
காதல் – 4
அஸ்வதி விஹான்னை அழைக்கவும் அவன் அவளை நிமிர்ந்து பார்த்தான்……
நா உங்களுக்கு ஹெல்ப் பண்ணுறேன் என்று அவள் அவனருகில் அமர்ந்து கொண்டு அவன் முடியில் சிக்கியிருந்த அவளின் கிளிப்பை மெதுவாக எடுத்து கொண்டு இருந்தாள்……
அவனின் ஒவ்வொரு முடியையும் மெது மெதுவாக அவனுக்கு வலிக்காமல் கிளிப்பில் இருந்து எடுத்து விட்டாள் , அவன் முடியில் சிக்கியிருந்த அவளின் கிளிப்பை முழுவதுமாக அவள் எடுத்து விட்டாள்…..
ரொம்ப ரொம்ப சாரிங்க , என்னாலதான் உங்களுக்கு இப்படி ஆச்சு…..
இன்னைக்கு மட்டுமே நீங்க என்கிட்ட நெறய சாரி கேட்டுட்டீங்க போதும் என்று அவன் சிரித்தான்…….
நாதான தப்பு செஞ்சேன் அப்போ நாதாண சாரியும் சொல்லனும் என்று அவள் அவனுக்கு கொஞ்சம் தள்ளி அமர்ந்தாள்…..
அய்யோ உங்க கோட் எங்கிகிட்டதான் இருக்கு , நா குடுக்கவே மறந்துட்டேன் நா நாளைக்கு தரவா?
எப்பவேனாலும் குடுங்க ஒரு பிராப்ளமும் இல்ல ….
நீ குடுக்கலனாலும் பரவாயில்ல என்று அங்கு விஹான்னா வந்தாள்….
அதெப்படி விஹான்னா இவங்க கோட்ட நா வச்சிக்க முடியும்?
இவன் இந்த கோட்டெல்லாம் போடவே மாட்டான் உனக்கு அந்த கோட் அழகா இருந்துச்சு சோ நீயே வச்சிக்க என்று விஹான்னா அவளிடம் ஜாலியாக பேசினாள்…..
அஸ்வதிக்கு விஹான்னாவை மிகவும் பிடித்து விட்டது , அவள் அந்த ஊரை பற்றியும் அந்த ஊரின் கிளைமேட் பற்றியும் பேசிக்கொண்டே இருந்தாள் , ஒரு கட்டத்திற்கு மேல் விஹான்னா பேச்சு சுவாரஸ்யத்தில் இருக்க அஸ்வதி நன்றாக தூங்கி விட்டாள், தூங்கியதில் மறுபடியும் விஹான் மீதே சாய்ந்து தூங்கி விட்டாள்…..
ஏய் விஹான்னா இவங்க உன்னோட பேச்சுல தூங்கிட்டாங்க பாரு…..
அண்ணே இவ இப்போதான் அம்மாகிட்ட தூக்கம் வரலன்னு சொல்லிட்டு வெளிய வந்தா ஆனா இப்போ நல்லா தூங்குறா?
உன்னோட பேச்சு கேட்டு தூக்கம் வந்திருக்கும்…..
இல்ல அண்ணே இவளுக்கு என்கிட்ட பேச ரொம்ப புடிச்சிருக்கு அது அவ கண்ணுல நல்லா தெரிஞ்சது , ஆனாலும் இவளுக்கு தூக்கம் வருதுன்னா….
போதும் உன்னோட ஆராய்ச்சி வா இவங்களை அவங்க ரூம்க்கு கூட்டிட்டு போவோம் என்று அண்ணன் தங்கை இருவரும் இணைந்து அவளை தூக்கம் கலையாதாவாறு மெதுவாக அழைத்து சென்றார்கள்…..
கொஞ்ச தூரம் சென்றவுடன் அஸ்வதி தூக்கத்தில் உலற ஆரம்பித்தாள்….
அம்மா வலிக்குது அம்மா….
