Loading

நாட்கள்  அதன் போக்கில் செல்ல திலீப் திவ்யாவின் திருமணத்திற்கு இன்னும் இரண்டு நாளே இருந்தது… இரண்டு நாள் முன்பு தான் சைந்தவியை அழைத்து கொண்டு மருத்துவமனை சென்று வந்து இருந்தான்…. 

சென்று வந்ததில் இருந்து சைந்தவி மிகவும் அமைதியகி விட்டாள்மருத்துவர் அவளிடம் எந்த பிரச்சனையும் இல்லை என கூறினாலும் அவளுக்கு அவர் செவிலியரிடம் கூறிய விஷயம் நெஞ்சை முள்ளாய் குத்தி கொண்டே இருந்தது

இவள் சென்றுவிட்டாள் என நினைத்து அவர் செவிலியரிடம்பாவம் இந்த பொண்ணுஇந்த பொண்ணால அந்த வீட்டுக்கு ஒரு வாரிசு பெத்து தர முடியாதுபாவம் அவ புருஷன் இந்த உண்மை அவளுக்கு தெரிய கூடாதுனு என்கிட்டயே பொய் சொல்ல சொல்லிட்டான்டாக்டரா இது தப்பு தான் என் பிரெண்டோட குடும்பத்துல சண்டை வர கூடாதுனு பொய் சொல்லிட்டேன்அதோட இந்த ஹாஸ்பிடலோட எம்டி அவங்க சொல்றதை மீற முடியாதுஅந்த பொண்ணுக்கு உண்மை தெரிஞ்சா என்ன ஆகும்…” என்று கூறிக்கொண்டு அடுத்த வேலையை பார்க்க சென்றுவிட்டார்….

அவள் செல்வதை அந்த டாக்டர் பார்க்கவில்லைஆனால் அந்த செவிலியர் பார்த்துவிட்டார்அவரால் உண்மையை கூற முடியவில்லை

மருத்துவமனை சென்று விட்டு வந்த இரவு சைந்தவி வாசுவுடனே சுற்றி கொண்டு இருந்தாள்அதுவும் அவனிடம் அதீத நெருக்கம் காண்பித்தாள்அது மிகவும் வாசுவிற்கு மிகவும் யோசனையாக இருந்ததுஆனால் அவளோ அவனை யோசிக்க விடாமல் தன்னை பார்க்க வைத்தாள்

மாமா டாக்டர் தான் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லைனு சொல்லிட்டாங்கஅப்புறம் ஏன் நம்ம வாழ்க்கையை இன்னும் ஆரம்பிக்கல…. என்னை உனக்கு பிடிக்கலையா மாமாஎன் கட்டாயத்துக்காக டாக்டர் கிட்ட கூட்டிட்டு போனியாசொல்லு மாமா நான் வேணாமா உனக்கு…” என்று கண்ணீருடன் கேட்டாள்

அவன் எதுவும் கூறாமல் அவளை தன்னுடன் சேர்த்து இறுக்கமாக அணைத்து கொண்டான்அவனை தள்ளிவிட்டவள்சும்மா சும்மா கட்டிப்பிடிச்சு என்னை திசை திருப்பாத மாமாஎனக்கு பதில் சொல்லு…” என்று கோவமாக கூறினாள்

அம்மு சத்தியமா சொல்றேன்திலீப் கல்யாணத்துக்கு அப்பறம் கண்டிப்பா நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்என்று அவள் கன்னத்தை ஏந்தி அவள் கண்களை பார்த்து கூறினான்

அவள் அவனை தள்ளி விட்டு வெளியே செல்ல முறைப்படும் போதுஅம்மு என்னை இப்படி தள்ளி விட்டெல்லாம் போகாதஎனக்கு கஷ்டமா இருக்குகோவமா இருந்தா அடிஆனா பேசாம இருக்கிறது என்னை விட்டு போறது எல்லாம் பண்ணாத சரியா….” என்று கேட்டான்

அவளோ எதுவும் பேசாமல் அவனிடம் இருந்து கையை உருவி கொண்டு பால்கனியில் இருக்கும் பீன்பேக்கில் போய் அமர்ந்து கொண்டு வானத்தை வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டாள்வாசு அவள் பின்னால் போகும் நேரம் யாரோ கதவை தட்டுவது போல் கேட்டதுஅதனால் அவன் கதவை திறக்க சென்றுவிட்டான்….

