மாயம்-1
“ஓய்! எங்க ஓட பாக்குற?? ஒழுங்கா குடுத்துட்டு போ” என்றாள் ஓர் பெண், கோபமாக வழி மறைத்து.
“முடியாது! நீ கேட்டா நா தரனுமா? இப்படிலா மிரட்டுன.. என் அப்பா கிட்ட சொல்லிடுவேன், பார்த்துக்க!” என்றாள் எதிரே நின்றவளும் கோபமாக.
“என்ன? உங்க அப்பானா பயமாடி? ஒழுங்கா குடுத்துரு! இல்ல.. புடிங்கிடுவேன்” என்று மிரட்டினாள்.
“ம்ம்… புடுங்குவ! புடுங்குவ! நீ புடுங்குன்னு தான் நா காட்டிக்கிட்டு இருக்கனா?? நகரு முதல்ல” என்றாள் கோபமாக.
“என் அப்பா வாங்கிட்டு வந்த கல்லமிட்டாய நா உனக்கு குடுத்தெல்ல! ஜவ்வு மிட்டாய குடுடா!” என்றாள் போலியான கெஞ்சலுடன்.
“முடியாது!” என்று நகரப் போனாள்.
அவள் கையைப் பிடித்து தடுத்து, “காலைலயே இத சாப்பிட்டா உனக்கு கேவிடி வந்துரும் சிவானி, உன் அம்மா நீ இத சாப்பிடுறத பார்த்தா அடிப்பாங்க, அதுனால என் கிட்ட குடுத்துரு” என்று பேரம் பேசினாள்.
“இந்தா! புடி!” என்று முறைப்புடன் கொடுத்தாள்.
“ஹ்ம்ம்… போ!” என்று வாங்கி ஜவ்வு மிட்டாயை இழுத்து சாப்பிட்டாள்.
“எனக்கு மட்டும் தான் கேவிடி வருமா? உனக்குலா வராதா?” என்றாள் கோபமாக.
“என்ன வெட்டியா பேசிட்டு இருக்க? போ! போய் ஸ்கூல்கு கிழம்புற வழிய பாரு சிவானி! அம்மா..! சிவானி இங்க ஒழிஞ்சு நின்னு சாக்லேட் சாப்பிடுறா” என்று சத்தம் போட்டாள்.
“இவ இங்க தான் இருக்காளா டா? ஏய்!! என்ன டி பண்ணுற? காலைலயே சாக்லேட் கேக்குதா உனக்கு? ” என்றாள் கவிதா கோபமாக.
“அம்மா! என் ஜவ்வு மிட்டாய அவ புடிங்கி சாப்பிட்டாம்மா” என்றாள் கோபமாக.
“அக்காவ அவ இவன்னு பேசாதன்னு எத்தன தடவ சொல்லிருக்கேன்! பேசுவியா?? பேசுவியா டி?” என்றாள் மிரட்டலாக.
“நல்லா அடி போடுங்கக்கா, ஸ்கூலுக்கு கிளம்ப டைமாச்சு இங்க என்ன பண்ணுறான்னு கேட்டதுக்கு உன் வேலையப் பாருன்னு சொல்லுறா”.
“ஏய்!! என்ன டி? பொய் சொல்லுறீயா?? அம்மா! அவ பொய் பொய்யா சொல்லுறாம்மா” என்று சினுங்கினாள் சிவானி.
“மூணாவது படிக்கிறவ காலேஜ் போறவள அவ இவ வாடி போடின்னு பேசுவியா?? வாடி! உனக்கு நாளு அடிப்போட்டா தான் அடங்குவ”என்று சிவானியை அடித்து இழுத்துச் சென்றாள்.
“ஏய்! நேத்ரவதி!! உன்ன சும்மா விட மாட்டேன் டி” என்று கத்தினாள்.
“அக்கா! வாயிலே நாளு போடுங்கக்கா பேரு சொல்லுறா” என்று கத்தினாள்.