நா எதுமே பண்ணல என்று அவள் அந்த தூக்கத்திலும் அழுதாள் …..
பிறகு விஹான் நெஞ்சில் சாய்ந்து கொண்டு அப்பா அப்பா என்று எதோ முனங்கி கொண்டு வந்தாள்……
விஹான்னுக்கு அவள் ஏன் இப்படி அழுகிறாள் என்று புரியவில்லை…..
விஹான்னா அஸ்வதி குடும்பத்தினர் தங்கியிருக்கும் அறையை தட்டினாள் , நீண்ட நேரம் ஆகியும் யாரும் திறக்கவில்லை …..
விஹான்னா மீண்டும் கதவை தட்டினாள் , தூக்க கலக்கத்தில் அனந்தி கதவை திறந்தாள்…..
ஹே அனந்தி உன்னோட அக்கா அஸ்வதி வெளியவே தூங்கிட்டா , அதான் விட்டுட்டு போலாம்ன்னு வந்தோம்…..
இவளை எதுக்கு இங்க கூட்டிட்டு வாரிங்க இவள ஹால் சோபாவுல போடுங்க என்று அவள் கதவை சாத்திவிட்டாள்…..
விஹான்னாவுக்கும் விஹானுக்கும் ஒன்றும் புரியவில்லை , உடனே சுலோச்சனா வந்து கதவை திறந்தார் , இவளை இங்க படுக்க வச்சிருங்க என்று கூற பெட்டில் அஸ்வதியை படுக்க வைத்து விட்டு அண்ணன் தங்கை இருவரும் வெளியே சென்றார்கள் , விஹான்னா கதவை பூட்ட சென்ற போது அவள் கண்ட காட்சி….
அனந்தி அஸ்வதியை பெட்டில் இருந்து கீழே தள்ளி விட்டாள் அதில் அஸ்வதி கீழே பொத்தென்று விழுந்தாள்…..
உனக்கு என்னோட பெட் கேக்குதோ??
கீழ தரயில படு என்று அவளின் தாயாரும் அவளை மிதித்து விட்டு சென்றார்…..
அஸ்வதி ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு மெதுவாக அழுது கொண்டு இருந்தாள்…..
விஹான்னா அவர்களின் அறையவே பார்த்து கொண்டு இருந்தாள் இதை பார்த்த விஹான் அவளை அழைத்து கொண்டு அவர்களின் அறைக்கு சென்றான்….
ஏய் விஹான்னா அவங்க ரூமயே ஏன் அப்படி எட்டி பாத்துட்டு இருந்த?
அண்ணே அந்த சுலோச்சனா ஆன்டி அண்ட் அந்த அனந்தி கெட்டவங்க….
ஏன் அப்படி சொல்லுற?
அஸ்வதியோட அம்மாதான அவங்க ஏன் அவங்க பொன்னுக்கு கெட்டது செய்ய போறாங்க?
எதோ பிரச்சனை இருக்குது அண்ணா , நா நாளைக்கு அஸ்வதிக்கிட்ட பேச போறேன் என்று விஹான்னா தூங்க சென்றாள்……
எதோ பண்ணு என்று அவன் அவனின் பெட்டில் போய் படுத்து உறங்கி விட்டான்…..
விஹான்னா நீண்ட நேரம் அஸ்வதியை பற்றி யோசித்து கொண்டே உறங்கி விட்டாள்…..
மறுநாள் காலை……
வீட்டில் யாரும் இல்லை, அப்பொழுதுதான் விஹான் எழுந்து பல் துலக்கி விட்டு குளித்து முடித்து விட்டு இடையில் ஒரு ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து கொண்டு தலையை துவட்டியப்படி வந்தான்…..
ஹெல்ப் ஹெல்ப் என்று அஸ்வதியின் அழுகுரல் கேட்கவும் அவன் வெளியே ஓடி சென்று பார்த்தான் , வீட்டில் யாருமில்லை என்று நினைத்து அவன் வளர்க்கும் ஆளுயர ஓநாய் போல இருக்கும் அவனின் இரு நாய்களை அவிழ்த்து விட்டு இருந்தான் அதுதான் அவளை துரத்தி கொண்டு இருந்தது…..
