
அத்தியாயம் – 12
மறுநாள் காலை 9 மணி.
அனைவரும் சாந்தி மறுவாழ்வு மையத்தின் கலை சிகிச்சை நடக்கும் அறைக்கு வந்தார்கள்.
அது ஒரு பெரிய, வெளிச்சமான அறை. பெரிய ஜன்னல்கள் வழியாக இயற்கை ஒளி உள்ளே வந்தது. சுவர்களில் பாதிக்கப்பட்டவர்களின் முந்தைய ஓவியங்கள் தொங்கின – சில அழகாக, சில குழப்பமாக, சில தொந்தரவாக என்று பலவிதமாக இருந்தன.
மேசையில் கலைப் பொருட்கள் எல்லாம் நிரம்பி இருந்தன – வண்ணப்பூச்சுகள், தூரிகைகள், கேன்வாஸ் பலகைகள், வண்ண பென்சில்கள், பேஸ்டல்கள், களிமண்.
மாணவர்கள் கலந்தாய்வு அறையில் அமர்ந்தார்கள். இன்றைக்கு அவர்கள் தனியாக ஒதுக்கப்பட்ட இடத்தில் இல்லாமல், அதே இடத்தில் சிகிச்சைக்கு வந்தவர்களுடன் உட்கார்ந்தார்கள்.
அஞ்சலி, கலை சிகிச்சையாளர், முன்னால் வந்து நின்றார். அவருக்கு முப்பத்தைந்து வயது இருக்கும். அன்பான, ஊக்கமளிக்கும் ஒருவர்.
“குட் மார்னிங் எவ்ரிவன்… இன்னைக்கு நாம ஆர்ட் தெரபி செஷன் பண்ணப் போறோம். கலைங்கிறது மன அதிர்ச்சியை வெளிப்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த கருவி… சில நேரங்கள்ல, நம்மால வார்த்தைகளால சொல்ல முடியாத விஷயங்களை வண்ணங்களால சொல்ல முடியும்… கலர்ஸ் கேரி எமோஷன்ஸ்…
சிவப்பு – கோபம், ஆர்வம். நீலம் – சோகம், அமைதி. கருப்பு – இருள், பயம். மஞ்சள் – நம்பிக்கை, மகிழ்ச்சி… நீங்க உங்களோட எமோஷன்ஸ்-ஐ கேன்வாஸ்-ல எக்ஸ்பிரஸ் பண்ணலாம்…” என்று மென்மையாக சொன்னார்.
எல்லாரும் மெதுவாக உள்ளே நுழைந்தார்கள். நேற்று குழு சிகிச்சை அமர்வில் இருந்த சிலர், கூடுதலாக சிலர் புதியவர்களும் இருந்தார்கள். மொத்தம் எட்டு பேர். அவர்கள் மேசைக்கு சென்று, பொருட்களை எடுக்க ஆரம்பித்தார்கள்.
அஞ்சலி, “இன்னைக்கு தீம் – ‘மை இன்னர் லாண்ட்ஸ்கேப்’ உங்களுக்குள் இருக்கும் உணர்வுகளை, நினைவுகளை, வலிகளை, நம்பிக்கைகளை – எதையாவது உங்க இஷ்டம் போல எக்ஸ்பிரஸ் பண்ணுங்க… தப்பு எதுவும் இல்ல… நீங்க என்ன create பண்ணினாலும், அது வேலிட்…”
வந்தவர்கள் எல்லாரும் அவர் சொல்வதை கேட்டு, சிலர் வண்ணப்பூச்சு தூரிகைகள் எடுத்தார்கள், சிலர் பேஸ்டல்கள், சிலர் களிமண்.
அமுதினி கவனமாக குறித்துக் பண்ணினாள். ஒரு நடுத்தர வயது பெண்மணி, மிகுந்த ஆக்ரோஷமாக தீவிர சிவப்பு மற்றும் கருப்பு நிறங்கள் பயன்படுத்தினாள். அவரது ஓவியம் குழப்பமாக தொந்தரவாக இருந்தது. ஆனால், அவளது முகத்தில் மிகுந்த கவனமும், ஆசுவாசமும் தெரிந்தன.
