Loading

“டேய் வேலு!” என்று அவன் தோளில் கை வைத்தார் எழில்.

 

அவன் கண்கள் கலங்கி இருப்பதை பார்த்து,” என்னடா அங்க அவனை சத்தம் போட்டு வந்து இங்க நீ கண்கலங்கி உட்கார்ந்து இருக்க.தோலுக்கு மேல வளர்ந்த புள்ள ,ஆம்பள புள்ள கண் கலங்கலாமா?” என்றார் பரிதவிப்பாக..

 

“ஆம்பள புள்ளனா அழ கூடாதுன்னு இருக்கா ப்பா”என்றான் குரல் கம்ம, தொண்டை அடைக்க ,கண்கள் கலங்கிய படி ..

 

அவனை தன் நெஞ்சோடு சாய்த்துக் கொண்டு, அவன் முதுகை நீவி விட்டார்.

 

வித்யா கண்களில் வலியுடன் நின்று கொண்டு இருந்தாள்.

 

” ஏண்டா அவனையும் அப்படி பேசிட்டு, நீயும் இங்க வந்து கஷ்டப்படணுமா?”

 

“அவனுக்கு கல்யாணம் ஆக போது பா. ஆறு மாசம் டைம் கேட்டு இருந்தான்.இப்போ அந்த பிள்ளையை பிரிஞ்சி இருக்க முடியாம ,இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணம் பேசி இருக்கோம்.கொஞ்சம் கொஞ்சமா குகன் கூட இருக்க நெருக்கத்தை குறச்சிகிறது அவனுடைய கல்யாண வாழ்க்கைக்கு நல்லது ப்பா!”

 

“டேய் என்னடா பேசுற?”என்று பதறினார். 

 

“எனக்காக, என்னோட சுயநலத்துக்காக இவ்வளவு நாள் எல்லாத்தையும் பாத்துக்கிட்டு அமைதியா இருந்துட்டேன் பா. எனக்கு எப்படி வலி இருந்துச்சோ? அந்த மாதிரி ஒரு வலியை வரப்போற ஒரு பொண்ணுக்கு ,மித்ராவுக்கு கொடுத்திற கூடாதுப்பா .ரொம்ப நல்ல பொண்ணு !மொத்தமா பிரிக்க போறேன்னு சொல்லலையே!”

 

” டேய்! ஆனா ..”

 

“ப்ளீஸ்பா கல்யாணம் ஆக போது. குகன் எப்பவாது அவன் கூட படுக்கலாமே தவிர,அடிக்கடி அங்கதான்  தூங்குறான். அப்படி இருக்கும்போது “என்றவன் தன் அப்பாவிடம் எப்படி சொல்வது என்று தயங்கி நிற்க..

 

அனுபவசாலியாக அதை உணர்ந்தவர் .”அதுக்கு ?இதை பொறுமையா எடுத்து சொல்லி இருக்கலாம்  இல்ல டா.”

 

 

“பொறுமையா சொன்னா? உங்க மகனும் கேட்க மாட்டான். என் மகனும் கேட்க மாட்டான்”

 

” அதுக்கு இவ்ளோ ஹார்ஷா பேசனுமா டா ?தேவை விற்று அவன் வளர்ந்தவன் டா .அவனுக்கு கஷ்டமா இருந்தாலும் புரிந்து கொள்ளவாச்சு செய்வான் .குகன் சின்ன பையன் டா. அவனுக்கு என்ன தெரியும்? நீ கத்தின கத்துல அங்க பயந்து போய் தனத்தை இறுக்கி புடிச்சிட்டு உக்காந்து இருக்கான்டா “

 

“ரெண்டு நாள்ல கொஞ்சம் கொஞ்சமா சரியாகிடுவான் அப்பா !ஆனா, இனியும் எனக்காக தோல் கொடுக்க வந்த, என் தம்பியோட வாழ்க்கையை கெடுக்க நான் விரும்பல. அவனுக்குனு ஒரு வாழ்க்கை இருக்கு. சந்தோஷமா வாழட்டும். 

