Loading

அத்தியாயம் 15

 

பரிதி, வெளிநாட்டிற்கு அனுப்ப வேண்டிய தயாரிப்புகளை நிறுத்த சொல்லி இருந்த விஷயம், இனியனை வந்து சேர்ந்தது.

 

அவன் அலுவலகத்தில் இருந்து உடனே பரிதிக்கு தொடர்பு கொண்டான்.

 

அருகிலோ, நகத்தை கடித்தவாறு வைஷ்ணவி அமர்ந்து இருந்தாள்.

 

இந்த பக்கம் இனியனின் அழைப்பு வந்ததும், “சொல்லு இனியா..” என்று முடிக்க முதலே,

 

“எதுக்கு ப்ரொடக்சனை நிறுத்த சொல்லி இருக்க.. நம்ம அனுப்பனும்னு தெரியாதா..” என்று கோவமாகவே கேட்டான்.

 

“டேய்.. எதுக்கு டா இப்போ கோவப்படுற.. எதுக்கு எடுத்தாலும் கோவப்படுறதை நிறுத்து. நான் எது பண்ணாலும் ஒரு காரணம் இருக்கும்னு உனக்கு தெரியும்ல..” என்று அண்ணன்காரன் அவனுக்கும் கோவம் வந்து விட, அதே தொணியிலேயே பேசினான்.

 

இனியனுக்கு சற்று கோவம் தணிந்து, “சொல்லு.. என்ன ஆச்சு..” இப்பொழுது நிதானமாக கேட்டான் தம்பிக்காரன்.

 

“நம்ம ப்ராடக்ட் எல்லாம் அங்க யூஸ் பண்ணால், மக்களுக்கு அலர்ஜி வருதாம். அதுனால ரிட்டன் அனுப்பிட்டாங்க. இனிமேலும் வேண்டாமாம். நம்மகிட்ட போட்ட அக்ரீமெண்ட் கேன்சல் பண்ணிட்டான் அந்த ஸ்டீபன்.” என்றான் பரிதி.

 

“வாட்.. இது எப்படி சாத்தியம். அதுக்கு வாய்ப்பே இல்லையே..” என்றான் இங்கிருந்து இனியன்.

 

வைஷ்ணவியோ, “என்ன டா ஆச்சி..” என்று அவன் கையை சுரண்ட, அவனுக்கு இருந்த கடுப்பில், ” போடி.. ” என்று திட்டி விட்டான்.

 

அவளோ அவனை முறைத்துக் கொண்டே, “சரிதான் போடா..” என்று திட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டாள்.

 

“நானும் அதான் ஸ்டீபன் கிட்ட சொன்னேன். ஆனால் அவன் நம்பவே இல்லை..” என்றவன் பின் நிறுத்தி,

 

“இனியா.. அங்க அனுப்பனும்னு தயார் பண்ண தயாரிப்புகளை நீ அகைன் லேப்ல கொடுத்து செக் பண்ணு. எதுக்கும் நம்ம ஒரு தரம் செக் பண்ணிக்கலாம்..” என்றான் பரிதி.

 

“சரிண்ணா..” என்றவன் யோசனையில் ஆழ்ந்தான்.

 

அவனது அலைபேசி அழைக்க, யார் என்று பார்க்க, ஷில்பா என்ற பெயரை பார்த்ததும், “ப்ச்.” என்று நெற்றியை நீவியவன்,  அழைப்பை ஏற்று, “சொல்லு ஷில்பா.. ” என்றிட,

 

“ஹாய்.. இனியா.. இன்னைக்கு நைட் பார்ட்டி இருக்கு. இன்னிக்காவது வாயேன்..” என்று அழைத்திட,

 

“நோ.. அதுக்கு எல்லாம் நேரம் இல்லை.. இன்னொரு நாள் பார்த்துக்கலாம்..” என்று கூறி விட்டு அழைப்பை அணைத்து விட்டான்.

 

அலுவலத்தில், அவனது அறையில் இருந்து கிளம்பி, வெளியில் வந்த சமயம், வைஷ்ணவி, அலுவலகத்தில் வேலை பார்க்கும் தீபன் என்ற நபரிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

 

அதைக் கண்ட இனியனோ, “வைஷு..” என்று அவளை அழைக்க, 

 

அவனும் அருகில் வந்த அவளிடம், “அவன்கிட்ட என்ன பேச்சு வேண்டி இருக்கு. போய் வேலையை பாரு..” என்று அவளை அனுப்பி வைத்தான்.

