Loading

அடுத்த நாள் எழுந்த வாசு தன்னை அணைத்து கொண்டு குழந்தை போல் உறங்கும் தன்னவளை கண் இமைக்காமல் பார்த்து கொண்டு இருந்தான்எங்கு அவள் தன்னை விட்டு சென்று விடுவாளோ என்று இறுக்கி தன்னக்குள் வைத்து கொண்டான்அந்த இறுக்கத்தில் கண் விழித்த சைந்தவிமாமா வலிக்குது..” என்று கூறியவள் அவன் கண்ணை பார்த்து அவன் நினைப்பதை புரிந்து கொண்ட சைந்தவிமாமா நான் உன்னை விட்டு எங்கையும் போக மாட்டேன்….. லூசு மாதிரி பண்ணிட்டேன்இனிமே அப்படி பண்ண மாட்டேன்…” என்று அவன் தலையை கோதி கூறினாள்

அவன் எதுவும் கூறாமல் அவளை அணைத்தவாறே இருக்கமாமா எந்திரிங்க விடிஞ்சு போச்சு…. அங்க தலைவர் வீட்டுக்கு போகலாம்எல்லாருமே என்ன பண்றாங்க தெரியலஅவங்களுக்கு இங்க யாருமே தெரியாதுஅப்பாவோட புது வேட்டி இருக்குஅதை கட்டிக்கோங்கநைட்டே உங்க ஷர்ட் நான் அலசி போட்டுட்டேன்குளிச்சிட்டு அதை போட்டுக்கோங்கநான் உங்களுக்கு சூடு தண்ணி வைக்குறேன்என்று கூறினாள்

அடுத்த அரை மணி நேரத்தில் இருவரும் குளித்து விட்டு தலைவர் வீட்டிற்கு சென்றனர்அங்கு அனைவரும் எழுந்து இருக்க திலீப் திவ்யா இருவர் மட்டும் இன்னும் எழவில்லைஅவர்களின் மகன் புது இடம் என்பதால் உறங்க நேரமானதால் இருவரும் எழவில்லை

மற்றவர்கள் எழுந்து இருக்க சக்ரவர்த்தி தான் குரு எப்படி இங்கு வந்தார் என கேட்டார்அவரும் கூறினார்வசந்தியிடம் சண்டையிட்டு கொண்டு வீட்டை விட்டு வந்தவர் தன் நண்பனின் உதவியால் கேரளாவிற்கு வந்தார்அங்கு இருந்த போது இந்த கிராமத்தை பற்றி அறிந்து இங்க செல்ல ஆசைப்பட்டார்முதலில் அவர்கள் விடவில்லைபின் ஒத்துக்கொண்டனர்

மெது மெதுவாக இங்கு இருக்கும் மக்களின் வாழ்க்கையை மாற்றினார்அவர்களின் முறையை மாற்றவில்லைஅவர்களின் தொழில் கல்வி என அனைத்தையும் மாற்றினார்…. அவர் வருவதற்கு முன்பு இரண்டு மொணன்று மட்டுமே படிக்கச் செல்வர்ஆனால் குரு வந்த பின் படிக்க ஆசை பட்ட அனைவரும் படிக்கச் சென்றனர்அவர்கள் தொழிலும் வளர்ந்தது.. அனைத்தையும் கூறி முடித்தார்..

அனைவரும் காலை உணவை முடித்து விட்டு ஊருக்கு கிளம்பலாம் என கூற சைந்தவிக்கு கண் கலங்க ஆரம்பித்துவிட்டதுமீண்டும் குருவிடம் இருந்து பிரிய வேண்டும் என்ற நினைப்பே அவளுக்கு அழுகையை தந்தது.. ஆனால் அவளால் இங்கேயே இருக்க முடியாதே.. ஏற்கனவே அவள் இல்லாத இரண்டு வருடம் வாசு எப்படி இருந்தானோ என்று தெரியவில்லைஇப்போது கண்டிப்பாக அவள் இல்லாமல் இருக்க மாட்டான்அங்கு தொழிலை விட்டு விட்டு இங்கு இருக்கவும் முடியாதுஎனவே அவள் சரி என்று கூறும் போது அப்பா இங்க நல்லா இருக்கு.. ஒரே ரெண்டு நாள் இங்க இருந்துட்டு வரோம் நாங்கஎன்று கூறினான்

