Loading

நதி 1

 

அன்று

சென்னையில் பெண்கள் மட்டுமே பயிலும் கல்லூரியான எத்திராஜ் கல்லூரி., பேருந்துகளில் இருந்து அலைமோதியபடி இறங்கிய பெண்கள் கூட்டத்தைப் பார்த்து கிறு கிறுத்தபடி நின்றான் அவன்.,

“ப்பா என்ன அழகுடா..” பிரம்மிப்பில் பூரித்தபடி சொன்னான் அவன்.,

“அதி இவ்வளவு அழகான பொண்ணுங்களை எங்கேயும் பார்த்ததே இல்லைடி” குரலில் அவ்வளவு கிறக்கம் .

“டேய் நானும் அழகு தான்டா, ரொம்ப ஓவரா பண்ணாதடா பரதேசி” பெண்களுக்கே உண்டான பொறமையில் அவள் பதிலுறைத்தாள்.

“நான் உன்ன சொல்லலைடி.,பொண்ணுங்களைச் சொன்னேன்” எனக் கண்ணடித்தவன்., கல்லூரிக்குள் நுழைய போக., அவனைத் துரத்திய படி சென்றாள் அவனின் ஆருயிர் தோழி அகரநதி.

“தம்பி, தம்பி, கேர்ள்ஸ் காலேஜ்பா நாட் அலோட்” எனத் தடுத்த முடி நரைத்திருந்த செக்யூரிட்டியிடம் ஸ்டைலாகத் தன் பாக்கெட்டில் இருந்த வெள்ளை தாளை கொடுத்தவன்., ஹீரோ ரேஞ்சுக்குப் போஸ் கொடுத்தான். அப்போது அவன் நாயகனை போல் உணர்ந்தான் என்றால் மிகையாகாது.

“சாரி தம்பி.,நீங்க போகலாம்” என பவ்யமாய் செக்யூரிட்டி சொல்ல.,

“இப்போ என்ன பண்ணுவீங்க, சைட் அடிக்கக் கேட் கிட்ட வந்தாலே தூரத்தி விடுறது, இப்போ ராஜமரியாதையோட கெத்தா ஸ்டைலா, சைட் அடிப்பேன் இந்தக் கார்த்தி” எனச் சொல்ல.,அவன் பின்னே ஓடி வந்த அகரநதி அவன் தலையில் குட்டியிருந்தாள்.,

“குட்டி பிசாசே., ஏன்டி கொட்டுன..?”

“பெரியவங்களுக்கு மரியாதை கொடுடா மாங்கா” எனப் பதில் கொடுத்தாள்., அவன் அதையெல்லாம் காதில் வாங்கவேயில்லை, கூலாகக் கூலர்ஸ்ஸை கண்ணில் மாட்ட.

“இதென்னடா ராபிச்சைகாரன் மாதிரி மாட்டிருக்க”

“அப்போ தானடி யார சைட் அடிக்கிறேன்னு தெரியாது” எனச் சொன்னவனின் விழிகளுக்குப் பெண்கள் வண்ணத்து பூச்சிகளாய் தெரிய.,தன்னை மறந்து ரசித்துக்கொண்டிருந்தவனுக்கு., எங்கே தெரிய போகிறது அழகாய் இருக்கும் வண்ணத்துப்பூச்சியைக் கையில் பிடிப்பது எவ்வளவு கடினமோ அதேபோல் பெண்கள் மனதில் இடம் பிடிப்பதும் ஒன்றே என்பதை அறியாதவனாய் இருந்தான் கார்த்தி.

“வாவ் வாட் ஏ கலர்புல் க்ர்ள்ஸ்., நம்ம காலேஜ்லையும் இருக்குதுங்களே உன்ன மாதிரி ஓட்ட உடசலுங்க., இந்த மாதிரி கேர்ள்ஸ் காலேஜ்க்கு வந்தா தான் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு” அவன் உளறிக்கொண்டு வர

“டேய் லூசு நம்ம இங்கே காம்படிசன்க்கு வந்திருக்கோம் ஜொள்ளு விட்டு மானத்தை வாங்கதே., நம்ம காலேஜ் பொண்ணுங்களையா ஓட்ட உடசல்ன்னு சொல்ற,அவக்கிட்ட சொல்லுறேன் இரு” அவனுக்குச் சளைக்காமல் அவள் சொல்ல

“ஏய் யாருகிட்டடி சொல்லப்போற..?”

