Loading

3

 

 

 

வேதநாயகி பேரனின் செயலில் அதிர்வில் இருந்தவர் அவன் போவதை கண்டு அதிர்ந்து போனவர், “செழியா நில்லுடா… எதுவாக இருந்தாலும் பேசிக்கலாம். டேய் அறிவு அவனை நிக்க சொல்லு.. செழியா” என்றவர் அழ, மீனாட்சியும் அதே நிலைமையில் தான் இருந்தார்.அவருக்கு எவளோ ஒருத்திக்காக மகன் தன்னை எதிர்த்து பேசியதை தங்கிக்கொள்ள முடியாதவர் அவன் தன்னை தள்ளி விட முயற்சித்ததிலும் அவன் அடுத்தடுத்து பேசிய பேச்சுகளிலும் சுயம் மறந்து சிலையாகிஇருந்தார்.

 

அர்ச்சனாவோ செழியனையும் அவனை ஒட்டிக்கொண்டே செல்லும் வேதாவையும் வெறித்து பார்த்து கொண்டு இருந்தாள்.

 

 

அரவிந்தோ கடைசியாய் ஒரேபார்வைதான் பார்த்தான் அவனை. அவளை அழைத்து கொண்டு வெளியே வந்தவன், ஓரளவு இதை எதிர்பார்த்து இருந்தாலும் இவ்வளவு வெறுப்பை எதிர்பார்க்கவில்லை. அதுவும் கடைசியாக அரவிந்தனின் பார்வை மிகவும் குற்றவுணர்வாக இருந்தது.

 

அறிவழகன் “அவன் போய்ட்டு போறான் விடுங்க, எங்க போய்ட போறான்”என்றவருக்கு மகனின் செயலை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

 

 

அவன் அவளை அழைத்துக்கொண்டு நடந்தவன் தெருவை தாண்டியிருக்க, அவர்களின் பின்னே வந்த அகரனோ, “செழியா.. நில்லு செழியா” என்று சத்தம் போட்டு கொண்டே ஓடி வர, பின்னால் திரும்பி பார்த்தவனோ அகரனை கண்டு அதிர்ந்தவன், “என்னடா என்ன ஆச்சு.. ஏன் இப்படி ஓடி வர” என்று கேட்டவனுக்கு, யாருக்கும் ஏதும்தவறாக நடந்திருக்குமோ என்ற பதட்டம்.

அவனோ, “ஏன்டா உனக்கு கொஞ்சமாச்சும் அறிவிருக்கா.. இந்த மாறின்னு முன்னாடியே போன் பண்ணி சொல்லிருந்தா ஏதாச்சும் பிளான் பண்ணிருக்கலாம். எதை செஞ்சாலும் தடாலடியாத்தான் செய்வியா நீ? இப்போ எங்க போக போற இந்த பொண்ணையும் வச்சுக்கிட்டு? நான் சொல்றத கேளு எனக்கு தெரிஞ்ச ஒரு இடம் இருக்கு, அங்க கொஞ்ச நாள் இந்த பொண்ண பாதுகாப்பா தங்க வைப்போம். நீ வீட்டுக்கு வா நான் அப்பாட்ட பேசுறேன். அப்புறம் முடிவு பண்ணிக்கலாம்” என்று கூறி அவனின் கைபிடித்து இழுத்தான்.

 

 

செழியனோ அவனின் கையை எடுத்துவிட்டு, “என் லைப் எனக்கு பாத்துக்க தெரியும். புரியுதா? இத உன்கிட்ட சொல்லி அனுப்புன உன் அம்மாகிட்ட போய் சொல்லு” என்றவன் அந்த வழியாய் வந்த ஆட்டோவை நிறுத்தியவன், அவளை ஏற்றி தானும் ஏறிக்கொண்டான்.

 

 

ஏதோ ஒரு வேகத்தில் அவர்களிடம் பேசிவிட்டு வந்தவனுக்கு அடுத்து எங்கே செல்வது என்று தெரியாமல் ஒரு கோவிலின் முன் இறங்கியவன் ஆட்டோவை அனுப்பி விட்டு, அவளை அங்கிருந்த ஒரு படியில் அமர வைக்க, மாலை நன்றாக புலர்ந்திருந்தது. போனை எடுத்தவன் அழைத்தது என்னோவோ தேவுக்குத்தான்…

அவனின் உயிர்த்தோழன்…

 

 

அவன் இருந்த கோவிலின் பெயரை சொல்லி அங்கே வர சொல்ல, அடுத்த பத்து நிமிடத்தில் அங்கு வந்து இறங்கியவனோ, “ஹேய் செழியா டூர் நல்லருந்துச்சாடா? எப்போ வந்த? இங்கே வர சொன்ன?” என்றவனின் பார்வை அப்போதுதான் அவன் அருகில் இருந்தவளை கவனித்தான்.

