
அத்தியாயம் 4
” சத்யா …… ” கமலா .
” என்ன கமலாமா ? ” .
” நானும் ஸ்கூல் விட்டு வந்ததிலிருந்து பார்க்கிறேன் . நீ ரொம்ப கவலையா இருக்க . ஸ்கூல்ல எதுவும் பிரச்சனையா ? ” .
” ஒன்னுமில்ல கமலாமா ” என்று சத்யா கூறும்போதே அவன் குரல் விசும்ப ஆரம்பித்தது .
அழுகையை கட்டுபடுத்த முயற்சிக்கிறான் என்பது புரிய . மேலும் அவனை கஷ்டப்படுத்த விரும்பாமல் , ” சரி … போய் முகம் கழுவி வா பா ” என்றார் கமலா .
” சத்யா ….. கமலாமா ….. ” என்று கத்திக் கொண்டே வந்தாள் தீப்ஷீ .
” வா .. டா குட்டி . என்ன டிரஸ் கூட மாற்றாமல் வந்திருக்கீங்க ” என்றுக் கேட்டார் கமலா .
” கமலாமா … சத்யா என் கூட பேசமாட்டேன்றான் . அதான் ஏன் என்று கேட்டுட்டுப் போக வந்தேன் ” என்றாள் தீப்ஷீ .
” சரி டா . இங்க உட்காரு சத்யா வருவான் . நான் போய் இரண்டு பேருக்கும் பால் எடுத்துட்டு வரேன் ” .
ஃபிரஷ்ஷாகிட்டு வெளியே வந்தான் சத்யா. அங்கு தீப்ஷீ இருப்பதை பார்த்தும் எதுவும் பேசாமல் , ஷோபாவில் உட்கார்ந்தான் .
” சத்யா …. “
அவன் திரும்பவே இல்லை .
” சத்யா ….. என்மேல் என்ன கோபம் ? என் கூட பேசமாட்டியா ? ” .
பதில் இல்லை சத்யாவிடம் . எழுந்து சமையலறை சென்றாள் தீப்ஷீ .
” கமலாமா … நீங்க வந்து என்னன்னு கேளுங்க . ” .
” இருமா பால் எடுத்துட்டு வரேன் ” .
” இல்லை . இப்பவே வாங்க ” என்று அவர் கையை பிடித்து இழுத்தாள் .
” இரு டா அடுப்பை நிறுத்திட்டு வரேன் . ” என்றவர் வேகமாக அடுப்பை நிறுத்த ,
அவரை இழுத்து வந்து சத்யா முன் நிற்க வைத்தவள் , “என்னன்னு கேளுங்க கமலாமா. ? ” .
” ஏன் சத்யா நம்ம தீபு குட்டிக்கிட்ட பேசமாட்டேங்கிற ? “
” எனக்கு பிடிக்கல கமலாமா ” என்றான் சத்யா .
” ஏன் பா அப்படி சொல்லுற ? “
” கமலாமா … இன்னைக்கு ஸ்கூல இவள் அண்ணனின் நண்பன் அந்த தேவ் , எல்லார் முன்னாடியும் எனக்கு யாரும் இல்லை என்று சொல்லி கேலி செய்தான் . இவள் அண்ணனும் அதற்கு கூட்டு தான் . அதனால் எனக்கு இவள் நட்பு இனி தேவை இல்லை ” என்றான் கோபமாக .
” சத்யா … அதுக்கு நீ அவங்க இரண்டு பேரு கூடதான் பேசாமா இருக்கணும் . ஏன் தீபு கூட பேசமாட்டேன்ற ? ” .
” சத்யா …. எனக்கும் தேவ்வ பிடிக்காது . அவன் எப்பவும் என்னை கிண்டல் செய்வான் . அண்ணனும் என்னை திட்டுவான். நீ தான் எனக்கு கிடைத்த ஃப்ரெண்டு . நான் உன்னை கிண்டல் செய்ய மாட்டேன் . என்னோடு பேசு சத்யா ” .