“மறுபடியும் அவ இவன்னு சொல்லுறது இல்லாம பேரு வேற சொல்லுவீயா?” என்று கவிதா அடித்தபடி உள்ளே இழுத்துச் சென்றாள்.
“நல்லா அடி வாங்கு சிவானி! கேட்டதும் குடுத்துருந்தா உனக்கு அடி விழுந்துருக்காது, டூ லேட்.. ” என்று தோளைக் குழுக்கியபடி லேசாகச் சிரித்தவளின் முதுகில் சூல்லென்று வலித்து, “ஆ….” என கத்தினாள்.
“எத்தன தடவ உன்ன கூப்பிடுறது டி?!” என்று அடித்தார் கலையரசி.
“அம்மா! எதுக்கும்மா அடிக்கிற? இரு! உன்ன அப்பா கிட்டயே சொல்லுறேன்” என்று முகம் சுருக்கினாள்.
“போ! போய் சொல்லு! கத்தி கத்தி என் தொண்டையே வரண்டு போச்சு, எரும மாடு! பல்ல விளக்காம இங்க வந்து என்ன டி பண்ணுற? வாடி!” என்று உள்ளே இழுத்துச் சென்றார்.
“அம்மா! நா பிரஸ் பண்ணிட்டேன்ம்மா, இந்த சிவானி இருக்காலம்மா! மாடில இருந்து நா பாக்குறப்ப ஏதோ!! மறச்சு மறச்சு எடுத்துட்டு போனா, என்ன கொண்டு போறன்னு கேட்டேன்ம்மா, காட்டவே இல்ல, ரொம்ப திமிரு தான்ம்மா அவளுக்கு” என்று குற்றப்பத்திரிகை வாசித்தாள்.
“யாருக்கு? அவளுக்கா? உனக்கா டி? நீ சொல்லுறத நா நம்ப மாட்டேன், இத நம்ப உள்ள ஒருத்தரு இருக்காரு, அவருக்கிட்ட போய் காப்பிய குடிச்சுக்கிட்டே உன் ரீல்ல தொடரு, எனக்கு வேல இருக்கு” என்று காப்பியை கொடுத்துவிட்டு வேலையைப் பார்க்க ஆரம்பித்தார்.
“அப்பா..!” என்று சத்தம் போட்டாள்..
“ஏய்!! கத்தாதடி! குழந்த தூங்குறால்ல, உன்ன நம்பி ஒரு குழந்த வேற இருக்கு” என்றார் சலிப்புடன்.
“நேதும்மா! என்ன டா? காலைலயே பஞ்சாயத்தா? சிவானி அழுகுற சத்தம் கேக்குது!” என்றார் ஈஸ்வரன் கிண்டலாக.
“அப்பா! நா உங்க பொண்ணுப்பா! நா எதுவும் பண்ணல, காலைலயே ஜவ்வு மிட்டாய் சாப்பிடுறாப்பா, ஸ்கூல் போயிட்டு வந்து சாப்பிடுன்னு சொன்னே, உடனே சண்டைக்கு வந்துட்டா, அத அவங்க அம்மா பார்த்துட்டாங்கப்பா, இதுல என் தப்பு என்னப்பா இருக்கு?” என்றாள் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு.
“உன் தப்பு எதுவும் இல்ல டா” என்றார் பாசமாக.
“முழு தப்பும் இவ மேல தான் இருக்கும், குழந்தன்னு கூட பாக்காம அவகிட்ட புடிங்கி நீ தின்னுருப்ப டி, உன்ன பத்தி தெரியாதா??” என்று அடுப்பில் காயைப் போட்டு வதக்கினார்.
‘என்ன? நம்ம ஆத்தா பார்த்த மாதிரியே சொல்லுது!’ என்று நினைத்துக் கொண்டே,”அம்மா! உன் செல்லப் பொண்ண நீயே இப்படி சொல்லலாமா??” என பின்னால் இருந்து அணைத்தாள்.