 

“அச்சோ என்னடா தலைல ரத்தம் வருது? தலைல இவ்ளோ பெரிய கட்டு, யாருடா இந்த பொண்ணு? ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகலாம் வா” என்று கூற, செழியன், “அங்கே இருந்துதான் அழைச்சிட்டு வந்திருக்கேன்” என்று கூறியவனை அதிர்ச்சியாக பார்த்தவன், “இல்லை.. புரியல எனக்கு” என்று கூறியவனுக்கு அனைத்தையும் கூற, அவனின் பார்வையோ அவளின் மேல் கனிவுடன் பதிந்தது.

 

 

“குழந்தை மாதிரி இருக்கா.. இவ மேல என்னடா வெறுப்பு அவங்களுக்கு. இப்போ நீ என்ன முடிவு பண்ணியிருக்க” என்று கேட்க, அவனோ அவளை ஆதுரமாக பார்த்தவன், “இனி இவ மட்டும்தான் எனக்கு. அதுல உறுதியா இருக்கேன்” என்று கூறினான்.

 

 

ஒரு நிமிடம் யோசித்த தேவ், “ஒரு பத்து நிமிஷம் இங்கயே இரு வந்துறேன்” என்றவன் தன் வண்டியை எடுத்து கொண்டு சென்றவன், திரும்பி வந்தவன் செழியனிடம் மாங்கல்யம் கோர்த்திருந்த தாலியை கொடுத்தவன், அவன் அருகில் வேதாவை எழுப்பி நிற்க வைத்தான். அங்கே கோவிலில் அமர்ந்திருந்தவர்களிடம் வந்தவன் அங்கிருந்த பெரியவரிடம்”அய்யா என் தங்கச்சிக்கு கல்யாணம் எங்களுக்கு பெரியவங்க துணை யாரும் இல்லை. அவங்களை வாழ்த்தி கல்யாணம் பண்ணி வைக்க முடியுமா “என்று கேட்டவனை பார்த்தவர்கள் “நாங்களே யாரும் இல்லாதவங்க எங்களை ஏன் பா கூப்பிடற, வேற யாரையும் கூப்பிடேன் ராசா, அவங்க நல்லா இருப்பாங்க என்று ஒரு பாட்டி கூற… நல்லா இருப்பாங்கன்னு சொன்னிங்களே அந்த மனசு போதும் பாட்டி தாத்தா வாங்க, இந்த சாமி கோவில்ல எல்லாரும் சமம் தான். நீங்க நல்ல மனசோட ஆசீர்வாதம் பண்ணுங்க அவங்க நல்லா இருப்பாங்க” என்று கூறி அவர்களை அழைத்து வந்தவன் கவரில் இருந்து பூக்களை எடுத்து அவர்களின் கையில் கொடுத்து ஒரு பாட்டியிடம் அவளுக்கு பூவை வைத்து விட கூற, செழியனோ அதிர்ச்சியில் இருந்தான். அவனுக்கு தேவின் செயல் புரிந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள தயக்கமாக தான் இருந்தது.

 

 

தேவ், “ஹேய் என்னடா.. அப்படியே ஷாக் ஆகி நிக்குற. அதான் முடிவெடுத்தாச்சு இல்ல. அப்புறம் ஏன் தயங்குற? வந்து தாலியை கட்டு” என்று கூற, செழியனோ இன்னும் அதிர்ச்சி விலகாமல்தான் இருந்தான். அவளோ என்ன நடக்குது என்பது போல அவர்களையே பார்த்திருந்தாள்.

 

 

தேவ், “டேய் அப்புறமா சைட் அடிச்சுக்கோ, இப்போ வந்து தாலியை கட்டு அந்த பொண்ணு முடியாம எவ்ளோ நேரம் நிக்கும்” என்றான். அவளுக்கு அவனின் வீட்டில் நடந்ததே ஏதோ புரிவது போல் இருந்தது. செழியன் தேவின் கரங்களில் இருந்த தாலியை வாங்கியவனோ ஒரே நிமிடம் அவளின் முகம் பார்த்தவன், வேகமாக தாலியை கட்டி மூன்று முடிச்சிட்டிருந்தான்.

 

 

பெரியவர்கள் அனைவரும் அட்சதை போட்டு வாழ்த்த, தேவ் அதை அழகாக தன் அலைபேசியில் படமெடுத்தான். பின் அவர்கள் அனைவர்க்கும் இரவு உணவு வாங்கி கொடுத்த தேவ், அவர்களிடம் விடைபெற்று செழியனையும் அவளையும் அழைத்து கொண்டு அவன் வீட்டுக்கு வந்தான். வரும் வழியெல்லாம் அவள் அவனின் முகத்தை மட்டுமே பார்த்துக்கொண்டு வர, அவனோ அவளின் கரங்களை பற்றி அழுத்தம் கொடுத்தான்.