” ஆமாம் சத்யா . உன்னோட அம்மா அப்பா செய்த தவறுக்கு நீ எந்த தவறும் செய்யாமல் தண்டனை அனுப்பவிக்கிற. அது போல் எந்த தவறும் செய்யாத தீபுக்கு நீ தண்டனை தந்துடாதே சத்யா ” என்றார் கமலா.
சத்யா யோசித்தான் , ‘ கமலாமா சொல்வது சரியே . நான் தவறு செய்யவில்லை அதுபோல் தீப்ஷீயும் தவறு செய்யவில்லை ‘ என்று நினைத்தான்
” தீபு ….. அப்போ ஒரு கண்டிஷன் . நீ இனிமேல் தேவ் கூட பேச கூடாது , ஃப்ரெண்ட்ஷிப் வைத்துக்கொள்ள கூடாது ” என்றான் சத்யா .
” சரி சத்யா . எனக்கும் ஒரு கண்டிஷன் இருக்கு . நீ என் கூட இனி எப்பொழுதும் சண்டை போடக் கூடாது ” என்றாள் தீப்ஷீ .
” இனிமே எப்பவும் உன் கூட சண்ட போட மாட்டேன் அம்மு ” சத்யா . ‘
#####
அம்முவின் குரலில் நினைவுகளிலிருந்து மீண்டு வந்தான்
” நீ என்ன சொன்னாலும் இந்த விஷயத்தில் நான் மாற மாட்டேன் சத்யா . பிரின்ஸ்பால் மேடம் கிட்ட அவன் உன்ன பத்தி ஏதோ கிண்டலாக சொன்னான் தானே ? அவனின் நக்கல் பார்வையும் , சிரிப்பையும் நான் தான் பார்த்தேனே . இல்லை என்று உன்னால் சொல்ல முடியுமா சத்யா “
சத்யா வாயடைத்து நின்றான் . அவனால் பதில் சொல்ல முடியவில்லை , ” சரி வா வீட்டுக்கு போவோம் ” என்றான் சத்யா .
‘ சத்யா மேல் உள்ள அன்பு இன்னும் குறையவே இல்லை அது போல் என் மேல் உள்ள வெறுப்பும் குறையவில்லையா செல்லம் ‘ என்று தீப்ஷீயோடு மனதில் உரையாடினான் தேவ் .
‘ நான் உன் நண்பனை காயப்படுத்த வேண்டும் என்று அவ்வாறு பேசவில்லை . நான் சாதாரணமாக பேசியதுக் கூட உனக்கு தவறாக தெரிகிறது பெண்ணே ! ‘ என்று வருந்தினான் தேவ் .
பைக்கில் ஏறியவன் ஹெல்மெட்டை போட போக அப்போது தான் நினைவு வந்தவனாக திரும்பி தீப்ஷீயை பார்த்தான் .
” அம்மு உன் ஹெல்மெட் எங்கே ? ” .
” சத்யா , நான் காலைல காரில் வந்ததால் எடுத்துட்டு வரல ” .
பைக்கில் இருந்து கீழே இறங்கியவன் ஹெல்மெட்டை தீப்ஷீக்கு போட்டுவிட்டான் .
” சத்யா , எனக்கு வேண்டாம் , நீ போட்டுக்கோ ” .
” அம்மு நீ போட்டுக்கோ ” என்றவன் மீண்டும் பைக்கில் ஏறி வண்டியை ஸ்டார்ட் செய்தான் .
கல்லூரியில் இருந்த மாணவர்கள் , சத்யாவை ஆச்சரியமாக பார்த்தனர் . இதுவரை தேவை இல்லாமல் எந்த பெண்ணோடும் சத்யா பேசியதில்லை .
அவன் பின்னால் சுத்தாத பெண்களே இல்லை இருந்தும் அவன் யாரையும் கண்டுக் கொண்டதில்லை . அப்படிபட்டவன் இன்று ஒரு பெண்ணை பைக்கில் அழைத்து செல்வதை சந்தேகமாக தான் பார்த்தனர் .
