
அத்தியாயம் – 24
நவம்பர் முதல் வாரம்!
சென்னையில் பருவமழை முழு வீச்சில் இருந்தது. ஒவ்வொரு நாளும் மழை, காற்று மற்றும் குளிர் கலந்த வானிலை நிலவியது.
ஆரவ் மற்றும் அமுதினி அவர்களின் ஆராய்ச்சி திட்டத்தின் இறுதி கட்டத்தில் இருந்தனர். தரவு சேகரிப்பு முடிந்தது, இப்போது விரிவான பகுப்பாய்வு மற்றும் கட்டுரை எழுதும் கட்டம். அவர்களுக்கு ஒரு காலக்கெடு இருந்தது – அடுத்த மாதம் ஒரு தேசிய மாநாட்டில் வழங்க வேண்டும்.
எனவே, அவர்கள் நீண்ட நேரம் ஒன்றாக வேலை செய்தனர். தினசரி சந்திப்புகள், நீண்ட விவாதங்கள், இரவு நேர மின்னஞ்சல்கள். தொழில்முறை உறவு மிகவும் வலுவாக இருந்தது.
ஆனால், உள்ளுக்குள், பதற்றம் இருந்தது. சொல்லப்படாத உணர்வுகள். அவர்கள் இருவருமே அதை உணர்ந்தார்கள். ஆனால், யாருமே அதனை ஒப்புக்கொள்ளவில்லை.
*******
ஒரு வெள்ளிக்கிழமை மாலை, கனமழை பெய்து கொண்டிருந்தது. கல்லூரி வளாகம் பெரும்பாலும் காலியாக இருந்தது – வாரம் முடிந்துவிட்டது, மாணவர்களும் ஆசிரியர்களும் வீட்டிற்குச் சென்றிருந்தார்கள்.
ஆனால், ஆரவின் அறையில், விளக்குகள் எரிந்துக் கொண்டிருந்தது. அமுதினியும் ஆரவும் அமர்ந்து தங்களது மடிக்கணினியில் வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்கள், தங்களது கட்டுரையின் விவாதப் பகுதியை எழுதிக் கொண்டிருந்தனர்.
“சார், இந்த பத்தியில் உள்ள தகவல்களை கொஞ்சம் எக்ஸ்பேன்ட் பண்ணலாம்… மருத்துவ பயன்பாடுகளை கொஞ்சம் விரிவா எழுதலாம்,” என்று அமுதினி சொன்னாள்.
ஆரவும் அவளது திரையைப் பார்த்து, “குட் பாயிண்ட்… நீ டைப் பண்ணு, நான் பார்க்கிறேன்….”
அவர்கள் வேலையைத் தொடர்ந்தனர். வெளியே மழை பெய்து கொண்டிருந்தது. இடி, மின்னல் சத்தங்கள். ஆனால் உள்ளே, மயான அமைதி. தட்டச்சு சத்தங்கள், அவ்வப்போது ஏதேனும் சந்தேகத்தைத் தீர்க்கும் உரையாடல்.
இரண்டு மணி நேரம் கடந்துவிட்டது. மாலை 7 மணி ஆகிவிட்டிருந்தது. அமுதினி சோர்வாக கைகளை நீட்டிக் கொண்டிருந்தாள்.
“சார், இன்னைக்கு நல்லா ப்ராகிரஸ் ஆச்சு… நாம கிளம்பலாமா?”
ஆரவ் ஜன்னல் வழியாகப் பார்த்தாள். மழை இன்னும் பலமாகப் பெய்து கொண்டிருந்தது.
“இந்த மழையில் நீ எப்படி போவ? வண்டியில வந்தீயா?”
“இல்ல சார்… நான் பஸ்ல தான் வந்தேன்… ஆனா பரவாயில்ல, நான் ஆட்டோ பிடிச்சுக்குறேன்.”
“இந்த மழையில் ஆட்டோ கிடைக்காது அமுதினி… சரி வா… நானே உன்னை ட்ராப் பண்றேன்…”
அமுதினி தயங்கி, “சார், வேண்டாம். நீங்க எதுக்கு கஷ்டம்… நான்—”
“அமுதினி, ஆர்கியூ பண்ணாதே… இந்த மழையில் நீ தனியா போக நான் அனுமதிக்க மாட்டேன்… மொதல்ல கிளம்பு…” என்று உறுதியாக சொல்லிவிட்டான் ஆரவ்.
