
வணக்கம் மக்களே… தூரிகை தமிழ் நாவல்கள் தளத்தில் நடைபெற்ற Mr. ஹீரோ நாவல் போட்டியில் கலந்து கொண்டு கதைகளை வெற்றிகரமாக முடித்த எழுத்தாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்.
ஒரு கதையின் நாயகனை உருவாக்குவதும் வாசகர்களின் மனதில் நிலைக்கச் செய்வதும் எளிதான காரியம் அல்ல. அந்தப் பொறுப்பை மிகுந்த நேர்த்தியுடன் நிறைவேற்றிய முத்தான போட்டியாளர்கள் அனைவரும் உண்மையிலேயே வெற்றிக்குரியவர்கள்.
இருப்பினும், போட்டி நடைபெறுகிறதென்றால், வழக்கப்படி முதல் மூன்று இடங்களை நிரப்பியவர்களை ஊக்குவிப்பதே நடைமுறை. மற்ற கதைகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று சளைக்காத சிறந்த படைப்புகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மொத்தம் பதிமூன்று கதைகள் முடிவடைந்திருந்தது. அதில் மூன்று கெஸ்ட் எழுத்தாளர்கள்.
என் வானம் பூத்ததே – பிரியதர்ஷினி S
நினைத்தாலே சுகம் தானடி – ஹனி
இருளில் விடிவெள்ளியாய் – பார்கவி முரளி.
கதையை நேர்த்தியாகவும், குறித்த நேரத்திலும் எழுதி முடித்த கெஸ்ட் எழுத்தாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் மற்றும் பாராட்டுகள். அவர்களை கௌரவிக்கும் விதமாக, தளம் சார்பாக சான்றிதழ்கள் வழங்கப்படும்.
எவ்வித பாகுபாடுமின்றி வாசகர்களின் வாக்குகள், எழுத்துப்பிழை, இலக்கணப்பிழை என அனைத்தையும் அடிப்படையாகக் கொண்டே முடிவுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. சிறு புள்ளிகள் வித்தியாசத்தின் அடிப்படையில், முடிவடைந்த பத்து கதைகளில் இருந்து தேர்வான முதல் ஐந்து கதைகள்.
காகிதப்பூவே – ஆண்டாள் வெங்கட்ராகவன்
புயலாய் தாக்குதே காதல் – பெத்தனசுதா அருஞ்சுனைக்குமார்
மோட்சம் அடைகிறேன் உன் காதலிலே – ஜீரஃப்
நித்தமுனை வேண்டி – கார்த்தி சொக்கலிங்கம்
அசுரனின் தாலாட்டு இவள் – நிவேதா பிரியதர்ஷினி
ஐவருக்கும் தளத்தின் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
ஐந்து கதைகளில் இருந்து தேர்ந்தெடுக்கடும் மூன்று கதைகள்:
🥇 Winner – காகிதப்பூவே – ஆண்டாள் வெங்கட்ராகவன்
🥈 1st Runner Up – புயலாய் தாக்குதே காதல் – பெத்தனசுதா அருஞ்சுனைக்குமார்
🥉 2nd Runner Up – மோட்சம் அடைகிறேன் உன் காதலிலே – ஜீரஃப்
முதல் பரிசு பெற்ற கதை, யான் பதிப்பகத்தின் வாயிலாக புத்தக திருவிழாவிற்கு புத்தகமாக வெளிவரும்.
வெற்றி பெற்ற மூன்று எழுத்தாளர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் ட்ராஃபி வழங்கப்படும்.
Express writers: தினமும் அத்தியாயம் பதிப்பித்த எழுத்தாளர்களுக்கு சிறப்பு சான்றிதழ் மற்றும் புத்தகப்பரிசு
காயங்கள் ஆறட்டும் ஆரமுதே – நிலவின் தோழி கனி
மோட்சம் அடைகிறேன் காதலிலே – ஜீரஃப்
நினைத்தாலே சுகம் தானடி – ஹனி
காகிதப்பூவே – ஆண்டாள் வெங்கட்ராகவன்.
Super fast express kathai: மிகச் சிறிய இடைவெளியில் மொத்த கதையையும் பதிப்பித்து சிறப்பு சான்றிதழ் பெரும் எழுத்தாளர்.
பூங்கொடிக்கு கண்ணாலம் – அம்மு இளையாள்.
போட்டியில் பங்குபெற்று வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
மீண்டும் அடுத்த போட்டியில் மேலும் சிறப்பான கதைகளுடன் சந்திக்கலாம்.
—-
வாசகர்களுக்கான சிறப்பு பரிசுகள்.
போட்டியில் பதியப்பட்ட அனைத்து கதைகளுக்கும் விமர்சனம் கொடுத்த
சாந்தி நாகராஜ்
ஜீனத் சபீஹா
இருவருக்கும் தளத்தின் சார்பில் நன்றிகள் மற்றும் பாராட்டுகள். மேலும் யான் பதிப்பகம் மூலம் வெளிவந்த ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மூன்று புத்தங்கள் மற்றும் கேடயமும் பரிசாக வழங்கப்படும்.
அதிகபட்சமாக 7 கதைகளுக்கு விரிவான விமர்சனம் வழங்கிய
ப்ரியா ஸ்ரீகாந்த்
கலை கார்த்தி
இருவருக்கும் மனம் நிறைந்த நன்றிகள் மற்றும் பாராட்டுகள். மேலும் இருவருக்கும் தலா 500 ரூபாய் பெறுமானம் உள்ள இரண்டு புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும்.
போட்டியில் பங்கேற்று நாயகர்களை இன்னும் பிரகாசமாக்கிய எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை சமர்பிக்கிறோம்.
நன்றி!

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.
Heartiest Congratulations to all the Winners, Guest Writers & the Organizers. Good job done.