சிலையும்,சிவமும் (பாகம்-1)
மாணிக்கம்: நவரத்தினங்களில் இது சூரியனுக்கு உரிய கல்.
மாணிக்கத்தை அணிந்து கொண்டால் இரத்த சோகை, உடல் சோர்வு, கண் நோய், இருதய கோளாறுகள் நீங்கும்.
அது தாமிரபரணி கரையோர இருக்கும் ஒரு கிராமம். பருவ மழையில்லாமல் தாமிரபரணி வறண்டு போயிருக்க.. அதிக பசுமை இல்லாமல்… இங்கொன்றும்… அங்கொன்றுமாக சில மரங்கள்…அதில் இருந்த இலைகளில் பசுமையால் கொஞ்சம் குளிர்ச்சி இருந்தது.
புழுதி பறக்க வந்து நின்ற அந்த அரசு பேருந்து நின்றதும், “யாருங்க அது…நவரத்னபுரம் கேட்டது.. ஊரு வந்தாச்சு.. இறங்குங்க” என்ற கண்டக்டரின் குரலால், அதில் இருந்து இறங்கிய ஈஸ்வர் அந்த ஊரை சுற்றி ஒரு பார்வை பார்க்க, திருநெல்வேலிக்கு அருகில், தாமிரபரணி கரையோர கிராமம் என புகழ்ந்து சொல்லப்பட்ட அந்த கிராமம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வெறும் பொட்டல் வெளியாக இருந்தது.
அந்த காலை வேளையிலும் வெய்யிலின் தாக்கம் அவனுக்கு தெரிந்தது. தாகம் நாக்கை வரட்ட.. குடிக்க தண்ணீர் வேண்டி ஏதாவது கடையை தேடினான். இருந்த ஒரு கடையும் பூட்டி இருக்க, வேறு எங்கும் யாரும் கண்ணுக்கு தென்படாததால், இறங்கிய இடத்தில் இருந்து நேராக நடக்க ஆரம்பித்தான்.
சற்று தொலைவில் ஒரு கல் கட்டடம் இடிபாடுகளுக்கு இடையே இருப்பது அவனுடைய கண்களுக்கு தெரிந்தது.
அதை நோக்கி வேகமாக நடந்து போனான். அங்கு நின்று கொண்டு இருந்த பெரியவரிடம் “ஐயா..இங்க நவரத்னேஸ்வரர் கோயில் எங்க இருக்கு தெரியுமா” என கேட்டார்.
அந்த பெரியவர் “வாப்பா…ஈஸ்வரா வா…உனக்காக தான் இத்தனை வருஷமா காத்திருக்கேன்…இப்ப தான் வர வழி தெரிஞ்சுதா….
ஊருக்கு சரியான
நேரத்துல, சரியான இடத்துக்கு தான் வந்திருக்க” என சொல்ல..
ஊருக்கு சரியான
நேரத்துல, சரியான இடத்துக்கு தான் வந்திருக்க” என சொல்ல..
ஈஸ்வர் “என்னது சரியான நேரத்துல வந்திருக்கேனா….
எனக்காக காத்திருக்கீங்களா..
யார் சார் நீங்க….நான் யார்னு தெரியுமா.. எங்கேயிருந்து வரேன்னு தெரியுமா “.. என ஆச்சர்யத்தோடு கேட்டான்.
எனக்காக காத்திருக்கீங்களா..
யார் சார் நீங்க….நான் யார்னு தெரியுமா.. எங்கேயிருந்து வரேன்னு தெரியுமா “.. என ஆச்சர்யத்தோடு கேட்டான்.
அந்த பெரியவர் சிரித்து கொண்டே.. “ஏன் தெரியாம…உன்னை பத்தி சொல்லவா..இல்ல…உன் பூர்வீகத்தை பத்தி சொல்லவா….” என சிரித்தபடி கேள்வி எழுப்பினார்.
