Loading

அத்தியாயம் 12

 

அந்த ஒரு வாரம் முழுக்க ராகவர்ஷினிக்கு மனரீதியான ஆலோசனை வழங்கப்பட்டு வந்தது. முதலில் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று அடம்பிடித்தவளை, “கவுன்சிலிங் முடிஞ்சுதுக்கு அப்பறம் நீ உதய்யை பார்க்கலாம்.” என்று கூறியே சம்மதிக்க வைத்தனர்.

 

சிறிது யோசித்த பின்னர் அதற்கு சம்மதித்தவள், இதோ வெற்றிகரமாக அதை முடித்தும் விட்டாள்.

 

முதல் நாள் அவள் மனதில் இருந்தவற்றை முழுவதும் பேச செய்தனர். அதில், அவள் உதய்யை காதலித்தது, அவனை சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிந்தது, அதற்காக அவள் துடிப்பது, வாய்ப்பு கிடைத்தால் அவனை மீண்டும் சேர்வது என்று அனைத்தையும் பேசி இருந்தாள்.

 

அவளுக்கு ஆலோசனை கொடுத்து கொண்டிருந்த மருத்துவர், அவளின் அன்னையை பற்றி வினவ, “அவங்களை பத்தி நான் பேச என்ன, யோசிக்க கூட விரும்பல டாக்டர்.” என்று கூறி அதை கேட்டுக் கொண்டிருந்த கீதாஞ்சலியை மீண்டும் காயப்படுத்தினாள்.

 

முதல் நாள் என்பதால் அப்படியே விட்டவர், இரண்டாம் நாள் கீதாஞ்சலியை தனியே கூப்பிட்டு பேச வைத்தவர், அதை ராகவர்ஷினியை கேட்க வைத்திருந்தார்.

 

அத்தனை வருடங்கள் யாருக்காவும் அவரின் மனம் திறக்காதவர், அவரின் மகளுக்காக வாய் திறந்தார்.

 

அவர் வாழ்வில் நடந்த அனைத்தையும் கூறியவர், நீதிமன்றத்தில் உதயகீதன் கதறியதை கூறும்போது தாள முடியாமல் அழுது விட்டார்.

 

அது, ராகவர்ஷினியையும் சிறிது அசைத்துப் பார்த்தது. அத்தனை நாட்கள் கீதாஞ்சலியை திரும்பி கூட பார்க்காதவள், அவர் முகம் பார்த்து, “என்ன இருந்தாலும் நீங்க அவங்களை விட்டுட்டு வந்தது தப்பு தான்.” என்றிருந்தாள்.

 

மகள் பேசியதே கீதாஞ்சலிக்கு சிறிது மகிழ்வை கொடுத்தது எனலாம். அது மட்டுமில்லாமல், அத்தனை நாட்களாக அவளுக்கும் உதயகீதனுக்கும் இடையே வந்ததை தவறு என்று கூறியவள், இப்போது சற்று மாறி இருக்கிறாள் என்பதும் அவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது.

 

அடுத்தடுத்த நாட்கள் நல்ல முன்னேற்றம் தெரிந்தது அவளிடம். வாழ்வே முடிந்து விட்டது போல அரற்றிக் கொண்டிருந்தவள், தெளிவாக யோசிக்க முயன்றாள்.

 

அதன்பலனாக, இறுதி நாளில், “இது ஒரு ஆக்சிடெண்ட். இங்க யாரையும் தப்பு சொல்ல முடியாது. அம்மா அவங்க நலனை யோசிச்சு அந்த காரியத்தை பண்ணாங்க. எஸ், அவங்க முதல் ஹஸ்பண்டுக்கும் மகனுக்கும் அவங்க செஞ்சது தப்பு தான். ஆனா, இங்க எல்லாரும் ஒருவகையில சுயநலவாதி தான. ஆனா, என்னை பொறுத்த வரை, எனக்கு என் அம்மாவும் அப்பாவும் எப்பவும் பெஸ்ட்டா தான் இருந்துருக்காங்க. இப்போ கொஞ்ச நாளா, நான் தான் அவங்களை மதிக்காம கண்டபடி பேசிட்டேன்.” என்று உண்மையான வருத்தத்துடன் கூறியவளை அவளின் அன்னையும் தந்தையும் ஆறுதலாக அணைத்துக் கொண்டனர்.