“ங்ங்ஙே…ஹ்ம்ம்… ங்ங்ஙே… ஹ்ம்ம்.. ங்ங்ஙே… ” என்று குழந்தை அழுகும் சத்தம் கேட்டது. “பவனிம்மா!! மம்மி கம்மிங் டா!” என நேத்ரா ஓடினாள்.
“இவளே இன்னும் குழந்தை மாதிரி தான் இருக்கா, இவள நம்பி ஒரு குழந்த வேற” என போற மகளை ரசித்தார் ஈஸ்வரன்.
“ஆமாங்க.. சரி நீங்க ஆபிஸ் கிளம்புங்க அப்பறம் நேரமாகிடும்” என்று வேலையைப் பார்த்தார்.
( ஈஸ்வரன் மற்றும் கலைவாணி தம்பதியரின் ஒரே செல்ல மகள் நேத்ரவதி. ஈஸ்வரன் தனியார் பேக்கில் மேனேஜராக வேலை பார்க்கிறார். கலையரசி இல்லத்தரசி.
நேத்ரவதி பெயருக்கு ஏற்றதுது போல் அழகிய கண்கள் உடையவள். கோதுமை நிறத்தில் நேர்த்தியான நெற்றி செயற்கையாய் வளைந்த புருவம்(அதான் கண்மணிஸ் திரட்டிங் பண்ணுறது), கூர்மையான நாசி, இயற்கையாகச் சிவந்த உதடுகள் என பார்க்கும் அத்தனை பேரையும் கவர்ந்து இழுக்கும் பேரழகி. அவளின் அழகைக் கூட உணராமல் இருக்கும் குறும்பு பெண். வாயைத் திறந்தால் உண்மைக்கு எதிர் கட்சிக்காரி. இறக்கம் என்பது என்ன விலை என கேட்பவள். எம்பிஏ ஃபைனல் ஈயர் படிக்கும் இம்சை மாணவி. இப்போதைக்கு இது போதும். போகப் போக இந்த பொய்யின் புலவியைப் பற்றி தெரிஞ்சுக்கோங்க. )
“என்ன டா? பவனி! அம்மாச்சி உனக்கு பால் குடுக்கலயா அதுக்கு தான் அழுகுறீங்களா??”என்று இரண்டு வயது குழந்தையைத் தூக்கிக் கொஞ்சினாள்.
தன் செப்பிதழைக் குவித்து,
“ங்ங்ஙே….ஹ்ம்ம்… ங்ங்ஙே… ஹ்ம்ம்…ங்ங்ஙே” என சினுங்கியது.
“சரி டா குட்டி! இந்தாங்க! குடிங்க! உன் அம்மாச்சிய நா அடிச்சுறேன்” என்று பாட்டீலில் உள்ளப் பாலை மடியில் படுக்க வைத்துக் கொடுத்தாள். பவனி சப்புக் கொட்டி குடிக்க ஆரம்பித்தாள்.
“நேத்ரா! பாப்பாவ என் கிட்ட கொடுத்துட்டு நீ போய் காலேஜிக்கு கிளம்பு” என்று உள்ளே வந்தார் கலை.
“சரிம்மா” என்று தூக்கிக் கொடுக்கப் போனாள். பவனி பாலைக் குடிக்காமல் அழுக ஆரம்பித்தாள்.
“டேய்! குட்டிமா! அம்மாச்சி தானே உன் கூடவே இருக்கேன், என் கிட்ட வர அழுகுறீயா? வாடா! என் தங்கம், நா இன்னைக்கு உன்ன வெளிய கூட்டிட்டுப் போறேன்” என்று கொஞ்சியபடி தூக்கி பாலைக் கொடுத்தார்.
“அம்மா! அவள வெளியலா அழைச்சுட்டு போகாத” என்றாள் கோபமாக.
“ஏன் டி?? நாம போகலாம் குட்டிமா! அவள விட்டுட்டு போறோம்னு பொறாம அவளுக்கு” என்றார் சிரிப்புடன். குழந்தைக்கு என்ன புரிந்ததோ தன் பொக்கை வாயைத் திறந்து சிரித்தது.
