Loading

இங்கு காரில்…

“தம்பி நம்ம விஜி ஹாஸ்பிடல் போடா… நான் அவ கிட்ட போன் பண்ணி சொல்லிட்டேன்.. பாப்பா இன்னும் மயக்கத்துல தான் இருக்கா… நான் பிரியா  கிட்ட சொல்லிட்டேன் அவ அங்க வந்துடுவா….”

“சரி மா…” என்று கூறி மருத்துவமனைக்குச் சென்றான்.. “ம்மா ஹாஸ்பிடல் வந்துடிச்சி…  நீ இறங்கி நில்லு  ம்மா நான் குட்டிமாவை தூக்குறேன்..” என்று கூறி நிவேதாவை கையில் தூக்கி கொண்டான்.. வசும்மா கார் கதவை சாற்றி விட்டு மருத்துவமனைக்குள் சென்றார்…

நிவேதாவைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனை உள்ளே சென்றான் நிதிஷ்…

மருத்துவமனை உள்ளே மருத்துவர் அவளுக்குச் சிகிச்சை அளித்தார் .. அவளுக்குக் குளுக்கோஸ் போட சொல்லிவிட்டு வெளியே வந்தார் வசும்மாவின் தோழி மருத்துவர் விஜயலட்சுமி….

“விஜி… நிவிம்மாக்கு இப்ப எப்படி இருக்கு….”

“நில்லு வசு.. நிதிஷ் போய் ஜூஸ் வாங்கிட்டு வா..”

“சரி டாக்டர்.. “என்று ஜூஸ் வாங்க சென்றான்…

“வசு நிவேதாக்கு அதிகமா ப்ளீட் ஆகுது… அவ ரொம்ப வீக்கா இருக்கா… அப்பறம் ரொம்ப மனஅழுத்ததுல இருக்கா… அதுனால தான் அதிகமா ப்ளீட் ஆகுது…அவளுக்குக் கண்டிப்பா  ரெஸ்ட் தேவ ஒரு வாரத்துக்கு… சத்தான ஆகாரம் தாங்க…

அவளுக்கு குளுக்கோஸ் முடிஞ்சதும்… கூட்டிட்டு போங்க.. அவளுக்கு பீரியட்ஸ் முடிஞ்சதும்  திரும்பியும் ஹாஸ்பிடல் கூட்டிட்டு வாங்க…”

“சரி விஜி.. ரொம்ப நன்றி… வேற எந்த பிரச்சனையும் இல்லல…”

“எதுக்கு இதுக்குலாம் நன்றி சொல்லிட்டு.. அவளுக்கு எந்த பிரச்சனையும் இல்ல…நான் கிளம்பறேன்…”

 “நீயி எதுவும் சாப்பிட்டு இருக்க மாட்ட உனக்கு தா ஜூஸ் வாங்கிட்டு வர சொன்னேன்… குடிச்சிட்டு.. குழுகோஸ் முடிஞ்சதும் நிவேதாவ கூட்டிட்டு கிளம்புக… நான் கிளம்பறேன்” என்று கூறிச் சென்று விட்டார்..

“அத்தம்மா வாங்க உட்காருங்க மாமா வந்துட்டாரு.. ஜூஸ் குடிங்க நான் போய் ஏஞ்சல் பாத்துத்து வரேன்…”

சிறிது நேரம் கழித்து குழுகோஸ் முடிந்தவுடன் அவளை டிஸ்சார்ஜ் செய்து அழைத்து சென்றனர்…

வசும்மா வீட்டில்…..

நிவேதாவை அறையில் தூங்க வைத்து விட்டு மூவரும் வெளியே வந்தனர்….

“மா நான் போய் சாப்பிட எதோ வாங்கிட்டு வரட்டா… என்ன வாங்கிட்டு வரட்டும்…”

“இல்ல நிதிஷ் வெளிய வேணாம்… வீட்டுலயே பண்ணிடலாம்… போய் குளிச்சிட்டு வாங்க நானும் குளிச்சிட்டு வரேன்” என்று கூறி தன் அறைக்குச் சென்றார்…

இங்கு நிதிஷ் அறையில்…

“பாப்பு மிஸ் யூ…”என்று கூறி பிரியாவை அணைத்தான் நிதிஷ்..