சத்யாவின் செயலை பார்ததவன் , ‘ இவர்களின் நட்பு என்றுமே மாறாது . தீப்ஷீ மேல் சத்யா வைத்து உள்ள அன்பை பார்க்கும் போது எனக்கு பொறாமையாக இருக்கு ‘ , என்று நினைத்துக் கொண்டே தேவ் அவர்களை பின் தொடர்ந்தான் .
“சத்யா , எனக்கு குல்பி வேண்டும் ” .
” அம்மு இந்த மாதிரி டைம்ல நீ தலை குளிப்ப . அதனால குல்பி வேண்டாம் ” .
” சத்யா , அந்த தேவ்வை பார்த்ததிலிருந்து ஒரே டென்ஷன் . குல்பி சாப்பிட்டால் தான் நான் கூலாவேன் ” .
” அம்மு , செல்லக்குட்டி தான சொன்னா கேக்கணும். அடம் பிடிக்கக் கூடாது ” .
” சத்யா , எனக்கு குல்பி வேண்டும் ” கொஞ்சம் அழு குரலில் கேட்டாள் .
வண்டியை யூ டேர்ன் எடுத்தவன் , பாம்பே குல்பி ஐஸ்கிரீம் ஷாப்பில் வண்டியை நிறுத்தினான் .
” வா அம்மு ” என்று அவளை அழைத்துச் சென்றான் .
” அண்ணா இரண்டு குல்பி ” என்று கடைக்காரிடம் ஆர்டர் கொடுத்தாள் தீப்ஷீ .
அவர் எடுத்து வந்த இரண்டு குல்பியையும் அவளே சாப்பிட்டாள் . இரண்டையும் சாப்பிட்டு முடித்தவள் , ” சத்யா , உனக்கு வேண்டுமா ? ” என்றுக் கேட்டாள் .
” அம்மு , ரொம்ப சீக்கிரமா கேட்டுட்ட . இரண்டு குல்பி உள்ளே போனதும் தான் நான் உனக்கு தெரிகிறேனா ” என்றுக் கேட்டான் சத்யா.
அசடு வழிந்தாள் தீப்ஷீ . ” எனக்கு வேண்டாம் அம்மு , வா போகலாம் ” என்றான் சத்யா .
” சத்யா , எனக்கு ஒரே ஒரு பாட் குல்பி ” , என்றாள் தீப்ஷீ .
” அம்மு நோ ” .
” சத்யா , ப்ளீஸ் ” .
” சரி நான் வாங்கி தருகிறேன் , நான் என்ன சொன்னாலும் செய்வியா ” .
” சத்யா , நீ இப்படி செல்ஃபிஷ்ஷா மாறுவ என்று நான் நினைக்கவே இல்லை . நீ வாங்கி தந்தால் தான் நீ சொல்வதுப் போல நான் செய்கிறேனா ” என்றாள் தீப்ஷீ கோபமாக .
‘ ஏன் இப்படி சத்யா சொல்கிறான் ? இவன் அவளை தொல்லை செய்கிறானோ ? ‘ என்று நினைத்துக் கொண்டு கோபமாக அங்கு நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தான் தேவ் .
” நீ கோபப்படுறதுக்கெல்லாம் நான் ஒன்னும் பயப்பட மாட்டேன் . நீ ஆர்டர் கொடு.”
” அண்ணா , ஒன் பாட் குல்பி ” என்றாள் தீப்ஷீ .
அவள் சாப்பிட்டு முடிக்கும்வரை காத்திருந்தான் , ‘ இவள் இன்னும் பத்துக் குல்பி கூட அசால்டா உள்ள தள்ளுவாளோ ‘ என்று மனதில் நினைத்த சத்யா வெளியே , ” அம்மு நான் போய் பில் பே பண்ணிட்டு வரேன் ” என்றான் .
