Loading

4

 

செழியனின் வீட்டில் அறிவழகன், “இனிமேல் அவனுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இங்க இருந்து யாரும் எந்த காரணத்துக்காகவும் அவனை பார்க்கவும் கூடாது. பேசவும் கூடாது. போய் எல்லாரும் தயாராகுங்க மண்டபத்துக்கு போகலாம்.” என்றவர் அகரனிடம், “கல்யாணத்துல நம்ம சொந்தக்காரங்க யாராச்சும் அவனை பத்தி கேட்டா வெளிநாட்டுல படிக்கிறான். அவனுக்கு லீவ் கிடைக்கலன்னு சொல்லு. இதுக்கு மேல வேறெதுவும் பேச கூடாது. உன் மாமா வீட்டுல நான் பேசிக்கிறேன்” என்றார்.

 

 

மீனாட்சி, “என்னங்க நீங்க இப்படி பேசறீங்க. இன்னும் ஒரே மாசம் அவனால எதையும் சமாளிக்க முடியாது. அவளை விட்டுட்டு நம்மகிட்ட வந்துருவான். இப்படியெல்லாம் பேசாதீங்க” என்றார்.

 

 

அவரை பார்த்து சிரித்தவரோ, “உனக்கு இன்னும் அவனை பத்தி முழுசா தெரியல மீனா, அவன் வரமாட்டான் பிடிவாதக்காரன். அவனுக்கே அவ்ளோ இருக்கும் போது அவனை பெத்தவன் எனக்கு இருக்காதா? போய் கல்யாண வேலையை பாரு” என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

 

 

….

 

செழியன் வேதா கேட்ட கேள்வியில் விக்கித்து போனவன், அவளின் புருவம் உயர்த்திய பார்வை கண்டு”அன்னிக்கு நான் ஹாஸ்பிடலில் சொன்னது பொய் தான், அப்போ அந்த சூழ் நிலைல எனக்கு உன்னை காப்பாதுணும்னு மட்டும் தான் தோணுச்சு. உண்மையாவே நீ வர்றது கவனிக்காம ஆக்சிடேன்ட் பண்ணது நான் தான். அதை அங்க சொல்லிருந்தா கண்டிப்பா டிரீட்மென்ட் பண்ணிருக்க மாட்டாங்க, நீ என்னை தப்பா நினைச்சாலும் பரவாயில்லை, உன்னை காப்பாத்த மட்டுமே நான் பொய் சொன்னேன். போலீஸ் கிட்ட இருந்து என்ன காப்பாத்திக்கறதுக்காக அங்க நடந்த எதையும் மறைக்க விரும்பல”எங்கே அவள் தன்னை தவறாக நினைத்து விடுவாளோ என்று நினைத்து அவளுக்கு விளக்கம் கூறி கொண்டிருந்தான். அவளின் பார்வையில் இருந்து அவனால் எதையும் அறிந்து கொள்ள முடியவில்லை.

 

 

தேவ் வருவதை கண்டு அவன் அமைதியாகி விட,மூவருக்கும் உணவு வாங்கி வந்து இருந்தான். செழியன் பொறுமையாக அவளுக்கு உணவை ஊட்டி, அவளுக்கு தர வேண்டிய மாத்திரையை கொடுத்து அங்கிருந்த ஒரு அறைக்குள் அழைத்துச்சென்று படுக்க வைத்தவன் அவளிடம், “உனக்கு என் மேல நம்பிக்கை இருந்தால் பொறுமையா இரு. நானே சொல்றேன் எல்லாத்தையும்” என்றான்.

 

 

அவளோ, “அந்த நம்பிக்கையில மட்டும்தான் நான் இன்னும் உங்க கூட இருக்கேன்” என்று கூறியவளை விழி விரித்து பார்த்தவனோ அவளின் தலையை வருடிவிட்டு, அவளை படுக்கவைத்து போர்வையை மூடிவிட்டு வெளியே வந்தான்.

