Loading

அழகியே 6

 

 

 

செழியனும் தேவ்வும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைக்கு சென்றிருந்தனர். வேதா அந்த வீட்டைச் சுற்றிபார்க்க, வீடு அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. வீட்டிற்கு பின்புறம் வந்தவளோ அங்கிருந்த செடி பூக்களின் அழகில் வியந்து, அங்கே இருந்த திண்டில் அப்படியே அமர்ந்து ரசித்தவள், வருடும் காற்று இதமாய் இருக்க அப்படியே தலை சாய்த்தவள் உறங்கி விட்டாள்.

 

 

தேவ் வீட்டிற்கு வரும் வழியெல்லாம் செழியனை திட்டிக்கொண்டே வந்தான். “அந்த செயின் நீ சின்ன வயசுல இருந்து சேர்த்து வச்ச காசுல வாங்குனதுடா.. எப்போவும் அதை கழட்டமாட்டேன் அது இதுனு வசனம் பேசுன. இப்போ அதையே வித்திருக்க நான் ஒருத்தன் இருக்கறது உனக்கு மறந்து போயிடுதுல அடிக்கடி” என்று திட்ட, அவனோ ஒரு முறை ஆழமாக அவனை பார்த்தவன்,

 

 

“வீட்டுல இருந்து வரும்போதே வாலட், ஏடிஎம் எல்லாத்தையும் குடுத்துட்டு வந்தாச்சு. இந்த போன் நீ எனக்கு ப்ரெசென்ட் பண்ணது. இத மட்டும்தான் கைல எடுத்துட்டு வந்தேன். இப்போ நிலைமைக்கு ஒரு ரூபா கூட கைல இல்லை. நீயும் எனக்காக எவ்ளோ செய்வ. நேத்து தாலி வாங்குனதுக்கு எப்படியும் 25000 ஆகிருக்கும்ல” என்று கேட்க,

 

 

அவனோ, “அவ்ளோலாம் இல்லை ஜஸ்ட் 22000 தான்” என்று கூற, அதில் சிரித்தவன், “ட்ரெஸ் மத்த திங்ஸ்லாம் சேர்ந்து வந்துருக்கும்தானே. உன்கிட்ட அதுக்கு மேல கேட்க எனக்கு மனசு வரலடா. இது நானா தேடிகிட்டதுதானே. அதுவும் இது ஒரு ஜஸ்ட் செயின். அவசரத்துக்கு தேவைப்படாத பொருள் எதுக்கு நம்மகிட்ட” என்று கூறியவனுக்கு அந்த செயினை கழட்ட மனமில்லைதான். அது தனக்குதான் என்று முடிவெடுத்து விட்டால் ஒரு சிறு துரும்பானாலும் அத்தனை நேசிப்பான் அதனை.

 

 

இருவரும் பேசிக்கொண்டே வீட்டுக்கு வர, வீடு ஒருக்களித்துதான் சாத்தியிருந்தது. அப்போது அங்கு வந்த பெரியவரோ, “தம்பி ரெண்டு ரூம்லயும் ஃபேன் இருக்குது. அத கழட்டவேணாம். அது இருக்கட்டும். நீங்களும் புதுசா வாங்க வேண்டாம். அப்படியே வீட்டுக்கு ஸ்டோர் ரூம்ல இருக்குற எல்லா பர்னிச்சர் பொருளையும் கொண்டாந்து போட சொல்றேன் ராசா. உபயோகப்படுத்திக்கோங்க எல்லாமே புதுசுதான். இந்த வீட்டுக்கு புள்ளைங்க வந்தா தங்குவாங்கன்னு புதுசா வாங்கிபோட்டேன். அவங்க இனிமேல் இங்க வரமாட்டாங்க. அங்க கிடந்தது கழிஞ்சு போறதுக்கு நீங்க பயன்படுத்துங்க. கொஞ்ச நேரத்துல வந்து பசங்க எடுத்து வச்சிருவாங்க” என்று கூறினார்.

 

 

செழியனோ, “அச்சோ தாத்தா அதெல்லாம் வேணாம் இருக்கட்டும்” என்று கூற, அங்கு வந்த பாட்டியோ, “ஏன் ராசா வேண்டாங்குற, எல்லாம் புது பொருளுகதான், ஸ்டோர் ரூமுல கிடந்தது கரையான் அரிக்குறதுக்கு பதிலா நீங்க பொழங்குனா எங்களுக்கு சந்தோசம்தான். உங்களையும் எங்க புள்ளைகளதான் நாங்க பார்க்குறோம்” என்று கூறினார்.