அவன் கதவின் அருகில் சென்று திரும்பி பார்க்க அப்போதும் அவள் அங்கு தான் அமர்ந்து இருந்தாள்அவன் கதவை திறக்கும் போது அங்கு இளவரசி தான் நின்று இருந்தார்ஆனால் அவரின் பார்வையோ உள்ளே தான் சென்றாள்அங்கு அவள் வெளியில் அமர்ந்து இருப்பதாய் பார்த்து கேள்வி கேட்பாரோ என்று யோசித்தான்அவர் கேள்வி கேட்டாலும் அவன் பதில் சொல்லி விடுவான் ஆனால் அந்த பதிலில் சைந்தவி இளவரசி யாரோ ஒருவர் காயமடைந்து விடுவர்….

இளவரசி எந்த கேவியும் கேட்கவில்லை…. “தம்பி பாப்பாவை பார்க்க தான் வந்தேன்நாளைக்கு தாலியை பூஜை அறையில வெச்சு சாமி கும்பிடனும்தாலி எங்க இருக்கும்னு பாப்பாவுக்கு தான் தெரியும் அது தான் கேட்க வந்தேன்பாப்பா தூங்கிட்டு இருக்காநான் காலையில பேசிக்குறேன்.. நீயும் போய் தூங்குஎன்று கூறி சென்றுவிட்டார்

அப்போது தான் அவனும் பின்னால் திரும்பி பார்த்தான்அங்கு அவனின் அம்முவோ அவனுக்கு முதுகை காட்டி படுத்து கொண்டு இருந்தாள்.. கதவை சாத்திய வாசு அவள் அருகில் சென்று அவளை அணைத்து கொண்டு படுத்தான்ஆனால் அவள் எந்த எதிர்வினையும் ஆற்றாமல் படுத்து இருந்தாள்

அம்மு உங்கிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன் என்கூட பேசாம இருக்காதஅது எனக்கு ஹர்ட் ஆகுது அம்மு…” என்று கொஞ்சம் கோவமாக கூற தான் நினைத்தான்ஆனால் அவளிடம் அந்த கோவை குரல் வெளியே வரவே இல்லை

அவள் கண்கள் மூடி படுத்து இருக்க அழுது கொண்டே உறங்கி இருந்தாள்அவனால் அவளுக்கு பதில் கூற முடியவில்லைஅடுத்த நாளும் சைந்தவி அவனிடம் பேசவில்லைவீட்டில் உள்ளோரிடம் இருக்கும் படியே பார்த்து கொண்டாள்அன்று இளவரசி சைந்தவியிடம்பாப்பா தாலியை பூஜை அறையில வெச்சு சாமிக்கு பூஜை பண்ணு” என்று அவர் கூறும் போதே வசந்தி “அண்ணி நீங்களே பண்ணுங்கஅவ சின்ன பொண்ணு தானுஅவளுக்கு இன்னும் குழந்தை வேற பிறக்கலஅவ பூஜை பண்ணி எதோ சின்ன தப்பனாலும் அவளை தான் சொல்லுவாங்கஅதுனால நீங்களே பண்ணுங்க” என்று கூறினார்

இளவரசியோ கோவப்பட்டுஎன்ன பேசுறிங்கனு தெரிஞ்சு தான் பேசுறிங்களாஅவ உங்க பொண்ணுஇப்படி பேசுறீங்கவேற யாரோ பேசுவாங்களா நீங்க பேசுவீங்களாபேசுற அப்ப பாத்து பேசுங்கஎன்று கோவமாக அவரிடம் கூறிவிட்டு சைந்தவியிடம்பாப்பா சாமிக்கு பூஜையை ஆரம்பி…” என்று கூறினார்

அவள் அமைதியாக நிற்க திவ்யாசைத்து இவங்க பேசுறதை எல்லாம் யோசிக்காதஎனக்கு தெரியும் எனக்கு நீ ஒரு சதவீதம் கூட கெட்டது நினைக்க மாட்டஎனக்கு நல்லது நடக்கனும்னு நினைக்குற முதல் ஆளு நீ தான்எனக்காக நீ பூஜை பண்ணா தான் நல்லா இருப்பநீ பூஜை பண்ணுஎன்று கூறினாள்..