அமுதினிக்கு வேறு வழியில்லை. அவள் தன் பொருட்களை பேக் செய்தாள். அவர்கள் கேபினை விட்டு வெளியேறி, உளவியல் துறையின் கதவுகளைப் பூட்டினர்.
ஆரவின் கார் வளாகத்தின் வாகன நிறுத்துமிடத்தில் இருந்தது. மழையில் நனையாமல் காரை நோக்கி ஓடினாலும், கொஞ்சம் நனைந்துப் போனார்கள்.
காருக்குள் சென்று அமர்ந்ததும், இருவருக்கும் கொஞ்சம் மூச்சு வாங்கியது. அமுதினியின் தலைமுடி கொஞ்சம் ஈரமாக இருந்தது, அவள் முகத்தில் அங்கங்கே மழைத்துளிகள்.
அமுதினி அப்போது அழகாக இருந்தாள், ஈரமான முடி, சிவத்திருந்த கன்னங்கள், குளிரில் நடுங்கும் இதழ்கள் என்று ஆரவ் அவளேயே வெறித்துப் பார்த்தான். அவனது பார்வையில் இன்னும் வெட்கிப்போய் முகம் சிவந்தாள்.
அவன் காரை வேகமாகத் திரும்பி, ஏசியை ஆன் செய்தான்.
“நீ அட்ரஸ் சொல்லு… நான் ட்ராப் பண்றேன்…” என்று அவன் சொல்லவும்,
“என்ன அட்ரஸா? அன்னைக்கு மட்டும் நீங்களா வந்தீங்க…” என்று ஜன்னலைப் பார்த்தே கேட்டாள்.
“அட! ஆமால… ஓகே நானே போறேன்…” என்று குறுஞ்சிரிப்புடன் சொல்லி புறப்பட்டான்.
மழை இன்னும் பலமாகவே இருந்தது. சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. போக்குவரத்து மெதுவாக இருந்தது. அவன் காரை மெதுவாக ஓட்டிச் சென்றனர்.
காருக்குள், இருவருமே பேசவில்லை! கொஞ்சம் அவஸ்தையாக இருந்தது, அதேசமயம் மகிழ்ச்சியாகவும் இருந்தது. வானொலியில் ஒரு மென்மையான தமிழ் மெல்லிசை ஒலித்துக் கொண்டிருந்தது. ஏ.ஆர். ரஹ்மானின் பழைய காதல் பாடல்.
அமுதினி வேண்டுமென்றே அவனைத் தவிர்த்து, ஜன்னல் வழியாக, மழையைப் பார்த்தாள். அவள் மனம் கொந்தளித்து, இதயம் இரட்டிப்பாக துடித்துக்கொண்டிருந்தது.
‘நான் அவருக்கு ரொம்ப பக்கத்துல இருக்கேன்… அவரோட வாசனை, அவரோட ப்ரெசன்ஸ் – எல்லாம் என்னை மூழ்கடிக்குது… என் இதயம் அவர் பக்கத்துல இருக்கவும் சொல் பேச்சு கேட்காம வேகமாக துடிக்குதே…’ என்று தனக்குள் புலம்பினாள் பெண்.
ஆரவ் கவனம் செலுத்தி ஓட்டினான் ஆனால், அவனுடைய முழு மனதும் அமுதினியிடமே இருந்தது. அவளது அருகாமை, அவளது சுவாசம், அவளது இருப்பு, அவளது வெட்கம், அவளது அமைதி என்று அனைத்தும் அவனை வெகுவாய் பாதித்தன.
திடீரென்று, கார் குலுங்கியது. ஆரவ் சடன் பிரேக் போட்டு நின்றது. சாலையில் ஆங்காங்கே பள்ளத்தில் நீர் தேங்கியிருந்தது. அதனால், இன்னும் கவனமாகப் பார்த்து மெதுவாகவே சென்றான்.
அதில் பயந்து ஆரவை பார்க்க, “ஒன்னுமில்ல அமுதினி… ரோட் மோசமா இருக்கு… அதான்… மெதுவா போயிட்டு இருக்கேன்…” என்று ஆறுதல் சொல்ல,
“பரவாயில்ல சார். நீங்க மெதுவாவே போங்க…” என்று விட்டாள்.
அவன் மீண்டும் அமைதியாக வண்டியை ஓட்டினர். பாடல் தொடர்ந்தது – ஒரு பெண்ணின் காதலை வலியுடன் சொல்லும் பாடலொன்று வந்தது. அதன் வரிகள் காதல், வலி, ஏக்கம் பற்றிப் பேசின.
