Loading

நதி 3

 

 

 

அன்று

சென்னையின் புறநகர் பகுதியிலிருந்து தன் ஸ்கூட்டியை இயக்கி கொண்டிருந்தவளின் கேசம், காற்றின் கீதத்திற்கு ஏற்றாற் போல் இசைந்து நார்தனம் ஆட, தன் கல்லூரியை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தாள் அகரநதி.

புயல் வேகத்தில் சென்றுக்கொண்டிருந்தவளின் வேகத்தைக் குறைத்தது அவளின் செல்பேசி. இசைந்து, அவளை அழைப்பேற்கும் படி கட்டளையிட, சாலையின் ஓரத்தில் வண்டியை நிறுத்திவிட்டு அழைப்பை ஏற்றாள் அகரநதி. ஏற்றவுடன் அவள் செவிகளில் வசைகள் தான் விழுந்தன. மறுமுனையில் வசை பாடிக்கொண்டிருந்தான் கார்த்திக்.

“முண்டமே, எங்க இருக்க.? கொஞ்சமாவது அறிவிருக்கா உனக்கு.?” அவன் திட்ட ஆரம்பிக்க,

“தண்டமே எதுக்குத் திட்டுறன்னு சொல்லிட்டு திட்டு, எருமை மாடு” எனத் தானும் திட்ட துவங்கினாள்.

“எங்கடி இருக்க” சற்றுக் கோபமாய்க் கேட்டான்.

“காலேஜ்க்குத் தான்டா போயிட்டு இருக்கேன், ஏன்டா இப்ப கத்துற, நடு ரோட்ல நிண்ணு கத்த வச்சிட்டு இருக்க” இவளும் அவனுக்கு இணையாய் சலிக்காமல் வறுத்தெடுத்தாள்.

“புது வண்டி எடுத்திருக்கப் பூஜை போடாமல் எந்தக் கூமுட்டையாவது வண்டி எடுக்குமா.?”

“இந்தக் கூமுட்டை வண்டி எடுக்கும், போடா லூசு” என அவள் பதிலுரைத்தாள்.

“சரி சரி வா பூஜை போட்டு வந்திடலாம்” என அவன் சொல்ல,

“ஏய் லூசு காலேஜ்கிட்ட வந்துட்டேன் டா”

“பொய் சொல்லாதே பக்கி, நீ எங்க இருக்கன்னு எனக்குத் தெரியும்”

“உனக்கெப்படி டா தெரியும்?”

“எருமை பின்னாடி திரும்பி பாரு” எனக் கார்த்திச் சொல்ல, அவள் விரைந்து திரும்பி பார்க்க, ஒற்றைப் புத்தகத்தைக் கையில் சுழற்றியபடி வந்தான் கார்த்தி.

“என்னடா என்ன வேவு பார்க்க வந்தீயா.? இதெல்லாம் யார் பண்ண சொன்னது எங்க அப்பா தான?” என அவனைப் பார்த்து முறைத்தாள் அகரநதி.

“ஆமா நான் உன்னை வேவு பார்க்க வந்துட்டேன், அங்க பாரு” என அவன் கைகாட்டிய இடத்தைப் பார்த்தவள் அவனைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தாள்.

“அட லூசு பயலே இதுக்குத் தான் இங்க வந்தீயா.?” நக்கலாய் சிரித்தாள்.

“சிரிக்காத டி” அவன் அதட்டினான், முகத்தை கோபமாக வைத்துக்கொள்வது போல் நடித்தான்.

“நடிக்காதே டா, நீ என்கிட்ட கோப படுற, இதை நான் நம்பணும்.? ஆமாடா ஒவ்வொரு லேடீஸ் காலேஜ் வாசல்லையும் போய்த் தவமிருக்கியே ஒரு பொண்ணாவது, உன்ன பார்த்து சிரிச்சுச்சா.?” ஆர்வமாய் கேட்டாள் அதி.

“ஆமா சிரிச்சுடாலும், இதோ இந்த காலேஜ் முன்னாடி வந்து அஞ்சு நாளா நிக்குறேன், ஒருத்தி கூட ஏறெடுத்து பார்க்க மாட்டேன்றா, எப்படி இருக்கும் அதி சொல்லு, இது என்னோட அஞ்சு நாள் உழைப்பு தெரியுமா, கால் கடுக்க நிக்குறது எவ்ளோ கஸ்டம் தெரியுமா.?”

“கார்த்தி நீ ஆயிரம் பட்டாம்பூச்சில ஒரு பட்டாம்பூச்சி நம்ம கையில சிக்காதன்னு நினைக்குற, ஆனா லவ் இத்தனை பொண்ணை பார்த்து வர்றதில்லைடா, அது வேற அந்த ஸ்பார்க் உனக்கு வரும் போது சொல்லு நானே அந்த பொண்ணுகிட்ட போய் பேசுறேன்” என அதி சொல்லியபடி வண்டியை ஸ்டார்ட் செய்தாள்.

