Loading

பிறை -20

 

அந்த இடத்தில் அசாத்திய அமைதி நிலவியது. மொத்த குடும்பமும் ஒரே வீட்டில் தான் கூடி இருந்தனர்.

 

எதிர் எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தவர்களின் முகத்தை கூட பார்க்க முடியாத வேதனையில் வந்து, விதி விட்ட கதையை நினைத்து  நொந்து போனார்கள்.

 

இதில் சிவகாமிக்கு தான் கண்ணீர் நிற்காமல் வந்து கொண்டிருந்தது. மகளை பற்றிய நினைப்பில் நெஞ்சம் அடைத்தது.

 

எதிரே அமர்ந்த மீனாட்சி தான் பேச்சை ஆரம்பித்தாள். ” தயவுசெஞ்சு அழாதீங்க.. இப்போ நம்ம அழுது என்ன பண்ண முடியும்.. அடுத்து என்னன்னு தான் யோசிக்கனும்.. ” பொறுமையாக பேசினார்.

 

” இனிமே பேசி என்னங்க ஆக போகுது.. அதான் என் மகளை ஒன்னும் இல்லாம பண்ணிடாங்களே.. ” சிவகாமி அழுதார்.

 

” நீங்களே இப்படி பேசுனா எப்படிங்க.. உலகம் ஆயிரம் பேசும்.. அவங்க தூக்கிட்டு போனது ஒரு பொண்ணுன்னு தெரியும்.. ஆனால் அது பிறை தான்னு எங்களுக்கு தெரியாது.. ஆனால் யாரா இருந்தாலும் என் மகன் சும்மா இருக்க மாட்டான்.. ” ஆதி மேல் இருந்த நம்பிக்கையில் பேசினார் மீனாட்சி.

 

” ஊருக்குள்ள இனிமே தலை காட்ட முடியாதுங்க.. நான் அப்போவே சொன்னேன்.. இவளை சென்னை அனுப்புறது எல்லாம் சரி வராதுன்னு.. ஆனால் பிள்ளை ஆசை படுறான்னு தான் அனுப்பி வச்சோம். இவ்வளவு பெரிய சிக்கல்ல மாட்டுவான்னு தெரிஞ்சிருந்தா கண்டிப்பா என் பிள்ளையை அனுப்பி இருக்கவே மாட்டேங்க ” சிவகாமி கதற..

 

” இடையில நான் வந்த அப்போ கூட கூட்டிட்டு போகலாம்னு தான் இருந்தேன். ஆனால் சுஷ்மிதா பிள்ளையோட மாமா நம்பிக்கையா பேசுனார், அதுனால தான் விட்டுட்டு போனேன். என் பிள்ளைக்கு இப்படி ஒரு அநியாயம் நடக்கும்னு நான் கனவுல கூட நினைக்கலை ” சிவானந்தம் உடைந்து பேசினார்.

 

அவரை எப்படி தேற்றுவது என  தெரியாமல் மீனாட்சியும், திவாகரும் தவித்துக் கொண்டிருந்தார்கள்.

 

” ஊர்ல ஒரு மாப்பிள்ளை கூட பார்த்து வச்சிட்டேன். என் மக படிப்பை முடிக்கவும் அவருக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கலாம்னு இருந்தோம். ஆனால் இப்போ என் மகளை யார் கல்யாணம் பண்ணிக்குவாங்க.. சாதி சனத்துக்கு எல்லாம் நான் என்ன பதில் சொல்லுவேன்.. என் மகளை எப்படி இதுல இருந்து மீட்டு கொண்டு வருவேன். ஐயோ கடவுளே.. ” நொந்து போனார். அவரது அழுகையை பார்த்தவர்கள் மனம் எங்கும் கனத்து போனது.

 

சுஷ்மிதாவின் மாமாவும் அங்கு தான் அமர்ந்திருந்தார். ” உங்களுக்கு வாக்கு கொடுத்தேன். ஆனால் அதை என்னால காப்பாத்த முடியல.. உங்க பொண்ணை என்ன நம்பி தான் நீங்க விட்டுட்டு போனீங்க. ஆனால் என்னால சரியா பார்த்துக்க முடியல.. என்ன மன்னிச்சிடுங்க ” என கைகூப்பி நிற்க.. அவரை கண்ணீர் மல்க பார்த்தவர்.. ” எத்தனை மன்னிப்பு கேட்டாலும் என் மக எனக்கு பழைய மாதிரி திரும்ப கிடைப்பாளா ” கேள்வி கணைகளை தொடுத்தவருக்கு பதில் அளிக்க முடியாமல் அமைதி காத்தார் அவர்.