அதில் கோபத்தை மறந்தவள், “மம்மி இங்க தோட்டத்துல வச்சுக்கோங்க, நா வந்ததும் வெளிய போலாம் ப்ளீஸ் மம்மி!! என்னைய விட்டுட்டு ரெண்டு பேரும் போகக்கூடாது” என்று சினுங்கினாள்.
“நேத்ரா! இன்னும் கிளம்பாம என்ன டா பண்ணுற?? காலேஜிக்கு டைமாச்சு, இவங்க ரெண்டு பேரும் எங்கயும் உன்ன விட்டுட்டு போக மாட்டாங்க, போ! போய் குளி” என்று டவலை எடுத்துக் கொடுத்து பேச வந்தவளை பேச விடாமல் பாத் ரூமில் தள்ளினார் ஈஸ்வரன்.
“குட்டிமா! உன் மம்மி ரொம்ப தொல்ல பண்ணுறா டா, நீ அவ கூட சேராத டா” என்று பவனியின் கன்னத்தில் முத்தமிட்டடார் கலை. பவனி சிரித்தாள். “என் தங்கம்! அம்மாச்சி சொல்லுறது புரிதா?!” என கொஞ்சினார்.
“ம்மா.. ம்மா…” என்று அவர் முகத்தை சலுவவாள் அபிசேகம் பண்ணினாள்.
“கலை! என் பேத்திய என் கிட்ட குடுத்துட்டு நீ லஞ்ச் ரெடி பண்ணுமா” என்று குழந்தையை வாங்கி, “தாத்தாவும் பாப்பாவும் விளையாடுலாமா??” என்றார் முத்தமிட்டு.
“தா… தா..” என்றாள் சிரிப்புடன். கலை சமையலைக் கவனிக்கச் சென்றார்.
சிறிது நேரத்தில் நேத்ரா ரெடியாகி சாப்பிட வந்தாள். கலை பவனியைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு இட்டுலியை ஊட்டினார். ஈஸ்வரன் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார். “மம்மி! இன்னைக்கு நா கொஞ்சம் லேட்டா தான் வருவேன், அசைன்மெண்ட்ட முடிச்சுட்டு தான் வரனும்” என்றாள் தட்டில் தோசையைப் போட்டு சாப்பிட்டுக் கொண்டே.
“நேத்ரா! உண்மையாவே அசைன்மெண்ட் வேல தானா??” என்றார் கலை புருவம் உயர்த்தி.
“அப்பா! அம்மாவ பாருங்க, பவிய வச்சுக்கிட்டு எழுத முடியாதுன்னு தான் எழுத்திட்டு வரேன்னு சொன்னேன், அம்மா இப்படி கேக்குறாங்க” என்று குற்றப் பத்திரிகை வாசித்தாள்.
“கலை! அவ உண்மைய தான் சொல்லுறா, தேவயில்லாம சந்தேகப் படாத”.
“இவ சொன்ன வேலைய முடிச்சுட்டு வந்தா நா ஏங்க கேக்க போறேன், போன தடவ இது மாதிரி தான் சொன்னா, நைட் வந்து உங்கள தானே எழுத வச்சா, மறந்துருச்சா?”.
‘ஆமால! அசைன்மெண்டுக்கு ஒரு புள்ளையார் சுலீ கூட போடாம ஃபுல்லா என்னையையே எழுத வச்சுட்டா, நைட் படுக்கவே ஒன்னாச்சு, இந்த டைம் எத்தன மணிக்கு தூங்குவனோ!’ என்று மனதிலே புலம்பினார்.
“என்ன அப்பா? சத்தத்தயே! காணம்”என்றாள் முறைப்புடன்.
“ஒன்னும் இல்ல டா, டைமாச்சு! சிக்கிரம் கிளம்பு, பஸ் மிஸ் பண்ணிட போற, கலை கம்முனு இரும்மா, நா கிளம்புறேன், பாய் பவி குட்டி!” என்று வேகமாக பவனியின் கன்னத்தில் முத்தமிட்டுக் கிளம்பினார்.