“மொத்தம் ஏழு டிபார்ட்மென்ட், ஒவ்வொரு டிப்பார்ட்மென்ட்டுக்கு ஒரு க்ரஷ்., இதுல எவக்கிட்டடா சொல்லுறது, ப்ளே பாய்”

“நீ தப்பா சொல்லிட்ட டீ, டிப்பார்மென்ட்டுக்கு ரெண்டு க்ரஷ்” என ஈயெனப் பல் இளித்தவனை முறைத்தவள்.,

“யாருடா எனக்குத் தெரியாமா.?” கேள்வியாய் அவனைப் பார்க்க,

“டிப்பார்ட்மெண்ட் மேடம் டி” அவன் சொல்லிவிட்டு மீண்டும் ஓட ஆரம்பிக்க.,

“எடு செருப்ப நாயே” எனச் சொல்லியவள் அவனைத் துரத்திக் கொண்டிருந்தாள்., அவனோ தாவி குதித்து ஓடிக்கொண்டிருந்தான், ஓடியவன் அங்கே நடந்து சென்றுக்கொண்டிருந்த பெண்ணின் மீது மோதி பளாரென அடி வாங்க,

“அடேய் ராபிச்சைகார அடி வாங்குனியா.?” எனக் கைக்கொட்டி சிரித்தவளை இவன் தூரத்த, ஓடி களைத்து போனவள்.

“டேய் மாங்கா போதும் டா, இங்க எதுக்காக வந்தோம்.?”

“பாட்டு பாட வந்தோம், ஏன்டி அம்னீசியா வந்து மறந்து போயிட்டியா.?”

“இப்படியே ஓடிகிட்டு இருந்தா மூச்சு வாங்கி, பாட முடியாம போயிரும், அப்பறம் எப்படி டா கப் அடிக்கறது” எனக் களைத்து போய் அவள் சொல்ல,

“இல்லைனா மட்டும் பாடி ஃப்ர்ஸ்ட் ப்ரைஸ் வாங்கிருவா, வா வா, அந்த டீக்கு தான அடி போடுற, வா குடிச்சிட்டு வரலாம்” என அவளின் கைபடித்து அழைத்துச் செல்ல, அங்கே அவர்களைக் கடந்து சென்ற ஒவ்வொரு பெண்களின் விழிகளிலும் பொறாமை அப்பட்டமாய்த் தெரிந்தது.

கேன்டீனை தேடி அலைந்து கண்டுபிடித்தவர்கள் அங்கே போடப்பட்டிருந்த இருக்கையில் போய் அமர்ந்தனர்.

“கார்த்தி எனக்குக் கீரீன் டீ டா, டையட்ல இருக்கேன்” என அவள் சொல்ல, சரியென்பதை போல் தலையசைத்தான் கார்த்தி.

“அண்ணா ஒரு சாதா டீ, ஒரு க்ரீன் டீ” என அவன் கேட்க புதிதாய் ஒரு ஆணின் குரல் கேட்டதும் அங்கிருந்த பெண்களின் கண்கள் கார்த்திக்கை மொய்த்தது,

“தம்பி க்ரீன் டீ இல்லைப்பா” என டீ போட்டு தருபவர் சொல்ல,

“பராவயில்லைனா நாலு பச்சை இலைய சுடு தண்ணில போட்டு தாங்க, அது கீரீன் டீ ன்னு நம்பி குடிச்சிரும்” என அவன் சொல்ல, அங்கிருந்த பெண்கள் உட்பட அனைவரும் சிரித்துவிட, மனதிற்குள் சந்தோசபட்டவன், தவறியும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை

“லெமன் டீ இருக்கு தரவாப்பா.?”

“நீங்க சுடுதண்ணி கொடுத்தாலே போதும், அவ மண்டிருவா” என அவன் சிரிக்காமல் சொல்ல, கொடுப்பவர் சிரித்தபடி கொடுத்தார்.

“இந்தாடி எருமை, இந்தச் சுடு தண்ணிக்கு பதினைஞ்சு ரூவா அழுதிருக்கேன், நல்லா மண்டிக்கோ” எனச் சொல்லி கார்த்திக் கொடுக்க,

“டையட் பத்தி உனக்கென்னடா தெரியும்.?” எனச் சொல்லிய படி பருக ஆரம்பித்தாள், அவனும் சிங்கள் டீயை குடிக்க ஆரம்பித்திருந்தான் கார்த்திக்.