 

 

தேவ் அவனையே பார்த்துக்கொண்டு இருக்க, “ஹேய் என்னடா என்னையே பாத்துட்டு இருக்க” என்று கேட்க, “நீ எப்போ இருந்துடா இப்படி மாறிப்போன நீ ஒரு பெண்ணுக்காக இவ்வளவு செய்றதையே என்னால நம்ப முடியல, நம்ம காலேஜ்ல அவன் அவன் இரண்டு மூணு பேர செட் பண்ணி ஜாலியா லவ் பன்றானுங்க, டேட்டிங் போறானுங்க. உனக்கு அதுலாம் கூட பிடிக்காது. எந்த பொண்ணையும் பக்கத்துல கூட சேர்க்கமாட்ட தனுவ தவிர. அவ நம்ம கூட சின்ன வயசுல இருந்து அதனால. அப்புறம் எப்படி உனக்கு இந்த பொண்ண பிடிச்சது நாலு நாளுல. அதுவும் பேமிலிய விட்டுட்டு வந்து இவ்ளோ ரிஸ்க் எடுக்குற அவ்ளோ லவ் ஆஹ் என்ன?மச்சான் நீ முடிவு பண்ணிட்ட என்னால எதுவும் அதை மாத்த முடியாது உனக்கு நான் சப்போர்ட் பண்றேன்.இன்னோன்னு இது கல்யாணம் பண்றதுக்கான சரியான வயசு இல்லை டா, உனக்கும் இன்னும் பக்குவம் வரணும், அப்புறம் அந்த பொண்ணு குழந்தைடா, எனக்கு என்ன சொல்றதுன்னு தெரில, ஒரு வேகத்துல கல்யாணம் பண்ணிட்ட ஆனா இதை அடுத்த இடத்துக்கு கொண்டு போறதும் உன்னோட லைப் இனி எப்படி மாற போகுது நீ என்ன செய்ய போற எல்லாம் நீ தான் முடிவு பண்ணனும். இதுல இன்னும் எவ்ளோவோ விஷயங்கள் இருக்கு, உனக்கே எல்லாம் தெரியும் புரிஞ்சு நடந்துக்க”என்றவன் கடைசியாக அவனிடம்”ஒண்ணே ஒன்னு தான் கேக்கறேன் உண்மையிலே அந்த பொண்ணை நீ காதலிக்குற தானே இல்லை உன்னால தான் அந்த பொண்ணுக்கு இப்படி ஆச்சுன்னு அதுனால வந்தா பரிதாபமா?”என்று கேட்டான்.

 

 

தேவின் இந்த கடைசிக் கேள்வியில் திகைத்து போனவன்”இந்த கேள்விக்கு நான் விடை கண்டுபிடிச்ச அப்புறம்தான் அவளை இங்க அழைச்சிட்டே வந்தேன். நாலு நாளுல லவ் வருமான்னு தெரியல. எனக்கு அவளை பிடிச்சுருக்கு. அவளை காப்பாத்தரதுக்காக வைப்னு சொன்னேன். ஆனா அது உண்மையா இருக்கணும்னு தோண ஆரம்பிச்சுருச்சு. அவ அழும்போதும் வலியில துடிக்கும் போதும் எனக்கும் ரொம்ப வலிக்குது கஷ்டமா இருக்கு. நான் நெனச்சுருந்தா அவளை அவ குடும்பத்தை கண்டுபிடிச்சி சேர்த்துருக்கலாம். ஆனால் புரியல எனக்கு அவ என்னோடவே எனக்காகவே என்கூட இருக்கணும்னு தோணுது.இது சுயநலம் தான் ஆனால் எனக்கு கண்டிப்பா அவ வேணும்னு தோணுதுடா, கண்டிப்பா இது காதல் தான். உயிரே போனாலும் அவளை விட மாட்டேன்.என்ன நடந்தாலும் பாத்துக்கலாம்னு தான் அவளை இங்க கூட்டிகிட்டு வந்தேன்.அம்மா இவ்ளோ வெறுப்ப காட்டுவாங்கனு நான் எதிர்பாக்கவே இல்லை. அதுவும் அரவிந்த் கடைசியா பார்த்த பார்வை இன்னும் வலிக்குது, நான் என்னை மட்டுமே யோசிச்சு சுயநலமாய் நடந்துகிட்டனோ அப்டிங்குற குற்ற உணர்ச்சி மட்டும் தான் எனக்கு” என்று கூறியவனின் அருகில் வந்து அணைத்து கொண்டான் தேவ்.