“இப்ப தான் நான் இந்த ஊருக்கே வந்திருக்கேன்… உங்களை இதுவரை நான் பார்த்தே இல்லை…நான் யாரு… என்னனே தெரியாம..கோணில கல்லை கட்டி அடிக்காதீங்க..ஐயா”
“தெரிஞ்சிருந்தா எங்க சொல்லுங்க பாப்போம்… என் பூர்வீகத்தை.. அதுக்கு முன்னாடி நீங்க யாரு.. உங்க பேர் என்னனு மொதல்ல சொல்லுங்க” என ஈஸ்வர் அவருக்கு சவால் விட்டான்.
அந்த பெரியவரும் “நான் ஒரு பரதேசி பா… என் பேர் சித்தன். சித்தன் போக்கு சிவன் போக்குனு திரியறவன்…ஒரு வகையில உங்க கொள்ளு தாத்தாவோட ப்ரெண்டு..என்னை பத்தின தகவல் போதுமா” என பதில் சொன்னார்.
ஈஸ்வர் “என்னது… என் கொள்ளு தாத்தாவா…. நல்லா சொன்னீங்க போங்க… எனக்கு எங்க தாத்தாவையே தெரியாது… இதுல கொள்ளு தாத்தாவா…அது சரி… அவர் ப்ரெண்ட் எப்டி இத்தனை வருஷம் உயிரோட இருக்க முடியும்?” என யோசித்தபடி கேள்வி எழுப்ப
சித்தன் “நமச்சிவாய” என சொல்லி வணங்கி விட்டு “நான் கும்பிடுற சிவனோட அருளால குடும்பமே இல்லாம, எந்த பற்றும் இல்லாம பரதேசியா திரிஞ்சதால.. இத்தனை வருஷமா வாழ்ந்துக்கிட்டு இருக்கேன்.. என்னை பத்தின தகவல் போதும்”
“இனி உன் பரம்பரை பத்தி சொல்றேன் கேளு…உன் கொள்ளு தாத்தா பேர் ஸ்வாமிநாதன்…. இதே ஊர் தான்… அப்ப இந்த ஊருக்கு சாமவேத மங்கலம்னு பேர்.”
“இந்த ஊர் பூரா சாம வேதம் சொல்றவங்க தான் இருந்தாங்க…இந்த ஊர் சிவனுக்கு தினமும் சாம வேத பாராயணம் நடக்கும். அவனோட கோயில் குளத்துக்கு நடுவில அற்புதமா இருக்கும். ம்… ம்ம்ம்.. அது ஒரு காலம்…” என சொல்லி பெருமூச்சு விட்டார்..
“என்னது.. இந்த ஊர் கோயில் குளத்துக்கு நடுவில இருக்குமா.. எங்க கோயிலையும் காணல…குளத்தையும் காணல என நம்பாமல் நக்கலாக கேட்ட ஈஸ்வரை முறைத்த சித்தன் “ம்ம்ம்…உன் வயசு இப்டி பேச சொல்லுது…”என பதில் சொல்லி
“இப்ப நீ நிக்கற இடம் தான் அந்த குளக்கரை.. அதோ சின்னதா ஒரு மாடம் மாதிரி தெரியுதே.. அங்க விளக்கு கூட எரியுதே.. அது தான் அந்த சிவனோட இருப்பிடம்…” என்று வேதனையோடு சொல்லி…
“நான் சொல்ல வந்ததை சொல்லிடறேன்… நீ குறுக்க பேசாம அமைதியா கேளு” என உத்தரவிட்டவர்..
“உங்க கொள்ளு தாத்தா இந்த ஊரோட நாட்டாமை.. ஊர் பணம் எல்லாத்தையும் இந்த ஸ்வாமி சன்னதில தான் வெச்சிருப்பார்..
ஊருக்காக செலவழிக்கிற ஒவ்வொரு பைசாவுக்கும் அவர் கிட்ட சரியான கணக்கு இருக்கும். அவ்ளோ நேர்மையானவர்..