 

“மிஸ்டர். உதயகீதன் பத்தி எதுவும் சொல்லலையே?” என்று அந்த மருத்துவர் கேட்க, விரக்தியாக சிரித்தவள், “சொல்ல என்ன இருக்கு? என்னோட லைஃப்ல குட்டியா ஒரு பார்ட் எப்பவும் உதய்க்கு இருக்கு. அது நிச்சயமா என் அம்மாவோட மகனா இல்ல. என்ன சொன்னாலும், அந்த உறவை என்னால ஏத்துக்க முடியல. ஒரு சமயத்துல வேற மாதிரி நினைச்சதால என்னவோ, இப்போ அதை நினைக்கவே ஒரு மாதிரி இருக்கு.” என்று ஒருவித ஒவ்வாமையுடன் கூற, கீதாஞ்சலி அவளின் கரத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.

 

அவரின் இந்த வேதனை அவர் வாழும் காலம் முழுக்க தொடரும். அதுவே, காலம் அவருக்காக வகுத்திருந்த தண்டனையோ?

 

“ஸோ, பாஸ்ட் பத்தியெல்லாம் நினைக்க கூடாதுன்னு முடிவுல இருக்கேன். கொஞ்ச நாள்ல, நானும் அப்பா அம்மாவோட ஜெர்மனி போக போறேன். எனக்கே எனக்காக ஒருத்தன் வர வரை காத்திருக்கப் போறேன்.” என்று ஒரு சிரிப்புடன் கூறியவளை பார்த்த மருத்துவர், “வெரி குட் வர்ஷினி. ஐ லைக் யுவர் பாசிட்டிவ் ஸ்பிரிட். நீங்க சொன்ன மாதிரியே உங்க லைஃப் பார்ட்னரோட ஹாப்பியா வாழ வாழ்த்துகள்.” என்று அவர்களை வழியனுப்பி வைத்தார்.

 

வாகனத்தில் செல்லும்போது, “வர்ஷி, இப்போ தான் எனக்கு சந்தோஷமா இருக்குடா. நாளைக்கே ஜெர்மனிக்கு டிக்கெட் போட சொல்றேன்.” என்று கிரிதரன் கூற, “டேடி, அதுக்குள்ளயா? இங்க இருக்க என் ஃபிரெண்ட்ஸ் கூட கொஞ்ச நாள் டைம் ஸ்பெண்ட் பண்ணிட்டு வரேனே. அடுத்து அவங்களை எல்லாம் எப்போ பார்ப்பேனோ?” என்று ராகவர்ஷினி கேட்டாள்.

 

மகள் மீண்டும் தன்னிடம் கொஞ்சியபடி கேட்க, அதற்கு மேல் மறுக்க தோன்றுமா கிரிதரனுக்கு?

 

“அப்பாக்கு கொஞ்சம் வேலை இருக்கே டா.” என்று கிரிதரன் யோசிக்க, “ப்ச், அப்போ நீங்க போங்க. அம்மாவும் நானும் அப்பறம் வரோம்.” என்று அவள் கூறினாள்.

 

“அந்த வேலையே அம்மாக்கு செக்கப் பண்றது தானடா.” என்று கிரிதரன் கூற, மகளோ சிணுங்கினாள்.

 

இவையெல்லாம் இதற்கு முன்னர், எப்போது முன்ஜென்மத்தில் நடந்து போல இருந்தது கீதாஞ்சலி. மனம் முழுக்க மகிழ்ச்சியுடன், “கிரி, அவ தான் ஆசைப்படுறாளே, வேணும்னா அவ இருந்துட்டு வரட்டும்.” என்று அனுமதி தந்தார்.

 

முன்னை போலவே, மகளின் புதுவித பிடிவாதம் என்பதை தெரியாமல், அதற்கு ஒத்துழைத்து இருந்தார்.