அந்த நாய்களிடமிருந்து தப்பிக்க ஓட்டிக்கொண்டு இருந்த அஸ்வதி விஹான் வருவதை பார்த்ததும் அவன் பின்னல் ஓடி ஒளிந்து கொண்டாள்….
என்னை காப்பாத்துங்க இந்த நாய் என்ன கடிக்க வருது என்று அவள் அவனின் பின்னல் நின்று கொண்டாள்….
அவள் பயத்தில் அவனை முதுகோடு கட்டி கொண்டு நிற்கிறாள் , அவளின் சூடான மூச்சுக்காற்று அவனின் முதுகில் பட்டு பட்டு போகவும் அவனுக்கு அந்த குளிரிலும் உடம்பு சூடானது …..
சோஜோ மோஜோ அமைதியா இருங்க இவங்க நம்ம வீட்டுக்கு வந்த கெஸ்ட் ரெண்டு பேரும் இவங்கக்கிட்ட சாரி சொல்லுங்க , இங்க பாருங்க உங்களை பாத்து அஸ்வதி எப்படி பயந்து போயிட்டாங்கன்னு என்று அவன் அந்த நாய்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கொண்டு இருந்தான்…..
அவன் கூறியதை கேட்டு அந்த இரண்டு நாய்களும் தங்களது முண்ணங்காலை உயர்த்தி அவளிடம் மன்னிப்பு கேட்டது….
விஹான் நீங்க சொல்லுறத இவங்க கேப்பாங்களா?
கேப்பாங்க அஸ்வா….
ஆமா இவங்க ரெண்டு பேரோட பேரு என்ன சொன்னீங்க?
இவன் பேரு சோஜோ இவன் பேரு மோஜோ…..
அஸ்வதி மெதுவாக அவன் பின்னால் இருந்து வந்து அவனின் கைகளை பிடித்து கொண்டே நின்றாள்….
நா இவங்க ரெண்டு பேரோட தலையை தடவி கொடுத்தா கடிப்பாங்களா?
அவள் அவ்வாறு பாவமாக முகத்தை வைத்து கொண்டு கேட்கவும் அவன் சிரித்து கொண்டே இல்லை என்று தலை ஆட்டினான்….
நீங்க சிரிக்குறது உங்க தாடி மீசையை தாண்டி வெளியே நல்லா தெரியுது , இப்படி அடிக்கடி சிரிங்க அழகா இருக்கீங்க என்று அவள் அவனின் கைகளை விடாமல் பிடித்து கொண்டே சோஜோ மோஜோ இருவரின் தலையை தடவி கொடுத்தாள்…..
அவளை பார்த்து அந்த சோஜோ மோஜோ வாலாட்டியது….
ஹே விஹான் இவங்க ரெண்டு பேரும் என்ன பாத்து வாலாட்டுறாங்க என்று அவள் சிரித்து கொண்டே கூறினாள் , அப்பொழுதுதான் அவள் விஹானை முழுவதுமாக கவனித்தாள் மேலாடை இல்லாமல் அவன் ஷார்ட்ஸ்சோடும் கழுத்தில் ஒரு துண்டோடும் நின்று கொண்டிருந்தான்….
சட்டென்று அவள் அவனை விட்டு விலகி நின்றாள் , குளித்து முடித்து விட்டு வந்த அவனின் உடம்பில் ஒட்டியிருந்த நீர் துளிகள் அவளின் நீல நிற சுடிதாரில் அப்படியே தெரிந்தது….
அது….
சாரி …
நா…
இவங்க ரெண்டு பேர பாத்து பயந்து போய்….
பரவாயில்ல இருக்கட்டும் , டேய் சோஜோ மோஜோ இனிமே அஸ்வதி உங்க ரெண்டு பேருக்கும் பெஸ்ட் பிரண்ட் , இனி இவங்களை இப்படி துரத்த கூடாது என்று அவன் கூற சோஜோ மோஜோ இரண்டும் தலை ஆட்டியது….