 

அவன் விரும்புன பொண்ண, நிச்சயம் பண்ண பொண்ண, கல்யாணம் பண்ணிக்க போற பொண்ண பார்த்து பேசறதுக்கு கூட என் பையன் ஏதோ ஒரு வகையில தடங்களா இருக்கான்னு நினைக்கும் போதே.. அவ்ளோ குற்ற உணர்ச்சியா இருக்கு ப்பா.

 

சப்போஸ் அங்க குகன் இல்லாம இருந்திருந்தா, அவன் வேற எங்காவது போய் பார்த்து மித்ரா கிட்ட பேசலாம் .அதுக்கு நிறைய வழியும் ,சூழ்நிலையும் இருக்கு. முன்ன கூட பரவால்ல, இப்போ நிச்சியம் பண்ணிட்டோம். அவனுக்கானவளா ஆகிட்டா ,அப்படி இருந்தும் கூட குகனுக்காக பார்த்து தானேப்பா அவனையும் கூட்டிட்டு போய் பேசி இருக்கான். 

 

நாம வீட்டில் பயந்துட்டு இருக்க கூடாதுன்னு ரியா கிட்ட போன் வாங்கி நாங்க வரதுக்கு லேட்டாகும் என்று குகன் சொன்னான் ப்பா. அப்போ ரியா நமக்காக ஏன் பா இவ்வளவு செய்யணும். அவ அக்காக்காக என்று சொல்லலாம் .ஆனா, அங்க அந்த ரெண்டு பொண்ணுமே நம்ம குடும்பத்துக்காகனு விட்டுக் கொடுத்திருக்காங்க அப்பா.

 

எனக்கு கஷ்டமா இருக்கு. ஏற்கனவே, நீங்க ,அம்மா, தேவ் எல்லாம் எவ்வளவோ இழந்துட்டீங்க ,இப்போ வரப்போற மித்ராவும் எல்லாத்தையும் இழந்துற கூடாதுப்பா.அவங்க அவங்களுக்கு கிடைக்க வேண்டியது, கிடைக்கட்டும். இது என்னோட சூழ்நிலை, விதி.. அதனால என்னென்னமோ  நடந்திருச்சு.

 

இனி அதை மாற்ற முடியாது. ஆனா, இனியும் யாருக்கும் எந்த வகையிலும் தொந்தரவா இருக்க கூடாதுன்னு நினைக்கிறேன்”என்று சொல்லும் போதே, கதவை” டமார்!” என்று உடைக்காத குறையாக தள்ளி விட்டு  வந்து நின்றான்  தேவ்.

 

“உன்கிட்ட நான் வந்து இதெல்லாம் எனக்கு தொந்தரவா இருக்குன்னு சொன்னேனா டா ?”என்று அவன் சட்டையை பிடிக்க..

 

தேவின் கை மீது  வேகமாக கை வைத்தவன்.” எனக்கு நீ பண்றது எல்லாம் தொந்தரவா இருக்கு சரியா?  உனக்காக எல்லா இடத்திலும் என் பொண்டாட்டி, புள்ளையை நான் விட்டுக் கொடுக்கணும்னு அவசியம் கிடையாது” என்றான் எகிறி கொண்டு,

 

இவ்வளவு நேரம் அவன் பேசியதற்கும், இப்போது பேசியதற்கும் நிறைய வித்தியாசம். 

 

தன் அண்ணனை கண்ணீர் மல்க பார்த்தவன்.. அவன் சட்டையில் இருந்த கையை உதறிவிட்டு, “முடிவா என்ன சொல்ல வர?”

 

” என் பையன் எங்க கூட இருக்கட்டும். எங்க கூட தூங்கிக்கட்டும் “

 

“ஓவரா பேசிட்டு போற.அவன் உன் கூட வந்தா நீ தூங்க வச்சுக்கோ. ஆனா, என் ரூமுக்கு  வர வேண்டாம்னு சொல்ற உரிமை உனக்கு கிடையாது. அவன் அப்பனாவே இருந்தாலும்”என்றான் இவனும் ..அண்ணன் தம்பி இருவரும் சண்டை கோழியாக சீறிக்கொண்டு,இருக்க.