“அப்போ எனக்கெல்லாம் பொண்ணே செட் ஆவாதா..?”

“அதெல்லாம் ஆகாது ராசா வந்து வண்டியில ஏறு, லவ்வ விட லைஃப்ல சாதிக்க நிறைய விசயம் இருக்கு” பதில்கொடுத்தாள் அதி.

“நீ யாரையும் லவ் பண்ணலை அதான் உனக்கு என் கஸ்டம் புரியலை,இந்த நாளை உன் டைரில குறிச்சு வச்சுக்கோ, நீயும் ஒருத்தன் பின்னாடி லோ லோன்னு அலைஞ்சு, லவ்வாங்கியாகி, கட்டினால் அவனை தான் கல்யாணம் பண்ணிக்கப் போறன்னு நிக்க போற பாரு, அப்போ இந்தக் கார்த்தித் தான் உனக்கு ஹெல்ப் பண்ணுவேன்” என வீரமாய் அவன் சவால் விட்டான்.

“கல்யாணமாவது கத்திரிக்காயவது, நம்ம லைன்னே வேற”

“பார்க்கலாம் மேடம்” குறும்பாய் சிரித்தான் கார்த்திக்.

“இப்படியே பேசிட்டு இருந்த எப்புடி மேடம் காலேஜ் போறது” நக்கலாய் கார்த்திக் கேட்க,

“அடேய் எல்லாம் உன்னால தான், சும்மா போயிட்டு இருந்தவளை பூஜை போடணும்னு நிறுத்திட்டு, இப்போ என்னை நக்கல் பண்ணுறஅவர்.? ஏறி தொலை சீக்கிரம் போகலாம்” அவள் சொன்ன நொடியில் பட்டென ஏறி அமர்ந்தவன், அவளைக் கோவிலுக்கு அழைத்துச் சென்று, அவளின் புதிய வண்டிக்கு பூஜை போட்டு விட்டு, இருவரும் கல்லூரி வந்து சேர்ந்தனர்.

அங்கு அவர்கள் பாடல் பாடி இரண்டாம் பரிசு பெற்றதற்குப் பாராட்டும் பெற்றுவிட்டு, அவர் அவர் இருக்கையில் சென்று அமர்ந்து வகுப்புகளுக்குத் தயாராகியிருந்தனர்.

“என்னடி அதி, அவன் கூடப் பாடியே செகண்ட் ப்ரைஸ் வாங்கிட்டியா.?” அவளின் தோழி மலர்விழி விழிகளை உருட்டி கேட்டாள்.

“ஆமா ஆமா, பாடியே கார்த்தியும் மயக்கி வச்சிருக்கா பாருடி, நம்ம யார்கிட்டையாவது இந்தக் கார்த்திப் பேசுறானா பாரு, இவகிட்ட மட்டும் எதுக்குடி க்ளோஸா பழகணும்” என இன்னொரு தோழியான நிஹாரிகா கேட்பதிலே அவள் முகத்தில் பொறாமை வழிந்தது.

“கார்த்தி என் ஃப்ரெண்டுடி” என அவள் எதோ சொல்ல வர,

“இதுக்குப் பேரு லவ் தான்டி அதி, உனக்குத் தான் புரியலை” என மலர்விழி பேச,

“ஏய் சீ கார்த்தி அப்படிலாம் என்கிட்ட பழகலை, நானும் அவன்கிட்ட அப்படி பழகினதில்லை” மனதில் பட்டதை பட்டென சொன்னாள் அதி.

“அப்படியா சொல்ற..? இப்போ பாரு எங்கையோ பாக்குற மாதிரி உன்னை பார்ப்பான் பாரு”மலர் சொன்னாள்.

“ஏய் மலர் அவன் அப்படி இல்லைடி” அவள் எதோ சொல்லிக்கொண்டிருந்த போதே அதி பக்கம் மெல்ல திரும்பி பார்த்தான் கார்த்தி.

“பார்த்தியா சொன்னேன்ல?” சிரித்தாள் மலர்.

“அதி பென் கொடுடி மறந்துட்டேன்” என கார்த்தி கிசுகிசுப்பான குரலில் கேட்க, அதி அவனிடம் பேனாவை தாக்கி எறிந்தாள்.

“பார்த்தியா நீ பாக்குறன்னு தெரிஞ்சதும் பேனா கேக்குற மாதிரி நடிச்சுட்டான்” மலர் முக வாட்டத்துடன் சொன்னாள்.