 

அவனை முறைத்தவாரே உள்ளே சென்று விட, இனியனோ தீபனின் அருகில் வந்து, “வேலை பாக்க வந்தா, அதை மட்டும் பாக்கணும். தேவை இல்லாம பேசிட்டு இருக்காத..” என்று அவனை எச்சரித்து விட்டு, நேராக சென்றது என்னவோ தொழிற்சாலைக்குத் தான்.

 

அங்கு மேனேஜரிடம் கூறி, தயாரிப்புகளில் இருந்து சிறிதளவு சாம்பிள் எடுத்து வரச் சொல்லி இருந்தான் இனியன்.

 

அவரும் எடுத்து வந்து கொடுத்து விட்டு, “சார்.. என்ன ஆச்சு..” என்று பதட்டத்துடன் கேட்டார்.

 

“சொல்றேன்…” என்றவன் வேறு எதுவும் பேசாமல் அங்கிருந்து அவர்கள் எப்பொழுதும் கொடுக்கும் சோதனை கூடத்திற்கு கொண்டு வந்து கொடுக்க, அவரும் மறுநாள் வரச் சொல்லி இருந்தார்.

 

மீண்டும் அலுவலகம் திரும்புகையில், காயத்ரி அவனுக்கு அழைத்து இருந்தாள்.

 

“இவ எதுக்கு பண்றா..” என்று புருவங்களைச் சுருக்கி யோசித்தவன், காரை ஓரமாக நிறுத்தி விட்டு, அழைப்பை ஏற்றான்.

 

“சொல்லி காயத்ரி.. உன்ன தான் கால் பண்ண வேண்டாம்னு சொல்லி இருந்தேன்ல.. ” என்று கேட்டதற்கு,

 

“இது ரொம்ப முக்கியமான விஷயம். அதை சொல்லத்தான் உனக்கு கூப்பிட்டேன்.” என்றாள் அவள்.

 

“என்ன..” என்று யோசனையுடன் கேட்டான் அவன்.

 

“இன்னைக்கு அந்த சஞ்சய்கிட்ட சைன் வாங்க உள்ள போகும் போது, அவன் போன்ல யாருகிட்டயோ உங்கள பத்தி பேசிட்டு இருந்தான்.” என்றாள் காயத்திரி.

 

“என்ன னு..” என்று புருவங்கள் முடிச்சிட கேட்டதற்கு,

 

“அவன் நெனச்ச போலவே உங்களுக்கு அந்த ஃபாரின் கான்ட்ராக்ட் கேன்சல் ஆகிடுச்சுனு. பேசிட்டு இருந்தான் டா..” என்றாள் பெண்ணவள்.

 

“ஓஹோ.. அப்போ அவன் ஏதோ சதி பண்ணி இருக்கான்.. இருக்கட்டும். அவனுக்கு இருக்கு.. ” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

 

“இன்னுமொரு முக்கியமான விஷயம்.. உங்க அண்ணணுக்கு ஆக்சிடென்ட் ஆச்சுல்ல.. அவன் பண்ண சொல்லித்தான் நடந்தது..” என்று சொல்ல,

 

அவனோ, “உனக்கு எப்படித் தெரியும்..” என்று கேட்டான் கோவத்தை அடக்கியவாரு.

 

“அதையும் தான் பேசுனான். அவனை ஆக்சிடண்ட் பண்ணதுல அவன் தப்பிச்சிட்டான்னு.. டேய்ய்.. இனியா.. நீங்க ரெண்டு பெரும் ஜாக்கிரதையா இருங்க டா..” என்று அவள் கூற,

 

“ம்ம்ம்.” என்றவன் அழைப்பை அணைத்தான்.

 

அதே கோபத்துடனே, அலுவகத்திற்கு சென்று வைஷ்ணவியை அழைத்துக் கொண்டு வீட்டில் கொண்டு போய் விட்டவன், மீண்டும் ஷில்பாவிற்கு அழைத்து, “எங்க பார்ட்டி நடக்குது.” என்று அவளிடம் கேட்டுவிட்டு அந்த இடத்திற்கு காரை கிளப்பும் தருவாயில் வைஷ்ணவி, “எங்க கிளம்புற..” என்று கேட்க,

 

” ஷில்பா வீட்டுக்கு.. ” என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டான்.

 

அவளோ யோசனையுடன் வீட்டின் உள்ளே சென்றாள்.

 

“ஹே….” என்று உற்சாகக் கூக்குரல் வெளியில் வரைக்கும் கேட்டது.