அவர்களும் சரி என்று கூறி விட்டு மலையை விட்டு கீழ் இறங்கினர்… டவுனுக்கு வந்தது அவளிடம் பிரியா விடை பெற்று சீக்கிரம் ஊருக்கு வர வேண்டும் என கூறிவிட்டு குருவிடமும் அடிக்கடி அங்கு வர வேண்டும் என கூறிவிட்டு வீட்டினர் கிளம்பினர்சைந்தவி மட்டும் திவ்யாவை ஏக்கமாக பார்த்தாள்திவ்யா இன்னும் அவளிடம் பேசவேயில்லை….

மீண்டும் கிராமத்திற்கு சென்றவர்கள் மதிய உணவை உண்டு விட்டு சுற்றி பார்க்க சென்றனர்…. சைந்தவியும் வாசுவும் கையை கோர்த்து கொண்டு நீண்ட தூரம் சென்றனர்பின் நேரம் ஆனதால் மீண்டும் கிராமத்திற்கு வந்து இருந்தனர்குரு பாப்பா நீயும் மாப்பிள்ளையும் இங்க இருங்கநான் அங்க தலைவர் வீட்டுக்கு போறேன்என்று கூறி கிளம்பிவிட்டார்

அவர்கள் சுற்றி பார்த்து விட்டு ஆறு மணிக்கு மேல் வர இரவு உணவை தயாரிக்க வாசுவின் பார்வை அவளை தான் துரத்தியதுஅவளுக்கு அது ஒரு மாதிரி இருந்ததுஅவனின் பார்வையின் மாற்றம் அவளுக்கு கூச்சத்தை கொடுத்ததுஇதற்கு அவன் அவள் அருகில் வர கூட இல்லை.. அதற்கே அவள் கன்னம் எல்லாம் சிவந்துவிட்டது

இரவு உணவு மௌனமாக செல்ல சைந்தவி புடவையை மாற்றி வர தடுப்புக்கு சென்றாள்அதை தடுத்த வாசு அவளை அப்படியே தன்னக்குள் கொண்டு வந்துவிட்டான்இருவரும் தங்கள் வாழ்க்கையை நல்லபடியாக ஆரம்பித்தனர்

இரண்டு நாள் ஊர் மக்களிடம் பேசி குருவிடம் நேரம் செலவழித்து விட்டு பிரிய மனமில்லாமல் விடைபெற்று சென்றாள்.. குருவிடம் அப்பா நான் அடிக்கடி வருவேன்.. நீங்களும் கண்டிப்பா திருச்சி வரணும் ப்பா.. இப்பயே கூப்பிட்டேன்ஆனா நீங்க வரவே இல்லைகண்டிப்பா நீங்க வரணும் என்று கண்டிப்பாக கூறி விடைபெற்றாள்அவர்களின் பயணம் திருச்சி நோக்கி சென்றது

காலை உணவு முடித்து விட்டு கிளம்பியதால் திருச்சி சென்று சேர மாலை ஆகி இருந்ததுமுதலில் அவளை வாசுவுடன் நிற்க வைத்து ஆரத்தி எடுத்து தான் உள்ளே அழைத்து சென்றார் இளவரசிஅவளின் முகத்தில் இருக்கும் புது பொழிவே இருவரும் வாழ ஆரம்பித்து விட்டனர் என்று அனைவருக்கும் உணர்த்தியது….