நேற்று குழு அமர்வில் இருந்த ப்ரியா, மென்மையான நீலம் மற்றும் பச்சை நிறத்தை உபயோகித்தாள். அவள் அமைதியான அலைகளை வரைந்தாள். நல்ல சாந்தமான ஓவியம்.. ஆனால், அதனை ஆழமாகப் பார்த்தால், அலைகளுக்கு நடுவே ஒரு சிறிய படகு, தனியாக, அலைந்து திரிவது போல இருந்தது.
ராஜேஷ், நேற்று கோபப் பிரச்சினைகள் பற்றி பேசியவர், களிமண் எடுத்து, தீவிரமாக பிசைந்து, மடித்தான், அழுத்தினான். அவனது கைகள் வேகமாக வேலை செய்தன. அவரது உணர்வுகளின் உடல் வழி வெளியீடு.
அவற்றை பார்க்கும் பொழுது அமுதினிக்கும் இந்த சிகிச்சை ஈர்ப்பு ஏற்பட்டது.
‘ஆர்ட் ஒரு மொழி… வார்த்தைகளுக்கு இல்லாத ஒரு தொடர்பு இதுக்கு இருக்கு.. ட்ராமா சர்வைவர்ஸ்-க்கு இது சேஃப்-ஆ இருக்கும்… அவங்க தங்களோட பெயினை டைரக்டா எதிர்கொள்ள முடியாம, சிம்பாலிக்கா எக்ஸ்பிரஸ் பண்ணலாம்…’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.
திடீரென்று, அஞ்சலி மாணவர்களிடம் வந்து, “உங்களுக்கு விருப்பமிருந்தா நீங்களும் பார்டிசிபேட் பண்ணலாம்… இது உங்களுக்கும் ஒரு லேர்னிங் எக்ஸ்பீரியன்ஸ்… உங்களுக்குள் இருக்கும் எமோஷன்ஸ்-ஐ எக்ஸ்பிரஸ் பண்ணுங்க…” எனச் சொல்ல,
மாணவர்கள் தயங்கினார்கள். ஆனால், சில பேர் மெதுவாக எழுந்து பொருட்களை எடுக்க ஆரம்பித்தார்கள்.
சுருதி அமுதினியைப் பார்த்து, “அமுது, நாம ட்ரை பண்ணலாமா?” என்கவும்,
அமுதினி தலையாட்ட, இருவரும் ஒரு மேசைக்கு சென்று, அமுதினி கேன்வாஸ் போர்டு மற்றும் வாட்டர்கலர்கள் எடுத்தாள். சுருதி பேஸ்டல்ஸ் எடுத்தாள்.
அமுதினி தன் ப்ரஷ்-ஐ எடுத்து நீலத்தில் தோய்த்து, வரைய பண்ண ஆரம்பித்தாள். எதுவும் திட்டமிட்டது இல்லை. அவளது கைகள் தானாகவே மனதிற்கு தோன்றியதை வரைந்து கொண்டிருந்தது.
மெதுவாக, அவளது ஓவியம் வடிவம் எடுத்தது – கடல், அலைகள், கரையோரம். அந்த கரையில் ஒரு தனியான உருவம், முகம் தெளிவில்லை. ஆனால், தனிமையான, சிந்தனைமிக்க தோரணை இருந்தது.
அவள் அதைப் பார்த்து, ‘நான் என்ன பெயிண்ட் பண்றேன்? இது என்னைப் பற்றியா? அல்லது…’ என்று புரியாமல் சிந்திக்க,
அவளுக்குத் தெரிந்தது. அது ஆரவைப் பற்றி. அவன் தனிமை, அவனாக தனிமைப்படுத்தக் கொண்டிருப்பது!
அவளுக்கு தெரியாமலே அவனை வரைந்துக் கொண்டிருந்தாள்,
திடீரென்று, கதவு திறக்கும் சத்தத்தில் மேலே பார்த்தாள்.
