⚠️ இத்தளத்தின் உள்ளடக்கங்கள் DMCA பாதுகாப்பில் உள்ளது. Copy / Screenshot / PDF உருவாக்குதல் தடை செய்யப்பட்டுள்ளது.

அத்தியாயம் -5
இருவரும் தங்கள் மகிழுந்தில் ஏறியவுடன் காந்தன் நிரஞ்சனைப் பார்த்து சிரித்துக் கொண்டே “நிரஞ்சா புதுசா ஒரு கதை போகுது போல” என்று கேலியாக கேட்டான்.
நிரஞ்சன் அவனைப் பார்த்து “என்னக் கதை போகுது?எனக்கு ஒன்னுமே புரியலை” என்று அவன் உண்மையிலேயே புரியாமல் விழித்தான்.
“காதல் ஓவியம் வாழும் காவியம் தேன் சிந்தும் பூஞ்சோலை” அவன் தன் இனிமையான குரலில் பாட ஆரம்பித்தான்.
நிரஞ்சன் “நிறுத்து காந்தா என்னச் சொல்ல வரே அதை நேரடியா சொல்லு எதுக்கு இப்படி பாட்டு பாடிக் கொல்லுறே? ” என்று அவன் கோபமாக கேட்டான்.
காந்தன் “ஓகே நிரஞ்சா நான் விஷயத்திற்கு வரேன் சாம்பவிக்கு உன்னை பிடிச்சு இருக்குன்னு நினைக்கிறேன்.ஏன்னா அவளின் ஒவ்வொரு செய்கையிலும் அதை நான் கவனிச்சேன், அவளை பிடிச்சிருக்குன்னு நீ சொல்லும் போது அவ கண்ணுல அவ்வளவு சந்தோஷத்தை பார்த்தேன். உன் போன் நம்பர் வாங்கிறதுக்காகத் தான் அவள் நம்பரை நீ கேட்கிறதுக்கு முன்னாடியே உன் போன் நம்பர் வாங்கிட்டான்னு நினைக்கிறேன்” என்று அவன் தன் எண்ணத்தைச் சொன்னான்.
அதைக் கேட்ட நிரஞ்சன் “காந்தா எனக்கு எப்பவும் இந்த காதல் கீதல் மேல நம்பிக்கை இல்லை.அதோட சாம்பவியை நான் பிடிச்சு இருக்குன்னு சொன்னதுக்கு காரணம் அவங்க சிம்பிளா இருந்தது அது மட்டும் தான் வேற எந்த காரணமும் கிடையாது” என்று அந்தப் பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தான்.
கன்னியாகுமரி மருத்துவமனையில் அருள்மணி கண் திறந்து பாக்கவே மாலை நேரம் ஆகிவிட்டது.கனிகாவின் மாப்பிள்ளை வீட்டில் இருந்தும் வந்து அருள்மணியின் உடல்நிலையை விசாரித்து விட்டு சென்றனர்.அவர்களுக்கும் கனிகாவின் வீட்டில் உள்ளவர்களை நினைத்து கவலையாக இருந்தது.
ஒரு வாரத்தில் உள்ள திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பே ஊரில் உள்ள அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுத்து அழைத்து விட்டு இப்பொழுது திருமணம் இல்லை சொல்ல அவர்கள் தயாராக இல்லை அதனால் எப்படியாவது திருமணத்தை முடிக்க வேண்டும் என்பதுவே அவர்களின் பேச்சாக இருந்தது.
எல்லாவற்றிற்கும் தாமரை தலையசைத்தாரே தவிர ஒரு வார்த்தை பேசவில்லை.இதுவரை தன் கணவர் அருள்மணியின் யோசனையோடு நடந்தவருக்கு சட்டென்று தன்னிச்சையாய் முடிவெடுக்க முடியாமல் திணறிப் போய் இருந்தார் என்பதே உண்மை.
