
அத்தியாயம் – 11
சாந்தி மறுவாழ்வு மையத்தின் உள்ளே நுழைந்ததும், அமுதினிக்கு ஒரு அமைதியான உணர்வு ஏற்பட்டது. வெள்ளை நிற கட்டடங்கள், தோட்டம், பூக்கள், ஒரு சிறிய நீருற்று. சுவர்களில் அமைதியான வெளிர் நிறங்கள். எல்லாமே ஒரு அமைதியான சூழலை ஏற்படுத்தியது.
மையத்தின் நிர்வாகி, கிரண் அவர்களை வரவேற்றார். அவர் ஐம்பது வயது உடைய, கம்பீரமான, அதே சமயம் அன்பான தோற்றம் உடையவர்.
“வெல்கம் டூ சாந்தி ரிஹேபிலிடேஷன் செண்டர்… நான் கிரண்… இங்க தலைமை உளவியலாளரா இருக்கேன்… நீங்க எல்லாரும் சைக்காலஜி ஸ்டூடண்ட்ஸ்-னு கேள்விப்பட்டேன்… இங்க நாங்க ட்ராமா சர்வைவர்ஸ்-க்கு முழுமையா சிகிச்சை கொடுக்கிறோம் – PTSD, அப்யூஸ் சர்வைவர்ஸ், ஆக்ஸிடென்ட் விக்டீம்ஸ் இப்படி எல்லாரையும்… இன்னைக்கும் நாளைக்கும் நீங்க எங்களோட செஷன்ஸ் அப்சர்வ் பண்ணலாம், கிளையண்ட்ஸ் உடன் ரெஸ்பெக்ட்ஃபுல்லா இன்டரேக்ட் பண்ணலாம்…”
ஆரவ் முன்னால் வந்து, “தேங்க் யூ கிரண் சார்… நாங்க உங்க செண்டரில் எவ்வளவு கத்துக்கறோம்னு பார்ப்பீங்க… என் ஸ்டூடண்ட்ஸ் ரொம்ப கேர் ஃபுல்லா இருப்பாங்க… அவங்க எந்த பார்டர்ஸையும் கிராஸ் பண்ண மாட்டாங்க…” என்று நம்பிக்கையாக சொன்னான்.
கிரணும் புன்னகைத்து, “ஆரவ், நான் உன்னைப் பத்தி கேள்விப்பட்டிருக்கேன்… உன் ரிசர்ச் பேப்பர்ஸ் படிச்சிருக்கேன். யூ ஆர் டூயிங் எக்ஸ்சலேண்ட் வொர்க்…” என்று சொல்லவும் ஆரவ் மெதுவாக புன்னகைத்து தலையசைத்தான்.
Dr. கிரண் மாணவர்களை ஒரு கலந்தாய்வு கூடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர் மையத்தினை பற்றி சுருக்கமாக விளக்கினார்.
“இங்க எங்களுக்கு 30 இன்-பேஷண்ட்ஸ் இருக்காங்க… மற்றும் 50 அவுட்-பேஷண்ட்ஸ் ரெகுலரா வர்றாங்க… நாம தனிநபர் சிகிச்சை, குழு சிகிச்சை, கலை சிகிச்சை, நினைவாற்றல் அமர்வுகள், உடல் மறுவாழ்வு – எல்லாம் செய்றோம்..”
மேலும்,
“இன்னைக்கு மதியம் 2 மணிக்கு எங்களுக்கு ஒரு க்ரூப் தெரபி செஷன் இருக்கு. ட்ராமா சர்வைவர்ஸ்-க்கான சப்போர்ட் க்ரூப்.. நீங்க அதை அப்சர்வ் பண்ணலாம். ஆனா ஞாபகம் இருக்கட்டும் – அமைதியா, மரியாதையுடன் நடக்கணும், எந்த குறுக்கீடும் இருக்க கூடாது…”
மாணவர்கள் கவனமாகக் கேட்டார்கள்.
***
மதியம் 1:30.
மாணவர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட விடுதிக்குள் போயிருந்தார்கள், புத்துணர்ச்சி பெற்று திரும்பி வந்தார்கள்.
விடுதி கடற்கரைக்கு அருகில் இருந்தது, அழகான இடம். ஆனால் அவர்களுக்கு சுற்றிப்பார்க்க நேரம் இல்லை. உடனே மையத்திற்கு திரும்ப வேண்டும்.