பாடல் வரிகள் அமுதினியுடன் எதிரொலித்தன. அவை அவளுடைய சொந்த உணர்வுகளைப் பிரதிபலித்தன. அவள் கண்களை மூடிக்கொண்டு பாடலைக் கேட்டாள்.
“உன்னை பார்த்ததும் அந்நாளிலே
காதல் நெஞ்சில் வரவே இல்லை…
எதிர்காற்றிலே குடை போலவே
சாய்ந்தேன் இன்று எழவே இல்லை…
இரவில் உறக்கம் இல்லை…
பகலில் வெளிச்சம் இல்லை…
காதலில் கரைவதும் ஒரு சுகம்…
எதற்கு பார்த்தேன் என்று…
இன்று புரிந்தேனடா…
என்னை நீ ஏற்றுக்கொள் முழுவதும்…”
என்ற வரிகள் வந்ததும் அமுதினியின் கண்களில் தானாகவே கண்ணீர் துளிகள் வந்தன. அவள் அவற்றை மறைக்க முயன்றாள், ஆனால் ஒரு துளி கன்னத்தில் வழிந்தது.
ஆரவ் பக்கவாட்டில் பார்த்து அவளைக் கவனித்தான். அவள் கண்ணீரைக் கண்டதும் பதற்றமடைந்து, “அமுதினி, நீ அழுறியா? என்னாச்சு?” என்று கேட்க,
“ஒன்னும் இல்ல சார்… பாட்டு… கொஞ்சம் எமோஷனலா இருக்கு…” என்று சமாளித்தாள்.
ஆரவ் ரேடியோவை அணைத்துவிட்டு, காரை சாலையோரத்தில் கவனமாக நிறுத்தியதும், அவளது வதனத்தை நோக்கித் திரும்பினான்.
“அமுதினி… என்ன ப்ராப்ளம்? என்கூட வந்தது பிடிக்கலையா? ரீசன் சொல்லு?”
“அப்படியெல்லாம் எதுவும் இல்ல சார்… கொஞ்சம் டையர்ட், அவ்வளவு தான்…”
“பொய் சொல்லாதே… நான் உன்னை இவ்வளவு நாளா பார்த்துட்டு இருக்கேன்… எனக்கு தெரியாதா… ஏதோ உன் மனசை போட்டு அழுத்திட்டு இருக்கு… அது என்ன?” என்று அக்கறையுடன் வினவினான்.
அமுதினி ஆரவ் கிருஷ்ணா மட்டுமே பார்த்தாள். அவனுடைய கவலையான கண்கள், அவனுடைய அக்கறையான முகபாவனை. அவளால் இனியும் அதைத் தாங்க முடியவில்லை. அவளுடைய உணர்ச்சிகள் பொங்கி வழிந்தன.
“சார், நான்… நான் இதை சொல்லக்கூடாது… இது ரொம்ப தப்புன்னு புரியுது… ஆனா, என்னால இனி சொல்ல மறைக்க முடியும்னு தோணல…” என்று திக்கித்திணறிச் சொல்ல,
“என்ன என்கிட்ட இருந்த மறைச்ச அமுதினி?” என்றான் குழப்பமாக!
அமுதினி ஆழ்ந்த மூச்சை எடுக்க, அவளது கைகள் நடுங்க, “சார், நான்… நான் உங்களை… நான் உங்களை காதலிக்கிறேன்…” என்று தைரியமாக சொல்லிவிட்டாள்.
அதில் ஆரவுக்கு தான் அதிர்ச்சியானது. அவனுக்கு உலகமே ஸ்தம்பித்தது போலொரு தோற்றம்.
அழுதுக்கொண்டே அமுதினி தொடர்ந்து பேசினாள்.
“நான் உங்களை ரொம்பவும் காதலிக்கிறேன் சார்… நான் எப்போ இருந்து லவ் பண்ணேன்னு தெரியல… ஆனா, நீங்க என் மனசுக்குள்ள ஆழமா எப்பவோ வந்துட்டீங்க… நீங்க என்னை ஹர்ட் பண்ணினப்போவும், நீங்க என்னை வேணாம்னு சொன்னபோதும், நான் உங்களை வெறுக்க முயற்சி செஞ்சேன்… ஆனா, என்னால முடியல… நீங்க உங்க கடந்தகாலத்தை பத்தி, உங்க மனசுல இருந்த வலியைப் பத்தி சொன்னப்ப, நான் இன்னும் லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன்… நீங்க இப்ப தெரபிக்கு போறீங்க, அது மூலமா உங்களை கொஞ்சம் கொஞ்சமா சேன்ஜ் ட்ரை பண்ணிட்டு இருக்கீங்க… அதை பார்க்கும்போது, நான் உங்களை மேலும் அட்மைர் பண்றேன், நிறைய நிறைய காதலிக்க தோணுது…” என்று அவளது மனசை திறந்தாள்.