” சாப்பிட்ட பின் பே பண்ணலாமே சத்யா ” .
” இல்லை அம்மு , இப்பவே பே பண்ணுறேன். நேரமாகுது வீட்டிற்கு போகணும் ” .
‘ உஷார் ஆகிட்டியா சத்யா . உன்னை இன்னொரு நாள் நான் கவனித்துக் கொள்கிறேன் ‘ என்றது தீப்ஷீயின் மைண்ட் வாய்ஸ் .
வண்டியை ஸ்டார்ட் செய்த சத்யா , நேராக சென்றது மெடிக்கல் ஷாப்பிற்கு . இறங்கியவன் போய் அவளுக்கான இருமல் டானிக் மற்றும் மாத்திரை வாங்கி வந்தவன் அவள் கையில் கொடுத்தான் .
” அம்மு , சொன்னது ஞாபகம் இருக்குல . நைட் ஒழுங்க மாத்திரை , மருந்தை சாப்பிட வேண்டும் ” என்றான் சத்யா .
கோபமாக பெற்றுக் கொண்டவள் , வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள் . அவள் போனிடெயிலை பிடித்து இழுத்து அவளை வம்பிழுத்தான் சத்யா .
” சத்யா , தலையில் கை வைக்காதே ” .
” வச்சா என்ன டி பண்ணுவ ” . சத்யா , தீப்ஷீயை வம்பிழுக்கும் போது மட்டும் அரிதாக சத்யா டி என்ற சொல்லை பயன்படுத்துவான் அது புரிந்த தீப்ஷீ , ” சத்யா , எனக்கு வலிக்குது ” என்று அழு குரலில் கூறினாள் .
சத்யாவின் வீக்னஸ் தீப்ஷீ சோகமாக கூறினாளே போதும் அவன் மறு வார்த்தை பேசாமல் அவள் விரும்பியதுப் போல் செய்து விடுவான் .
” சாரி அம்மு ” என்றவன் பைக்கில் ஏறி வீட்டை நோக்கி சென்றான் .
” அடப்பாவிகளா , இதுக்கா இவ்வளவு பில்டப் . நான் சொல்வதை எல்லாம் செய்ய வேண்டும் என்று . கொஞ்ச நேரத்தில் என் பீபியை அதிகப்படுத்தி , மனுஷனை சாகடிச்சிட்டீங்க ” என்று தேவ் அவன் காரில் சத்தமாக புலம்பினான் .
ஒருவழியாக மூவரும் வீடு வந்து சேர்ந்தனர் . சத்யா , தீப்ஷீ இருவரும் சத்யா வீட்டிற்கு சென்றனர் .
அதை பார்த்த தேவ் , ‘ இவளுக்கு வேறு வேலையே இருக்காதுப் போல . சத்யாவோடு இருப்பதை தவிர ‘ என்று நினைத்தவன் . நேராக தன் வீட்டிற்கு சென்றான்.
” வா பா தேவ் , காலேஜ் முதல் நாள் எப்படி போனது பா ? ” என்றுக் கேட்டார் இந்திராணி .
” ரொம்ப நல்லா இருந்தது நானி ” என்றவன் நேராக அவன் ரூம் சென்று ரெப்ஃப்ரஷ் செய்துக் கொண்டு மீண்டும் ஹாலிற்கு வந்தான் .
அவனுக்கு டீ மற்றும் ஸ்நாக்ஸ் எடுத்து வந்த அக்ஷிதா , ” எப்படி பா புது காலேஜ் இருந்தது ” என்றுக் கேட்டார் .
” சூப்பராக இருந்தது மா உங்களை போல… ” என்றான் தேவ் .
முன்பு போல் இல்லாமல் தேவ் இப்போது அன்பாக பேசுவது அக்ஷிதாவின் மனதை குளிர்வித்தது . அவனை ஹாஸ்டலில் சேர்த்து , அவனை பிரிந்து இவர் விட்ட கண்ணீருக்கு இறைவன் பதில் தந்துவிட்டதாகவே அக்ஷிதா நினைத்தார் .