 

 

செழியன் வேறு வழியின்றி தலையாட்ட, அடுத்த நிமிடமே ஆட்கள் வந்து அனைத்து பொருட்களையும் அடுக்கி வைத்து விட்டு செல்ல, அதை பார்த்த செழியனுக்கு அவை ஸ்டோர் ரூமில் வைக்கப்படிருந்த பொருட்கள் அல்ல என்பதும், தற்போதுதான் அனைத்து கடையில் தருவிக்கப்பட்டு உள்ளது என்பது ஏசி பாக்ஸில் இருந்த டேகில் தெரிந்து போக, அவர்களை கேட்கவும் சங்கடமாக இருக்க, அவனின் சந்தேகம் தேவின் மேல் திரும்பியது.

 

 

அவனோ, “மச்சி எல்லாம் புதுசு மாறி இருக்கு, இவங்க ஸ்டோர் ரூமுல இருந்தா பொருளுன்னு சொல்ராங்க. ஒன்னும் புரியல. ஆனா இதெல்லாம் இப்போதைக்கு தேவையான பொருள்தான். இருக்கட்டும் விடு நம்மகிட்ட பணம் இருக்கும்போது குடுத்துறலாம்” என்று கூற, செழியனுக்கு இவனுமில்லை அப்போது இது யார் வேலை என குழம்பி போனது மனம்.

 

 

இதை பார்த்து கொண்டிருந்தவன் வேதா அங்கில்லை என்று உணர வெகு நேரம் எடுக்க, முதலில் தேவ் தான், “ஆமா தங்கச்சி எங்க ஆளையே காணோம்” என்று கேட்க, செழியனுக்கோ பதட்டமாக இருந்தது. வீட்டில் அவனை காணவில்லை என்றதும் அவளை இங்கு விட்டுப்போனது தவறோ என்று தவித்தான்.

 

 

தேவ்தான் வீட்டுக்குப் பின் ஓடிச்சென்று பார்க்க, அங்கு உறங்கியிருந்தவளை பார்த்ததும் செழியனை அழைக்க, அவனுக்கு அப்போதுதான் உயிரே வந்தது.

 

 

செழியன் அவளிடம் சென்றவன், “வேதா, வேதா என்ன இங்க தூங்கிட்டு இருக்க எழுந்திருமா உள்ளே போய் தூங்கு” என்று எழுப்ப, அதில் விழுக்கென பதறிப்போய் எழுந்தவளோ, தலையை இரு கைகளாலும் பற்றிக்கொண்டு பல்லை கடித்து வலியை கட்டுப்படுத்த அவளுக்குள் பல குழப்பம்.

 

 

அவளின் நிலை கண்டு பதறிய செழியனோ, “என்னாச்சு தங்கமே தலைவலிக்குதா ஹாஸ்பிடல் போவமா” என்று பதற, அவளின் வலி குறைந்து அவனை பார்த்த பார்வையில் என்ன இருந்தது என்று அவனுக்கே தெரியவில்லை.

 

 

தேவ் ஓடிச்சென்று தண்ணீர் எடுத்து வர, அதை வாங்கி பருகியவளோ, “நான் எப்படி இங்க வந்தேன்” என்று கேட்க, செழியனோ துடித்து போனான் தன்னை மறந்து போனாளா என்று.

 

 

தேவ், “நீதானே இங்க வந்து படுத்துருப்ப, நாங்க உன்கிட்ட கேக்க வேண்டியதை நீங்க எங்ககிட்ட கேக்குறீங்க மேடம்” என்று கூறினான்.

 

 

அவளோ, “ஆமா நான் தான் வந்திருப்பேன்.அப்பாக்கு என்னவோ ஆகிடுச்சு நான் போறேன் அப்பாகிட்ட போகணும். நான் எங்க வீட்டுக்கு போறேன்” என்று அவள் கூறியதில் முழுவதும் நொறுங்கியே விட்டான்.

 

 

தன் கைவளைவில் இருந்தவளை நகர்த்தி அமர வைத்தவனோ, “எந்த ஊர்” என்று மட்டுமே கேட்டான்.