நடந்ததை பற்றி எதுவும் யாரும் பேசவில்லைதிவ்யா மட்டும் எதுவும் கூறாமல் வாசுவின் வீட்டில் அருகில் இருக்கும் தன் வீட்டிற்கு சென்று விட்டாள்.. ஆம் அவர்கள் வீடு தான் அனைவரும் வாசுவின் வீட்டிலே தங்க கூற இருவரும் மறுத்து வேறு வீட்டிற்கு சென்றனர்..வாசு சைந்தவி சென்ற துக்கத்திலும் அவர்கள் தனியாக இருக்க கூடாது என எண்ணி தங்கள் வீடு பக்கத்தில் உள்ள வீட்டை அவர்கள் மகனின் பெயரில் பதிவு செய்து கொடுத்து விட்டான்திவ்யா கர்ப்பமாக இருக்கும் போது வாசுவின் வீட்டில் தான் இருந்தாள்.. இளவரசி தனியாக விட மாட்டேன் என்று கூறிவிட்டார்

ஆனால் குழந்தை பிறந்ததும் வேறு வீட்டிற்கு செல்கிறேன் என்று கூறியவர்களை வாசு சாவியை நீட்டினான்அவனிடம் எதுவும் கூறாமல் வாங்கி கொண்டார்கள்என்ன தான் அவர்கள் தனியாக இருந்தாலும் அதிகளவு வாசுவின் வீட்டில் தான் இருப்பர்….

தற்போது கோவத்தோடு திவ்யா அங்கு சென்று விட சைந்தவி தயங்கி தயங்கி எழுந்து நின்று வாசுவை பார்த்தாள்.. அவன் போ என்று தலையசைத்ததும் அவள் பின்னே வேகமாக சென்றாள்

முதலில் சைந்தவி பேசிய போது பேசாமல் இருந்த திவ்யா அவள் கண் கலங்கவும் அவளை அறைந்து விட்டு அவளை அணைத்து கொண்டு அழுக ஆரம்பித்துவிட்டாள்சைந்தவியும் அழுக இருவரும் தங்கள் சோகம் தீரும் வரை அழுது சமாதானம் அடைந்தனர்இருவரும் சிரித்து கொண்டே வீட்டிற்கு வருவதை பார்த்த பின்னர் தான் வீட்டினர் சந்தோசம் கொண்டனர்

சைந்தவியின் கண்கள் கோகிலாவிடம் இருந்த குழந்தையின் மேல் பட திவ்யா அவரிடம் இருந்து வாங்கி சைந்தவியிடம் கொடுத்தாள்சைந்தவி ஆசையாக கொஞ்சி கொண்டே பெயர் என்னவென்று கேட்க திவ்யா திலீப் இருவரும் ஒரே குரலில்ஜீவ சைதன்யாஎன்று கூறினர்…. ஜீவ சைதன்யா இரு பெயரும் அவர்கள் நண்பர்களை குறிப்பதுஜீவ என்பது திலீப் வாசுவை ஜிவி என்பதில் இருந்து எடுத்ததுசைதன்யா என்பது சைந்தவியில் இருந்து எடுத்துஅந்த பெயரை கூறும் போதே திலீப் திவ்யாவின் குரலில் தன் நண்பர்கள் மேல் வைத்து இருந்த நட்பு அனைவர்க்கும் புரிந்தது

நாட்கள் யாருக்கும் காத்திராமல் சென்றதுஇங்கு வந்து இரண்டு மாதங்கள் மேல் ஆகியும் சைந்தவி அவள் அம்மா அக்கா பற்றி கேட்கவில்லைஇந்த இரண்டு மாதத்தில் மூன்று முறை திருச்சி வந்து சென்றுவிட்டார் குரு.. அவரும் அவர்களை பற்றி கேட்கவில்லை..

