
மதுவின் கைவண்ணத்தில் வேந்தனது ஜாக்குவார் தனது ஒற்றைக் கண்ணை இழந்தது.
வேந்தன் சுதாரிக்கும் முன்பே மது வினுவின் ஸ்கூட்டியை நோக்கி ஓட ஆரம்பித்தால்,
“அடியே எலி குஞ்சு என் கையில மாட்டுன செத்தடி நீ.”
“போடா கடுவன் பூனை.”
வேந்தன் மதுவை நெருங்கும் முன்பே, அவள் வினுவின் ஸ்கூட்டியில் சென்று அமர்ந்து விட்டாள்.
வேந்தன் அவளை எட்டிப் பிடித்திட முனைகையில், அவள் கூந்தலின் நுனி தான் கைக்கு கிட்டியது.
ஸ்கூட்டி நகர்ந்திடவே அவளின் நுனி முடியில் இருந்த ரப்பர் பேண்ட் அவன் கைக்குள் வந்து சேர்ந்தது.
அதை கைக்குள் வைத்துக் கொண்டு காரின் பின் சீட்டில் சென்று அமர்ந்தவன் தான்.
“டேய் தீபா இவனுக்கு எகத்தாளத்தை பாத்தியா. அவன் காருக்கு நம்மள செக்யூரிட்டி ஆக்கிட்டு, வேந்த மகராசா காதல் உலகத்துல பவனி வர்றார் பாரு.”
” அந்த புள்ள செஞ்ச வேலைக்கு இவ ருத்ர தாண்டவம் ஆடுவான்னு பார்த்தா, இவன் என்னடா காதல் மன்னனா மாறி கிருஷ்ண அவதாரம் எடுத்து நிக்கிறான்.”
“மேலூர்காரனுக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சது ரணகளம் தான் போ.”
~~~~~~~~~~~~~~~
“இதை எதுக்காக நான் கொடுக்கணும்?
தன்னை கண்டு கொண்டான் என்று, அவள் பதறுவாள் என நினைத்தால், இவ்வாறு எதிர் கேள்வி அவளிடம் இருந்து வரவே, வேந்தனால் அவளின் தைரியத்தை மெச்சாமல் இருக்க முடியவில்லை.
“நீங்க ஒடச்சதுக்கு நீங்க தானே பே பண்ணியாகணும்னு மிஸ் மதுரம்.”
“ப்ச்சு, முதல்ல இப்படிக்கு கூப்பிடுறத நிறுத்துறீங்களா ?”
“ஒரு மாசம் இங்க வொர்க்ல இருக்கப் போற உங்கள, நான் என்ன பேர் சொல்லி கூப்பிட்டா என்ன?.
அதுவும் உங்க பேருல தானே இருக்கு. ஒருவேளை, நான் உங்களை செல்ல பேரு சொல்லி கூப்பிடனும்னு எதிர்பார்க்கறீங்களா மிஸ் மதுரம்?”
” மண்ணாங்கட்டி, நீங்க எப்படி கூப்பிட்டா எனக்கு என்ன மிஸ்டர் எம்டீ சார். ஆனா இந்த அமௌன்ட் நான் எதுக்காக கொடுக்கணும். நான் தான் உடைச்சேன் என்பதற்கு என்ன ஆதாரம்.”
வேந்தன் சிரித்துக் கொண்டு தனது முன்னிருந்த லேப்டாப்பின் திரையை, அவளை நோக்கி திருப்பி வைத்தான்.
அதில் ஓடிய காட்சிகளை கண்ட மது, திரு திருவென முழிக்க ஆரம்பித்தாள். வேந்தன் கால் மேல் கால் போட்டு கொண்டு, புருவத்தை உயர்த்தி தோரணையாக கேட்டான்.
“என்ன மிஸ் மதுரம், பட்டா போட்டர்லாமா?”
முன்ஜென்மத்தில் கெட்டவர்களின் மதிச் செயலால், சேர்ந்து வாழ முடியாமல், உயிர் துறந்த உயிர் காதலர்களான மித்தரனும் மதுராவும் மறுபிறப்பெடுக்கின்றனர். இப்பிறவியிலும் அவர்களை தொடரும் அமானுஷ்யங்களில் இருந்து தப்பித்து ஒன்றினைந்தார்களா என்பதை கதையில் காண்போம்.
நிறைய திருப்பங்களுடன் கூடிய காமெடி த்ரில்லர் கலந்த அழகான காதல் கதை. மன்னர்காலத்திற்கே சென்று வாழ்ந்த உணர்வை உங்களுக்கு அளித்திடும்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


முன் ஜென்ம கதையா சூப்பர்
ஆமாம் சிஸ்🙂. நன்றி🙏💕
எலி குஞ்சு vs கடுவன் பூனை.
சுவாரசியமான ஒரு ஆரம்பம்.
பெயர் தேர்வு அழகு.
முன்ஜென்ம நினைவுகளின் தாக்கம் நிறைந்த நிகழ்காலம். ஆவலாக காத்திருக்கிறோம்.
படைப்பாளருக்கு வாழ்த்துகள் 👏🏼
நன்றி சிஸ்🙂