அத்தியாயம் 10
ரேணுவோ தேவகியை முறைத்து கொண்டிருந்தாள். அடியே மதினி ஏன்டி என்னய இப்டி முறைக்குற நீ முறைக்க வேண்டியது உனக்கு வரப்போற ஓரகத்திய தான் என்னய இல்லை என்று அவள் கழுத்தை வெட்டி கொண்டு செல்ல. ரேணுவோ அடியே வீட்டுக்கு வருவல்ல அந்த கழுத்தை அப்டியே திருகி நாத்தி கொடுமைனா என்னனு உனக்கு காட்டுறேன்டி என்று இவளும் பதிலுக்கு கழுத்தை வெட்டி கொண்டு திரும்ப அருளும் ராஜேஷும் இதுங்களுக்கு வேற வேலையே இல்லை என்று அவர்களை பார்த்து தலையில் அடித்து கொண்டனர். இங்கு அனைத்து உணவுகளையும் டேபிள் மீது அடுக்கி வைத்திருந்தால் நிலா. பேசிக்கொண்டிருக்கும் அனைவரையும் சாப்பிட அழைத்தார் கல்யாணி. உடனே சரி என்று அனைவரும் சம்மந்தம் பேசி முடித்த இடத்தில் கை நனைப்பது வழக்கம் தானே என்று தாத்தா அனைவரும் சாப்பிட்டு செல்வோம் என்று சொல்ல வேறு வழியில்லாமல் அனைவரும் அங்கு டைனிங் டேபிலுக்கு சென்றனர். அங்கு வந்து உட்கார்ந்து அனைவருக்கும் பார்த்து பார்த்து பரிமாறினாள். நிலா. வேந்தனுக்கும் பரிமாறினால் தான் ஆனால், இதற்கு முன் நடந்த நிகழ்வை முற்றிலும மறந்தது போல் நடந்து கொண்டாள் பெண்ணவள்.
இதோ, வேந்தனுக்கு பெண் பார்க்கும் படலத்திற்கு சென்று வந்து இன்றுடன் ரெண்டு நாட்களை கடந்துவிட்டது.
இதோ அதிகாலை வேளையில் அந்த பெரிய வீட்டின் அடுக்களையில் சிவகாமியிடம் கெஞ்சிகொண்டிருந்தாள் அவள் . அம்மா வேண்டாமா நீங்க போய் குடுங்க மா. அவரோ இந்த இரு நாட்களில் அவனிடம் இவர் முதற்கொண்டு வீட்டில் அனைவரும் வாங்கி காட்டிகொள்வது தெரியாதா அவருக்கு. அதனாலே அவள் இவ்வளவு கெஞ்சியும் சிவகாமி அசைந்த பாடில்லை. அவள் தான் காலை தரையில் உதைத்து விட்டு மூஞ்சை சுருக்கி வைத்து கொண்டு நீங்க ரொம்ப மோசம் மா என்ன்றெல்லாம் பல தகிடுத்தோம் வேலை அனைத்தும் செய்தால் அவள். அழகி… என்ற வேந்தனின் கத்தலில் . இவ்வளவு நேரம் கெஞ்சி கொண்டிருந்தவள் அவன் சத்தத்தில் கையில் நீர்மோறை எடுத்துக்கொண்டு அடுத்த நொடியில் அவன் முன் நீட்டியிருந்தால் நீர் சொம்பை தலை குனிந்து கொண்டு அவனுக்கு கொடுக்க அவனோ அவளையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் அவளும் என்ன இன்னும் சொம்பை வாங்காம என்ன பன்றாங்க என்று யோசித்து கொண்டே அவள் நிமிர்ந்து பார்க்க . அவனோ என்ன தரையில இருக்குற புதையல கண்டு பிடுசுட்டியா என்று அவன் கணீர் குரலில் கேட்க. ஹான்…. என்று திருத்திருவென முழித்தால். எதிரே உள்ளவன் வந்த சிரிப்பை உதட்டுக்குள் மறைத்து விட்டு அவளை முறைக்க அவளோ விட்டாள் அழுதுவிடுபவள் போல் நின்றிருந்தாள். சரி போ போயி காலைய சாப்பாடு வயலுக்கு கொண்டு வா. என்று கூறிவிட்டு அவன் செல்ல போக நானா என்று அவள் அதிர்ச்சியுடன் கேட்க.
வேந்தனோ, பின்ன வேற யாரு என்று அவன் முறைத்து கொண்டே கேட்க. இவளோ இல்லை இல்லை நான் தான் நானே கொண்டுவந்துறேன் என்று அவள் பதட்டத்தில் உளற. இவனும் ம்ம் சீக்கிரம் கொண்டு வந்து சேரு என்று சென்று விட்டான்.