“மலர் ஏன்டி நீ வேற, உனக்குக் கார்த்திய பிடிக்கும்னு எனக்குத் தெரியும், நானே உனக்காகக் கார்த்திகிட்ட தூது போயிருக்கேன், நான் அவனை லவ் பண்ணியிருந்தால் உனக்காக எதுக்குடி தூது போகப் போறேன்” எரிச்சலுடன் அவள் மொழிய,

“லாஜிக் சரி தான், அப்பறம் ஏன்டி கார்த்தி எங்களைப் பார்க்க கூட மாட்டேன்றான்” நிஹாரிகா கேட்டாள்,

“நிஹா.! நம்ம காலேஜ் பொண்ணுங்க எல்லாரும் ஓட்டை உடசலுங்கன்னு சொல்லிட்டான்டி இன்க்ளூடிங் மீ” முகத்தை வருத்தமாய் வைத்தபடி அதி உதட்டை பிதுக்கினாள்.

“அவன் எப்புடி டி இப்படிச் சொல்லலாம், அவனை விடச் சூப்பரா ஒருத்தன காட்டாவா.?” எனத் தன் கைப்பேசியில் எதோ புகைபடத்தைத் தேடி அதியிடம் காட்டினாள்.

“எங்க காட்டு பார்ப்போம்“ ஆர்வமாய் மலரும், அதியும் பார்க்க ஆரம்பித்தனர்.

“ஏய் யாருடி இவன் இம்புட்டு அழகா இருக்கான்” வாயை பிளந்தாள் மலர்விழி.

“அழகா இருந்தால் மட்டும் போதுமா, நல்லவனா இருக்க வேண்டாமா” என அதி அந்த புகைபடத்தை பார்த்தபடி கேட்டாள்.

“சைட்டு தான அடிக்கிறோம் நல்லவனா இருந்தா என்ன.? கெட்டவனா இருந்தா என்ன.?” நிஹாரிகா விளக்கம் தர,

“அழகா தான் இருக்கான், யாருடி இவன்.?” எனச் சலித்தபடி சொன்னாள் அதி.

“அடியே இதைப் பாரு, இவன் தான் இப்போதைக்கு ட்ரெண்டிங், நேஷனல் க்ரேஷ்ன்னு வேற சொல்லிக்குறாங்க, இவன் பேரு தீரேந்திரன் போலீஸ் டிபார்ட்மெண்ட்” என அவள் சொல்லி முடிக்க,

“போலீஸா..? அப்போ கண்டிப்பா கெட்டவனா தான் இருப்பான். நான் பார்த்த வரைக்கும் போலீஸ்னாலே கெட்டவங்க தான்” மீண்டும் தன் விருப்பம் இன்மையோடு சேர்த்து வெறுப்பையும் காட்டினாள் அதி.

“அதி அவன் என்ன பண்ணியிருக்கான்னு தெரிஞ்சா, உனக்கும் அவன் க்ரஷ் ஆகிருவான்டி” என நிஹா சொல்ல,

“அப்படி என்னடி பண்ணி்ட்டான் அவன்.?”

“தமிழ்நாட்டுல இருக்க எல்லாப் பொண்ணுங்களோட இதயத்தையும் திருடிட்டான்டி, ஓரே ஒரு போஸ்ட்டு தான் போட்டான், யாரா இவன் எந்தப் படத்துல போலீஸா நடிச்சிருக்கான்னு பார்த்தா.? நிஜாமாவே போலீஸ்டி அவன்” நிஹா எடுத்துரைத்தாள்.

“எல்லாப் பொண்ணுங்கன்னு சொல்லி என்னையும் இதுல சேர்த்துக்காதடி, அழகு ஒன்னு மட்டும் தகுதியில்லை, நான் அழகா பார்த்தெல்லாம் எவனையும் லவ் பண்ண மாட்டேன்” கண்டிப்பாய் சொல்லியவள் ஆங்கில வகுப்பு நடந்துக்கொண்டிருக்க, இத்தனையும் பேசிய படி குறிப்பெடுத்துக்கொண்டிருந்தாள் அகரநதி.

“இப்படிப் பேசுறவங்க தான் கண்டதும் காதலில் விழுவாங்களாம்” எனச் சொன்ன நிஹாவை பார்த்து முறைத்துக்கொண்டிருந்தாள் அதி.

“நான் சொல்லல அதி புள்ளி விவரம் சொல்லுது” என ஈயென இளித்து வைத்தாள் நிஹா.

அது இருபாலர் பயிலும் கல்லூரி என்பதால், ஆண்கள் ஒரு புறமும், பெண்கள் இன்னொரு புறமும் அமர்ந்திருந்தனர், அந்த வகுப்பில் பயிலும் ஆண்களுக்கு அதியின் மேல் கண்கள் இருப்பது போல, பெண்களின் விழிகள் கார்த்தியை சுற்றி வரும், வகுப்பு முடிந்து விட்டதாய் மணி அடிக்க, அடுத்த வகுப்பிற்காகத் தமிழ் ஆசிரியர் சரளா உள்ளே நுழைந்தார்.