 

 

“தேவ் நீ… நீ.. ப்.. போய் கா.. கார் எடுத்துட்டு வா” என்று குரல் கமற கூற, தேவ் அவனை அதிர்ந்து பார்த்தான்.

 

 

“டேய் என்னடா பேசுற, கொண்டு போய்விடறதுக்கா இவ்ளோ கஷ்டமும் மன வேதனையும்” என்று கூற,

 

 

நண்பனை வருத்தமாக பார்த்தவன், “ப்ளீஸ் டா.. எனக்கு ஒரு மாதிரி இருக்கு என்ன பேச வைக்காத” என்று உடைந்த குரலில் கூற, தேவ் பைக்கை எடுத்து கொண்டு அவன் வீட்டிற்கு சென்றான் காரை எடுத்து வருவதற்காக…

 

 

செழியனோ உள்ளே சென்றதும் டாக்டருக்கு அழைத்தவன், “டாக்டர் நான் செழியன் பேசுறேன். நியாபகம் இருக்கா” என்று கேட்க அவரோ, “ஹாய் யங்மேன் உன்ன மறப்பேனா. நம்பர் சேவ் பண்ணி வச்சுருக்கேன். ஹொவ் இஸ் யுவர் வைப்?” என்று கேட்க,

 

 

அவனோ, “அவளுக்கு எல்லாம் நியாபகம் வந்துருச்சு” என்று கூறினான். “ஓ வாவ். நைஸ் நல்ல விசயம்தானே.. உன் வாய்ஸ் ஏன் இவ்ளோ டல்லா இருக்கு” என்று கேட்க, “அது எப்படி தலையில எந்த அடியே படல. அதிர்ச்சியாகுற மாதிரி எதுவும் நடக்காம நியாபகம் வரும்” என்று கேட்டான்.

 

 

அதில் பெரிதாய் சிரித்தவறோ, “அதெல்லாம் மூவிஸ்ல தான் செழியன் அப்படி நடக்கும். நான் தான் முன்னாடியே சொன்னேனே எப்போ வேணாலும் நியாபகம் வரலாம். சாப்பிடும் போது, தூங்கி எழும்போது அது நார்மல் தான். நோ ப்ரோப்லேம் மெடிசின் மட்டும் கன்டின்யூ பண்ணுங்க. பை நான் அப்புறம் பேசுறேன்” என்றவர் அழைப்பை துண்டித்துவிட்டார்.

 

 

செழியன் அவளின் மருந்து, ஹாஸ்பிடல் பைல் என எல்லாத்தையும் எடுத்து வைக்க, அப்போது உள்ளே வந்த வேதாவோ, “இதெல்லாம் எதுக்கு நாம இங்கதான இருப்போம்” என்று கூற,

 

 

செழியனோ, “இல்லை புரியல எனக்கு. நீ தானே அப்பா பாக்கணும்னு சொன்ன” என்று கேட்க, “நீங்க என் புருஷன்தானே.. எங்க ஊர்ல எல்லாம் கல்யாணம் ஆனா பொண்ணுங்க ஹஸ்பண்ட் கூட தானே இருப்பாங்க. நான் போறத இருந்தா எப்போவோ போயிருப்பேனே ” என்றாள்.

 

 

அவள் கூறியதை அவன் சரியாக கவனிக்கவில்லை. முதல் பாதி மட்டுமே புரிந்தது அவனுக்கு. செழியனுக்கு பேச்சே வரவில்லை. “உனக்கு என்னை நியாபகம் இருக்கா.. கல்யாணம் எதுவும் மறக்கலையா?” என்று கேட்க,

 

 

அவளோ, “ஹெலோ நான் என்ன அம்னீசியா பேசண்ட்டா.. ஒன்னு நியாபகம் வந்தா ஒன்னு மறக்கறதுக்கு. எல்லாம் நியாபகம் இருக்கு. நீங்க என்ன ஆக்சிடென்ட் பண்ணது. எனக்காக தவிச்சது. உங்க வீட்டுல பேசுனது. கல்யாணம் எல்லாமே. எனக்கு அப்பா பாக்கணும், என் பேமிலி பார்க்கணும் அவ்ளோதான்” என்று கூறினாள்.எனக்கு ஏதோ ஒரு மாதிரி தோணுது அப்பா நியாபகமாவே இருக்கு என்றாள்.

