
உயிர் 12
விஷால் பூங்கொத்தோடு ரூபிணியின் வீட்டு வாசலில் நின்றிருந்தான். அவளிடம் சொல்ல வேண்டிய ஆயிரம் பொய்களை தயாரித்து வைத்துக் கொண்டு அவன் காத்திருக்க, ரூபிணி வீட்டில் இல்லை.
இருந்தால் அல்லவா கதவை திறப்பதும்? அவன் பேசுவதை கேட்பதும்?
அவள் நேராக கிளம்பி தாய் தந்தையை பார்க்கச் சென்று விட்டாள். மெலினாவும் கடைசி நேர ஒப்பந்த முடிவுக்கான பேச்சு வார்த்தையில் இருக்க, விஷாலை கவனிக்க ஆளே இல்லை.
ஒரு மணி நேரம் வரை போராடி விட்டு கோபமாக அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டான்.
அலுவலகத்தில் ரூபிணி தனது ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வதாக சொன்ன விசயம் மெல்ல கசிந்து விஷாலின் காதுக்கும் வந்தது.
“உன் கேர்ள் ஃப்ரண்ட் கிட்ட பேசலாம்ல?” என்று அவனை தொல்லை செய்தனர்.
அவள் அவனிடம் பேசினால் அல்லவா அவன் அவளை சரிகட்ட முடியும்? அவனது அழைப்பை ஏற்பதில்லை. செய்திகளை படிப்பது இல்லை.
மெலினாவிடம் கேட்டால், “உங்களுக்கு நடுவுல நான் எப்போ இருந்து வர ஆரம்பிச்சேன்?” என்று நக்கலாக கேட்டு வைத்தார்.
விஷாலுக்கு மெலினாவை பிடிக்காது. ரூபிணி அளவுக்கதிகமாக அவளது சித்தியை கொண்டாடுவது போல் தோன்றும்.
ரூபிணியை வைத்து அவர் நிறைய சம்பாதிக்கிறார் என்பது வேறு பொறாமையை கிளப்பியிருந்தது.
பின்னால் ரூபிணியை திருமணம் செய்து கொண்டால், மெலினாவை முதலில் துரத்த வேண்டும் என்று நினைத்திருந்தான். ஆனால் அத்தனைக்கும் பங்கம் வந்தது போல் ரூபிணி பிரிந்து செல்ல பார்க்கிறாளே.
அவனது தாய் வேறு இப்போது தான் குணமடைந்து கொண்டிருக்கிறார். அதைப்பற்றி அவன் ரூபிணியிடம் சொல்லவே இல்லை. இப்போது அதைச் சொல்லித்தான் அவளது அனுதாபத்தை சம்பாதிக்க திட்டமிட்டிருந்தான். ரூபிணியை ஒரு முறை தாயிடம் அழைத்துச் சென்று விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று நம்பிக் கொண்டிருந்தான்.
அவனது நினைவுக்கெல்லாம் மூடுவிழா நடத்திக் கொண்டிருந்தாள் ரூபிணி.
உதயாவின் நிறுவனத்தில் இருந்து மேனேஜர் அழைத்தார். ஒப்பந்தம் பற்றிய பேச்சு வார்த்தை ஆரம்பித்து விட்டது. அதைப்பற்றிய கவலையில் இருந்த ரூபிணிக்கு, காதல் தோல்வியும் காதலன் செய்த துரோகமும் கூட இரண்டாம் பட்சமாக மாறியிருந்தது.
பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே உதயா ஒரு நாள் செய்தி அனுப்பினான்.
“பிரேக் அப் பண்ணிட்ட போல?”
அவன் அனுப்பிய செய்தியை ஒரு மணி நேரம் கழித்தே பார்த்தவள், “ஆமா மிஸ்டர்.. ஆனா இன்னும் அஃபிசியலாக்கலயே.. உனக்கு எப்படி தெரியும்?” என்று கேட்டு வைத்தாள்.
“அப்ப அஃபிசியலாக்கு” என்று வந்த பதிலை பார்த்து முறைத்தாள்.
“அரகன்ட்..” என்று கைபேசியை முறைத்தவள் தன் காதல் தோல்வியை பற்றி ஊருக்குள் சொல்லியாக வேண்டும் என்று முடிவு செய்தாள்.