“குட் மார்னிங் மேம்” மாணவர்கள் அனைவரும் சேர்ந்து பாட, அனைவரையும் அமரும் படி சைகை செய்தார் ஆசிரியர் சரளா.

“வணக்கம் பிள்ளைங்களா, இன்னைக்கி நம்ம என்ன பார்க்க போறோம்னா.?” எனச் சரளா துவங்கும் முன்,

“மேம் இன்னைக்கி ஃப்ரைடே, நோ க்ளாஸ்” என அனைவரும் சேர்ந்து கத்திவிட,

“தெரியும் பிள்ளைகளா இப்படித் தான் பண்ணுவீங்கன்னு” எனச் சிரித்தபடி சரளா சொல்ல,

“இப்ப பார்றேன், இந்த அதியையும் கார்த்தியையும் சேர்ந்து பாட சொல்லுவாங்க” என ஒரு வித பொறாமையில் சொன்னாள் நிஹா.

“இதுக்கு அவங்களை க்ளாஸே எடுக்கச் சொல்லிறலாம்டி” என மலர் சொல்ல,

“அகரநதி, கார்த்தி இங்க வாங்க” எனச் சரளா அழைக்க,

இருவரும் வகுப்பின் முன் நின்றனர்.

“இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து நம்ம காலேஜ்க்கு இரண்டாவது பரிசு வாங்கிக் கொடுத்திருக்காங்க, அவங்களை வாழ்த்தி எல்லாரும் கை தட்டுங்க” எனச் சரளா கேட்டதற்கு இணங்க, அத்துணை மாணவர்களும் கரகோஷங்களை எழுப்ப, மலரும் , நிஹாவும் முறைத்தபடி அமர்ந்திருந்தனர். கார்த்தியும் ,அதியும் சிரித்தபடி பாராட்டைப் பெற்றுக்கொண்டிருந்தனர்.

அந்தப் பாடலை பாடும்படி பணித்தார் சரளா.

“மேம் மலரும், நிஹாவும், கார்த்திக் கூடப் பாட ஆசை பாடுறாங்க, நீங்க பர்மிஷன் கொடுத்த பாடுவாங்க” என அதி சொல்ல,

“கோர்த்துவிட்டியே பரட்டை” என இருவரும் தலையில் கை வைத்து அமர, வகுப்பே கொல்லெனச் சிரித்தது,

“நம்மளை அவமான படுத்திட்டாடி வரட்டும்” என இருவரும் மாறி மாறி பேசிக் கொண்டிருந்தனர்.

“வாங்க மலர்விழி, நிஹாரிகா, பாட வாங்க” எனச் சரளா அழைக்க,

“மானம் போச்சு” எனப் புலம்பிய படி எழுந்தவர்கள்,

“மேம் எங்களுக்குப் பாட தெரியாது மேம்” சிரித்து வழிந்தபடி சொல்ல, மீண்டும் அனைவரும் சிரித்தனர்.

“சரி சரி, கார்த்தி, அகரநதி நீங்க பாடுங்க” எனச் சொல்லிவிட்டு தன் நாற்காலியில் அமர்ந்தார்.

இருவரும் பாடத் துவங்க, வகுப்பே அமைதியில் லயித்துப் போனது, கார்த்தியின் அருகில் நிற்கும் போது நண்பனாய் பாதுகாப்பு உணர்வை பெற்றிருந்தாள் அகரநதி, மாசற்ற நட்பை அவனிடமே உணர்ந்தாள் அவள். ஆனால் விதியோ..? வேறு கணக்கை போட்டு வைத்திருந்தது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
8
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. எனக்கு இவங்க ஃப்ரெண்ட்ஷிப் ப பார்த்து கண்ணீர் வருது … ஏன் அப்படி மாறி போச்சு … தாங்க முடியல பா 🥺

  2. அருமையான கல்லூரி நாட்கள் இருவருக்கும். கல்லூரியே பொறாமைப்படும் அளவு அன்புடன் ஒன்றாய் சுற்றி வந்துள்ளனர் இருவரும்.
    நண்பனுக்கு காதல் உணர்வு தோன்றும் போது தோன்றும் என்று அறிவுறுத்தும் அகர்க்கு காதல் பற்றிய எண்ணம் என்னவாக இருக்கும்?
    அடடா! தீரேந்திரன் அப்பொழுதே ஆறுமுகம் ஆகிவிட்டானா அகர்க்கு.
    மலர், நிஹாரிகா நண்பர்களானாலும் கார்த்தி அகர் நட்பை முழுதாய் புரிந்துகொள்ளாமல் சந்தேக கண்கொண்டு பார்க்கின்றனரே.
    இவர்களது வாழ்க்கையில் விதி செய்த சதி தான் என்னவோ?