 

 

தேவ்”கண்டிப்பா யாரு உன்னை தப்பா நினைச்சாலும் அரவிந்த் அண்ணா உன்னை தப்பா நினைக்க மாட்டாரு டா,கண்டிப்பா உன்னோட மனசு அண்ணனுக்கு புரியும். கண்டிப்பா அவரோட கல்யாணம் நல்லபடியா நடக்கும் உன்னால அதுல எந்த பிரச்சினையும் வராது. கண்டிப்பா அதுக்கு மாமாவும் விட மாட்டாரு. ஏதாவது பொய் சொல்லி நீ இல்லனு கல்யாணத்தை பண்ணிடுவாங்க. அதுல உனக்கு எந்த பயமும் வேணாம். ஆனால் ஒன்னுடா நீ செஞ்சது சரியா தப்பான்னு எனக்கு தெரியல மச்சான். நீ என்ன முடிவு எடுத்தாலும் உனக்கு நான் துணையா இருப்பேன்” என்று கூறினான்.

 

செழியன், “நான் இன்னும் என்னோட படிப்பையே முழுசா முடிக்கல. எனக்குமே என்ன செய்றதுனு தெரியல, எனக்கு நான் செஞ்சது தப்புனு தெரிஞ்சாலும் என் மனசு அதை ஏத்துக்கல டா, எல்லாத்தையும் சரி செய்யணும்”என்றவனுக்கு தெரியவில்லை அவன் சரி செய்யும் முன்பே அனைத்தும் கலைந்து போகும் என்று…

 

 

தேவ், “என்ன செய்றதுன்னா.. ரெண்டு நாளுல காலேஜ். கடைசி ஆறுமாசம் தான் இருக்கு ஒழுங்கா காலேஜ் வா படி.நான் இருக்கேன்டா. நீ படி. சிஸ்டர் இருக்கட்டும் பாத்துக்கலாம். கூட யாரையாச்சும் வேலைக்கு வச்சுக்கலாம். நான் என் அப்பாகிட்ட பேசுறேன்” என்று கூறியவனை இடைமறித்த செழியன், “வேணாம் தேவா அது சரிவராது லாஸ்ட் செமஸ்டர்தான். நான் எக்ஸாம்ஸ் மட்டும் எழுதிக்கிறேன். அதுக்கு முன்னாடி நான் ஒரு வேலைய தேடிக்கணும். எல்லாத்துக்கும் முன்னாடி ஒரு வீடு பாக்கணும்” என்று கூறியவனை கண்டு அதிர்ந்துதான் போனான் அவன்.

 

 

“என்னடா சொல்ற, எதுக்கு வேலைக்கு? மரியாதையா நீ படிச்சு முடி. அப்புறம் பேசிக்கலாம்” என்றவனிடம், “இல்லடா நான் முடிவெடுத்துட்டேன், முடிஞ்சா எனக்கு ஒரு வீடு மட்டும் பாத்து குடு. அதுவும் இங்க இல்லை கொஞ்சம் தூரமா ” என்று கூறினான்.

 

 

தேவ், “ஏன்டா இப்படி” என்று கேட்க, “நானே எல்லாத்தையும் சரி செய்யணும்டா, அவளுக்கு இன்னும் எதுவும் நியாபகம் வரல, அவ டிரீட்மென்ட் இருக்கு. சோ நான் சொன்னதை மட்டும் செய்” என்று சொன்னவனுக்கு தலையை மட்டும் ஆட்டி வைத்தான்.

 

……

 

 

அன்பரசன் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு இருந்தார். வெளியே வந்த மருத்துவரோ, “சாரி டூ சே திஸ் சிவியர் அட்டாக், கேர் புல்லா பாத்துக்கோங்க ஸ்ட்ரோக் வேற இனி அவர் எப்போதும் வீல் சேர்ல தான்” என்று கூறிவிட்டு செல்ல, குடும்பமே அதிர்ந்து போனது. தாமரை அழுதவண்ணமே அமர்ந்திருந்தார்.

 

அதை கேட்ட அதிரனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவனும் வேறு ஒரு இக்கட்டில் இருக்க அவனால் அதையும் கவனிக்க முடியாமல் ஏதோ ஒன்று தான் என்னும் நிலையில் குடும்பத்துக்காக தன் பாதியை கைவிட்டு பெற்றோருக்காக நின்றான்.