விஹான் நீங்க சொல்லுறதெல்லாம் இவங்க சூப்பரா கேக்குறாங்க….
நீங்க என்ன சொன்னாலும் இனி இவங்க கேப்பாங்க என்று அவன் சென்று விட்டான்……
அஸ்வதி சோஜோ மோஜோ இருவருடனும் விளையாடி கொண்டு இருந்தாள்…..
அந்த இரு நாய்க்குட்டிகளும் இவளோடு பாசமாக பழகியது…..
ஹே அஸ்வதி நீ இன்னைக்கு ஹெமிஸ் பார்க் போகலயா
சோஜோ மோஜோக்கூட விளையாடிட்டு இருக்க?
என்று அங்கு விஹான்னா வந்தாள்….
எனக்கு கால் வலி அதான் கூட்டிட்டு போல என்று அவள் விஹான்னாவை பார்க்காமல் வேறு எங்கோ பார்த்து கொண்டு கூறினாள்……
நீ பொய் சொல்லுற அஸ்வதி….
அஸ்வதி அவளிடம் பொய்தான் கூறுகிறாள் என்று விஹான்னா சரியாக கேட்கவும் அஸ்வதி அவளை ஆச்சர்யமாக பார்த்தாள்….
அஸ்வதி உனக்கு எதோ பிராப்ளம் இருக்கு , என்கிட்ட சொல்லு நா என்னால முடிஞ்ச ஹெல்ப் உனக்கு பண்ணுறேன் என்று அவள் அஸ்வதியின் கைகளை ஆறுதலாக பற்றி கொண்டு ஒரு சேரில் அமர வைத்தாள்…..
விஹான்னா அவ்வாறு கேட்கவும் அஸ்வதி அவளை கட்டி அணைத்து கொண்டு அழுதாள்…..
நீண்ட நேரம் அழுது கொண்டே இருந்தாள்……
அச்சோ சரி சரி நா எதும் கேக்கல , நீ அழுகையை நிப்பாட்டு என்று விஹான்னா அவளின் கண்ணீரை துடைத்து விட்டாள்…..
விஹான்னா நா பொறந்ததுல இருந்து இதுவரை யாரும் எங்கிட்ட எனக்கு என்ன பிரச்சனைன்னு கேட்டதில்லை நீதான் ஃபர்ஸ்ட் என்று அவள் மீண்டும் விஹான்னாவை கட்டி அணைத்து கொண்டு அழுதாள்….
சரி உனக்கு அழனும் போல இருந்தா எம்மேல சாஞ்சு எவ்வளோ வேணாலும் அழுதுக்கோ ஆனா உனக்கு என்ன பிரச்சனைன்னு எங்கிட்ட நீ இன்னைக்கு சொல்லியே ஆகனும் என்ன?
எனக்கு உன்ன ரொம்ப புடிச்சிருக்கு அஸ்வதி, நம்ம நல்ல ப்ரெண்ட்ஸ்சா இருக்கலாமா?
என்று விஹான்னா கை நீட்டினாள் அஸ்வதியும் அழுகை பாதி சிரிப்பு பாதி என்று கை கொடுத்தாள்…….
நீண்ட நேரம் அஸ்வதி விஹான்னா தோளில் சாய்ந்து கொண்டு அவள் அத்துணை வருடங்கள் சேர்த்து வைத்திருந்த கண்ணீரை அழுது தீர்த்து கொண்டு இருந்தாள் , நீண்ட நேரம் அழுதமையால் அப்பொழுது திடீரென்று அவளுக்கு வீஸிங் வந்து மூச்சு முட்டியது ……
அஸ்வதியின் கண்கள் இரண்டும் மேலே சொருக ஆரம்பித்தது….
அதை பார்த்த விஹான்னா பயந்து விட்டாள்….
அண்ணா….
அண்ணா ….
அண்ணா….
