
காதல் – 3
அவளின் தாய் கோபமாக முகத்தை வைத்து கொண்டு கேட்கவும் அஸ்வதி பயந்து விட்டாள்….
நா ஒன்னுமே பண்ணல அம்மா என்று அவள் பயத்தில் பின்னால் சென்றாள்….
தலை ஏன் இப்படி கலஞ்சு போய் இருக்கு?
நீ வந்த கார் லேட்டா வரும்போதே நினைச்சேன் என்று அவளின் தாய் செல்ஃபி ஸ்டிக் வைத்து அவளின் தொடையில் வேகமாக அடித்தார் ……
அம்மா வலிக்குதும்மா, நா ஒன்னுமே பண்ணல என்று அவள் அழுது கொண்டே பின்னால் சென்றாள் ….
அம்மா இவ தலையை இப்படி கலஞ்சு போயிருக்கே அப்போ எவ்வளோ நடந்துருக்கும்……
அனந்து நீ என்ன சொல்லுற எனக்கு ஒண்ணுமே புரியல , அம்மா ஏன் அடிக்குறீங்கன்னு சொல்லிட்டு அடிங்கம்மா…..
ஓஹோ அப்படி என்ன??
சொல்லுறேன் நல்லா கேட்டுக்கோ , அந்த பையன்கூட கார்லயே தப்பு பண்ணிட்டுதான வார?
அவளின் தாய் அவ்வாறு கூறவும் அவள் கண்களில் இருந்து கண்ணீர் அருவியாக வழிந்தது…..
அம்மா நீங்களா ஒன்னு கற்பனை பண்ணிக்காதீங்க அங்க என்ன நடந்துச்சுன்னா….
அடச்சீ இதெல்லாம் என்கிட்டேயே எவ்வளோ தைரியம் இருந்தா சொல்லுவ என்று அவர் அந்த செல்ஃபி ஸ்டிக்கை வைத்து அவளின் இரு தொடைகளிலும் மாறி மாறி அடித்தார் அதை பார்த்து அனந்து சிரித்து கொண்டு இருந்தாள்…..
அம்மா….
பிளீஸ்ம்மா வலிக்குது , நா சொல்லுறத கொஞ்சம் கேளுங்க என்று அவள் அழுக அந்த நேரம் பார்த்து அந்த அறையின் ஜன்னல் அருகே எதேச்சியாக வந்த விஹான் கேட்டு விட்டான் உடனே ஓடி சென்று அவர்களின் அறைக்கதவை தட்டினான்…..
வெளியே சத்தம் கேட்கவும் அனந்தி அஸ்வதியை கீழே தள்ளி விட்டு அவளின் மேல் டிராலியை போட்டு விட்டு கதவை திறந்தாள்…..
என்னாச்சு எதோ சத்தம் கேட்டது?
என்று அவன் அப்பொழுதுதான் அஸ்வதியை பார்த்தான் , கீழே விழுந்தது எழ முடியாமல் கிடந்தாள் , அங்கு விஹான்னாவும் வந்து விட்டாள்….
என்ன சத்தம் அது??
அச்சோ என்ன இப்படி விழுந்துட்டீங்க அண்ணா அஸ்வாவ தூக்கு என்று அவள் அஸ்வதி மேல் கிடந்த அவளது டிராலியை எடுத்தாள் விஹான் அவளை மெதுவாக தூக்கி பெட்டில் அமர வைத்தான்…..
என்னாச்சுங்க ஏன் இப்படி விழுந்துட்டீங்க …..
கால் தடுக்கி என்று அவள் அழுது கொண்டே கூறினாள்….
சரி சரி ஒன்னுமில்ல ஒன்னுமில்ல அஸ்வா கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க சரியா போயிடும் என்று விஹான்னா அவளின் தொடையில் தட்டினாள் அப்பொழுது அந்த இடம் வீங்கியது அவளின் சட்டைக்கு மேல் தெரிந்தது…..
சரி விஹான்னா அவங்க ரெஸ்ட் எடுக்கட்டும் நம்ம போலாம் என்று அவன் அவனின் தங்கையை அழைத்து சென்றான்…..
அவர்கள் இருவரும் சென்ற அடுத்த நொடி மறுபடியும் அனந்தி அந்த அறையை பூட்டினாள்…..
என்னடி உனக்கு ஒன்னுன்னா அவன் அப்படி ஓடி வாரான்?
என்ன பண்ணி அவனை மயக்குன சொல்லுடி என்று அவளின் தாய் மீண்டும் மீண்டும் அவளை கையிலும் தொடையிலும் மாறி மாறி அடித்தார்….
அவளும் அடிகளுடையே அங்கு நடந்த அனைத்தும் அழுது கொண்டே கூறினாள்…..