“மிஸ் யூ டூ மாமா….. ஆனா நீ நாலு நாள்ல வரேன்னு சொல்லிட்டு எத்தனை நாள் ஆயிடிச்சு வர… போ நீ ரொம்ப பேட்… என்னை விடு.. நான் போய் சமைக்க அத்தம்மாக்கு ஹெல்ப் பண்றேன்…”

“பாப்பு ஏன் இந்த விளையாட்டு… குட்டிம்மாக்கு வேற உடம்பு சரி இல்ல… ஏன் இந்த ரிஸ்க்…. அம்மா பண்ணட்டும்…”

அவனை தள்ளிவிட்டு.. “டேய் மாமா என்ன கலாய்குறியா… டெய்லி நைட் நான் தான் சமைக்குறேன்… நல்லா இருக்குனு மொக்கிட்டு.. இப்ப நல்லா இல்லனு சொல்லுற… போடா இன்னிக்கு உனக்கு டின்னர் கட்… நான் நிவி இருக்குற ரூம்ல குளிக்குறேன்” என்று கூறி துணியை எடுத்துக் கொண்டு அவனை முறைத்துவிட்டு சென்றுவிட்டாள்….

“டேய் நீயே ரொம்ப நாள் கழிச்சி இப்ப தா வீட்டுக்கு வந்த.. ஏன் டா வாயை வெச்சிட்டு சும்மா இருக்க மாட்டியா… பைத்தியக்காரா…. இப்ப பாரு கோச்சிக்கிட்டு போறா…”.என்று தன் தலையில் அடித்து  குளிக்க சென்றான்…

நிவி அறையில் குளித்துவிட்டு சமையல் அறைக்கு சென்றாள்… அங்கு ஏற்கனவே வசும்மா வந்து இருந்தார்…

“அத்தம்மா என்ன சமைக்கலாம்.. இட்லி சாம்பார் மட்டும் பண்ணிடலாமா..”

“போதும் டா அதுவே.. நீ மூனு வெங்காயம் ஒரு தக்காளி  வெட்டி வை..நான் போய் இட்லிக்கு மாவு கரைச்சி வெச்சிட்டு வரேன்…” என்று மாவு கரைக்க சென்றார்.. பிரியாவும் அனைத்தும் வெட்டி வைத்து விட்டாள்… “நான் சட்னி அரைக்க தேங்கா துருவுறேன்.. நீ வெங்காய சாம்பார் வை… அது தான் அவசரமா செய்ய முடியும்…”

பிரியா வாணலியை அடுப்பில் வைத்து அது சூடானவுடன் எண்ணெய் ஊற்றி அதை காய்ந்தவுடன் கடுகு போட்டு தாழித்து வெட்டி வைத்த வெங்காயம் போட்டு அது வணங்கியவுடன் தக்காளி போட்டு வணக்கி தேவையான அளவு உப்பு.. மிளகாய் தூள் போட்டு வணக்கி அதில் ஏற்கனவே பொட்டு கடலை மற்றும் வரமிளகாய் போட்டு அரைத்த மாவை தேவையான அளவு தண்ணீரில் கலக்கி வணக்கி வைத்த வாணலியில் ஊற்றி அது கொதித்தவுடன் இறக்கி வைத்தாள்..

அதற்குள் வசும்மா இட்லி ஊற்றி வைத்து.. சட்னியும் அரைத்து வைத்துவிட்டார்…

“அத்தம்மா நான் போய் நிவிம்மாவ எழுப்பி குளிக்கச் சொல்லிட்டு அவ ரெடி ஆனதும் கூட்டிட்டு வரேன்..”