“சாம வேதமும் சொல்வார்…அவர் வேதம் சொன்னா அந்த ஈஸ்வரனே நேர வந்து சொல்ற மாதிரி இருக்கும்…பசங்களுக்கு வேதம் கத்து குடுக்கறதை மட்டும் பண்ணார்…வேற பணம், காசு எதுலயும் ஈடுபாடு இல்லாம இருந்தார்”
“அவர்க்கு கொஞ்சம் ஜோசியமும் தெரியும்….தன்னை தேடி வர்றவங்களுக்கு ஜோசியம் பாப்பார்….அவர் சொன்னா அது அப்படியே பலிச்சிடும்”
“அவர் கிட்ட ஜோசியம் பாக்கறத்துக்காகவே உங்க வீட்டு வாசல்ல விடிகாலைலயே ஆட்கள்
வந்து குவிஞ்சிடுவாங்க”
வந்து குவிஞ்சிடுவாங்க”
“அவர் தன்னோட வேலைகள் எல்லாம் முடிச்சுட்டு தான் ஜோசியம் சொல்ல உட்காருவார்.”
“வந்தவங்கள்ல தினமும் ஒரே ஒருத்தருக்கு மட்டும் தான் ஜோசியம் சொல்வார்…அதுவும் காசே வாங்காம..”
“தான் தினமும் பூஜை செய்யற ஈஸ்வரனை தியானம் செய்து, அவர் யாரை கை காட்டறாரோ… அவர்க்கு மட்டும் தான் அன்னிக்கு ஜோசியம் சொல்வார்…அதனாலயே கூட்டம் அலை மோதும்..”
“எப்படிபட்ட பெரிய மனுஷனா இருந்தாலும் சரி…எவ்ளோ சிபாரிசுல வந்தாலும் சரி.. உங்க கொள்ளு தாத்தா ஒரே ஒருத்தருக்கு மட்டும் தான் ஜோசியம் சொல்றதுனு குறிக்கோளோட இருந்தார். யார் சொன்னாலும் அதுலேந்து பின்வாங்காம இருந்தார்.”
“உங்க கொள்ளு பாட்டிக்கு தான், கொள்ளு தாத்தாவுக்கு இவ்ளோ வித்தை இருந்தும் அதை காசாக்கவே இல்லயேனு ஏக வருத்தம். ஆனா அவர் அதை கொஞ்சம் கூட லட்சியம் பண்ணல…”
“உங்க கொள்ளு தாத்தா நாக்குல சாட்சாத் அந்த சரஸ்வதியே தாண்டவமாடினா… அவர் சொன்ன சொல் அப்படியே பலிக்கும்.. அதனால லஷ்மி உங்க வீட்டு வாசல்ல கூட எட்டி பாக்கல…”
“அவர் தினமும் கோயில்ல பூஜை செஞ்சு முடிச்சுட்டு வர எப்படியும் மூணு மணி நேரமாவது ஆகும்…”
“வீட்டுல பயங்கர கஷ்டம்..சாப்பாடு ஒரு வேளை தான்…அதுவும் அவர் கோயில்லேந்து எடுத்துட்டு வரது தான்…”
“வீட்டுல தீராத தரித்திரம் தாண்டவமாடறதை பாத்தார் உங்க தாத்தா ஹரிஹரசர்மா… தன் அப்பா கிட்ட வேதம் பூரணமா கத்துகிட்டவர்….தன் அப்பாவோட சொல்லுக்கு விரோதமா…தான் கத்துக்கிட்ட வேதத்தை வெச்சு சம்பாதிக்க ஆரம்பிச்சார்…”
(பாகம்-2)
“ஈஸ்வர் “ஐயா…பணம் சம்பாதிச்சா என்ன தப்பு இருக்கு..எனக்கு புரியலயே” என குழப்பத்தோடு கேட்டான்.
சித்தன் உடனே “ஈஸ்வரா…பணம் சம்பாதிக்கறது தப்பில்ல…ஆனா அவரோட கொள்கை விரோதமா பையன் சம்பாதிக்கவே..அவருக்கு கோவம் வந்தது..பையன் தன் பேச்சை கேட்கலனு அடிக்கடி திட்ட ஆரம்பிச்சார்”
ஈஸ்வர் ஆவல் தாங்காமல் “கடைசில என்னாச்சு ஐயா..”
“அவசரப்படாத பா.. சொல்றேன் இரு…அப்பாக்கும் பையனுக்கும் இந்த விஷயத்துல சதா தகராறு வர ஆரம்பிச்சதா…..”