உன்னோட இந்த அஞ்சாங்கிளாஸ் கதைய வேற யாருகிட்டயாவது போய் சொல்லு அவங்க நம்புவாங்க , ஆம்பளை துணை கேக்குதோ என்று அவர் அவளை வெளியே தெரியாத இடத்தில் அடித்து விட்டு சென்றார்……
நீண்ட நேரம் அவள் அழுது கொண்டே உறங்கி விட்டாள்…..
அஸ்வதி எழுந்திருப்பா சாப்பிடலாம் என்று விஹான்னா அவளை எழுப்பி கொண்டு இருந்தாள்…..
அஸ்வதி திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள்….
கூல் கூல் நாதான் விஹான்னா வாங்க சேந்து சாப்பிடலாம் என்று அவள் அஸ்வதியை அழைத்து சென்றாள் ….
சில அடிகள்தான் நடந்திருப்பாள் அதற்குள் அவளின் தாயார் காலில் அடித்த இடம் வலி பின்னியெடுக்க அவள் நடக்க முடியாமல் அப்படியே கால் மடங்கி விழ போகும் சமயம் அந்த பக்கமாக வந்த விஹான் அவளை விழாமல் பிடித்து கொண்டான்…..
என்னாச்சுங்க ?
இவங்க அப்போவே கீழ விழுந்தாங்கல்ல அதான் கால்ல நல்லா அடி பட்டுருச்சு போல அண்ணே நீ பாத்து அவங்க கைய புடிச்சிட்டு வா என்று அவர்கள் இருவரும் அவளை மெதுவாக அழைத்து கொண்டு சென்றார்கள்….
அவர்கள் மூவரும் அங்கு சென்றனர்…..
அஸ்வதியை அண்ணன் தங்கை இருவரும் கைத்தாங்கலாக அழைத்து வருவதை பார்த்த சுலோச்சனாவுக்கும் , அனந்திக்கும் கோவம் கரையை கடந்தது…..
அஸ்வாவுக்கு என்னாச்சு ஏன் இப்படி ரெண்டு பேரும் அவளை கைத்தாங்கலா கூட்டிட்டு வாரீங்க?
அம்மா இவங்க அப்போவே ரூம்ல கால் தடுக்கி விழுந்துட்டாங்க சோ கால்ல நல்ல அடி அதான் …..
அச்சோ இப்போ கால் எப்படி இருக்கு அஸ்வா?
பரவாயில்ல ஆன்டி….
சரி வா வந்து பரோட்டா சாப்பிடு நானே செஞ்சது , மட்டன் கிரேவி சூப்பரா இருக்கும் சாப்பிட்டு பாத்து எப்படி இருக்குன்னு சொல்லு என்று பீவி அவள் தட்டில் நான்கு பரோட்டக்களை வைத்தார்…..
பீவி இவளுக்கு பரோட்டா அவ்வளோவா பிடிக்காது , சாதம் இருந்தா குடு ……
ஏன் சுலோ ஒரு நாள் தான சாப்பிட்டா ஒன்னும் ஆகாது என்று அவர் அஸ்வதிக்கு பரோட்டக்களை வைத்தார் ….
அஸ்வதிக்கு பரோட்டக்களை பிய்க்க தெரியவில்லை அவள் பரோட்டக்களை பிய்க்க தெரியாமல் கஷ்டப்படுவதை பார்த்த ஹைரூன் பீவி அவளுக்கு அழகாக பிய்த்து மட்டன் கிரேவியை ஊற்றி கொடுத்தார்….
தாங்க்ஸ் ஆன்டி….
இட்ஸ் ஓகேடா கண்ணா இப்போ நல்லா சாப்பிடு ……
ஓகே ஆன்டி என்று அவள் பரோட்டக்களை வேகமாகவும் ரசித்தும் ருசித்தும் சாப்பிட்டு கொண்டு இருந்தாள்…….
இதை எல்லாம் விஹான்னா பார்த்து கொண்டே இருந்தாள், அவள் மனதில் அஸ்வதியை பற்றியும் அவளின் குடும்பம் பற்றியும் ஆயிரம் கேள்விகள் அவள் மூளையில் சுழன்று கொண்டு இருந்தது…….
ஆமா டேய் விஹான் எப்பவுமே உன்னோட முடிய நீ கட்டாம விரிச்சி போட்டுட்டுத்தான சுத்துவ இப்போ என்ன போனி டெயில் எல்லாம் போட்டுருக்க?
என்று அவனின் தாயார் ஹைரூன் பீவி கேட்கவும் , அஸ்வதிகும் விஹானுக்கும் ஒரே நேரத்தில் புறை ஏறியது….
அட ரெண்டு பேரும் தண்ணிய குடிங்க என்று பீவி இருவருக்கும் பருக தண்ணீர் கொடுத்தார்…..