சிற்பி மருந்து வாங்குவதற்கும் கனிகாவின் திருமண ஏற்பாட்டிற்கான வேலைகளில் இருந்து கைப்பேசியில் வரும் சந்தேகத்திற்கு பதில் அளிக்கவுமே நேரம் சரியாக இருந்தது.
மெதுவாய் கண்விழித்துப் பார்த்த அருள்மணிக்கு சட்டென்று எதுவும் நினைவு வரவில்லை.கொஞ்சம் ஞாபகப்படுத்தி பார்க்கவும் தான் ஓரளவு நடந்தது நினைவு வந்தது.தற்போது தான் இருக்கும் அறையை முழுவதும் பார்வையை சுழல விட்ட பிறகு தான் அவர் மருத்துவமனையில் இருப்பது புரிந்தது.
அதுவரை அருகில் இருந்த தாமரை அப்பொழுது தான் கண்களை லேசாக அயர்ந்து நித்திரைக் கொண்டார்.
மெதுவாய் தன் கரங்களை அசைக்க அது அவருக்கு அதிக வலியைத் தந்தது. என்னவென்று பார்த்தால் அதில் அவருக்கு மருந்து ஏறிக் கொண்டிருப்பது புரிந்தது.பக்கத்தில் யாராவது இருக்கிறார்களா? என்று பார்க்கும் போது தாமரை முகம் முழுவதும் வேதனையோடு தலை சாய்ந்து கண்மூடி அமர்ந்திருப்பதைக் கண்டவருக்கோ தனக்கு ஏதோ பெரிதாக நிகழ்ந்திருக்கிறது என்று புரிந்துக் கொண்டவர் மெதுவாய் தன்னால் முடிந்தவரை எழுந்து கட்டிலில் சாய்ந்து அமர்ந்துக் கொண்டார்.
அருள்மணி எப்பொழுதும் உடல்நிலை சரியில்லை என்று சோர்ந்து படுத்துக் கொள்ள மாட்டார்.தன் வேலையை தானே முடித்துக் கொள்பவர்.அதனால் எப்பொழுதும் போல் அவரே எழுந்து உட்கார்ந்தார்.
வெளி வேலைகளை முடித்து உள்ளே வந்த சிற்பி அப்பா உட்கார்ந்திருப்பதைக் கண்டு மகிழ்ச்சியாய் “அப்பா” என்று அழைத்தவாறே அருகில் வர அவளின் சத்தம் கேட்டு தாமரை கண்விழித்துப் பார்த்தார்.
எதிரே அருள்மணி உட்கார்ந்திருப்பதைப் பார்த்து “என்னங்க எப்போ எழுந்து உட்கார்ந்தீங்க? என்னை ஒரு வார்த்தை கூப்பிட்டு இருக்கலாம்ல” என்று அவர் பதற்றமாய் எழுந்து கணவன் அருகில் வந்து நின்றார்.
இருவரையும் அருகில் இருப்பதை பார்த்தவர் “கனிகா எங்கே?”
சிற்பி அப்பாவின் அருகில் வந்து உட்கார்ந்தவள் “அம்மா காலைல இருந்து சாப்பிடவே இல்லை அதான் அம்மாக்கு எதாவது சாப்பிட செஞ்சு எடுத்துட்டு வரேன்னு போய் இருக்காலே.இப்போ வந்திடுவா”
மெதுவாய் தலையசைத்தவர் “எனக்கு என்னாச்சு?நான் எப்படி இங்கே வந்தேன்”
சிற்பி அப்பாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு “அப்பா இப்போ இதைப் பற்றி எல்லாம் யோசிக்காதீங்க முதல்ல நல்ல ஓய்வு எடுங்க அது தான் இப்போ முக்கியம்”
தாமரை பேசினால் அழுது விடுவார் என்ற நிலைமையில் கேவலாய் வாயில் தன் புடவையின் முந்தானையால் பொத்தி அடக்கிக் கொண்டு நின்றுக் கொண்டிருந்தார்.