ஆரவ் பேச்சற்று அவளை மட்டுமே வெறித்துப் பார்த்தான்.
அவளால் கட்டுப்படுத்த முடியாத கண்ணீருடன் மேலும்,
“நான் இதை சொல்லக்கூடாது… ரொம்ப தப்பு… எல்லாமே எனக்கு புரியுது… நாம மெண்டர்-ஸ்டூடண்ட்… நமக்குள்ள புரொபஷனல் பவுண்டரிஸ் இருக்கு… நீங்க என்னை அப்படி ஃபீல் பண்ண மாட்டீங்க… அப்படி ஒரு கோணத்தில் என்னை நினைக்கவே மாட்டீங்க… ஆனா, என்னால இனி மறைக்க முடியல சார்… ஒவ்வொரு நாளும் உங்களை பார்க்கும்போது, உங்கள் கூட வொர்க் பண்ணும்போது, என் இதயம் சுக்குநூறா உடைஞ்சு போகுது. ஏன்னா, என்னோட காதலுக்கு மதிப்பில்லன்னு எனக்கு தெரியும்- நீங்க என்னை அப்படி பார்க்க மாட்டீங்க… ஆனால் நான்… நான் உங்களை மட்டும்தான் லவ் பண்றேன் சார்… ஐம் சாரி சார்… ஐம் சோ சாரி சார்…” என்று கையெடுத்து கும்பிட்டாள் பாவை.
அவள் முகத்தை கைகளில் மறைத்துக்கொண்டு தேம்பித்தேம்பி அழுதாள்.
ஆரவ் உறைந்து போனான். அவன் மனம் குழப்பத்தில் இருந்தது. அமுதினி அவனை காதலித்தாளா? அவள் அவனை காதலித்தாளா? என்று நம்ப இயலாமல் தனக்குள் வெவ்வேறு விதமாக கேட்டுக்கொண்டான்.
அவனும் அவளை காதலித்தான். அதை ஒப்புக்கொள்ள மட்டுமே பயந்தான் என்பதே உண்மை. அவனும் அவளை ஆழமாய் உயிருக்கு உயிராக காதலித்தான் என்பதை உணர்ந்திருந்தான்.
ஆனால், அவன் குழப்பத்தில் இருந்தான். கடந்த காலத்தின் பயமும், நிகழ்காலத்தின் காதலும் அவன் மனதை பாடாய்ப் படுத்தியது.
‘நான் ரெடியா இருக்கேனா? நான் அவளை டிசர்வ் பண்றேனா? நான் அவளுக்கு நல்ல பார்ட்னரா இருப்பேனா? அவளை கஷ்டப்படுத்தாம காதலையும் சந்தோஷத்தையும் மட்டுமே குடுப்பேனா?’ என்று அவனையே கேள்வி கேட்டான்.
பின்னர், திடமான ஒரு முடிவினை எடுத்து, மெதுவாக, அமுதினியின் கைகளை தொட்டு, “அமுதினி…” என்று மிகவும் மென்மையான வந்தன.
அமுதினியோ கண்ணீர் வழிந்த முகத்துடன், அழுது சிவந்த கண்களுடன் மேலே நிமிர்ந்து, பயத்துடனும் நடுங்கத்துடனும் தன்னவனைப் பார்த்தாள்.
ஆரவ் அவளது கண்களை நேருக்கு நேராக பார்த்து, “அமுதினி, நான்… நானும் உன்னைதான் லவ் பண்றேன்… ” என்று தைரியத்துடன் சொன்னான்.
அமுதினிக்கு அதிர்ந்து, “என்ன?”
