Loading

பிறை -31

 

பெண்களுக்கு அதிகம் பிடித்தது ஆபரணம். அதை சூடிக் கொண்டால் அழகிற்கும் அழகு சேர்க்கும் பேரழகியாகி விடுவாள் பெண்ணவள்.

 

இதோ அவனுடைய பேரழகிக்கு நகை வாங்குவதற்கு கடைக்கு அழைத்து வந்தான் ஆதி.

 

” உனக்கு என்ன பிடிக்கும்..”

 

” நான் அவ்வளவா கோல்ட் யூஸ் பண்ண மாட்டேன்.. ”

 

” இனிமே பண்ணிக்கோ.. தாலி எடுக்கனும்.. ” என்றவன்.. அவர்களது முறைக்கான தாலியை தேர்ந்தெடுத்து விட்டு, ஒன்பது பவுனில் அழகான தாலி சங்கிலியை வாங்கி இருந்தான். அதை பார்த்தால் ஒன்பது பவுன் என யாரும் கூற மாட்டார்கள். பார்ப்பதற்கு சாதாரணமாகவே இருந்தது. ஆனாலும் அழகாக இருந்தது.

 

இக்காலத்து பெண்கள் அணியும் படி டிரெண்டி வகைகளை வாங்கிக் கொண்டான். அந்த மாடல் அவளுக்குமே அத்தனை பிடித்திருந்தது. அவளிடம் கேட்கவில்லை. அவளது முகத்தில் தெரிந்த உணர்வுகளை வைத்தே அவளது பிடித்ததை தெரிந்து கொண்டவன்.. அந்த சங்கிலியை வாங்கிக் கொண்டான் ஆதி. பின் அவளுக்காக வைர மோதிரம் ஒன்றையும் வாங்கிக் கொண்டான்.

 

அவள் மறுத்தும் அவன் கேட்கவில்லை. பிடிவாதமாக அவனுக்கு பிடித்ததை எல்லாம் வாங்கி விட்டான்.

 

பின் நேரம் ஆவதை உணர்ந்து அவளை அழைத்து கொண்டு வீட்டிற்குள் செல்லும் வழியில் காரை செலுத்த.. அவள் தான் ஏதோ தீவிரமான யோசனையில் இருந்தாள்.

 

” என்ன ஏதோ பயங்கர திங்கிங் போல ”

 

” இல்ல நீங்க எதுக்காக என்னைய கல்யாணம் பண்ணிகிறீங்க.. அதுனால உங்களுக்கு எதுவும் கிடைக்க போகுதா ” தீவிரமான யோசனையில் அவள் கேட்டு வைக்க.. அதுவரை லெகுவாக இருந்தவனின் முகம் சடுதியில் மாறிப் போனது.

 

” உனக்கு என்ன தோணுது.. ”

 

” எனக்கு காரணம் தெரியல.. அதான் உங்க கிட்ட கேட்கிறேன் ”

 

” காரணம் சொன்னா தான் கல்யாணம் பண்ணிக்க போறியா என்ன ”

 

” அப்படி இல்ல…”

 

” அப்போ இதோட இந்த பேச்சை விடு” வெடுக்கென்று கூறி இருந்தான் ஆதி.

 

மனதிற்குள் ஆயிரம் சஞ்சலங்கள். ஏதேதோ நினைவுகள். எண்ண அலைகளில் சிக்கி தவித்தவளை பார்த்து காரை வேறு புறமாக திருப்பி இருந்தான் ஆதி. அதை கூட அவள் உணரவில்லை.

 

உணர்ந்தாலும் சென்னையில் அவளுக்கு வழி தெரியாது அல்லவா. அமைதியாக அவனோடு பயணித்தாள்.

 

ஆள் இல்லாத சாலையில் வண்டியை ஓரமாக நிறுத்தியவன்.. அவள் பக்கமாக திரும்பி அமர்ந்து கொண்டான்.

 

கார் நின்றதையும் அவள் கவனிக்கவில்லை. ” மூன்… ” அந்த பெயருக்கே வலிக்காத வண்ணம் அவளை அழைத்திருந்தான் ஆதி.

 

அதில் தன்னிலை அடைந்தவள்.. அவனை திரும்பி பார்க்க.. அவனது விழிகளில் என்ன கண்டாளோ.. அமைதியாக அவனையே பார்த்தாள்.

