
பிறை -35
மொத்த குடும்பமும் பிறையின் அறையில் தான் கூடி இருந்தது. இன்னும் நடுக்கத்தில் இருந்து அவள் விடுதலையாகி வரவில்லை. சிவகாமியை இறுக்கிக் கொண்டு படுத்திருந்தாள்.
சிவானந்தம் அமைதியாக அமர்ந்திருந்தார். மகளுக்கு திருமணம் முடிந்து விட்டது என்ற மகிழ்ச்சியை கூட அனுபவிக்க விடாமல், ஒரே இரவில் அந்த வீட்டையே போர்க்களமாக மாற்றி இருந்தது ஆதியின் வரவு.
வீட்டில் நடந்த சம்பவத்தை குறித்து விசாரணைக்கு சென்றிருந்தான் ஆதிதேவ்.
கண்களை மூடிக் கொண்டு, ஸ்டீயரிங் மீது தலை சாய்த்து, அந்த ஆள் இல்லா சாலையில் படுத்திருந்தான் ஆதிதேவ்.
எத்தனை தைரியம் இருக்க வேண்டும். தன்னுடைய அறைக்கே வந்து, தன்னுடைய மனைவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டவனை வெட்டி வீசி எறிய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தான் ஆதி.
மொத்தமாக அவனது நிம்மதியை குழைத்து இருந்தான். ஒரு பொழுதும் அவன் இப்படி ஒரு நிகழ்வை நினைத்து கூட பார்த்ததில்லை. அவனை எளிதில் எடை போட்டு விட்டது அவனது தவறு தான் என்பது நன்றாக புரிந்தது.
இத்தனைக்கு இடையில் ஒருமுறை கூட பிறை எச்சரிக்கை செய்தாள். ஆனால் அப்போதும் அதை பெருசாக எடுத்துக் கொள்ளாத தன்னுடைய மடத்தனத்தால் இன்று பிறைக்கு அசம்பாவிதம் நிகழப் போனது.
ஏதேனும் நடந்திருந்தால் , அதன் பின்பு பிறையின் முகத்தில் எப்படி விழித்திருப்பேன்.. அதை விட அவளை அதிலிருந்து எப்படி வெளியே கொண்டு வந்திருப்பேன்.. என பல கேள்விகள் மண்டைக்குள் ஓடிக் கொண்டிருந்தாலும்.. இந்த சம்பவம் நடந்ததற்கு முழுக் காரணம் நீ தான் என மனசாட்சி மீண்டும் மீண்டும் கூற.. தலையை பிடித்துக் கொண்டான் ஆதி.
” டேம் இட்.. ” என முன்னால் இருந்த ஸ்டீயரிங்கை ஓங்கி குத்தியவன்.. விரைவாக வீடு வந்து சேர்ந்தான்.
அவன் வந்ததும் வாசலிலேயே பிடித்துக் கொண்டார் திவாகர்.
” என்னாச்சு ஆதி.. ஏதாவது தகவல் கிடைச்சதா..” பதறிப் போனார்.
மருமகளின் அறைக்குள் வேற்று ஆடவன் நுழைந்திருந்தது அவரை அதிர்ச்சி அடைய செய்தது.
” ஸ்டேஷன்ல சொல்லியிருக்கேன் பா.. நாளைக்கு காலையில தகவல் தெரியும்.. நீங்க எல்லாரும் போய் தூங்குங்க.. அதான் நான் வந்துட்டேன்ல.. இனிமே நான் பார்த்துக்கிறேன் ” என பிறை இருந்த அறைக்கு சென்றவன்.. மனைவியை பார்க்க..
அவளோ சிவகாமியின் வயிற்றை கட்டிக் கொண்டு படுத்திருந்தாள். தன்னையே கேள்வியாக பார்த்த மாமனாரை பார்த்தவன்.. ” கவலைப்படாதீங்க மாமா.. என்னைய மீறி தான் எதுனாலும் உங்க பொண்ணை நெருங்கும்.. நான் பார்த்துக்கிறேன் ” என தைரியம் கொடுக்க .. அவரும் அறைக்கு சென்று விட.. சிவகாமி மகளை மெத்தையில் விட்டு அவரும் சென்றிருந்தார்.
ஒரே நாளில் வாடிய கொடி போல மெத்தையில் சுருண்டு கிடந்தாள் பிறை.
அவர்கள் அனைவரும் சென்றதும், கதவை லாக் செய்து விட்டு மெத்தையை நெருங்க..