“சரிம்மா! நானும் கிளம்புறேன், செல்ல குட்டி! மம்மி கிட்ட வாங்க!” என்று தூக்கி முத்தமிட்டு, “அம்மாச்சி கிட்ட மம்மி மாதிரி சமத்து பொண்ணா இருக்கனும் டா” என கலையிடம் குழந்தையைக் கொடுத்தாள்.
“ஆமா! உன்ன மாதிரி இருக்கக் கூடாதுன்னு சொல்லு டி, இதுல சமத்தாம்”.
“அம்மா!!” என்று ஆரம்பிக்கும் போதே,
“அடியே! டைமாச்சு டி, நீ இன்னைக்கு பஸ்ஸ விட போற” என்று சத்தம் போட்டார்.
“ஆமா! பாய் ம்மா! பாய் குட்டி!”என்று வேகமாக பஸ் ஸ்டாப்பிற்கு வந்தாள். அங்கு சிவானி யூனிபார்மில் அவள் அம்மாவுடன் நின்றவள் இவளைப் பார்த்ததும் முகத்தைத் திருப்பினாள்.
“என்ன அக்கா? டென்சனா இருக்க மாதிரி இருக்கு?” என்றாள் சிவானியைப் பார்த்தப்படி, சிவானி அம்மா கவிதாவிடம்.
“ஆமா நேத்ரா! நா பெத்து வச்சுருக்கனே ஒருத்தி! அவ இன்னைக்கும் லேட்டு, ஸ்கூல் பஸ் போயிருச்சு” என்றாள் எரிச்சலுடன்.
“சிவானி! என்ன டா? இப்படி பண்ணுற? அக்கா மாதிரி இருக்க வேணாமா? காலைல சாக்லேட் சாப்பிட தெரிதுல? சிக்கிரம் கிளம்புறது இல்லையா??” என்று எரியுற நெருப்பில் எண்ணெயை ஊற்றினாள்.
“ஆமா! அது மட்டும் நல்லா கொட்டிப்பா” என்று தலையில் கொட்டு வைத்தாள் கவிதா.
“அம்மா! இவ தான் அந்த சாக்லேட்ட புடிங்கி தின்னுட்டா, வேணும்னே என்னைய மாட்டிவிடுறா” என்றாள் நேத்ராவை முறைத்தபடி.
“என்ன டி மரியாதை இல்லாம?” என்று கவிதா அடிக்க வந்தார்.
“அக்கா! பஸ் வந்துருச்சு, ஸ்கூல இருந்து வந்து அடிங்க, இப்ப எறுங்க” என்றாள் சிரிப்புடன்.
“சரி! வரேன் நேத்ரா, வா டி!” என்று இழுத்துக் கொண்டு பஸ்ஸில் ஏறினாள். சிவானி பஸ்ஸில் இருந்தபடியே முறைத்தாள். நேத்ரா நாக்கை நீட்டி பழிப்புக் காட்டினாள். அவள் பஸ் வந்ததும் எறி காலேஜிக்குள்ளே வந்தாள்.
“நேது..!” என்று ஓடி வந்து அணைத்தாள் அபிதா.
“ஓய்! நட்பே! என்ன பாசம் பொங்கி வழிது? என்ன மேட்டரு?” என்றாள் சிரிப்புடன் விலகி. அவர்கள் எப்போதும் உக்காரும் மரத்தடியில் சென்று உக்கார்ந்தனர்.
“இன்னைக்கு அவன பார்த்தேன் டி” என்றாள் சந்தோஷமாக.
“எவன??”.
“அதான் டி என்னைய ஆக்சிடென்ட்ல இருந்து ஒருத்தர் காப்பாத்துனாரே! அவரு தான்” என்றாள் சந்தோஷமாக.
“வாவ்.. எங்க நட்பே பார்த்த??”.
“இன்னைக்கு காலைல நாளரைக்கு பார்த்தேன் நட்பு”.