“இப்படி தினமும் தகராறு வந்து ஒரு நாள் பேச்சு முத்தி போய்…கடைசில இனி நான் இங்க இல்ல…வேற எங்காவது போயிடறேன்…உன் கூட பேச மாட்டேன்…இனி இங்க வரவே மாட்டேன்.. இது அந்த ஈஸ்வரன் மேல சத்தியம்னு சொல்லிட்டு உங்க தாத்தா ஹரிஹரன் இங்கேந்து கெளம்பி பட்டணம் போயிட்டார்..”
“ஓஓஓ… அவர் தான் எங்க தாத்தாவா.. எங்கப்பா திதி குடுக்கும் போது பேர் சொல்வார்.. கேட்டிருக்கேன்..” என குறுக்காக ஈஸ்வர் சொல்ல…
மறுபடியும் முறைத்த சித்தன் “உன்னை நடுவில பேசாதனு சொன்னேனா இல்லையா…” என கோபமாக சொல்லி முறைக்க
ஈஸ்வர் அதில் உடனே
அமைதியாகி…”மன்னிச்சுக்கோங்க ஐயா.. நீங்க சொல்லுங்க” என்றான்.
அமைதியாகி…”மன்னிச்சுக்கோங்க ஐயா.. நீங்க சொல்லுங்க” என்றான்.
தன் பேச்சை தொடர்ந்த சித்தன் “சில வருஷம் அப்பாவுக்கும்.. பிள்ளைக்கு பேச்சு வார்த்தை இல்ல.. உங்க கொள்ளு தாத்தாக்கு இருந்த கோவத்துல தன் பிள்ளை எங்க இருக்கானு தெரிஞ்சுக்க கூட விரும்பல..”
“இப்படியே காலம் போச்சு..பாவம்.. உங்க கொள்ளு பாட்டி.. எப்ப பாரு அழுதபடியே இருப்பாங்க..
பிள்ளையை தான் சாகறத்துக்குள்ளயாவது பாக்கணும்னு அந்த ஈஸ்வரனை வேண்டியபடி ஏக்கத்தோடயே இருந்தாங்க”
ஈஸ்வர் “அடடா.. அப்பறம் என்னாச்சு ஐயா.. எங்க தாத்தாக்கள் ரெண்டு பேரும் கடைசில பாத்துக்கிட்டாங்களா.. இல்லையா” என ஆவலை அடக்க முடியாமல் கேட்டான்.
அந்த வார்த்தைகளில் முகம் வாடி போன சித்தன் அப்டி நடந்தா அப்பறம் யார் அந்த ஈஸ்வரனை நினைப்பாங்க பா”
“சில வருஷம் கழிச்சு.. ஹரிஹரசர்மா சொன்ன மாதிரி அவனோட பிராணன் போய் உடம்பை மட்டும் தான் இங்க எடுத்துட்டு வந்தாங்க..”
“அத பார்த்த உங்க கொள்ளு பாட்டியும்.. தான் அழுது அழுது தான் தன் பையன் தன்னை விட்டு போயிட்டான்னு அதிர்ச்சியில
செத்து போயிட்டாங்க”
செத்து போயிட்டாங்க”
“என்னது…எங்க குடும்பத்துல.. ஒரே நேரத்துல ரெண்டு பேர் இறந்து போயிட்டாங்களா..” என வேதனையோடு ஈஸ்வர் கேட்டான்.
சித்தன் “ஆமாம் பா…அதுல ரொம்பவே மனசொடிஞ்சு போனார் உங்க கொள்ளு தாத்தா..அவர் தான் இந்த ஊர் கோயில்ல இருக்கற ஈஸ்வரனுக்கும் பூஜை செய்தவர்…”
“நான் மனசார.. எந்த விக்ஞமும் இல்லாம தினமும் அந்த ஈஸ்வரனுக்கு பூஜை பண்ணேனே.. அவன் எனக்கு இப்டி ஒரு விதிய குடுத்திட்டானேனு தன் பொண்டாட்டிக்கும், பையனுக்கும் செய்ய வேண்டிய காரியங்களை சொல்ல முடியாத வேதனையோடு செஞ்சார்….”