 

  இன்னும் மருண்ட விழித்தபடி தனத்தை இறுக்கி அணைத்தான் குகன். இங்கிருந்து தனம் சத்தம் போட்டார்.

 

“ஏன்டா புள்ளையை வெச்சுகிட்டு இரண்டு பேரும் மாத்தி மாத்தி அடிச்சிக்கிறீங்க? அவன் பயந்து போய் இருக்கான்டா. அவனுக்கு ஏதாவது ஆகிட போகுது “என்று கத்தினார்..

 

குகனை அங்கிருந்து அழைத்து வரும்போதே, ஒரு மாதிரி தான் இருந்தான் என்பதால், வேகமாக ஓடி சென்று அவனை கட்டி அணைத்தான் தேவ்.

 

அவன் எதுவும் பேசவில்லை. அமைதியாக இருந்தான். வேலுவும் எதுவும் பேசவில்லை. அன்றைய பொழுது அப்படியே சென்று விட்டது.

 

அனைவரும் அமைதியாக சாப்பிட்டார்கள்.தேவ் வேலுவிடம் பேசவில்லை .வீட்டில் உள்ள யாரிடமும் எதுவும் பேசவில்லை. குகனை ஒரு பார்வை பார்த்தான் ஒரு சில நொடி அமைதியாக நின்று…

 

  அவன் எதுவும் பேசாமல், தன் அப்பா , அம்மாவுடன் ரூமுக்கு சென்று  விட ..

 

ஒரு சில நொடி அவனையே பார்த்துக் கொண்டிருந்தவன். எதுவும் பேசாமல் தன்னுடைய ரூமுக்கு சென்று விட்டான். அவனுக்கு உள்ளுக்குள் வலித்தது.

 

குகன் தன்னை விட்டு சென்று விட்டான் என்று அவன் நினைக்கவில்லை. ஆனால், குகன் பயந்து விட்டான். அது மட்டும் உண்மை.தன் மனதை யாரிடம் வெளிப்படுத்துவது என்று புரியாமல் மித்ராவிற்கு அழைத்து இருந்தான். 

 

அது அவர்கள் பேசிக் கொள்ளும் நேரமும் இல்லை.முன்பாகவே போன் செய்திருந்தான்.’ இது எப்பவும் போன் பண்ற டைமோ ?மெசேஜ் பண்ற டைமோ ? இல்லையே ‘ என்று எண்ணிக் கொண்டே போனை எடுத்தவள்.” சொல்லுங்க தேவ்” என்றாள்.

 

அவனும் வீட்டில் நடந்த விஷயத்தை மேலோட்டமாக  கண்கள் கலங்க, குரல் கம்ம, தொண்டை அடைக்க ,சொல்லி முடிக்க .

 

“ஒரு நிமிஷம் இருங்க கூப்பிடுறேன்!” என்று வைத்திருந்தாள் பட்டென்று.

 

அவன் “மித்ரா! மித்ரா! “என்று அழைக்க அவள் போன் வைத்திருக்க.. இவனுக்கு இன்னும் கஷ்டமாகியது. ஆனால் அமைதியாக இருந்தான் .

 

இங்கு தேவின் போனை வைத்த அடுத்த நொடி வித்யாவிற்கு மித்ரா அழைத்து இருந்தாள்.

 

ஒரு சில நொடி யோசனைக்கு பிறகு, வித்யா எடுத்து இருக்க. 

 

“அக்கா உங்க ரூம்லையா இருக்கீங்க?” என்று கேட்டு இருந்தாள் எடுத்து எடுப்பில்,

 

” ஆமா. மித்ரா சொல்லு?”

 

” மாமா உங்க கூட இருக்காரா?”

 

” இருக்காரு மித்ரா. என்னாச்சு?” என்றாள் லேசான பதட்டத்துடன்..

 

“ஸ்பீக்கரில் போடுங்க!”.

 

“போட்டுட்டேன் மித்ரா.சொல்லு?”சிறிது பதற்றம் ,பரிதவிப்பு வித்யாவிடம்..