 

 

 

 

செழியனுக்கு புரியவில்லை இவளுக்கு எல்லாம் நியாபகம் வந்தும் என்னுடன் இருக்க நினைக்கிறாள் என்றால் மனம் ஆனந்தத்தில் தண்டவமாடியது. தேவும் காரை எடுத்துக்கொண்டு வேதனையுடன் வந்து சேர்ந்தவனுக்கு, செழியனின் தெளிந்த முகத்தையும் வேதாவின் முகத்தையும் பார்த்தவனுக்கு சொல்ல முடியாத ஒரு மகிழ்வு. அவர்களை ஏற்றிக்கொண்டு வேதா சொன்ன இடத்திற்கு கிளம்பினான்.

 

 

தேவ் காரோட்ட செழியன் பின்புறம் அமர்ந்திருக்க, அவனருகில் அமர்ந்திருந்தவளோ, “எனக்கு ஒரு டவுட்” என்று செழியனிடம் கேட்க, அவனோ என்னவென்று புருவம் உயர்த்த, “உங்களுக்கு என்ன முன்னாடியே தெரியாதுதானே அப்புறம் எப்படி ஹாஸ்பிடல்ல என் பேர் வேதான்னு சரியா சொன்னிங்க” என்று இரண்டு நாட்களாய் உறுத்திகொண்டிருந்த கேள்வியை கேட்க, தேவ் சட்டென பிரேக் போட்டான்.

 

 

“அப்போ நிஜமாவே உன் பேர் வேதாதானா” என்று தேவ் கேட்க, அவன் பிரேக் போட்டதில் தலை முன்புற சீட்டில் மோதும் முன்பே தன் கையை வைத்து அரவணைத்தவன், அவளை தான் அதிர்ச்சியாக பார்த்துக்கொண்டிருந்தான்.

 

 

அவளோ, “என்னோட நேம் வேதமித்ரா அன்பரசன்” என்று கூறினாள்.

 

 

தேவ் தான், “டேய் ஒழுங்கா உண்மைய சொல்லு. இவளை உனக்கு முன்னாடியே தெரியுமா?” என்று கேட்க, அவனோ இல்லையென்று தலையாட்டினான்.

 

 

“என்னங்கடா லாஜிக் இது நிஜமா எனக்கு புரியல, எனக்கென்னமோ உன் மேல தான் மச்சான் சந்தேகமா இருக்கு, பொய் சொல்லாம சொல்லுடா, நீ இதை பிளான் பண்ணி தானே பண்ண, முன்னாடியே இவளை லவ் பண்ணி டூர் போறது இல்லள்ம் தெரிஞ்சு அவ வர்றதை பாத்து சரியா ஆக்சிடென் பண்ணிட்ட கரெக்டா”என்று கேட்டவனையும் அவன் கூறியதை கேட்டு அதிர்ந்து போய் அவனையே பார்த்துக்கொண்டிருந்த வேதாவையும் கண்டு தலையில் அடித்து கொண்டவன்”கொஞ்ச நேரம் உன் கற்பனை குதிரையை கயிறு போட்டு கட்டி வச்சுட்டு காரை மட்டும் ஓட்டுடா என்கிட்ட வாங்கி கட்டிக்காத “என்று நண்பனை கடிந்து கொள்ள, அவனோ இருந்த அனைத்து பல்லயும் காட்டியவன் ஈஈஈஈ சும்மா சொன்னேன் மச்சான் என்று சமாளித்தான்.

 

 

 

வேதாவிடம் திரும்பியவன்”அது நான் டாக்டர் கேட்கவும் சட்டுனு வேதான்னு சொன்னேன். வேதநாயகி என் பாட்டி பேர். எனக்கு அவங்களை ரொம்ப புடிக்கும்” என்று கூறியவனின் குரலில் அப்பட்டமாக தெரிந்தது வேதனையின் சாயல்.

 

 

அவளின் விலாசம் கேட்டு வண்டியை செலுத்தினான். அங்கு சென்றவர்களுக்கு மிகப்பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.அவள் மனம் சலனப்பட்டதன் விளைவு. அவளுக்கு நிறைய இழப்புகளை கொடுத்திருந்தது. காலம் கடந்த பின் யோசித்து பயனில்லையே…

 

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்