சிற்பியைப் பார்த்து வலியோடு சிரித்த அருள்மணி “என் பொண்ணு வளர்ந்துட்டான்னு எனக்கு நல்லவே தெரியுதுமா பரவாயில்லையே அப்பாகிட்டேயே மறைக்க எப்போ கத்துக்கிட்டே?”
சிற்பி “அப்பா”
“அப்பா எல்லாத்தையும் தாங்குற நிலைமைக்கு சின்ன வயசில் இருந்தே வந்துட்டேன்மா அதனால மறைச்சு எதுவும் ஆகப் போறது இல்ல நாளைக்கு சொல்லப் போறதை இன்னைக்கே சொல்லும்மா முன்னாடியே சொல்லிட்டா இன்னும் கொஞ்சம் உடம்புல வலுச் சேர்ப்பேன்ல” என்று அவர் தன்னிலைமையைப் பற்றி விளக்கமாய் சொன்னார்.
இதற்கு மேல் உண்மையை மறைக்க முடியாது என்று அவளே எல்லா நடந்த நிகழ்வுகளையும் தன் அப்பாவிடம் விவரமாகச் சொன்னாள்.
அதைக் கேட்ட அருள்மணி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.
தாமரை அருள்மணியின் தோளின் மெதுவாய் கைவைத்தார்.
தலை குனிந்து இருந்தவர் நிமிர்ந்து தாமரையைப் பார்த்தவர் “என்னால இனிமேல் எந்த வேலையும் பார்க்க முடியாதாலே?”என்று கவலையாகக் கேட்டார்.
சிற்பி “அப்பா இப்படி பேசாதீங்க”
“இல்லைம்மா நிதர்சனம் எதுவோ அதை நான் புரிஞ்சுக்கனும்ல அதற்குத் தான் கேட்டேன்.அப்பா உடைஞ்சு போக மாட்டேன்மா என் பொண்ணு படிச்சு பெரிய ஆளாக வருவதை நான் பார்க்க வேண்டாமா? ஆமாம் இன்னைக்கு ரிசல்ட் என்னாச்சு?”என்று தன்னைப் பற்றி மேலும் பேசி நோகடிக்காமல் சிற்பியிடம் கேடேடார்.
கனிகா கதவை திறந்து உள்ளே வந்தாள்.உட்கார்ந்திருந்த அருள்மணியைக் கண்டதும் “அப்பா கண் முழிச்சுட்டீங்களா? இப்போத் தான் கடவுள்கிட்ட வேண்டுதல் வைச்சுட்டு வந்தேன். கடவுள் என் வேண்டுதலை நிறைவேத்திட்டாரு”என்று அவர் அருகில் வந்தாள்.
கனிகா அருகில் வந்ததும் அவள் தலையை மெதுவாக வருடி விட்டபடியே “அப்பாக்கு எதுவும் ஆகாதுல என் அன்பு பொண்ணு கல்யாணத்தை சிறப்பா நடத்த வேண்டாமா? அதனால ஒன்னும் இல்லை” என்று கனிகாவைப் பார்த்துச் சொன்னார்.
அதைக் கேட்ட கனிகா கண்கள் முழுவதும் கண்ணீரோடு “ஆமாம் அப்பா” என்று வேகமாய் தலையசைத்தாள்.
அதைப் பார்த்து தாமரையும் சிற்பியும் கண்கலங்கித் தான் நின்றனர்.
“சரி என் செல்லப் பொண்ணு என்ன ரிசல்ட்ன்னு சொல்லவே இல்லையே”
காலையிலிருந்து பதற்றத்திலேயே இருந்ததால் எல்லாவற்றையும் மறந்து இருந்தவள் அப்பா இப்பொழுது கேட்கவும் தான் அனைத்தும் நினைவுக்கு வந்தது.எப்படி பெரிய கொண்டாட்டமாக கொண்டாட வேண்டும் என எண்ணியவளுக்கு ஒன்றுமே இல்லாமல் போனது.அதை நினைத்து அப்படியே யோசனையில் அமைதியாய் அமர்ந்து இருந்தாள்.