 

“நான் பேசறது உங்களுக்கு கேட்கும்  நினைக்கிறேன் மாமா” என்றாள் மித்ரா.

 

ஒரு சில நொடி அமைதிக்கு பிறகு, “சொல்லு மித்ரா” என்றான்.

 

“அவர் கிட்ட இருந்து குகனை பிரிக்கணும்னு நினைக்கிறீங்களா? மாமா”

 

அவன் அமைதியாக இருக்க. 

 

“மாமா பேசுங்க! இது நீங்க பேச வேண்டிய நேரம்”

 

“என் பையன் எங்க தூங்கணும் . அவனை எங்கவும் கூட்டிட்டு போக வேணாம்னு சொல்ற உரிமை எனக்கு இல்லையா? மித்ரா என்றான். தன்னை சமன் செய்து கொண்டு திடமாகவே..

 

லேசாக சிரித்தாள்.

 

அவள் சிரிப்பு இங்கு வேலுக்கு எரிச்சல் மூட்ட. வித்யா அமைதியாக தான் இருந்தாள். அவளுக்கு கண்கள் கலங்கியது.

 

“கரெக்டு தான். உங்க பையன் தான்.அப்போ உங்க தம்பிக்கு குகன் யாருன்னு தெரிஞ்சுக்கலாமா? மாமா. தன்னுடைய சொந்த பையன் மாதிரி தானே பார்த்தாரு.எந்த இடத்துலயாவது தன்னுடைய அண்ணன் பையன்னு நெனச்சு அவன்கிட்ட இருந்து சின்ன ஒதுக்கம் ஆச்சு  காமிச்சிருக்கிறாரா ?

 

இல்ல ,தன்னோட அண்ணன் பையன் இந்த இடத்தில் தான் இருக்கணும்.அவனுக்கும், எனக்குமான உறவு இவ்வளவு தான் என்று எதும் வரைமுறை வச்சு பழகி  இருக்கிறாரா ? சரி. உங்க தம்பியை கூட விடுங்க!

 

 

உங்க பையன் தானே குகன்! . அவன் நீங்க பேசுனதுல பயந்து இருப்பான் இல்ல. எந்த அளவுக்கு கஷ்டப்பட்டு இருப்பான்.சின்ன பையனை பத்தி யோசிக்கவே மாட்டீங்க இல்லையா? ஆனா, இந்த இடத்தில் நீங்க குகனை வில்லன் மாதிரி ஆக்கி வச்சிருக்கீங்க தெரியுமா? இப்ப சூரி நடிச்ச மாமன் படத்துல அந்த லட்டுவை வில்லன் ஆக்கினார்கள் இல்ல. அந்த மாதிரி பண்ணி வச்சிருக்கீங்க மாமா .

 

இப்ப வரைக்கும் நீங்க எல்லாம் பெரியவங்க பண்ணிட்டு இருக்கீங்க இல்ல ,இதெல்லாம்  உங்க சுயநலம் .செல்ஃபிஷ். ஏதோ ஒரு வகையில தப்பு. ஆனா, ஒண்ணுமே தெரியாத குகன். எந்த இடத்தில் தப்பு பண்ணான்.சின்ன பையனா இருந்தவன, நீங்கதான் அவங்கவங்க சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி யூஸ் பண்ணி இருக்கீங்க.தனக்கு கொஞ்சம் கொஞ்சமா விவரம் தெரிய ஆரம்பிச்ச வயசுல குகன் தேவ் கூட இருந்துட்டான் .அது எல்லாம் உங்களோட தப்பு. நீங்க சூழ்நிலையை காரணம் காமிச்சாலும் ,உங்களோட தப்பு. அவன் விவரம் தெரிஞ்ச வயசுல யார் கூட எப்படி இருந்தானோ? அதை தான் இப்போ  வரை ஃபாலோ பண்ணிட்டு இருக்கான். ஆனா, இப்பவும், அவங்க அவங்க விருப்பப்படி அவங்க அவங்க சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி சுயநலமா முடிவெடுக்கிறீர்களே? இதெல்லாம் உங்களுக்கு தப்பாவே தெரியலையா?. இந்த இடத்துல தேவை விட , உங்களை விட , குகன் எந்த அளவுக்கு பாதிக்கப் படுவான் என்று  நீங்க யாருமே யோசிக்கல இல்லையா?எல்லாரும் அவங்கவங்க சுயநலத்துக்கு செல்பிஷா முடிவெடுக்குறீங்க, சின்ன பையன் அவனுடைய உணர்வு உங்க யாரு கண்ணுக்கும் தெரியல ,அவனோட வலி, வேதனை உங்க கண்ணுக்கு தெரியல. இப்போ உங்க பையன் உங்க ரூம்ல வந்து உட்கார்ந்துட்டதால சந்தோஷமா இருக்கீங்களா ?இல்ல, அவன்தான் சந்தோஷமா உங்க கூட வந்து உட்கார்ந்து இருக்கானா? “என்று கேட்கும் போதே,

