Loading

அகம்-1

“Flaming Dragons lounge & Night life- Puducheri”

புதுச்சேரியில் அமைந்திருந்து மதுபான விடுதியொன்றில் கூட்டம் களைக்கட்டிக் கொண்டிருந்தது. கூட்டம் கூட்டமாக வந்து குடிப்பதும், சிற்றுண்டிகளை உண்பதும் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மறுபுறமோ, ஆட்டமும் பாட்டமும் கூத்தும் அரங்கேறிக் கொண்டிருந்தது.

“ஏய் மது! நம்ம பாட்டுக்கு வந்துட்டோம். என்னத்தைடி ஆர்டர் பண்ணுறது?”

“இரு! மெனு கார்ட் கொண்டு வரச் சொல்லுவோம். எதாவது புரியாத பேரில் இருக்கும் அதைச் சொல்லுவோம்.!”

“இதில் என்னடி காக்டெய்ல், மாக்டெய்ல்ன்னு என்னென்னவோ இருக்கு ஒண்ணும் விளங்கலையே! முன்னே பின்னே செத்தால் தானே சுடுகாடு தெரியும். இதில் பாண்டிசேரி வரை பகுமானமா கார் எடுத்துட்டு வந்துட்டோம்.!” எனப் புலம்பிக் கொண்டிருந்தாள் மதுவின் எதிரில் அமர்ந்திருந்த கருவிழி.

“ஏய், நீதானே டி, லவ் ஃபெயிலியர், அது இதுன்னு சொல்லி என்னை இங்கே இழுத்துட்டு வந்தே! உங்க வீட்டில் மட்டும் தெரிஞ்சுச்சு நான் செத்தேன் டி!”

“வீட்டில் தெரியறது இருக்கட்டும் இங்கே எப்படிச் சமாளிக்கிறது?” மதுவின் புலம்பலைக் கண்டு கொள்ளாமல் வினவினாள் அவள்.

“மேம், காக்டெய்ல்ங்கிறது ஆல்கஹாலோட ஜூஸ் மிக்ஸ் பண்ணி டிஃப்ரெண்ட் ப்ளேவர்ஸில் கொடுப்பாங்க! அதுவே மாக்டெய்ல்ன்னா நான்-ஆல்கஹாலிக் மேம். உங்களுக்குப் புரியற மாதிரின்னா இப்படித்தான் சொல்ல முடியும். இப்போ என்ன ஆர்டர் வேணும்ன்னு சொல்றீங்களா?” அங்கே பணியிலிருந்த சிப்பந்தி கேட்க,

“யோவ், என்ன நக்கலா? எங்களை என்ன சின்னக் குழந்தைன்னு நினைச்சியா? பிங்க் ஓட்கா எடுத்துட்டு வா!” கடைச் சிப்பந்தியிடம் அவமானப் படக்கூடாதென்பதற்காக எதையோ சொல்லி வைத்தாள் கருவிழி.

“விழி! பிங்க் ஓட்கான்னு என்னமோ சொல்லிட்டே, எப்படிக் குடிக்கிறது? ரொம்பப் பயமா இருக்கு டி! உங்க தாத்தாவுக்குத் தெரிஞ்சுது அவ்வளவு தான்.!”

“சரியான பயந்தாகொள்ளி நீ! அதெல்லாம் அவர் கண்டுபிடிக்கிறதுக்கு முன்னே வீட்டுக்குப் போய்டலாம். தைரியமா இரு!” எனப் பேசிக் கொண்டிருக்கும் போதே, குட்டி குட்டி கண்ணாடி தம்ளர்களில் பிங்க் ஓட்கா அவர்கள் முன் வைக்கப்பட்டது.

“யோவ்! இது என்ன குட்டியூண்டு கிளாஸில் வைக்கிறே?”

“மேடம்! இப்படிக் குட்டி க்ளாஸில் கொடுக்கிறது தான் ஷாட்ஸ் (shots). இது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் குடிப்பாங்க.!”

“அதெல்லாம் எனக்குத் தெரியும். உனக்குத் தெரியுதான்னு செக் பண்ணினேன்.! நீ போய்ச் சைட் டிஷ் எதாச்சும் கொண்டு வா!” என அந்தச் சிப்பந்தியை விரட்டியவள்,

“மது! எப்படிச் சமாளிச்சேன் பார்த்தியா?” எனத் தன் தோழியிடம் சொன்னபடியே இல்லாத காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டாள் கருவிழி.