“அந்த டைம்ல நீ எங்க டி வந்த??” என்றாள் குழப்பமாக.
“நா எங்கயும் போகல டி, என் பெட்ரூம்ல தான் இருந்தேன்” என்றாள் சிரிப்புடன். நேத்ரா குழப்பமாகப் பார்த்தாள்.”நட்பே! அடிக்கக் கூடாது! நா என் கனவுல அவர பார்த்தேன் டி, நாளரை மணிக்கு கண்ட கனவு பலிக்குமாம், எங்க ஆத்தா சொன்னாங்க” என்றாள் இழிப்புடன்.
“எரும! எரும! நா எவ்ளோ ஆர்வமா இருந்தேன் தெரியுமா? இன்னைக்காச்சும் அவங்கள மீட் பண்ணலாம்னு” என்று தலையில் கொட்டினாள்.
“ஆ…. வலிக்கிது டி” என்றாள் தலையைத் தேயித்துக் கொண்டே.
“ம்ம்… கனவுல பார்த்ததுக்கே நீ இவ்ளோ ஜொல்லு விடுற! இதுல நேர்ல பார்த்தா என்னைய யாருன்னு கேப்ப போலயே!!” என்றாள் கிண்டலாக.
“சச்சா… நா அப்படிலா சொல்ல மாட்டேன் நட்பே! நம்ம நட்போட ஆழம் என்ன??”.
“அதான் என்ன??” என்றாள் கிண்டலாக.
“இப்படி ப்ளோல சொல்லுறப்ப நடுவுல கேக்காத??”என்று சொல்லும் போதே!,
“ஏன்? பதில் தெரியாதா??” என்றாள் கிண்டலாக.
“ஏய்! போடி!” என்று முகத்தைத் திருப்பினாள்.
“சரி! சரி! கோவிச்சுக்காத நட்பு! இவ்ளோ வருசம் என் கூடவே இருக்க ஒரே நட்பு நீ தான்” என்றாள் தோளில் கையைப் போட்டு.
“ஆமா டி! நீ பண்ணுற சேட்டைக்கு உன் கூட இருக்கனால எனக்கும் சேர்த்து தானே பனிஷ்மென்ட் தராங்க, அப்பறம் யாரு உன் கூட இருப்பா?” என்றாள் சலிப்புடன்.
“அதுலாம் உண்மையான நட்பே இல்ல டா, லெவன்த்ல நீ வந்து சேர்ந்த, இப்ப வரைக்கும் கூட தானே இருக்க, உன் நட்ப போல வருமா?! நண்பேன்டி!” என்றாள் சிரிப்புடன்.
“நீ மூச்ச கட்டிக்கிட்டு பேசுறத பார்த்தா ஏதோ மேட்டர் இருக்கும் போல” என்றாள் சந்தேகமாக.
“ஈஈஈஈஈஈஈஈ அப்படிலா இல்ல டி, ஆமா அசைன்மெண்ட் எழுதிட்டியா??”.
‘இப்ப தான் மேட்டருக்கு வந்துருக்கா’ என்று நினைத்துக் கொண்டே, “இன்னைக்குத் தானே லாஸ்ட் டே நட்பே! எழுதிட்டேன்”.
“நா எழுதுல, அதுனால நீ வைக்காத” என்றாள் அசால்ட்டாக.
“ஏய்! அந்தம்மா நம்மல வெளிய தொரத்திடும் டி” என்றாள் பதறி.
“அதுக்கு தான் என் கிட்ட ஒரு ஐடியா இருக்கு”.
“என்ன??”.
“அது தொரத்துறதுக்கு முன்னாடி நாமலே வெளில போயிடலாம்”.
“அடியே! நாம போனா சீக்கரமா வீட்டுக்குப் போக முடியாது”.
“நா அசைன்மெண்ட் எழுத்திட்டு லேட்டா தான் வருவேன்னு சொல்லிட்டேன் நாம போகலாம், ஒருவேள அந்த டிரீம் பாய்ய அங்க கூட பாக்கலாம்”.