 

ஏனோ அவனது பார்வையில் மந்திர சக்தி இருப்பது போலவும்.. அதில் அவள் கட்டுண்டு இருப்பது போலவும் இருந்தது. ஆனால் இந்த நிமிடம் இருவருமே ரசித்து பார்த்திருந்தனர்.

 

” என்னாச்சு மூன்.. ஏன் டி ஒரு மாதிரி இருக்க ”

 

” ஒன்னும் இல்ல.. ” என அவள் தலையை கவிழ்ந்து கொள்ள..

 

” மனசுல இருக்குறதை சொல்லு .. அப்போதான் ரிலாக்ஸ் ஆகும் ”

 

” நான் எதுக்கோ சென்னை வந்து.. எப்படியோ மாட்டி.. இப்போ கல்யாணம் ஆகப் போகுது.. இதுக்குமேல என் லைப் என்ன ஆகும்னு தெரியல.. என்னோட எம்பிஏ கனவு.. அதுக்கு அப்பறம் வேலைக்கு போகனும் , எங்க அம்மாவை நல்லா பார்த்துக்கனும்.. என் சம்பளத்தை என் அம்மாட்ட கொடுக்கனும் …இப்படி பல கனவு இருந்துச்சு.. ஆனால் இப்போ திரும்பி பார்த்தா எதுவுமே இல்லாத மாதிரி இருக்கு.. இந்த முப்பது நாள்ல என் வாழ்க்கையே திசை மாறிப் போகிடுச்சு ” அவளது மனதை அரித்து கொண்டிருந்த விஷயத்தை மனம் திறந்து கூறி இருந்தாள் பிறைநிலா.

 

அவளது முகத்தையே இமைக்காது பார்த்தவன்..  ” இப்போ இதான் உன் பிரச்சனையா.. நான் கூட என்னைய கல்யாணம் பண்ணிக்கிறது தான் பிரச்சினையோன்னு நினைச்சு பயந்துட்டேன் ” என்றதும் அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு தலையை குனிந்து கொண்டாள் பிறை.

 

” இங்க பாரு மூன்.. நீ நினைச்ச மாதிரியே உன் எம்பிஏ கம்ப்ளீட் பண்ணி.. வேலைக்கு போய் உன் அம்மாக்கு காசு கொடு.. உன்ன யாரு இப்போ தடுக்க போறா ” என்றதும் விழிகளை விரித்தவள்..

 

” நிஜமாவா ”  ஆர்வமாக கேட்டாள்.

 

“ம்ம்.. நிஜமா தான்..”

 

” என் அம்மா கிட்ட என் அப்பா கூட காசு கொடுக்க மாட்டாரு.. எல்லாமே எங்க வீட்ல என் அப்பத்தா கண்ட்ரோல். ஆனால் நான் சம்பாரிச்சு என் அம்மாக்கு கையில காசு கொடுக்க நினைச்சேன் ” என்றதும் அவளது எண்ணத்தை நினைத்து பெருமிதம் கொண்டவன்..

 

” நல்ல விஷயம் தான்.. நான் வீட்ல பேசறேன். அவங்களும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க.. நீ படிக்கிற அதே காலேஜ்ல போய் முடிச்சிட்டு வா.. அவ்வளவு தானே இன்டென்ஷிப் வந்தா முடிய போகுது.. ”

 

” ம்ம் ”

 

”  வேற என்ன பிரச்சனை ”

 

” ஆதி.. ” சட்டென வந்த பதிலில் அவனது முகம் இறுகிப் போனது.

 

” இப்போ எதுக்கு அவனை பத்தி பேசுற.. ”

 

” இல்ல அவனோட அடுத்த மூவ் என்னன்னு நமக்கு தெரியும்.. பிளீஸ் அவன் சாதாரண ஆள் இல்ல.. சைக்கோ மாதிரி இருக்கான் ” என்றவளுக்கு இப்போதும் அதை நினைத்தாலே கண்கள் கலங்கி விடுகிறது.