 

“மிது” என்று வேகமாக அழைத்து இருந்தான் குகன் ..

 

தன்னையும் மீறி மித்ராவிற்கு கண்கள் கலங்கியது .

“டேய்! குகன் என்ன டா சொன்ன ?”என்றாள் மகிழ்ச்சியுடன்..

 

அவள் மாலை , “ஏன்டா மிஸ்னு கூப்பிடுற “என்று கேட்கும் போது கூட ,எனக்கு தோணும்பொழுது கூப்பிடுவேன் என்று சொன்னவன். இப்பொழுது கூப்பிடும் போது,’ அப்போது அவன் தன்னை எந்த இடத்தில் வைத்திருக்கிறான் என்பது உணர ‘கண்கள் கலங்கியது ..

 

இங்கு வேலுவிற்கு கூட கண்கள் கலங்கியது…

 

மீண்டும் “மிது “என்று குகன் அழைக்க..

 

” டேய் குகன் குட்டி! சொல்லுடா ?”என்றாள் தொண்டை அடைக்க..

 

“நீங்க அப்பாகிட்ட பேசிட்டு இருங்க. நான் தேவ் கிட்ட போறேன்” என்று  கீழே இறங்கி வேகமாக ஓடிவிட்டான்..

 

அவனை இழுத்து பிடிக்க வேலு ,வித்யா இருவருக்கும் தோன்றவில்லை. 

 

“மாமா அந்த சின்ன பையனோட மனசு என்னனு உங்களுக்கு புரிஞ்சிருக்கும்!”

 

அவனிடம் அமைதி.

 

” நீங்க உங்க தம்பி வாழ்க்கைக்காக யோசிச்சு தான்  இப்படி ஒரு முடிவு எடுத்து இருக்கீங்கன்னு என்னால புரிஞ்சுக்க முடியும் மாமா. உங்கள நான் தப்பு சொல்லல. 

 

எல்லாத்தையும் முடிஞ்ச அளவுக்கு சரி பண்ணனும்னு நினைக்கிறீங்க. முக்கியமான விஷயம் உங்களால உங்க தம்பி வாழ்க்கையில எந்த ஒரு பாதிப்பும் வந்துட கூடாதுன்னு நினைக்கிறீங்க. ஆனா, குகன் தேவ் கூட இருக்கிறதாலோ , தூங்குவதாலோ?  உங்களுக்கு என்ன மாமா பிரச்சனை? “

 

“எனக்கு பிரச்சனை இல்லை மித்ரா . அதனால உங்க ரெண்டு பேருக்குள்ள எந்த பிரச்சனையும் வந்துவிடக்கூடாது” என்றான் வேகமாக ..

 

“புரியல மாமா”

 

” இதுவரைக்கும் நீங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸ் மித்ரா. ஒரு சில விஷயம் ஓரளவுக்கு வெளிப்படையாகவே பேசுறனே! நீ இவ்வளவு தூரம் பேசின  பிறகு,  கல்யாணம் ஆனதுக்கப்புறம் உங்களுக்குள்ள இருக்க ரிலேஷன்ஷிப் அடுத்த கட்டத்துக்கு நகருது. அப்போ குகன் அங்க இருந்தா சரியா வருமா ?”