” இரு பா நான் இன்னும் போகல.. நானும் போய்க்கிறேன் ” என பாத்ரூமில் இருந்து வெளி வந்த மீனாட்சியை சலிப்பாக பார்த்தவன்.. அவருக்கு கதவை திறந்து விட..
” பிள்ளை ரொம்ப பயந்துட்டா.. அதுனால கொஞ்சம் பார்த்துக்கோ ஆதி ” பிறையை பற்றிய கவலை அவரது முகத்திலேயே தெரிந்தது.
அவர் சென்றதும் கதவை அடைத்துக் கொண்டவன்.. அறையில் வேறு யாரும் உள்ளார்களா என கவனித்து விட்டே மெத்தையை நெருங்கினான்.
ஆதி அந்த அறையில் இருப்பதை அவள் உணர்ந்தாலும்.. எந்த வித எதிர்வினையும் காட்டாமல் அமைதியாக படுத்திருந்தாள். கண்களை மூடினால் கூட அந்த நிகழ்வுகள் முன் வந்து நிற்க.. போர்வையை போற்றிக் கொண்டு , அதற்குள் முழித்து கிடந்தாள் பிறை.
மனைவியின் செய்கைகை எல்லாம் துல்லியமாக கவனித்துக் கொண்டிருந்தவன்.. உடைகளை மாற்றி , ஃப்ரெஷ் ஆகிக் கொண்டு வந்து.. மறுபக்கம் படுத்துக் கொள்ள.. மெத்தையின் அதிர்வை வைத்து ,அவன் மெத்தையில் படுத்ததை கண்டு கொண்டவளுக்கு உடலெல்லாம் அப்படி ஒரு நடுக்கம்.
” பிறை.. ” என ஆதி அழைத்ததும் தான் தாமதம்… அடித்து பிடித்துக் கொண்டு எழுந்தவள்.. நடுங்கிய உடலோடு அவனை பார்க்க.. அவனோ அவளது செய்கையை பார்த்து புரியாது விழித்தான்.
” என்னாச்சு டி.. நான் தான் ஏன் இப்படி ஓடுற ” என அவளை நெருங்க பார்க்க..
” இல்ல நீ அவரு இல்ல . நீ ஆதி.. ” என திக்கி திணறினாள்.
” ப்ச் நான்தான் டி.. அவன் இல்ல, அவன் தப்பிச்சுட்டான்.. நாளைக்கு காலைக்குள்ள அவனை பிடிக்க சொல்லிருக்கேன் ” அவன் தன்னிலை விளக்கம் கொடுத்தும் அவள் நம்புவதாக இல்லை.
” வா.. இங்க வந்து உட்காரு ” என்றதற்கு மறுப்பாக தலை அசைத்தாள்.
” சரி நான் ஆதின்னு எப்படி சொல்லுற ”
” பி.. பிறைன்னு கூப்பிடுறீங்க ” திணறிப் போனாள் மங்கை.
” ஓ காட்… மூன்… நான் ஏதோ யோசனையில அப்படி கூப்பிட்டேன்.. மை காட் இதை வச்சு தான் அவன் ஆதின்னு நீ கண்டு பிடிச்சியா ” என்றதும்.. ஆம் என்பதை போல தலையசைத்தாள்.
” பார்க்க அப்படியே என்னை மாதிரி தான் இருந்தானா”
” அப்படியே உங்களை மாதிரி தான்..”
” அப்போ கடத்துன அன்னைக்கு நீ அவன் முகத்தை பார்க்கலையா..”
” இல்ல கண்ணை மட்டும் தான் பார்த்தேன்.. மாஸ்க் போட்டிருந்தான் ”
” இப்போ ஏன் டி அங்கேயே நிக்கிற ”
” இல்ல அது.. ”
” இல்ல.. இந்த ரூம் சரியா வராது.. வா நம்ம ரூமுக்கு போகலாம் ” என அவளை அழைக்க.. அவளோ வெகுவாக முழித்து வைத்தாள்.
” என்ன மூன்.. இங்க நீ கெஸ்ட்டா ஸ்டே பண்ணிருந்த.. ” என அவளுக்கு அவளது நிலையை எடுத்துக் கூற.. தலையை பலமாக ஆட்டினாள்.
மெத்தையில் இருந்து இறங்கியவன்.. அவளது கைகளை பற்றிக் கொண்டு மாடியில் இருந்த அவனது அறைக்கு அழைத்து சென்றான் ஆதிதேவ்.
உள்ளே வந்ததும் அவளை அழைத்து கொண்டு பால்கனிக்கு சென்றவன்.. அங்கிருந்த சோபாவில் அமர.. அவனை விட்டு சற்றே விலகி அவளும் அமர்ந்து கொண்டாள்.
