
செந்தமிழ் அறைக்குள் நுழைந்ததும்… இளமாறன் வேகமாக எழுந்து கதவை பூட்டி விட்டு மெத்தையில் அமர்ந்தான் … அவனுக்கு அருகில் நிற்கும் அவளை பார்வையாலே அளந்தான் … காலையில் பார்த்த மாதிரியே அதே சேலையில் அதே அளவான ஒப்பனையில் இருந்தாள்… இரவில் பூத்த மலராய் வாசம் வீசினாள் …
அவன் பார்வை பாரபட்சமில்லாமல் அவள் உடலை தழுவிக் கொண்டிருக்க … அவள் கூச்சத்தில் நெளிந்தாள் … அவள் பால் சொம்பை அவனிடம் தர எரிச்சலாக அங்க டேபிள் மேல வை என்றான் … இங்க பாரு செந்தமிழ் நாம அன்னைக்கு பேசுனது பேசுனது தான் … உனக்கும் எனக்கும் நடுவில ஒண்ணும் இல்ல… நீ உன் மனசுல தேவையில்லாம எந்த கற்பனையும் வளர்த்துக்காத…
காலைல அந்த போட்டோகிராபர் சொன்னான்னு என் கையை தொடுற … எனக்கு இதெல்லாம் கொஞ்சம் கூட பிடிக்காது … நீ உன் லிமிட்ல இருந்துக்கோ … அதை கிராஸ் பண்ணா நான் மனுஷனா இருக்கமாட்டேன் … எனக்கு கோபம் வந்தா நான் மிருகமா மாறிடுவேன்… அப்புறம் உன் எதிர்காலம் கேள்விக்குறி ஆகிடும் …
ஆறு மாசம் என் அம்மா முன்னாடி … இந்த ஊர் முன்னாடி நீயும் நானும் புருஷன் பொண்டாட்டியா நடிக்க போறோம் … அவ்ளோதான் … நான் பிசினஸ் ஆரம்பிச்ச அடுத்த நாள் உன்னை காலேஜில சேர்த்து விட்டு.. ஹாஸ்டல்ல விட்டுடுவேன்…
இப்போவே என் அம்மாக்கு என் மேல சந்தேகம் வந்திடுச்சு … இடையில ஏதாவது நீ குளறுபடி பண்ணி என்னோட கனவை நடக்க விடாம பண்ணா … நான் எதுவும் உனக்கு பண்ணமாட்டேன் … அதனால ஒழுங்கா நல்ல பிள்ளையா இரு என்று ஸ்கூல் டீச்சர் மாணவியிடம் சொல்வதை போல் அதட்டலாக சொல்லி விட்டு அவளை நிமிர்ந்து பார்த்தான் …
அவள் பார்த்த அந்த பார்வை … என்னா கண்ணு டா இது … என்று நினைத்தவன் இதயம் அதிகமாய் துடித்தது … பார்வையை வேகமாக திருப்பினான் … எழுந்து அவன் பீரோவில் இருந்து சில பேப்பர்களை எடுத்தான் …
இது காலேஜ் அட்மிஷன் ஃபார்ம் … இது டிவோர்ஸ் டாக்குமெண்ட் எல்லாத்துலயும் படிச்சிட்டு சைன் போடு … ஆமா நீ என்ன படிக்க ஆசைப்படுற என்று அவன் கேட்க … எனக்கு தெரியலைங்க என்றாள் …
உனக்கு வேற என்ன தான் தெரியும்… எதைக் கேட்டாலும் தெரியலைன்னு ஒரு பதில் … தெரியாதுங்கற மாதிரி ஒரு பார்வை … அவன் எரிச்சலான முகத்துடன் பேச அவள் பயத்தில் கொஞ்சம் மிரட்சியாக அவனை பார்த்தாள் …
சரி நீ ஸ்கூல்ல +2 ல எவ்ளோ மார்க் என்று அவன் கேட்க … 600க்கு 596 மார்க் என்றாள் … அப்படியே வாயடைத்து போனான் … என்ன மேஜர் எடுத்த என்று அவன் கேட்க … கம்ப்யூட்டர் மேத்ஸ் என்றாள் … மேத்ஸ்ல எவ்ளோ என்று கேட்க … சென்டம் வாங்கினேன் … எனக்கு மேத்ஸ் ரொம்ப பிடிக்கும் … இன்னும் 4 மார்க் வாங்கியிருந்தா ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்திருப்பேன் … ச்சே வாங்க முடியாம போச்சு … படிப்பு என்றதும் கண்களில் ஆர்வம் மின்ன பேசியவளை ஆசையாக பார்த்தான் …