“நேது..!” என்று ஆரம்பிக்கும் போதே காலேஜ் பெல் அடித்தது.
“பார்த்தியா! நா சொன்னது தான் நடக்க போகுது, பெல் கூட அடிக்கிது” என்றாள் சிரிப்புடன்.
“கிளாஸ்கு டைமாச்சு, அதான் அடிச்சது” என்றாள் அபி முறைப்புடன்.
“எப்படியோ அடிச்சதுல!” என்றாள் இழிப்புடன்.
“நீ சொன்னது நடந்தா சரி தான், வா கிளாஸிக்கு போலாம், லாஸ்ட் ஹவர் கட் பண்ணிட்டு போலாம்” என்று இழுத்துச் சென்றாள்.
“நேத்ரா! அபி! தயவு பண்ணி இன்னைக்காச்சும் என்னைய வெளிய அனுப்பாம உள்ள உக்கார விடுங்க டி கால்லாம் வலிக்கிது” என்றாள், அவர்களுடன் பெஞ்சில் உட்கார்ந்திருக்கும் வாணி.
“அத ஏன் என் கிட்ட சொல்லுற?? இதோ இவ கிட்ட சொல்லு ” என்றாள் அபி சலிப்புடன்.
“நா உன் கிட்ட டவுட் தானே கேட்டேன்” என்றாள் நேத்ரா வேகமாக.
“அதுக்காக ஒரு ஒரு நிமிஷமும் கேப்பியா டி??” என்றாள் வாணி பாவமாக.
“இந்த வாத்திங்க கிளாஸ் எடுக்குறதே பெரிய விஷயம், அதையும் நீ கெடுத்துர்ற”என்றாள் அபி பொய்யான முறைப்புடன்.
“என்ன பண்ணுறது? அவ்ளோ நாலேட்ஜ் உள்ள கொட்டி கிடக்கு” என்றாள் பெருமையாக.
“ஆமா ஆமா!! சொன்னாங்க! சாரோட ஹேர் ஏன் இப்படி இருக்கு?? இவருக்கு இந்த டிரஸ் நல்லா இருக்கா?? இந்த மேடம் ஏன் நம்ம கிட்ட ஒப்பிக்கிது?? அவங்க எக்ஸாம் எழுத போறாங்களா?? இதெல்லாம்
நாலேட்ஜ் கொஸ்டின்ல” என்றாள் அபி கடுப்புடன். வாணி சிரித்தாள்.
“விடு! நட்பே! இதெல்லாம் எனக்காகவா? இந்த பச்சை புள்ள வாணி தூங்காம இருக்கனும்னு தான் கேக்குறேன்” என்றாள் சிரிக்காமல். வாணி சிரித்தாள்.
“உன்ன பெத்தாங்களா? செஞ்சாங்களா டி? ஸ்சப்பா…” என்றாள் அபி பெருமூச்சுடன்.
“அது..” என்று ஆரம்பிக்கும் போதே,
“ஸ்டூடண்ட்ஸ்!” என்று லக்சரர் உள்ளே வந்தார். அனைவரும் அமைதியனர்.
மாலை ஐந்து மணி போல் இருவரும் சுற்றிவிட்டு பஸ் ஸ்டாப்பில் நின்றனர். “ஏன் டி நேது! எதுக்கு டி இவளோ சாக்லேட் வாங்குன??” என்றாள் அபி.
“ஒன்னும் இல்ல டி, இன்னைக்கு மார்னிங் சிவானி கிட்ட இருந்து ஜவ்வு மிட்டாய் வாங்குனேன், அவளுக்குத் தான் இந்த சாக்லேட்”.
“வாங்குனேன்னு சொல்லாத! புடுங்குனேன்னு சொல்லு!” என்றாள் பொய்யான முறைப்புடன்.
“ஏதோ ஒன்னு! நட்பே! அதுக்கு பதிலா தான் இந்த சாக்லேட் குடுத்துக்குறேன்ல” என்றாள் சிரிப்புடன்.
“சிவானி அடி எதும் வாங்குனாலா??”.