நாளை கையெழுத்திட்டு விட்டால் ஒப்பந்தம் அதோடு முடிந்து விடும். இது வரை உதயாவின் நிறுவனத்தோடு போடப்படும் ஒப்பந்தம் பற்றி யாருக்கும் தெரியாது. மிகவும் ரகசியமாகத்தான் வைக்கச் சொன்னாள்.
நாளை கையெழுத்திட்ட பிறகு இரண்டு நல்ல செய்தியையும் ஒரே நேரத்தில் வெளிவிட முடிவு செய்து விட்டாள்.
மறுநாள் விடிந்ததும் மெலினா அழைத்து விட்டார். நேரத்திற்கு வந்து சேரும் படி அழைக்க, அவளும் சந்தோசமாக கிளம்பி விட்டாள்.
போகும் வழியில் உதயாவின் நினைவு வந்தது. இவ்வளவு சுலபமாக அவளுக்கு ஒப்பந்தத்தை கொடுக்க அவன் ஏன் ஒப்புக் கொண்டான்? என்ற கேள்வி இன்னும் கூட மனதை குடைந்தது.
உதயாவின் வாழ்வில் வெறுப்பவர்கள் பட்டியலில் நிச்சயமாக ரூபிணிக்கு இடம் உண்டு. அதில் சந்தேகமே இல்லை. அவளது வாழ்விலும் வெறுப்பவர்களில் இரண்டாம் இடத்தில் அவன் தான் இருக்கிறான். முதல் இடத்தில் இப்போது விஷால் வந்து விட்டான்.
இருந்தாலும் அவள் கேட்டதும் கொடுக்கிறானே? ஆனால் வேறு ஒன்றை செய்யப்போவதாக சொன்னானே? அதைப்பற்றி இப்போது வரை வாயைத்திறக்கவில்லையே.
யோசனையுடனே அலுவலகம் செல்ல ஒரு பெண் ஓடி வந்து, “நீங்க காண்ட்ராக்ட் ரினிவ் பண்ணலயா? ஏன்?” என்று பாவமாக கேட்டாள்.
அங்கே பழகிய சிலரில் அவளும் ஒருத்தி. அவளை பார்த்து புன்னகைத்தவள் உண்மை காரணத்தை சொல்லாமல், “என் எக்ஸ் இருக்க இடத்துல நான் இருக்க விரும்பல.. அதான்” என்று விட்டு சென்று விட்டாள்.
அந்தப்பெண் அதிர்ந்து அடுத்த நொடி இதைப்பற்றி அனைவரிடமும் பேசச் சென்று விட்டாள்.
மெலினாவும் வந்து விட கடைசி பேச்சு வார்த்தை முடிந்து செட்டில் மண்ட்டும் முடிந்த பிறகு கையெழுத்திட்டு முடித்தனர்.
ரூபிணிக்கு மொத்தமாக விடுதலை கிடைத்தது போல் சந்தோசமாக இருந்தது.
கடைசி முறையாக கை குலுக்கி விட்டு வெளியே வர, அங்கிருந்த சிலர் அவளை சூழ்ந்து கொண்டனர்.
“விஷால பிரேக் அப் பண்ணதால தான் போறீங்களா? அவன் என்ன பண்ணான்? என்னாச்சு?” என்று ஒவ்வொருவரும் கேள்விகளை அடுக்க, ரூபிணி அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு எல்லோரையும் பார்த்தாள்.
“அவன் சீட் பண்ணிட்டான். அதான் எனக்கு பிடிக்கலனு பிரிஞ்சுட்டேன். அந்த சீட்டர் கூட என்னால இதே கம்பெனில வேலை பார்க்க முடியாது. எனக்காக அவன துரத்தவா முடியும்? நானே போறேன்.. பை” என்று உருக உருக பேசி விட்டு கிளம்பி விட்டாள்.
விஷால் இதை எல்லாம் தாமதமாக தெரிந்து கொண்டு அவசரமாக ரூபிணியை பார்க்க ஓடி வர, அவள் காரில் ஏறிக் கொண்டாள்.
“ஏய் வெயிட்…” என்று வேகமாக ஓடி ரூபிணி அமர்ந்திருந்த சன்னலை பிடித்துக் கொண்டான்.
“பேபி ப்ளீஸ்.. இப்படி என்னை இக்னார் பண்ணிட்டே இருக்காத.. நான் என்ன நடந்ததுனு சொல்லுறேன்”
ரூபிணி திரும்பிப் பார்த்து முறைத்தாள்.
“என்ன சொல்லுவ?”