ஆரவ் கிருஷ்ணா உள்ளே நுழைந்ததும், அந்த அறையை கண்களால் அளந்தான். கிளையண்ட்ஸ் எல்லாரும் வரைய, மாணவர்கள் சிலரும் கலந்துக் கொண்டிருக்க, மேலும் சிலர் மற்றவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அஞ்சலி ஆரவைப் பார்த்து புன்னகைத்து, “ஆரவ், வெல்கம், உங்களுக்கு ஓகே-ன்னா, நீங்களும் பார்ட்டிசிபேட் பண்ணலாம்…”
ஆரவ் உடனே எதிர்மறையாக தலையாட்டி, “இல்ல மேடம்… நான் ஜஸ்ட் அப்சர்வ் பண்றேன் அவ்ளோதான்…” என்று மறுக்க,
“ஓகே..” என்று விட்டார் அஞ்சலி. ஆனால், அவனது பார்வையில் கண்டவருக்கு, ‘இவருக்கும் தெரபி தேவை போல, ஆனால், இவர் அதை அக்செப்ட் பண்ண நினைக்கல..’ என்று நினைத்துக் கொண்டாள்.
ஆரவ் பக்கவாட்டில் நின்றிருந்தான். பேண்ட் பாக்கெட்டில் கைகள் வைத்துக்கொண்டு, மற்றவர்கள் நோட்டமிட்டு கொண்டிருந்தான். அவனது முகம் எதையும் காட்டிக்கொடுக்காமல் போனாலும், அவனது கண்கள்… தீவிரமாக ஓவியங்களை பார்த்தன.
அவன் ஒவ்வொரு நபர்களையும் கூர்ந்து கவனித்தான்.
சிவப்பு மற்றும் கருப்பு ஓவியம் – ஆத்திரம், அதிர்ச்சி. நீல அலைகள் – தனிமை, அமைதியைத் தேடுதல். களிமண் சிற்பம் – உடல் வெளிப்பாடு, அடக்கப்பட்ட கோபம்.
அவனது பார்வை மாணவர்களிடம் சென்றது. சுருதி ஏதோவொரு சின்ன ஓவியத்தை வரைய, மற்ற மாணவர்கள் எளிய வடிவங்களை வரைந்திருந்தனர்.
பிறகு, அவனது பார்வை கடைசியாக அமுதினியின் மீது பதிந்தது.
அவள் அந்த ஓவியத்தில் மூழ்கியிருந்தாள். அவளுடைய ஒவ்வொரு நகர்வும் கவனமாகவும், தீவிரமாகவும் இருந்தன. அவளுடைய முகத்தில் கவனமும் உணர்ச்சியும் நிரம்பியிருந்தது.
ஆரவ் அவளை ஒரு நிமிடம் பார்த்தான். பிறகு, அவனது பார்வை அவள் வரையும் படத்திற்கு போனது. அதைக் கண்டவன் உறைந்துபோனான்.
அந்த painting – கரை, அலைகள், ஒரு தனிமையான உருவம், ஆழ்ந்து பார்த்தால் அதில் இருக்கும் சோகமும், தனிமையும் தெரிந்தது.
ஆரவுக்கு அதிர்ச்சியாய் இருக்க, ‘அவள் என்னை பெயிண்ட் பண்றாளா? அந்த உருவம்… அது என்னைப் போல இருக்கு… நேற்று மாலை நான் கரையில் நின்றது அவளுக்குத் தெரியுமா? அவள் என்னைப் பார்த்தாளா? அவள் என்னை இன்னமும் அப்சர்வ் பண்றாளா?’ என்று ஏகப்பட்ட கேள்விகள்!
அவனுக்கு கோபமும் குழப்பமும் சூழ, ‘எப்படி அவள் என்னை இப்படி வாட்ச் பண்றா? எப்படி அவள் என் தனிமையை பார்க்கிறாள்?’ என்று ஆத்திரத்தில் அங்கிருந்து வெளியேற முயன்றான்.