 

அனைவருமே ஆதியின் வீட்டில் தான் இருந்தனர். அவர்களது பாதுகாப்பை கருதி அனைவரையும் அங்கு வரச் செய்தான் ஆதி.

 

அதே நேரம் புட்ஸ் சத்தத்துடன் உள்ளே வந்தவன்.. ஹாலில் இருந்த அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவன்.. கீழே இருந்த அந்த அறை கதவை திறந்து உள்ளே செல்ல.. நிர்மலான முகத்துடன் ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள் பிறைநிலா.

 

அதை பெரும் மூச்சுடன் பார்த்து விட்டு வெளியே வந்தவன்.. ஹாலில் இருக்கும் கதிரையில் அமர்ந்து பிறையின் பெற்றோரை தான் பார்த்தான்.

 

” உங்க பொண்ணோட எல்லா  வீடியோவையும் நான் அழிச்சிட்டேன். இனிமே அது வரதுக்கு சான்ஸ் இல்ல.. நீங்க என்னைய நம்பலாம் ” அவனது இறுகிய குரலில் இருந்து எதையும் கண்டு கொள்ள முடியவில்லை.

 

” போன் மேல் போன் வருதுங்க சார்.. ஊரு காரவுக எல்லாம் நியூஸ் பார்த்துட்டு அடிக்கிறாங்க.. என் மகளை எப்படி நான் ஊருக்குள்ள கூட்டிட்டு போவேன்.. ஏற்கனவே சாக பார்த்துருக்கா.. அங்க யாராவது ஏதாவது பேசி தற்கொலை பண்ணிக்கிட்டா என்ன செய்யுறது ” சிவகாமி பயத்தில் அழுக.. அவனது முகம் மேலும் இறுகியது.

 

” பிறை தைரியமான பொண்ணு தாங்க.. ஏதோ அந்த சூழ்நிலையில என்ன பண்ணுறதுன்னு தெரியாம அந்த முடிவை எடுத்திருக்கலாம்.. ஆனால் திரும்ப தற்கொலை பண்ண மாட்டான்னு எனக்கு தோணுது ”  மீனாட்சி கூற.. திவாகரும் அதையே ஆமோதித்தார்.

 

” பிள்ளை கண்ணு முழிக்கவும் நாங்க ஊருக்கு கிளம்புறோம் ”

 

” இல்ல இன்னும் ரெண்டு நாள் இங்க இருங்க.. கேஸ் முடியுற வரைக்கும் நீங்க இங்க இருந்தே ஆகனும் ”

 

” அப்போ எங்களுக்கு தங்குறதுக்கு ரூம் இருந்தா சொல்லுங்க சார்.. நாங்க மகளோட அங்க போயிடுறோம் ”

 

” இப்போதைக்கு சென்னைல நீங்க வெளிய தாங்குறது அவ்வளவு நல்லது இல்ல.. இங்கேயே இருங்க.. நான் இங்கேயே உங்களுக்கு எல்லாம் ரெடி பண்ணுறேன் ” என்றதும் அவர்களும் மறுத்து ஒன்றும் கூறவில்லை. ஆனால் அவர்களது வீட்டில் இருக்க பிறையின் பெற்றோருக்கு சற்று சங்கடமாக தான் இருந்தது.

 

” நைட்டுக்கு சாப்பாடு வெளிய சொல்லிக்கலாம் மா.. நீங்க அந்த கடைசி ரூம்ல தாங்கிக்கோங்க.. பிறையை போய் யாரும் பார்க்க வேணாம்.. நான் டாக்டரை வரச் சொல்லியிருக்கேன்.. அவங்க செக் பண்ணிட்டு சொல்லட்டும் ” என்றவன் அவனது அறைக்கு சென்று விட.. சுஷ்மிதாவின் மாமாவும் விடை பெற்றுக் கொண்டார்.

 

” நீங்க போய் ரெஸ்ட் எடுங்க.. டாக்டர் வந்தா நான் சொல்லி அனுப்புறேன் ” என மீனாட்சி கூற.. தளர்ந்த நடையுடன் அங்கிருந்து சென்றனர்.

 

” இந்த பிள்ளைக்கு ஏங்க இப்படி ஒரு நிலைமை வரனும்.. மனசெல்லாம் பாரமா இருக்குங்க.. ரொம்ப நல்ல பிள்ளை.. அவளை தூக்கிட்டு போனவன் நாசமா தான் போவான். பொம்பளைப் பிள்ளையை பெத்தவங்க எல்லாம் வயித்துல நெருப்பை கட்டிட்டு இருக்கனும் போல.. ”

 

” ஆமா மீனு.. நம்ம நல்ல படியா பாருவை கல்யாணம் பண்ணி கொடுக்கனும். பிறைக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமையனும். ஆனால் அந்த பிள்ளையை பத்தி தப்பான செய்தியை பரப்பி விட்டாங்க. அதையெல்லாம் நம்பாம ஒருத்தன் அவளை கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கனும் ” திவாகர் பெரும் மூச்சை விட..