“என்னம்மா ஒன்னும் சொல்லாமல் அமைதியா இருக்கே?” என்று அருள்மணி திரும்ப கேட்கவும் பக்கத்தில் இருந்த கனிகா “சிற்பி நடந்த நிகழ்வுல எல்லாத்தையும் மறந்துட்டேனே என்ன மார்க் வாங்கானே?” என்று அவளும் ஆவலாகக் கேட்டாள்.
“அது… அது வந்து காலேஜ்லேயே முதல் மார்க் அப்பா” என்று அவள் தயக்கமாய் சொன்னாள்.
“என்ன ஆளுலே நீ எவ்வளவு பெரிய விஷயம் செய்து இருக்கே ? அதைப் போய் தயங்கி தயங்கி சொல்லுதே? நம்ம குடும்பத்தையே பெருமை படுத்திட்டே தெரியுமா? அப்பாக்கு ரொம்ப சந்தோஷம் இனிமேல் அப்பாக்கு ஒன்னும் செய்யாது தெம்பா எழுந்து வந்துருவேன் நீ கவலைப்படாதே! எவ்வளவு பெரிய விஷயம் நடந்து இருக்கு நான் தான் அதை கொண்டாட விடாமல் இப்படி முடியாமல் படுத்து கிடக்கேன்” என்று சங்கடப்பட்டார் அருள்மணி.
அதற்கு சிற்பி “அப்பா உங்களை விட எனக்கு முக்கியமா எதுவும் இல்லை நீங்க என் கூட இருந்தாலே கொண்டாட்டம் எல்லாம் தன்னால வரும்” என்று தந்தையின் வருந்துதலுக்கு பதில் சொன்னாள் சிற்பி.
அதைக் கேட்டு அந்தச் சிறு குடும்பம் நிம்மதி அடைந்தது.தந்தையை வைத்தே ஒரு குடும்பம் முழுமையடைகிறது.
சிற்பியின் கையைப் பிடித்து “அப்பா நாளைக்கு வீட்டிற்கு வந்தவுடன் நாம உனக்கு கிடைத்த வெற்றிய கொண்டாடலாம்லே”
“அப்பா இப்போ இது நமக்கு முக்கியம் இல்லை அக்கா கல்யாண வேலை நிறைய இருக்கு”
“அவ கல்யாணம் எவ்வளவு முக்கியமோ அதே மாதிரி உன்னோட வெற்றியும் எனக்கு முக்கியம் சிற்பி”
“சரி விடுங்க எல்லாம் அப்புறம் பேசிக்கலாம்.இப்போ நீங்க நல்லா ரெஸ்ட் எடுங்க நாளைக்கு வீட்டுக்கு போய் எல்லாம் பார்த்துக்கலாம்” என்றார் தாமரை அப்பொழுது பேச்சை நிறுத்துவதற்காகச் சொன்னார்.
ஆனால் மறுநாள் அவர்களுக்கு அடுத்த பிரச்சினை காத்துக் கொண்டிருந்தது.
காந்தனும் நிரஞ்சனும் அவர்கள் தங்கி இருக்கும் அடுக்குமாடி கட்டிடத்திற்கு வந்தனர்.
நிரஞ்சன் மற்றும் காந்தனுக்காக பார்த்திபனும் சஹாவும் தங்கள் வேலையை முடித்து காத்திருந்தனர்.
இவர்கள் இருவரும் உள்ளே நுழைந்ததும் பார்த்தி “ஹேய் என்னாச்சு சங்கீத மேளாவுடைய எம்.டியை பார்த்தீங்களா? போன வேலை சக்ஸஸ் தானே? இல்ல ரொம்ப பெரிய கம்பெனினு பிஹீ பண்றாங்களா?” என்று பார்த்தி அவசரமாகக் கேட்டான்.