 

” அது என்னோட வேலை.. நீ கல்யாணத்துக்கு மட்டும் ரெடி ஆகு ”

 

” ம்ம்”

 

” உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமா ”

 

” ரொம்ப சீக்கிரம் கேட்டீங்க ” அவனும் கவனித்துக் கொண்டு தான் இருந்தான் .. சார் என்ற அழைப்பு அவளிடம் இருந்த விடுபட்டிருந்தது.

 

” கல்யாணத்துக்கு அப்பறம் புடவை தான் கட்டுவியா ”

 

” ஏன் ”

 

” இல்ல தெரிஞ்சுக்க தான் ”

 

” எனக்கு சேலை ரொம்ப பிடிக்கும்..  மேக்சிமம் அதுதான் கட்டுவேன் ”

 

‘ ஆதி உன் கதை முடிஞ்சது டா.. டெய்லி சேலை கட்டி உன்ன தவிக்க விட போறா.. கண்ட்ரோல் பண்ணு ஆதி ‘  என அவனுக்குள்ளேயே கூறிக் கொண்டவன்..

 

” ம்ம் குட்” என்றவன் காரை எடுத்திருந்தான்.

 

இருவரும் வீடு வர இரவாகி இருந்தது. வந்ததுமே வாங்கி வந்த முகூர்த்த புடவை , வீட்டில் உள்ளவர்களுக்கு தேவையான துணிகள்…பின் மாங்கல்யம் , மோதிரம் என அனைத்தையும் காட்டி இருந்தாள் பிறை.

 

ஆதியின் தேர்வில் அனைவருக்கும் மனம் குளிர்ந்து போனது. மெதுவாக மருமகளின் அருகே வந்த மீனாட்சி.. ” பக்கத்துல ஒரு பை மட்டும் பிரிக்காம இருக்கே.. அது என்ன டா ” என கேட்க.. அவளுக்கு தான் முகமெல்லாம் வேர்க்க தொடங்கியது.

 

அவன் அவளுக்காக வாங்கிய சாந்தி முகூர்த்த புடவை என மாமியாரிடம் எப்படி கூறுவாள். தயங்கிய வண்ணம் அவரை பார்க்க.. நமட்டு சிரிப்புடன் அதை எடுத்து அவள் கையில் கொடுத்து உள்ளே வைக்க கூறினார்..

 

” அட இன்னர் தானே.. இதுக்கு ஏன் தயக்கம்.. நான் சொன்ன மாதிரி கடையில கஞ்சி போட்ட மாதிரி இருந்திருப்பானே.. ” என கேட்ட மாமியாரை பரிதாபமாக பார்த்து வைத்தாள் பிறை.

 

” ஆமா ஆண்டி..”

 

” இன்னும் என்ன ஆண்டி போண்டின்னு.. அத்தைன்னு வாய் நிறையா கூப்பிடு ” என்றதும்.. சின்ன சிரிப்புடன் தலை அசைத்தாள்.

 

மீனாட்சிக்கு தான் மகனை பற்றி தெரியாது. ஆனால் திவாகருக்கு மகனை பற்றி நன்றாகவே தெரியும்.. அதனால் பொருட்களை பார்த்தே மனதிற்குள் சிரித்துக் கொண்டார்.

 

” வீட்டிற்குள் வந்ததோடு சரி.. அவன் அறைக்கு சென்று விட, இவள் தான் அனைவரிடமும் காண்பித்தாள்.

 

” முகூர்த்த புடவையை சாமிகிட்ட வச்சுட்டு.. மத்த துணிகளை அந்த ரூம்ல வச்சுட்டு வா.. சாப்பிடலாம் ” என மீனாட்சி அழைத்ததும்.. அவளுக்குமே பசி வயிற்றை கிள்ளியது. அவர் கூறியது போல அனைத்தையும் வைத்து விட்டு, பிரஷ் ஆகிக் கொண்டு சாப்பிட வந்தாள். அங்கே அவளுக்கு முன்பே அவன் அமர்ந்திருந்தான்.

 

” அட வா மா பிறை வந்து உட்காரு.. நாங்க எல்லாரும் சாப்பிட்டாச்சு.. நீயும் அவனும் மட்டும் தான் ” என மீனாட்சி பரிமாறி விட..