“விழி எனக்கு ரொம்பவே பயமா இருக்கு டி!, பேசாமல் சத்தமில்லாமல் கிளம்பி வீட்டுக்குப் போய்டுவோமா?” மதுவின் முகத்தில் பய ரேகைகள் நெளிந்தது.

“இவ்வளவு தூரம் வந்துட்டு இதை டேஸ்ட் பண்ணாமல் போனால் எப்படி? பேரிலேயே மதுவை வச்சிட்டு, நீ இதைப்பார்த்து பயப்படலாமா? அப்படி இதில் என்னதான் இருக்குன்னு பார்த்துடுவோம் வா!” எனச் சொன்னபடியே குட்டி கண்ணாடி டம்ளரை கரத்தினில் எடுத்துக் கொண்டாள் கருவிழி.

“அப்படியே கண்ணை மூடிக்கிட்டு கப்புன்னு குடிச்சுடு!” எனச் சொன்னபடியே குடித்துவிட்டு சிறிய தட்டில் வைத்திருந்த உப்பு தடவிய எலுமிச்சம்பழத்தைக் கடித்தாள் அவள்.

“டேஸ்ட் எப்படி இருக்குடி விழி? நல்லா இருக்கா?”

“உவ்வேக் நல்லாவே இல்லைடி! தொண்டையிலிருந்து வயிறுவரை எல்லாம் எரியுது! பத்தாததுக்கு இந்த ஸ்மெல் வேற நல்லவே இல்லை.!”

“நல்லவேளை நான் குடிக்கவே இல்லை! வாடி இங்கிருந்து முதலில் கிளம்புவோம்.!” பயமும் பதற்றமுமாய் அவசரப்படுத்தினாள் மது.

“இருடி! நான் இன்னும் ரெண்டு ஷாட் அடிச்சுட்டு வர்ரேன். அப்படியே காற்றில் மிதக்கிற மாதிரி இருக்கு தெரியுமா? நான் எல்லாத்தையும் மறக்கணும் டி! என் காதல் கைக்கு எட்டாமல் காத்தோட காத்தா கரைஞ்சு போச்சு. எனக்கு வேதனையா இருக்கு டி! என் வேதனையை நான் யார்க்கிட்டே போய்ச் சொல்வேன்?!” எனப் புலம்பியபடியே மதுவிற்காக வைத்திருந்த மதுபானத்தையும் அவளே அருந்தியிருந்தாள்.
சட்டெனக் கண்கள் சிவப்பு பூசிக் கொள்ள, வார்த்தைகள் தடுமாறத் துவங்க, காற்றில் பறப்பது போல் ஓருணர்வு கருவிழிக்குள் வியாபித்திருந்தது.

“மது ஐ அம் ஃப்ளையிங் டி! நான் பறக்கிறேன் பாரேன். ஆமா நீ ஏன் மூணு பேராய் தெரியறே? ஒன்,டூ , த்ரீ, ஃபோர்.. நாலு மது தெரியறா! மது! மது! எங்கே இருக்கே? நாலுபேரில் நான் யார் கூட வீட்டுக்குப் போறது? வேணாம்! வேணாம்! வீட்டுக்குப் போக வேணாம் தாத்தா திட்டுவார்.!”

“ஏய் விழி! போதும் வா, கிளம்பலாம்! உங்க வீட்டில் தேட ஆரம்பிச்சிருப்பாங்க!”

“நான் தான் வீட்டில் லெட்டர் எழுதி வச்சிட்டு ஓடி வந்துட்டேனே.. நான் ஓடிப் போகப் போறேன். என் காதலைத் தேடிப் போகப் போறேன். நீயும் என்கூடத் துணைக்கு வந்துடுறியா? நாம ஜோடியா ஓடிப் போகலாம்!”

“உன் பேச்சைக் கேட்டு, உன் கூட வந்தேன் பாரு என்னைச் சொல்லணும்!”

“நீ தான் என் ஃப்ரெண்ட்! நான் கூப்பிட்டால் நீ வந்து தான் ஆகணும்! மது, எனக்கு இன்னும் ரெண்டு ஷாட்ஸ் வாங்கித் தர்ரியா? நான் நிறையக் குடிச்சுட்டு சொர்க்கத்துக்குப் போகப் போறேன்.!”