கோகிலா காதம்பரி அனைவரும் கூறவே தன்னை ஒரு நிலைப்படுத்தி பூஜை செய்ய ஆரம்பித்தாள்அவள் வீட்டில் பூஜை செய்ததும் அனைவரும் மண்டபத்திற்கு கிளம்ப சென்றனர்

இளவரசி வசந்தியை தனியாக அழைத்துநீங்க யாரு சொல்லி இப்படி பேசுறீங்க தெரியும்உங்க பெரிய பொண்ணை வாசு அப்போவே சும்மா விட்டது நாங்க சொன்னதுக்காக தான்அவன் கோவத்தை பத்தி உங்களுக்கு தெரியலஅவனுக்கு கோவம் வந்தா முன்னாடி யார் இருக்காங்கனு பார்க்க மாட்டான்.. பாத்து இருந்துக்கோங்கஅவளை பெத்தது நீங்களா இருக்கலாம்ஆனா இப்போ அவ எங்க வீடு மஹாராணிஅவளை எதோ சொன்னிங்கன்னா நானே சும்மா இருக்க மாட்டேன்.. மண்டபத்துக்கு கிளம்புங்க…” என்று கூறி அவரும் கிளம்ப சென்றுவிட்டார்

அனைவரும் மண்டபத்திற்கு கிளம்ப அன்று இரவு வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததுஅனைவரும் பரபரப்பாக வேலை பார்த்து கொண்டு இருக்க அப்போது யாரென்றே தெரியாத ஒரு குழந்தை சைந்தவியிடம் எதோ ஒரு பார்சல் கொண்டு வந்து கொடுத்து விட்டு சென்றது

அது என்ன பார்சல் என அறைக்கு சென்று பார்த்தவள் அதில் இருந்ததை பார்த்து இடிந்து போய் அமர்ந்துவிட்டாள்தன்னக்குள் ஒரு முடிவை எடுத்து கொண்டு அதை மறைத்து வைத்து விட்டு எப்போதும் போல் வெளியில் சென்று வேலைகளை பார்க்க சென்றுவிட்டாள்….

அந்த நாள் அவள் திவ்யாவுடன் உறங்க அடுத்த நாள் திலீப் திவ்யா இருவரின் திருமணமும் நன்றாக நடைபெற்றது…. முதல் இரண்டு முடிச்சை திலீப் போட நாத்தனார் முடிச்சை சைந்தவி திலீப்பின் தங்கையாக போட்டு முடித்தாள்

அனைத்து  சடங்கும் முடிந்து அனைவரும் வீட்டிற்கு சென்று அங்கு செய்ய வேண்டியதையும் செய்து முடித்தார்……. இரவு சடங்கிற்கு திவ்யாவை அனுப்பி வைத்த சைந்தவி காதம்பரி இருவரும் அவரவர் அறைக்கு சென்றனர்

சைந்தவி அலைச்சலில் உறங்கி இருக்க வாசுவும் அவளை அணைத்து கொண்டு நிம்மதியாக உறங்க ஆரம்பித்தான்அடுத்த நாள் காலை சீக்கிரமாய் சைந்தவி எழுந்து விட வாசுவின் நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டு நகர பார்க்க வாசுவோலவ் யூ அம்முஎன்று உறக்கத்திலேயே கூறி மீண்டும் நன்றாக உறங்கிவிட்டான்

அவள் அவனின் காதலை எண்ணி கலங்கியபடியே தோட்டத்திற்கு சென்று அங்கு வேடிக்கை பார்க்க ஆரம்பிக்க வசந்தி அவ்விடம் வந்தார்அவர் எதோ ஒரு விஷயம் அவளிடம் பேச அதை கேட்ட அவளோ ஒரு வெற்று பார்வை பார்த்து விட்டு அந்த இடம் விட்டு சென்றுவிட்டாள்….

அடுத்த இரண்டு நாளில் சைந்தவி வீட்டை விட்டு சென்று இருக்க வாசு பைத்தியம் பிடிக்காத குறையாய் அவளை தேடி சுற்றி கொண்டு இருந்தான்எது உண்மை என நினைத்து சைந்தவி வீட்டை விட்டு சென்றாளோ அது உண்மை இல்லை என கூற அவனின் அம்முவை ஒவ்வொரு இடமாக தேடி சுற்றி கொண்டு இருந்தான்

அதற்கு முன் இதற்கு காரணமானவர்களை உனது இல்லை என ஆக்கிவிட்டு தான் அவளை தேடி கொண்டு இருந்தான்…..

 

(யாரு இதுக்கு காரணம்னு தெரிஞ்சா சொல்லுங்க…. அப்டியே படிச்சிட்டு லைக் அண்ட் கமெண்ட் பண்ணுங்க கிஸ்முன்னை விட லைக்ஸ் கம்மியா தான் வருதுஎதோ கருது இருந்தா கமெண்ட் பண்ணுங்க…)

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
24
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்