 

சரியாக திட்டம் தீட்டி செயல்பட்ட ராகவர்ஷினியோ மனதிற்குள் வன்மத்துடன், ‘எல்லாத்தையும் புரிஞ்சுகிட்டேன். ஆனா, எனக்கு கிடைக்காத உதய்… ப்ச், ஏதாவது செஞ்சே ஆகணும். அதுக்கு நான் இங்க கொஞ்ச நாள் இருக்கணும்!’ என்று எண்ணியவள், வெளியே அப்படி எதையும் காட்டிக் கொள்ளாமல் அழகாக சமாளித்தாள்.

 

இதோ, அடுத்த நாளே கீதாஞ்சலியின் உடல்நிலை காரணமாக, கிரிதரனும் கீதாஞ்சலியும் ஜெர்மனிக்கு பயணப்பட, உதயகீதனின் அலுவலகத்தை நோக்கி படையெடுத்தாள் ராகவர்ஷினி.

 

வெளியே இருந்த காவலாளி முதற்கொண்டு ராகவர்ஷினியை கண்டு குழப்பத்தில் இருந்தனர். ஏனெனில், அனைவருக்கும் தெரிந்த விஷயம் தானே, திருமணம் நின்றது.

 

அவர்களை நக்கலாக பார்த்தபடி உள்ளே செல்ல, வரவேற்பறையில் இருந்த பெண் அவளை தடுத்தாள்.

 

முன்னர், இப்படி தடுத்ததற்கான பலனாக திட்டுகளை பெற்றிருந்ததால், இப்போது பயத்துடனே அந்த காரியத்தை செய்தாள்.

 

அவளிடம் எல்லாம் கேள்வி கேட்க பிடிக்காத ராகவர்ஷினி, பார்வையிலேயே என்னவென்று வினவ, “மேம், முக்கியமான பிராஜெக்ட் ஒர்க் போயிட்டு இருக்கு. யாரையும் உள்ள அலோவ் பண்ண வேண்டாம்னு சொல்லியிருக்காங்க.” என்று பணிவுடன் கூறினாள் அந்த பெண்.

 

“எனக்கே ஆர்டரா? யாரு சொன்னது உதய்யா?” என்று ராகவர்ஷினி காரமாக வினவ, “சாரோட பி.ஏ ஜீவநந்தினி மேம் தான் சொன்னாங்க.” என்று அந்த பெண் அமைதியாக கூறினாள்.

 

உண்மையில், ராகவர்ஷினியின் அலட்டல் தாங்க முடியாமல், வேண்டுமென்றே தான் ஜீவநந்தினியின் பெயரை இழுத்து விட்டாள் அந்த பெண்.

 

ராகவர்ஷினியோ அவள் கூறிய செய்தியை கேட்டு திகைத்து தான் போனாள்.

 

“உதய்க்கு அவ பி.ஏவா?” என்று சத்தமாகவே கேட்டவளுக்கு முன்பு தான் எத்தனை வற்புறுத்தியும் பெண்களை பி.ஏவாக வேலைக்கு சேர்க்க விரும்பாதது நினைவுக்கு வந்து அவளின் வஞ்சத்தை உயர்த்தியது.

 

பின் அவளுக்கு அது பெரிதில்லை என்பது போல காட்டிக் கொண்டு, மீண்டும் உள்ளே செல்ல முற்பட, சற்று எரிச்சலுடனே, “மேம், இவ்ளோ சொல்லியும் கேட்காம உள்ள போறீங்க!” என்று சொல்லி விட, கோபமாக பார்த்த ராகவர்ஷினி, “ஏய், யாருக்கிட்ட வாய்ஸ் ரைஸ் பண்ணி பேசுற?” என்று கத்த ஆரம்பித்து விட்டாள்.

 

அத்தனை நேரம் அங்கு நடப்பவற்றை கண்டும் காணாமல் வேலை செய்யும் போர்வையில் இருந்தவர்கள் அங்கு கூடி, “ஹலோ, நீங்க தான் தேவையில்லாம ஸீன் க்ரியேட் பண்ணிட்டு இருக்கீங்க. அவங்க தான், சார்  முக்கியமான வேலைல இருக்காருன்னு சொல்றாங்கல?” என்று ஒருவர் கேட்க, “அது தான் கல்யாணம் இல்லன்னு ஆகிடுச்சுல, அப்பறம் என்ன இந்த பக்கம்?” என்றார் ஒருவர்.