“குடிச்ச வரையிலும் போதும் தாயே! முதலில் கிளம்புவோம் வா!” வெகு கடினப்பட்டு, தோளில் சாய்த்து தோழியை அழைத்துப் போனாள் மது.

“மது, ஏன்டி ரோடு வளைஞ்சு வளைஞ்சு போகுது? நேராப் போகச் சொல்லு!”

“நீ தான் வளைஞ்சு வளைஞ்சு நடக்கிறே! என்னால் உன்னைப் பேலன்ஸ் பண்ண முடியலை! சீக்கிரம் வா டி எருமை!”

“நாம எங்கே போகணும்?”

“வீட்டுக்குத்தான் போகணும் விழி!”

“நான் வீட்டுக்கு வரமாட்டேன். நான் என் காதலைத் தேடிப் போறேன். என் காதல் யார் தெரியுமா என் செல்லக்குட்டி! என்னோட மேன்! எனக்கு மட்டும் சொந்தமானவன். காதல் ஒண்ணும் காயம் இல்லை மது. காயத்தால் ஏற்பட்ட தழும்பு. சாகற வரை அழியவே அழியாது.!”

“புலம்பாமல் வாடி! உன்னை இங்கே கூட்டி வந்தது தான் பெரிய தப்பு. வீட்டுக்குப் போனதும் இன்னும் என்னென்ன நடக்கப் போகுதோ? எனக்கு இப்போவே பயந்து வருது!” எனப் பேசியபடியே மெல்லமாய் அழைத்துச் சென்று, தாங்கள் வந்த வாகனத்தில் அமர வைத்தவள், கதவைச் சாற்றிவிட்டு, ஓட்டுநர் இருக்கையில் ஏறி அமர முயல, அங்கே மார்பின் குறுக்கே கைக்கட்டியபடி, விரைப்பும் முறைப்புமாக நின்றிருந்த ஆறடி ஆண்மகனைப் பார்த்துப் பயந்து தான் போனாள் மது.

“இல்லை அது வந்து..!”

“நீ ஒண்ணும் சொல்ல வேணாம்! வண்டியில் ஏறு!” சிம்ம கர்ஜனையாய் ஒலித்த அவன் குரலில் உள்ளுக்குள் தூக்கிவாரிப் போட, பயந்துபோய்ப் பின்னிருக்கையில் ஏறி அமர்ந்துக் கொண்டாள் மது.

*******

மறுநாள் காலை..!
அமிழ்ந்து மேலெழும் சொகுசு மெத்தையில் சுகமான நித்திரையில் இருந்தாள் கருவிழி.

“தூங்குறதைப் பார் குரங்கு குட்டி மாதிரி! கொஞ்சமும் பயமே இல்லை இவளுக்கு. எழும்பட்டும் வச்சுக்கிறேன் இவளை!” அவள் விழிப்பதற்காய் கோபத்தோடு காத்திருந்தான் அவன்.

லேசாக அசைந்து, திரும்பி, புரண்டு படுத்தாளே ஒழிய எழுந்திருக்கும் வழியைக் காணோம். கொஞ்சம் கொஞ்சமாய் அவனின் பொறுமையை அவளின் தூக்கம் தின்று கொண்டே இருந்தது.
இழுத்துப் பிடிக்க இயலாத பொறுமையுடன், அவன் விழிகள் கடிகாரத்தை நோக்கியது. காலை பதினோரு மணி ஆகியும் அவள் எழாமல் உறங்குபவளைப் பார்க்கவும், இத்தனை நேரப் பொறுமை, நொடி நேரத்தில் கோபமாய் உருபெற்றது.

“கருவிழி! ஏய் கருவிழி! எழுந்திரு டி! இப்போ எந்திருக்கிறியா? தண்ணியை மூஞ்சியில் ஊத்தவா?” அவனின் அழுத்தமான குரல் அவள் செவிதனைத் தீண்டியது.

“ஏன் மாமா, கத்திட்டே கிடக்குற? தலையை வலிக்குது கொஞ்சநேரம் தூங்க விடு!” தூக்கக் கலக்கத்தில் குரலை மட்டும் கேட்டுக்கொண்டு, கண்ணைத் திறக்காமலே பதில் சொல்லிவிட்டு மீண்டும் போர்வைக்குள் புதைந்துக் கொண்டாள் அவள்.