” உங்க அம்மா சூப்பர்னா, நான் சுமாரா ” என்று இந்திராணி போருக்கு தயாரானார் .
” ஐயோ ! இல்ல நானி , நீங்க ரொம்ப சூப்பர் . எங்க அம்மா வெறும் சூப்பர் ” என்ற தேவ் , அக்ஷிதாவை பார்த்து கண்ணடிக்க . அக்ஷிதா சிரித்துக் கொண்டே உள்ளே சென்றார் .
” என்னோட ராஜா ” என்ற இந்திராணி , தேவ்வை அணைத்துக் கொண்டார் .
அங்கே உட்கார்ந்திருந்த அமர் , ‘ ஓஹோ ! இது தான் ஒரே கல்லில் இரு மாங்காய் அடிப்பதுப் போல் . இது தெரியாமல் நான் மனைவி மற்றும் அம்மாவிடம் படும்பாடு இருக்கே . ஆனா தேவ் , நீ சரியான கேடி டா ‘ என்று நினைத்துக் கொண்டே அமைதியாக தேவ்வை பார்த்தார் .
அப்பாவின் மைன்ட் வாய்ஸ் புரிந்த தேவ் , அவரை பார்த்து தன் அக்மார்க் நக்கல் சிரிப்பை சிரித்து வைத்தான்.
” அம்மா நான் சர்வேஷ் வீட்டிற்கு போயிட்டு வரேன் ” என்றான் தேவ் .
” சரி பா ” .
சர்வேஷ் வீட்டின் காலிங் பெல்லை அழுத்தி, காத்திருந்த தேவ் , ‘ தீப்ஷீ வந்து கதவை திறக்கணும் ‘ என்று மந்திரம் போல் பலமுறை மனதில் சொல்லிக் கொண்டே இருந்தான்.
அவன் வேண்டுதல் பலித்தது போல் . தீப்ஷீ வந்து கதவைத் திறந்தாள் . அங்கு தேவ்வை பாரத்ததும் அவள் கண்கள் வெறுப்பைக் காட்டியது .
அதைப் பார்த்த தேவ் மனதிற்குள் , ‘ என்னை பார்த்ததும் உன் முகம் ஏன் இப்படி போகுது . இதே அந்த சத்யாவை பார்த்திருந்தால் பல்லை காண்பித்திருப்ப தானே . இருடி நீ செய்கின்ற செயல் அனைத்திற்கும் ஆன விலையை நீ தான் தர போற . உன்னிடம் வட்டியும் முதலுமாக எல்லாம் பெற்றுக் கொள்வேன் நான் ‘ என்று நினைத்துக் கொண்டான் .
” யார் தீபு ? ” என்றுக் கேட்டுக் கொண்டே வந்தான் சர்வேஷ் .
அங்கு தேவ் நிற்பதை பார்த்து . ” தீபு , தேவ்வை உள்ளே வா என்று கூப்பிடாமல் , அவனை உள்ளேயும் விடாமல் ஏன் இப்படி நின்றுக் கொண்டிருக்க . முதல்ல நகரு . ” என்றான் சர்வேஷ் .
” உள்ள வா டா தேவ் ” என்று அவன் கையை பிடித்து அழைத்து வந்தான் சர்வேஷ் .
” சத்யா வந்தா நீ ஒரு நாளாவது வா அப்படினு சொல்லியிருக்கியா ? இல்லை தானே… அப்புறம் நான் மட்டும் சொல்லணும் என்று எதிர்பார்க்காதே ” என்ற தீப்ஷீ தன் அறைக்கு சென்றுவிட்டாள் .
‘ சரியான சண்டைக்காரி. அராத்து. ‘ என்று நினைத்துக் கொண்டான் தேவ் .