ஆனால், அஞ்சலி அவனை நிறுத்தி, “ஆரவ், ப்ளீஸ்… ஒரு நிமிஷம்… நீங்க ஆர்ட் தெரபி பத்தி உங்க பெர்ஸ்பெக்ட்டிவ் ஷேர் பண்ண முடியுமா? ஸ்டூடண்ட்ஸ்-க்கு லெல்ஃபுல்-ஆ இருக்கும்…” என்க,
ஆரவ் சற்று தயங்கினாலும், அவனால் மறுக்க முடியவில்லை.
அவன் முன்னால் வந்து நிற்கவும், சிகிச்சைக்கு வந்தவர்களும், மாணவர்களும் அவர்களது வேலையை நிறுத்தி, அவனை பார்த்தார்கள்.
ஆரவ் மெதுவாக, “ஆர்ட் தெரபி, அது ஒரு பவர்ஃபுல் டூல். ட்ராமா சர்வைவர்ஸ்-க்கு, சம்டைஸ் வார்த்தைகள் மட்டுமே போதாது. சில வார்த்தைகளுக்கு உருவம் கொடுக்க முடியாத எமோஷன்ஸ் இருக்கும். ஸ்பீச்லெஸ் டெரர்-னு வான் டெர் கோல்க் சொல்லுவார்… ட்ராமால, சில நினைவுகள் நான்-வெர்பலா ஸ்டோர் ஆகும்… ஃப்ளாஷ் பேக்ஸ், பாடி சென்சேஷன்ஸ், எமோஷன்ஸ் – ஆனால் வர்ட்ஸ் இல்ல… ஆர்ட் அந்த நான்-வெர்பல் மெமரிஸை வெளியே கொண்டு வர உதவுது. கேன்வாஸில் அதை கொண்டு வந்தா, அது கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் செயல்முறை பண்ண முடியும்.” என்று ஓவியங்களை பார்த்துக் கொண்டே சொன்ன ஆரவின் குரலை கேட்பவர்களின் மனம் கணமானது.
“இந்த பெயிண்ட்டிங்-ஐ பாருங்க… இதுல சிவப்பு, கருப்பு கலர் – ஆத்திரம், இருளின் அர்த்தம்… ஆனால், அது கேன்வாஸின் வெளியே வந்துருச்சு… அது உங்க மனசுக்குள்ள ட்ராப் ஆயிட்டு இல்ல… அதுதான் ஹீலிங்-ன் முதல் ஸ்டெப்… எக்ஸ்டர்னலைசேஷன்….”
அஞ்சலி, “ரொம்ப அழகா சொன்னீங்க ஆரவ்… நீங்க ஆர்ட் தெரபியை நல்லா புரிஞ்சிருக்கீங்க… இதை நீங்க பர்சனலி எக்ஸ்பிரீயன்ஸ் பண்ணியிருக்கீங்களா?”
ஆரவின் முகம் உடனே இறுகிப் போய், “இல்ல… நான் இது பத்தின ரிசர்ச் பண்ணியிருக்கேன் அவ்ளோதான்…” என்று பட்டென சொல்லவும்,
அஞ்சலி அவனை ஊடுருவிப் பார்த்தார். அவர் ஒரு அனுபவம் வாய்ந்த சிகிச்சையாளர். அவளுக்கு நன்கு தெரிந்தது – ஆரவ் பொய் சொல்கிறான். அவன் ஏதோ காயமடைந்து இருக்கிறான், ஆனாலும், அவனுக்கான சிகிச்சைக்கு ஏற்க மறுக்கிறான்.
“ஆரவ், நீங்க ஒரு ப்ரஷ் எடுத்து, சும்மா ட்ரை பண்ணிப் பார்க்கலாமே… எக்ஸ்பிரீயன்ஸ் பண்ணினா தான், நாம அதுல இன்னும் அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்க முடியும்…” அவள் மெதுவாகச் சொன்னார்.
“இல்ல… எனக்கு அது வேண்டாம்…” என்று ஆரவ் உடனே சொன்னான். அவனது குரலில் கூர்மை.