 

சிரித்தாள் கலகலவென்று.. “உங்களுடைய பேச்சு படியே நானும் வரேன். குகனை தேவ் தன் சொந்த பிள்ளையா பார்க்கும்போது ,அப்போ அவன் எனக்கும் என் சொந்த பிள்ளை தான மாமா. அவன் கிட்ட எந்த விதமான பாகுபாடும்,வேறுபாடும் பார்ப்பேன் என்று நினைக்கிறீங்களா? “

 

“நான் அப்படி சொல்ல வரல மித்ரா”

 

” நான் பேசி முடிச்சிடுறேன் மாமா. அப்படி இருக்கப்ப ,என் பையன் எங்க கூட எங்க ரூம்ல இருக்கிறதால எங்களுக்குள்ள ஏதாவது பிரச்சனை வருமா? இப்போ குகன் உங்க கூட தூங்குறதால உங்களுக்கும் அக்காவுக்கும்  பிரச்சனை வருமா?”

 

” மித்ரா” என்றாள் வேகமாக வித்யா  

 

இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த வித்யா இப்போது,” அவரு சொல்றது புரியுதா ?இல்லையா? உனக்கு”

 

” என்ன அக்கா புரியணும் “

 

வேலு பேச செய்தான்.

“மித்ரா நானும், வித்யாவும் குகனை படுக்க வச்சுக்கறதுக்கும் , உங்க கூட நீங்க  படுக்க வச்சுக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கு”

 

” அதான் மாமா கேக்குறேன். அவன் உங்களுக்கு மட்டும் பையன் கிடையாது. எங்களுக்கும் பையன் தான் சரிங்களா ?”

 

” உன் பையன் தான்.அந்த உரிமையை  நான் உன்கிட்ட இருந்து பறிக்க விரும்பல,அவன்  கிட்ட இருந்தும் பறிக்க விரும்பல. குகனுக்கு நீங்க யாரும் இல்லன்னு ,நான் அவனையும் உங்க கிட்ட இருந்து பறிக்க விரும்பல சரியா? ஆனா, இது எல்லாத்தையும் தாண்டி நீங்க இப்பதான் கல்யாண வாழ்க்கைகுள்ள வர போறீங்க சரியா?  இவ்வளவு நாள் தள்ளி இருந்தீங்க, இனி ஒன்னா,ஒரே இடத்துல இருக்க போறீங்க, கல்யாணம் ஆன புதுசுல ஒரு பொண்ணுக்கும் சரி, ஆணுக்கும் சரி, என்னென்ன உணர்வுகள், உணர்ச்சிகள் இருக்கும்னு எனக்கும் தெரியும்.அது எல்லாத்துக்கும் தடையா குகன் இருப்பான்”

 

” நீங்களே முடிவு பண்ணிட்டீங்களா மாமா ?”

 

“மித்ரா இதுக்கு மேல உனக்கு இத நான் எப்படி புரிய வைக்க. எனக்கும் , வித்யாவுக்கும் நடுவுல குகன் இருக்கிறதுக்கும் , உனக்கும் தேவுக்கும் நடுவுல குகன் இருக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கு”

 

” அப்போ நீங்க எங்கள பிரிச்சு தானே பாக்கறீங்க ?”என்று சொல்லும்போதே ,வேலு தலையில் கை வைத்துக் கொண்டான்.

 

அவனுக்கு இன்னும் எப்படி தான் இந்த பொண்ணுக்கு  சொல்லி புரிய வைப்பது என்று புரியவில்லை.

 

இங்கு தேவ் அழைத்துக் கொண்டே இருக்க,” சரி மாமா நீங்க எனக்கு நல்லாவே புரிய வச்சிட்டீங்க! வைங்க எனக்கு ஒரு முக்கியமான கால் வருது!” என்று வைத்து விட்டாள்.

 

“அச்சோ!” என்று இருந்தது கணவன் மனைவி இருவருக்கும் வளர்ந்து இருக்கிறாள். ஆனால், விவரம் தெரியவில்லையா ?புரியவில்லையா? இல்லை புரிந்துகொள்ள மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாளா ?என்று எண்ணினார்கள்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
14
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்