 

” நம்ம பிள்ளையோட போய் அந்த  பிள்ளையை சேர்த்து வச்சு பேச எப்படிங்க மனசு வந்துச்சு.. நமக்கு ஆதியை பத்தி நல்லா தெரியும்.. பொண்ணுங்க பக்கம் கூட திரும்ப மாட்டான். அவனை போய் இப்படி பொறுக்கி மாதிரி காட்டிட்டாங்க ”

 

”  விடு மீனு.. இப்படித்தான் நடக்கனுன்னு விதி இருக்கு.. என்ன செய்யுறது.. ” என திவாகர் சென்று விட.. மீனாட்சி மனம் தாங்காமல் பிறையை பார்த்து விட்டு அறைக்கு திரும்பினார்.

 

மாடிக்கு சென்ற ஆதி உஷ்ணம் தீரும் வரை குளியறையில் இருந்து வெளி வரவில்லை.

 

கண்ணை மூடினால் கூட அங்கு பிறை இருந்த கோலம் தான் கண்ணுக்குள் வந்து சென்றது.. ” ஆஆஆஆஆஆஆ ……. ” என ஆத்திரத்தில் அலறியவன்..  சுவற்றில் ஓங்கி குத்திக் கொண்டான்.

 

அவனால் இன்னும் அந்த நிமிடங்களை கடக்க முடியவில்லை. அப்படி இருக்காது என நினைத்து சென்றவனுக்கு, நீ நினைத்ததை விட இருக்க போகிறது என காலம் பதில் சொல்லியது.

 

மருத்துவர் வந்து விட்டார் என தகவல் வர.. வேகமாக வெளியே வந்து உடைகளை அணிந்து கொண்டு கீழே வந்தான்.

 

வந்ததோ மகப்பேறு மருத்துவர். ” வாங்க மேடம்..”

 

” வணக்கம் சார்.. நீங்க சொன்ன பேஷண்ட்டுக்கு பர்ஸ்ட் எயிட் பண்ணியாச்சா”

 

” ம்ம் அதெல்லாம் பண்ணியாச்சு.. ”

 

” கண்ணு முழிச்சு எதுவும் பேசுனாங்களா ”

 

அதில் முகம் இறுகியவன் .. ” ம்ம் பார்த்துட்டு, மயக்கம் ஆகிட்டா ” என்றவனுக்கு மனம் ஒரு நிலையில் இல்லாது போனது.

 

” நான் போய் பார்த்துட்டு சொல்லுறேன்” என்றவரை தனியாக அழைத்து சென்றவன்.. அவரிடம் சில பல தகவலை பேசி விட்டு வந்தான்.

 

மருத்துவர் வந்ததுமே வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் அங்கு கூடி விட்டனர்.  வீட்டில் வாசலில் மீடியாக்கள் இருந்ததால் பின் வழியாக மருத்துவரை அழைத்து வந்திருந்தான்.

 

மீடியாவில் உள்ளவர்கள் தான் நினைத்ததை எல்லாம் எழுதி தள்ளுவதில் வல்லமை பெற்றிருந்தார்களே !

 

உள்ளே சென்று அரை மணி நேரமாக அவளை முழுவதும் சோதனை செய்தார் அந்த பெண் மருத்துவர். அவரோடு இன்னும் இரண்டு செவிலியர்கள் வந்ததால், அவருக்கு உதவியாக இருந்தது.

 

அரை மணி நேரத்தில் வெளியே வந்தவர்… ” உங்க பொண்ணுக்கு எந்த பிரச்சனையும் இல்ல.. ஷி இஸ் பெர்பெக்டலி ஆல்ரைட்.. பயப்பட வேண்டிய அவசியம் இல்ல.. கண் முழுச்சதும் நடந்ததை பத்தியே பேசிட்டு இருக்காதீங்க.. அதுல இருந்து அவங்களை வெளியே கொண்டு வர நீங்கதான் ஹெல்ப் பண்ணணும் ” என்றவர்… ஆதிக்கு கண் காட்ட.. இருவரும் தனியாக வேறு ஒரு அறையில் புகுந்து கொண்டனர்.

 

மருத்துவர் கூறப் போகும் பதிலுக்காக காத்திருந்தான் ஆதிதேவ். மனசெல்லாம் பயத்தில் படபடவென அடித்துக் கொண்டது. அவர் என்ன கூறினாலும் அதை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தை ஏற்படுத்திக் கொண்டான்.