அமுதினி புத்துணர்ச்சியாக உணர்ந்தாள். அவள் எளிதான குர்தா மற்றும் ஜீன்ஸ் அணிந்திருந்தாள். அவள் தன் குறிப்பேடு மற்றும் பேனாவை எடுத்துக்கொண்டு மையத்திற்கு திரும்பினாள்.
2 மணிக்கு, அனைவரும் ஒரு கண்காணிப்பு அறையில் கூடினார்கள். அது ஒரு சிறிய அறை, ஒருவழி கண்ணாடி வழியாக பக்கத்து அறையைப் பார்க்க முடியும். அந்த அறையில் குழு சிகிச்சை அமர்வு நடக்கப்போகிறது.
கிரண் மாணவர்களிடம், “நீங்க இங்க உட்காருங்க… மறுபக்கம் எங்களுக்குத் தெரியாது நீங்க இருக்கீங்கன்னு… எல்லாரும் சைலண்ட்-ஆ அப்சர்வ் பண்ணுங்க… நோட்ஸ் எடுங்க… கேள்விகள் இருந்தா செஷன் முடிஞ்ச பிறகு எங்க கிட்ட கேளுங்க…” என்று தன்மையாக சொன்னார்.
மாணவர்களும் அமர்ந்தார்கள். அமுதினி முன் வரிசையில், சுருதி பக்கத்தில் உட்கார, சரண்யா மேம் பின்னால் இருக்க, ஆரவ் அவர்களுக்கு பக்கத்தில் அமராமல் பின்னால் சென்று தனித்து உட்கார்ந்தான்.
சிகிச்சை அறையில் மெதுவாக ஆட்கள் நுழைந்தார்கள். ஆறு பேர் – நான்கு பெண்கள், இரண்டு ஆண்கள். வெவ்வேறு வயதுகளில் இருக்கும் நபர்கள். அவர்கள் வட்டமாக நாற்காலிகளில் அமர்ந்தார்கள். கிரண் உடன் இன்னொரு சிகிச்சையாளர், Ms. அஞ்சலி, இருந்தார்.
அந்த அமர்வு ஆரம்பமானது.
கிரண் மெதுவாக, “குட் ஆஃப்டர்நூன் எவ்ரிவன்… இன்னைக்கு நாம எப்படி இருக்கோம்னு ஷேர் பண்ணலாம்… நீங்க யாராவது ஆரம்பிக்க விரும்புறீங்களா?”
ஒரு இளம் பெண், சுமார் 25 வயது, மெதுவாக பேச ஆரம்பித்தாள். “ஹலோ… நான் ப்ரியா… இன்னைக்கு… நான் கொஞ்சம் பெட்டரா ஃபீல் பண்றேன்… கடந்த வாரம் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. ஒருசில ஃப்ளாஷ் பேக் கனவுல வந்துச்சு. ஆனா, நீங்க சொன்ன மாதிரி கிரௌண்டிங் டெக்னிக்ஸ் ப்ராக்டிஸ் பண்ணினேன்… அது எனக்கு ரொம்ப உதவுச்சு…” என்று அவளது அனுபவத்தை கூறினாள்.
கிரண் அன்பாகப் புன்னகைத்து, “ரொம்ப நல்ல விஷயம் ப்ரியா… நீ இப்ப முன்னேற்றம் அடைந்து இருக்க… ஃப்ளாஷ் பேக்ஸ் வந்தப்போ நீ என்ன ஃபீல் பண்ணின?”
ப்ரியா சற்று தயங்கி, “நான்… பயந்துட்டேன். என்னால ப்ரீத் பண்ண முடியல… ஆனா நான் என் பாதத்தை தரையில் வச்சி ஃபீல் பண்ணினேன், 5-4-3-2-1 டெக்னிக் யூஸ் பண்ணினேன்… அப்புறம் கொஞ்சம் சரியானது…”
“குட்… நீ உன்னோட டூல்ஸ்-ஐ யூஸ் பண்ணின… அது உன்னோட தைரியம் தான்…” என்று கிரண் சொன்னார்.
அமுதினி கவனமாக எல்லாவற்றையும் குறித்துக் கொண்டாள்.
அந்த ப்ரியாவின் கண்களில் வலி தெரிந்தது. ஆனால், அவளது குரலில் ஒரு வலிமை இருந்தது. அவள் தனக்குள் போராடிக் கொண்டிருந்தாள்.
அடுத்து, ஒரு நடுத்தர வயது ஆண் பேசினார்.