 

இனியன் காரை நிறுத்தி விட்டு, உள்ளே செல்ல, அங்கு ஷில்பா,  இன்னும் சில பெண் தோழிகள் மற்றும் ஆண் நண்பர்களுடன் ஆடிக் கொண்டிருந்தனர்.

 

இனியன் வருவதைப் பார்த்த ஷில்பா, “ஹே.. இனியா.. வா வா..” என்று கையைப் பிடித்து அழைத்துக் கொண்டுச் சென்று மற்றவர்களுக்கு அவனை அறிமுகம் செய்து வைத்தாள்.

 

அங்கு அவனுடன் படித்த நண்பர்களுடன் மேலும் புதிய நண்பர்களும் இருந்தனர்.

 

அனைவரும் சேர்ந்து மதுவை உள்ளுக்குள் ஏற்றிக் கொண்டு மேற்கத்திய இசைக்கு ஏற்ப, உடம்பை வளைத்து வளைத்து ஆடிக் கொண்டிருந்தனர்.

 

எப்பொழுதும் அளவாக எடுத்துக் கொள்ளும் இனியன், இன்று சஞ்சய் மேல் உள்ள ஆத்திரத்தில் சற்று அளவுக்கு அதிகமாகவே எடுத்துக் கொண்டான்.

 

எல்லாம் தெரிந்தும் அவனை ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற இயலாமையிலும் , அண்ணன் தன் கையை கட்டிப் போட்ட கடுப்பிலும், மதுவை அதிகமாக உட்கொண்டான். 

 

அதன் விளைவாக, நிதானம் தப்பி போனது.

 

அவன் நிதானமின்றி ஏதேதோ புலம்புவதைப் பார்த்த ஷில்பா, நண்பன் ஒருவனுக்குக் கண் காட்ட, அவனோ இனியனை எழுப்பி அங்கிருந்த அறைக்குள் அழைத்துச் சென்றான்.

 

அதன் தொடர்ச்சியாக, ஷில்பா உள்ளே சென்று கதவை சாற்றிக் கொண்டாள்.

 

இங்கு வீட்டிலோ நேரம் ஆக ஆக இவனை ஆளைக் காணோம் என்று மாறி மாறி போன் அடிக்க, அந்த பக்கம் அழைப்பு போனதே தவிர எடுக்கப் படவில்லை.

 

வைஷ்ணவியிடம் ” வைஷு.. உங்கிட்ட எங்க போறானு சொல்லிட்டு போனானா.. ” என்று பரிதிக் கேட்க,

 

“அது.. அவன் ஃப்ரண்ட் வீட்டுக்கு போறேன்னு சொல்லிட்டு போனான் மாமா..” என்றாள்.

 

அவளுக்குமே உள்ளுக்குள் பதற்றம் தான்.

 

அந்த ஷில்பாவை பற்றி அவளுக்கும் தெரியும்.

 

எப்பொழுதும் அவள் பார்ட்டி என்று அழைத்தாலும் கூட, அதை நாகரீகமாக தவிர்த்து விடுவான். இப்பொழுது அங்கு சென்று இருக்கின்றான் என்றால்…

 

இவளுக்கு அடி வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்து விட்டது.

 

இவன் சும்மா இருந்தாலும் அவள் இருக்க மாட்டாள்.

 

இப்பொழுது என்ன செய்வது.. என்று யோசிக்க ஆரம்பித்து இறுதியாக, இது தான் சரி என்று முடிவு எடுத்து அவளே அழைத்து வர கிளம்பி விட்டாள்.

 

வீட்டினரிடம், “எனக்கு இனியன் ஃப்ரண்ட் வீடு தெரியும். சொல்லி இருக்கான். நான் டிரைவர் அண்ணாவை கூப்பிட்டு  போறேன். அவனை கூட்டிட்டு வரேன்..” என்று சொல்லிவிட்டுக் கிளம்பி இருந்தாள்.

 

ஷில்பாவின் வீடு, புறநகர் பகுதியில் அமைந்துள்ளது..  

 

அவளது வீட்டில் இருந்து சற்று தொலைவு தான்.

 

வீட்டை அடைந்ததும், திறந்து இருந்த கதவின் வழியே உள்ளே போக, ஆங்காங்கு ஆண்கள் மற்றும் பெண்கள் குடித்து விட்டு மட்டையாகி இருந்தனர்.

 

இனியன் எங்கே என்றுத் தேட, அவனை அந்தக் கூட்டத்தில் காணவில்லை.

 

ஒரு அறையின் கதவு லேசாக திறந்து இருக்க, யாரோ உள்ளே படுத்து இருப்பதைக் கண்டு மெல்ல எட்டிப் பார்த்தாள்.