” அவ கிடக்குறா . நீ வந்து உட்காரு தேவ் ” என்ற சர்வேஷ் . சத்தமாக, ” அம்மா , அப்பா , தேவ் வந்திருக்கான் ” என்றான் .
இருவரும் ஹாலிற்கு வந்தனர் . ” வா பா தேவ் . நல்லாயிருக்கியா ? உன்னை டிவியில் பார்த்தேன் , சர்வேஷ் தான் காண்பித்தான் ” என்றார் சரண்யா . மிகவும் அன்பானவர் , படத்தில் வரும் அப்பாவி சரண்யா அம்மாவை போல இவரும் அப்பாவி .
” நான் நல்லாயிருக்கேன் ஆன்ட்டி . நீங்க எப்படி இருக்கீங்க ? ” என்றான் தேவ் .
” நான் நல்லாயிருக்கேன் தேவ் . டீ எடுத்துட்டு வரேன் “
” வேண்டாம் ஆன்ட்டி , இப்போ தான் குடிச்சிட்டு வரேன் ” .
” சரி அப்போ டின்னர் இங்க சாப்பிடணும் . நான் போய் ரெடி செய்கிறேன் ” என்றவர் . தேவ்வை மறுப்பு சொல்ல விடாமல் சமையலறை நோக்கி சென்றார் சரண்யா .
” எங்களை மறந்திருப்ப என்று நினைத்தேன் தேவ் . ஆனா , நீ எங்களை பார்க்க வந்தது சந்தோஷமா இருக்கு பா ” என்றார் தினேஷ் . சரண்யாவை போல் இல்லாமல் மிகவும் கண்டிப்பானவர் .
” நான் எப்படி அங்கிள் உங்களை எல்லாம் மறப்பேன் . சர்வேஷ் தான் என் உயிர் தோழன் இன்று வரை ” என்றான் தேவ் .
” நான் நினைத்தது போல் விளையாட்டில் நீ பெரியாளாக வந்துட்ட. டைக்குவாண்டோ சாம்பியன் ப்ளேயர் எங்களோட நெய்பர்னு சொல்லிக்கவே பெருமையா இருக்கு ” என்றார் தினேஷ் .
‘ வெறும் நெய்பர் இல்லை உங்கள் வருங்கால மாப்பிள்ளை ‘ என்று மனதில் நினைத்த தேவ் வெளியில் , ” இன்னும் டைக்குவாண்டாவில் நான் எதுவும் பெருசா சாதிக்கல அங்கிள் . இன்னும் நான் அதுக்கு பல போட்டியில் வெற்றிப் பெற வேண்டும் ” என்றான் தேவ் .
” கண்டிப்பா நீ வெற்றி பெறுவ தேவ் ” என்றார் தினேஷ் .
பின் மூன்று ஆண்களும் சேர்ந்து அரசியல் , பொருளாதாரம் , நாட்டு நடப்பு என்று அலசி ஆராய்ந்தனர் .
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


தீப்ஷி சத்யாவை கல்யாணம் பண்ணலனாலும் தேவ் வை கல்யாணம் பண்ணிக்க வேணாம் … ஃப்ரெண்ட்ஷிப் ப லூசு மாதிரி கண்டபடி பேசுறான் …
தவறு செய்யாமலே தண்டனை அனுபவிக்கும் தன்னைப்போல் தீயும் எந்த தவறும் செய்யவில்லை எனும்போது எதற்கு பேசாமல் அவளுக்கு தண்டனை அளிக்க வேண்டும் என்றெண்ணி தேவிடம் பேச கூடாது என்ற நிபந்தனையோடு மீண்டும் கைகோர்த்து கொண்டான்.
சத்யா சொல்லாமலே அங்கு என்ன நடந்திருக்கும் என்று சரியாக யூகித்து சொல்கிறாளே தீ.
சத்யா மீது கொண்ட அன்பும் மாறவில்லை, தேவின் மீது கொண்ட வெறுப்பும் மாறவில்லை தீக்கு.