இதற்கு மேல் பொறுமையாய் இருந்தால் வேலைக்கு ஆகாது என முடிவெடுத்தவன், அருகிலிருந்த குவளை நீரை அவள் முகத்தில் கவிழ்த்திருந்தான்.

“மாமா!” எரிச்சலுடன் நனைந்த கோழியாய் எழுந்து அமர்ந்திருந்தாள் கருவிழி.

“என்னடி மாமா நோமான்னுகிட்டு, நீ பண்ணின வேலைக்கு.. உன்னை வீட்டுக்குள்ளேயே சேர்க்கக் கூடாது. பாவம்ன்னு யாருக்கும் தெரியாமல் வீட்டுக்குள்ளே கூட்டிட்டு வந்தேன் பாரு என்னைச் சொல்லணும்!”

“என்னது வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தியா? யாரைக் கேட்டு கூட்டிட்டு வந்தே? நான் தான் லெட்டர் எழுதி வச்சிட்டு தானே போனேன். ஹிட்லர் கிட்டே இருந்து தப்பிக்கிறதுக்குக் கிடைச்ச ஒரே வாய்ப்பு. உன்னால் எல்லாம் போச்சு போ!”

“என்னது, தப்பிக்கணும்ன்னு ப்ளான் பண்ணுனியா? அப்போ என்னோட காதலைத் தேடிப் போறேன்னு லெட்டர் எழுதி வச்சது..?”

“ஆமா! ஆம்பளைங்க மட்டும் தான் காதலைத் தேடிப் போவீங்களா? நாங்களும் போவோம்ல்ல! எங்களுக்கும் ஃபெய்லியர் ப்ரேக் அப் எல்லாம் இருக்கும்.”

“இங்கே பாருடி, ஒழுங்கா புரியற மாதிரி சொல்லு! என்கிட்டே எதையாவது மறைச்சேன்னு வையி, நானே போய் ஹிட்லர் கிட்டே மாட்டி விட்டுடுவேன்.!”

“எனக்கு ப்ராப்ளம் இல்லையே, அழகர் மாமா தான் மதுரையில் இருந்து பாண்டிசேரி வரை கூட்டிட்டு போச்சுன்னு சொல்லிடுவேனே! நீ போய்ச் சொல்லு மாமா! நீயா நானா பார்த்துடுவோம்!”

“அடியேய் குட்டி பிசாசு. கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா டி? நடு ரோட்டில் குடிச்சுப்புட்டு தள்ளாடிக்கிட்டு, உனக்கு இதெல்லாம் தேவையாடி? அந்த மரமண்டை மது கூடச் சேரக் கூடாதுன்னு சொல்லி இருக்கேனா இல்லையா? தாத்தாவுக்குத் தெரிஞ்சது கொன்னுடுவார்!”

“நான் அந்தப் பப்புக்குள்ளே தானே குடிச்சேன். நடு ரோட்டில் இல்லையே? பிங்க் ஓட்கா செமையா இருந்தது மாமா! பேசாமல் உன்னையும் கூட்டிட்டுப் போயிருக்கலாம். எனக்குக் கம்பெனி கொடுத்திருப்பே!”

“அடிங் அகம் புடிச்ச கழுதை! அப்படி என்னடி உனக்கு ஃபெய்லியர்? பாடத்தில் எதுவும் ஃபெயிலாகிட்டியா?!”

“அதெல்லாம் இல்லை! என் காலேஜ் மேட் ரோஹன் இருக்கான்ல்ல, நானும் அவனும் லவ் பண்ணுறோம் மாமா! லவ் மட்டும் பண்ணுவானாம், பொறுக்கி பய, கல்யாணம் பண்ணிக்க மாட்டானாம். எனக்கும் அவனுக்கும் சண்டை. என் லவ் ஃபெய்லியர் ஆயிருச்சேன்னு சோகத்தில் தான் பாண்டிசேரி போனேன்.!”

“அதுக்காக யாராச்சும் குடிப்பாங்களா டி, கூறுகெட்டவளே?” எனக் கேட்டவன், காதலிப்பதை ஏதோ கடையில் பொருள் வாங்குவதைப் போல் சொல்கிறாளே என்றும் நினைத்துக் கொண்டான்.