“ஏன்?” என்ற அஞ்சலி,
“நீங்க பயப்படுறீங்களா? உங்க மனசுக்குள்ள இருந்து ஏதாவது வெளியே வரும்னு?” என்று அழுத்தமாக கேட்டார்.
அனைவரும் அமைதியானார்கள். பதற்றம் நிரம்பியது. ஆரவின் கைகள் கோபத்தில் இறுகிப் போயின.
“நான் எதுக்கும் பயப்படல…” அவன் குரலில் கோபம் தெரிந்தது. “எனக்கு எந்த தெரபியும் தேவையில்ல… நான் இங்க என் ஸ்டூடண்ட்ஸை அப்சர்வ் பண்ண வந்திருக்குன்… சோ, ஒரு என்னை யாரும் ஃபோர்ஸ் பண்ண வேண்டாம்…”
அஞ்சலியோ சமாதானமாக, “ஓகே ஆரவ்… நான் ஒன்னும் ஃபோர்ஸ் பண்ணல… ஆனா, நீங்க ஒண்ணு புரிஞ்சிக்கணும் – தெரபிஸ்ட்-க்கும் கொஞ்சம் தெரபி தேவை. நீங்க எவ்வளவுதான் ட்ராமா சர்வைவர்ஸ்-க்கு உதவினாலும், உங்களோட தனிப்பட்ட மன வருத்தங்களை நீங்க இக்னோர் பண்ணினீங்கன்னா, அது உங்களை மொத்தமா அழிச்சிடும்…” என்று பக்குவமாக எடுத்துச் சொன்னார்.
ஆரவின் முகம் கல்லாய் மாறிப்போக, “எனக்கு எந்த வருத்தங்களும், பிரச்சனைகளும் இல்ல… நான் தனியா மட்டும்தான் விரும்பறேன்…” என்று அமுதினியை கண்டு அழுத்தமாக சொல்லியவன், அங்கிருந்த கதவை பலமாக மூடிவிட்டு வெளியேறினான்.
அங்கு பலத்த அமைதி நிரம்பியது. ஆரவின் செய்கையில் எல்லாரும் அதிர்ந்திருக்க, அஞ்சலி பெருமூச்சு விட்டார்.
“சாரி எவ்ரிவன்… நாம செஷனை தொடரலாம்.”
ஆனால், அனைவரது மனநிலையிலும் மாறியிருந்தது. கிளையண்ட்ஸ் கொஞ்சம் சிரமமாக உணர, மாணவர்களும் அசௌகரியமாக இருந்தார்கள்.
ஆரவின் எதிர்வினையை பார்த்து, அமுதினியோ கொஞ்சம் அதிர்ந்துபோயிருந்தாள்.
அஞ்சலி ஆரவின் மனவோட்டம் பற்றி பேசியதும், அவரிடமும் கோபத்தைக் காட்டி தப்பித்து ஓடிவிட்டான்.
அவள் தான் வரைந்து வைத்திருக்கும் பார்த்தாள். அந்த தனியான உருவத்தை கண்டு, ‘நான் அவரை ஹர்ட் பண்ணிட்டேனா? அவர் என் பெயிண்டிங்-ஐ பார்த்தாரா? அவருக்கு அது எப்படி உணர்த்தியிருக்கும்?’ என்று எண்ணி வருத்தப்பட்டாள்.
அந்த அமர்வு மெதுவாக முடிந்தது. கிளையண்ட்ஸ் தங்கள் ஓவியங்களை காட்சிப்படுத்தி, சிறிய விளக்கமும் கொடுத்தார்கள்.
Cathartic process (வலிகளை நீக்கும் செயல்முறை) அப்போது சிலர் அழுதார்கள், சிலர் நிம்மதியான உணர்வு பெற்றார்கள்.
பின்னர், மாணவர்களும் வெளியேற ஆரம்பித்தார்கள். அமுதினி தன் ஓவியத்தைக் கண்டு, அதை எடுத்துக்கொள்ளலாமா என்று யோசித்தாள்.