 

 

இருவரும் ஆட்டோவில் வந்திருக்க, அவர்களுக்கு முன்பே வந்திருந்த தேவ், அவர்களுக்காக ஆரத்தி கரைத்து எடுத்து வைத்திருக்க, “ஹேய் ஸ்டாப் இருங்க” என்றவன் ஆரத்தியை எடுத்து வந்து, “அம்மாகிட்ட கேட்டுதான் ஆரத்தி கரைச்சேன், இங்க பக்கத்துல லேடீஸ் யாரும் இல்ல, அதான் நானே சுத்திட்டேன்” என்றவன் இருவரின் நெற்றியிலும் திலகமிட்டு அவர்களை உள்ளே அனுப்பி விட்டு அதை வெளியே கொட்டி விட்டு வந்தான்.

 

 

செழியனோ உள்ளே நுழைந்ததும் அவளை அங்கிருந்த சோபாவில் அமரவைத்தவன், உள்ளே நுழைந்த தேவ்வை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

 

 

அவனோ, “அடேய் டேய் விடுடா, ஏன்டா இப்படி” என்று அணைப்பில் இருந்து விலகியவாறே கேட்க, அவனோ, “தேங்க்ஸ்டா” என்று கூற, “அடிங்க போடா வந்துட்டான் தேங்க்ஸ் சொல்ல, போடா” என்றவன்,”இப்போ நடந்தவரைக்கும் சரி, இனி என்ன செய்ய போறேன்னு தெளிவா யோசிச்சு முடிவெடு. உன்ன நம்பி இன்னொரு பொண்ணு வேற இருக்கா. இன்னும் காலேஜ் கூட முடிக்கல. எதையும் அவசரப்படமா யோசி”நீ என்ன முடிவு எடுத்தாலும் உனக்காக எப்போவும் உன் கூட நான் இருப்பேன். என் நண்பன் எப்போவும் தப்பு பண்ண மாட்டான். இப்போ எப்படி அந்த பொண்ணு தான் வேணும்னு கல்யாணம் பண்ணிகிட்டயோ இதே மாதிரி கடைசி வரைக்கும் இருக்கனும்”என்று கூறியவன் அவர்களுக்கு உணவு வாங்கி வர வெளியே சென்றுவிட்டான்.

 

 

சோபாவில் அமர்ந்திருந்தவளோ நேராக அவனை பார்த்து, “அப்… அப்போ நீங்க சொன்னது எல்லாம் பொய்யா? நமக்கு இப்போதான் கல்… கல்யாணம் நடக்குதா?” என்று கேட்க, செழியனோ அவளின் கேள்வியில் தலையில் கைவைத்து அமர்ந்து விட்டான்.

 

 

 

அதே நேரம் அவளின் வீட்டில் அவளின் புகைப்படத்திற்கு மாலை போட்டு இருக்க, அவளின் தாயோ, “ஐயோ வேதா, நீ இல்லாம நான் என்னடி செய்வேன். போகும் போதே சொன்னேனே வேண்டாம் வேண்டாம்னு. காலேஜ்ல எல்லாரும் போறாங்க நான் போயே ஆகணும்னு, அதையும் இதையும் சொல்லி அடம்பிடிச்சு போனியே இப்போ ஒரேடியா போய்ட்டியேடி” என்று தலையிலடித்து கொண்டு கதறிக்கொண்டு இருந்தார்.

 

 

“என் தங்கமே உன்ன இனிமேல் நான் எங்க போய் எப்படி பாப்பேன்” என்று அவர் கதற வாசலில் கூடியிருந்த சொந்தங்களாலும் அழுகையை அடக்க முடியவில்லை.

 

 

அவளின் தந்தை அன்பரசனோ நிலைக்குலைந்து போய் இருந்தார். இரண்டு மகன்களுக்கு பிறகு பெண் பிள்ளை வேண்டுமென்று தவமிருந்து பிறந்தவள் அவளின் மீது அனைவர்க்கும் பாசம் அதிகம்.

 

 

 

விபத்து நடந்து இரண்டு நாட்களுக்கு பிறகே இவர்களுக்கு தகவல் கிடைத்திருந்தது கல்லூரியின் மூலம்.

 

 

கல்லூரியில் இருந்து சுற்றுலா சென்ற மாணவிகளில் பதினேழு பேர் நிலசரிவில் சிக்கி உயிரிழந்து விட்டனர். அதில் அவர்கள் மகளும் ஒருவள் என்று கல்லூரி சார்பாக மன்னிப்பும் இரங்கலும் தெரிவித்திருந்தனர்.

