா…பக்கத்து வீட்ட பாக்க வந்து இருக்கேன்மா அது ஓகேன்னா அத வாங்கலாம்னு இருக்கேன் மா” என்று பிரியாவிடம் பேசிக் கொண்டு இருந்தான்

 ஆனால்..இவர்களுக்கு முன்னாடியே தெரியுமா என அனைவரும் பார்த்து நின்றனர்…..

“வெயிட் வெயிட் பாப்பு… உனக்கு பாஸ ஆல்ரெடி தெரியுமா….???” என்று கேட்டான்…

எப்படி தெரியும்னு நாம அடுத்த எபில பாக்கலாம்… !!!!

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
7
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. இதென்னடா புது கதை பிரியாக்கு அதிய தெரியுமா