” ஃப்ரெஷ் ஏர் கொஞ்சம் ப்ரீத் பண்ணு” என்றதும்.. அவளுக்கும் அதை தேவையாகி போக.. அமைதியாக அந்த சூழலுடன் பொருந்தி இருந்தாள்.
பத்து நிமிடம் கழித்து பேச்சை தொடங்கினான். ” சொல்லு என்கிட்ட எதையும் மறைக்கிறியா ” நேரடியாக கேட்டவனை அதிர்ந்து பார்த்தவள்..
” நா.. நான் என்ன மறைக்க போறேன்…”
” அப்போ ஏன் ஒரு மாதிரி ரியாக்ட் பண்ணுற ”
” அது.. ”
” லிசன்… ஆதி தான் உன் பிரச்சனையா.. ”
” ம்ம் ”
” போலீஸ்காரன் பொண்டாட்டி இப்படி தான் நடுங்குறதா.. தைரியமா இருக்கனும் மூன் ” என இடைவெளிக்கு விடுதலை அளித்து நெருங்கி அமர்ந்தவன்.. அவளது கரங்களை எடுத்து அவனது கைக்குள் புதைத்துக் கொண்டவன்..
” உன் கிட்ட எதுவும் சொன்னானா ”
” ம்ம் ”
” என்ன சொன்னான் ” என்றதும் அவளது நினைவுகள் பின்னோக்கி சென்றது.
மீனாட்சி கூறியதும் அதிர்ந்து போனவன்.. வேகமாக பிறை இருந்த அறை வாசலுக்கு ஓடிச் சென்று.. கதவை பலமாக தட்ட.. உள்ளே இருந்த இருவருக்கும் அது கேட்டு விட்டது.
” வந்துட்டான் போலையே உன் புருஷன்..” நக்கலாக கேட்டான் ஆதி..
” அவர் தான் என் புருஷன்.. அவர மாதிரியே இருந்தாலும் நீ அவராக முடியாது தெரிஞ்சுக்கோ.. ” கணவன் வந்த தைரியத்தில் சற்றே குரலை உயர்த்தி இருந்தாள் பிறை.
” ம்ம்.. அவனுக்கு இருக்குற அதே திமிரு.. உனக்கும் இருக்கு.. அவன் நினைச்ச மாதிரியே உன்ன கல்யாணம் பண்ணிட்டான்.ஆனால் நான் நினைச்ச மாதிரியே உன்ன அவன் கண்ணு முன்னாடியே கொலை பண்ணுவேன் டி ” என்றவனை பயத்தில் மூச்சு வாங்க பார்த்தாள் பிறை.
” அவரு இருக்குற வரைக்கும் உன்னால அதை பண்ண முடியாது ” பயத்தை மறைத்து கொண்டு பேசியவளை, நெஞ்சை நிமிர்த்தி பார்த்தவன்.. ” இன்னும் இந்த ஆதியை பத்தி அவனுக்கு முழுசா தெரியல .. தெரிஞ்சிருந்தா பர்ஸ்ட் நைட் அன்னைக்கு அவன் பொண்டாட்டியை என் கூட இருக்க விடுவானா சொல்லு ” நக்கலாக கேட்டவனை முறைத்து பார்த்தவள்.. கதவை உடைக்கும் சத்தத்தில்..
” இப்போ என் புருஷன் உள்ள வந்து இதுக்கு பதில் சொல்லுவாரு ” என்றாள்.
” வரட்டும்… ” என்றவன்.. அங்கிருந்த ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து விட்டு வெளியேறி போனவன்.. இறுதியாக அவளை பார்த்து.. ” இப்போ எப்படி எதிர்பாராம உங்க வீட்டுக்குள்ள வந்தேனோ.. அதே மாதிரி தான் ஆதியோட அடுத்த எண்ட்ரியும் இருக்கும்.. கீப் இட் ஆன் யுவர் மைண்ட் பேபி ” என்றவன் நொடியில் மாயமாகி போனான்.
கதவு பாதி உடைந்த நிலையில் இருக்க.. ஓடி வந்து கதவை திறந்திருந்தாள் பிறை.
அவளை முழுதாக பார்த்ததும் தான் அவனுக்கு மூச்சே வந்தது. ” ஆர் யூ ஆல்ரைட் ” என மனைவியிடம் கேட்டவன்.. அவள் தலையை அசைத்ததும் தான் நிம்மதியோடு அறைக்குள் ஓடினான். அவன் கதவை உடைத்த சத்தத்தில் அனைவரும் கூடி விட்டார்கள்.