“எல்லாத்துக்கும் காரணம் நீ தான் மாமா!”

“நான் என்னடி பண்ணுனேன்?”

“ஆமா! நீ மட்டும் ஒவ்வொரு சனிக்கிழமையும் மொட்டை மாடியில் தாத்தாவுக்குத் தெரியாமல், சரக்கடிக்கிறே? கொஞ்சூண்டு தானே டேஸ்ட்டுக்குக் கேட்டேன் நீ தர மாட்டேன்னு சொல்லிட்டே! நீ தரலைன்னா என்ன நான் ஓட்காவே டேஸ்ட் பண்ணிட்டேனே!” எதையோ சாதித்தவள் போல் குதுகலித்தாள் கருவிழி.

“நான் ஆம்பிள்ளை டி! நான் பண்ணினால் நீயும் பண்ணுவியா? லூசா டி நீ?”

“உணர்வுகள் எல்லாருக்கும் ஒண்ணு தான். ஆண் பெண்னெல்லாம் இல்லை. எனக்கும் ஃபீலிங்ஸ் இருக்கு. எனக்கு வலிச்சுச்சு. அவன் எப்படி என்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லலாம்?”

“ஏய்! நீ இப்போ தான் டி படிக்கிறே, நல்லா படி. மத்ததெல்லாம் பிறகு யோசிப்போம். இப்போ இந்தக் காதல் கல்யாணம் எல்லாம் அநாவசியம்.!”

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. என்னையும் ரோஹனையும் நீ தான் சேர்த்து வைக்கணும்.!”

“அதெல்லாம் முடியாது. விட்டால் என்னை மாமா வேலை பார்க்க வச்சிடுவ போலடி! அடிவாங்காமல் அப்படியே ஓடிரு..!”

“இந்தாரு அழகரு! நீ தானே எனக்கு மாமன். அதனால் மாமா வேலை பார்க்கலாம் தப்பில்லை!” எனச் சொல்லிவிட்டு அவசரமாய்க் குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள் கருவிழி.

“அடியேய் கரு கரு! என் கிட்டே சிக்காமலா போயிருவே வச்சிக்கிறேன் உன்னை!”

“நீ தானே வச்சிப்ப, வச்சிக்க.. வச்சிக்க..!”

“சீக்கிரம் குளிச்சிட்டு கீழே வா! பரிட்சைக்குப் படிக்கிறேன்னு பொய் சொல்லி வச்சிருக்கேன். எதையாவது உளறி வச்சு மாட்டிக்காதே!”

“மாமான்னா மாமா தான். என்னை எதிலேயும் மாட்டி விடாது! தேங்க்ஸ் அழகரு!”

“சீக்கிரம் வாடி கரு கரு!” சின்னச் சிரிப்புடனே அவள் அறையிலிருந்து வெளியேறினான் துடிவேல் அழகர். மனதிற்குள் அந்த ரோஹன் யார் என்ன? என்பதை விசாரிக்க வேண்டுமென நினைத்துக் கொண்டான்.!

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
6
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

3 Comments

  1. அசத்தலான ஆரம்பம். பெயர் வித்தியாசமாக அழகாக இருக்கு, துடிவேல் அழகர், கருவிழி. 😍
    வோட்கா குடிச்சாலும் பிங்க் வோட்காதான் குடிபாங்களோ கரு கரு. 🤣🤣
    அவ கேட்கும்போதே ஒரு 🥂 கொடுத்திருந்தா இப்படி தேடி போய் சரக்கு அதுவும் வோட்கா அதுவும் பிங்க் வோட்கா அடிச்சிருப்பாளா அழகர்?!
    பரவால இப்படி எதிலிருந்தும் காப்பாற்ற ஒரு ஆள் வீட்டில் இருந்தால் நல்லாதான் இருக்கும்.
    வாழ்த்துகள்.

    1. Author

      உங்களுக்குப் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி டியர். தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் ❤❤❤

  2. மதுரைல இருந்து பாண்டிச்சேரியா 😳😳அழகனோட அன்பும் அழகா இருக்கு 💝💝 இது அன்பா காதலா ??🥰🥰🥰