“நான் ராஜேஷ். என்னோட ஆங்கர் இஸ்யூஸ் இன்னும் இருக்கு… சின்ன விஷயத்துக்கு கூட நான் பெருசா ரியாக்ட் பண்றேன். என் வீட்டில் இருக்கவங்க ரொம்ப பயப்படுறாங்க… சிலநேரம், என்னை நினைச்சு, எனக்கே பயம் வருது..”
“ராஜேஷ், உங்களோட கோபத்துக்கு பின்னால் என்ன இருக்குன்னு உங்களால கண்டுபிடிக்க முடியுதா?” என்று அஞ்சலி மெதுவாக கேட்டார்.
ராஜேஷ் நீண்ட நேர அமைதிக்கு பிறகு மெதுவாக, “பயம் தான்… நான் பயப்படுறேன். நான் மீண்டும் ஹர்ட் ஆவேன்னு… அதனால நான் எல்லார்கிட்டயும் ஆக்ரோஷமா நடந்துக்கிறேன். அது என் டிஃபென்ஸ்-னு தோணுது…”
அமுதினி திடுக்கிட்டாள். அந்த வார்த்தைகள்… அவை ஆரவைப் பற்றி விளக்குவது போல் இருந்தன.
‘தற்காப்பு கோபத்திற்கு பின்னால் இருப்பது பயம்…’
அவள் திரும்பிப் பார்க்க, ஆரவ் கவனமாக அந்த அமர்வினை பார்த்துக்கொண்டிருந்தான். அவனது முகம் உணர்வற்று காணப்பட்டாலும், கை முஷ்டிகள் இறுகி இருந்தன.
அமர்வு தொடர்ந்தது. ஒவ்வொருவரும் தங்களுடைய பிரச்சினைகளை பகிர்ந்துக் கொள்ளுங்கள். சில கதைகள் இதயத்தை உடைப்பது போல் இருந்தது – அதில் துஷ்பிரயோகம், விபத்துகள், இழப்பு, துரோகம் என்று அனைத்தும் இருந்தன. ஆனால், அனைவரும் ஒரு பொதுவான ஒன்றை பகிர்ந்துக் கொண்டார்கள் – நம்பிக்கை. அவர்கள் தங்கள் பிரச்சனையில் இருந்து வெளிவந்து, அதனை மறந்து, போராடி வாழ்ந்து வருகின்றனர்.
ஒரு கட்டத்தில், “யாராவது ஆர்ட் தெரபி செஷன்-க்கு போனீங்களா இந்த வாரம்?” என்று கேட்டார் கிரண்.
ஒரு இளம் பெண், லட்சுமி, கை உயர்த்தினாள். “ஆமா சார்… நான் போனேன். நான் என் ட்ராமாவை பெயிண்ட் பண்ணினேன்… அது பெயின் ஃபுல்லா இருந்துச்சு, ஆனா… ரிலாக்ஸாக இருந்துச்சு. நான் என் பெயினை, அதுல வெளியே கொண்டு வந்தேன்… என் வலிகள் என்னை விட்டு போய்ட்ட மாதிரி தோணுச்சு…” என்றதில், கிரண் புன்னகைத்தார்.
“சூப்பர்… ஆர்ட ஒரு சக்திவாய்ந்த கருவி.. அது நம்மை வார்த்தைகளையும் தாண்டி எக்ஸ்பிரஸ் பண்ண அலோவ் பண்ணுது…”
அமர்வு முழுதாய் முடிந்தது. சிகிச்சைக்கு வந்தவர்களும் மெதுவாக வெளியேறினார்கள். அவர்கள் ஒருவரையொருவர் கட்டித் தழுவி ஆதரவு கொடுத்தார்கள். அது ஒரு அழகான சமூகம், அவர்கள் தனியில்லை.
******
அவர்கள் வெளியேறியதும் கிரண் கலந்தாய்வு அறையிக்கு வந்தார். மாணவர்கள் அமைதியாக இருந்தார்கள். சிலர் கண்கலங்கி இருந்தார்கள். அவர்கள் கண்ட கதைகள் அவர்களை ஆழமாக பாதித்து இருந்தன.
“இதிலிருந்து நீங்க என்ன அப்சர்வ் பண்ணினீங்க?” என்று கேட்டார் கிரண்.
ஒரு மாணவி கை உயர்த்தி, “சார், அவங்க எல்லாரும் ரொம்ப ப்ரேவ்… அவங்க தங்களோட பெயினை ஷேர் பண்றாங்க… அது அவ்வளவு சுலபம் இல்ல சார்..”
