Loading

விசித்திர மனிதர்கள்

கல்லூரி செல்ல அவசரமாக அவசரமாக பேருந்தில் ஏறும் பொழுது கயல்விழியின் கால் தடுக்க, தடுமாறி விழப்போனவளை தாங்கிப் பிடித்துக் கொண்டாள் சங்கவி.
கயல்விழி நன்றி கூறும் முன் வேகமாக நகர்ந்து கொண்டாள் சங்கவி.
பேருந்தில் ஏறி அவள் இருந்த இடம் சென்று நன்றி என்று கூறியும், அவள் காதில் ‌வாங்கிக் கொண்டவள் போலவே இல்லை.
அவளைப் புரிந்து கொள்ள முடியாமல் தன் இடம் சென்று அமர்ந்து கொண்டாள் கயல்விழி.
சங்கவியின் அருகில் அமர்ந்திருந்த அவளின் தோழி உமா, ஏன் சங்கவி அவள் நன்றி தானேக் கூறினால், நீ ஏன் பதிலளிக்கவில்லை ? என்ற அவளின் கேள்விக்கு சங்கவி, நீ வேறு இப்போது நன்றி சொல்லும் இவள், கல்லூரியில் நான் தான் காலைத் தடுக்கி விட்டேன் என்று கூறுவாள்.
பலமுறை நான் இவளிடம் இதுபோல் அகப்பட்டிருக்கிறேன். புரிந்து கொள்ள முடியாத விசித்திர மனிதர்கள் போல் நமக்கு முன்னால் ஒன்றும் பின்னால் ஒன்றும் பேசுபவர்களிடம் நாம் தான் விலகி இருக்க வேண்டும் என்றாள் சங்கவி

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

3 Comments

  1. உண்மையிலேயே வித்தியாசமான கதை. ஒரு நொடி நடக்கும் நிகழ்விற்கு பின்னால் இருக்கும் மர்மம் புரிந்து கொண்டு நடந்து கொண்டால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். அருமை. வாழ்த்துக்கள்..

  2. மிகவும் அருமை. வாழ்த்துகள்

  3. உண்மைதான் சிஸ்..சங்கவி கூறியதுபோல,கயல்விழி மாதிரி ஆட்கள் இருக்கின்றனர்..நம் முன்னால் ஒரு மாதிரியும் பின்னால் ஒரு மாதிரியும் பேசிச் செல்வர்..நைஸ் சிஸ்..