ஜன்னல் உடைத்திருந்ததை பார்த்ததும்.. வேகமாக வெளியேறி அந்த தெருவில் ஜீப்பை எடுத்துக்கொண்டு சுற்றி வந்தான் ஆதிதேவ். ஆனால் அவனது கண்களில் மண்ணை தூவி விட்டு எப்போதோ பறந்திருந்தான் ஆதி.
நடந்ததை ஒன்று விடாமல் கூறியவள்.. ” எனக்கு என்னமோ பயமா இருக்குங்க.. நான் அன்னைக்கே சொன்னேன்ல .. அவன் சாதாரண ஆள் கிடையாது ”
” அவன் யாருன்னு காட்டிட்டான்.. இனிமே நான் யாருன்னு அவனுக்கு காட்டுறேன்.. ” என்றவன்.. பெரும் மூச்சுடன்.. “லேட் நைட் ஆகிடுச்சு டி மூன்.. வா தூங்கலாம்.. ” என அவளை அழைத்து கொண்டு அறைக்குள் சென்றவன்.. அவளது ஜார்ஜெட் புடவையை பார்த்து.. ” அம்மா கொடுத்த சேரியா” திடீரென கேட்டான்.
“ஆமா”
” ரொம்ப ஹெவியா இருக்கோ.. ” என அவனே பேசிக் கொண்டு அவனுடைய டீசர்ட் ஒன்றும், ட்ராக் பேன்ட் ஒன்றையும் எடுத்து கொடுத்து மாற்றி வர கூற.. அவளோ மறுத்து விட்டாள்.
” சொன்னத செய்.. ”
” எனக்கு இதுவே கம்பர்ட்டபில் தான் ”
” ஆனால் எனக்கு இல்லையே.. சேலையில பார்க்கும் போது கண்ணா பின்னான்னு தோணுது மூன்.. நானும் நல்லவனா இருக்கனும்னு பார்க்கிறேன்.. எப்படி வசதி.. ” என புருவத்தை உயரத்திவனை பார்த்து, கையில் இருக்கும் மாற்று உடையை வாங்கிக் கொண்டு வேகமாக மாற்றிக் கொண்டு வெளியே வந்தாள்.
அவனுடைய ஆடைகள் எல்லாம் அவளுக்கு அத்தனை தளர்வாக இருக்க.. அவளையே மேலும் கீழும் பார்த்தவன்.. ” பெர்பெக்ட்.. வந்து படு ” என்றதும் வாய்க்குள் முனங்கிக் கொண்டே வந்து மெத்தையில் படுத்து விட்டாள்.
மெத்தையின் மறுபுறம் படுத்தவனுக்கும் தூக்கம் எட்டாக்கனியாகி போனது. அவளுக்கு தைரியம் கூறியவனுக்கு தற்போது ஆதியை நினைத்து சற்றே குழப்பமும் வந்து சேர்ந்தது.
அவன் பார்க்காத பிரச்சனைகள் இல்லை.. ஆனால் வந்தவனோ, அவனது இதயத்திற்கு சொந்தகாரியான நிலவினை அல்லவா கொலை செய்ய வருகிறான். எப்படி அவனால் நிம்மதியாக இருக்க முடியும்..
இமைகள் மூடி இருந்தாலும் விழிகள் அங்கும் இங்கும் அலைபாய்ந்து கொண்டிருந்தது. அவன் பக்கமாக திரும்பி படுத்தவளுக்கும் அந்த காட்சி தென்பட.. அவனையே இமைக்காது பார்த்து வைத்தாள்.
இரண்டு நிமிடம் சென்றிருக்க.. சட்டென ஒன்றை கரத்தை நீட்டி அவளை தன் பக்கமாக இழுத்தவன், அவளை கட்டிக் கொண்டு கண்களை மூட.. அவனது அதிரடிச் செயலில் அதிர்ந்து போனவள்.. அவனது கைகளுக்குள் வளைந்து நெளிந்தாள்..
” ப்ச் கம்முன்னு படு டி.. எட்ட இருந்து பார்த்தா எப்படி.. கிட்ட வந்து பார்த்தா தானே புரியும்.. இந்த செகென்ட ஃபீல் பண்ணு ” என அவன் சாதாரணமாக சொல்லி விட்டு கண்களை மூடி உறக்கத்திற்கு சென்று விட.. விடிய விடிய அவனது முகத்தை ரசித்து கொண்டிருந்தவளோ.. விடியும் தருவாயில் உறக்கத்தை தழுவி இருந்தாள்.
சனா💖