“நானும் உன்னை காதலிச்சிட்டு தானே இருக்கேன் அமுதினி. நான் எப்போ ரியலைஸ் பண்ணேன்னு தெரியல… ஆனா, நான் உன்னை லவ் பண்றேன்னு புரிஞ்சிக்கிட்டேன்… நீ என்னோட இல்லாதப்போ, நான் உன்னை மிஸ் பண்றேன்… நீ இன்னொருத்தருடன் பேசினா, எனக்கு ஜெலஸ்-ஆ feel ஆகுது… நீ சிரிக்கும்போது, என் மனசுக்கு இதமாவும்… நீ அழுகும் போது, என் மனசுக்கு வலியாவும் இருக்கு… நான்… நான் உன்னை காதலிக்கிறேன்… இனியும் காதலிச்சிட்டு இருப்பேன் அமுதினி… இட்ஸ் அ ப்ராமிஸ்…” என்று குறுஞ்சிரிப்புடன் கூறினான்.
அமுதினியால் நம்பவே முடியவில்லை. அவளுடைய வலி நிறைந்த கண்ணீர் இப்போது ஆனந்தக் கண்ணீராக மாறியது.
“உண்மையாவா சார்?”
“ஆமா… உண்மை. நான் அமுதினியை மட்டும்தான் லவ் பண்றேன்…”
அமுதினியோ அழுதுகொண்டே சிரித்தாள், “நானும் உங்களை மட்டும்தான் லவ் பண்றேன் சார்…” என்றாள்.
வெளியே உலகம் கரைந்து போகும் அளவிற்குப் பேய் மழை பெய்துகொண்டிருந்தது.
ஆனால், காருக்குள் மெல்லிய இருளும், ஏசியின் இதமான குளிரும், இருவரின் சூடான மூச்சுக்காற்றும் கலந்து ஒரு தனி உலகம் உருவாகியிருந்தது. அந்த அமைதியான நொடியில், அமுதினியும் ஆரவும் ஒருவரையொருவர் பார்த்தார்கள். அது ஒரு சாதாரணப் பார்வை அல்ல. வார்த்தைகள் இன்றி உள்ளத்தின் ஆழத்தில் இருந்து பேசிக்கொள்ளும் பார்வை.
ஆரவின் கண்கள் அமுதினியின் விழிகளுக்குள் நுழைந்து அவளது ஆன்மாவைத் தேடியது. அதில் தெரிந்த காதல், உரிமை, ஏக்கம் அனைத்தும் அவளை ஒரு நொடி சிலையாக்கின. அமுதினியின் இதயத் துடிப்பு அவளுக்கு மட்டுமே கேட்கும் அளவிற்கு எகிறியது. அவனது பார்வையின் தீட்சண்யம் அவளைச் சுட்டெரித்தது, அதேசமயம், ஒரு பாதுகாப்பு உணர்வையும் கொடுத்தது.
ஆரவ் அவளது கையை இறுக்கமாக பிடித்து, “ஆனா, அமுதினி, நாம இப்போ ஒன்னா இருக்க முடியாது…”
அமுதினியின் புன்னகை மறைந்து, “ஏன் சார்?” என்று கேட்க,
“நீ இன்னும் என்னோட ஸ்டூடண்ட் தான்… உன் ஸ்டடிஸ் முடிக்கணும்… உன் தீஸிஸ் கம்ப்ளீட் பண்ணணும்… உன் கேரியர் எஸ்டேப்லிஷ் பண்ணணும்… நான் உன் மெண்டர்… நம்மோட ரிலேஷன்ஷிப், அது உன்னை டிஸ்ராக்ட் பண்ணும்… உன் படிப்பை பாதிக்கும்… நான் அதை விரும்பல மா..”
“ஆனா, சார்..” என்று அவள் இழுக்க,
“அமுதினி, லிசன்… நான் உன்னை லவ் பண்றேன்… அது உண்மை… ஆனா, நான் உன் ஃபியூச்சரை காம்ப்ரமைஸ் பண்ண விரும்பல… நீ புத்திசாலி… ரொம்ப டேலண்டட்… உனக்கு அற்புதமான கேரியர் இருக்கு… நான் உன் மனசை குழப்ப விரும்பல… நாம கொஞ்ச நாள் காத்திருப்போம்… உன் படிப்பு முடிஞ்சதும், உன் தீஸிஸ் சப்மிட் ஆனதும், நம்ம காதலை எல்லாருக்கும் சொல்லிக்கலாம்…” என்று தெள்ளத்தெளிவாக சொல்லிவிட்டான் ஆரவ்.
அமுதினி வருத்தமாக, “சார், என் படிப்பு முடிய இன்னும் ஆறு மாசம் இருக்கு… அந்த ஆறு மாசமும் நான் வெயிட் பண்ணணுமா?”