 “சரிடா நீ போ நான் எல்லாம் எடுத்து வெச்சிட்டு நிதிஷ சாப்பிட கூட்டிட்டு வரேன்…”

வசும்மா எல்லாம் எடுத்து வைக்க பிரியா நிவேதாவை எழுப்பி குளிக்க அனுப்பி இலககுவான உடை அணிவிக்க எடுத்து வைத்து அவள் அணிந்து வரவும் அவளை டைனிங் டேபிளுக்கு அழைத்து வந்தாள்.. அவளை உட்கார வைத்துவிட்டு… அனைவருக்கும் தட்டு எடுத்து வைத்து விட்டு உணவு பரிமாரிவிட்டு… நிவேதாவுக்கு ஊட்டி விட்டாள்.. நிவேதா அவளையே கண் கலங்கி பாத்துக்கொண்டு இருந்தாள்..

“ஏஞ்சல் என்ன பீலிங்கா பீலிங்கானு கேட்குறேன் சாப்பிடு ஒழுங்கா” என்று அவளுக்கு ஊட்டிவிட்டு விட்டு அவள் சாப்பிட்டாள்…. அனைவரும் சாப்பிட்டு முடித்தவுடன் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்தனர்…

“பிரியாம்மா நீ பாப்பாவை கூட்டிட்டு போய்ட்டு தூங்க வை.. நான் பால் எல்லாருக்கும் எடுத்துட்டு வரேன்… தூங்க வெச்சிட்டு நீ உன் ரூம் போ… நான் நிவிம்மா கூட தூங்குறேன்..”

“அத்தம்மா நோ நீங்க போய் தூங்குங்க நான் போய் நிவி கூட தூங்குறேன்..நீங்க மாத்திரை சாப்பிடனும்.. மாத்திரை சாப்பிட்டா நல்லா தூக்கம் வரும்… நான் பாத்துக்குறேன்…”

“இல்ல டா நீ போ.. நானே பாத்துக்குறேன்…”

“அட ரெண்டு பேரும் வேணாம்.. நானே நல்லா தான் இருக்கேன்… போய் தூங்குங்க அவங்கவங்க ரூம்ல…”

“உனக்கு மயக்கம் வருதுல நீ மட்டும் எப்படி தனியா இருப்ப… நாங்க யாரோ தூங்குறோம்..”

“அட சாப்பிட்ட வாட்டி நல்லா இருக்கேன்.. ஒழுங்கா தான் பேசுறேன் இப்ப உங்க கூட… பிரியா நீ போய் உன் ரூம்ல தூங்கு… வசும்மா நீங்க போய் உங்க ரூம்ல தூங்குங்க… நிஜமா நல்லா இருக்கேன்…. அதுனால நானே நடந்து போய் என் ரூம்ல தூங்குறேன்.. ரெண்டு பேரும் அவங்கவங்க ரூமுக்கு போங்க….குட் நைட் எல்லாருக்கும்… “என்று கூறி அவர்கள் பேசும் முன் அறைக்குச் சென்று விட்டாள்…

“அடியே ஏஞ்சல் நில்லு..”என்று கத்தினாள் பிரியா

“நிக்க மாட்டேன் போ.. அண்ணா கூட போய் தூங்கு…”என்று கூறி அறை கதவை மூடி விட்டாள்…

“என்ன அத்தம்மா போய் ரூம் மூடிக்கிட்டா… மாத்திரை சாப்பிடவே இல்ல.. போய் அதையாச்சும் எடுத்து குடுத்துட்டு வரேன்.. ஏன் இப்டி ஓடுறாளோ…. கடவுளே…. அத்தம்மா நீங்க போய் தூங்குங்க… மாமா நீங்களும் போங்க நான் வரேன்” என்று கூறி நிவி அறைக்கு சென்றுவிட்டாள்…

வசும்மாவும் நிதிஸும் அவரவர் அறைக்கு சென்றுவிட்டனர்…

“ஏஞ்சல் கதவை தொற… மாத்திரை எடுத்து குடுக்கணும்.. குடுத்துட்டு நான் ரூமுக்கு போயிக்குறேன்…”

“நிஜமா.. “

“அடியே சத்தியமா போயிடுறேன்.. கதவை தொற…” என்று கூறியவுடன் தான் கதவை திறந்தாள்….