 

” சார்.. வெளிய சொன்னது தான் உங்களுக்கும்.. அவங்க இப்போ நல்லா தான் இருக்காங்க.. ”

 

” நல்லா மீன்ஸ்”

 

” நீங்க நினைக்கிற மாதிரி அவங்களுக்கு எதுவும் நடக்கல.. ” என்றதும் தான் அவனது மனம் ஒருநிலைக்கு வந்தது.

 

” ஆனால்.. ” என அந்த மருத்துவர் நிறுத்த…

 

” ஓப்பனா சொல்லிடுங்க ”

 

” டிரை பண்ணியிருக்காங்க.. உடம்புல மார்க்ஸ் இருக்கு ” என்றதும்.. முகமெல்லாம் சிவந்து போனது அவனுக்கு.

 

” ம்ம்.. அதுனால அவங்க எந்திரிச்சா தான் எதுவும் சொல்ல முடியும்.. பிசிகலி ஷி இஸ் ஓகே. ஆனால் மெண்டல்லி என்னனு சொல்ல முடியாது.. முதல்ல அவங்க எந்திரிச்சு பேசட்டும்.. அதுக்கு அப்பறம் என்ன பண்ணுறதுன்னு பார்க்கலாம் ”

 

” வேற எந்த பிரச்சினையும் இல்லை தானே.. ”

 

” இல்ல நான் கம்பிளிட்டா செக் பண்ணிட்டேன்.. ”

 

” எதுவும் இன்ஜெக்ட் பண்ணிருக்காங்களா மேடம் ”

 

” அந்த மாதிரி மார்க்ஸ் எதுவும் உடம்புல இல்ல.. ” என்றவருக்கு சில யோசனைகள் வர.. அதை அப்போதைக்கு ஒதுக்கி இருந்தார்.

 

” தாங்க்ஸ் மேடம்… இந்த மீட்டிங் காண்பிடென்ஷியல்லா இருக்கனும் .. சோ.. ” என இழுக்க..

 

” இல்ல சார் வெளிய சொல்ல மாட்டேன்.. ” என உறுதியாக கூறினார்.

 

மேலிடத்தில் இருந்து அவனுக்கு வரிசையாக அழைப்பு வந்து கொண்டிருந்தது. பிறை கண் விழித்து கூறினால் தான் எதையும் அறிந்து கொள்ள முடியும். ஆனால் அவள் தான் ஆழ்ந்த நித்திரையில் இருக்கிறாளே..

 

மருத்துவரை அனுப்பி வைத்தவன், நேராக பிறை இருந்த அறைக்கு தான் சென்றான். அவன் கமிஷனர் என்பதால் அவன் மட்டும் தனியாக சென்று தங்களது மகளை பார்த்து விட்டு வருவது அவர்களுக்கு பெரிதாக ஒன்று தெரியவில்லை.

 

ஆனால் திவாகர் தனது மகனின் ஒவ்வொரு அசைவையும் துல்லியமாக கணித்துக் கொண்டிருந்தார்.

 

அதே சமயம் ஊரில் இருந்து சிவானந்தம் கைபேசிக்கு அழைப்பு வர.. எடுத்து காதில் வைத்தவருக்கு கிடைத்த செய்தியில் முகம் கசங்கிப் போனது.

 

” என்னாச்சுங்க.. ” கணவரின் முக மாற்றத்தை வைத்து சிவகாமி கேட்க..

 

” ஊர்ல நம்ம மகளுக்கு பார்த்து வச்ச பையன் , இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டாராம்.. வேற இடம் பார்க்க சொல்லி தகவல் சொல்லியிருக்காரு .. நம்ம புரோக்கர் நேசமணி ” கிடைத்த தகவலில் சிவகாமிக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

 

இனி தன் மகளின் வாழ்க்கை எப்படியெல்லாம் ஆக போகிறதோ என்ற பயத்தில் இருந்தார்.

 

அதேநேரம் சிவானந்தத்தின் தங்கை மயில் அவருக்கு அழைத்து பேசி.. சில பல விஷயங்களை கூறி இருக்க.. சிவானந்தம் முகம் நொடியில் மாறிப் போனது.

 

மயில் பேசியதில் சிவகாமி பயத்தில் இருக்க.. பேசி முடித்து விட்டு தனது கணவர் கூறிய செய்தியில் அதிர்ந்து போனார் சிவகாமி.

 

சனா💖

 

Click on a star to rate it!

Rating 4.1 / 5. Vote count: 20

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
18
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்