கிரணும் ஆமென ஆமோதித்து, “எக்ஸாக்ட்லி… அவங்களோட பாதிப்பு ஒரு வலிமையை தருது… அவங்க தங்களை ஆபென் பண்ண நினைக்கறாங்க… ஏன்னா, அவங்க ஹீலாக விரும்புறாங்க…”
ஆரவ் எழுந்து நின்று, “கிரண் சார் ஒரு கேள்வி… ராஜேஷ் சொன்னார் – தற்காப்பு கோபத்திற்கு பின்னால் இருப்பது பயம்… அது எப்பவும் உண்மையா? அல்லது சில பீப்பிள் வெறும் கோபத்துடன் இருக்காங்களா?” என்று கேட்டான்.
கிரண் ஆரவைக் கூர்ந்து பார்த்தார்.
“ஆரவ், என் அனுபவத்துல, anger எப்பவும் ஒரு செகண்டரி எமோஷன்… அதுக்கு கீழ எப்பவும் ஏதாவது இருக்கும் – பயம், காயம், அவமானம், உதவியற்ற தன்மை… ஆனா, சில பீப்பிள் அதை ஒத்துக்க விரும்பலை… அவங்க கோபத்தால் மறைக்கறாங்க… அது எளிது… பாதிப்பின் பயம்…”
ஆரவ் மௌனமாக, முகமோ கடினமானது. எதுவும் சொல்லாமல் மீண்டும் அமர்ந்தான்.
அமுதினி அதை கவனித்து, ‘கிரண் சார் தெரியாம ஆரவை பத்தியே பேசறார்… தற்காப்பு கோபத்திற்கு பின்னால் இருப்பது பயம்… இதுக்கு ஆரவ் சார் நல்லாவே பொருந்துவார்…’ என்று நினைத்துக் கொண்டாள்.
Dகிரண் தொடர்ந்து, “நாளைக்கு நீங்க இன்னொரு செஷன் அப்சர்வ் பண்ணுவீங்க – ஆரட் தெரபி… அங்க கிளையண்ட்ஸ் தங்களோட ட்ராமாவை விஷ்வலா எக்ஸ்பிரஸ் பண்றாங்க… அது ரொம்ப ரொம்ப ஃபுல்… அதுல உங்களுக்கு விருப்பமிருந்தா, நீங்க கூட பார்ட்டிசிபேட் பண்ணலாம்…” என்றார்.
பின்னர், அனைத்து மாணவர்களும் வெளியேறினார்கள். அமுதினி ஏதோ யோசனையில் மூழ்கி மெதுவாக நடந்தாள்.
சுருதி அவளிடம், “அமுது, அந்த செஷன் ரொம்ப சூப்பர்… நான் அந்த ப்ரியாவைப் பாத்தப்போ… அவளோட பெயினில் நான் உன்னைத்தான் நினைச்சேன்… நீயும் உன் பேரண்ட்ஸ்-ஐ இழந்தப்போ அப்படித்தானே இருந்தே?”
அமுதினி தலை ஆட்டி, “ஆமா சுருதி. அதனால தான் எனக்கு ட்ராமா சர்வைவர்ஸ்-ஓட எம்பதி இயல்பா வருது… நானும் அந்த வலியை உணர்ந்திருக்கேன்…” என்று விரக்தியில் இதழ் வளைத்தாள்.
அவர்கள் வெளியே வர, சூரியன் மெதுவாக மறையத் தொடங்கியது. கடல் அருகிலிருக்க, அலைகளின் சத்தம் மனதிற்கு இதமாக இருந்தது.
திடீரென்று, அமுதினி ஆரவைப் பார்த்தாள். அவன் தனியாக, கடற்கரையில், நின்று கடலைப் வெறித்துப் கொண்டிருந்தான்.
அமுதினிக்கு அவனிடம் போக வேண்டும் என்று தோன்றியது. ஆனால், அவள் தயங்கினாள்.
சுருதியோ, “அமுது, நீ அவரை டிஸ்டர்ப் பண்ண நினைக்காத… அவர் தனியா இருக்க விரும்புறார்…” என்று கண்டிப்புடன் சொன்னாள்.
அமுதினி தலையசைத்தாள். ஆனால், அவள் பார்வை ஆரவை விட்டு விலகவில்லை.