“நீயி இருக்கியே ஏஞ்சல் என்கிட்ட மட்டும் வாய் பேசு.. மத்த எல்லார்கிட்டயும் பச்ச புள்ள மாதிரி இரு… இந்த சாப்பிடு… எதோ இருந்தா ஒழுங்கா கூப்புடு சரியா..குட் நைட்..” என்று கூறி நிவேதா கன்னத்தில் முத்தம்யிட்டாள்…

“பிரியா ம்மா என் அண்ணாக்கு குடு எனக்கு ஏன் தர…”

“அப்டினா நான் குடுத்த முத்தம் வேணாமா சரி நா இங்கேயே தூங்குறேன்…”

“நோ நோ இந்தா…” என்று கூறி பிரியா கன்னத்தில் அவளும் முத்தமிட்டாள்…

“சரி நீ தூங்கு டோர் லாக் பண்ணாத… நானும் தூங்க போறேன் டாட்டா” என்று கூறி சென்று விட்டாள்… நிவியும் சென்று தூங்கசென்று விட்டாள்…

அங்கு ஒருவன் இவள் நினைவில் தூங்காமல் இருக்கிறான்… ஆனால் இவள் பல வருடம் தூங்காத தூக்கத்தை இன்று தான் தூங்குவது போல்  இன்று நன்றாக தூங்க சென்றாள்….

இங்கு நிதிஷ் அறையில்…

களைப்பில் அவன் போனவுடன் தூங்கிவிட்டான்… பிரியா சென்று பாக்கும் பொழுது ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று இருந்தான்… இவள் போய் அவனின் நெற்றியில் முத்தம் குடுத்து அவனை அணைத்து தூங்கி விட்டாள்….

நாம போய் மொறச்சிட்டு நின்னாங்களே அவங்களைப் பாக்கலாம்….

“அம்மா அவ அங்க போய் அவ நிம்மதியா இருப்பாளா அவ எப்படி அப்டி இருக்கலாம்.. நம்மள அவமானம் படுத்திட்டு போய் இருக்கா… எப்டியோ அவள நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்து பயங்கர வேல செய்ய வைக்கணும்”

“ஆமா நிஹா அவ நிம்மதியா இருக்ககூடாது… இப்பயே உங்க அப்பா வரட்டும் போய் கூப்பிட்டு வர சொல்லலாம்…. நில்லு உங்க அப்பாக்கு போன் பண்ணி வரச்சொல்றேன்…”

ரெண்டு முறை அழைத்தும் போன் எடுக்கவே இல்லை.. இன்னொரு முறை அழைக்கும் பொழுதுதான் எடுத்தார்..

“ஹலோ என்னங்க எங்க இருக்கீங்க..”

“ஏய் ஒரு முறை எடுக்கலான விட வேண்டியது தானு எதுக்கு போன போட்டு உசுர வாங்குற… சொல்லி தொலை எதுக்கு போன் பண்ண.. “என்று கூறினார் நிவேதாவின் தந்தை ஜனகராஜ்..

“அதுங்க அந்த குண்டச்சி வீட்ட விட்டு போயிட்டா…”

“அந்த சனியன் போயிட்டாளா…. நிம்மதி விடு அத பத்தி பேச்சே எடுக்காத… இனிமே போன் பண்ணா கொண்ணுடுவேன்.. வை போனை…” என்று கூறி வைத்துவிட்டார்…

“என்னமா இவரு வெச்சிட்டாரு..”

“சரி வீட்டுக்கு வரட்டும்… இவரு பேசுறது பாத்தா… ரெண்டு நாளைக்கு வீட்டுக்கு வரமாட்டாரு போல டி.. மாசத்துக்கு ரெண்டு நாளு எங்க போறாருனே தெரியல…. என்னமோ பண்ணட்டும்… ஆனா அவரு வந்த உடனே அந்த சனியன் இங்க வரணும்… நிம்மதியா இருக்க கூடாது….”