நிரஞ்சன் அவன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட காகிதத்தை அவனிடம் நீட்டினான்.
அதை பார்த்திபன் திறந்து பார்த்தான்.சஹாவும் அவனுடன் சேர்ந்து எட்டிப் பார்த்தான்.
“ஒ…ஓஓ… எல்லாம் ஓகேவா” என்று சஹா தன் பெருவிரலை உயர்த்திக் காட்டினான்.காந்தன் அதற்கு தலையசைத்தான்.
“அப்போ இன்னைக்கு நைட் பார்ட்டி ஹேய்…” என்று பார்த்திபன் கத்தினான்.
“எங்கே போகலாம்?” என்று சஹா சொல்லிக் கொண்டு யோசிக்க ஆரம்பித்தான்.
காந்தன் சிரித்துக் கொண்டு “நைட் பார்ட்டி கன்பார்ம் தான் ஆனால் அதை விட ஒரு முக்கியமான விஷயம் இருக்கே”
“என்ன முக்கியமான விஷயம்?” என்று பார்த்தி கேட்டான்.
காந்தன் “யாரை இன்வைட் பண்ணனும்னு?”
“எ..என்ன பேசுற காந்தா? நாம எப்பவும் ப்ரை…வைட்டா த…தானே பார்ட்டி வைப்போம். யாரையும் இன்வைட் பண்ற வேலை கிடையாதே!” என்று சஹா கேள்வியாய் கேட்டான்.
“இல்லை இந்த தடவை இருக்கு”
“யாரை இன்வைட் பண்ணப் போறோம்?” என்று பார்த்தி கேட்டான்.
“சங்கீத மேளாவுடைய எம்.டியைத் தான் இன்னைக்கு நம்ம பார்ட்டிக்கு இன்வைட் செய்யப் போறோம்?”என்று நிரஞ்சன் பதிலளித்தான்.
“என்ன?” என்று இருவரும் அதிர்ச்சியாயினர்.
“என்ன பேசுற நிரஞ்சா? பழுத்த பழைய பழத்தோட யங்ஸ்ஸான நம்ம பார்ட்டி பண்ணப் போறாமா?” என்று பார்த்தி அதிர்ச்சியாகக் கேட்டான்.
Click on a star to rate it!
Rating 5 / 5. Vote count: 3
No votes so far! Be the first to rate this post.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் Cancel reply
You must be logged in to post a comment.


🤣🤣🤣🤣
அடேய், என்னடா கேள்வி இது
பார்ட்டிக்கு ஒருத்தர் வருவதா சொன்னால் சந்தோஷப்படாம இப்படி அதிர்ச்சி ஆகுறே.
சிற்பியின் அப்பா சூப்பர்
தனது உடல்நிலைய விட மகளின் வெற்றியை பெரிதாக நினைக்கிறார். இப்படிப்பட்ட அப்பா கிடைக்க புண்ணியம் செய்து இருக்கணும்.
நாளைக்கு என்ன குண்டைத் தூக்கிப் போட போறீங்க?
வெயிட்டிங்…
புது ஆள் வந்தால் சரியா வரனும்ல அதான் ஷாக்கிங் கண்டிப்பா பொண்ணுங்களுக்கு சப்போர்ட் பண்ணுற அப்பா பெரிய விஷயம் நன்றிகள் 😍😍
அருமையான பதிவு 👏👏
மனமார்ந்த நன்றிகள் 😍
ரெண்டு ட்ராக் எப்போ ஒண்ணு சேர போகுதோ தெரியலையே … ஒருவழியா சிற்பி அப்பா முழிச்சுட்டார்…
கண்டிப்பா டிராக்க ஒன்னா போக வைக்கனும் மனமார்ந்த நன்றிகள் 😍😍