 

 

தகவல் கிடைத்ததும் இவர்கள் அனைவரும் பதறி அடித்துக்கொண்டு அங்கே செல்ல, மிக மோசமான அந்த நிலசரிவில் உயிரிழந்த ஒருவரின் உடலும் கிடைக்கவில்லை. அவர்களைப்போல பலர் அங்கு கதறிக்கொண்டு இருக்க, அவளின் தமையன்கள் இருவரும் கல்லூரி நிர்வாகிகளிடம் சண்டையிட, அவர்களுக்குமே இது எதிர்பாராத விபத்துதானே. அவர்களுடன் வந்தவர்கள் சமாளித்து ஊருக்கு அழைத்து வந்திருந்தனர்.

 

 

அன்பரசன் விழுப்புரத்தில் பல்வேறு தொழில்கள் நடத்தும் தொழிலதிபர். வேதா கார்மெண்ட்ஸ், வேதா ரியல் எஸ்டேட், வேதா மில், வேதா டிரான்ஸ்போர்ட் அனைத்து தொழிலுக்கும் சொந்தக்காரர்.

 

 

அன்பரசன் தாமரையின் மகவுகள் அதிரமித்ரன், ஆதிமித்ரன் இரட்டையர்கள். அவர்களுக்கு பின் ஐந்து வருடங்கள் கழித்து பிறந்தவள்தான் வேதமித்ரா. அந்த வீட்டின் கடைக்குட்டி இளவரசி.

 

 

அவளின் அண்ணன்கள் நிலையோ அதைவிட மோசமாக இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்புவரை தங்களைச் சுற்றி வந்து சேட்டை செய்து வம்பிழுக்கும் அவர்களின் செல்லராணி, இந்த உலகத்தில் இல்லை என்பதை அவர்களால் நம்ப முடியவில்லை. கதறித்தீர்த்தனர் இருவரும்.

 

 

அன்பரசனுக்கு தாய் தந்தை யாரும் இல்லை. தாமரை கல்லூரி முதல் வருடம் படிக்கும் போதே அன்பரசனை காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டதால், அவளின் தந்தை தற்கொலை செய்து இறந்து போக, அவர்களுடனும் எந்த தொடர்பும் இல்லை.

 

 

அன்பரசனுக்கு வீடுதான் உலகமே. இறந்த தன்தாயை, மகள் வடிவில் கண்டவர் துடித்து போனார் மகளின் இறப்பில்.

 

 

தாமரை, “ஒரு சின்ன வலியை கூட தாங்கிக்க முடியாம அழுவாளே, அப்போ என் பொண்ணு எப்படி துடிச்சுருப்பா” என்று தன் வயிற்றில் அடித்து கொண்டு அழ, அதுவரை அழுகையை அடக்கிக்கொண்டு இருந்த அண்ணன் தம்பி இருவருமே தாயை கட்டி கொண்டு கதறினர்.

 

 

தாமரையோ கண்களை துடைத்து கொண்டு எழுந்தவர், “என் பொண்ணே எனக்கு இல்லை இனி நான் யாருக்காக வாழனும். நானும் சாகறேன் தங்கமே இதோ அம்மாவும் வந்துறேன் உன்கிட்டயே” என்றவர் அறைக்குள் நுழைய போக, ஆதியின், “அப்பா” என்ற அலறலில் தாமரையும் அதிரனும் திரும்ப, அன்பரசன் நெஞ்சை பிடித்து கொண்டு விழுந்திருந்தார்.

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
7
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

  1. செழியன் அவளுக்காக குடும்பத்தை விட்டு வந்துட்டான் … அவங்க மேல தப்பில்ல … அவங்க சூழ்நிலை அப்படி … ஆனா அவனுக்கு ஆதரவு தந்திருக்கலாம் .. பொறுமையா பேசியிருக்கலாம் … பொசுக்குனு தாலியை வேற கட்டிட்டான் … அந்த பொண்ணோட அப்பாவுக்கு வேற என்ன ஆச்சோ

  2. வீட்டின் பெரியவர்கள் கைவிட்டாலும் உண்மை நட்பு கைவிடாமல் பார்த்துகொண்டது.
    அரவிந்த் மனநிலை என்னவோ? அண்ணனின் திருமணம் முன்பே தம்பியின் திருமணம் முடிந்தது தெரிந்தால் என்னாகுமோ?
    தனது மகனால் நினைவிழந்து ஆதரவு தேடி வந்த பெண்ணை ஏதோ சொத்திற்கு ஆசைப்பட்டு வந்ததை போல் பேசியவர் அவள் இவர்களை விட வசதியானவள் என்று தெரிந்தால் என்ன செய்வார்.
    தங்களது வார்த்தைகளால் சொந்த மகனது உறவை இழந்த குடும்பம் ஒரு புறம், சொந்த மகளை இழந்து தவிக்கும் குடும்பம் ஒரு புறம், சொந்தம் யாரென்றே அறியாத பேதை மறுபுறம்.