 

அப்போது தான் உதயகீதனின் அறையிலிருந்து கிட்டத்தட்ட தப்பித்து வந்தவளை போல வந்த ஜீவநந்தினிக்கு ராகவர்ஷினி அங்கு இருப்பது எல்லாம் தெரியவில்லை. ஊழியர்கள் கூடி நின்று ஏதோ பேசுவது போல தான் இருந்தது.

 

‘இதை மட்டும் முசோ பார்த்தா, நான் தான் ஸ்க்ரிப்ட் எழுதி கொடுத்த மாதிரி என்னை தான திட்டுவாரு.’ என்று சிந்தித்தபடி, வேகவேகமாக அவர்களை கலைக்க முயன்றாள்.

 

அப்போது தான் ராகவர்ஷினியின் குரல் அவளுக்கு கேட்டது.

 

“கல்யாணம் தான நின்னு போச்சு? அதுக்குன்னு எங்களுக்குள்ள எந்த உறவும் இல்லன்னு அர்த்தம் இல்லையே?”என்று ராகவர்ஷினி ஒரு அர்த்தத்தில் கூற, விஷயம் தெரியாத மற்றவர்கள் வேறு விதமாக தானே எடுத்துக் கொள்வர்.

 

முதலில் ஜீவநந்தினியே, ‘இவ என்ன சொல்றா?’ என்று திகைத்து நின்று விட, அதன் பிறகு தான் அவள் கூற வந்தது புரிந்து தலையில் அடித்துக் கொண்டாள்.

 

விஷயம் பெரிதாவதை விரும்பாத ஜீவநந்தினி, “என்ன இங்க கூட்டம்? வேலை செய்யாம சும்மா சும்மா என்னை திட்டு வாங்க வைக்கிறதே பொழப்பா போச்சு எல்லாருக்கும்!” என்று சிரித்தபடியே கூட்டத்தை கலைக்க முயன்றாள்.

 

அது வெற்றியும் பெற்றது எனலாம்.

 

அதனுடன், “பாஸோட ஒய்ஃபா ஆனதுல இருந்து, இந்த ஆஃபிஸ் மேல ரொம்ப தான் அக்கறை வந்துடுச்சு நந்து உனக்கு!” என்று ஒருத்தி கேலி செய்து விட்டு, ராகவர்ஷினியையும் நக்கலாக பார்த்து விட்டே சென்றாள்.

 

அவற்றை எல்லாம் கவனித்த ராகவர்ஷினிக்கு ஜீவநந்தினி தான் திட்டம் போட்டு தன்னை அவமானப்படுத்தி இருக்கிறாள் என்ற எண்ணம் மனதிற்குள் ஆழமாக பதிந்து விட்டது.

 

அதனுடன், அனைவரும் அவளை தாங்குவது கண்டு பொறாமையும் வந்தது. முன்னர், அவள் வந்த போதெல்லாம் அனைவரும் அவளிடம் ஒதுங்கி தானே இருந்தனர். அதற்கு காரணம், அவளின் அலட்டல் என்பதையும், அதையே அவள் விரும்பினாள் என்பதையும் வசதியாக மறந்து விட்டாள்.

 

ராகவர்ஷினியை ஜீவநந்தினி, அன்று திருமண மண்டபத்தில் பார்த்தது. அந்த காட்சியையும், அவள் பேசிய வார்த்தைகளையும் மறக்க முடியுமா? கிட்டத்தட்ட சாபம் போல தானே பேசினாள்!

 

அந்த படபடப்பு உள்ளுக்குள் இருந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “என்ன வேணும் மிஸ். ராகவர்ஷினி?” என்று ஜீவநந்தினி சாதாரணமாக தான் வினவினாள்.

 

ஆனால், அவள் தனக்கு திருமணமாகவில்லை என்பதை கேலி செய்வதாக எண்ணிய ராகவர்ஷினி அதையும் மனதில் குறித்துக் கொண்டவள், “உங்க சாரை நான் பார்க்கணும்.” என்று அவள் வெறும் ஊழியர் தான் என்பதை சுட்டுவது போல பேசினாள்.