நேரமும் மெல்ல கரைய, அந்தக் கல்லூரியில் இருந்த கலையரங்கத்தை நோக்கி இருவரும் ஓடிக்கொண்டிருந்தனர், கலையரங்கம் முழுவதும் பெண்களின் கூட்டம், அதற்கு ஆசைப்பட்டுத் தானே இந்தக் கல்லாரிக்கு வந்தான் கார்த்தி, இவர்களின் பெயர் அழைக்கபட இருவரும் சேர்ந்து மேடை ஏறி பாரதியின் பாட்டைப் பாட துவங்கியிருந்தனர்,

“நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மா.!

நின்னைச் சரணடைந்தேன்.!

பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்

என்னைக் கவலைகள் தின்ன தகாதென..

நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மா

நின்னைச் சரணடைந்தேன்

மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்

குடிமை புகுந்தன, கொன்று அவை போக்கின

தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு

நின்செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம்

நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மா

நின்னைச் சரணடைந்தேன்

என்ற பாடலை இருவரும் மாறி மாறி ரப் முறையில் பாடி முடிக்க, பெண்களின் ஆதரவுடன் கரகோஷம் எழுந்தது. கார்த்திக்கின் குரலில் அங்கிருந்த பெண்கள் மயங்கினாலும், அவன் அருகே புன்னகையுடன், நின்றுக்கொண்டிருந்த அகரநதியை பார்த்துப் பொறாமை கொண்டது அந்த அரங்கத்தில் அமர்ந்திருந்த பெண்களின் மனம். அதன் பின் வரிசை கட்டி போட்டிகள் நடந்து முடிவதற்கே அந்தி சாய்ந்து விட, போட்டியின் வெற்றியை அறிவித்த போது, அகரநதிவும், கார்த்திக்கும் இரண்டாவது இடத்தைப் பெற்றிருந்தனர். முதலிடத்தில் அந்தக் கல்லூரியை சேர்ந்த வேறொரு பெண் பெற்றிருந்தாள்.

“என்னடா கார்த்திக் கப் அடிக்க முடியாம போயிருச்சே.?”

“அதெல்லாம் அரசியல்டி முண்டமே” என அவளைத் திட்டினான்.

“நம்மள நம்பி தமிழ் மேடம் அனுப்பினாங்களே, மானம் போச்சு” எனச் சொல்லிக்கொண்டிருந்த போதே அவர்களின் தமிழ் ஆசிரியரிடம் இருந்து கார்த்திக்கின் எண்ணிற்கு அழைப்பு வந்தது. அழைப்பை ஏற்றான் அவன்.

“மேம் சொல்லுங்க மேம்”

“என்னப்பா கார்த்தி வெற்றி தான.?” ஆவலுடன் கேட்டார் தமிழ் ஆசிரியர் சரளா.

“இல்லை மேம் சாரி, செக்கென்ட் ப்ளேஸ் தான்” வருத்ததுடன் சொன்னான் கார்த்தி,

“அருமைடா புள்ளைங்களா..! இதுவும் வெற்றி தான், என் பெயரை காப்பாத்தீட்டிங்க, ரொம்ப மகிழ்ச்சி” என மகிழ்வுடன் சரளா கூற, கார்த்திக்கும் நிம்மதி அடைந்தான்.

“ஓகே மேம், நாளைக்குக் காலேஜ்ல பார்க்கலாம்” எனக் கார்த்திச் சொல்ல,

“சரிடா கார்த்தி, அகரநதி கிட்ட போனை கொடு” எனப் பாசத்துடன் அவர் கேட்க, கார்த்திக்கும் அலைபேசியை அவளிடம் கொடுத்தான்.

“வாழ்த்துக்கள் அகரநதி.! உங்களை அனுப்பினதுக்கு என்னோட பேரை காப்பாத்தீட்டிங்க, நாளைக்குக் காலேஜ்ல பார்க்கலாம்” என அவர் சொல்ல,

“ஓகே மேம், தேங்க்யூ” என அழைப்பை துண்டித்தாள் அகரநதி.

சாலையோரம் இருவரும் மௌனாய் நடந்துக்கொண்டிருக்க,

“கார்த்தி.! எனக்கு ரொம்பப் பயமா இருக்குடா.”

“எதுக்கு டி பயப்படுற.?” கேள்வியாய் அவளின் முகம் பார்த்தான்.