வெளியில் போகும் அவன் எண்ணமும் வீட்டிற்குள் நிற்கும் அவள் எண்ணமும் ஒரு சேர இரண்டு நாட்களுக்கு முன் சென்றது. அன்று, பெண் பார்க்கும் வீட்டில் வேந்தனை கவனியாது மற்றவர்களுக்கு உணவு பரிமாறி கொண்டு இருப்பவளை பார்த்து அவனது முகம் எந்த உணர்ச்சியையும் காட்டது உண்டு கொண்டிருந்தான். அப்படியே அனைவரும் சாப்பிட்டு விட்டு மீண்டும் ஹாலிர்க்கு வர ரித்திகா எப்போதோ கொஞ்சம் டையார்ட் இருக்கு தாத்தா போய் ரூம்ல ரெஸ்ட் எடுக்குறேன் என்று முகத்தை பாவம் போல் வைத்து சொல்லிவிட்டு சென்று விட்டாள். அங்கு, ரேணு மற்றும் தேவகிக்கு தான் அப்பாடி இந்த தொல்லை இப்பவாது கெளம்புச்சே என்ற பெருமூச்சு அவர்களிடம். அதோட அங்கு பேசுபவர்களை கவனிக்க ஆரம்பித்தார்கள். கல்யாணி தான், அவருடைய அப்பா மற்றும் அண்ணனிடம் எல்லாம் நல்ல படியா முடிச்சுச்சு. அப்ரோம் என்று பேச்சை ஆரம்பிக்க அதற்கு முன் வேந்தன், அத்தை என்று அவன் அழைக்க அவரோ ஆம் சொல்லுங்க மாப்பிள்ளை என்று வாயெல்லாம் பல்லாக கேட்க. அவருக்கோ அவர் மகளை பார்த்த உடன் இவன் அவளிடம் மயங்கிவிட்டான் என்ற நினைப்பு. அவனோ இவர் என்னத்தில் மண்ணள்ளி போடாப்போவது தெரியாமல் சிரிட்டுக்கொண்டே பேச. நம் வேந்தனோ, இன்னைக்கு சாப்பாடு நல்லா இருந்துச்சு அத்தை என்று அவன் ஆரம்பிக்க சுற்றி உள்ளவர்களுக்கு புரிந்து விட்டது இவன் வில்லங்கமாக கேட்க போகிறான் என்று. அது புரியாமல் கல்யாணியோ, அப்பிடியா மாப்பிள்ளை அதுவா அந்த அநாதை கழுதை தான் சமைச்சுது என்று கல்யாணி சொல்ல அதை கேட்ட நிலாவிற்கு முழுக்கென்று கண்ணீர் எட்டி பார்த்தது அவள் கண்களில். மற்றவர்களுக்கும் கல்யாணியின் பேச்சு வருத்தத்தையே தந்தது வேந்தனின் பொறுமையையும் சோதித்து கொண்டிருந்தார்.
வேந்தன், அதிரடியாக அப்போ அவளை நா எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேன் என்று பட்டென்று சொல்ல. கல்யாணி முதற்கொண்டு அனைவரும் அவனை திகைத்து பார்த்தனர். நிலாவோ கொஞ்சம் விட்டாள் மயக்க நிலைக்கே சென்றிருப்பாள் போல் அந்த நிலையில் இருந்தால். பூபதி தாத்தா தான். என்ன ஈஸ்வரா என்ன பேசிகிட்டு இருக்க என்று கொஞ்சம் கடுமையாக கேட்க. அவனோ அசைந்தான் இல்லை. அவர் சிவகாமியை பார்க்க அவரோ என்னப்பா வேந்தா என்று அவர் கேட்க. அவனோ இந்த பொண்ணு சமையல் எனக்கு புடிச்சிருக்கு அம்மா அதான் வாழ்க்கை முழுவதும் அவள் கையாள சாப்பிடணும்னு முடிவு பண்ணிட்டேன் என்று அவன் சாதரணமாக தோலை குழுக்கி சொல்ல. பூபதி அடுத்து பேச வரும் முன். சிவகாமியே அது ஒன்னும் இல்லை மாமா சாப்பாடு சமைக்க தானே கூட்டிட்டு போவோமே என்று அவர் சொல்ல. கல்யாணியோ திடுக்கிட்டு போனார். இந்த நாயி போனா நம்ம. என்ன பண்ரது என்று அவர் யோசித்து நிற்க. அந்த யோசனையை களைக்கும் விதமாக வேந்தனோ என்ன அத்தை உங்க மருமகனுக்காக இத கூட பண்ண மாட்டிங்களா என்று கேட்க. அவன் பேச்சை கவனித்தாவர்களோ அம்மாடியோ என்று வாயில் கைவைத்து விட்டார்கள். கல்யாணி தான் அப்டிலாம் இல்லை மாப்பிள்ளை கண்டிப்பா அவளை கையோட கூட்டிட்டு போங்க. அவளுக்கு இந்த வீட்டை விட்டு போனா போக்கிடம் வேற இல்லை. உங்க கூட வருவா. என்று அவர் சொல்லா. கல்யாணியின் கணவர் மற்றும் நிலாவுக்கு தான் அதிர்ச்சி. வேந்தனோ ஒரு ஆராயும் பார்வையுடன் மீசையை முறுக்கி விட்டு கொண்டான். ரேணுகா தான் அவளது பெரிய மாமாவை வாயை பிளந்து பார்த்து கொண்டிருந்தாள்.