 

அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத ஜீவநந்தினி, “சார் இப்போ யாரையும் பார்க்குற சூழல்ல இல்ல. பெட்டர், நீங்க அப்பாயின்ட்மெண்ட் வாங்கிட்டு வாங்க.” என்று கூற, “ஓஹ், நானே அப்பாயின்ட்மெண்ட் வாங்கிட்டு வரணுமா? சைடு கேப்புல வந்து அவரோட ஒட்டிக்கிட்ட நீ, என்னை சொல்றியா?” என்று ஆவேசமாக பேசினாள் ராகவர்ஷினி.

 

அதில், ஜீவநந்தினிக்குமே கோபம் வந்தது. இடம், பொருள் தெரியாமல் அவள் கத்துவது ஒரு புறம், தன்னையும் கணவனையும் அசிங்கமாக பேசுவது மறுபுறம் என்று கோபம் தாறுமாறாக வந்தாலும், அவள் ராகவர்ஷினி இல்லையே, அப்படியே கத்திவிட?

 

“நான் இங்க சாரோட பி.ஏ. ஆஃபிஸ்ல வச்சு மீட் பண்றதா இருந்தா, யாரா இருந்தாலும், நோட் திஸ்… ‘யாரா இருந்தாலும்’அப்பயின்ட்மெண்ட் வாங்கிட்டு தான் வரணும். இதுக்கு முன்னாடி எப்படியோ, நான் பி.ஏவா இருக்கும்போது, இப்படி தான் இருக்கணும். இது பேசிக் மேனர்ஸும் கூட. அண்ட், இது ஆஃபிஸ்… பெர்சனல் விஷயங்கள் பேசுறதுக்கான இடம் இல்ல.” என்று அழுத்தம்திருத்தமாக கூறினாள் ஜீவநந்தினி.

 

அதைக் கேட்டு முகம் கறுக்க நின்றிருந்த ராகவர்ஷினிக்கு சுற்றி இருக்கும் அனைவரும் அவளையே கேலியாக பார்ப்பது போன்ற தோற்றம் உருவாக, விருட்டென்று அங்கிருந்து கிளம்பி விட்டாள்.

 

அவள் சென்றது தான் தாமதம் என அருகில் இருந்த நீள்சாய்விருக்கையில் தளர்ந்து அமர்ந்து விட்டாள் ஜீவநந்தினி.

 

அவளின் தோழி ஒருத்தி ஆறுதலாக அவளை அணைத்தபடி, “அதான் சூப்பரா ஹேண்டில் பண்ணிட்டியே, அப்பறம் என்ன டென்ஷன்?” என்று வினவியபடி தண்ணீரை கொடுக்க, அதை வாங்கி பருகியவளின் எண்ணமோ, ‘நானும் ஏதோ சொல்லி அனுப்பிட்டேன். இது அந்த முசோக்கு தெரிய வந்தா, எப்படி ரியாக்ட் பண்ணுவாருன்னு தெரியலையே. முறை வாசல் கன்ஃபார்ம்!’ என்பதாக தான் இருந்தது.

 

ஜீவநந்தினி அறியாதது, அவள் வெளியே சென்றதிலிருந்து அனைத்தையும் சிசிடிவி வழியாக உதயகீதன் பார்த்துக் கொண்டு தான் இருந்தான்.

 

பார்த்தது மட்டுமா, ‘மத்தவங்க கிட்ட பெர்ஃபெக்ஷன் பார்க்குற நான், இத்தனை நாளா தப்பு தான செஞ்சுட்டு இருந்தேன்! ஆஃபிஸ்ல வச்சு பெர்சனல் மீட்டிங்…’ என்று ராகவர்ஷினியுடன் செலவளித்த நாட்கள் நினைவு வந்து அவனை குற்றம்சாட்டின.

 

மேலும், ராகவர்ஷினியின் பேச்சுக்கள் எல்லாம் எல்லை மீறியதாக தெரிந்தன. என்னதான் மனம் வேதனையில் உழன்றாலும், இப்படியா ஒருநிலையில் இல்லாமல் பேசுவது என்று கோபம் கூட எட்டிப் பார்த்தது.

