Loading

 

தன் அறைக்குத் திரும்பிய உதயகுமாரன் கோட்டை கலட்டி போட்டு விட்டு டையை தளர்த்தி விட்டான். பாக்கெட்டில் இருந்த கைபேசியை எடுத்து அழுத்திக் கொண்டே நடக்க மறுபக்கம் அழைப்பு ஏற்கப்பட்டது.

“டார்லிங்..”

“எஸ் பேபி?”

“பர்சேஸ் எல்லாம் முடிச்சுட்டியா?”

“இன்னும் இல்ல பேபி.. ஏன்? இப்பவே வரனுமா?”

“சீக்கிரமா வந்தனா பார்ட்டிக்கு போக சரியா இருக்கும்”

“கண்டிப்பா ஆன் டைம் வந்துடுவேன். கவலையே படாத. ஐ லவ் யூ”

“லவ் யூ டூ” என்று விட்டு வைத்து விட்டான்.

உதயகுமாரின் காதலி மெடோனா. இன்று இரவு இருக்கும் ஒரு பார்ட்டிக்கு காதலியோடு செல்ல முடிவு செய்திருந்தான். அதற்கான அலங்காரங்கள் உடைகளை வாங்க மெடோனா சென்றிருந்தாள்.

உதயகுமார் புகழ் பெற்ற ஒரு நிறுவனத்தின் உரிமையாளன். அவனது நிறுவனத்தின் வேலை அழகிய மாடல்களை உருவாக்குவது.

பெண்களும் ஆண்களும் பயிற்சி பெற்று பல முன்னனி நிறுவனங்களில் மாடல்களாக வேலை செய்கின்றனர்.

உதயகுமார் பதினெட்டு வயதில் தொழிலை கையில் எடுத்தவன். அது வரை அனைத்தும் அவனது பெற்றோர்களிடம் இருந்தது.

அவனது தாய் விவாகரத்து கேட்டு பிரிந்து சென்று விட தந்தை தொழிலை கவனிக்காமல் ஊர் சுற்ற ஆரம்பிக்க பங்குதாரர்கள் அவரை நம்பாமல் புது ஆளை தேர்வு செய்ய முடிவு செய்தனர்.

அப்போது தனக்கே அனைத்தும் வேண்டும் என்று முடிவு செய்த உதயா மிக அழகாக திட்டம் தீட்டினான்.

அப்போதைக்கு உருவாகிக் கொண்டிருந்த விளம்பர உலகத்தில் அவனுக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது. ஒவ்வொன்றையும் யோசித்து பங்குதாரர்களை வழிக்கு கொண்டு வர போராடினான்.

ஒரு வருடத்தில் அவன் சொன்ன அளவு வளர்ச்சியை அடையாவிட்டால் அனைவருக்கும் கோடிக்கணக்கில் பணம் தருவதாக சொல்லி வைத்தான். அதீத ஆசையில் பலர் ஒப்புக் கொள்ள அவனே தலைமைக்கு வந்தான்.

அன்றிலிருந்து அவன் உழைத்த உழைப்பு அவனை உட்சத்தில் கொண்டு சென்று நிறுத்தி விட்டது. மாடலிங் உலகிற்கு வர ஆசைப்படும் அனைவரும் அவனது நிறுவனத்தில் நுழைவதையே கனவாக கொண்டிருந்தனர்.

அதே போல் முன்னனி நிறுவனங்களின் விளம்பரங்களுக்கு அவனது நிறுவனத்தில் இருந்தே ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஒவ்வொரு வருடமும் அவனது நிறுவனத்தின் மதிப்பு வளர்ந்து கொண்டே போனது. ஆனால் இன்று வரை அவன் திருப்தியாகாமல் யாரையும் மாடலாக அமர்த்த மாட்டான்.

ஒவ்வொரு வருடமும் பயிற்சிக்காக நூறு பேர் வந்தாலும் அவன் ஒருவரை கூட தேர்வு செய்யாமல் போனதும் உண்டு. அடிப்படை பயிற்சி ஒரு வருடம் தான். ஒரே ஒரு முறை உதய குமார் முன்பு தேர்வு நடக்கும். அவன் தேர்வு செய்யாவிட்டால் அடுத்த ஒரு வருடம் பயிற்சி நடக்கும். இல்லாவிட்டால் நிறுவனத்தை விட்டே சென்றிடலாம்.

ஆனால் வெளியே அந்த நிறுவனத்தில் பயிற்சி பெற்றதற்காகு பல மதிப்பு உண்டு. ஆனாலும் அதே நிறுவனத்தில் உதயகுமாரால் தேர்வு செய்ய வேண்டும் என்பது தான் பலரின் கனவு.