“ம்மா உங்கிட்ட ஒரு சந்தேகம் கேட்கட்டா… கேளு தங்கம்… ம்மா அவள ஏன் இப்டி வெறுக்குற…”

“அதுவா எங்க கல்யாணம் ஆகி ஏழு வருஷம் ஆகி தான் பொறந்தா… அவ வயித்துல இருக்க அப்ப சின்ன சின்ன பிரச்சனை வரும் நாங்க கண்டுக்க மாட்டோம்… உங்க அப்பா கூட பாசமா இருந்தாரு… ஆனா அவ பொறக்குற வரைக்கும் நல்லா இருந்த கடை.. இவ பொறந்த நேரத்துல எல்லாம் எறிஞ்சி போய்டிச்சி… அப்ப இருந்தே இவ கிட்ட பாசமா பேச மாட்டாரு…

நீயும் அடுத்த வருசத்ததுல பொறந்த.. நீ பொறந்த வாட்டி தான் கொஞ்சம் நமக்கு நல்ல நேரம் ஆரம்பிச்சது…

கொஞ்சம் நல்லா போச்சி… உங்க அப்பா இவ கிட்ட பேசவே மாட்டாரு நீ பொறந்த வாட்டி… ஆனா அவ எப்ப வயசுக்கு வந்தாளோ அப்ப திரும்பியும் பிரச்சனை ஆரம்பிச்சது….கடை ஒழுங்கா போல… உனக்கு உடம்புல பிரச்சனை ஆச்சி…

இதெல்லாம் பாத்து உங்க அப்பாவும் நானும் ஜோசியர் போய் பாத்தோம்…

இவளால நம்ம வீட்டுக்கு பிரச்சனை மட்டும் தான் வருமாம்… உயிர் சேதம் ஆக கூட வாய்ப்பு இருக்குனு சொன்னாங்க… சரினு நாங்களும் வீட்டுக்கு கிளம்பிட்டோம்…ஆனா கொஞ்சம் தூரம் வந்த உடனே.. ஒரு லாரி எங்க வண்டில இடிக்க வந்துடிச்சி…. கொஞ்ச நேரத்துல கவனிச்சி வண்டிய திருப்பிட்டோம்.. இல்லனா ரெண்டு பேரும் இந்நேரம் உயிரோட இருந்து இருக்கவே மாட்டோம்…

அதுல இருந்து உங்க அப்பா அவள சுத்தமா வெறுத்து ஒத்துக்கிட்டாரு.. இவ ராசியால தான் இப்டி ஆகுதுனு இவள அவரு மூஞ்சிலயே முழிக்கக் கூடாது சொல்லிட்டாரு…எனக்கும் பயங்கர வெறுப்பு வந்துடிச்சி…. அதுவும் இல்லாம யானை மாதிரி குண்டு ஆகிட்டா…

அவ மேல இருக்குற கோவத்துல தான் நான் அவள திட்டி வேல செய்ய சொல்றேன்..” கூறி முடித்தாள்…

“ம்மா இவ ராசினால தான் எனக்கு அடிக்கடி காய்ச்சல் வந்துச்சா….”

“சரி விடு… உங்க அப்பா வந்த உடனே அவள இங்க கூட்டிட்டு வந்து நிம்மதி இல்லாம பண்ணலாம்….”என்று கூறி உறங்க சென்றனர்….

நிவேதாவின் நிம்மதி பறிபோகுமா??? இல்லை வீரா வந்து நிவேதாவை காப்பாற்றுவாரா??? காண்போம் இனி வரும் அத்தியாத்தில்!!!

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
9
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. அய்யோ சரியான பைத்தியக்கார குடும்பம் போல … சொந்த பொண்ணை இப்படி யோசிப்பாங்களா பண்ணுவாங்களா … அடுத்து என்ன ஆக போகுதோ …

    1. Author

      எல்லாம் நன்மைக்கே சிஸ்… தொடர்ந்து உங்க ஆதரவை கொடுங்க… 🤗