 

இனயன் படுத்து இருப்பது தெரிந்ததும், “அப்பாடா..” என்று பெருமூச்சு விட்டபடி, நன்றாக கதவை 

திறந்து, இனியனின் அருகில் சென்று அவனை எழுப்ப  முயல, அவனோ நன்றாக போதையில் தூங்கிக் கொண்டிருந்தான்.

 

அவனது உடை எல்லாம் கலைந்து இருந்தது.

 

ஒரு வித யோசனையுடன், பதற்றத்தை வெளியில் காட்டதவாரு, அவனது உடைகளை சரி செய்து 

அவனை மெல்ல எழுப்பி விட்டு, அவனது தோளினில் தன் கையைப் போட்டு சுற்றி வளைத்துக் கொண்டு வீட்டின் உள்ளே இருந்து வெளியே வர, கார் டிரைவர் பார்த்து விட்டு அவரும் ஓடி வந்து ஒரு பக்கம் பிடித்துக் கொண்டார்.

 

அவனை பின் பக்க சீட்டில் அமர வைத்து விட்டு, அவளும் அருகினில் அமரப் போக, அவளது போன் உள்ளே கட்டிலில் வைத்த நியாபகம் வர, மீண்டும் அதனை எடுக்க உள்ளேச் சென்றாள்.

 

சிறிது நேரம் கழித்து வந்தவளின் முகம் இறுக்கமாகவே இருந்தது.

 

இனியனின் அருகில் அமர்ந்து கொண்டு, “வீட்டுக்குப் போங்க ண்ணா..” என்று சொல்ல, வரும் காரை வீட்டை நோக்கிச் செலுத்தினார்.

 

இங்கு வீட்டிலோ அவனை எதிர்பார்த்து அனைவரும் உறங்காமல் காத்துக் கொண்டிருக்க, கார் வரும் சத்தம் கேட்டு, மங்களம், விநாயகம் மற்றும் மல்லிகா மூவரும் வெளியில் வந்தனர்.

 

பரிதியோ அறையில் இருந்து வெளி வந்து நின்று பார்த்தான்.

 

ஓட்டுநர் இறங்கி கதவைத் திறந்து விட, அவளும் இறங்கி மெதுவாக இனியனையும் வெளியே இழுத்து, பிடித்துக் கொள்ள, அதைப் பார்த்த விநாயகம் ஓடி வந்து இன்னொரு பக்கம் பிடித்துக் கொண்டார்.

 

மங்களமோ வேதனையாக மகனை பார்த்துக் கொண்டிருந்தார்.

 

வீட்டின் உள்ளே அழைத்து வந்த பிறகு, பரிதியும் இனியனின் நிலைமையை அதிர்ச்சியுடன் பார்த்தான்.

 

என்னவாக இருக்கும் என்று யோசித்தான்.

 

அவனது அறையில் கட்டிலில் படுக்க வைத்துக்கொண்டிருக்க, ஊன்று கோளின் உதவியுடன் பரிதி உள்ளே நுழைந்தான்.

 

“வைஷு.. எங்க இருந்தான் அவன்..” பரிதிக் கேட்க,

 

“அவன் ஃப்ரண்ட் வீட்டுல மாமா.. ” என்றாள்.

 

“எங்க…” பரிதி..

 

“அது… எங்க கூட படிச்ச பொண்ணு வீடு. ஷில்பா..” என்றாள்..

 

பரிதிக்கும் தெரியும். வைஷு அவனிடம் கூறி இருக்கின்றாள்.

 

“அங்க தான் எப்பவும் போக மாட்டானே. இன்னைக்கு என்ன திடீர்னு..” கேட்டதற்கு,

 

“தெரியல.. உங்ககிட்ட காலைல பேசுனதுல இருந்து டென்ஷனா தான் இருந்தான். அதுக்கு அப்புறம் பேக்டரிக்கு கிளம்பி போனான். அப்புறம் திரும்ப என்னை கூப்பிட்டு வீட்டுல விட்டுட்டு அப்படியே கிளம்பி போய்ட்டான்.” என்றாள் வைஷ்ணவி.

 

“ம்ம்ம்…” என்றவன், “காலைல பேசிக்கலாம்..” என்று அவளிடம் சொல்லிவிட்டு அவன் கிளம்பி விட,

 

இவளும் சிறிது நேரம் அங்கிருந்து பார்த்து விட்டு ஒரு பெருமூச்சுடன் கிளம்பி விட்டாள்.

 

 

நித்தமும் வருவாள்….

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
11
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்