அன்று சைந்தவியின் பிறந்தநாள் குருவும் வந்து இருக்க காலையே அனைவரும் கோவிலுக்கு சென்று வழிபட்டு விட்டு அமர்ந்து இருந்தனர்.. வாசு அனைவரையும் அழைத்து காரில் அமர சொன்னவன் காரை ஓட்டும் கவின் திலீப்பிடம் மட்டும் எங்கு வர வேண்டும் என கூறிவிட்டு வாசு சைந்தவியுடன் காரை செலுத்தினான்அங்கு சென்ற பின்னும் எதற்கு அழைத்து வந்தான் என யாருக்கும் தெரியவில்லைகடைசி நேரத்தில் தான் கூறினான்அனைவரும் சந்தோசமாக சரி என்று கூற சைந்தவி அவனை தான் ஆசையாக பார்த்து கொண்டு இருந்தாள்..

அம்மு வா என்று கூறி கையை நீட்ட கூறினான்அவளும் ஆசையுடன் கையை நீட்ட அவனும் அவளுடன் கை வைத்து கொண்டான்இருவரும் நீட்டிய கையில் ஒருவர் ஒரு மாத பெண் குழந்தையை அவர்கள் கையில் வைத்தார்சைந்தவியின் கண்கள் கலங்க ஆரம்பித்தது..

ஆம் வாசு அவர்களை அழைத்து வந்தது ஒரு ஆசிரமத்திற்குஅங்கு பிறந்த ஒரு மாதமே ஆன பெண் குழந்தையை தத்து எடுக்க தான் அனைவரையும் அழைத்து வந்தான்அனைவர்க்கும் அளவில்லா சந்தோசம்

அங்கேயே சைந்தவியின் பிறந்தநாளை கொண்டாடி விட்டு தங்கள் குட்டி தேவதையை அழைத்து கொண்டு வீட்டிற்கு வந்தனர்இளவரசி கோகிலா காதம்பரி மூவரும் வாசு சைந்தவி குழந்தையை நிற்க வைத்து ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து சென்றனர்

குழந்தைக்கு நாளை பெயர் வைக்கும் விழாகுடும்பத்தினர் மட்டுமே இருந்தனர்வாசுவும் சைந்தவியும் பாப்பாவிற்கு துணி எடுக்க கடைக்கு சென்று விட்டு பார்க்கில் அமர்ந்து பேசி கொண்டு இருந்தனர்இல்லை சண்டையிட்டு கொண்டு இருந்தனர்..

வாசு தான் சண்டையிட்டு கொண்டு இருந்தான்.. “அம்மு நீ பாப்பா வந்ததும் என்னை கண்டுக்கவே மாட்டிங்குற.. போ உன் மேல கோவமா இருக்கேன்என்று கோவமாக பேசி கொண்டு இருந்தான்

சைந்தவியோகோவமா மாமா.. கோச்சிக்கோ கோச்சிக்கோஎன்று கூறி அவனிடம் தள்ளி நின்றாள்

இதை தூரத்தில் கண்களில் கோவம் பொங்க பார்த்து கொண்டு இருந்த சஹானா தான் வைத்து இருந்த துப்பாக்கியால் சைந்தவியை சுட்டு இருந்தாள்…. வாசுஅம்முஎன்ற அலறலுடன் அவளை தாங்கி இருந்தான்வேகமாக ஓட பார்த்த சஹானாவை தன் கையில் இருந்த துப்பாக்கியால் பாவம் பார்க்காமல் சுட்டு கொன்று இருந்தான்

சைந்தவிமாமாஎன்று கூறிக்கொண்டே மயங்கி இருந்தாள்…. வாசு சைந்தவியை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு வேகமாக சென்றான்….

(இன்னும் ஒரே எபி தான் ப்ரெண்ட்ஸ்படிச்சிட்டு லைக் அண்ட் கமெண்ட் பண்ணிடுங்க.. அப்டியே ரேட்டிங்ஸ் குடுத்தா டபுள் ஹாப்பி அண்ணாச்சிசைலன்ட் ரீடர்ஸ் அப்டியே உங்க கருத்தை சொன்னா ஹாப்பி)

Click on a star to rate it!

Rating 4.3 / 5. Vote count: 18

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
15
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்