ரொம்ப நாளுக்கு பிறகு இப்போதான் உன்னோட காதை பாக்குறேன் , எத்தனை நாளாச்சு உன்னோட முகத்தை இப்படி பாத்து ….
சரிம்மா இப்போ சாப்பிடுங்க என்று விஹான் யாருக்கும் தெரியாமல் அஸ்வதியை பார்த்தான் அவளும் அவனைத்தான் பார்த்து கொண்டே சாப்பிட்டு கொண்டு இருந்தாள், அவனும் நோக்க இவளும் நோக்க அங்கு ஒரு நிமிடம் இருவரின் விழிகளும் சந்தித்து கொண்டன….
இதை அஸ்வதியின் தாயார் பார்த்து விட்டார்…..
ஏய் அஸ்வதி இப்படியா மேன்னர்ஸ் இல்லாம சாப்பிடுவ என்று அவர் அவளை திட்ட வாயெடுக்கும் முன் பீவி தடுத்து விட்டார்…..
ஏன் சுலோ சின்ன பொண்ண திட்டுற அவ எப்படி வேணாலும் சாப்பிட்டு போகட்டும் அது அவ இஷ்டம் , அஸ்வதி நீட்டாத்தான் சாப்பிடுறா என்ற பீவி அஸ்வதியை பார்த்து அழகாக சிரித்தார் …..
அவளின் தாயார் அவ்வாறு கூறவும் அஸ்வதி வாயில் வைத்து இருந்த பரோட்டக்களை முழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் முழித்து கொண்டு இருந்தாள், நம்ம என்ன அவ்வளோ கேவலமாவா சாப்பிடுறோம் என்று அவள் சிந்தித்து கொண்டே , குருமா கொஞ்சம் ஊற்றி சாப்பிட ஆரம்பித்தாள்….
இதை பார்த்த அனந்தி அவள் காதிற்கு அருகே சென்று வாழ்நாள் முழுக்க சோத்தயே பாக்காத மாதிரி திங்காத என்று அவள் கூறவும் அஸ்வதிக்கு அதற்கு மேல் சாப்பிட முடியவில்லை அவள் கண்களில் கண்ணீர் கெட்டியது….
அனந்தி அஸ்வதி அவ்வளோ ஒன்னும் மோசமா சாப்பிடல சோ இப்படி அடுத்தவங்களை கஷ்டபடுத்துற வார்த்தைகளை யுஸ் பண்ணாத…..
அஸ்வதி விஹாண்ணாவை ஆச்சர்யமாக பார்த்தாள் , அனந்து அவள் காதில் கூறியது எப்படி இவளுக்கு கேட்டிருக்கும் என்று….
என்னாச்சு விஹான்னா?
ஏன் அனந்தி என்ன சொன்னா?
என்று அவளின் தாய் பீவி கேட்கவும் அனந்தி அஸ்வதியின் காதில் கூறிய விஷயத்தை சொன்னாள்…..
அட நீங்க எல்லாரும் ஏன் அஸ்வதியவே பாத்துட்டு இருக்கீங்க எல்லாரும் அவங்க அவங்க சாப்பாட்டை பாத்து சாப்பிடுங்க என்று பீவி சிரித்து கொண்டே கூறினாள் …..
அஸ்வதிம்மா இன்னொரு பரோட்டா வச்சிக்கோ என்று பீவி அவள் தட்டில் வைத்தார், அவள் அந்த பரோட்டாவை உண்ணாமல் ஹைரூன் பீவியையே பார்த்து கொண்டு இருந்தாள்…..
தனக்கும் இப்படி ஒரு பாசமான அம்மா இருந்திருக்கலாம் என்று…..!
அஸ்வதி உன்னோட பரோட்டாவை நா பிச்சி போட்டுட்டேன் சாப்பிடு என்று விஹாண்ணா கூறினாள் , அஸ்வதி அவளை பார்த்து சிரித்து விட்டு அனைத்தையும் சாப்பிட்டு முடித்தாள்….
அஸ்வதி சாப்பிட்டு முடிப்பதற்குள் அவளின் பெற்றோர் சாப்பிட்டு முடித்து விட்டு சென்று விட்டனர் ஆனால் விஹான்னா மற்றும் பீவி அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை அவளுடனே அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள்……
அஸ்வதிக்கு அவளின் தாயார் மற்றும் தங்கை இருக்கும் அந்த அறைக்கு செல்ல பயம் திரும்பவும் அடி விழும் என்று அதனால் கொஞ்ச நேரம் வெளியே சுற்றலாம் என்று அவள் யோசித்து கொண்டு இருக்கும்போதே பீவி அவளை அழைத்தார்…..