“ஆமா அமுதினி… உனக்காகவும் எனக்காகவும் வெயிட் பண்ணித்தான் ஆகணும்… நான் இன்னும் தெரபியில் இருக்கேன்… என் ட்ராமாவை ப்ராசஸ் பண்ணிட்டு இருக்கேன்… எனக்கும் டைம் தேவை… இந்த ஆறு மாசம் நம்ம இருவருக்குமே நல்லது… நாம மனசால, நம்மோட ஆரோக்கியமான உறவுக்கு தயார் படுத்திக்கலாம்…”
அமுதினி புரிந்துகொண்டாள். அவன் சொல்வது சரி தான். ஆனால், ஏற்பதற்கு மனம் வலித்தது.
“சார், நான் உங்களை லவ் பண்றேன்னு தெரிஞ்சும், நாம ஒன்றா இருக்க முடியாதுன்னு தெரிஞ்சும்? இந்த ஆறு மாசம் நான் எப்படி மேனேஜ் பண்றது?”
ஆரவ் அவளது இரு கன்னத்தையும் மென்மையாக தொட்டு, “நாம புரொபஷனலா, நண்பர்களா இருப்போம்… நம்மளோட காதலை வெளிப்படையா சொல்லிக்கிட்டோம்… அதுவே போதும்… இப்போதைக்கு, ஆறு மாசம் கழிச்சு, எப்போதும் போலவே இருப்போம்… ட்ரஸ்ட் மீ அமுதினி…”
அமுதினி சரியென்று தலையசைத்து, “நான் ட்ரஸ்ட் பண்றேன் சார்… உங்களுக்காக எவ்வளவு காலமானலும் வெயிட் பண்றேன்…” என்றாள் மகிழ்ச்சியுடன்!
ஆரவ் அவளைக் மென்மையாக அணைக்க, அமுதினியும் அவனது தோளில் சாய்ந்துக்கொண்டாள். அவர்கள், எதுவும் பேசாமல் அந்த நிமிடத்தை ரசித்து, அப்படியே இருந்தார்கள்.
பிறகு, ஆரவ் மெதுவாக விலகி, “டைம் ஆச்சு நாம கிளம்பலாம் அமுதினி… உன்னை வீட்டுல ட்ராப் பண்ணனும்…” என்கவும் அமுதினி தலையாட்டினாள்.
அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். இந்த முறை, அமைதி வேறுபட்டது. அது வேதனையாக இருந்தது, ஆனால், சந்தோஷத்துடனும் நம்பிக்கையுடனும் இருந்தது. அவர்கள் ஒருவரையொருவர் நேசித்தார்கள். அவர்களுக்கு அது தெரியும். ஆனால், அவர்கள் சரியான நேரத்திற்காக காத்திருக்க வேண்டியிருந்தது.
ஆரவ், அமுதினியின் வீட்டிற்கு முன்னால் காரை நிறுத்தினான்.
அவள் வெளியேறுவதற்கு முன், “சார், எல்லாத்துக்கும் தாங்க்ஸ்… உங்களுக்காக நான் எப்பவும் வெயிட் பண்ணிட்டு இருப்பேன்…”
ஆரவும் சிரித்து, “நானும் வெயிட் பண்றேன் அமுதினி…”
அமுதினி மழையில் வேகமாக தன் வீட்டிற்கு ஓடினாள். வீட்டினுள்ளே செல்லும் வரை பார்த்துவிட்டு ஆரவும் கிளம்பிவிட்டான்.
அவன் மனம் அமைதியற்ற நிலையில் இருந்தது. அவன் அமுதினியை நேசிக்கிறான். அவளும் அவனை நேசிக்கிறாள். ஆனால் அவர்கள் காத்திருக்க வேண்டும். அது கடினமாக இருந்தாலும் பரவாயில்லை. அவர்கள் இருவருக்கும் நேரம் தேவை.
ஆனால், இந்த ஆறு மாதங்கள் எப்படி இருக்கும்? அவர்கள் எப்படி சமாளிப்பார்கள்? அவர்கள் ஒருவரையொருவர் நேசிக்கிறார்கள் என்று தெரிந்தும், ஒன்றாக இருக்க முடியுமா?
அதற்கு காலம் மட்டுமே பதில் சொல்லும். ஆனால் ஒன்று நிச்சயம் – அவர்களின் காதல் உண்மையானது. அது ஆழமானது. அதற்காகக் காத்திருப்பு என்பது வேண்டிய ஒன்றுதான்!
*******
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
12
+1
1
+1
