Loading

#Old_is_Gold
#competition

நம்மளோட ஒவ்வொரு கதைகளும் நமக்கு பொக்கிஷம் தான். புதியதோ பழையதோ, முடித்ததோ முடிக்காததோ, சின்னதோ பெரியதோ… நாம் எழுதும் ஒவ்வொரு வார்த்தைகளும் வைரங்களே!

இந்த “Old is Gold” போட்டியில் புது நாவல்களை மட்டுமே சமர்ப்பிக்க வேண்டுமென்ற எந்தக் கட்டாயமும் இல்லை.

வேறு தளத்தில் எழுதி பாதியில் நிறுத்திய கதைகள், சில மாதங்கள் அல்லது வருடங்களுக்கு முன்பு ரசித்து எழுதியும் நினைத்த பாராட்டை பெறவில்லை என்று எண்ணும் கதைகள், உங்கள் எழுத்துலக பயணத்தில் ஒரு படிக்கல் போலான உங்களை செதுக்கிய கதைகள், ரகசியமாய் பாதி எழுதி மீதி எழுத தயக்கம் கொண்டு மறைத்து வைத்திருக்கும் கதைகள் என எந்தக் கதைகளை வேண்டுமானாலும் போட்டியில் எழுதலாம்.

உங்களோட பழைய நினைவுகளை, பழைய எழுத்துக்களை மீண்டும் ரசிக்க காத்திருக்கும் தருணம் இது!

விதிமுறைகள்:

1. ஒருவர் குறைந்தது ஒரு கதை பதிப்பிக்க வேண்டும். அதிகபட்ச அளவுகள் இல்லை.

2. ஒரு அத்தியாயத்தில் குறைந்த பட்சம் 1000 வார்த்தைகள் இருத்தல் அவசியம். குறைந்த பட்சம் 40 அத்தியாயங்கள் இருத்தல் வேண்டும்.

3. எழுத்துப்பிழைகள், இலக்கணப்பிழைகளை சரி செய்து பதிப்பிக்க வேண்டும்.

4. ஏற்கனவே எழுதி முடித்த கதைகள் ஆதலால், தினம் ஒரு பதிவு என நாற்பது நாள்கள் தொடர்ந்து ஒரு கதையை பதிவிட வேண்டும்.

5. தொடர்ந்து அத்தியாயங்கள் பதிவது, எழுத்தின் தரம், வியூஸ், எங்கேஜ்மெண்ட் பொறுத்தே வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

6. போட்டிக்காக எழுத நினைக்கும் கதைகள், போட்டி நடைபெறும் நேரத்தில் வேறு எந்த தளத்திலும் இருக்கக் கூடாது. including Kindle, pratilipi.

7. கதைகள் உங்கள் சொந்தக்கதைகளாக இருத்தல் அவசியம்.

8. மற்ற தளங்களில் அல்லது தூரிகை தளத்தில் வெற்றி பெற்ற கதைகளைப் போட்டிக்கு சமர்ப்பிக்கக் கூடாது.

9. காதல், திரில்லர், சஸ்பென்ஸ், horror என எந்த வகை கதையாகவும் இருக்கலாம்.

10. போட்டிக் கதைகள் போட்டி முடிந்து ஒரு மாத காலம் வரை தளத்தில் இருக்க வேண்டும். 

போட்டி தொடங்கவிருக்கும் நாள் : டிசம்பர் 15, 2025
போட்டி முடிவடையும் நாள் : பிப்ரவரி 28, 2026.
பதிவு செய்ய இறுதி நாள் : டிசம்பர் 12, 2025.

முதல் இரண்டு பரிசுகள் : தலா 4000 ரூபாய்

3 முதல் 5 பரிசுகள் : தலா 2000 ரூபாய்.

ஆறு முதல் பத்து வரை : தலா 1000 ரூபாய்.

10 முதல் 15 வரை – தலா 500 ரூபாய்.

போட்டியில் பங்கு கொள்ளும் அனைத்து எழுத்தாளர்களுக்கும், சான்றிதழ்கள் வழங்கப்படும்.

உணர்வுகளைப் பாதித்த கதைகளின் வழியே மீண்டும் ஒரு முறை அந்தக் கதாபாத்திரங்களுடன் இணைய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்🤩 புது எழுத்தாளர்களும் தாராளமாக எழுதலாம்.

போட்டியில் பதிவு செய்ய இந்த பார்மை நிரப்பவும்: (போட்டியில் பதிவு செய்யும் எழுத்தாளர்கள் போட்டிக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட வாட்சப் community – யில் இணைக்கப்படுவார்கள்)

https://forms.gle/iGogi6XiwbTgAMzVA

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
10
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்