நீ B.Sc IT எடுத்து படி … உன் படிப்பு திறமைக்கு நல்ல வேல்யூ இருக்கு என்றவன் … அவள் கையெழுத்து போட்டதும் மீண்டும் முகத்தை கடுகடுப்பாக வைத்துக் கொண்டு … நான் சொன்னதை எல்லாம் ஞாபகம் வச்சுக்கோ என்றான் …
ஹ்ம்ம் என்றவள் நான் எங்க படுத்து தூங்குறது என்று கேட்க … அவளை பார்த்தான் … அவன் இன்னும் அவளை உட்கார கூட சொல்லவில்லை … அங்க பெட்ஷீட் தலையணை இருக்கும் … கீழ படுத்துக்கோ என்று சொன்னவன் அய்யோ புனிதாம்மா கண்டுபிடிச்சிடுவாங்களே என்று நினைத்து … இல்ல நீ பெட்ல என் பக்கத்திலேயே படு … நீ உள்ள படுத்துக்கோ … நான் முன்னாடி படுத்துகிறேன் என்றான் …
அப்படியே அசையாமல் நின்றவளை என்ன நிக்கிற என்று அவன் கேட்க … நீங்க பால் சாப்பிடல என்று தயங்கி கொண்டே சொன்னாள் … இப்போ இது ரொம்ப முக்கியம் என்று அவன் சொல்ல … அம்மா காலைல கேட்பாங்க என்றாள் …
இந்த புனிதாம்மா டார்ச்சர் இருக்கே… சரி குடு என்றவன் மிச்சம் வைக்காமல் மொத்தத்தையும் குடித்து விட … ஏக்கமாய் பார்த்திருந்தவளை … என்ன உனக்கு பால் லாம் குடிச்சு ஃபர்ஸ்ட் நைட் கொண்டாடணுமா என்று அவன் கேட்க … ஹ்ம்ம் இல்ல என்று சொல்லி விட்டு வேகமாக சென்று மெத்தையில் படுத்துக் கொண்டாள்…
அவனுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டவள் சத்தமில்லாமல் கண்ணீர் வடித்தாள் … அவனும் அவளுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டான் …
காலையில் கதவு தட்டும் சத்தம் கேட்க … இருவரும் விழித்தனர் … வேகமாக எழுந்து அமர்ந்தவன் செந்தமிழ் நீ கதவை திற என்றான் … எழுந்தவளை நில்லு என்றவன் உன் சேலைய கழட்டு என்றான் … அவள் அதிர்ச்சியாய் அவனை பார்க்க … சேலையை கழட்டு என்று அவன் பற்களை கடிக்க … அவள் வேகமாக சேலையின் பின்களை கழற்றினாள்…
அவன் சேலையை பிடித்து பாதி இழுக்க அவள் பயந்து போய் அவள் முன்னழகை கைகளால் மறைத்தாள் … அவனோ அதை எல்லாம் பார்க்கவில்லை … சேலையை கொஞ்சம் கசக்கி அப்போது தான் சுற்றிக் கொண்டது போல சும்மா சேலையை அவள் மேல் போட்டு விட்டான் … அவள் முடி அலங்காரம் … பொட்டு எல்லாவற்றையும் கலைத்து விட்டான் … மெத்தையில் இருந்த பூக்களின் அலங்காரத்தையும் கலைத்து விட்டான் …
இங்க பாரு செந்தமிழ் புனிதாம்மா இல்ல யார் வந்து கேட்டாலும் நாங்க ஒண்ணா சந்தோஷமா இருந்தோம்னு சொல்லணும் என்று மிரட்டலாக சொல்லி விட்டு பாத்ரூமிற்குள் நுழைந்து கொண்டான் … கதவை தட்டும் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்க அவள் போய் கதவை திறந்தாள் … யாரோ ஒரு அக்கா காபி கொண்டு வந்திருந்தார் … அதை வாங்கி வைத்தாள் … குளிச்சுட்டு வாம்மா என்று அவர் சொல்ல ஹ்ம்ம் சரிங்க என்றாள் …