இது போன்ற கனவோடு தான் ரூபிணியும் அவனது நிறுவனத்தில் ஏழு வருடங்களுக்கு முன்பு இணைந்தாள். ஒரு வருட கால பயிற்சி. நிற்பது நடப்பது முகபாவனை அனைத்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

உணவு கட்டுப்பாடு உடை அலங்காரம் என அனைத்தும் பழகி இருக்க ரூபிணிக்கு தன் மீது அதீத நம்பிக்கை இருந்தது. எப்படியும் தேர்வாகி விடுவாள் என்று நினைத்தாள்.

அந்த வருட தேர்வில் உதயகுமார் தான் இருந்தான். எதை மறந்தாலும் இதை அவன் மறப்பதில்லை. ரூபிணியோடு மொத்தம் அறுபது பேர். நூறு பேரில் நாற்பது பேர் பயிற்சி கட்டுப்பாடுகளை தாங்க முடியாமல் பாதியில் சென்று விட்டனர்.

அறுபது பேரையும் வைத்து நடத்திய போட்டியில் பத்து பேரை மட்டுமே உதயா தேர்வு செய்திருந்தான். அந்த பட்டியலில் ரூபிணியின் பெயர் இல்லை.

ரூபிணியின் பெற்றோர் அவளுக்கு கொடுத்த நேரம் ஒரு வருடம் தான். இந்த நிறுவனத்தில் நுழைவதற்கே ஆறு மாதங்கள் ஓடி விட்டது. இப்போது தேர்வாகா விட்டால் அடுத்த ஒரு வருடம் வீணாகும். இடையில் தேர்வு செய்ய வாய்ப்பே இல்லை.

ரூபிணிக்கு தன்னை மறுத்ததற்கான காரணம் வேண்டும் என்று தோன்ற கோபத்தோடு உதயாவிடமே கேள்வி கேட்டாள்.

அவன் பல காரணங்களை சொன்னாலும் நக்கலாக சொன்ன ஒரே காரணம் ரூபிணியை கோபப்படுத்தியது.

“அழகு மட்டும் மாடலிங்க்கு போதும்னு நினைச்சுட்டு.. மூளைய வீட்டுல வச்சுட்டு வந்துருக்க நீ என்னை கேள்வி கேட்காத” என்று சொல்லி விட அடுத்த நிமிடமே அங்கிருந்து வெளியேறி விட்டாள்.

அவனது நிறுவனத்தில் இருந்தும் கிளம்பியவள் பல நாட்கள் அந்த அவமானத்தில் உழன்றாள். அவளை தேற்றி அவளது பெற்றோர்களிடம் பேசி வேறு நிறுவனத்தில் அவளை சேர்த்தது அனைத்தும் அவளது சித்தி மெலினா.

ஆனால் ரூபிணிக்கு உதயாவின் மீது கோபமும் பழிவாங்கும் ஆசையும் வளர்ந்து கொண்டே போனது. அதே போல் தான் உதயகுமாருக்கும் ரூபிணியை கண்டாலே கோபம் வந்தது.

அவனது முடிவு எப்போதும் இறுதி முடிவாக இருக்கும் போது அவனிடம் கேள்வி கேட்க துணிந்தவள் அவள். அவளது முகம் அவன் மனதை விட்டு போகவே இல்லை.

ஒரு நிறுவனத்தில் அவள் வேலைக்கு சேர்ந்து அவளது படங்களை விளம்பரங்களில் பார்த்த போது கூட அவள் அவனை எதிர்த்து கேள்வி கேட்ட நாளை தான் நினைத்தான்.

சில மாதங்களில் இருவருக்கும் இடையே சொல்லப்படாத போர் ஒன்று உருவானது. எங்கு பார்த்தாலும் முட்டிக் கொண்டனர். இருவரும் ஒருவரை ஒருவர் பழிவாங்க ஆரம்பித்தனர்.

ஆனால் இருவரின் புகழும் நாளுக்கு நாள் வளரத்தான் செய்தது.

அவளை அடியோடு அழிக்க வேண்டும் என்று அவனும் அவனை உயிரோடு கொளுத்த வேண்டும் என்று அவளும் போராடிக் கொண்டிருந்தனர். இந்த சண்டை எல்லாம் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். உலகத்திற்கு தெரியாது.

உதயா இப்போது கூட கடுப்போடு தான் இருந்தான்.