 

ஆயினும், அவன் நேரில் சென்று தலையிட வேண்டுமா என்ற தயக்கமும் உண்டாகி குழப்பத்தில் இருக்கும்போது தான், ஜீவநந்தினி பேசியவற்றை கேட்டான்.

 

‘பி.ஏ நல்லாவே பேசுறாளே. அதுசரி, அவளுக்கு பேசவா சொல்லி தரணும்!’ என்று பாராட்டியும் கொண்டான் மனதிற்குள்.

 

வேலைகளுக்கு நடுவே, ராகவர்ஷினி வந்து பேசி சென்றதெல்லாம் அவன் ஞாபகம் வைத்துக் கொள்ளவே இல்லை. ஆனால், அவனின் மனையாளோ, ‘இதோ இப்போ அவருக்கு தெரிஞ்சு, என்னை திட்டப் போறாரு.’ என்று ஒவ்வொரு நொடியையும் எண்ணிக் கொண்டல்லவா இருந்தாள்.

 

அன்றைய நாள் அப்படியே கழிய, இரவு வாகனத்தில் செல்லும்போது கூட, அவனை அவ்வபோது பார்த்துக் கொண்டு வர, அது எதற்கு என்று புரிந்ததும், இதழோர சிரிப்புடன், “என்ன பி.ஏ மேடம், எதுக்கு அப்பப்போ பார்வை இந்த பக்கம் வருது?” என்று வினவினான் உதயகீதன்.

 

அப்போதும் அவனின் ‘விளிப்பு’ அவளை எட்டவில்லை.

 

“அது… வந்து… ஒன்னுமில்ல…” என்று அவள் சொல்லாமல் தயங்க, “ஆஃபிஸ்ல தான பெர்சனல் பேசக் கூடாதுன்னு ரூல்ஸ். இங்க என்ன?” என்று அவன் அப்போதும் விடாமல் கேட்டான்.

 

அதில் அதிர்ந்து அவனை பார்த்தவள், “கேட்டுடீங்களா?” என்று ஒற்றை வார்த்தையில் கேட்க, “ஹ்ம்ம், பார்த்துட்டேன்.” என்றான் அவனும் அதே தோரணையில்.

 

அதற்கு மேல் என்ன பேச என்று தெரியாமல், எரிமலை எப்போது வெடிக்கும் என்ற பதற்றத்துடன் அவள் ஜன்னல் பக்கம் திரும்பி அமர்ந்து கொள்ள, அவனோ அவள் எதிர்பார்க்காத சமயம், “தேங்க்ஸ்!” என்றான்.

 

தன் காதில் தான் தவறாக விழுந்து விட்டதோ எந்திட எண்ணத்தில் காதை அவள் தடவி பார்த்துக் கொள்ள, பக்கென்று சிரித்தவன், “உனக்கு சரியா தான் கேட்டுச்சு.” என்று வார்த்தைகளால் தெளிவு படுத்தினான்.

 

“அப்போ உங்களுக்கு தான் ஏதோ ஆகிடுச்சு போல.” என்று தீவிரமான குரலில் அவள் கூற, அவள் முகத்தை கண்டவனுக்கு அது காட்டிய குறும்பு வெட்ட வெளிச்சமாகியது.

 

“எல்லாம் என் நேரம்!” என்று அவன் சத்தமாகவே புலம்ப, அவளும் சத்தமாக சிரித்தாள்.

 

அந்த இரவு உதயகீதனை நிம்மதியாக இருக்க விடக்கூடாது என்று எண்ணினாளோ என்னவோ, ராகவர்ஷினி அவனுக்கு அழைப்பு விடுத்தாள், அதுவும் பதினொரு மணிக்கு!

 

தொடரும்…

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 37

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
28
+1
4
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. கிளம்புறவங்க பொண்ணையும் கூட்டிட்டு போக வேண்டியது தானே 😡

    நந்து சூப்பர் 😍 இப்படியே அவளை handle பண்ணு….

    1. Author

      அப்படியே போயிட்டா கதையை நான் எப்படி கொண்டு போறது 😝😝😝 நந்து 😍😍😍