“டோர் ஓபன் பண்ணு.. நான் உள்ள வந்து பேசுறேன்”
“ஒன்னும் தேவையில்ல.. கிளம்பு”
“வெயிட் வெயிட்.. நீ.. நீ அன்னைக்கு பார்த்தவ.. ஜஸ்ட் என்னோட ஃப்ரண்ட்..” என்றதும் ரூபிணிக்கு சிரிப்பு வரப்பார்த்தது.
ஆனால் அடக்கிக் கொண்டு அமைதியாக இருக்க, அவள் நம்ப ஆரம்பித்ததாக நினைத்தான் விஷால்.
“என் அம்மாக்கு.. அடி பட்டுருச்சு.. அவங்க ஹாஸ்பிடல்ல இருந்தாங்க..” என்றதும் ரூபிணி நக்கலாக பார்க்க, “ப்ராமிஸ்.. அம்மா நிஜம்மா ஹாஸ்பிடல்ல இருந்தாங்க. அந்த பொண்ணு தான் பணம் கட்டி அம்மாவ காப்பாத்துனா.. அதுனால..” என்க ரூபிணி நடுவில் பேசினாள்.
“அதுனால.. நீ அவ கூட படுத்த.. அதான?”
“ஹேய்.. இல்ல சத்தியமா இல்ல” என்று விஷால் அவசரமாக மறுக்க, ரூபிணிக்கு பொய் சொல்லும் வாயை கிழித்து எரியும் வெறி வந்தது.
ஸ்டியரிங்கை கெட்டியாக பிடித்துக் கொண்டு மனதை கட்டுப்படுத்தினாள்.
“அவ அன்னைக்கு மட்டும் வந்து தங்கிட்டு அடுத்த நாள் போயிட்டா.. நீ சூட் போயிருந்ததால உன்னை டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு நான் உன் கிட்ட சொல்லல.. அதுக்காக நீ என்னை தப்பா புரிஞ்சுக்கிட்ட..”
“தப்பா? நானு?”
“ஆமா.. அவ வெறும் ஃப்ரண்ட் அவ்வளவு தான்.. நான் அம்மாக்கு கால் பண்ணி தர்ரேன்.. நீயே கேளு..”
“விஷால்.. உண்மையிலயே என் டேஸ்ட் ரொம்ப மட்டும்னு நிரூபிச்சுட்டு இருக்க.. அசிங்கமா இருக்கு..”
“பேபி..”
“ஓ சட் அப்.. இன்னொரு தடவ இப்படி கூப்பிடாதனு சொல்லுறேன்ல? ஃபைன்.. உன்னை பைத்தியமாவே விட்டுட்டு போகனும்னு தான் ஆசைப்பட்டேன். ஆனா நீ என்னை நிம்மதியா விட மாட்ட.. அதுனால சொல்லுறேன்.. உன் வீட்டு சிசிடிவி கேமராவ என்னாலயும் அக்ஸஸ் பண்ண முடியும்” என்றவள் அவனை வெறுப்போடு பார்த்து விட்டு காரை எடுத்து விட, ஒரு நொடி புரியாமல் நின்றிருந்தான் விஷால்.
கார் அவனை தாண்டி சென்ற பிறகு தான் விசயம் புரிந்தது. அவள் கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்திருக்கிறாள்.
தலையில் அடித்துக் கொண்டு அவன் நின்று விட, ரூபிணியின் கார் அவன் கண்ணை விட்டு மறைந்தது.
•••
உதயா கைபேசியை பார்த்துக் கொண்டிருந்தான். இன்று ரூபிணி பழைய நிறுவனத்திலிருந்து பிரிவது பற்றிய செய்திகள் பரவியிருந்தது.
என்ன காரணம்? என்று சிலர் அலசி ஆராய, அதே நேரம் அடுத்து எந்த நிறுவனத்தில் அவள் சேரப்போகிறாள்? என்ற பேச்சு வார்த்தையும் இருந்தது.
இது எல்லாம் மெலினா மீடியாவுக்கு கொடுத்த செய்தி. அதை படித்துக் கொண்டிருக்க, ரூபிணியிடமிருந்து அழைப்பு வந்தது. அவள் பெயரை “இடியட்” என்று பதிவு செய்து வைத்திருந்தான்.
உடனே எடுக்கத் தோன்றவில்லை. வேண்டுமென்றே அவளது அழைப்பு முழுதாக முடியும் வரை காத்திருந்தான். மீண்டும் அழைக்கட்டும் பார்க்கலாம் என்று விட்டு விட ரூபிணி மீண்டும் அழைக்கவில்லை.