“தன்னை ஆதரிக்க இருந்த பையனும் போயிட…கோயிலுக்கு இனி தன் பரம்பரையால பூஜை செய்ய முடியாதுனு அவருக்கு புரிஞ்சு போயிட… அப்ப இங்க சூழ்ந்து இருந்த ஆபத்துக்களை தெரிஞ்சுகிட்டார்..”
“தன் காலத்துக்கு பின்னால இந்த கோயிலை யாரும் பாத்துக்க மாட்டாங்கனு தெளிவா தெரிஞ்சிடவே…கோயிலும் கூடிய சீக்கிரமே சிதிலமாகிடும்னு அவரோட ஜோசிய அறிவால உணர்ந்து… இங்க இருந்த நவரத்னேஸ்வரர் எடுத்து மறைச்சு வெச்சுட்டு போயிட்டார்…”
“அவர் போன பின்னால, அவர் மறைச்சு வெச்ச ஸ்வாமியை கண்டுபிடிச்சு வெளில எடுத்துட்டாங்களா..” என ஆவலோடு விஷயத்தை தெரிந்து கொள்ளும் நோக்கத்தில் ஈஸ்வர் கேட்க..
சித்தன் “இதுவரை இல்லப்பா..அவருக்கு தெரிஞ்ச ஜோசியத்தால … தன் பரம்பரையில யார்க்கு ரெட்டை பெண் குழந்தைகள் பிறக்குதோ அவனால தான் இந்த கோயிலுக்கு விமோசனம்… “
“அவன் வெள்ளிக்கிழமை நிறைஞ்ச பௌர்ணமி திதி.. சுக்ர ஹோரைல இந்த மண்ல காலடி எடுத்து வெப்பான். அவன் பிறந்த அதே நேரம் இந்த ஊரை காத்த பரம்பரையை சேர்ந்த ஒருத்தன்… இதே மாசம்… இதே நட்சத்திரம்.. இதே கிரக அமைப்போட பிறப்பான்…
“அவங்க ரெண்டு பேருக்கும் பிறந்து சரியாக முப்பது வயசு வரும் போது காலம் அவங்களை ஒண்ணா சேர்க்கும்..அது இதே மாசமா இருக்கும்….”
“அவங்க சந்திக்கற அன்னிக்கு நிறைஞ்ச பௌர்ணமி..
வெள்ளிக்கிழமையா தான் இருக்கும்…அப்படி சேர்ந்து அவங்க ரெண்டு பேரும் ஒண்ணா வந்தா மட்டும் தான், தன்னால மறைஞ்சு வெச்ச அந்த நவரத்னேஸ்வரரை மறைச்சு வெச்ச இடத்தில் இருந்து கண்டுபிடிச்சு எடுக்க முடியும்னு ஒரு சுவடி எழுதி கோயில்ல இருக்கிற ஈஸ்வரனோட சன்னதில பத்திரப்படுத்தி வெச்சுட்டு காசில போய் ஜலசமாதி ஆகிட்டார்”
வெள்ளிக்கிழமையா தான் இருக்கும்…அப்படி சேர்ந்து அவங்க ரெண்டு பேரும் ஒண்ணா வந்தா மட்டும் தான், தன்னால மறைஞ்சு வெச்ச அந்த நவரத்னேஸ்வரரை மறைச்சு வெச்ச இடத்தில் இருந்து கண்டுபிடிச்சு எடுக்க முடியும்னு ஒரு சுவடி எழுதி கோயில்ல இருக்கிற ஈஸ்வரனோட சன்னதில பத்திரப்படுத்தி வெச்சுட்டு காசில போய் ஜலசமாதி ஆகிட்டார்”
“அப்பறம் என்னாச்சு.. கோயிலுக்கு..”என அவசரமாக ஈஸ்வர் கேட்டான்
சித்தன் “அவர் நெனச்சா மாதிரியே அது இடிச்சு போச்சு பா…” என வேதனை ததும்பிய வார்த்தைகளால் சொல்லி விட்டு….
“உங்க பரம்பரையில பல தலைமுறையா பெண் குழந்தை பிறக்கல.. உங்க கொள்ளு தாத்தா.. ஒரே பையன்… உங்க தாத்தா.. ஒரே பையன்…உங்கப்பா ஒரே பையன்… நீ ஒரே பையன்…உனக்கு ரெட்டை பெண் குழந்தைகள்… என்ன நான் சொன்னது சரியா” என கேள்வி எழுப்ப..