 

” நீங்க ஏன் லேட் நைட் எல்லாம் முழிச்சு இருக்கீங்க.. போய் படுங்க .. நாங்க பார்த்துகிறோம் ” என்ற மகனை மீனாட்சி விசித்திரமாக பார்க்க , அவனது செயல் புரிந்த திவாகரோ மனைவியை தள்ளிக் கொண்டு அறைக்குள் சென்று விட்டார்.

 

சிவகாமி கூட கணவனை அழைத்து கொண்டு அறைக்கு சென்று விட்டார். இருவருக்குமே மனம் நிறைந்து போனது. ஒரே நாளில் மகளுக்கு இத்தனை தூரம் பார்த்து பார்த்து வாங்கி கொடுத்த மாப்பிள்ளையை நினைத்து பூரித்து போனார்கள்.

 

யாருக்கு தான் இருக்காது.. பெற்ற மகள் தன் வீட்டில் மட்டும் இளவரசியாக இருக்க கூடாது.. போகின்ற வீட்டிலும் ராணியாக வாழ வேண்டும் என்பது தானே ஒவ்வொரு தந்தையின் கனவு.

 

அது அவர்களுக்கு நிறைவேறிப் போனது. எப்படியும் இந்த வீட்டில் தான் மகள் நிம்மதியாக இருப்பாள் என்ற எண்ணத்தில் இருந்தார்கள்.

 

எதுவும் பேசவில்லை.. இருக்கின்ற பசியில் இட்லியை எடுத்து வைத்து வேகமாக உண்ணத் தொடங்கினாள் பிறை.

 

அப்போது தான் அவனுக்குமே அந்த எண்ணம் வந்தது. வெளியே அழைத்து சென்று அவளுக்கு சாப்பிட ஏதும் வாங்கி தரவில்லையே என்பதை உணர்ந்தவள்.. மனதில் குறித்துக் கொண்டான்.

 

வேகமாக சாப்பிட்டத்தில் அவளுக்கு  புறைக்கு ஏறி விட.. சட்டென இருமியவளை பார்த்து, தலையில் தட்டியவன்.. அவளது முதுகையும் தேய்த்து விட.. அவனது செயலில் அதிர்ந்ததென்னவோ அவள் தான்.

 

” சாக் மோட் போயிட்டா.. ” என தண்ணீரை எடுத்து கொடுத்தான் ஆதி. அதை வாங்கி வேகமாக பருகியவள்.. உடலை வளைத்துக் கொண்டு நெளிய.. அதை உணர்ந்தவன், மெதுவாக அவளது முதுகில் இருந்து கையை எடுத்தான்.

 

” கஷ்டம் டா ஆதி ” என அவன் வாய் விட்டே புலம்பிக் கொள்ள.. அவனது வாய்வழிச் செய்தியை வார்த்தையால் கேட்டவளுக்கு முகம் குப்பென்று சிவந்தது.

 

கன்ன சிவப்பை மறைத்து கொண்டு உண்டு முடித்தவள், அவனது தட்டையும் வாங்கி கொண்டு கிச்சன் செல்ல.. அவளுக்கு பின்னே அங்கிருந்த பாத்திரங்களை எடுத்துக் கொண்டு கிச்சன் சென்றான் ஆதி.

 

இதையெல்லாம் கதவின் இடுக்கில் இருந்த ஓட்டையின் வழியே பார்த்துக் கொண்டிருந்த மீனாட்சி நெஞ்சை பிடித்து கொண்டு கீழே விழுந்து விட்டார்.

 

” ஹே மீனு ” திவாகர் பதறி தூக்க..

 

” பத்திரத்தை எடுத்துட்டு அவ பின்னாடி போறாங்க.. உங்க மகன் .. இந்த ரெண்டு கண்ணால பார்த்தேன் ” நம்ப முடியாமல் கூறினாள் மீனாட்சி.

 

அதில் சிரித்தவர்.. ” அவன் என் பிள்ளை டி.. என்ன மாதிரி தானே இருப்பான்.. ” என மீசையை முறுக்கிக் கொள்ள.. அதில் மீனாட்சிக்கும் வெட்கம் வந்து விட்டது.

 

காலம் கடந்தாலும் காதல் மாறாதது !

 

சுமுகமாக சென்று சென்று கொண்டிருந்தது இவர்களது வாழ்க்கை. புயல் வருமா.. ?

 

சனா💖

 

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 43

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
31
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்