Loading

ஓம் ஸ்ரீ சீதளாதேவி மகா மாரியம்மன் குடியிருக்கும்  அழகான கிராமம்…
      தெற்கு வீதியில் தெருமுனையில் ஒரு அடி பம்பு உள்ளது . தெருவாசிகள் குடிப்பதற்கு தண்ணீர் அடித்து எடுத்துச் செல்வார்கள். சிலர் துணி துவைத்து குளிக்கவும் செய்வார்கள்…
      அறுபது வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் துணி துவைத்துக் குளித்துக் கொண்டிருந்தார்…
    தானாக பேசியபடி யாரையோ திட்டிக் கொண்டே இருந்தார். ஆனால் அவர் எதிரில் யாருமேஇல்லை .
    அவருடைய செயல் விசித்திரமாகஇருந்தது…
 கெட்ட வார்த்தைகளால் திட்டிக்கொண்டே துணி துவைத்து, உலர்த்திக் கட்டிக் கொண்டிருந்தார். ஆனால் அவருடைய வாய் மட்டும் திட்டுவதை நிறுத்தவே இல்லை…
 மாதம் ஒருமுறை  இப்படி வந்து சத்தம் போடுவதை வாடிக்கையாக வைத்திருந்தார் .தெருவாசிகள் யாரும் அவரை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. ….
      வாய் வலிக்கும் வரை திட்டி தீர்த்து விட்டு பிறகு கிளம்பி விடுவார். …
     ஏன்  விசித்திரமாக நடந்து கொண்டாரோ  தெரியவில்லை…
 இன்னொரு வகை விசித்திர மனிதர்கள்  காசியில் இருக்கும் அகோரிகள் …
    உடலில் எந்தவித ஆடையும் இன்றி உடல் முழுவதும் விபூதியை பூசிக் கொண்டு ,
 நீண்ட ஜடா முடியும், தாடியும் மீசையுமாக, கழுத்திலும் கைகளிலும் உத்திராட்ச மாலை அணிந்து கொண்டு , வாயில் எதையோ புகைத்தபடி தன்னிலை மறந்து எதைப்பற்றியும் கவலை இன்றி அமர்ந்திருப்பார்கள்….
      வெயில், மழை,குளிர்  எதுவும் அவர்களை பாதித்ததாக
தெரியவில்லை.
 அவர்களுடைய நடவடிக்கை
 விசித்திரமாக இருக்கும்…..
கும்பமேளாவின் போது சாரைசாரையாக தேரிலும், நடந்தும் நடனமாடியபடி, பாட்டு பாடிய படி  ஊர்வலமாக
 சென்று ஆற்றில் குளித்து விட்டு  செல்வதைப்  பார்ப்பதற்கு திருவிழா போல் இருக்கும் அதில் பெண்களும்உண்டு …
நெஞ்சை விட்டு அகலாத விசித்திர மனிதர்கள் இவர்கள்…
               **** சுபம் ****

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. விசித்திர மனிதர்கள் பற்றிய தொகுப்பு. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் மா..

  2. ஒருசிலர் அப்படித்தான் சிஸ் அவங்க இஷ்டத்துக்குத் தனியா பேசிட்டு இருப்பாங்க..அகோரிகள் விசித்திரக்காரர்கள் தான்..நைஸ் சிஸீ