அவள் அங்கிருந்த வாஷ்பேசினில் பல் துலக்கி முகம் கழுவி காபியை குடித்துக் கொண்டிருக்க … புனிதவதி வந்தார் … சந்தோஷமா இருந்தீங்களா டா என்று அவர் கேட்க … ஹ்ம்ம் சந்தோஷமா இருந்தோம் என்று சொன்னவள் குனிந்து கொண்டு சிரித்தாள் …
அவள் கண்களை பார்த்ததுமே ஒன்றுமே நடக்கவில்லை என்று தெரிந்து போனது புனிதவதிக்கு … இந்த நாடகம் எல்லாம் எதற்கு … அதுவும் இவளும் ஏன் நடிக்கிறாள் என்று குழம்பினார் … சரி குளிச்சுட்டு சாப்பிட வாங்க என்று சொல்லி விட்டு சென்று விட்டார் …
(( சினிமாவை பார்த்து இதெல்லாம் பண்ணா இப்படிதான் … புனிதவதி கிட்ட தப்பிக்க முடியுமா ))
அவன் குளித்து முடித்து ஏதோ ஞாபகத்தில் இடுப்பில் டவலோடு … கையில் டவலை வைத்து துடைத்து கொண்டே வர … மெத்தையில் அமர்ந்திருந்தவளை பார்த்து திடுக்கிட்டான் … சட்டென தன் மார்பை டவலால் போர்த்தி கொண்டவன் … இனிமே எனக்கு முன்னாடி எழுந்து குளிச்சு கிச்சனுக்கு போயிடு … இப்போ எழுந்து போ குளி என்று அதட்ட அவள் ஆடைகளை எல்லாம் எடுத்துக் கொண்டே குளிக்க சென்றாள் …
குளித்து முடித்து தாவணி கட்டி தலையை துவட்டிக் கொண்டே அவள் வெளியே வர … அவனுக்கு தெரிந்தது அவள் எலுமிச்சை நிற இடை தான் … தலையை சரியாக துவட்டாமலே வேகமாக கிளிப் எடுத்து தன் நீண்ட கூந்தலில் மாட்டி விரித்து விட்டவள் … பொட்டு வைத்து கொண்டு வெளியே சென்று விட … அங்கங்கு மறையாமல் தெரிந்த அவள் முன்னழகு … வயிறு என்று பார்த்து ரசித்து மயக்கத்தில் இருந்தான் இளமாறன் …
தாவணியோடு கிச்சன் வந்த செந்தமிழை பார்த்த புனிதவதி சிரித்தார் … என்ன டா தாவணி போட்டிருக்க என்று அவர் கேட்க … அம்மா நான் வீட்ல பாவாடை தாவணி தான் போட்டிருப்பேன் … என்கிட்ட வேற ட்ரெஸ் இல்ல … 4 பாவாடை தாவணி செட் தான் இருக்கு … அத மாத்தி மாத்தி போட்டுப்பேன் என்று சொன்னாள்…
இளமாறா சாப்பிட வா என்ற அம்மாவின் குரல் கேட்டு மயக்கம் தெளிந்தவன் ஹாலுக்கு சென்றான் … ஹாலில் ஒரு ஓரமாக டைனிங் டேபிள் சேர்கள் போட்டிருக்க அதில் போய் அமர்ந்தான் … மாமியார் மருமகள் இருவரும் டிபனை எடுத்து டேபிளில் வைக்க … செந்தமிழ் நீயும் உட்காரு டா என்றார் புனிதவதி … அம்மா நீங்க உட்காருங்க … காலைல இருந்து எவ்ளோ வேலை செஞ்சுருக்கீங்க … என்று அவரை வலுக்கட்டாயமாக அமர வைத்து இருவருக்கும் பரிமாறினாள் …
இட்லியை சட்னி சாம்பார் தொட்டு அவன் சாப்பிட்டு கொண்டிருக்க … செந்தமிழுக்கு ட்ரெஸ் இல்ல … சுடிதார் டாப் எடுக்கணும் சாப்பிட்டுட்டு ரெண்டு பேரும் போய் எடுத்துட்டு வாங்க என்று புனிதா சொல்ல … புனிதாம்மா நான் ஆபீஸ் போறேன் … நீங்க அவளை கூப்பிட்டு போய் எடுங்க என்றான் …
இளமாறா என்று அவர் அவனை முறைக்க … புனிதாம்மா உங்க நெற்றிக்கண்ணை தொறக்காதீங்க… ஆபீஸ்ல முக்கியமான ப்ராஜெக்ட் போயிட்டு இருக்கு … நான் போகலைனா சொதப்பிருவாங்க … ஈவ்னிங் வந்து அவளை கூப்பிட்டு போறேன் போதுமா என்று அவன் சொல்ல … அவர் ஹ்ம்ம் என்றார் …