“வாங்காம எப்படி! காலைலயே ஜவ்வு மிட்டாய் சாப்பிடுறா”.
“பொது சேவைக்காக நீ புடுங்கி சாப்பிட்டுட்ட அப்படி தானே!” என்றாள் கிண்டலாக.
“ஆமா! ஆமா!!” என்றாள் நேத்ரா சிரிப்புடன்.
“ஏன்! காத்து இப்படி வேகமா அடிக்கிது? மழ வருமோ?” என்றாள் அபி வானத்தைப் பார்த்து.
“அப்படி தான் போல!”.
“சரி நட்பே! என் பஸ் வந்துருச்சு, வீட்டுக்குப் போயிட்டு கால் பண்ணு, பஸ் ஸ்டாப்ல வேற தனியா நிக்கிற” என்றாள் எச்சரிக்கையுடன்.
“இது பகல் தானே! நீ முதல்ல பஸ்ல ஏறு டி”.
“சரி! பாய் டி!” என்று எறினாள்.
‘என்ன பஸ்ஸ இன்னும் காணோம்? காத்து வேற இப்படி அடிக்கிது! மழ வருமோ?’ என நினைத்துக் கொண்டே வானத்தைப் பார்த்தாள். நொடியில் வானம் நார்மலாக மாறியது. ‘என்ன டா இது! மழ வர மாதிரி இருந்தது, நொடில்ல மாறிருச்சு! சிக்கிரமா பஸ் வந்தா பரவால’ என்று மனதிலே புலம்பினாள்.
தீடிரென்று காற்று அடிப்பது போல் சத்தம் கேட்டது. ‘என்ன இந்த மரம் கூட அசையில! காத்து அடிக்கிற மாதிரி சத்தம் கேக்குது!’ என்று நினைத்தபடி பக்கத்தில் இருந்த பெரிய மரத்தை நிமிர்ந்து பார்த்தாள். அந்த மரத்தில் இருந்து வித்தியாசமான ஓர் உருவம் கீழே குதித்தது. நேத்ரா இதயம் வேகமான துடிப்புடன் நடுங்கியபடி அந்த உருவத்தைப் பார்த்தாள்.
தலையில் இரண்டு கொம்புகளும், கண்களில் உள்ள விழிகள் சிவப்பு நிறத்திலும், மூக்கின் நுனி கூர்மையாகவும், ரெண்டு பல் சிங்கம் போல் வெளியே நீட்டி, உடல் முழுவதும் மிருகங்கள் போல் முடியும், கை மற்றும் கால் விரல்களில் பெருசான நகமும், முதுகு பக்கம் ரெக்கையுடன் அந்த உருவம் நேத்ராவைப் பார்த்தது.
நேத்ரா பயத்தில் ஓடப் போனாள். அவள் முன்னால் வேகமாக வந்து வழியை மறைத்து அவளை நெருங்கியது.
“ஹெல்ப்! ஹெல்ப்..!!” என்று சத்தம் போட்டபடி விலகி ஓடப் பார்த்தாள். அந்த உருவம் கோபமாக அவளை நோக்கி நடந்தது. நேத்ரா பயத்தில் அப்படியே பின்னால் நகர்ந்தாள். ஓர் கட்டத்தில் ஸ்டாப்பில் உக்கார போட்டுருந்த சேரில் உட்கார்ந்தாள்.
அந்த உருவம் “ஓ… ஓ… ” என்று ஓர் விதமான சத்தம் போட்டுக் கொண்டே அவள் உக்கார்ந்திருந்த சேரின் இரு பக்கம் கை வைத்து அவள் முகத்திற்கு அருகே சென்றது. நேத்ரா பயத்தில் கண்களை மூடி கால்களை அதே சேரில் வைத்து உடலைக் குறுக்கினாள்.
அந்த உருவம் யார்?? அபியைக் காப்பாற்றியது யார்?? பவனியின் அப்பா எங்கே?? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்…..
💗மாயங்கள் தொடரும்💗………