என்னாச்சு அஸ்வா?ஏன் இங்கேயே நின்னுட்டு இருக்க?தூங்க போகலயா?
அது நா வந்தவுடனே கொஞ்ச நேரம் நல்லா தூங்கிட்டேன் அதான் தூக்கம் வரல , நா கொஞ்ச நேரம் டிவி பாக்கலாமா?
தாராளமா பாருடா கண்ணா…ஸ்கூல் பொண்ணு மாதிரி இதுக்கெல்லாமா பெர்மிஷன் கேப்ப என்று அவர் அவளின் தலையை மெல்லமாக வருடினார்…..
அஸ்வதி கொஞ்ச நேரத்தை கடக்க டிவி முன்னால் போய் அமர்ந்தாள் , சிறிது நேரம் பார்த்தவளுக்கு போர் அடித்துவிட்டது …..
அவள் ஹைரூன் பீவியை தேடி கிட்சன் சென்றாள் அங்கு அவர் பாத்திரம் துலக்கி வைத்து விட்டு முகம் கழுவி கொண்டு இருந்தார்……
வா அஸ்வதி எதும் வேணுமா?
என்ன வேனும்ன்னு அம்மாகிட்ட சொல்லு உடனே செஞ்சு தாரேன்….
அவர் தன்னை அம்மா என்று அழைக்க சொல்லவும் அஸ்வதிக்கு அழுகை வந்தது விட்டது , ஓடி சென்று பீவியை கட்டி அணைத்து கொண்டாள்….
அச்சோ அஸ்வதிக்கு என்னாச்சு?ஏன் அழுகுற என்று அவர் அவளின் கண்ணீரை துடைத்து விட்டார்…..
நா உங்களை அம்மான்னு கூப்பிடலாமா?
தாராளமா கூப்பிடுக்கோடா செல்லம் என்று அவர் அவளின் நெற்றியில் முத்தமிட்டார்……
அம்மா நா கொஞ்ச நேரம் வெளிய கார்டன்ல நடந்துட்டு வரவா?
தாராளமா போடா செல்லம் , இனி நீ இப்படி பெர்மிஷன் எல்லாம் கேக்க கூடாது தாராளமா எங்க வேணாலும் போ என்று பீவி சிரித்தார்….
சரிம்மா என்று அவள் வெளியே சென்றாள்……
மிகவும் நீண்ட பெரிய கார்டன் அது , அனைத்து விதமான ரோஜாக்களும் அங்கு இருந்தது , அந்த இரவு நேரத்தில் அந்த ரோஜாக்கள் பணியில் குளித்து கொண்டு இருந்தது……
அவள் அதை ரசித்து கொண்டே சென்று கொண்டு இருந்தாள் அப்பொழுது தூரத்தில் ரோஜா செடிகளுக்கு மத்தியில் இருந்த ஊஞ்சலில் விஹான் அமர்ந்து கொண்டு அவளின் கிளிப்பை கழற்ற முயற்சி செய்து கொண்டு இருந்தான்…..
அதை பார்த்தவள் வேகமாக அவனிடம் சென்றாள்…..
ஹலோ என்று அவள் அவனை அழைத்தாள்….
அவளுக்காக காத்திருந்தது போல அவன் அவளை பார்த்தான் ….
ஒரு வேளை அஸ்வதி நான் அந்த கிளிப்பை எடுத்து விடுகிறேன் என்று கூறியதால் அவளுக்காகத்தான் காத்திருக்கிறானோ???
தொடரும்…..
உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்…….
❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


தங்களது வீட்டிற்குள் செய்த கொடுமைகள் போதாது என்று சுற்றிப்பார்க்க வந்த வெளி இடத்திலும் ஏன் இத்தனை கேவலமாக நடந்து கொள்ள வேண்டும்.
ஒருவர் உண்ணும் போது கூட நிம்மதியாக இருக்க விடாமல் வார்த்தைகளால் வதைக்கும் ஜந்துக்கள்.
அஸ்விதாவை இத்தனை வருடங்களாக மட்டம் தட்டி அவள் மனதில் தாழ்வு மனப்பான்மையை உண்டு செய்துள்ளனர்.
விஹானா சந்தேகம் கொள்ள ஆரம்பித்துவிட்டால்.
அஸ்வதியே வந்து கழட்டி விட்டா தான் அந்த கிளிப் கழலுமா விஹான்? 😅 ஊஞ்சலில் ஒரு காத்திருப்பு வேற!
Haha….
Unga comments thaan enaku boost …
Thanks for your valuable comments…..
வீட்ல இருந்து விடுதலை கிடைச்சு இங்க இவளுக்கு நிம்மதி கிடைக்குமோ
பொறுத்திருந்து பார்ப்போம்….