சாப்பிட்டு விட்டு அவன் எழுந்து சென்று விட … செந்தமிழ் சாப்பிட உட்கார்ந்தாள் … புனிதா வந்து மருமகளுக்கு பரிமாறினார் … அம்மா வேணாம் நான் போட்டுக்குறேன் என்று அவள் சொல்ல … சாப்பிடு டா என்று வாஞ்சையாய் அவள் தலையை தடவினார் …
அவளுக்கு இட்லி உள்ளே செல்லவில்லை … புகை மண்டிய அடுப்பறைக்குள் ஒரு ஓரமாக மீதமிருப்பது பழையதை தின்று கொண்டிருக்கும் போது கூட சித்தி அழைத்தால் உடனே செல்ல வேண்டும் … இல்லை அந்த சாப்பாடும் பறந்து விடும் … உணவின்றி பசியால் அழுத நாட்கள் கண் முன் வர மனம் கனத்து போனது செந்தமிழுக்கு …
காலையில் சீக்கிரம் எழுந்து சமைத்து வைத்தாலும் சில நேரம் அவளுக்கு வைக்காமல் எல்லோரும் சாப்பிட்டு விட … பாதி நாட்கள் பள்ளி சத்துணவிலும் … பாதி நாட்கள் பட்டினியிலும் கழிந்தது … பள்ளி விட்டு நின்ற பின்னர் அதுவும் இல்லாமல் போக … அவ்வளவு வீட்டு வேலைகள் செய்து கிடைத்ததை தின்று வாழ்ந்து கொண்டிருந்தவளுக்கு கண்ணுக்கு அழகாய் கணவன் … மகளாய் தாங்கும் மாமியார் கிடைக்க மகிழ்ச்சி தான் …
ஆனாலும் இதெல்லாம் நிரந்தரம் இல்லை … எத்தனை நாளுக்கு இந்த அன்பும் உபசரிப்பும் … என்று நினைக்கையில் வந்த கண்ணீரை அடக்கிக் கொண்டு இட்லிகளை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தாள்… கிடைத்த மகிழ்ச்சியை கூட அனுபவிக்க விடாமல் துக்கம் தொண்டையை அடைத்தது …
சித்தி கொடுமையை தாண்டி ஏதோ பிரச்சனைகள் அங்கு அவளுக்கு இருக்க … வேறு வழியே இல்லாமல் இளமாறன் சொன்னதற்கு சரி என்று சொல்லி விட்டாள் … இதற்கு அதுவே பரவாயில்லை என்று அவள் நினைக்கும் நாளும் வெகு விரைவில் …
காதலாய் வருவாள் 💞 …
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அவளுக்கு மட்டும் தான் கட்டுப்பாடா? இவர் மட்டும் கண்களாலேயே களவாடுவாராம். என்ன ஒரு வில்லத்தனம். 😳🤣
திரைப்படங்களில் வருவது போல பூசி மொழுகுனா இதான் கதி. 🤭
நிரந்தரமில்லா அன்பும் அக்கறையும் என்று தெரிந்துவிட்டால் அதை அனுபவிக்கும் நொடிகள் கூட ரணம் தான்.
தெரியாத தேவதைக்கு தெரிந்த பிசாசே பரவாயில்லை என்பதை போல் ஆகப்போகின்றதோ தமிழ் வாழ்வு.
அருமையான நகர்வு. 👏🏼❤️
உண்மையில் உடல் வேதனையை விட மன வேதனை தான் தாங்க முடியாத ஒன்று … அது கொடுமையானது …
மாறன் அப்படி தான் … இவரே வேணாம்னு சொல்லுவாராம் … இவரே பார்த்து ரசிப்பாராம் 😜😜😜
அந்தப் பொண்ணு ரொம்பவும் பாவம்.
ஏண்டா அவளை ரசிக்க தெரிஞ்ச உனக்கு, அவளுக்கும் ஒரு மனசு இருக்கும்னு நினைக்க தோணலயாடா?
இந்த மிரட்டு மிரட்டுறே…
புனிதம்மா நீங்க தான் உங்க புத்திரனை நல்வழிப்படுத்தணும்.
ஆமா புனிதாம்மா தான் அவனை அடிச்சு திருத்தணும் … அவனுக்கு அவன் மனசு புரிஞ்சிருந்தா தான் பரவாயில்லையே … மிக்க நன்றி சகி