சீக்கிரம் இங்க ஓடி வா…
அண்ணா….
அஸ்வதிக்கு வீசிங் வருது என்று அவள் கத்தினாள் …..
தங்கையின் அலறல் கேட்டு விஹான் ஓடி வந்தான் , அங்கு அவன் கண்ட காட்சி…….
அஸ்வதி மூச்சு விட முடியாமல் கண்கள் மேலே சொருக விஹான்னா மேல் சாய்ந்து கொண்டு இருந்தாள்…..
என்னாச்சு விஹான்னா?
அண்ணே அஸ்வாவ காப்பாத்து என்று அவளும் அழுதாள்….
சரி சரி நீ அழாத போய் தண்ணி கொண்டு வா என்று அவன் கூற விஹான்னா தண்ணீர் எடுக்க ஓடினாள் ….
விஹான் அஸ்வதியை தன் மேல் சாய்த்து கொண்டு அவளின் கைகளை தேய்த்து விட்டு கொண்டு இருந்தான், பிறகு அவனின் மூச்சுக்காற்றை அவளுக்கு கொடுத்து அவளுக்கு வீசிங்கை நிற்க வைத்தான் , விஹான் செய்த சிகிச்சையில் அவளுக்கு வீசிங் நின்று விட்டது ஆனால் அவள் இன்னும் மயக்கத்தில் இருந்து எழவில்லை அவன் மீது தான் சாய்ந்து கொண்டு இருந்தாள்…..
விஹான் தன் மேல் சாய்ந்து கொண்டு இருக்கும் அஸ்வதியவே பார்த்து கொண்டு இருந்தான்….
அதை தூரத்தில் இருந்து வரும்போதே விஹானா பார்த்து விட்டாள்
அண்ணே இந்தா தண்ணி ….
அவன் மெதுவாக தண்ணீரை அஸ்வதியின் முகத்தில் தெளித்தான்….
ஒரு ஐந்து நிமிடம் கழித்து அஸ்வதி லேசாக கண்களை விழித்து பார்த்தாள்…..
அவள் விஹானின் மார்பில் சாய்ந்து கொண்டு இருப்பது அப்பொழுதுதான் அவளுக்கு உரைக்க, வேகமாக எழ பார்த்தாள் ஆனால் முடியவில்லை….
அஸ்வா இப்போ ஓகேவா?
ஒரு நிமிஷம் நா பயந்து போயிட்டேன் ….
எனக்கு ஒன்னுமில்ல விஹானா…..
என்று அவள் மெதுவாக எழுந்து நேராக அமர பார்த்தாள் , விஹான் அவளை நேராக அமர வைத்தான்…..
இருவரின் விழிகளும் சந்தித்து கொண்டன…..
விழி சந்திப்பில் ஆரம்பித்தது ,
வாழ்க்கை சந்திப்பில் இணையுமா?
பொறுத்திருந்து பார்ப்போம்….
தொடரும்…..
உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்……
💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


பிடித்த விடயத்தை செய்வதிலும் ஒருவருக்கு சோர்வு வருகிறதென்றால் அவர்கள் எந்தளவுக்கு மனதளவில் துயரப்பட்டு உணர்வுகளை தொலைத்திருக்க வேண்டும்.
விஹானாவின் நட்பு அவளை மனம் திறக்க செய்கிறதா பார்ப்போம்.
சோஜோ மோஜோ பெயர் நல்லா இருக்கே.
அஸ்வா விஹான் நட்பு உரிமையுள்ள உறவாக எவ்வாறு மாறுகிறது என்று பார்ப்போம். ❤️
Thanks for your valuable comments pa😇 sojo mojo nalla irukaa 😂
Hmm yes sis different taa நல்லா இருக்கு. 😍😍
Romba nandrigal pa😇
நல்ல டைட்டில் அஸ்வதி விஹா அஸ்விஹா வின் காதல் … இந்த காதல் தொடருமா ?? ஜெயிக்குமா ??
Thank you for your valuable comments 😇