அஞ்சலி அவளிடம் வந்து, “அமுதினி, உன் பெயிண்டிங் ப்யூட்டி ஃபுல்லா இருக்கு… ஆனால், அதேசமயம் உன் பெயினும் கூட இருக்கு… அந்த உருவம்… அது உன்னைப் பத்தியா? இல்ல வேற யாரையோ பத்தியா?” என்று வினவ,
அமுதினி பதில் கூறத் தயங்கினாள்.
“மேம், நான்… நான் தெரியாம இப்படி பெயிண்ட் பண்ணிட்டேன். நான் எதையும் யோசிக்கல…”
அஞ்சலி புன்னகைத்து, “அதுதான் ஆர்ட் தெரபியின் ப்யூட்டி… நம்மளோட ஆழ்மனதில் பதிந்து இருக்கும் விஷயங்கள் தான் இப்படி வெளியே வருது… நீ யாரை பத்தியோ அக்கறை படற மாதிரி தெரியுது… நீ அவங்களை ரீச் அவுட் பண்ண விரும்புற… மேபி, அவங்க உன்னை அலோவ் பண்ணலை ன்னு நினைக்கிறேன்…” என்று அவரது அனுபவத்தில் சொன்னார்.
அமுதினியின் மனம் தடுமாற, ‘எப்படி அவங்களுக்கு இவ்வளவு துல்லியமா தெரியுது?’ என்று யோசித்தாள்.
அஞ்சலி தொடர்ந்து, “அமுதினி, நீ தெரபிஸ்ட் ஆகப்போற… ஆனா, உன் எம்பதி உன்னோட வீக்னெஸ் ஆயிடக்கூடாது… நீ எல்லாரையும் பிரச்சனையில் இருந்து வெளியே கொண்டுவர முடியாது. முக்கியமா, அவங்க வெளியே ஆக விரும்பலைன்னா… ரொம்பவே கஷ்டம்…”
அமுதினி மெதுவாகத் தலையசைத்து, “எனக்குத் தெரியும் மேம்… ஆனா, அப்படியே இருக்கட்டும்னு விடுறது கஷ்டம்…” என்றாள் ஓவியத்தைப் பார்த்து.
அஞ்சலி அவளது தோளைத் தட்டி, “புரியுது அமுதினி… ஆனா, நீ உன்னையும் பாத்துக்கணும்… உனக்கான எமோஷனல் பவுண்டரிஸை கிரியேட் பண்ணு… அதுதான் உனக்கு நல்லது…” எனச் சொல்லிச் சென்றார்.
அமுதினி யோசனையுடனே வெளியே வந்து, கடற்கரையை நோக்கி நடந்தாள்.
தற்பொழுது அவளுக்கு இயற்கை காற்று வேண்டும்! கொஞ்சம் தனிமை வேண்டும்!
அங்கு தூரத்தில், ஆரவ் நின்றிருந்தான். நேற்று போலவே, அதே இடத்தில், தனியாக நின்று கடலை வெறித்தபடி இருந்தான்.
அமுதினி சட்டென்று நின்றாள். அவள் அவனிடம் போக வேண்டுமா? அல்லது அவனை தனியாக விட்டுவிட வேண்டுமா? என்று பல்வேறு எண்ணங்கள்.
ஆனால், அவளது மனமோ உறுதியாக சொல்லிற்று – ‘போ… அவரிடம் போய் பேசு… அவருக்கு இப்போது ஒருவரின் துணை கட்டாயம் தேவை…’
ஆனால் அவளது மூளையோ, ‘வேண்டாம்… அவர் உன்னை அவாய்ட் பண்ணுவார்… அவர் உன்னை ஹர்ட் பண்ணுவார்… உன் துணை அவருக்கு தேவையே இல்ல… நீ இங்கிருந்து இப்பவே போய்டு…’ என்று அறிவுறுத்தியது.
அவள் இரண்டிற்கும் இடையிலிருந்து தவிக்க, இறுதியில், அவளது இதயம் வென்றது.
அமுதினி மெதுவாக ஆரவ் கிருஷ்ணாவை நோக்கி நடந்தாள்.
**********
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
8
+1
2
+1