 

……

 

 

அரவிந்த்ன் மாமன் மகள் லாவண்யா அவளிடம் அனைத்தையும் அவன் கூறி இருக்க அவளின் மூலம் அவள் குடும்பத்தினருக்கும் தெரிய வந்திருந்தது. அவர்களுக்கு செழியனின் குணமும் பிடிவாதமும் தெரிய அத்தை அறிவழகன் பார்த்து கொள்வார் என்று அவர்கள் அமைதியாகி இருந்தனர். லாவண்யாவின் தங்கை சவிதா தான் செழியனை ஒரு தலையாய் காதலித்து கொண்டு இருந்தாள் அவளால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

 

விஷயம் தெரிந்து அவள் ஆத்திரத்துடன் ஓரிடத்தில் அமர்ந்து இருந்த மீனாட்சியிடம் வந்தவள் “அத்தை என்ன நடக்குது உங்க வீட்டுல செழியன் மாமா எனக்குத்தான் சொல்லி சொல்லி வளர்த்திங்க, இப்போ வந்து எவளோ கல்யாணம் பண்ணிட்டு போய்ட்டானு அசால்ட்டா சொல்றிங்க, இல்லை இதை என்னால ஏத்துக்கவே முடியாது. எனக்கு செழியன் மாமா வேணும் “என்று பிடிவாதமாக அழுதவளிடம் சொல்லி புரிய வைக்காமல் அவளிடம்”எனக்கு மாத்தி மாத்தி பேச தெரியாது சவிதா, நீ தான் என் வீட்டு மருமகள். அதை யாராலையும் மாத்த முடியாது. செழியனுக்கு பொண்டாட்டி நீ தான். அந்த பைத்தியக்காரிய எப்படி ஓட விடுறேன்னு மட்டும் பாரு. அதுக்கப்புறம் செழியன் இங்க வந்துடுவான். அவன் உனக்கு தான்”என்று அவளை மேலும் ஏத்தி தான் விட்டார்.

 

 

மறுநாள் மண்டபத்தில் செழியன் எங்கே என கேட்ட அனைவர்க்கும அவன் ஊரில் இல்லை. வெளியூர் சென்று இருக்கிறான் என்று கூறி மழுப்ப, அதை கேட்டவர்களுக்கா தெரியாது நடந்த விஷயம் என்ன வென்று…

 

அக்கம் பக்கத்தவர்கள் மூலம் அனைவருக்குமே விஷயம் தெரிந்து இருந்தது. கல்யாணத்திற்கு வந்து விட்டு துக்கம் விசாரிப்பது போல் வந்து பேசிவிட்டு செல்பவர்களின் மீது எந்த கோவமும் இல்லை. மொத்த குடும்பத்தின் அவமானமும் செழியனின் மேல் அல்லாமல் வேதாவின் மேல் திரும்பியது தான் விஷயமே…

 

மீனாட்சி வேதாவின் மேல் வஞ்சம் வைத்து காத்திருந்தார்.

 

அவரின் எண்ணங்களும் செயல்களும் மகனை மொத்தமாய் அவரிடம் இருந்து விலக்கி வைக்க போவதை உணர்ந்திருந்தால் கூட அவர் செய்ய போகும் காரியத்தை கை விட்டிருப்பாரோ என்னவோ…

 

அனைத்துக்கும் நடுவில் அரவிந்தனின் திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்திருந்தது. அரவிந்தனுக்கு தம்பியின் எண்ணம் தான், என்ன செய்கிறானோ என்று அவனால் அவனின் திருமண வேலைகளில் கூட முழுதாய் ஈடுபட முடியவில்லை. மறுநாள் அவன் மணமேடைக்கு செல்லும் முன்பு தேவ் அனுப்பிய அந்த புகைப்படத்தை பார்த்ததும் அவனின் கவலை இரட்டிப்பாகிதான் போனது.ஆனாலும் அவன் தேவுடன் தான் இருக்கிறான் என்பது மட்டுமே அவனுக்கு மிகப்பெரிய ஆறுதல்.

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
8
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

  1. காதலுக்காக குடும்பத்தை விட்டுட்டு வந்து ஹீரோ எப்படி சமாளிக்க போறான்னு பார்க்கலாம்

  2. வேதா உண்மை அறிந்தும் செழியன் மேல் இருக்கும் நம்பிக்கையில் அவனுடன் இருக்க எண்ணுகிறாள்.
    தேவ் பொறுப்புள்ள நண்பனாக செழியனது வாழ்வு செழிக்க வழிவகை செய்கின்றான்.
    செழியன் இவள் தான் தன்னவள் என்ற தீர்க்கமான முடிவெடுத்த பிறகே அவளை அழைத்து வந்துள்ளான்.
    மீனாட்சி அம்மா ஏன் வில்லங்கமாகவே யோசிக்கின்றார். பாவம் செழியன் வேதா வாழ்வில் என்ன என்ன குழப்பங்களை விளைவிக்க போகிறாரோ? பார்ப்போம்.

    1. Author

      Parkalam sis aduthadutha athiyayangal viraivil