“இவளும் இங்க தான் தங்கிருக்கா.. பார்ட்டில இவளும் இருப்பாளோ? ப்ச்ச்.. கெஸ்ட் லிஸ்ட்ட கவனிக்காம விட்டது தப்பா போச்சு” என்று சலித்துக் கொண்டான்.

“இன்னைக்கு மட்டும் அவ எதாவது செய்யட்டும் இந்த இன்டஸ்ட்ரிலயே இருக்க முடியாத அளவு பண்ணிடுறேன்” என்று சபதம் போட்டுக் கொண்டான்.

அதே போல் ரூபிணியும் அவனை தான் நினைத்துக் கொண்டிருந்தாள்.

“இவன்லாம் ஏன் செத்து தொலைய மாட்டேங்குறான்” என்று கோபமாக கேட்க மெலினா பெருமூச்சு விட்டார்.

“அவன பத்தி நினைக்காத.. இன்னைக்கு ஃபோட்டோ சூட் ரொம்ப முக்கியம்..”

“அவன பார்க்காத வரை நான் நல்லா தான் இருந்தேன்”

“இப்பவும் அவன பார்க்கலனே நினைச்சுக்கோ. கிளம்பு..” என்றவர் அவளை ஒரு முறை பார்த்தார்.

வேறு உடைக்கு மாறியிருந்தாள். இப்போது ஹோட்டலுக்குள்ளேயே படம் எடுக்க வேண்டும். அதற்கென தயாராகி இருந்த அறைக்குள் நுழைந்தனர்.

மற்றதை மறந்து ரூபணி வேலையை கவனித்தாள். இரண்டு மணி நேரம் பறந்து போக வேலை முடிந்தது.

“ஈவ்னிங் பார்ட்டி நீங்க போறீங்க தான?” என்று டைரக்டர் கேட்க ரூபிணி தலையாட்டினாள்.

“ஓகே.. பத்து மணிக்கு மேல சூட் வச்சுக்கலாம் தானே?”

“கண்டிப்பா.. சீக்கிரம் வந்துடுவேன்” என்று விட்டாள்.

“நான் கூட்டிட்டு வந்துடுறேன். நீங்க ரெடியா இருங்க” என்று மெலினா சொன்னதும் டைரக்டர் திருப்தியோடு சென்றார்.

பார்டிக்காக உடையலங்கரத்தை மாற்றி ரூபிணி தயாராக “அங்க என்ன நடந்தாலும் நீ உதயகுமரன் கிட்ட பேசக்கூடாது” என்றார் மெலினா.

“நானா அவன் கிட்ட போய் ஏன் பேசப்போறேன்?”

“இப்படித்தான் ஒவ்வொரு தடவையும் சொல்லுற.. ஆனா அவன் கிட்ட சண்டை போட்டுட்டு நிக்கிற”

“அவன் தான் என் கிட்ட வர்ரான்”

“அவன் பேசுனாலும் நீ பேசாம போயேன்”

“என்னோட செல்ஃப் ரெஸ்பெக்ட் எனக்கு முக்கியம். அவன் அவமானப்படுத்தும் போது நான் சும்மா போகனுமா?”

“நீ அவன கண்டுக்காம இருந்தாலே அவன் உன் கிட்ட பேச மாட்டான்.”

“நானா அவன் கிட்ட பேசுறேன்னு நினைப்பா? அவனோட ஸ்டுப்பிட் பிகேவியர் தான் பேச வைக்குது..”

ரூபிணி வெடித்துக் கொண்டிருக்க அவளது கைபேசியில் செய்திகள் வந்து விழுந்தது.

அவளுடைய காதலன் விஷாலிடம் இருந்து வந்திருந்தது. உடனே கோபம் குறைந்து போக விஷாலை அழைத்து விட்டாள்.

“எங்கடா இருக்க?”

“இப்ப தான் வொர்க் முடிஞ்சு வீட்டுக்கு போறேன்.. நீ பார்டிக்கு கிளம்பிட்டியா?”

“கிளம்பிட்டேன். நீயும் வந்துருக்கலாம்”

“என் வேலைய பத்தி தான் உனக்கு தெரியுமே?” என்றதும் ரூபிணி பெருமூச்சு விட்டாள்.

“ஐ மிஸ் யூ”

“ஐ மிஸ் யூ டூ பேபி.. சீக்கிரமா வேலைய முடிச்சுட்டு வந்துடு.. உனக்காக வெயிட் பண்ணுறேன்”

“ஓகே பை லவ் யூ” என்று விட்டு அவன் சொன்னதையும் கேட்டு விட்டு வைத்தாள்.

தொடரும்.

Click on a star to rate it!

Rating 4.4 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
9
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. உதயா ரூபிணி சூப்பர்