“ஓஹோ.. உனக்கு திமிர்னா எனக்கும் திமிர் தான்டி” என்று கண்டு கொள்ளாமல் வேலையை பார்த்தான்.
ஆனால் அடுத்த ஐந்து நிமிடத்தில் மேனேஜரிடமிருந்து அழைப்பு வந்தது.
“சார்.. ரூபிணி மேடம் காண்ட்ராக்ட் பத்தி பேசனும்.. நீங்க ஃப்ரியா?” என்று கேட்க, உதயாவுக்கு கோபமும் சிரிப்பும் ஒன்றாக வந்தது.
இரண்டையும் மறைத்துக் கொண்டு, “ம்ம்” என்று வைத்து விட்டான்.
“நான் எடுக்கலனா அங்க போயிடுவியா? ஆனா இது என் ப்ளானுக்கு சரிப்பட்டு வராதே” என்று யோசிக்க ஆரம்பித்தான்.
சில நிமிடங்கள் கழித்து மேனேஜர் வந்து சேர்ந்தார்.
“ரூபிணி மேடம்க்கு நாளைக்கு ஒரு இன்டர்வியூ இருக்காம். அதுல நம்ம காண்ட்ராக்ட் பத்தி பேசலாமானு கேட்குறாங்க. என்ன சொல்லுறதுனு நீங்க தான் சொல்லனும்”
உதயா அவரை இமைக்காமல் பார்த்தான்.
“யூஸ்வலா நம்ம சைட் இருந்து தான நியூஸ் போகும். அவ ஏன் சொல்லனும்?”
மேனேஜர் புரிந்தது போல் தலையாட்டி வைத்தார்.
“அவ கிட்ட நான் பேசுறேன். எனக்கு கால் பண்ண சொல்லுங்க”
“ஓகே சார்..” என்றவர் உடனே கைபேசியை எடுத்து ரூபிணிக்கு செய்தி அனுப்பி விட்டார்.
“மெஸேஜ் பண்ணிட்டேன் சார்.. நீங்க பிசியா இருப்பீங்களாம். உங்க டைம் பார்த்து நீங்களே கூப்பிடுவீங்கனு வெயிட் பண்ணுவாங்களாம்”
மேனேஜர் என்னவோ சாதாரணமாக தான் இதைச் சொன்னார். கேட்டிருந்தவனுக்கு தான் இரத்த அழுத்தம் கூடியது.
‘நானா கூப்பிடனுமா? கொழுப்பு தான்’ என்று நினைத்துக் கொண்டான்.
கைபேசியை எடுத்தவன் “இடியட்” பெயரை மனதிற்குள் ஒரு முறை அழுத்திச் சொல்லிக் கொண்டே அழைத்தான்.
அழைப்பு முடியும் தருவாயில் எடுத்தவள் ஒன்றுமே பேசவில்லை. உதயா பல்லைக்கடித்துக் கொண்டு, “ஹலோ..” என்றான்.
“ஓ.. விஐபி.. சொல்லுங்க சார் சொல்லுங்க.. என்ன இந்த பக்கம்?”
நக்கலாக எதோ பேசப்போனவன் மேனேஜரை ஒரு முறை பார்த்து விட்டு, “நாளைக்கு எத்தனை மணிக்கு இன்டர்வியூ?” என்று விசயத்துக்கு தாவினான்.
“ஈவ்னிங் தான்.”
“காலையில என்னை காண்டாக்ட் பண்ணு” என்றவன் அவள் பேசும் முன்பே வைத்து விட்டான்.
“நீங்க போங்க” என்றதும் மேனேஜர் கிளம்பி விட, உதயாவின் கைபேசியில் செய்தி வந்து விழுந்தது.
“மிஸ்டர் அரகன்ட்.. காலையில கால் அட்டன் பண்ணுவியா? இல்ல திமிர்ல வேடிக்கை பார்ப்பியா?”
உதயா ஒரு நொடி அதிர்ந்து சுற்றிலும் பார்த்துக் கொண்டான். அவனை நேரில் இருந்தது பார்த்தது போல் பேசிகிறாளே. அவனது அதிர்ச்சி சில நொடிகள் வரை நீடித்தது.
தொடரும்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.

இரண்டு பேரும் மற்றவர்களை சரியாக புரிந்து கொள்கிறாங்க