அங்கு நின்று கடலைப் பார்த்துக் கொண்டிருந்தவனின் மனதில் என்ன நடக்கிறது? இன்றைய அமர்வு அவனை பாதித்து இருக்குமா? அந்த கிளையண்ட்ஸ் உடைய கதைகள் அவனது சொந்த வலிகளை தூண்டி இருக்குமா? என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தாள்.
அன்று இரவு, தங்கும் விடுதியில், மாணவர்கள் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். எல்லோரும் ஒரே இடத்தில், பஃபே முறையில் சாப்பிட்டனர்.
அமுதினி சுருதியுடன் ஒரு மேசையில் அமர்ந்திருந்தாள். அவள் சாப்பிடவில்லை, வெறும் தண்ணீர் மட்டும் குடித்துக் கொண்டிருந்தாள்.
சுருதி கவலையுடன் பார்த்து, “அமுது, சாப்பிடு டி…. நீ ஒண்ணும் சாப்பிடலையே…”
“எனக்கு பசிக்கல சுருதி.”
“நீ இன்னும் அவரை பத்தியே யோசிக்கிற இல்லையா?”
அமுதினி பெருமூச்சு விட்டு, “சுருதி, இன்னைக்கு செஷன்-ல… அந்த கிளையண்ட்ஸ் எல்லாரும் ப்ரேவ்-ஆ இருந்தாங்க… அவங்க தங்களோட பெயினை ஷேர் பண்ணி… அதுல இருந்து முழுசா வெளியே வர நினைச்சாங்க… ஆனா, ஆரவ் சார்… அவர் தன் பெயினை ஹைட் பண்றார்… அவர் ஹீல் ஆக விரும்பலை… அதுதான் என்னை ஹர்ட் பண்ணுது…” என்று வருத்தமாக சொல்ல,
சுருதி அவள் கையைப் பிடித்து கோபமாக, “அமுது, அது உன்ன ஏன் ஹர்ட் பண்ணுது… இது அவரோட சாய்ஸ்… அவருடைய வாழ்க்கை… இதுல நீ அவரை ஃபோர்ஸ் பண்ண முடியாது…” என்கவும்,
“எனக்குத் தெரியும் சுருதி. ஆனா… அவர் வலியை தனியா அனுபவச்சிட்டு இருக்கார்… யாராவது அவரை கேர் பண்ணணுமே…”
“அமுது, அவரை பத்தி யோசிச்சு… உன்னை நீயே காப்பாத்திக்க மறந்துடாதே…”
அமுதினி எதுவும் சொல்லவில்லை.
அந்த நேரம், ஆரவ் அங்கு வர, தனியாக ஒரு ஓரத்தில் இருக்கும் மேசையில் அமர்ந்து, மிகக் குறைவாக சாப்பிட்டான்.
அவன் யாருடனும் பேசவில்லை. அவன் தன் கைபேசியில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தான்.
மாணவர்கள் அவனை தூரத்திலிருந்து பார்த்தார்கள். யாரும் அவனை நெருங்கவில்லை. அவர்கள் அவனிடம் வரவே பயந்தார்கள்.
ஆனால் அமுதினி… ஆரவை பார்க்க, அதில் தனிமையை உணர்ந்தாள். அவளது இதயம் வலித்தது.
‘நாளைக்கு என்ன நடக்கும்? ஆர்ட் தெரபி செஷன்… கிளையண்ட்ஸ் தங்களோட ட்ராமாவை எக்ஸ்பிரஸ் பண்ணுவாங்க… அது ஆரவை மேலும் ட்ரிகர் பண்ணுமா? அவர் பிரேக் டவுன் ஆவாரா? இல்ல அவர் இன்னும் தன்னை ப்ரொடெக்ட் பண்ணிக்குவாரா?’ என்று பலவற்றை நினைத்துக் கொண்டாள்.
அவளுக்கு எதற்கும் பதில் தெரியவில்லை. ஆனால், அவள் ஒன்று அறிந்தாள் – நாளைக்கு ஏதோ ஒன்று நடக்கப்போகிறது!
விதி தன் வேலையைச் செய்துகொண்டிருக்கிறது. ஆரவையும் அமுதினியையும் நெருக்கமாக கொண்டு வருகிறது. ஆனால், அவர்கள் எதிர்த்து வெவ்வேறு திசையில் செல்ல நினைக்கிறார்கள்!
எவ்வளவு நேரம் எதிர்த்து, எங்கு சென்றிட முடியும்? விதியின் முன்னால் நிற்க இயலுமா?
***********
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
8
+1
1
+1