அதை கேட்ட ஈஸ்வர் அதிர்ந்து “எல்லாம் சரி தான் ஐயா…நீங்க இதுக்கு முன்னால சொன்ன தகவல்கள் எல்லாம் எனக்கு தெரியாது… ஆனா எங்க பரம்பரைல எல்லார்க்கும் ஒரே பையன்..எனக்கு மட்டும் தான் ரெட்டை பெண் குழந்தைகள்… இது தெரியும்” என பதில் சொல்லி விட்டு
“எங்க கொள்ளு பாட்டி, தாத்தா காலமாயிட்டாங்க.. கொள்ளு தாத்தா ஜலசமாதி ஆகிட்டார்…சரி.. எங்க பாட்டி என்ன ஆனாங்க” என கேள்வி எழுப்ப…
சித்தனும் “சொல்றேன்….
சொல்றேன்…இவ்ளோ சொன்னேனே… அதையும் சொல்றேன்…அந்த அவலத்தையும் சொல்றேன்…” என சொல்ல ஆரம்பித்தார்.
சொல்றேன்…இவ்ளோ சொன்னேனே… அதையும் சொல்றேன்…அந்த அவலத்தையும் சொல்றேன்…” என சொல்ல ஆரம்பித்தார்.
“உன் பாட்டி சொர்ணாம்பிகை
பாவம்…அப்பாவி…அதிர்ந்து கூட பேச மாட்டா..அவ விதி….குடும்பமே சிதறி போயிடவே.. வாழ்க்கையை நடத்த…சமையல் வேலை செய்து தன் பிள்ளை சபேசனை ரொம்ப கஷ்டப்பட்டு வளர்த்தா….படிக்க வெச்சா…”
பாவம்…அப்பாவி…அதிர்ந்து கூட பேச மாட்டா..அவ விதி….குடும்பமே சிதறி போயிடவே.. வாழ்க்கையை நடத்த…சமையல் வேலை செய்து தன் பிள்ளை சபேசனை ரொம்ப கஷ்டப்பட்டு வளர்த்தா….படிக்க வெச்சா…”
“அவ பட்ட கஷ்டத்துக்கு பலனா சந்தோஷமா இருக்கிற மாதிரி உங்கப்பாக்கு கவர்மெண்ட் உத்தியோகம் கிடைச்சது….தன் அம்மாவோட சம்மதத்தோட தன் கூட வேலை செஞ்ச கஸ்தூரியின் பேரழகுல மயங்கி, அவளையே காதலிச்சு கல்யாணம் செஞ்சுகிட்டார்…..”
“உங்க பாட்டி தனக்கு வந்து வாய்ச்ச மருமகளோட அழகையும், சாமர்த்தியத்தையும் பார்த்து ரொம்ப சந்தோஷமானா… “
“அவளை ஒரு வேலை செய்ய விடாம.. தானே செஞ்சு அவ்ளோ அருமையா பாத்துக்கிட்டா..
கஸ்தூரியும் மாமியார் கிட்ட பாசமா தான் இருந்தா.. .”
ஈஸ்வர் “எங்கம்மாக்கு பாட்டிய பிடிக்குமா.. ஆனா ஏன் எங்க வீட்டுல அவங்களோட ஒரே ஒரு போட்டோ கூட இல்ல..பாசமா எங்கம்மா இருந்தப்ப…நீங்க எப்டி எங்க பாட்டியோட வாழ்க்கையை அவலம்னு சொல்லாம்..” என ஆச்சர்யம், கோவம் என எல்லாம் கலந்து கேட்டான்.
அதை கேட்டு சித்தன் “நான் சொன்னது உனக்கு சரியா காதுல விழல போல..மாமியார் கிட்ட பாசமா இருந்தானு தான் சொன்னேன்… இப்பயும் பாசமா இருக்கானா சொன்னேன்” என பதில் கேள்வி எழுப்பி அவனை யோசிக்க வைத்தார்.
(முதல் அத்தியாயம் முடிந்தது)
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
1
+1
+1