“இன்னும் ஒன் எயர்ல காலேஜ் முடிஞ்சிரும், அப்பறம் நீ யாரோ நான் யாரோன்னு ஆகிருவோம்ல” கவலையுடன் சொன்னாள் அவள்,

“சீ சீ.! அப்படிலாம் இல்லைடி நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து பிஜி ஓரே காலேஜ்ல படிக்கலாம்டி” அவன் சாதாரணமாய்ச் சொல்லிவிட,

“இல்லைடா யூஜி முடிச்சதும் வேலை தான், பிஜிலாம் கனவுல கூட நடக்காது” என வருத்தமாய்ச் சொன்னாள் அகரநதி.

“அப்போ சரி ரெண்டு பேரும் ஓரே ஆபிஸ்ல வேலைக்குப் போயிரலாம் சரியா.?” என அவளை அவன் சமாதானம் செய்ய,

“அப்படின்ற” எனப் புன்னகையுடன் அவள் கேட்க,

“ஆமான்றேன்” என அவனும் புன்னகையுடன் பதில் கொடுத்தான், மாலை பொழுதில் நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் இருவரும் கைகோர்த்து நடந்து செல்ல, பார்ப்பவர் கண்களுக்குக் காதலர்களைப் போல் தெரியும் இந்த இளம் சிட்டுகள், உண்மையில் உன்னதமான நட்பை மனதில் சுமந்து கொண்டு வாழ்க்கையில் பயணிக்கும் ஜீவன்கள்.

அகரநதி வீட்டிற்கு ஓரே பெண் என்பதால் வசந்தி, கோபாலன் தம்பதிகளுக்குச் செல்ல மகள், கோபாலன் சிறிய அளவிலான டிபார்ட்மென்ட ஸ்டோர்ஸ் வைத்துள்ளார், வசந்தி குடும்பத்தைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பைக் கச்சிதமாகச் செய்து வருபவர், இருவருக்கும் மதுரை தான் சொந்த ஊர், அகரநதி ஒரே மகள் என்பதால் அதீத பாசத்துடன் வளர்க்கபட்டவள், என்ன தான் பாசமாக வளர்க்கபட்டாளும் வீரத்தையும் கற்றுக் கொடுத்துதான் வளர்த்தார்கள்,

அகரநதி பயம் என்றால் என்னவென்று கேட்கும் இளம் கன்று தான் அவள், நட்பாய் பழகினாள் நல்ல தோழியாக அன்பை பொழியும் இவள், இதுவரை அவளுக்குப் பிடிக்காதவர்கள் என்று யாருமே இல்லை ஒல்லியான உடல் வாகு கொண்ட இவள், தோள்வரை உரசும் கூந்தலும், பிறை நெற்றியும், கூர்நாசியும், இயல்பிலே சாயம் பூசாத இதழ்களும் கொண்ட இவள் கோதுமை நிறத்தை கொண்டிருந்தாள்.

கார்த்தி இவளுக்குக் கல்லூரியில் கிடைத்த முதல் நட்பு, அவனுடைய நட்பு அவளுக்கு எப்போதும் சிறப்பானதாகவே இருந்தது, தவறை சுட்டிக் காட்டும் நண்பனே சிறந்த நண்பன் என்றால் அதற்குச் சிறந்த உதாரணம் கார்த்திக் தான், கார்த்திக்கும் சென்னைவாசி தான், அவனுக்கு அப்பா மட்டுமே, சராசரி மிடில் க்ளாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவன், கல்லூரி வந்த பின் அகரநதி தான் அவனுக்கு எல்லாமாக இருக்கிறாள், இப்படிப்பட்ட புனிதமான உறவுக்குக் களங்கம் ஏற்படும் என்பதை அவன் ஒரு போதும் நினைத்திருக்க மாட்டான். அப்படி ஒரு இழிவான நிலைக்குத் தள்ளப்படுவான் என்பது அவனே அறியாத ஒன்று. நட்பின் இலக்கணமாய் இருந்தவர்கள் மாறி போனது விதி செய்த மாயமோ.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 4 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
6
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. சூப்பரா போயிட்டு இருக்கிற ஃப்ரெண்ட்ஷிப் கதைல என்ன பிரச்சனை வர போகுதோ 🥰🥰🥰நல்ல நட்பு … நல்ல டயலாக்ஸ்…